நிரந்தர பக்கங்கள்

8/12/2005

என் கேள்விக்கென்ன பதில்

நான் கேள்வி கேட்டு ரொம்ப நாளாயிற்று. சில கேள்விகளூக்கு பதில் அளிக்க முயலுங்களேன்.

1. இருவர் பாருக்கு செல்கின்றனர். ஸ்காச் ஆன் தெ ராக்ஸ் ஆர்டர் செய்கின்றனர். அவர்களுக்குத் தெரியாமல் இரு கோப்பைகளிலும் விஷம் ஒரே அளவு கலக்கப்பட்டுள்ளது. ஒருவன் மடமடவென்று குடித்து விடுகிறான். இன்னொருவன் நிதானமாக உறிஞ்சிக் குடிக்கிறான். முதலாமவன் உயிர் பிழைக்கிறான். இரண்டாமவன் இறக்கிறான். என்ன நடந்தது?

2. வெள்ளை நிற மாருதி கார்கள் மற்ற நிறக் கார்களை விட குறைவாகவே பெட்ரோல் உபயோகிக்கின்றன. ஏன்?

3. 854917632. இந்த எண்ணின் விசேஷம் என்ன?

4. என்னிடம் இரண்டு நோட்டுகள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூபாய் 55. ஆனால் அதில் ஒன்று ஐந்து ரூபாய் இல்லை. விளக்குக.

5. ஒரு பெண்மணி ஷாப்பிங்கிலிருந்து கை நிறைய பைகளுடன் வீடு திரும்புகிறார், வாசலில் இருக்கும் தபால் பெட்டியிலிருந்து கடிதங்களை சேகரிக்கிறார், வீட்டிற்குள் நுழைகிறார். சமையல் அறைக்கு செல்லும் வழியில் ஹாலில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்த தன் கணவனை பார்த்தபடியே குளிர்சாதனப் பெட்டியில் கறிகாய்களை அடுக்கி விட்டு தன் மற்ற வேலைகளை கவனிக்கிறார். என்ன நடக்கிறது இங்கே?

6. தன் சகோதரிதான் தன் கணவனை சுட்டுக்கொன்றாள் என்பதை நீதிமன்றத்தில் நிருபித்தாள் ஒரு பெண். இருப்பினும் நீதிபதி அச்சகோதரியைத் தண்டிப்பதற்கில்லை என்று கூறி விடுகிறார். என்ன விஷயம்?

இன்னும் பிறாண்டுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

31 comments:

  1. என் மூளைக்கு எட்டுனது...

    3. 854917632. இந்த எண்ணின் விசேஷம் என்ன?
    0 தவிர மற்ற அனைத்து எண்களும் உள்ளன..

    4. என்னிடம் இரண்டு நோட்டுகள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூபாய் 55. ஆனால் அதில் ஒன்று ஐந்து ரூபாய் இல்லை. விளக்குக.

    உங்ககிட்ட இருக்குறது 2 ஒரு குயர் நோட்டு..


    5. ஒரு பெண்மணி ஷாப்பிங்கிலிருந்து கை நிறைய பைகளுடன் வீடு திரும்புகிறார், வாசலில் இருக்கும் தபால் பெட்டியிலிருந்து கடிதங்களை சேகரிக்கிறார், வீட்டிற்குள் நுழைகிறார். சமையல் அறைக்கு செல்லும் வழியில் ஹாலில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்த தன் கணவனை பார்த்தபடியே குளிர்சாதனப் பெட்டியில் கறிகாய்களை அடுக்கி விட்டு தன் மற்ற வேலைகளை கவனிக்கிறார். என்ன நடக்கிறது இங்கே?

    டி.வி. சீரியல்.

    ReplyDelete
  2. மன்னிக்கவும் புலிப்பாண்டி அவர்களே. மூன்றுமே தவறான விடை. கேள்விகளுக்கு எண்ணைக் கொடுத்து விடையளித்தால் போதும். தயவு செய்து மறுபடி முயற்சிக்கவும்.

    மூன்றாம் கேள்வியை 8549176320 என்று கேட்டாலும் நான் நினைக்கும் விடைதான் வரும். க்ளூவாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

    நான்காம் கேள்வியில் நான் இரு ரூபாய் நோட்டுக்களையே குறிப்பிட்டேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. 3. EFiFoNOSeSiThTw. QED. Sorted by English alphabetised numerals.

    ReplyDelete
  4. 4. ஆம். மற்றொன்றுதான் 5 ரூபாய். ஒன்று 50 ரூபாய்.

    ReplyDelete
  5. 5. தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்த கணவன் ஃபோட்டோவில் இருக்கிறான். மாலை போட்டிருக்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை.

    ReplyDelete
  6. 6. அச்சகோதரி ஏற்கெனவே இறந்துபோயிருக்கலாம். எனவே தண்டனை கொடுக்க முடியாது போயிருக்கும்.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் பத்ரி. 100% சரி. செந்திலின் வாழைப்பழ ஜோக் ஞாபகத்துக்கு வந்திருக்க வேண்டுமே.

    என் பதிவுகளில் முதல் முறையாக பின்னூட்டமிட்டது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. சரி. அபத்தமாக இருந்தாலும்
    2. மற்ற நிற கார்கள் என்ன பிராண்ட் என்று சொல்லவில்லை. போங்கடிக்கவில்லை என்றால், நியாயமான கேள்வி என்றால், வெள்ளை கார், கறுப்பு கார் இரண்டுமே ஒரே பிராண்ட், ஒரே மேக், ஒரே மாதிரியான கார் என்றால், கறுப்பு பெயிண்ட் ஹெவியாக இருக்கலாம்.

    ReplyDelete
  9. ஐந்தாம் கேள்விக்கான விடை சரி. ஆறாம் கேள்விக்கு விடை அதுவல்ல. சகோதரி உயிருடனே இருக்கிறாள். இப்போது கண்டு பிடித்து விடுவீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. 6. "இருப்பினும்" என்ற வார்த்தையில் பிரச்னை இருக்கவேண்டும். அதாவது குற்றம் சாட்டப்பட்ட பெண் A, தன் சகோதரி B தான் கொலை செய்தாள் என்று நிரூபித்ததால் சகோதரி "A"ஐ தண்டிக்கப்போவதில்லை என்று முடிவு செய்து, சகோதரி "B"ஐ தண்டிக்க வழி பார்க்கலாம்?

    ReplyDelete
  11. Yes mama, thanks for the break.

    1. The poison was on the Ice, the first person drinks it before the ice melts.

    2. Because the total population of White cars is less than all the other colour cars population!

    6. becuae the sister is Licensed to kill? - doubtful.

    other two, i am sure!

    ReplyDelete
  12. ஐயோ பத்ரி, எல்லாமே மாருதி 800 என்றே வைத்துக்கொள்ளலாம்.
    விடையும் போங்குத்தனமானதுதான். இது க்ளூ.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. 1. The poison was on the Ice, the first person drinks it before the ice melts.

    2. Because the total population of White cars is less than all the other colour cars population!

    மிகச்சரி.

    சகோதரி கேள்விதான் அலைகழிக்கிறது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  14. "இருப்பினும்" என்ற வார்த்தையில் பிரச்னை இருக்கவேண்டும். அதாவது குற்றம் சாட்டப்பட்ட பெண் A, தன் சகோதரி B தான் கொலை செய்தாள் என்று நிரூபித்ததால் சகோதரி "A"ஐ தண்டிக்கப்போவதில்லை என்று முடிவு செய்து, சகோதரி "B"ஐ தண்டிக்க வழி பார்க்கலாம்?
    இல்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  15. ippadiyum sollalaam.

    1. madamadannu kudichu choke aagi poyirukkalam.
    4. hihi. adhu coimbatore note .

    ReplyDelete
  16. 6. அந்த சகோதரி மிக சிறு வயது பெண் அல்லது மனநோயாளியா?
    வீ எம்

    ReplyDelete
  17. 6. She was not in her senses? Retard?

    .:dYNo:.

    ReplyDelete
  18. "1. madamadannu kudichu choke aagi poyirukkalam.
    4. hihi. adhu coimbatore note"

    இல்லை.

    6. அந்த சகோதரி மிக சிறு வயது பெண் அல்லது மனநோயாளியா?
    வீ எம்

    August 12, 2005 7:47 PM


    .:D:. said...
    6. She was not in her senses? Retard?
    இல்லை. அந்த சகோதரியும் பெரியவள்தான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்


    .

    ReplyDelete
  19. சகோதரி கேள்வியின் பதிலைக் கேட்டால் அடிக்க வருவீர்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  20. saghodari yerkanave dhandanai kaidhiya irukalam alladhu foreign diplomata irukalam.

    vellai nira carkal anaithum hybrid vandiyaa?

    ReplyDelete
  21. saghodari yerkanave dhandanai kaidhiya irukalam alladhu foreign diplomata irukalam.

    vellai nira carkal anaithum hybrid vandiyaa?
    இல்லவே இல்லை. மேலும் கார்களுக்கான பதில் ஏற்கனவே வந்து விட்டது. பெனாத்தல் சுரேஷ் கொடுத்து விட்டார்:
    "2. Because the total population of White cars is less than all the other colour cars population!"

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  22. Because she killed in self-defense?

    ReplyDelete
  23. Because she killed in self-defense?

    இல்லை, அவள் கொலைதான் செய்தாள். ஆனாலும் அவளை தண்டிப்பதற்கில்லை என்று ஜட்ஜ் விட்டுவிட வேண்டியிருக்கிறது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  24. aval kanavan marana thandanai kaidhi. saghodhari thandanai niraivetrum velai paakalam.

    ReplyDelete
  25. 6. She was a cop and killed him in an encounter?

    He was a terrorist?

    I know this is getting silly!

    .:dYNo:.

    ReplyDelete
  26. aval kanavan marana thandanai kaidhi. saghodhari thandanai niraivetrum velai paakalam.
    # posted by aathirai : August 12, 2005 8:31 PM
    6. She was a cop and killed him in an encounter?

    He was a terrorist?

    I know this is getting silly!
    கிடையவே கிடையாது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  27. அந்தச் சகோதரிகள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்

    ReplyDelete
  28. அந்தச் சகோதரிகள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்.
    ஆம், சயாமிய இரட்டையர். வாழ்த்துக்கள் சலாஹுத்தின் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  29. 6 கேள்விகளுக்கு மூன்று சரியான விடைகள் பத்ரி அவர்கள் கொடுத்தார். பினாத்தல் சுரேஷ் அவர்கள் இரண்டு விடைகள் சரியாகக் கூறினார். கடைசியான கடின விடை சலாஹுத்தின் அவர்களுடையது.

    முன்னொரு முறை நான் ஏற்கனவே கூறியபடி நம் தமிழர்களுக்கு ஈடே இல்லை. இதே மாதிரி கேள்விகளை தில்லியில் நான் கேட்ட போது என் வட இந்திய நண்பர்கள் திணறினர்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  30. white colors reflects much of the heat. and this reflection decreases with increase in darkness. So you spend less power on A/C for white cars and hence lesser fuel. Correcta?

    ReplyDelete
  31. white colors reflects much of the heat. and this reflection decreases with increase in darkness. So you spend less power on A/C for white cars and hence lesser fuel. Correcta?
    இல்லை. சரியான விடை ஏற்கனவே வந்து விட்டது.
    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete