நிரந்தர பக்கங்கள்

7/02/2005

ஹைப்பர் லிங்க் (ஆனால் என்னுடையது அல்ல)

ஹைப்பெர் லிங்க் பற்றி நான் முன்னம் பதித்த இன்னொரு பதிவை இங்கு இற்றைப்படுத்துகிறேன் அப்படியே வாசகர்களையும் படுத்துகிறேன் என்று யாராவது கூறிவிடும் முன்னால் நானே அதையும் இப்போதே கூறிவிடுகிறேன்.

வருடம் 1971. அப்போது பம்பாயில் மாதுங்காவில் இருந்தேன். நாங்கள் 10 தமிழர்கள் ஒரு அப்பார்ட்மென்டில் தங்கியிருந்தோம். ஆளுக்கொரு கட்டில். ஒரு கட்டிலுக்கு வாடகை 70 ரூபாய்கள்.

அது பற்றிப் பிறகு. இப்போது ஹைப்பர் லிங்க்குக்கு வருவோம்.

ஞாயிறு காலையில் 10 மணி அளவில் ஆனந்தமாக கன்ஸர்ன்ஸில் சாப்பிட்டுவிட்டு 11 மணியளவில் பக்கத்தில் உள்ள அரோரா சினிமாவில் ஏதாவது தமிழ்ப்படம் காலைக் காட்சி பார்க்கச் செல்வது வழக்கம். அன்று அம்மாதிரி என் சக அறைவாசிகள் நரசிம்மன் மற்றும் சுந்தரம் 'குடியிருந்த கோவில்' படத்துக்குச் சென்றிருந்தனர். ஆனால் பாதியிலேயே திரும்பி விட்டனர். என்ன விஷயம் என்று கேட்டேன்.

நரசிம்மன் எரிச்சலுடன் கூறினான்:"அட போப்பா. ஏற்கனவே பார்த்த படம். இந்தப் படத்தைப் பொறுத்த வரை இது நான்காம் முறையாக நடக்கிறது" என்றான்.

"சற்று விவரமாகச் சொல்லப்பா" என்றேன். அதற்கு அவன் கூறினான்:

"நம்பியார் இரண்டாவது சீனில் எம்.ஜி.ஆரின் அப்பா ராம்தாசைத் துரத்திக் கொண்டு வருவார். முகத்தை வழக்கம்போல கோணிக்கொண்டு தன்னுடைய பிரத்தியேகக் குரலில் 'அடேய் ராமனாதா' என்று கத்துவார் இல்லையா"?

நான்:"ஆமாம் அதற்கு என்ன இப்போது?"

நரசிம்மன்:" அதுதான் பிரச்சினையே. அந்த 'அடேய் ராமனாதா' வந்தப் பிறகுதான் எனக்கு இது நான் ஏற்கனவே பார்த்த படம் என்று நினைவுக்கு வரும். இது நான்காம் முறை."

அன்புடன்,
டோண்டு ராகவன்

11 comments:

  1. //நாங்கள் 10 தமிழர்கள் ஒரு அப்பார்ட்மென்டில் தங்கியிருந்தோம்//

    10 பேரும் என்ன ஜாதியினர்?

    என்னமோ தெரியவில்லை .. இப்போதெல்லாம் (சில மாதங்களாக) யாரை பார்த்தாலும் இவர் என்ன சாதியாய் இருப்பார் என நினைக்கத்தோன்றுகிறது? இது என்ன ஹைபர்லிங்கோ தெரியவில்லை

    ReplyDelete
  2. "10 பேரும் என்ன ஜாதியினர்?"
    இப்பதிவின் ஹைப்பெலிங்குக்கு சம்பந்தமில்லாத கேள்வி இது.
    பை தி வே, இங்கு ஹைப்பெர் லிங்க் "அடேய் ராமனாதா".

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. ம்ஹூம். "வருடம் 1971"? மருந்துக்குக் கூட சமீபத்தில்னு வரவே இல்லை. சமீபத்தில் 1978ஆம் வருடம் பிறந்த எனக்கு இது ஆச்சர்யமாக உள்ளது. :-)

    க்ருபா

    ReplyDelete
  4. அதுவா, இப்பதிவு நான் சமீப சமீபத்தில் 2004-ல் ப்ளாக்கிங்க் ஆரம்பித்த புதிதில் போட்டது. இங்கு வெறுமனே இற்றைப்படுத்தி உங்கள் எல்லோரையும் படுத்தினேன். அப்போதெல்லாம் பழைய சமீபங்களைப் பற்றி எழுத ஆரம்பிக்கவில்லை. அதன் பிறகுதான் 1952-லிருந்து என் வாழ்வில் நடந்த எல்லாமே சமீபத்தில் என்று ப்ளாக்கில் கூற ஆரம்பித்தேன். மற்றப்படி பேச்சு வழக்கில் சமீபத்தில் 1952-ல் என்றெல்லாம் சமீபத்தில் 1971-லியே கூற ஆரம்பித்து விட்டேன்.

    நான் இப்போது "விசு"த்தனமாகக் கூறியது பற்றிய புரிதல் ஏதாவது தங்கள் சமீபத்தில் வந்ததா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. ///மற்றப்படி பேச்சு வழக்கில் சமீபத்தில் 1952-ல் என்றெல்லாம் சமீபத்தில் 1971-லியே கூற ஆரம்பித்து விட்டேன்.///

    சமீபத்தில் 1952 ஆஆஆ???. அப்போது என்னோட அப்பாவுக்கு 2 வயது. அப்படின்னா சமீபத்தில் என்னோட அப்பாவுக்கு 2 வயது :-))) :-).

    ReplyDelete
  6. ஆமாம் முத்து. நீங்க இப்படி சொன்னதும்தான் ஒரு புதிய உண்மை புரிஞ்சது.

    1948ஆம் வருடம் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்.

    1948ஆம் வருடத்தை டோண்டு ராகவன் சமீபத்தில் என்கிறார்.

    எனவே சமீபத்தில் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோது டோண்டு ராகவன் பார்த்துக்கொண்டு பேசாமலே இருந்தார்.


    க்ருபா

    ப்ளாகாத எண் 70053
    (என்னைப் பற்றிய முழுவிவரம் அறிய எலிக்குட்டியை மேலுள்ள எண்ணருகில் கொண்டு செல்லவும். அப்பொழுதும் ஒன்றும் தெரியாது. எனவே கண்ணாடியின் முன் வைத்துப் பார்க்கவும்)

    ReplyDelete
  7. Apparently a sound argument, but it commits the fallacy of four terms, as they would say in logic. By the way I came first in my college in the logic paper and got a prize, recently in the academic year 1962-63 in the PUC, New College.
    Regards,
    Dondu Raghavan

    ReplyDelete
  8. //நரசிம்மன்:" அதுதான் பிரச்சினையே. அந்த 'அடேய் ராமனாதா' வந்தப் பிறகுதான் எனக்கு இது நான் ஏற்கனவே பார்த்த படம் என்று நினைவுக்கு வரும். இது நான்காம் முறை."//

    :-))

    ReplyDelete
  9. மாதுங்கா, மும்பை தமிழர்களின் அடையாளம், அரோரா கோவில்கள் தவிர்த்து தமிழர்கள் அதிகம் கூடும் இடம், இவற்றை பற்றி அற்புதமான சுருக்கமான பதிவு, இச்சம்பவத்தை மும்பை நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  10. நன்றி சோம்பேறி பையன் அவர்களே. By the way, போன ஜூலை மாதம் மும்பையில் வந்த மழைதான் 100 வருடத்துக்கான ரிக்கார்ட் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதற்கு முன்னால் ஜூலை 5, 1974-ல் வந்த மழையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள். அன்று இரவு நானும் என் நண்பன் சுந்தரமும் (இப்பதிவில் வரும் அதே சுந்தரம்தான்) கோட்டே சிக்கே என்ற ஹிந்திப் படத்தை அரோராவில் இரவு காட்சி பார்த்து விட்டு விடியற்காலை 1 மணிக்கு சரஸ்வதி நிவாஸை கிட்டத்த்ட்ட நீந்தி அடைய வேண்டியதாயிற்று.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  11. வர வர பதிவுலகில் லாஜிக்கே இல்லாம போச்சு. நிறைய பேர் வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு இருக்காங்க, அரசியல் கட்சி மீட்டிங் மாதிறி இருக்கு. ஆனா இப்படி லாஜிக் இல்லாம பேசும் பலர் படித்தவர்கள், அதான் இன்னும் வேதனையா இருக்கு.

    டோண்டு ஐய்யா சொன்னது பற்றி:
    http://en.wikipedia.org/wiki/Fallacy_of_four_terms

    ReplyDelete