நிரந்தர பக்கங்கள்

1/24/2006

11 கேள்விகள்

நம்பவே முடியவில்லை. இம்மாதிரி நான் கேள்விகள் கேட்டப்போதெல்லாம் விடைகள் சீறிக்கொண்டு வரும். ஒரே நாளில் கிட்டத்தட்ட அத்தனையும் விடையளிக்கப்பட்டு விடும். ஒன்று அல்லது இரண்டு விடைகள் மட்டும் கேரி ஓவர் ஆகும். ஆனால் இம்முறை நான் கேட்ட 10 கேள்விகளில் ஒன்றுக்கு மட்டும் இலவசக் கொத்தனார் அவர்கள் பதிலளித்தார். ஆகவே 9 கேள்விகள் கேரி ஓவர் செய்யப்படுகின்றன. மேலே இரண்டு கேள்விகளை சேர்க்கிறேன். ஆக 11 கேள்விகள்.

1. சிறையிலிருது தப்பித்த ஒரு கைதி ஒரு நேர்ப்பாதையில் ஓடிக் கொண்டிருக்கிறான். அப்போது தூரத்தில் அவன் ஓடும் திசைக்கு எதிரிலிருந்து ஒரு போலீஸ் கார் அவனை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் அவன் போலீஸ் காரை நோக்கியே ஓடி, நூறு அடி தூரத்தில் வண்டி இருக்கும்போது பாதைக்கு வலப்புறம் காட்டில் நுழைந்து தப்பிக்கிறான். ஏன்?

2. கோடைகால நடுவில் ஒரு பூங்காவின் நடுவில் ஒரு பிணம். உடல் எலும்பெல்லாம் முறிந்துள்ளது. இருப்பினும் பிரேதப் பரிசோதனையில் மரணம் கடும் குளிரால் ஏற்பட்டது எனத் தெரிய வருகிறது. விளக்கவும் (இது உண்மையாக நடந்த நிகழ்ச்சி).

3. கண்ணிழந்த ஒருவன் தன் பணம் எல்லாம் செலவு செய்து அறுவை சிகிச்சை முடிந்து பார்வை பெற்று வீடு திரும்ப ரயிலில் பயணம் செய்கிறான். அவன் பயணம் செல்லும் கம்பார்ட்மெண்டில் அன்றி வேறு எங்கு பயணம் செய்திருப்பினும் அவன் தற்கொலை செய்து கொண்டிருப்பான்.

4. அழகிய பெண் நடக்கிறாள். பின்னணியில் ஒரு இசை. இசை நின்றது அவள் இறந்தாள். ஏன்?

5. அவனுக்கு ஒரு நாற்காலி கிடைக்காததால் இறந்தான். ஏன் இந்தக் கொடுமை?

6. வேலு நாயக்கர் ஒரு கடையில் 100 ரூபாய் கொடுத்து பொருள் வாங்குகிறார். கடைக்கு வந்த அழகான ஃபிகரிடம் பேசிக்கொண்டே கடைக்காரன் அவருக்கு மீதி சில்லறையாக நூறு ரூபாய் கொடுக்கிறான். வேலு நாயக்கர் கூலாக அதை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு நடையை கட்டுகிறார். வேலு நாயக்கர் நல்லவரா கெட்டவரா?

7. பாலிண்ட்ரோம் பற்றிய என் பதிவைப் பார்த்திருப்பீர்கள்தானே. ஆகவே நேரடியாகக் கேள்வி. பாலிண்ட்ரோமை மொழிபெயர்க்க முடியாது என்று நான் சொன்னால் ஒத்துக் கொள்வீர்கள்தானே. ஆனால் ஒரு குறிப்பிட்ட மொழி சார் பாலிண்ட்ரோம் இன்னொரு மொழியில்தான் வரும். அது என்ன?

8. மீன் தின்னும் சீல்கள் மிக புத்திசாலிகள். அவற்றை வைத்து விளையாட்டெல்லாம் காட்டுவார்கள். அம்மாதிரி ஒரு கேம் ஷோவில் சீல்கள் விளையாட வந்தன. பார்வையாளர்களை பார்த்ததும் எல்லாம் நீரில் மறுபடி குதித்து ஓடி விட்டன. ஏன்?

9. கமலஹாசன் ஒரு புது நண்பருடன் ஓர் அறையில் சீட்டாடிக் கொண்டிருக்கிறார். சுற்றுமுற்றும் பார்த்த அவர் திடீரென ஆபத்தை உணருகிறார்? ஏன்?

10. தன் வீட்டிலேயே ஒரு பெண் ஆபத்தில் இருப்பதைப் பார்த்தும் டோண்டு ராகவன் ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டான். ஏன் அவனுக்கு பயமா?

11. லண்டனில் உள்ள அந்த ரகசிய க்ளப்பிற்குள் போக நம்ம வடிவேலு ஆசைப்படுகிறார். ஆனால் உள்ளே செல்ல அவருக்குக் கடவுச்சொல் வேண்டும். அது கிடைக்கவில்லை. அதனாலெல்லாம் அவர் விட்டு விடுவாரா? வாயிற்காப்போன் பார்த்திபன் நிற்கும் இடத்தருகே உள்ள தூண் ஒன்றின் பின்னே அவர் ஒளிந்து கொள்கிறார், மற்ற உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம் என்று. முதலில் வருபவரிடம் பார்த்திபன் 12 என்று கூற அவர் 6 என்று கூறுகிறார். அவரை உள்ளே விடுகிறார் பார்த்திபன். அடுத்த வருபவரிடம் பார்த்திபன் 6 என்று கூற அவர் 3 என்று கூறுகிறார். அவரும் உள்ளே சொல்கிறார். வடிவேலுவுக்கு ஒரே குஷி. தன் டையை சரி செய்து கொண்டு, மீசையை ஒதுக்கி விட்டுக் கொண்டு பெரிய மனிதத் தோரணையோடு பார்த்திபனிடம் வருகிறார். பார்த்திபன் 20 என்று கூற வடிவேலு ஸ்டைலாக 10 என்று கூறி விட்டு நன்றாக உதை வாங்குகிறார். என்ன ஆயிற்று?

இக்கேள்வியை எனக்கு அனுப்பியது என் நண்பர் ரவி பாலசுப்பிரமணியன் அவர்கள். அவருக்கு என் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

30 comments:

  1. இரு விடைகளும் தவறானவை சதீஷ் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. அடுத்த இரு விடைகளும் தவறானவை சதீஷ் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. 4)The Girl was a circus girl who walks on rope. To avoid mental destructions the music was played. But when the music was stopped suddenly, her concentration was collapsed and so she fell down and dead. Poor Girl.
    7) Malayalam. Its an English Palindrome.
    8) After the game was over ie. After seeing Visitors, all the seals return back to water to take Rest.(I had doubt in this answer!?!)
    10) The Girl who was in trouble in your house is in a Photograph or an NewsPaper. For that You cant do nothing.

    ReplyDelete
  4. "Escape route is only at one place(the one he escaped) and that is why."
    I will grant it to you. You are nearing the answer. Kindly think along those lines and try to guess. Afterall the forest is along the road. Why should he run towards the car before swerving away? I admire your tenacity. Please keep it up.

    Regards,
    N.Raghavan

    ReplyDelete
  5. Except for the seal question, Yoosippavar is right. Actually it was a TV serial where the girl was in danger.

    Regards,
    Dondu N.Raghavan

    ReplyDelete
  6. சதீஷ் அவர்களே நீங்கள் சற்று தாமதித்து விட்டீர்கள். இருப்பினும் உங்கள் விடை முழுவதும் சரி.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. "5. The chair is a wooden one?. If yes, then he died due to electric shock. (I would be surprised if this answer is correct :-))"

    Me too. :-))

    Regards,
    Dondu Raghavan

    ReplyDelete
  8. 11)
    12: twelve : மொத்தம் ஆறு எழுத்து
    6 : six : மொத்தம் மூன்று எழுத்து, - இத சொல்லித்தான் மத்தவங்க உள்ளார போனாங்க, ஆனா நம்மாளு அவர் சொல்றதுல பாதி'ன்னு நினைச்சு 20க்கு 10துன்னு சொல்லிட்டாரு 20க்கு ட்நென்ட்ய் 6தான் சரியான பதில்.

    ReplyDelete
  9. ராசா அவர்களே, சரியான விடை. கங்ராட்ஸ்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. வடிவேலு சொல்லியிருக்க வேண்டிய விடையே வேறு. கடவுச் சொல் என்பது இங்கே எத்தனை எழுத்து என்பதுதான். எண்ணில் பாதி என்பதல்ல.

    இது யோசித்துச் சொன்ன விடையல்ல. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் ஒரு நண்பன் சொன்னது.

    ReplyDelete
  11. பெனத்தல் சுரேஷ் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய பதிகள் பின்வருமாறு:

    Dear Dondu,
    Can you post these answers in your blog and validate?

    Q2 - the skeleton was of a dynosaur - died long ago still exhibited in the park. தவறான விடை.

    Q6 - velu nayakkar nallavarthan - he asked for the change தவறான விடை

    Q7 - MALAYALAM - is not a palindrome in malayalam but in English.
    சரியான விடை. ஆனால் ஏற்கனவே அளிக்கப்பட்டுவிட்டது.
    Q10 - Dondu or Penathal Suresh could not much about the persons endangered in Serials on TV.
    சரியான விடை. ஆனால் ஏற்கனவே அளிக்கப்பட்டுவிட்டது.

    With Best Regards,
    Penathal Suresh
    அது சரி உங்கள் ப்ளாக்கர் அக்கௌண்ட் என்ன ஆயிற்று?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. ராகவன் அவர்களே, சரியான விடைதான் ஆனால் ராசா உங்களை 6 நிமிட வித்தியாசத்தில் முந்தி விட்டார்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. 2. அந்த பெண்ணின் உடல் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப் பட்டிருந்ததால் விரைத்து இறந்து இருக்கலாம்....

    6. கடைக்காரன் பிகரை கவனித்துக் கொண்டிருந்ததால் பொருள் கொடுக்கமலேயே 100 ரூபாய்க்கு சில்லறை கொடுத்தான்.. ஆகவே வேலு நாயக்கர் நல்லவரே...

    ReplyDelete
  14. "2. அந்த பெண்ணின் உடல் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப் பட்டிருந்ததால் விரைத்து இறந்து இருக்கலாம்....

    6. கடைக்காரன் பிகரை கவனித்துக் கொண்டிருந்ததால் பொருள் கொடுக்கமலேயே 100 ரூபாய்க்கு சில்லறை கொடுத்தான்.. ஆகவே வேலு நாயக்கர் நல்லவரே..."

    இரண்டுமே தவறான விடைகள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  15. 6. வேலு நாயக்கர் ஒரு கடையில் 100 ரூபாய் கொடுத்து பொருள் வாங்குகிறார். கடைக்கு வந்த அழகான ஃபிகரிடம் பேசிக்கொண்டே கடைக்காரன் அவருக்கு மீதி சில்லறையாக நூறு ரூபாய் கொடுக்கிறான். வேலு நாயக்கர் கூலாக அதை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு நடையை கட்டுகிறார். வேலு நாயக்கர் நல்லவரா கெட்டவரா?

    இலங்கை சென்ற வேலு நாயக்கர் இந்திய ரூபாயை கொடுத்து பொருள் வாங்கியிருப்பார், கடைக்காரர் மீதியாக இலங்கை ரூபாயை கொடுத்திருப்பார். ஆக வேலு நாயக்கர் நல்லவர் தான்.

    (கும்சா பதில் தான்)

    ReplyDelete
  16. "இலங்கை சென்ற வேலு நாயக்கர் இந்திய ரூபாயை கொடுத்து பொருள் வாங்கியிருப்பார், கடைக்காரர் மீதியாக இலங்கை ரூபாயை கொடுத்திருப்பார். ஆக வேலு நாயக்கர் நல்லவர் தான்."

    மிகச் சரியான விடை. என்ன நான் நேபாள ரூபாயை மனதில் வைத்துக் கூறினேன். பரவாயில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  17. மீன் தின்னும் சீல்கள் மிக புத்திசாலிகள். அவற்றை வைத்து விளையாட்டெல்லாம் காட்டுவார்கள். அம்மாதிரி ஒரு கேம் ஷோவில் சீல்கள் விளையாட வந்தன. பார்வையாளர்களை பார்த்ததும் எல்லாம் நீரில் மறுபடி குதித்து ஓடி விட்டன. ஏன்?

    பார்வையாளர்கள் யாருமே அங்கே வந்திருக்கமாட்டாங்க, எனவே இன்று விளையாட்டு இல்லை என்று நீரில் ஓடி போயிருக்கும்.

    ReplyDelete
  18. சீல்கள் பற்றிய விடை தவறானது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  19. 9. கமலஹாசன் ஒரு புது நண்பருடன் ஓர் அறையில் சீட்டாடிக் கொண்டிருக்கிறார். சுற்றுமுற்றும் பார்த்த அவர் திடீரென ஆபத்தை உணருகிறார்? ஏன்?

    சீட்டு ஆடுவதால் நேரம் போனதே தெரியாமல் இருந்திருப்பார். சுற்றுமுற்றும் பார்க்கும் போது கடிகார நேரத்தை பார்த்து, வீட்டுக்கு போவது நேரமாகி விட்டது, மனைவி கோபப்படுவார் என்று பயந்து, அந்த ஆபத்தை உணர்ந்திருப்பார்.

    ReplyDelete
  20. கமலஹாசன் பற்றிய கேள்விக்கு பரஞ்சோதி அவர்கள் அளித்த விடை தவறே.

    கேள்வியும் கடினமானதே. ஆகவே ஒரு க்ளூ தருவேன். கமலஹாசன் தன் உயிருக்கு ஆபத்து வந்ததை உணர்ந்த போது அவர் மனதில் எழுந்த எண்ணாம் "ஆ நீயா?"

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  21. அவனுக்கு ஒரு நாற்காலி கிடைக்காததால் இறந்தான். ஏன் இந்தக் கொடுமை?

    இவர் ஒரு வேளை போர்களத்திலோ அல்லது ஆபத்தான நிலையில் காப்பாற்றப்பட வேண்டியவராக இருந்திருக்கலாம். இவரை காப்பாற்ற வந்த ஹெலிகாப்டரில் அமர மேலும் இடம் இல்லை, ஆகையில் விட்டு விட்டு போனதால் மரணம் அடைகிறார்.

    ReplyDelete
  22. கமலஹாசன் பற்றிய கேள்விக்கு பரஞ்சோதி அவர்கள் அளித்த விடை தவறே.

    கேள்வியும் கடினமானதே. ஆகவே ஒரு க்ளூ தருவேன். கமலஹாசன் தன் உயிருக்கு ஆபத்து வந்ததை உணர்ந்த போது அவர் மனதில் எழுந்த எண்ணாம் "ஆ நீயா?"

    பா,,, பா,,, பா,,,,
    பாம்.. பாம்... பாம்...
    பூஊஊஊஊஊ

    பாம்பு தான் ஆபத்தா.

    ReplyDelete
  23. நாற்காலி பற்றிய கேள்விக்கான விடையும் தவறே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  24. பரஞ்சோதி அவர்களே, விடையை நெருங்குகிறீர்கள். ஆனால் கோர்வையாகக் கூற வேண்டும். கமலஹாசன் என்ன செய்தார் என்பதை கேள்வியிலிருந்து கண்டுபிடியுங்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  25. "He looked around and found a snake around his neck (or head)"
    Come on, when a snake is around your neck or on your head, do you need to look around and decide you are in danger?

    Reflect deeper. In fact he and the other card player were alone playing and then Kamal looked around and realized he was in danger.

    It was an ordinary living room with table, chair, coat-stand etc. and no snake visible directly.

    I am afraid I have given too much clue but I will let remain as such.

    Regards,
    N.Raghavan

    ReplyDelete
  26. Coat stand seems to be a good candidate

    எப்படி? கற்பனையை இன்னும் ஓட்டவும். கோட் ஸ்டாண்டில் பாம்பு சுற்றிக் கொண்டிருந்தது என்று கூறினால், சாரி தவறான விடை.

    இந்த கேள்விக்கான விடையை உடனே எதிர்ப்பார்த்தேன். என்ன ஏமாற்றம்!

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  27. Dear Satheesh,

    Good that you reflected deeper the second time to get the right answer.

    In fact I was indirectly describing the climax scene in the Tamil/Hindi films of Neeyaa/Nagin, where Kamal/Sunil Dutt finds the snake in the reflection.

    Regards,
    Dondu N.Raghavan

    ReplyDelete
  28. இன்னும் 1, 2, 3, 5 மற்றும் 8-ஆம் கேள்விகளுக்கு விடை வரவில்லை. ஒரு நண்பர் என்னிடம் விடையை நானே அளித்து விடுவது நல்லது என்று கூறுகிறார். அவர் கூறும் காரணங்களும் நியாயமாகத்தான் தோன்றுகின்றன. ஆகவே நாளை இந்திய நேரம் பகல் 12 மணி வரை காத்திருந்து விட்டு அதன் பிறகு எக்கேள்விகளுக்கெல்லாம் விடை வரவில்லையோ, அவற்றிற்கு நானே விடை கூறி விடுவது என முடிவு செய்துள்ளேன்.

    ஆன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  29. 1. கைதி அப்போது ஒரு பாலத்தின் மேல் ஓடிக்கொண்டிருந்தான். கிட்டத்தட்ட பாலம் முடியும் தருவாயில் பாலத்துக்கு அந்தண்டை அவன் ஓடும் பாதையிலேயே எதிர்த்திசையில் போலீஸ் கார் வந்து கொண்டிருந்தது. இன்னும் 100 அடி மேலே சென்று பாலத்தைத் தாண்டி, தெருவின் ஓரத்தில் உள்ள காட்டினுள் சென்று தப்பிக்கிறேன். திரும்பி பாலம் முழுக்க ஓட சந்தர்ப்பம் இல்லை அவ்வளவுதான்.

    2. தன் நாட்டிலிருந்து தப்ப அவன் விமானத்தின் சக்கரப் பெட்டிக்குள் விமானம் டேக் ஆஃப் செய்யும் நிலையில் நின்று கொண்டிருந்த போது ஒளிந்து கொண்டான். அம்முறையில் பலர் தப்பித்திருக்கின்றனர்.

    விமானம் மிக மேலே பறந்ததில் கடுங்குளிர் தாங்காது அவன் மரித்தான். விமானம் லேண்டிங் செய்யும்போது அவன் பிணம் வானத்திலிருந்து பூங்காவில் விழுந்து எலும்புகள் முறிந்தன. ஆனால் அவன் முன்பே இறந்தான் என்பதை பிரேதப் பரிசோதனை நிரூபித்தது.

    3. கண் பார்வை மீண்டும் பெற்ற அவன் பயணம் செய்த ரயில் ஒரு நீண்ட குகைக்குள் சென்றது. வண்டியில் மின்விளக்குகளும் வேலை செய்யவில்லை. ஒரு நிமிடத்திற்கு அவனுக்கு தன் கண் மறுபாடியும் போய் விட்டதாக எண்ணிவிட்டான். நல்ல வேளியாக அவ சென்றது புகைபிடிப்பதை அனுமதிக்கும் பெட்டி. ஆகவே சிகரேடு நெருப்பு அவன் கண்ணுக்குப் பட்டு அவன் மனம் தெளிந்தான்.

    5. அவன் சர்கஸில் சிங்கத்தை அடக்குபவன். அதற்கு அவௌக்கு நாற்காலி தேவை

    8. சீல்கள் மேலே வந்து பார்த்த போது பார்வையாளர்கள் அனைவரும் nuns. அவர்களது கருப்பு உடையைப் பார்து சீல்கள் கொலைகாரத் திமிங்கலங்கள் என்று பயந்து ஓடிவிட்டன.

    புதிர்கள் ஆங்கிலப் புத்தகம் ஒன்றிலிருந்து சுடப்பட்டு, தமிழாக்கம் செய்யப்பட்டு மசாலா சேர்க்கப்பட்டவை. ஹி ஹி ஹி.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete