நிரந்தர பக்கங்கள்

1/15/2005

Thuglak 35th anniversary meeting on 14th January, 2005

சோவின் துக்ளக் ஆண்டு விழா மீட்டிங் ஒரு மிக அருமையான அனுபவம். 6.30 மணிக்குத் துவங்கவிருந்தக் கூட்டத்துக்கு சற்று முன்னால் சென்று இடம் பிடிக்கலாம் என்று 4.30-க்கு மியூஸிக் அகாடெமி அரங்கத்துள் சென்றால் அதே எண்ணத்துடன் வந்தவர்களால் அரங்கமே நிரம்பி வழிந்தது.

காசு கொடுத்து லாரிகளில் இறக்குமதி செய்து கூட்டம் சேர்க்கும் தலைவர்கள் இதைப் பார்த்திருந்தால் வயிறெரிந்துப் போயிருப்பர். அரங்கத்தில் இடம் போதாமல் வெளியே பெரிய ஸ்க்ரீன் வைத்துச் சமாளிக்க வேண்டியச் சூழ்நிலை.

அவ்வளவு சீக்கிரம் சென்றும் இருக்க இடமின்றி நாற்காலிகள் நடுவில் இருந்த நடைபாதைகளில் உட்காரும் நிலை. பொறுமை கடைபிடித்து உட்கார்ந்தோம்.

6.30-க்கு சோ வந்தவுடன் கைத்தட்டல் ஓசை காதைப் பிளந்தது. காத்திருந்தக் களைப்பெல்லாம் மறைந்தது. பலர் சார்பில் மாலை போடுதல் என்ற வழிசல்கள் இல்லாமல் கூட்டம் டாண் என்று ஆரம்பித்தது.

கூட்டத்தைப் பற்றி அடுத்து வரும் துக்ளக் இதழ்களில் சோ அவர்கள் எழுத அதைப் பிறகுப் படிக்கலாம். இப்போது நான் கூறுவது என் பார்வைக் கோணம் மட்டுமே.

குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட சில வாசகர்கள் பேச அழைக்கப்பட்டனர். இம்முறை பேசிய எல்லோரும் கச்சிதமாகக் கேள்விகள் கேட்டுத் தங்கள் பேச்சை முடித்துக் கொண்டனர்.

அக்கேள்விகளில் ஜயேந்திரர் கைதைப் பற்றியக் கேள்விகளை மட்டும் தான் கடைசியில் பதில் கூறுவதாகக் கூறி விட்டு மற்றக் கேள்விகளுக்குக் கூர்மையாகவும் அதே சமயம் நகைச்சுவைக் கலந்தும் பதிலளித்தார்.

சோவின் பின்னால் நின்றுக் கொண்டு அவர் உதவியாளர் உறுத்தாத வகையில் வாசகர்களின் கேள்விகளை வரிசையாக அவர் கவனத்துக்குக் கொண்டு வர அவர் அக்கேள்விகளுக்கு பதிலளித்தது மனதை நிரம்பக் கவர்ந்தது.

சில கேள்விகளும் பதில்களும்:

கே: "துக்ளக்கின் சர்குலேஷன் என்ன?"
ப: "சுமார் 75,000."

கே: "துக்ளக்கிற்கு வாரிசு?"
ப: "இல்லை"

கே: "சுனாமி நிவாரணத்துக்கு நீங்கள் அளித்தத் தொகை எவ்வளவு?"
ப: "ரூ.1 1/2 லட்சம்" (அக்கேள்விக்குத் தன் ஆட்சேபத்தையும் அவர் வெளியிடத் தயங்கவில்லை.)

ஜயேந்திரர் கைது பற்றி அவர் எழுதியதைப் படிப்பதே நல்லது. ஒன்று மட்டும் கூறுவேன். இந்த விஷயத்தில் அவர் கருத்துக்களுடன் நான் 100% ஒத்துப் போகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6 comments:

  1. //இந்த விஷயத்தில் அவர் கருத்துக்களுடன் நான் 100% ஒத்துப் போகிறேன்.//

    அப்பறம் வேறு எந்த விஷயத்தில் நீங்கள் அரை%டாவது மாறுபட முடியும்?

    ReplyDelete
  2. சோ கூறியதை துக்ளக்கில் படித்து விட்டுப் பிறகு கூறுங்கள்.
    அன்புடன,்
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. ஹஹஹா ரோஸாவசந்த்...நக்கல் ஜாஸ்தி சார் உங்களுக்கு!

    ராகவன் சார்...! துக்ளக் விழா குறித்து full மீல்ஸ் சாப்பிடலாம்னு வந்தா தம்மாத்தூண்டு ஸ்வீட் மட்டும் கொடுத்து ஏமாத்தீட்டீங்களே!

    ReplyDelete
  4. அது இப்போதைக்கில்லை என்று கூறி விட்டாரே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. இப்படி சொன்னா எப்படி சார். அவர் என்ன சொன்னார்னு நீங்க சொன்னா தான் அது சுவாரஷ்யம்

    ReplyDelete
  6. புது பிளாக்கருக்கு மாறியதில் இந்த பழைய பதிவு தானாகவே மேலேறி வந்து விட்டது.

    இன்னும் பல பழைய பதிவுகள் மேலே வந்து எல்லோரையும் டரியல் ஆக்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. :))))))))))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete