10/14/2005

ஆண், பெண் கற்பு நிலை - 2

உடல் இச்சை இருபாலருக்கும் பொதுவானது என்று முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதை பற்றி இங்கு விவரமாக எழுதுவேன்.உடல் இச்சையே எந்த ஒரு இனமும் தன்னை பெருக்கிக் கொள்வதற்கான உந்துதல். ஆகவே அது தவறு என்று கூறுபவர்கள் முட்டாள்கள். திருமணத்தை துறந்து சன்னியாசிகளாக போகிறவர்களில் பலர் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபடுவது இதனால்தான். இது எல்லா மதத்தினாருக்கும் பொருந்தும்.

இதிலும் ஆண்களுக்கு அவ்வளவு பாதிப்பில்லை. இப்படி அப்படி என்று இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியாமல் எச்சரிக்கையுடன் நட்ந்து கொண்டால் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் பெண்கள் பாடுதான் திண்டாட்டம். கருவுறுவது அவர்களே. ஆண் ஓடிவிடுவான். மாட்டிக் கொண்டு அவமானப்படுவது இவர்களே. சில சமயம் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வரை அவர்களுக்கு கிடைத்து விடுகிறது.

இந்த அழகில் ஊடகங்கள் வேறு பாடாய் படுத்துகின்றன. சில உதாரணங்கள் இங்கு கூறலாம். எழுபதுகளில் "இளமை ஊஞ்சலாடுகிறது" என்ற தலைப்பில் ஸ்ரீதர் இயக்கிய படம் திரையிடப்பட்டது. அதில் ஜயசித்திரா ஒரு விதவையாக வருவார். அவர் கூறிய வசனம் ஒன்றில் இவ்வாறு வரும். "பலர் என்னை திருமணம் செய்து கொள்ள முன்வந்தார்கள். ஆனால் எல்லோரும் என் உடலையே விரும்பினார்கள். ஆகவே நான் மறுத்து விட்டேன்." என்ன அபத்தமான கற்பனை இந்த வசனத்தை எழுதியவருக்கு. விதவை திருமணம் செய்து கொள்ள வேண்டும், ஆனால் உடல் உறவுக்காக அல்ல என்று கூற ஆசைப்படுகிறாரா? அதே போல "மன்மத லீலை" என்னும் படத்தில் ஜயப்பிரதா கமலிடம் கூறுகிறார்: "நான் உடல் ஊனமுற்ற போர்வீரனை கல்யாணம் செய்து கொண்டேன். அவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாது. ஆக, நான் செக்ஸுக்காக கல்யாணம் செய்து கொள்ளவில்லை." இதில் என்ன பெருமையோ. செக்ஸையே தப்பு என்றெல்லாம் எழுதுவார்கள். அதெல்லாம் பெண்களுக்குத்தான் ஆண் கதாபாத்திரங்களுக்கு ஒன்றுக்கு மேல் துணை வைப்பார்கள்.

சரி நம் விஷயத்துக்கு வருவோம். ஒரு ஆண் ஏன் உடலுறவின் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கிறான்? அவன் கருவுருவதில்லை அதனால்தானே? பெண் என்ன செய்வாள்? அறுபதுகளில் கருத்தடை மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கருவுராமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலை வந்ததும் பெண்கள் பொங்கி எழுந்தனர். அமெரிக்க ஆண்களே அஞ்சும் அளவில் உடல் உறவில் ஈடுபட்டனர். செயல்பட இயலாத ஆண்துணையை விடுத்து வேறு துணை தேடினர். இது நல்லதுக்கா கெட்டதுக்கா என்று இன்றும் விவாதங்கள் தொடர்கின்றன. அதில் நான் போக விரும்பவில்லை. கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்று மட்டும் கூறுவேன்.

குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.

ஒருவன் தன்னை கெடுத்துவிட்டால் அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபடவேண்டும். அதெல்லாம் சினிமாவுக்குத்தான் ஒத்து வரும். ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.

ஆனால் ஒன்று. எந்த செயலுக்கும் எதிர்வினை வரும். ஆகவே அதற்கெல்லாம் துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fire-தான்.

இன்னும் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

75 comments:

dondu(#11168674346665545885) said...

நன்றி இனோமினொ அவர்களே. நான் பல ஆண்டுகளாக இந்த விஷயத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் இரட்டை நிலையை கவனித்து வருகிறேன். அதன் அநீதி என்னை மிகவும் பாதித்தது. ஆகவேதான் எழுதினேன். இப்போது குஷ்பு விஷயத்தில் நடக்கும் விஷயங்களும் என் நிலையை வலிவுபடுத்துவதாகவே அமைந்துள்ளன.

பரபரப்பை உண்டாக்க வேண்டும் என்பதற்காக நான் இப்பதிவை இடவில்லை என்பதையும் இங்கே கூறிவிடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

குழலி / Kuzhali said...
This comment has been removed by a blog administrator.
வால்டர் said...
This comment has been removed by a blog administrator.
அன்பு said...
This comment has been removed by a blog administrator.
அன்பு said...

நான் இட்ட பின்னூட்டத்தை ஏன் நீக்கிவிட்டீர்கள் என்பதை தயவுசெய்து விளக்குங்கள். அப்படி விளக்காதபட்சத்தில் நீங்கள் இங்கு தொடர்ந்து எழுதுவதை வெறுக்கிறேன்!

dondu(#11168674346665545885) said...

தனிப்பட்ட முறையில் தாக்குபவை நீக்கப்பட்டன. கருத்தை விமசரியுங்கள். ஆட்களை அல்ல.
அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்பு said...

நான் எழுதியிருந்த பின்னூட்டத்தில் தனிப்பட்ட தாக்குதல் எங்கு இருக்கிறது என்று எனக்கு மின்னஞ்சலிலோ அல்லது இங்கு பொதுவிலோ இடுங்கள், பிறர் பார்க்கட்டும் அப்படி என்ன நான் எழுதியிருக்கிறேன் என்று...
அல்லது நான் எழுதியதை ஞாபகப்படுத்தி திரும்ப என்பதிவில் இடத்தயார்!

dondu(#11168674346665545885) said...

"இதெல்லாம் ரோட்டுல போறவங்களுக்கு மட்டுமா அல்லது நம்ப வீட்டுல இருக்கிறவங்களுக்கும் இதே அறிவுரைதானா!?"

இதை விடுத்து நீங்கள் எழுதிய மற்றவையெல்லாம் பற்றி ஆட்சேபம் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்பு said...

"இதெல்லாம் ரோட்டுல போறவங்களுக்கு மட்டுமா அல்லது நம்ப வீட்டுல இருக்கிறவங்களுக்கும் இதே அறிவுரைதானா!?"

இந்த வரிகளையும் மிகவும் யோசித்துத்தான் எழுதினேன். அதில் 'உங்க' என்று சொல்லாமல் 'நம்ப' என்று கூறியிருப்பது என்னையும் உட்படுத்தித்தான்!

அதிலும் நீங்கள் சொல்லும் கருத்துக்கள்/அறிவுரைகள் உங்களுக்கு உடன்பாடு என்கிறபோது - இதைக்குறிப்பிட்டு விளக்கம் கேட்பது ஏன் கசக்கிறது!?
ஊருக்குத்தான் உபதேசமா.

dondu(#11168674346665545885) said...

"ஊருக்குத்தான் உபதேசமா."
அப்படியில்லை. நான் கூறியது எல்லாம் துணிந்து காரியத்தில் இறங்குபவருக்கே. அவையும் போதனை அல்ல. ஆலோசனையே.

நீங்கள் கூறியதை எடுக்காமல் இருந்திருந்தால் அடுத்து என்ன வரும் என்பதும் தெரிந்ததே. ஆக, நானும் யோசித்துதான் எடுத்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜோ/Joe said...

ஐயோ!ஐயோ!! நல்ல பதிவு..நல்ல சப்பைக்கட்டு.

ஜோ/Joe said...

டோண்டு சார் .இந்த வாரம் பதிவுகள்லாம் உண்மையிலயே நீங்க தான் எழுதுறீங்களா? .பெருத்த ஏமாற்றம் ! ஆழமில்லா பதிவுகள் ..உங்களிடமிருந்து உருப்படியா எதிர்பார்த்தேன்.

dondu(#11168674346665545885) said...

உங்கள் ஏமாற்றத்துக்கு வருந்துகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

குழலி / Kuzhali said...

காலையில் விரிவாக எழுத முடியவில்லை, ஒரே ஒரு வரி மட்டும் எழுதி பின் நானே நீக்கிவிட்டேன்.

//'ஆண், பெண் கற்பு நிலை ' கட்டுரைகள் ஏமாற்றம் அளிக்கிறது.
//
எனக்கும் கடுமையான ஏமாற்றம், டோண்டு அய்யா ஏதோ சொல்ல வருகின்றார் ஆனால் அதை தெளிவாக சொல்ல விடாமல் தடுப்பது அவர் சமீபத்தில் சிலரிடம் வாங்கிய முற்போக்காளர் பட்டமா என தெரியவில்லை அதனால் தான் பூசி மெழுகுகின்றார் என கருதுகின்றேன்.

//அதே போல "மன்மத லீலை" என்னும் படத்தில் ஜயப்பிரதா கமலிடம் கூறுகிறார்: "நான் உடல் ஊனமுற்ற போர்வீரனை கல்யாணம் செய்து கொண்டேன். அவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாது. ஆக, நான் செக்ஸுக்காக கல்யாணம் செய்து கொள்ளவில்லை."
//
இதை எந்த சூழ்நிலையில் அவர் சொல்கின்றார் என தெரிந்துமா டோண்டு அய்யா இந்த உதாரணத்தை எடுத்து காண்பிக்கின்றார், மன்மதலீலை திரைப்படத்தில் கமல் எப்போதும், பார்க்கும் பெண்களிடமெல்லாம் பாலியல் உறவுக்காக அலையும் பாத்திரம், அவருக்கு இடித்துரைக்கும் பொருட்டு திருமணம் என்பது வெறும் பாலுறவுக்கு மட்டுமல்ல, அதையும் தாண்டியது என்று வலியுறுத்தவும் தான் இந்த காட்சி.

//பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது.
//
//என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.
//
இதை டோண்டு அய்யாவின் தனிப்பட்ட கருத்தாக எடுத்துக்கொண்டாலும் இப்படி செயல்படுவது பச்சை அய்யோக்கியத்தனம், நேர்மையற்றது இரண்டாவது வரியில் சப்பைக் கட்டு கட்டினாலும்.

//ஒருவன் தன்னை கெடுத்துவிட்டால் அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபடவேண்டும்.
//
இது சரியென்றே நானும் கருதுகின்றேன்.

நன்றி

dondu(#11168674346665545885) said...

"இதை எந்த சூழ்நிலையில் அவர் சொல்கின்றார் என தெரிந்துமா டோண்டு அய்யா இந்த உதாரணத்தை எடுத்து காண்பிக்கின்றார்"
அதாவது வச்சா குடுமி சரச்சா மொட்டை, அப்ப்டித்தானே. உடல் உறவு என்பது ரொம்ப சிக்கல் வாய்ந்தது. ஜயப்ரதா கமல் மேல் கோபம் கொள்ளும் அளவுக்கு அவர் ஒன்றும் செய்ததாக எனக்குத் தெரியவில்லை. ஜயப்ரதா தன் பழைய காதலனுக்கு வெறுப்பேற்றவே அவ்வாறு நடந்து கொண்டார். ஒருவர் தேவையை ஒருவர் பூர்த்தி செய்தனர். மேலும் இப்படம் ஒரு உதாரணமே. பாலசந்தர் தன் எல்லா படங்களிலும் முக்கியத் தருணங்களில் தன் பெண் கதாபாத்திரங்களை கைவிட்டு விடுவார். அதை விடுங்கள். அது இப்பதிவுக்கு அவ்வளவு முக்கியமில்லாதது.

"இதை டோண்டு அய்யாவின் தனிப்பட்ட கருத்தாக எடுத்துக்கொண்டாலும் இப்படி செயல்படுவது பச்சை அய்யோக்கியத்தனம்,"
பெண்களுக்கு எதிராக இவ்வளவு அயோக்கியத்தனம் நடக்கும்போது எதிர் வினையும் அப்படியே இருப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மாட்டிக் கொள்ளாமல் இருப்பதுதான் முக்கியம்.
"டோண்டு அய்யா ஏதோ சொல்ல வருகின்றார் ஆனால் அதை தெளிவாக சொல்ல விடாமல் தடுப்பது அவர் சமீபத்தில் சிலரிடம் வாங்கிய முற்போக்காளர் பட்டமா என தெரியவில்லை"
எனக்கு முற்போக்காளர் பட்டமா? இது எனக்கு புதிய செய்தி. விளக்க முடியுமா? நான் என்ன சொல்ல முடியாமல் திணறுகிறேன்? புரியவில்லை. இன்னும் ஒரு பதிவாவது இந்த வரிசையில் இருக்கும். ஒரு வேளை அதில் நான் சொல்லி விடுவேனோ என்னவோ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தாணு said...

உங்க பதிவில் பெண்கள் யாருமே பின்னூட்டமிடலை, ஏனென்றால் மனதில் தோன்றும் எண்ணங்களை எழுதும்போது எண்ணங்களை விமர்சிக்காமல் எங்களையே விமர்சித்துவிடுவதால்.

கெடுத்தவனையே மணம் செய்துகொள்ளவேண்டுமென்ற கட்டாயத்திலிருந்து கண்டிப்பாக விடுபட வேண்டும். அந்த நிச்சயத்தைக் கொடுப்பது பாதுகாப்பான உறவு, குஷ்பூ சொன்னது. தனக்காக தன்னை நேசிக்காமல் புணர்ந்துவிட்டு புறம் தள்ளிச் செல்லும் புல்லர்களுக்காக வாழ்க்கையைத் தொலைக்கும் பெண்கள்தான், இந்த சமூகத்தின் பார்வையில் பத்தினிகள்.

dondu(#11168674346665545885) said...

"நம்ம வள்ளுவரு களவியல்ல என்ன சொல்லியிருக்காருன்னு நம்ம கருணாநிதி சொல்றாரு
பாருங்க."

சுட்டிகள் வேலை செய்யவில்லை

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"உங்க பதிவில் பெண்கள் யாருமே பின்னூட்டமிடலை, ஏனென்றால் மனதில் தோன்றும் எண்ணங்களை எழுதும்போது எண்ணங்களை விமர்சிக்காமல் எங்களையே விமர்சித்துவிடுவதால்."

காரணம் நன்றாகவே புரிகிறது. கோபித்து பின்னூட்டம் இடுபவர்கள் பெண் விழித்துக்கொண்டு விடுவாளோ என்னும் பயத்திலேயே அவ்வாறு செய்கின்றனர் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சுட்டிகளுக்கு நன்றி பொழுது அவர்களே. படித்துப் பார்த்தேன். நன்றாக இருக்கின்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"இங்கு சமூக கட்டுப்பாடுகள் அதிகம், ஆணையும் பெண்ணையும் சரிசமமாக நாம் இன்னமும் கருதவில்லை என்பதே உண்மை"

அதைத்தானே நான் கூறுகிறேன். ஜனத்தொகையில் பாதிக்கு பெண்கள் இருக்கிறார்கள். சரிசமமாக இல்லை என்பதால் பாதிக்கப்படுபவர்கள்தான் ஏதேனும் செய்ய வேண்டும். ஆண்களுக்கு தற்போதைய நிலை சௌகரியமாக இருக்கிறது என்பதால் அவர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என எதிர்பார்க்க முடியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

///ஒருவன் தன்னை கெடுத்துவிட்டால் அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபடவேண்டும்.
////

டோண்டு அவர்களே.. இந்தப் பதிவின் இந்த ஒரு கருத்துக்கு மட்டும் 101% ஒத்துப்போகிறேன்."

நன்றி ஜயஸ்ரீ அவர்களே.

"மற்றபடி "வழக்கம்போல் போலி டோண்டு வந்து என் வலைப்பக்கத்திலும் நுழைந்து போலிப் பதிவு இடத் தொடங்கிவிட்டான்; இந்தப் பதிவு என்னுடையதல்ல" என்று நீங்கள் வந்து பின்னூட்டமிடவேண்டும் என்று உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனைப் பிரார்த்திக்கிறேன்."

நான் இட்ட இந்தப் பதிவுகளைக் கூறுகிறீர்களா அல்லது உங்கள் பதிவுகளில் அவன் வந்தானா? சமீபத்தில் உங்கள் பதிவுக்கு நான் வரவேயில்லை என்பதை இங்கே எதற்கும் கூறிவைக்கிறேன். என் பதிவுக்கு அவன் வருவான் என்பது நிச்சயம். வந்தால் என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியும்.

"மார்பு பார்க்கும் கலாசாரத்தை எதிர்ப்பதற்காக ஜிப் பார்க்கும் கலாசாரத்தைக் கொண்டுவருவது போலானது உங்களது இந்தப் பதிவின் ஆலோசனைகள்."
இல்லவே இல்லை. சம்பந்தப்பட்டப் பெண் வேறுவிதமாக பிரச்சினையை கையாண்டிருக்கலாம் என்பதே என் கருத்து. இப்போதைய சூழ்நிலையில் பெண்களால் வெளிப்படையாக செயலாற்ற முடியாது. மறைந்துதான் செயல்பட வேண்டும்.

"பெண்ணுக்கான விடுதலை என்ற பெயரில் இதன்மூலம் ஆண்கள் வசதியாக/தைரியமாக மேலும்மேலும் பெண்களை வீழ்த்துவதில் தான் இது முடியும் என்பது என் ("பத்தாம்பசலித்தனமான") கருத்து."

இதில் ஒரு பத்தாம்பசலித்தனமும் இல்லை. ஜாக்கிரதை உணர்வு பெண்களுக்கு மிகவும் அவசியம். மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதை மறுபடியும் வலியுறுத்துவேன்.

"நான் சொல்லவந்ததை முழுமையாகச் சொல்லவில்லை என்றே உணர்கிறேன். இருந்தாலும் இப்போதைக்கு இதை மட்டுமாவது சொல்லிவைக்கிறேன்.
மற்ற உங்கள் எல்லாப் பதிவுகளையும் பின்னூட்டமிடாவிட்டாலும் ஆர்வமுடன் விரும்பிப் படிக்கிறேன். நன்றி."

நன்றி. மூன்றாம் பதிவு வந்து விட்டது. அதை படித்து விட்டு என்னையும் சோவையும் திட்டப் போகிறார்கள். அது என்னுடைய பழைய பதிவு. அதற்கும் பெண்கள் யாரும் பின்னூட்டமிடவில்லை. அது காணாமல் போனதால் அதை இங்கு என் வன்தகட்டிலிருந்து எடுத்து போட்டிருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மரத் தடி said...

//மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதை மறுபடியும் வலியுறுத்துவேன்.//

பெண்கள் கண்ட கண்ட ஆண்களிடமும் போக வேண்டும். ஆனால் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று சொல்லி இருக்கிறீர்கள். இது ஊருக்கு மட்டுமான உபதேசமா அல்லது உங்கள் குடும்பத்துக்குமா என முன்னர் அன்பு கேள்வி கேட்டிருந்தார். பதிலைக் காணோமே?

Nirmala. said...

இந்த அறிவுரை, ஆலோசனை, எதிர்க்கூச்சல்... இதையெல்லாம் விட்டுடலாம். அவளுக்கு சுயமாக சிந்திக்க, செயல்பட தெரியும் என்று விலகி நிற்கலாம். என்ன சொல்றீங்க? சரிதானே.

dondu(#11168674346665545885) said...

"அவளுக்கு சுயமாக சிந்திக்க, செயல்பட தெரியும் என்று விலகி நிற்கலாம்."
கண்டிப்பாக. நான் சொல்ல வந்ததை சொல்லியாயிற்று. இனிமேல் இது பற்றி வேறு புதிய பதிவுகள் என்னிடமிருந்து இப்போதைக்கு வராது. ஆனால் வந்தவற்றுக்கான பின்னூட்டங்கள்? அது வேறு விஷயம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்பு said...

காரணம் நன்றாகவே புரிகிறது. கோபித்து பின்னூட்டம் இடுபவர்கள் பெண் விழித்துக்கொண்டு விடுவாளோ என்னும் பயத்திலேயே அவ்வாறு செய்கின்றனர் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
October 14, 2005 10:48 PM


இந்த உங்கள் பின்னூட்டத்தை இப்போதான் பார்த்தேன். என்னுடைய பின்னூட்டத்தையும் நீங்கள் நீக்கியிருப்பதால் - நானும் நீங்கள் சொல்லியிருக்கும் "கோபித்து பின்னூட்டம் இடுபவர்கள்" வரிசையில் இருக்கிறேனா என்று தெரிந்தால் மேலே பேச வசதியாயிருக்கும்.

இருந்தாலும், இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்கின்றீர்கள் என்று காத்திருக்க எனக்கு விருப்பமில்லை, அதனால் என்னுடைய கருத்து இங்கே, இப்பொதே:

இப்பொழுது பெண்கள் என்ன தூங்கிக்கொண்டிருக்கிறார்கள், உங்கள் புரட்சிகரமான ஆலோசனைகள், கருத்துக்களால் இப்பொழுது தட்டி எழுப்பிக்கொண்டிருக்கின்றீர்கள், நான் அதை தடுக்கிறேன்.

நீங்கள் இங்கு எழுதியிருப்பதையெல்லாம் சுயநினைவோடுதான் எழுதியிருக்கிறீர்களா!? என்ற சந்தேகம் இன்னுமிருக்கிறது என்னிடம் (ஆனால் உங்களைப்பற்றி தெரிந்தவர்களுக்கு வேண்டுமானால் இந்த சந்தேகமே வந்திருக்காது. அதனால் அவர்களும், பதிவைப்படித்த மற்ற பலர் ஏதோ ஒரு மரியாதையினாலோ அல்லது பேசிப்புண்ணியமில்லை என்ற எண்ணத்தினாலோ தன்னுடைய எதிர்ப்புகளை இங்கே தெரிவிக்காமல் சென்றிருக்கலாம்). அதனால் இதை உங்களுக்கு ஆதரவுநிலை என்று எடுத்து மேலும் உளறிக்கொட்டாமல் இத்தோடு உங்கள் உபதேசத்தை நிறுத்துங்கள். நன்றி.

நேற்று என்னுடைய முதல் பின்னூட்டத்தில் சொன்னதை (நீங்கள் நீக்கிவிட்டதால்) மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்:

ஆண், பெண் கற்பு நிலை
என்ற இந்தப்பதிவை எழுதலேன்ன்னு யாரு அழுதா!?

(பி.கு: இந்தப்பின்னூட்டம் இட்டது நிஜ 'அன்பு'தான்...
இதுமாதிரி ஒரு பின்னூட்டம் வலைப்பதிவில் நான் இடுவது இதுதான் முதல்முறை,
பாராட்டுக்கள்!)

குழலி / Kuzhali said...

//காரணம் நன்றாகவே புரிகிறது. கோபித்து பின்னூட்டம் இடுபவர்கள் பெண் விழித்துக்கொண்டு விடுவாளோ என்னும் பயத்திலேயே அவ்வாறு செய்கின்றனர் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.
//
வெறும் ஜால்ரா பின்னூட்டம் மட்டுமே எதிர்பார்க்கின்றார் போல, அவரது கருத்தை எதிர்த்து எழுதினால் பெண் விழித்துக் கொண்டுவிடுவாளோ என்று பயத்தில் பேசுகின்றார்கள் என பட்டமளிப்பார் (பட்டமளிப்பு அவருக்கு புதியது இல்லை என்றாலும்), என்னத்த பேசி என்னத்த செய்றது பேசி புண்ணியமில்லை...

//அதனால் அவர்களும், பதிவைப்படித்த மற்ற பலர் ஏதோ ஒரு மரியாதையினாலோ அல்லது பேசிப்புண்ணியமில்லை என்ற எண்ணத்தினாலோ தன்னுடைய எதிர்ப்புகளை இங்கே தெரிவிக்காமல் சென்றிருக்கலாம்
//
சரிதான் என நினைக்கின்றேன்.

ramachandranusha(உஷா) said...

குழலி, அன்பு! ஜெயஸ்ரீ சொன்னதை நான் வழி மொழிகிறேன். என் மொழியில் கற்பு ஒன், டூ, த்ரீ...., அனைத்தும் அபத்த களஞ்சியம்

நல்லடியார் said...

//ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது.//

கற்பழிப்பை நியாயப்படுத்துகிறீர்களா?

//பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்//

மனிதர்கள் திருடலாம் ஆனால் மாட்டிக் கொள்ளாமல் திருட வேண்டும் என்பதற்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை.

பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்
அறநாணத் தக்க துடைத்து. - திருக்குறள்

அதாவது வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும் என்ற குரளுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?

dondu(#11168674346665545885) said...

"//பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்//
மனிதர்கள் திருடலாம் ஆனால் மாட்டிக் கொள்ளாமல் திருட வேண்டும் என்பதற்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை."
ஒரு பெண் தன் உடல் இச்சையை தணித்துக் கொள்வதும் ஒரு திருடன் பிறர் பொருளைத் திருடுவதும் ஒன்றாகி விடுமா? என்ன பேசுகிறீர்கள்? பருவமடைந்து பல ஆண்டுகள் திருமணம் இல்லாத பெண்கள் படும் பாடு உமக்குத் தெரியவில்லை என்றுதான் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. மாட்டிக் கொள்ளாமல் இருக்கக் கூறுவது இப்போதைய கடுமையான கட்டுப்பாட்டிற்காகவே.

"//ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது.//
கற்பழிப்பை நியாயப்படுத்துகிறீர்களா?"
இதில் கற்பழிப்பு எங்கிருந்து வந்தது? நீங்களாக கற்பு என்று ஒன்றை கற்பனை செய்து கொள்வீர்கள். அதுவும் பெண்ணுக்கு மட்டும்தான். என்ன போங்கு இது.

மாதவிடாயை பற்றி நான் கூறியதே முகம்மது நபி அவர்களின் கருத்தை ஒட்டித்தான். கோபப்படாமல் கேளுங்கள். தலாக் செல்லுபடியாவதற்கு இத்தா (இத்தத்?) என்று வைத்திருக்கிறார்களே? அது என்னவாம்? இரண்டு அல்லது மூன்று மாதவிடாய்கள்தானே? ஒன்றே போதும், இருப்பினும் to be on the safe side இவ்வாறு வைத்திருக்கிறார்கள். ஒரு வேளை முந்தையக் கணவனால் கருவுற்றால் என்ன செய்வது என்பதுதானே இதில் முக்கியக் காரணம்?

பின்னூட்டத்துக்கு நன்றி என் புதுக்கல்லூரியில் படித்த நல்லடியார் அவர்களுக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

enRenRum-anbudan.BALA said...

Jsri,
//
மற்றபடி "வழக்கம்போல் போலி டோண்டு வந்து என் வலைப்பக்கத்திலும் நுழைந்து போலிப் பதிவு இடத் தொடங்கிவிட்டான்; இந்தப் பதிவு என்னுடையதல்ல" என்று நீங்கள் வந்து பின்னூட்டமிட வேண்டும் என்று உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனைப் பிரார்த்திக்கிறேன்.
//
Me too :)))

அப்பாவி said...

//கல்யாணம் செய்தால் கழட்டி விடுவது ரொம்ப கஷ்டம். கோர்ட் படியேறி வக்கீல், வாய்தா என்று அலைய வேண்டும். பின்னர் ஜீவனாம்சம் என்ற தொந்தரவு வேறு உண்டு. கல்யாணம் செய்யாமல் என்றால் சிம்ரனைக் கூப்பிட்டோமா xxx xxx xxx, அபிராமியைக் கூப்பிட்டோமா.. xxx xxx xxx xxx, கெளதமியைக் கூப்பிட்டோமா xxx xxx xxx என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு பாணியில் சென்று விடும். இதுகூடத் தெரியாத மண்டுவாக இருக்கிறீர்களே?//

இது போலி டோண்டுவின் பின்னூட்டம். (சென்ஸார் செய்யப்பட்டது)

//இதிலும் ஆண்களுக்கு அவ்வளவு பாதிப்பில்லை. இப்படி அப்படி என்று இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியாமல் எச்சரிக்கையுடன் நட்ந்து கொண்டால் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம். //

இது ஒரிஜினல் டோண்டு அவர்களின் பதிவு.

எனக்கென்னமோ ரெண்டு கருத்துமே ஒன்னு மாதிரியே தெரியுது! ஒன்னுமே புரியலியே!

இப்படிக்கு
அப்பாவி

dondu(#11168674346665545885) said...

"எனக்கென்னமோ ரெண்டு கருத்துமே ஒன்னு மாதிரியே தெரியுது! ஒன்னுமே புரியலியே!"

கான்டக்ஸ்டிலிருந்து விலக்கிப் பார்த்தால் அப்படித்தான் தோன்றும்.

மேலும், நான் கூறுவதற்கு மட்டுமே நான் பொறுப்பு. என் பெயரில் நான் கூறாததை பின்னூட்டமிடுவது இனிஷியல் இல்லாத பயல் செய்யும் வேலை. இரண்டையும் போட்டு ரொம்ப குழம்பாதீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நல்லடியார் said...

//ஒரு பெண் தன் உடல் இச்சையை தணித்துக் கொள்வதும் ஒரு திருடன் பிறர் பொருளைத் திருடுவதும் ஒன்றாகி விடுமா? என்ன பேசுகிறீர்கள்? //

உடல் இச்சையை எப்படியும் தீர்த்துக் கொள்ளலாம் என்றால் திருமணம் என்ற கட்டுப்பாடே தேவை இல்லை என்றுதானே அர்த்தம்?

உதாரணத்திற்கு Mr.A உடன் முறையற்ற உறவு கொள்ளும் பெண் Mr.B இன் மணைவியாக அல்லது மகளாக அல்லது சகோதரியாக இருக்கலாம். Mr.A அவளைத் திருமணம் செய்யாமல் உறவு கொள்வது Mr.B க்கு சொந்தமானதை திருடுவதற்குச் சமமில்லையா? நீங்கள் சொல்வது தவறான உறவு கொள்ளலாம் ஆனால் Mr.B க்கு தெரிந்து விடக்கூடாது என்று சொல்வது போலில்லை?

//பருவமடைந்து பல ஆண்டுகள் திருமணம் இல்லாத பெண்கள் படும் பாடு உமக்குத் தெரியவில்லை என்றுதான் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது//

இதற்கு யார் சார் காரணம். தோசம்,வரதட்சினை மற்றும் ஜாதியல்லவா காரணம். இவற்றை ஒழித்துக் கட்டினால் போதுமே? இவையெல்லாம் இருந்து கொண்டுதான் இருக்கும் அதனால் குறுக்குவழியில் சுகம் பெறலாம் என்பது சரியாகப் படவில்லை.

//மாதவிடாயை பற்றி நான் கூறியதே முகம்மது நபி அவர்களின் கருத்தை ஒட்டித்தான். கோபப்படாமல் கேளுங்கள். தலாக் செல்லுபடியாவதற்கு இத்தா (இத்தத்?) என்று வைத்திருக்கிறார்களே? அது என்னவாம்?//

விதவை/விவாக விலக்குப் பெற்ற பெண், மறுமணம் முடிக்கும் முன் இத்தகைய அறிவுருத்தல் இருப்பது,உண்டாகி இருக்கும் குழந்தை யாருடையது என அறிந்து கொள்ளவே. புதிய கணவனுடன் உறவு கொண்டபின் முந்தைய கணவன் (உயிருடன் இருந்தால்) அல்லது புதிய கணவன் இவர்களுக்கு ஏற்படும் தேவை இல்லாத குழப்பங்களை தவிர்க்கவே இத்தகைய வழிகாட்டல். கல்யாணம் என்ற நிகழ்வுக்காகத்தான் இந்த வழிமுறையே தவிர்த்து நீங்கள் புரிந்து கொண்டது போல் அல்ல.

//பின்னூட்டத்துக்கு நன்றி என் புதுக்கல்லூரியில் படித்த நல்லடியார் அவர்களுக்கு.//

என் கல்லூரி சீனியர் தவறான வழிகாட்டக் கூடாதே என்றுதான் உரிமையுடன் பின்னூட்டமிட்டேன்.

dondu(#11168674346665545885) said...

"உடல் இச்சையை எப்படியும் தீர்த்துக் கொள்ளலாம் என்றால் திருமணம் என்ற கட்டுப்பாடே தேவை இல்லை என்றுதானே அர்த்தம்?"
திருமணம் ஆகி, கணவனும் அவள் உடல் இச்சையை பூர்த்தி செய்தால், ஒரு பெண் வெளியே செல்ல வேண்டிய அவசியமே இல்லையே. (கவனிக்கவும், இதில் இரு ஷரத்துகள் உள்ளன.) திருமணமாகாமல் 9 அல்லது 10 ஆண்டுகள் தனிமையில் வாடுபவர்கள் கதி? இதில் ஆண்கள் பாடு தேவலை. ஆகவே இப்பதிவு. உங்கள் தரப்பிலிருந்து ஆண்களுக்கு ஒப்புக்குக் கூட ஒரு அறிவுரை இல்லையே?

"உதாரணத்திற்கு Mr.A உடன் முறையற்ற உறவு கொள்ளும் பெண் Mr.B இன் மனைவியாக அல்லது மகளாக அல்லது சகோதரியாக இருக்கலாம். Mr.A அவளைத் திருமணம் செய்யாமல் உறவு கொள்வது Mr.B க்கு சொந்தமானதை திருடுவதற்குச் சமமில்லையா? நீங்கள் சொல்வது தவறான உறவு கொள்ளலாம் ஆனால் Mr.B க்கு தெரிந்து விடக்கூடாது என்று சொல்வது போலில்லை?"
B-க்கு எய்ட்ஸோ அல்லது தீராத வியாதியோ இருந்தால் அவர் மனைவியின் கதி? இதைத்தான் நான் புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் இருந்தால் அவர் மனைவியின் கதி என்ன என்று கேட்டேன். மேலும், மனைவி என்ன ஒரு பொருளா?

//பருவமடைந்து பல ஆண்டுகள் திருமணம் இல்லாத பெண்கள் படும் பாடு உமக்குத் தெரியவில்லை என்றுதான் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது//
இதற்கு யார் சார் காரணம். தோசம்,வரதட்சினை மற்றும் ஜாதியல்லவா காரணம். இவற்றை ஒழித்துக் கட்டினால் போதுமே? இவையெல்லாம் இருந்து கொண்டுதான் இருக்கும் அதனால் குறுக்குவழியில் சுகம் பெறலாம் என்பது சரியாகப் படவில்லை."
யார் வேண்டுமானாலும் காரணமாக இருக்கட்டுமே. அப்பிரச்சினைகள் உடனே தணியக்கூடியதா? உடல் இச்சை என்பது பசி, தாகம் போன்ற அடிப்படை உணர்ச்சி. ஆணை மட்டும் சுதந்திரமாக விட்டு பெண்ணுக்கு கட்டுப்பாடு விதிப்பது என்ன நியாயம்? இதற்கான பின்புலனை என் முதல் பதிவில் எழுதியுள்ளேன். கற்பு என்பது எந்த சூழ்நிலையில் முதலில் உண்டாயிற்று என்பதை பற்றிய என் கருத்துக்களையும் பாருங்கள்.

//மாதவிடாயை பற்றி நான் கூறியதே முகம்மது நபி அவர்களின் கருத்தை ஒட்டித்தான். கோபப்படாமல் கேளுங்கள். தலாக் செல்லுபடியாவதற்கு இத்தா (இத்தத்?) என்று வைத்திருக்கிறார்களே? அது என்னவாம்?//

விதவை/விவாக விலக்குப் பெற்ற பெண், மறுமணம் முடிக்கும் முன் இத்தகைய அறிவுருத்தல் இருப்பது,உண்டாகி இருக்கும் குழந்தை யாருடையது என அறிந்து கொள்ளவே. புதிய கணவனுடன் உறவு கொண்டபின் முந்தைய கணவன் (உயிருடன் இருந்தால்) அல்லது புதிய கணவன் இவர்களுக்கு ஏற்படும் தேவை இல்லாத குழப்பங்களை தவிர்க்கவே இத்தகைய வழிகாட்டல். கல்யாணம் என்ற நிகழ்வுக்காகத்தான் இந்த வழிமுறையே தவிர்த்து நீங்கள் புரிந்து கொண்டது போல் அல்ல."
அதிலிருந்து இது derive ஆனது. அவ்வளவுதான். மாத விடாய் வந்ததும் one can start with a clean slate என்பதை வலியுறுத்தவே எழுதினேன். ஆனால் இதை எனக்கு நினைவுபடுத்தியது இத்தத்தே.

//பின்னூட்டத்துக்கு நன்றி என் புதுக்கல்லூரியில் படித்த நல்லடியார் அவர்களுக்கு.//
"என் கல்லூரி சீனியர் தவறான வழிகாட்டக் கூடாதே என்றுதான் உரிமையுடன் பின்னூட்டமிட்டேன்."
கவலை வேண்டாம் நல்லடியார் அவர்களே. ஆண்களின் double standard-ஐ எதிர்த்து போடப்பட்ட பதிவு இது. அந்த கான்டக்ஸ்டில் மட்டும் பாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நல்லடியார் said...

//உங்கள் தரப்பிலிருந்து ஆண்களுக்கு ஒப்புக்குக் கூட ஒரு அறிவுரை இல்லையே?//

நான் தனித்தனியாக சொல்லவில்லை. ஒழுக்கம் என்பது இருபாலருக்கும் அவசியம் எனும் இஸ்லாத்தின் கருத்துதான் என் கருத்தும்.

//B-க்கு எய்ட்ஸோ அல்லது தீராத வியாதியோ இருந்தால் அவர் மனைவியின் கதி?//

தவறாக கேட்கிறீர்கள். "A-க்கு" என்று இருக்க வேண்டும். இருப்பினும் இதுவும் தவறுதான். எப்படியோ A அல்லது B எயிட்ஸை எப்படி பெற்றிருப்பார்கள் என்று யோசித்தீர்களா?

மாறாக,பெண்ணுக்கு எயிட்ஸ் இருந்தால், அப்பாவி Mr.A பாதிக்கப்படுகிறாரே?

//மேலும், மனைவி என்ன ஒரு பொருளா?//

இங்கு பேசப்படுவது "கற்பு" என்ற பொதுவானதைப் பற்றி. திருவள்ளுவர் கூட கற்பை "உடைமை" (கற்புடைமை) என்றே விளித்திருக்கிறார் என நினைக்கிறேன்.

//உடல் இச்சை என்பது பசி, தாகம் போன்ற அடிப்படை உணர்ச்சி//

திருமணம் எனும் பந்தத்தின் மூலம் இவ்வுணர்ச்சியை தனித்துக் கொள்ள என்ன தடையேதுமில்லையே? உங்கள் கருத்துப்படி "பெண்ணுக்கு ஏற்ற திருமணவயது இருபத்தியொன்று" என்பதும் தவறே. வயதுவந்த பெண்ணுக்கு ஏற்ற திருமண வயது எது என்பதை அவளின் பெற்றோர்தான் தீர்மானிக்க வேண்டும்.

//ஆண்களின் double standard-ஐ எதிர்த்து போடப்பட்ட பதிவு இது//

அதற்கு ஒழுக்கச் சீர்கேட்டை ஆதரித்து எழுதக் கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.

அன்புடன்,

dondu(#11168674346665545885) said...

"//B-க்கு எய்ட்ஸோ அல்லது தீராத வியாதியோ இருந்தால் அவர் மனைவியின் கதி?//

தவறாக கேட்கிறீர்கள். "A-க்கு" என்று இருக்க வேண்டும். இருப்பினும் இதுவும் தவறுதான். எப்படியோ A அல்லது B எயிட்ஸை எப்படி பெற்றிருப்பார்கள் என்று யோசித்தீர்களா?
மாறாக,பெண்ணுக்கு எயிட்ஸ் இருந்தால், அப்பாவி Mr.A பாதிக்கப்படுகிறாரே?"

இல்லை நான் சரியாகத்தான் கூறினேன். B-க்கு எய்ட்ஸ் இருந்ததால் அவர் மனைவி அவருடன் உறவு கொள்ள முடியவில்ல, ஆகவே வடிகாலுக்காக A-யிடம் வருகிறார். Mr.A நிச்சயம் அப்பாவி இல்லை. அவர் செய்தது சமூகத்தின் கண்ணோட்டத்தில் தவறே. அதற்கான விலையை கொடுக்கிறார். B எயிட்ஸை எப்படி பெற்றிருப்பார் என்றா கேட்கிறீர்கள்? கண்டிப்பாக வேறு ஏதோ பெண்ணிடமிருந்தோ ஆணிடமிருந்தோ அல்லது வேறுவகையிலோ பெற்றிருப்பார். அதற்கு அவர் மனைவி பலியா? செக்ஸ் இல்லாமல் வாழ வேண்டியதுதானா? என்ன பேசுகிறீர்கள்?

"நான் தனித்தனியாக சொல்லவில்லை. ஒழுக்கம் என்பது இருபாலருக்கும் அவசியம் எனும் இஸ்லாத்தின் கருத்துதான் என் கருத்தும்."
இருக்கலாம், ஆனால் உங்கள் பின்னூட்டத்தில் அது தெரியவில்லை. இருந்தாலும் உங்களை நான் இணையத்தின் மூலம் ஒரு கண்ணியமான மனிதர் (எங்கள் புதுக்கல்லூரி மாணவர் அல்லவா) என்று ஏற்கனவே அறிவேன் என்ற முறையில் நீங்கள் கூறியது உண்மை என ஏற்கிறேன். அதே நேரத்தில் ஆணுறை அணியுமாறு விலைமாதரிடம் செல்லும் ஆண்களுக்கு அரசே அறிவுரை கூறுகிறதே? அதையே பெண்ணுக்கும் நான் எக்ஸ்டெண்ட் செய்தேன். அரசின் மேல் வராத கோபம் என் மேல் ஏன் வருகிறது? உங்களைச் சொல்லவில்லை, மற்றவர்களை சொல்லுகிறேன். உங்களுக்கு என் மேல் கோபம் இல்லை, வருத்தமே என்பதையும் புரிந்து கொள்கிறேன்.

"திருமணம் எனும் பந்தத்தின் மூலம் இவ்வுணர்ச்சியை தனித்துக் கொள்ள என்ன தடையேதுமில்லையே? உங்கள் கருத்துப்படி "பெண்ணுக்கு ஏற்ற திருமணவயது இருபத்தியொன்று" என்பதும் தவறே. வயதுவந்த பெண்ணுக்கு ஏற்ற திருமண வயது எது என்பதை அவளின் பெற்றோர்தான் தீர்மானிக்க வேண்டும்."
நான் கூறியது நடைமுறை சட்டப்படி. ஒரு பெண் 13 வயதில் பருவம் அடைகிறாள். 8 வருடம் கஷ்டம்தானே. எல்லாருமே அப்படித்தான் என்றும் நான் கூறவில்லை. ஏனெனில் பெண்களுக்கு இருக்கும் பயங்கரக் கட்டுப்பாடு அத்தகையதே. ஆனால் பெண்ணின் செக்ஸ் உணர்ச்சியே தவறு என்பது போலத்தானே எல்லா மதங்களும் செயல்படுகின்றன. மாற்றம் வரலாம், எப்போது. ஒரு 100 ஆண்டுகள் ஆகுமா? அதெல்லாம் மாக்ரொ அளவில் பார்க்க வேண்டியது. நான் பேசுவது மைக்ரோ அளவில். அது வரை பல தலைமுறை பெண்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்க வேண்டுமா?

"//ஆண்களின் double standard-ஐ எதிர்த்து போடப்பட்ட பதிவு இது//
அதற்கு ஒழுக்கச் சீர்கேட்டை ஆதரித்து எழுதக் கூடாது என்பது என் தாழ்மையான கருத்து."
ஒழுக்கம் என்பது ஒருவழிப்பாதையல்ல. பாதிக்கப்பட்டவரிடம் இதையெல்லாம் கூறிக்கொண்டிருக்க முடியாது. இது உங்கள் மனதுக்கே புரியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்பு said...

அதே நேரத்தில் ஆணுறை அணியுமாறு விலைமாதரிடம் செல்லும் ஆண்களுக்கு அரசே அறிவுரை கூறுகிறதே? அதையே பெண்ணுக்கும் நான் எக்ஸ்டெண்ட் செய்தேன். அரசின் மேல் வராத கோபம் என் மேல் ஏன் வருகிறது? உங்களைச் சொல்லவில்லை, மற்றவர்களை சொல்லுகிறேன்.

தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்க... என்ற சொற்கள்தான் அரசு விளம்பரத்தில் உண்டு என்ற நினைவு.
விலைமாதரை அங்கீகரிக்கும் மசோதா பற்றிய பேச்சே நேற்றுதான் அமைச்சரவைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் அரசே இதற்கு உதவுகிறது என்கின்றீர்கள்?

ஒரு பெண் 13 வயதில் பருவம் அடைகிறாள். 8 வருடம் கஷ்டம்தானே.
நான் ஏதோ இதுவரை முதுகன்னிகள் மற்றும் வயதான பெண்களுக்கு மட்டும் ஆதரவாகப் பேசுகின்றீர்கள், என தவறாக எண்ணி விட்டேன். உங்கள் லெவலே தனிதான்... உங்கள் ஆதங்கம் புரிகிறது!
நடுநிலைப்பள்ளி என்ன இப்போதெல்லாம் ஆரம்பப்பள்ளியிலிருந்தே உங்கள் அறிவுரையை ஆரம்பித்து விடலாம்.

மாற்றம் வரலாம், எப்போது. ஒரு 100 ஆண்டுகள் ஆகுமா? அதெல்லாம் மாக்ரொ அளவில் பார்க்க வேண்டியது. நான் பேசுவது மைக்ரோ அளவில். அது வரை பல தலைமுறை பெண்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்க வேண்டுமா?
இங்கு மாற்றம் வந்து, பள்ளி செல்லும் பெண்கள் குழந்தையைப்பெற்று கழிப்பறையில், குப்பைத்தொட்டியில் போடும் அவலம் நடந்துவருகிறது. இந்த நிலை எப்போது இங்குவரும் என்று கவலைப்படும் உங்களைப்போன்ற பெரியவர்கள் இருக்கும்வரை வருங்கால சந்தததிகளுக்கு கவலையே இல்லை. நீங்கள் தொடர்ந்து ஜமாய்ங்க. பாராட்டுக்கள்.

dondu(#11168674346665545885) said...

"தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்க... என்ற சொற்கள்தான் அரசு விளம்பரத்தில் உண்டு என்ற நினைவு."
உங்கள் நினைவு முழுமையாக இல்லை. எய்ட்ஸ் வராமல் தடுக்க ஆணுறை முக்கியமாக அரசாலேயே வலியுறுத்தப்படுகிறது.

"நான் ஏதோ இதுவரை முதுகன்னிகள் மற்றும் வயதான பெண்களுக்கு மட்டும் ஆதரவாகப் பேசுகின்றீர்கள், என தவறாக எண்ணி விட்டேன். உங்கள் லெவலே தனிதான்... உங்கள் ஆதங்கம் புரிகிறது!
நடுநிலைப்பள்ளி என்ன இப்போதெல்லாம் ஆரம்பப்பள்ளியிலிருந்தே உங்கள் அறிவுரையை ஆரம்பித்து விடலாம்."

"இங்கு மாற்றம் வந்து, பள்ளி செல்லும் பெண்கள் குழந்தையைப்பெற்று கழிப்பறையில், குப்பைத்தொட்டியில் போடும் அவலம் நடந்துவருகிறது."

இதற்காகத்தான் காம்ப்ளிகேஷன்ஸ் ஏதும் இல்லாமல் பார்த்து கொள்வது முக்கியம் என்று எழுதியுள்ளேன். எல்லாமே நல்ல நிலையில் உள்ளன என்று கண்ணை மூடிக்கொள்வது உங்கள் விருப்பம். அதனால் உலகம் அஸ்தமித்து விடாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"ஒருவனுக்கு ஒருத்தி என்பது, இன்று ஒழிக்கமுடியாத எய்ட்ஸ், மற்றும் பால்வினை நோய்களை ஒழிக்க வல்லது."

வாருங்கள் சலாஹுத்தீன் அவர்களே,

நாமக்கல்லை சேர்ந்த லாரி ஓட்டுனர்கள் போன்ற பலர் கொழுப்பெடுத்துப்போய் எய்ட்ஸை வரவழைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் மனைவியர் என்ன செய்ய வேண்டும் என எதிர்ப்பார்க்கிறீர்கள்? அப்படியும் விதியை நொந்துகொண்டு உடலுறவுத் தேவையையே மறுத்து வாழும் மனைவியர்தான் அதிகம். அதற்கு பல காரணங்கள் உண்டு. எது எப்படியாயினும் அதுதான் யதார்த்த நிலை. அதனால்தான் கேட்டேன், கேட்கிறேன், புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வந்தால் அவர் மனைவி என்ன செய்வார்?

நான் கூற வந்ததே வேறு. உடல் இச்சை இரு பாலருக்கும் பொதுவே. இதில் ஆணுக்கு மட்டும் முழு சுதந்திரம், பெண்ணுக்கு மட்டும் எல்லா கட்டுப்பாடுகளும். அந்த நிலையில் ஒரு பெண் முடிவு எடுத்தால் அவரை எவ்வாறு தவறாகக் கூற முடியும்?

சரி, நான் கேட்கும் கேள்விக்கு பதில் கூறுங்கள். கணவனுக்கு எய்ட்ஸ் வந்ததற்காக ஒரு பெண் விவாகரத்தோ அல்லது குலாவோ கேட்டால் அது நியாயம் என ஒத்துக் கொள்வீர்களா அல்லது மணமுறிவு வேண்டாம் என உபதேசம் செய்வீர்களா? உங்கள் மனசாட்சிப்படி பதிலளிக்கவும்.

என் புதுக்கல்லூரியில் படித்த சலாஹுத்தீனுக்கு பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"இப்படிப்பட்ட ஆண்களின் மனைவிகளைத் தேடிக் கண்டு பிடித்து அவர்களுடைய உடல் பசியைத் தீர்க்க இப்படி ஒரு சேவை செய்யும் உள்ளம் கொண்ட இத்தனை தனவான்கள் அலைந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது ஏன் தான் செய்யும் இந்த சேவையை செய்தித் தாளிலோ எதிலுமோ வெட்ட வெளிச்சமாக சொல்லலாமில்லையா?"


நீங்கள் குறிப்பிடும் அந்த தனவாகளில் நான் இல்லையென்பதால் பதில் அனுமானமாகத்தான் கூற முடியும். அவ்வாறு செய்வது சம்பந்தப்பட்டப் பெண்ணுக்குத்தான் அதிக பாதிப்பு. இப்போது இருக்கும் நிலையில் அது செய்ய முடியாது.

அப்படிப்பட்ட தனவான்கள் இருப்பதும் பலர் அச்சேவையை உபயோகிப்பதும் பல நூற்றாண்டுகளாகத்தான் நடந்து வருகிறது. வாத்ஸாயனர் அவ்வித உறவுகளைப் பற்றி சில அத்தியாயங்கள் எழுதியுள்ளார் என்பது தெரியுமா? இந்த நிலைமை இருக்கிறது என்பதில் ஐயமில்லை. சரியோ தவறோ அதை சம்பந்தப்பட்டவர்கள்தான் டீர்மானிக்க வேண்டும். அதில் தலையிடும் மற்றவர்கள் பெண்ணுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதிக்கின்றனர். அதை எதிர்த்துத்தான் என் பதிவு.

மற்ற கேள்விகள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாமன்னன் said...

பால்ய விவாகம் பற்றிய முத்து பதிவில் எழுதியது. ஷாஜஹான் நண்பன் பதிவில் எழுதப்பட்டது

இது நீக்கம் செய்யப்பட்டுவிட்டது. இதில் என்ன அசிங்கம் இருக்கிறது? ஏன் நீக்கப்பட்டது என்று முத்து விளக்குவாரா?
இத்தனைக்கும் நண்பன் என்ற ஷாஜஹானை பாராட்டியல்லவா இருக்கிறேன்?


#
//நண்பன் said...

டோண்டு, ஒத்துக் கொள்ளுங்கள் - பால்ய விவகாம் தவறென்று. //

நண்பன் என்ற ஷாஜஹான்.

பால்ய விவாகம் தவறு என்று முரசரைக்கும் உங்களை நான் வெகுவாக பாராட்டுகிறேன்.

முகம்மது தனது 53ஆம் வயதில் 6 வயதான அயீஷாவை திருமணம் செய்து அவர் 8 1/2 வயதாகும்போது பாலுறவு கொண்டார். உங்களது இதே நிலைப்பாட்டின் தொடர்ச்சியாக அதனையும் மாபெரும் தவறு என்றுதான் நீங்கள் கூறுவீர்கள். உங்களது நேர்மையான உரத்த குரலுக்கு தலை சாய்க்கிறேன்.

நன்றி
முழு விவரமும் இங்கே

இஸ்லாத்தில் பெண்ணின் திருமண வயது என்ன?
கூடவே ஆசீப் மீரான் குரானில் கண்ணுக்குக் கண் என்று குரானில் சொல்லப்பட்டிருப்பதை எதிர்த்து சொன்னதை ஆதரித்து இந்த பதிவு

உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் -5.45

Muthu said...

ஆரோக்கியம்,
//பால்ய விவாகம் பற்றிய முத்து பதிவில் எழுதியது. ஷாஜஹான் நண்பன் பதிவில் எழுதப்பட்டது

இது நீக்கம் செய்யப்பட்டுவிட்டது. இதில் என்ன அசிங்கம் இருக்கிறது? ஏன் நீக்கப்பட்டது என்று முத்து விளக்குவாரா?//

இதில் சொல்லப்படும் முத்து எந்த முத்து என்று கூறுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

ஒரு நேரத்தில் ஒரு பதிவு, ஒரு பின்னூட்டபதிவு என்று போகவும். குழம்பி மற்றவரையும் குழப்பி ஏன் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்கிறீர்கள்?

இந்த முத்து நானாக இல்லாத பட்சத்தில் இதை இக்னோர் செய்யவும் .நன்றி.

Muthu said...

முத்துகுமரனை முத்து என்று கூறிவி்ட்டீர்களா? சரி சரி...

மாமன்னன் said...

அன்பின் முத்து,

முத்துக்குமரன் அவர்களையே முத்து என்று எழுதினேன்.
உங்கள் புரிதலுக்கு நன்றி

ஆரோக்கியம்

மாமன்னன் said...

ஷாஜஹான் முகம்மதுவின் பால்ய விவாகத்தை ஆதரித்து எழுதிய பதிவுக்கு பதில் இங்கே

இதோ ஷாஜஹானுக்கு பதில்

கசி said...
This comment has been removed by a blog administrator.
கசி said...
This comment has been removed by a blog administrator.
Santhosh said...

டோண்டு,
நல்ல பதிவு இவ்வளவு நாளாக இதை நான் கவனிக்க வில்லை. இதே சீரியசில் அடுத்த பதிவு எப்போ? தலைப்பு நான் தான் சொல்லுவேன் "பக்கத்து வீட்டு பெண்ணுடன் மாட்டிக்கொள்ளாமல் உடலுறவு கொள்வது எப்படி" இரண்டு வெர்ஷன் முதல் வந்து பெண்கள் வெர்ஷன்(ஏன்னா ladies first) இரண்டாவதாக ஆண் வெர்ஷன்..இப்படியே பிக்கப்பண்ணி போனிங்கன்னா சரோஜா தேவியின் இரவுகள் மாதிரி நிறைய போடலாம் கலக்குங்க சார்...அப்படியே தேன் கூட்டில் சிறந்த வலைபதிவாளர் ஆனதற்கு வாழ்த்துக்கள்...நல்லா புடிக்கிறாங்கப்பா சிறந்தவர்களை...

dondu(#11168674346665545885) said...

வாழ்த்துக்களுக்கு நன்றி சந்தோஷ் அவர்களே.

நீங்கள் கூறியது சம்பந்தமாக மூன்று பதிவுகள் போட்டுள்ளேன் சந்தோஷ் அவர்களே. எல்லாவற்றையும் படிக்கவும். உங்கள் நண்பர் போலி டோண்டுவை விடவா அசிங்கமாக எழுதி விட்டேன்? அவரையே நீங்கள் ஆதரித்த போது, இதெல்லாம் ஜுஜுபி.

அதை விடுங்கள், உங்கள் நண்பர் சதயத்தை கொம்பு சீவி விட்டு, அவர் மட்டுறுத்தலை செயல்படுத்தாமல் இருப்பதற்கான ஆதரவை தெரிவித்து விட்டு ஓசைப்படாமல் உங்கள் பதிவில் மட்டும் மட்டுறுத்தல் செய்து கொண்டீர்களே. அதை எந்த சினேகிதத் துரோகத்தில் சேர்ப்பதாம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

திரு. டோண்டு அவர்களின் கருத்தாக நான் புரிந்துகொண்டது பின்வருமாறு:

ஒருவர் தன் துணைக்கு மரியாதையும் பரஸ்பர நம்பிக்கையும் ஊட்டும் வகையில் நடக்கவேண்டும். ஆணோ, பெண்ணோ த்ரோகம் செய்வது தவறுதான்.

அதே சமயத்தில் வன்முறைகளின் காரணமாக விருப்பமின்றியும், துணையே இல்லாத நிலையினாலும், இயற்கையின் பலத்தினாலும் பலர் முறைசாராச் செயல்களில் ஈடுபட்டுவிடுகின்றனர். அங்கனம் ஈடுபட்டதாலேயே அவமானங்களையும், துன்பங்களையும் அவர்கள் சந்திக்க நேரிடுகிறது.

சமுதாயமானது இச்செயல்களைத் தண்டித்தாலும், கண்டித்தாலும் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க எல்லோருக்கும் ஒரு பொதுதர்மத்தை வழங்காமல் இருக்கிறது. இது சமுதாயமானது தனிமனிதர்களின் மேல் செயல்படுத்துகின்ற வன்முறை. இவ்வன்முறையால் வரம்பு மீறுபவர்களை அதே சமுதாயம் ஏளனம் செய்யவும், அவமானப்படுத்தவும், துன்புறுத்தவும் செய்கிறது.

இத்தகைய சூழ்நிலையிலிருந்து தப்ப தனிமனிதர்கள் தங்களது சுயமரியாதையையும், தன்னம்பிக்கை அளிக்கும் வாழ்வையும் பெற ஜாக்கிரதையாகவிருக்க வேண்டியது அவஸ்யமாகிறது. விஞ்ஞான வளர்ச்சி பெற்ற காலத்தில் இதற்கான வழிமுறைகளைப் பயன்படுத்துவதும் வரவேற்கத்தக்கதே.

இந்த விஷயங்கள் பாதிக்கப்படும் மனிதர்களுக்கு மட்டும்தானேயொழிய எல்லோருக்குமில்லை. எல்லோரும் செய்ய வேண்டும் என்றும் திரு டோண்டு அவர்களும் சொல்லவில்லை.

இந்த விஷயத்தில் பலரும் தங்களது நேர்மையை, ஒழுக்கத்தை நிலைநிறுத்த முயல்கிறார்கள். புரிந்து கொள்ளாமல் கேள்வி எழுப்புகிறார்கள்.

கேள்வி கேட்க யேஸு இல்லாதபோது, கல்லெறிபவர்கள் நியாயவான்கள்.

நான் தங்களுடைய கருத்துக்களாகப் புரிந்து கொண்டவை அனைத்தும் சரிதானே, டோண்டு சார்?

dondu(#11168674346665545885) said...

"நான் தங்களுடைய கருத்துக்களாகப் புரிந்து கொண்டவை அனைத்தும் சரிதானே, டோண்டு சார்?"

நான் ஏற்கனவே வேறிடத்தில் உங்களைப் பற்றிக் கூறியதுதான் இப்போதும் கூறுவேன். அதாவது, நான் பல பதிவுகள் எடுத்துக் கூறும் ஒரு விஷயத்தை நீங்கள் மிக அழகாக சுருக்கிக் கூறியுள்ளீர்கள்.

ப்ரணாய் ராய் குழுவினர் எலக்ஷன் சம்பந்தமாக நிகழ்ச்சி நடத்தும்போது மூன்று நான்கு பேர் ஆங்கிலத்தில் கருத்துக்கள் கூற, பிரேக் விடும் சமயத்தில் வினோத் துவாவின் மேல் கேமரா விழ அவர் எல்லோரும் அவ்வளவு நேரம் ஆங்கிலத்தில் கூறியதை அழகாக ஹிந்தியில் நான்கு வரிகள் கூறியதும் பிரேக் செயலுக்கு வரும்.

உங்கள் விளக்கம் எனக்கு வினோத் துவாவைத்தான் ஞாபகப் படுத்தியது. அது சரி, நீங்கள் செய்யும் வேலை டெக்னிகல் எடிட்டிங்தானே?

ஆகவே உங்களை தமிழக வினோத் துவா என்று அழைக்க ஆசைப்படுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

மதிப்பிற்குரிய டோண்டு அவர்களே,

உங்களது பாராட்டை நான் ஆஸிர்வாதமாக ஏற்றுக்கொள்கிறேன்.

தொழில்ரீதியாக பலவிஷயங்களில் என்னை நான் மேம்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு உங்களது ஆஸிகள் வழிசெய்யட்டும்.

தங்களது பாராட்டிற்குத் தகுந்தவனாக என்னை மாற்ற நான் முயற்சி செய்கிறேன்.

பி.கு. நான் மேலே சொன்னவை உண்மைகள் என்றாலும், ஸந்தோஷமாகத்தான் இருக்கிறது :-) !!

நன்றிகள்.

dondu(#11168674346665545885) said...

என் ஆசிகள் உங்களுக்கு எப்போதுமே உண்டு ம்யூஸ் அவர்களே. என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் எப்போதும் உங்களுக்கு அருள் புரிவான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

>>>> சரி, நீங்கள் செய்யும் வேலை டெக்னிகல் எடிட்டிங்தானே? <<<

அப்படியும் சொல்லலாம். ஆனால் இங்கு நான் செய்யும் வேலைக்கு "டெக்னிக்கல் ரைட்டிங்க்" என்று பெயர் சொல்லுகிறார்கள். என் போன்றவர்கள் செய்யும் சொதப்பலை சரியாக அடையாளம் கண்டுபிடிக்கும் தொழிலை செய்பவர்களுக்கே "டெக்னிகல் எடிட்டர்" என்பது பொருந்தும். இதுவரை நான் வேலை பார்த்த கம்பெனிகளில் அப்படி ஒருவர் இல்லாததால் எனக்கு நானே "டெக்னிகல் எடிட்டர்". எனக்கு மேலே இருப்பவர்களும் சில சமயங்களில் இதைச் செய்வார்கள். இருந்தாலும் அவர்களுக்கும் "டெக்னிக்கல் ரைட்டர்ஸ்" என்றுதான் நாமகரணம். இப்போது என்னுடைய டெஸிக்னேஷன் "லீட் இன்ஃப்ர்மேஷன் டெவெலப்பர்".

ரைட்டர் என்று சொல்லுவதிலிருக்கும் காம்பீர்யம் இதிலில்லை என்றுதான் தோன்றுகிறது.

dondu(#11168674346665545885) said...

டெக்னிகல் எடிட்டர், ரைட்டர், இன்ஃபர்மேஷன் டெவலப்பர் என்றெல்லாம் டெசிக்னேஷன்கள் இருக்கின்றன. எது எப்படியானால் என்ன, நீங்கள் உங்களிடம் மற்றவர்கள் எதிர்பார்க்கும் வேலையை சரியாகவே செய்கிறீர்கள். அதுதான் முக்கியம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Santhosh said...

டோண்டு சார்,
வழக்கம் போல இந்த பதிலும் பெரியதாப்போச்சி அதனால் அதையும் ஒரு பதிவா போட வேண்டியதாப்போச்சி.. இங்க போயி பாருங்க.

http://santhoshpakkangal.blogspot.com/

ரவி said...

இப்போதுதான் இதனை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது...நன்றி சந்தோஷ் அவர்களே..

என்னோட கருத்து : நான் திங்கள்கிழமை பதினோரு மணியிலிருந்து 12 மணிவரை பின்னூட்டம் எதுவும் போடுவதில்லை அப்படின்னு கொள்கை முடிவு எடுத்திருக்கேன்...

:)

dondu(#11168674346665545885) said...

சந்தோஷ் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://santhoshpakkangal.blogspot.com/2006/06/88.html

அப்பாடா, மாட்டிக் கொண்டீர்களா?
"ஆமா சதயம் யாரு அவர் பதிவுக்கு நான் போன மாதிரி கூட எனக்கு நினைவு இல்லை. யப்பா மக்களே உலகத்துல யார் யாருக்கோ எது எதுக்கோ நோபல் பரிசு குடுக்குறாங்க நம்ம டோண்டுக்கு சாருக்கு ஏன் குடுக்க மாட்டேங்கிறாங்கப்பா? அதும் சம்மந்தமே இல்லாத எனக்கும் சதயத்திற்கும் நாங்க ரெண்டு பேரும் நடுவுல ஒரு நட்பை உருவாக்கி அடுத்த நிமிஷமே துரோகத்துல முடிச்சி கலக்கிடிங்க போங்க குடுங்கப்பா குடுங்கப்பா ஒரு ஆஸ்காராவது இருவருக்கு குடுங்கப்பா, என்னமா திரைக்கதை எழுதுகிறாரு.

ஒரு பெட்(bet) வச்சிகலாமா? நானும் சதயமும் நண்பர்கள் என்பதையும், நான் அவரை கொம்பு சீவி விட்டேன் என்பதையும்(முக்கியமாக நான் சொல்லித்தான் அவர் மட்டுறுத்தலை நடைமுறை படுத்தவில்லை என்பதை நீங்க நிரூபிக்க வேண்டும்,நிரூபிக்கிறீங்க.) நாம ரெண்டு பேரும் ஒத்துக்கொள்ளும் ஒரு கால அளவிற்கும் நீங்க நிரூபித்து விட்டிங்கன்னா நான் பிளாக் எழுதுவதை விட்டு விடுகிறேன் இல்லாட்டி நீங்க விட்டு விடுகிறீர்களா? சும்மா வாய் உதார் விடுவதையும், பிரச்சனையை திசை திருப்புவதையும் விட்டு விட்டு இதுக்கு பதில் சொல்கிற வழியை பாருங்க.. பதில் சொல்றீங்க."

இந்தப் பதிவில் பாருங்கள்:
http://sadhayam.blogspot.com/2006/01/blog-post_26.html
Santhosh said...
இதில் நீங்கள் இட்டப் பின்னூட்டம்:
"நானும் சதயத்தின் கருத்துக்களை அமோதிக்கிறேன். நாம் சும்மா இருந்தா ஏன் சார் மத்தவங்க நம்மை ஏசுவாங்க. சும்ம இருக்காம் ஜாதியை பத்தி பெருமையா எழுதவேண்டியது நான் இந்த ஜாதிக்காரான் அந்த ஜாதிக்காரன்னு செல்லிக்க வேண்டியது. நீ எந்த ஜாதிக்காரன்னு செல்லிட்டு திரியரியே படிச்சி இருக்கியே அறிவு இல்ல.Are you a barbarian? இப்ப தமிழ் மணத்துல எவ்வளவு பதிவு இருக்கு அவ்வளவு பதிவிற்குமா பாதிப்பு இருக்கு. தப்பா எழுதுனா அதை delete பண்ணிட்டு போங்க. அதை விட்டுட்டு தப்பு பண்றவனை ஊக்குவிக்கிற மாதிரி அவனை திட்றது, அதுக்கு தனியா ஒரு பதிவு போடுவது, அவனன எதுக்கு சார் lime lightல கொண்டுவறிங்க அவனன லுஸ்ல விடுங்க, எதுவுமே கண்டுகாம விடுங்க lime light இல்லைன்னு தெரிஞ்ச உடனே அவன் தன்னால போறானா இல்லையான்னு பாருங்க.அப்படி இல்லலயா அவனன track பண்ணுவது ஒண்ணும் பெரிய விஷயமா இருக்காது. ஏற்கனவே இது மாதி trackersகளை பல பேர் உபயோகப்படுத்திட்டு இருக்காங்க. யார் யாருக்கெல்லாம் அதை தடுக்கணும் என்று எண்ணுகிறார்களே அவங்க moderate பண்ணிட்டு போகட்டும் அதைவிட்டுட்டு எல்லோரையும் செல்வது தப்புங்க."

ஆக, சதயம் யார் என்பதே தெரியாது என்றெல்லாம் பில்டப் எதற்கு? அவர் கருத்தை ஆமோதித்திருக்கிறீர்கள். அவ்வாறு ஆமோதித்தது அந்தப் பதிவில் நீங்கள் மட்டும்தான், வாய்ஸ் ஆன் விங்ஸும் தனது பதிவில் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதே போல இன்று வரை அவர் மட்டுறுத்தலை செயல்படுத்தியதாகத் தெரியவில்லை.

ஆக எனக்குத் தெரிந்து இருவர் மட்டுமே (நீங்கள் மற்றும் வாய்ஸ் ஆன் விங்ஸ்) ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அதில் நீங்கள் சத்தமின்றி மட்டுறுத்தலை செயல்படுத்தியிருக்கிறீர்கள்.

சதயம் நான் இங்கு சுட்டிய அவருடைய பதிவில் வாய்ஸ் ஆன் விங்ஸுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். மற்றவர்களும் அதே போல பின்னூட்ட மட்டுறுத்தல் வேண்டாம் எனச் சொல்வார்கள் என்று எதிர்பார்த்திருக்கிறார். கண்டிப்பாக நீங்கள் செய்வீர்கள் என எதிர்ப்பார்த்திருப்பார்.

I rest my case for the moment.

மட்டுறுத்தலால்தான் போலி டோண்டுவை இந்தளவுக்கு இத்தனை மாதங்களுக்கு கட்டி வைக்க முடிந்திருக்கிறது என்பதை நியாய உணர்வு உள்ள எல்லோருமே ஒத்துக் கொள்வார்கள். அந்த மட்டுறுத்தலை அவ்வளவு தீவிரமாக எதிர்த்த நீங்கள் செய்தது போலி டோண்டுவிற்குத்தான் சாதகமாக முடிந்திருக்கும். ஆகவேதான் அவன் உங்களுக்கு நண்பன் என்றேன். அதிலும் உங்களுடைய இந்தப் பதிவில் நான் எவ்வளவு விளக்கிக் கூறியும் நீங்கள் புரிந்து கொள்வதை மறுத்தீர்கள். பார்க்க http://santhoshpakkangal.blogspot.com/2006/01/29.html
ஏனோ உங்களுடைய இந்தப் பதிவு கிடைக்க மாட்டேன் என்கிறது, மூடிவிட்டீர்களா? http://santhoshpakkangal.blogspot.com/2006/01/blog-post_27.html

மற்றப்படி உங்களை வலைப்பூ இடுவதிலிருந்து தடுக்க வேண்டும் என்றெல்லாம் நான் எண்ணவில்லை. வலைப்பூ பதித்து வாருங்கள். எங்களுக்கும் தமாஷாக பொழுது போகும்.

ஆபத்தான அதர் ஆப்ஷனை நீங்கள் வைத்திருப்பதால் இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை என்னுடைய "ஆண் பெண் கற்பு நிலை-2" இலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/2_14.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"என்னோட கருத்து : நான் திங்கள்கிழமை பதினோரு மணியிலிருந்து 12 மணிவரை பின்னூட்டம் எதுவும் போடுவதில்லை அப்படின்னு கொள்கை முடிவு எடுத்திருக்கேன்"

"வைதேகி காத்திருந்தாள்" படம் என்று நினைக்கிறேன். அதில் கவுண்டமணி பெட்ரோமேக்ஸ் விளக்கை வாடகக்கு விட்டு பிழைப்பவர். செந்தில் அவரது அந்த விளக்கை ஆர்வக் கோளாறில் பழுதாக்கிவிட, கவுண்ட மணி வெறுப்புடன் ஒரு கேமரா பார்வையாக நம்மைப் பார்ப்பார். அந்த நேரம் பார்த்து பொரு பெண்மணி வாடகைக்கு விளக்கு வேண்டுமெனக் கேட்டுவர, அவர் அப்பெண்மணியின் பெயரைக் கேட்பார். அப்பெண் "லதா" என்று கூற, "லதாவுக்கெல்லாம் விளக்கு வாடகைக்கு விடுவதில்லை" என்று வெறுப்பு (இது நிச்சயம் லதா மேல் அல்ல) மறையாமல் கூறுவார்.

ஆமாம், திடீரென இந்த சீன் நினைவூக்கு வரணும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

கவிதா | Kavitha said...

//ஆக, சதயம் யார் என்பதே தெரியாது என்றெல்லாம் பில்டப் எதற்கு?//

ஒருவர் நமக்கு கருத்து சொல்கிறார் என்பதால் மட்டுமே அவர் நமக்கு நண்பர் ஆகிவிடமாட்டார்..

நீங்கள் கூட என் ஒரு பதிவிற்கு வந்து கருத்து சொல்லி இருக்கிறீர்கள். நான் என்ன உங்களுக்கு முன்பே தெரிந்தவளா?.. இல்லை கருத்து இட்ட பிறகு உங்களின் உற்ற தோழியாகிவிட்டேனா.. என்ன பேத்தலான கணிப்பு ஐயா உங்களுடையது..

உங்களுக்கு எதிராக சந்தோஷ் கருத்து சொன்னார் என்பதற்காகவே இப்படி எல்லாம் பேசுவது சரியில்லை.

//அவர் கருத்தை ஆமோதித்திருக்கிறீர்கள். அவ்வாறு ஆமோதித்தது அந்தப் பதிவில் நீங்கள் மட்டும்தான், வாய்ஸ் ஆன் விங்ஸும் தனது பதிவில் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதே போல இன்று வரை அவர் மட்டுறுத்தலை செயல்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆக எனக்குத் தெரிந்து இருவர் மட்டுமே (நீங்கள் மற்றும் வாய்ஸ் ஆன் விங்ஸ்) ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அதில் நீங்கள் சத்தமின்றி மட்டுறுத்தலை செயல்படுத்தியிருக்கிறீர்கள். //

கருத்தை ஆமோதிப்பதும், ஆமோதிக்காததும் அவரவர் இஷ்டம். ஆமோதிக்கிறார் என்பதற்காக சந்தோஷ் தான் காரணம் என்று சொல்வது சிறுபிள்ளை தனமாக உள்ளது.

//மட்டுறுத்தலால்தான் போலி டோண்டுவை இந்தளவுக்கு இத்தனை மாதங்களுக்கு கட்டி வைக்க முடிந்திருக்கிறது என்பதை நியாய உணர்வு உள்ள எல்லோருமே ஒத்துக் கொள்வார்கள். அந்த மட்டுறுத்தலை அவ்வளவு தீவிரமாக எதிர்த்த நீங்கள் செய்தது போலி டோண்டுவிற்குத்தான் சாதகமாக முடிந்திருக்கும்.
//ஆகவேதான் அவன் உங்களுக்கு நண்பன் என்றேன். //

சந்தோஷ் சொல்லவந்தது போலி டோண்டு போன்றவர்கள் திட்டும் அளவுக்கு எழுதாதீர்கள் என்ற கருத்தை தானே அன்றி போலி டோண்டுவுக்கு ஆதரவு அளித்து அல்ல.. போலி டோண்டு எப்படி உங்களுக்கு பின்னூட்டம் இடுபவர்களை திட்டி எழுதுகிறாரோ, அதே பாணியில் நீங்கள் இப்போது சந்தோஷ் உங்களுக்கு எதிராக எழுதினார் என்பதற்காக துரத்துகிறீர்கள்..... உங்கள் வயதுக்கும் முதிற்ச்சிக்கும் ஏற்ற செயல்களை மட்டும் செய்யுங்கள்.

நான் போலு டோண்டுவை பற்றி சொன்னதால் உடனே அவருக்கும் எனக்கும் நட்பு என்று சொல்லிவிடாதீர்கள்.. சொன்னாலும் I least bother about comments. Because you both(you and poli) are sailing in the same side in different boats that’s all.

//அதிலும் உங்களுடைய இந்தப் பதிவில் நான் எவ்வளவு விளக்கிக் கூறியும் நீங்கள் புரிந்து கொள்வதை மறுத்தீர்கள். பார்க்க http://santhoshpakkangal.blogspot.com/2006/01/29.html //

உங்களின் கருத்தை ஒருவர் மறுத்தார் என்பதற்காக, அவர் இப்படி பட்டவர் தான் அவருக்கு இப்படிப்பட்டவர்களுடன் நட்பு இருக்கும் என்று எப்படி ஐயா சொல்கிறீர்கள்.. என் தாத்தா வயது இருக்கும் உங்களுக்கு..நீங்கள் இப்படி சிறு பிள்ளைகளிடம் மல்லுக்கு நிற்பது வேடிக்கையாக இருக்கிறது.

அடுத்தது உங்களின் இலக்காக நானாக தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.. பார்க்கலாம் ..எனக்கு என்ன என்ன கதைகள் ரெடியாக வைத்திருக்கிறீர்கள் என்று...

உங்களுக்கு சபாஷ் போடவில்லை என்பதால் மட்டுமே ஒருவர் கெட்டவராகவோ..இல்லை கெட்டவைகளுக்கு துணை போகிறார் என்ற நினைப்பை முதலில் தூக்கி குப்பையில் போடுங்கள்.

நான் புதிதாக blog க்கு வந்தபோது,..உங்களை குறிப்பிட்டு உங்களின் சில பதிவுகளை நன்றாக இருக்கும் என குறிப்பிட்டு படிக்க சொன்னது சந்தோஷ் என்ற இந்த நபர் தான் ஐயா... மனிதர்களை இத்தனை வயதிற்கு மேலாவது புரிந்து கொள்ள பழகுங்கள்...

dondu(#11168674346665545885) said...

கவிதா அவர்களே,

சந்தோஷ் அவர்கள் எனக்கு எதிராக எழுதியதால்தான் நான் அவரை இவ்வாறு தாக்கினேன் என்றால் அது உங்கள் புரிதலில் தவறு.

சதயம் அவர்கள் பதிவுக்கு தான் சென்றதே இல்லை என்று எழுதி அதை நிரூபிக்குமாறு என்னைச் சவாலுக்கு அழைத்தார். மேலும் பல இடங்களில் நான்தான் போலி டோண்டு என்ற பொருள் வரவும் அவர் எழுதினார்.

சவாலில் இருந்து எப்போதும் பின் வாங்க மாட்டான் டோண்டு ராகவன் என்ற அறுபது வயது இளைஞன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

மற்றப்படி யாரையும் நான் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை.

"சந்தோஷ் சொல்லவந்தது போலி டோண்டு போன்றவர்கள் திட்டும் அளவுக்கு எழுதாதீர்கள் என்ற கருத்தை தானே அன்றி போலி டோண்டுவுக்கு ஆதரவு அளித்து அல்ல.."
இன்னும் போலி டோண்டுவை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது. அந்த இழிபிறவிக்கு மற்றவரைத் திட்டாவிட்டால் அன்றைய சோறு இறங்காது. அவ்வளவுதான் விஷயம். அவனுடைய பதிவைப் போய் பாருங்கள். உதாரணத்துக்கு நீங்கள் இங்கு எனக்கு ஆதரவாகப் பின்னூட்டமிட்டிருந்தீர்கள் என்றால் அடுத்த ஐந்து நிமிடங்களில் அவனிடமிருந்து வசவுக் கணை உங்களை நாடி வந்திருக்கும். துளசி, உஷா ஆகியோரைக் கேட்கவும்.

அவனிடமிருந்து காத்துக் கொள்வதே இந்த மட்டுறுத்தல். அந்த மட்டுறுத்தலை எதிர்த்து கருத்து தெரிவிப்பவர்கள் அவனுக்கு சாதகமாக நடப்பவர்களே. இதை நான் எங்கு வேண்டுமானாலும் கூறுவேன்.

"அடுத்தது உங்களின் இலக்காக நானாக தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.. பார்க்கலாம் ..எனக்கு என்ன என்ன கதைகள் ரெடியாக வைத்திருக்கிறீர்கள் என்று..."
இதில் இலக்கு என்பதெல்லாம் ஓவர். எனக்கு வேறு வேலைகள் உண்டு. உங்களுடைய இந்தப் பின்னூட்டத்துக்கு பதிலளித்தால் அப்போதைக்கு தீர்ந்தது விஷயம். மேலும் தாக்குதல் வந்தால் அப்போதும் தேவையான அளவுக்கே எதிர்த் தாக்குதல் வரும்.

என்னுடைய இந்தப் பழைய பதிவை தோண்டியெடுத்து தாக்கியது சந்தோஷ். அதற்கு நான் அளித்த பதிலுக்கு எதிர்வினையாக சவால் விட்டதும் சந்தோஷே. என் மேல் தொடுக்கும் தாக்குதல்களை தடுப்பது எப்படி ஆட்சேபத்துக்குரியதாகும் என்று விளங்கவில்லை.

"போலி டோண்டு எப்படி உங்களுக்கு பின்னூட்டம் இடுபவர்களை திட்டி எழுதுகிறாரோ, அதே பாணியில் நீங்கள் இப்போது சந்தோஷ் உங்களுக்கு எதிராக எழுதினார் என்பதற்காக துரத்துகிறீர்கள்....."
போலி டோண்டுவின் திட்டுகளைப் பார்த்திருக்கிறீர்களா? நானும் அப்படித்தான் திட்டுகிறேன் என்று நீங்கள் நினைத்தால் அதற்காக உங்கள் மேல் பரிதாபம்தான் பட முடியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சந்தோஷ் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://santhoshpakkangal.blogspot.com/2006/06/88.html

"இதுவரை எத்தனை ஆபத்தான ஆப்ஷன்களால் நீங்கள் இவரால் பாதிக்க பட்டீர்கள் ஐயா?!! நடக்காததை நடந்தது போல் சொல்லவதற்கு முன் அப்படி எதுவும் நடந்ததா என சொல்லுங்கள்.."

You are again showing your ignorance. I never suggested that the danger from other option in this blogpost will come from Santhosh. How obtuse can you get?

Poli Dondu can very well use the other option and comment in this blog making it appear that the comment is from me even with mouseover test. Fortunately this blog has enabled photos, otherwise it would have been worse.

Even then many a time, many people have been fooled by this other option and mistakenly thought that the bogus comments in my name were actually mine. So I am not talkin idly.

That is why I devised this set of three rules of 1. Correct blogger number on mouseover 2. Photo being shown, both the tests have to be positive together and then to be more careful 3. copy of my comments in one of my specified blogs.

These three rules are working nicely for me. A corrolary will be, even if a blogger chooses to pretend that my comments have not come, he will think twice before doing so in view of my 3rd rule as above.

I think you have started harping out of sheer habit. Wake up, child. (as you have told that I am old enough to be your grandpa, I take the privilege of calling you child.)

Needless to say, these comments too go to my abovecited blog.

See: http://dondu.blogspot.com/2005/10/2_14.html

Regards,
Dondu N.Raghavan

மா சிவகுமார் said...

டோண்டு சார்,

நீங்கள் பல ஆண்டுகளாக கவனித்து வரும் இரட்டை நிலை மாற வேண்டுமானால், ஆண்கள் அடங்க வேண்டும் என்று எழுதியிருக்கலாமே? ஏன் மறுபாலரையும் சீரழியச் சொல்கிறீர்கள்?

மாட்டிக் கொள்ளாமல் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமா? புரியவில்லை எனக்கு.

இவ்வளவு நாட்களுக்கு இந்த விவகாரத்தை மீண்டும் கிளற வேண்டாம் என்று நினைத்தால் என் பின்னூட்டத்தை வெளியிடாமல் தவிர்த்து விடுங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

dondu(#11168674346665545885) said...

"நீங்கள் பல ஆண்டுகளாக கவனித்து வரும் இரட்டை நிலை மாற வேண்டுமானால், ஆண்கள் அடங்க வேண்டும் என்று எழுதியிருக்கலாமே? ஏன் மறுபாலரையும் சீரழியச் சொல்கிறீர்கள்?"
யார் சீரழியச் சொன்னது. நான் கூறியது அப்ஸர்வேஷன் பேரில். ஆண் எவ்வாறு தப்பிக்கிறான்? கர்ப்பமடையாததால்தான். அதனால்தான் கருத்தடை மாத்திரை வந்த போது அமெரிக்க ஆண்களே அதிர்வடையும் அளவுக்கு அங்கு காரியங்கள் நடந்தேறின.

உங்களை மாதிரி வெட்டி உடோப்பியா பேச்செல்லாம் நான் பேசுபவன் அல்ல. இந்தியா அயல் நாட்டுக் கொள்கையில் நீங்கள் சொல்வதுபோல நடந்து கொண்டிருந்தால் (தன்னலம் பார்க்காது, பிற நாடுகளுக்கு முன்னோடியாக- முன்னோடி, ஹா) நாடே குட்டிச் சுவராக வேண்டியதுதான். நீங்கள் பேசும் உடோப்பிய பேச்சுக்கு ஒரு உதாரணம்தான் நான் இங்கு கொடுத்தேன், அது இப்பதிவுடன் உடனுக்குடன் சம்பந்தமில்லையென்றாலும், மன்னிக்கவும்).

சரி இப்பதிவுக்கு வருவோம். இயற்கைத் தேவைகள் என்பது சக்தி வாய்ந்தது. பல காரணங்களால் அது நிறைவேறாமல் போகும்போது அனர்த்தமே விளைகிறது. அப்படித்தான் செக்ஸ் தேவையும்.

ஆண்கள் ஒழுங்காக இருங்கள் என்று கூறினால் என்ன பலன்? அவனுக்கு என்ன ஆபத்து எய்ட்ஸைத் தவிர?

என்னுடைய இது சம்பந்தமான எல்லா பதிவுகளையும் படித்து விட்டு வரவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மா சிவகுமார் said...

மன்னிக்கவும்.

உங்கள் முதல் பதிவையும் படித்துப் பார்த்தேன்.

நீங்கள் சொன்ன உண்மையை பார்ப்போம். குழந்தையைப் பெற்று வளர்க்கும் பொறுப்பு பெண்ணிடம் மட்டுமே உடல் அடிப்படையிலும் உணர்வு அடிப்படையிலும் உள்ளது. அதற்கு ஆணுக்கும் பொறுப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சமூகக் கட்டுப்பாடுகள், ஒருவனுக்கு ஒருத்தி என்ற நடைமுறைகள் வந்தன. பெண்ணை அடக்கி ஆள ஆணும், ஆணை இழுத்துப் பிடிக்க பெண்ணும் முயல்கிறார்கள் என்று ஏன் நினைக்க வேண்டும்?

மற்றபடி, என்னுடைய உடோபியா வரும்போது உங்களுக்கும் அதில் இடம் இருக்கும் :-). இன்னும் என்ன ஒரு பத்திருபது ஆண்டுகள்தானே காத்திருக்க வேண்டும். காத்திருப்பைக் குறைக்க வேண்டுமானால், நமது நேரத்தையும், ஆற்றலையும் அந்தத் திசையில் செலவிட்டால் போதும்.

குழந்தையாக இருக்கும் போது தாயிடம் பால் குடிக்கும் இயற்கைத் தேவை பின்னர் திட உணவுகளுக்குத் திரும்புவது போல, தவழ்ந்து செல்லும் இயற்கைத்தேவை எழுந்து நிற்க முடிந்தவுடன் மாறி விடுவது போல இனப் பெருக்கம் செய்ய எழும் உணர்வுகளையும் மடைப்படுத்திப் பயன்படுத்த முடியாதா சார்?

மனித இனத்தின் அல்லது எந்த உயிரினத்தின் ஒரு அடிப்படை உந்துதல், தன் இனத்தைப் பெருக்குதல், அப்படிப் பெருக்கிக் கொண்டே போக வழி வகைகள் செய்தல். பெற்றுப் போட்டுக் கொண்டே போனால் வலிமையான சந்ததியனரை வளர்த்து ஆளாக்க முடியாது என்று குழந்தைகளின் அளவைக் குறைத்து நேரத்தையும் சக்தியையும் பிறந்த குழந்தைகளை முன்னேற்ற பயன்படுத்துகிறோமே. அதே போல, வெளியே தெரியாதது வரை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்றில்லாமல் நமது நேரத்தையும் சக்தியையும் வழிப்படுத்திக் கொள்ளலாம் அல்லவா?

அன்புடன்,

மா சிவகுமார்

dondu(#11168674346665545885) said...

சிவகுமார் அவர்களே,

நீங்கள் கூறிய கருத்துக்களுக்கு விடை விலாவாரியாக இருக்க வேண்டும். நாளை அளிக்கிறேன். காலை 4.30லிருந்து கணினியில் வேலை செய்கிறேன். இரவு 12 மணி வரை இருக்கும் எண்ணம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பதிவுலக பெரியார் டோண்டு நற்பணி மன்றம் said...

டோண்டு

மட்டையடி மன்னர்களுக்கு பதில் இங்கே

http://chofan.blogspot.com/2006/06/blog-post_26.html

dondu(#11168674346665545885) said...

நன்றி ராஜரிஷி சோ ரசிகன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பதிவுலக பெரியார் டோண்டு நற்பணி மன்றம் said...

டோண்டு அவர்களே,

இன்றைய கற்பு பதிவையும் பார்க்கவும்.வாய்சிலம்பம் ஆடுபவர்களுக்கு பதில் போட்டிருக்கிறேன்.

http://chofan.blogspot.com/2006/06/blog-post_27.html

Darren said...

///உடல் இச்சை இருபாலருக்கும் பொதுவானது அது தவறு என்று கூறுபவர்கள் முட்டாள்கள். திருமணத்தை துறந்து சன்னியாசிகளாக போகிறவர்களில் பலர் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபடுவது இதனால்தான். இது எல்லா மதத்தினாருக்கும் பொருந்தும்.///


உண்மை.


//நான் செக்ஸுக்காக கல்யாணம் செய்து கொள்ளவில்லை." இதில் என்ன பெருமையோ. செக்ஸையே தப்பு என்றெல்லாம் எழுதுவார்கள். அதெல்லாம் பெண்களுக்குத்தான் ஆண் கதாபாத்திரங்களுக்கு ஒன்றுக்கு மேல் துணை வைப்பார்கள்.///

செக்ஸ் என்கிற விஷயம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளப்படாமல் இருப்பதே இதற்கு காரணம்.

புதிர் என்கிறார்கள் புனிதம் என்கிறார்கள்..சரி அப்படி பேசினால்தானே வருமானம் வரும்.

செக்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்லை ஆனால் அதை ஏன் ஒரு பெரிய விஷயமாக திரைப்படங்கள் எடுத்துக்கொள்கின்றன என்பது இன்று வரை எனக்குப் புரியவில்லை.

//ஒருவன் தன்னை கெடுத்துவிட்டால் அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபடவேண்டும்///

கண்டிப்பாக விடுபடவேண்டும்.

Dondu அவர்களின் பதிவுகளில் எனக்கு நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு ...எனக்கு சரி என்று பட்டதை ஆதரித்திருக்கிறேன்

http://manamay.blogspot.com/2006/04/blog-post_114590688834090905.html

dondu(#11168674346665545885) said...

நன்றி தரன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

விஜயன் அவர்களது பதிவு ஒன்றில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://manasukul.blogspot.com/2007/08/blog-post_234.html

நான் ஆண் பெண் கற்பு நிலை - 2 பதிவில் போட்டதை காண்டக்ஸ்டிலிருந்து பிரித்தெடுத்து போட்டுள்ளீர்கள். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/2_14.html
அதில் நான் எழுதியது காண்டக்சுடன் இதோ:
"ஒரு ஆண் ஏன் உடலுறவின் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கிறான்? அவன் கருவுருவதில்லை அதனால்தானே? பெண் என்ன செய்வாள்? அறுபதுகளில் கருத்தடை மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கருவுராமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலை வந்ததும் பெண்கள் பொங்கி எழுந்தனர். அமெரிக்க ஆண்களே அஞ்சும் அளவில் உடல் உறவில் ஈடுபட்டனர். செயல்பட இயலாத ஆண்துணையை விடுத்து வேறு துணை தேடினர். இது நல்லதுக்கா கெட்டதுக்கா என்று இன்றும் விவாதங்கள் தொடர்கின்றன. அதில் நான் போக விரும்பவில்லை. கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்று மட்டும் கூறுவேன்.

குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.

ஒருவன் தன்னை கெடுத்துவிட்டால் அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபடவேண்டும். அதெல்லாம் சினிமாவுக்குத்தான் ஒத்து வரும். ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.
ஆனால் ஒன்று. எந்த செயலுக்கும் எதிர்வினை வரும். ஆகவே அதற்கெல்லாம் துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fire-தான்".

நான் கூறியதில் மருத்துவ ரீதியாக ஒரு தவறும் இல்லை என்பதை திருமதி டெல்ஃபின் அவர்களே ஒத்துக் கொள்வார்.

இன்னொரு விஷயம்: ஞாநி விஷயத்தில் வந்த ஆட்சேபணையில் அவர் பார்ப்பனர் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்கள். அதை பற்றி ஏன் கருத்து கூற விரும்பவில்லை?

இப்பின்னூட்டத்தின் நகலை நான் மேலே சுட்டியுள்ள எனது பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தமிழச்சி said...

டோண்டு அவர்களுக்கு வணக்கம், இப்போது தான் இந்த பதிவை படித்தேன். நன்றாக இருக்கிறது. ஆனால் இவ்வளவு பின்னூட்டங்கள் வந்திருக்கிறது. பெண் பதிவர்களை காணவில்லை.

dondu(#11168674346665545885) said...

நன்றி தமிழச்சி அவர்களே,

//ஒருவன் தன்னை கெடுத்துவிட்டால் அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபடவேண்டும். அதெல்லாம் சினிமாவுக்குத்தான் ஒத்து வரும். ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.//
இதில் என்ன தவறு காண முடியும்? இந்திய சினிமாக்களில் காட்டப்படும் இந்த அசிங்கத்தை எதிர்த்து எழுதியதை சௌகரியமாக வெட்டி பிரித்து "ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது" என்பதை மட்டும் வைத்து கும்மி அடித்த இறைநேசன் என்னும் போலி டோண்டு, மற்றும் அவனது அள்ளக்கைகள் என்ன ஆட்டம் போட்டனர்? அப்படியிருக்க பெண் பதிவர்கள் எப்படி தைரியமாக வருவார்கள்? அவ்வாறு அவர்கள் வராததையும் புரிந்து கொள்கிறேன்.

"வந்ததுதான் வந்தீர்கள் எனது ஆண் பெண் கற்புநிலைகள்" என்ற லேபலில் கீழ் உள்ள மற்ற பதிவுகளையும் பார்க்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கயல்விழி said...

இதை முழுதாக படிக்காமல் கருத்து எழுத விரும்பவில்லை, ரொம்ப ஆழமான சப்ஜெக்ட் இது, ஆனால் கவனமாக அணுக வேண்டியது.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது