நிரந்தர பக்கங்கள்

1/21/2006

போலி டோண்டு

டி. ராஜ் அவர்கள் அமெரிக்கக் காப்புரிமை பற்றி உபயோகமுள்ள தகவல்கள் நிறைந்த ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதற்கு வந்த முதல் பின்னூட்டமே போலி டோண்டு போட்டது. அவன் எழுதுகிறான்:

19 January, 2006 13:25மணிக்கு, எழுதியவர்: நம்பிக்கையானவன்
டோண்டு என்ற விஷப் பன்றியின் வலைப்பதிவில் உங்கள் பின்னூட்டத்தினை நான் பார்க்க நேரிட்டால் எனது இலக்குக்கு நீங்கள் ஆட்பட நேரிடும். எனவே தயவு செய்து அவனுக்கு பின்னூட்ட வேண்டாம்.

உங்கள் நலம் விரும்பி

அவன் கவலை அவனுக்கு. இதை நான் எதேச்சையாகத்தான் பார்த்தேன். இப்படி தைரியமாக ஒருவருக்கு பயமுறுத்தல் விடுகிறான், அவன் தன்னை என்னவென்று நினைத்துக் கொண்டான்? அவனால் என்ன கழட்ட முடியும்? இப்படித்தான் கே.வி.ஆர். அவர்கள் பதிவில் மிகத் தரக்குறைவான வார்த்தைகளில் எச்சமிட்டான். அவர் அவன் மூக்கை அறுத்தார். அப்பதிவைப் பின்னூட்டங்களுடன் படிக்கவும்.

இதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. Call his bluff. அதே சமயம் மேலும் செய்ய வேண்டியவை பின்வருமாறு:

தத்தம் பதிவுகளில் அனானி மற்றும் அதர் ஆப்ஷன்களைச் செயலற்றதாக்குங்கள். பதிவாளர்கள் மட்டும் பின்னூட்டமிட வகை செய்யுங்கள். மட்டுறுத்தலை செயலாக்குங்கள். உங்களுக்குத் தெரிந்த பதிவாளர் பெயரில் உங்கள் பதிவுகளில் ஏதேனும் ஒரு வகையில் சந்தேகம் அளிக்கும் வகையில் பின்னூட்டங்கள் வந்தால், சம்பந்தப்பட்ட நண்பரை எவ்வகையிலேனும் தொடர்பு கொண்டு அப்பின்னூட்டத்தை எழுதியது அவர்தானா என்பதைப் பாருங்கள். மட்டுறுத்தலுக்கான பின்னூட்டங்களை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வருமாறு செய்து கொண்டால் அதில் பின்னூட்டமிடுபவரின் டிஸ்ப்ளே பெயர் ஹைப்பர்லிங்காக வரும். அதை க்ளிக்கிட்டு சரியான நபரா என்பதை சரி செய்து கொள்ளலாம்.

போலி பின்னூட்டங்கள் எவ்வாறு இன்னொருவர் பெயரில் உருவாகின்றன என்பதைப் பற்றி முகமூடி அவர்கள் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் பல உபயோகமானக் குறிப்புகள் உள்ளன.

போலி டோண்டு யார் என்பது பலருக்கும் தெரியும். என்ன செய்வது, அவன் மனம் பிறழ்ந்தவன் என்று அவனை விட்டுப் பிடிக்கிறார்கள். இருப்பினும் எவ்வளவு நாட்களுக்குத்தான் பொறுமை காப்பது? எதற்கும் இட்லி வடையின் இப்பதிவைப் பார்க்கவும்.

வலைப்பூக்கள் பல வகையில் உபயோகமானவை. அவற்றில் நஞ்சு போல வந்து புகுந்திருக்கும் போலி டோண்டு போன்ற இழிபிறவிகளுக்கெல்லாம் பயந்து கொண்டிருந்தால் நம்மை நாமே கண்ணடியில் தரியமாகப் பார்த்துக் கொள்ள முடியாது.

புத்தகக் கண்காட்சியில் முத்து (தமிழினி) அவர்களுடன் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கூட என்னிடம் "உங்கள் நடை எல்லோருக்கும் தெரியும்தானே. இனியும் நீங்கள் மற்றப் பதிவுகளில் இடும் பின்னூட்டங்களின் நகல்களை உங்கள் தனிப்பதிவில் போடத்தான் வேண்டுமா" என்று கேட்டார். "போட வேண்டும்தான் முத்து" என்று அப்போது பதிலளித்தேன். இப்போதும் அதே பதில்தான்.

ஒன்று நிச்சயம். போலி டோண்டு செய்யும் அட்டகாசத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள ஒவ்வொருவராக மட்டுறுத்தலை செயலாக்குகிறார்கள். அது முழுக்க நடைபெற்றாலே இவனால் மேலும் ஒன்றும் செய்ய முடியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

38 comments:

  1. "இதற்கெல்லாம் ஒரு விடிவே கிடையாது போல."

    ஏன் இல்லை, கண்டிப்பாக உண்டு. நான் கூறியபடி மட்டுறுத்தலை செய்யுங்கள். அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை நீக்குங்கள். அவ்வளவுதான். மீறி ஏதாவது அவன் பின்னூட்டமிட்டால் அதை பப்ளிஷ் செய்யாதீர்கள். அந்த ஜாட்டானால் உங்கள் ஒரு முடியைக் கூட பிடுங்க முடியாது.

    டி. ராஜ அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://seeking-spring.blogspot.com/2006/01/blog-post_19.html

    போலி டோண்டு என்ற இழிபிறவியின் உதாருக்கெல்லாம் பயப்படாதீர்கள். அவனால் ஒன்றும் கழற்ற முடியாது. நீங்கள் என்னிடம் கூறியது போல மட்டுறுத்தல் போட்டு விட்டீர்கள்தானே. ஒரு கவலையும் இல்லை.

    என்ன, வேறு இடங்களில் போய் உங்கள் பெயரில் எச்சம் கழிவான். சம்பந்தப்பட்டப் பதிவில் போய் இது போலி டோண்டுவின் லீலை என்று கூறினால் காரியம் தீர்ந்தது. அவனைப் பற்றி எல்லோருக்கும் தெரியுமாதலால் அவனால் ஒன்றும் கழட்ட முடியாது.

    இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய தனிப்பதிவில் நகலிடப்படுகிறது. அது வருகிறதா எனப் பார்த்து மட்டுறுத்தல் செய்யவும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்
    பின் குறிப்பு: இது வரை ராஜ் அவர்கள் பதிவில் மேலே குறிப்பிட்டப் பின்னூட்டம் வரவில்லை. அவருக்கு மட்டுறுத்த நேரம் இல்லை போலிருக்கிறது.

    ReplyDelete
  2. போலி டோண்டுவிடம் பயம் இல்லை என்று வெளிப்படையாகக் காண்பிக்க வேண்டிய தருணம் வந்திருக்கிறது. வலைப்பதிவு நண்பர்கள் இதில் கருத்து வேறுபாடின்றி கலந்து கொள்வார்கள் என நான் நம்புகிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. உங்கள் பதிவிலும் மட்டுறுத்தல் போட்டுக் கொள்ளவும், அவ்வளவுதானே. அந்த இழிபிறவிக்கு பயந்து நீங்கள் ஏன் உங்கள் பதிவில் பின்னூட்ட வசதியை நீக்க வேண்டும்?

    This Poli Dondu is just like the Red Queen in "Alice in Wonderland" always crying "Off with his/her head". Alice says at last, "Who cares for you, you are all just a bunch of cards" and lo so it turned out to be.

    இம்மாதிரி இழி பிறவிகளுக்கு பயந்து முடங்குவதை விட, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் (நான் கூறியபடி) எடுத்து செயலாற்றுங்கள். போலி டோண்டு என்ன அவன் தாத்தாவே வந்தாலும் ஒன்றையும் ஆட்ட முடியாது.

    60 வயதை எட்டும் எனக்கே இவ்வளவு தைரியம் இருந்தால் இளைஞர்களுக்கு எவ்வளவு இருக்க வேண்டும்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. நன்றாகச் சொன்னீர்கள் நாட்டாமை அவர்களே. உங்களைப் போன்ற இளைஞர்களை நண்பனாகப் பெற்றதில் நான் பெருமை அடைகிறேன்.

    அந்த போலியால் ஒன்றுமே செய்ய முடியாது என்பதுதான் நிஜம். அதைப் புரிந்து கொண்டாலே பாதி யுத்தம் வெற்றி கொண்டது போலத்தான். விவேகானந்தர் கூறியது போல விழிமின், எழுமின்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. இப்பின்னூட்டத்தை ஒரு ப்ரௌசிங் மையத்திலிருந்து சுரதா பெட்டியை நிறுவி அடிக்கிறேன். ஹிக்கின்பாதம்ஸ் சென்று ஒரு ஆங்கில ஹிந்தி அகராதி வாங்க வேண்டும். எப்படியும் வீடு திரும்ப மாலை 7 அளவில் ஆகி விடும். அதுவரை பின்னூட்டங்கள் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கும். இது ஒரு தகவலுக்கு மட்டுமே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. Pleasure is mine, Nattamai.

    Regards,
    Dondu N.Raghavan

    ReplyDelete
  7. திருப்பதி அவர்களே,

    நன்றி. தெருவில் இருவர் சண்டையிடுவதை உங்களில் பலர் பார்த்திருப்பீர்கள்தானே. அதில் மற்றவர்கள் சண்டையை விலக்கும்போது பாருங்கள். எல்லோரும் சேர்ந்து பலவீனமானவனைத்தான் கட்டிப் பிடிப்பார்கள். அடாவடிக்காரனை விட்டுவிடுவார்கள். அவனும் கட்டப்பட்டவனை குத்து குத்தென்று குத்தி விடுவான். பலவீனமானவனைத் தடுக்காமலிருந்தாலாவது அவன் வாங்கின பத்து குத்துக்கு ஒரு குத்தாவது திருப்பி விட்டிருப்பான். அதையும் சுற்றியிருப்பவர்கள் கெடுப்பார்கள்.

    அதே போல இருவர் வாதம் செய்து கொண்டிருந்தால் முறையாக பேசுபவனுக்கு மட்டும் அட்வைஸ் எல்லாம் வரும். இன்னொருவனை சும்மா விட்டுவிடுவார்கள். இதற்கெல்லாம் காரணம் என்னவாயிருக்கும்? அது ஒன்றுமில்லை வலிமையானவனைப் பிடித்தால் அவர்களுக்கும் உதை விழும். அதே போல அடாவடி பேசுபவனிடம் ஏதாவது கூறினால் "உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள் என்றுதானே பதில் வரும். ஆனால் அப்படியெல்லாம் வெளிப்படையாகக் கூறுவார்களா? மாட்டார்களே. ஏனப்பா நீ நியாயம் தெரிந்தவன்தானே, அவனைப் பற்றித்தான் எல்லோருக்கும் தெரியுமே. விட்டுக் கொடுத்து போ அப்பா" என்று பதில் வரும். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் நாய் நம்மைக் கடித்தால் நாம் நாயை திருப்பிக் கடிக்க வேண்டுமா என்ற ரேஞ்சில் உத்தமமாகப் பேசுவார்கள். ஆனால் வெறி நாய் என்று தெரிந்தால் அதைக் கொல்வதுதானே நலம்.

    தமிழ் வலைப்பூ உலகத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பல முறை நாம் போலி டோண்டு போன்றவர்களை சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் வெறும் மிரட்டல் பேர்வழிகளே. எல்லா மிரட்டல் பேர்வழிகளைப் போல அவர்களும் கோழைகள்தான். அடப்போடா ஜாட்டான் என்று கூறினால் அவர்கள் விலகிப் போய்விடுவார்கள். என்ன, தூரத்திலிருந்து நாய் போல குலைப்பார்கள். உங்கள் பெயரில் அசிங்கமாக பின்னூட்டமிடுவார்கள். அதையெல்லாம் கடந்த 7 மாதங்களாக எதிர்நோக்கியவன் என்ற முறையில் நான் கூறுகிறேன். போலி டோண்டு வெறும் வெத்துவேட்டு. அவனுக்கு போய் பயப்படுவது மீசை வைத்த ஆண்களுக்கு அழகில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. Dondu Sir,

    May be you should just come out with the callows name ?

    If your claimes are backed up by the thamizmanam people with facts the said person will have to yield.

    ReplyDelete
  9. Thanks Samudra. We will definitely let out the name at the most opportune time to be the most effective against that creep.

    Regards,
    Dondu N.Raghavan

    ReplyDelete
  10. ""எய்ட்ஸ் நோயாளி மாதிரி ஐஸொலேட் செய்து"
    நம்பி அவர்களே, நீங்கள் கூறுவது புரிகிறது. அனாலஜி என்பது ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் கொண்டு செல்ல வேண்டும். ஐந்து விரல்கள் ஒரே மாதிரி இருக்கின்றனவா, இல்லையே, அதே போல எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள் என்று சாதரணமாக பலர் கூறுவதுதானே. அதற்காக மனிதர்களும் விரல்களும் ஒன்றா என்று கேட்க முடியும்?

    திருப்பதி அவர்கள் ஒரு எண்ணத்தை தெளிவாகக் கூறுவதற்காக உபயோகித்த சொற்றொடர் அது. பழங்காலத்தில் குஷ்டரோகிகளை அவ்வாறு ஒதுக்கித் தனியாக வைத்தார்கள். ஆகவே "குஷ்டரோகிகளை ஒதுக்குவதுபோல" என்ற சொற்றொடர்கள் இருந்தன. இப்போது அது பழங்கதையாகி விட்டது.

    இப்போது அதைப் பற்றியெல்லாம் பேசி பதிவின் விஷயத்திலிருந்து விலக வேண்டாம் என நினைக்கிறேன். உங்கள் மனம் புண்பட்டிருந்தால், இந்தப் பின்னூட்டத்தை மட்டுறுத்தி வெளியிட்டவன் என்ற முறையில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  11. "இந்தியாவில் அனைத்து தொகுதியிலும் அவரவர் சாதிக்காரர்களுக்கு தான் ஓட்டு போடுகிறார்கள்.அது தப்பு எனும் இவன் இந்தியாவில் எங்கேயும் காலடி வைக்க கூடாது."

    ஓ, அதனால்தான் சிங்கப்பூரில் இருக்கிறானாமா.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. பரஞ்சோதி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://siruvarpoonga.blogspot.com/2006/01/75.html#comments

    பரஞ்சோதி அவர்களே,

    கடவுளின் மகன் கதையையும் வெளியிடுங்கள். டால்ஸ்டாயின் எல்லா கதைகளும் அருமைதான்.

    நிற்க. போலி டோண்டு உங்களையும் மிரட்டுகிறான் போலிருக்கிறது. அவனைப் பற்றி நான் இட்ட இப்பதிவைப் பாருங்கள். http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html#comments

    இப்பின்னூட்டத்தின் நகலை அதே பதிவில் பின்னூட்டமாக நகலிடுகிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. இராகவன் அண்ணா,

    என் பதிவில் போலி டோண்டுவின் அன்பு வேண்டுகோள் பார்த்தேன், சிரித்தேன். அதை எல்லாம் கண்டுக்க வேண்டாம் என்பதே என் எண்ணம், அதனாலேயே இதுவரை உங்கள் அனைவரின் பிரச்சனைகளை படித்தாலும் கருத்து கூறாமல் இருந்தேன்.

    அப்படி கருத்துக்கள் தெரிவிக்க தொடங்கினால் போலிகள் குஷியாகி விடுவாங்க.

    அப்புறம் என்ன இப்போ எல்லாம் போலியார் உங்களுக்கு அதிக பதிவுகள் போட உதவுகிறாரே!

    எங்களை உசுப்பேற்றி பதிவுகள் போட வைப்பதை சொல்கிறேன்.

    போலியாரை சிறுவர் பூங்காவில் இருக்கும் கதைகளை படிக்க சொல்ல போகிறேன். திருந்திடுவார்.

    அன்புடன்
    பரஞ்சோதி

    ReplyDelete
  14. மிக்க நன்றி பரஞ்சோதி அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  15. "Dondu, Your reply and stand speak a lot about your personality."

    Your cryptic words intrigue me. Could you kindly elaborate?

    Regards,
    Dondu N.Raghavan

    ReplyDelete
  16. சதயம் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://sadhayam.blogspot.com/2006/01/blog-post_26.html#comments

    "டோண்டு அவர்களின் சில செயல்பாடுகளினால், பிரச்சினை பெரிதாகிப் போனது என்பதில் எனக்கும் உடன்பாடே."

    இந்த போலி டோண்டு ஆரம்பத்திலிருந்தே தரக்குறைவான பின்னூட்டங்களை என் பெயரில் இட்டான். ஆகவே நான் தற்காப்புக்காக என் பின்னூட்டங்களுக்கானத் தனிப்பதிவு ஒன்று கடந்த மே மாதம் போட வேண்டியதாயிற்று. அவன் மற்றவர்களைப் போலவே நானும் ஓடிவிடுவேன், பதிவுகள் போடுவதை நிறுத்தி விடுவேன் என்றெல்லாம் நினைத்திருக்கலாம். ஒரு வேளை அதே மாதிரி நானும் செய்திருந்தால் ஓரிருவர் ஒப்புக்காக எனக்கு அனுதாபம் தெரிவித்து விட்டு தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போயிருந்திருக்கலாம். நான் கூட இன்னொரு அனாமத்துப் பதிவை துவக்கி நான் யார் என்பதையே வெளியில் தெரிவிக்காது அடக்கி வாசித்திருக்கலாம். அதையும் சிலர் எதிர்ப்பார்த்திருக்கலாம். அவர்கள் எல்லோருக்கும் இப்போது ஒன்று கூறுவேன். அது டோண்டுவின் வழி அல்ல. என்னை அடக்க அடக்க நான் பீறிக் கொண்டு வருவேன். நான் எடுத்த நிலைகள் ஒரு சுயமரியாதை உடையவன் செய்திருக்க வேண்டியதே. அதைத்தான் நானும் செய்தேன்.

    எனக்கு கொடுத்த ஆலோசனையின் பெயரில் என்னுடைய ப்ளாக்கர் எண்ணையும் அடைப்புக் குறிக்குள் வைத்து டிஸ்ப்ளே பெயராக்கினேன். அவனும் அதே மாதிரி அதர் ஆப்ஷன் மூலம் செய்து என் பதிவு எண் அதே மாதிரி வருமாறு செய்தான். அடுத்த நடவடிக்கையாக என் போட்டொவை எனேபிள் செய்தேன். சிறிது நேரம் தயங்கிய அவன் ஒரு பிளாக்கர் கணக்கைத் துவங்கி என்னுடைய வலைப்பூ போலவே செட்டப் செய்தான். பின்னூட்டம் இடும்போது என் பெயர் மற்றும் போட்டோவுடன் பின்னூட்டம் வரும் ஆனால் எலிக்குட்டி சோதனையில் அது தெரிந்து போகும். அதைச் செய்யக்கூட சோம்பல்படும் அன்பர்கள் இருக்கிறார்கள். ஆகவே பல முறை அவன் போலியாக என் பெயரில் இட்டப் பின்னூட்டங்களை நான் இட்டதாக நினைத்து எதிர்வினை கொடுத்தனர் பலர். இதில் பல புது பதிவாளர்கள் அடக்கம். ஆனால் அனுபவம் வாய்ந்த பதிவாளர்களான மூக்கு சுந்தர், என்றென்றும் அன்புடன் பாலா ஆகியோரும் அதே தவறைச் செய்தனர். பார்க்க மணிக்கூண்டின் பதிவு http://manikoondu.blogspot.com/2005/06/blog-post_27.html#comments

    நான் யாரையும் குறை சொல்வதற்காகக் இதைக் கூறவில்லை. என்னுடைய யுத்தத்தை நானேதான் நடத்திக் கொள்ள வேண்டும் என்பதை நான் எப்போதும் மறக்கவில்லை. அவ்வாறே யுத்தம் செய்தேன். போலி டோண்டுவும் நான் ஒரு பாதுகாப்பு செய்து கொண்டால் நிலைமையை மேலும் மேலும் எஸ்கலேட் செய்து கொண்டே போனான். பிறகு மூளை இன்னும் அதிகம் பிறழ்ந்து என்னை ஆதரித்தவர்களையும் அசிங்கமாகத் தாக்க ஆரம்பித்தான். அவ்வாறு தாக்கப்பட்டவர்களில் ஹல்வாசிடி விஜய், மாயவரத்தான், எல்.எல்.தாசு, எஸ்.கே., காசி மற்றும் பலர் முக்கியமானவர்கள். கடைசியில் அவன் மோசமாகத் தாக்கியது காசி அவர்களைத்தான். பிறகு என் பதிவில் பின்னூட்டம் இடக்கூடாது என்றும், அவ்வாறு செய்தால் அவனுடைய இலக்கு சம்பந்தப்பட்ட ப்ளாக்கர் என்றும் என் பதிவுகளில் பின்னூட்டமிட்ட பலருக்கும் தகவல் அனுப்பினான். இது சம்பந்தமாக நான் போட்ட பதிவு இதோ, பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

    இப்போது அது மட்டுறுத்தலில் வந்து முடிந்துள்ளது. நல்ல காரியம்.

    நேற்று என்னுடன் பேசிய நண்பர் பாரா அவர்கள் கூட கேட்டார், எதற்கு இந்த வலைப்பூவெல்லாம், பேசாமல் விட்டு விட்டு வேறு நல்ல வேலை பாருங்கள் என்று. தமிழில் எழுதும் என் இன்பத்தை நான் ஏன் போலி டோண்டு என்ற ஓர் அராத்து பேர்வழிக்காக விட வேண்டும்? மேலும் தமிழில் பதிவு போடுவதால் என் தமிழில் முன்னேற்றம் ஏற்படுகிறது, தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய முடிகிறது.

    இப்போது கூறுவேன். என்னைப் பாதுகாத்துக்கொள்ளவே நான் பல நடவடிக்கைகள் எடுத்தேன், அவ்வளவுதான்.

    இப்பின்னூட்டம் என்னுடைய போலி டோண்டு பற்றிய தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும், பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  17. ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது.

    ஜோசஃப் அவர்களே,

    பல இடங்களில் நான் கூறுவதையே இங்கும் கூற நேரிடுகிறது. பிரச்சினை உங்கள் சொந்தப் பதிவில் வரும் ஆபாசப் பின்னூட்டங்கள் அல்ல. அதே போல உங்களையோ உங்கள் குடும்பத்தினரையோ திட்டி உங்கள் பதிவுகளிலோ அல்லது வேறு பதிவுகளிலோ வருவது கூட அவ்வளவு பிரச்சினைக்குரியது இல்லை.

    ஆனால் உங்கள் அடையாளம் போலவே இன்னொரு அடையாளத்தை உருவாக்கி மற்றவர் பதிவுகளில் நீங்கள் போடுவது போல மற்றவர்களையும் அவர்கள் பெண் உறவினர்களையும் திட்டுவதே மிகப் பெரிய பிரச்சினை. அதற்கு 100% பலியானது நானே. எனக்கு ஆதரவு அளித்த மாயவரத்தான், எல்.எல். தாசு, எஸ்.கே., விஜய், காசி ஆகியோரும் இதற்கு பலியாயினர்.

    நீங்கள் கூறலாம், ஏன் பலரும் அதையே கூறினார்கள், அதாவது, "சார் உங்கள் நடை எங்களுக்குத் தெரியாதா, நாங்கள் எல்லாம் உங்களைத் தவறாகவெல்லாம் நினைப்போமா" என்றெல்லாம்.

    ஆனால் அப்படித் தவறாக நினைத்தவர்களும் கணிசமான அளவில் இருந்தனர். இதில் நீங்களும் அடக்கம் என்று கூற வரவில்லை. (உங்களிடம் பிறகு வருகிறேன்.)

    என் டிஸ்ப்ளே பெயர் dondu(#4800161) என்பதை இட்டு அந்த போலி டோண்டு பதித்தப் பின்னூட்டங்கள் எண்ணிலடங்கா. இதற்கு நான் எதிர்வினை கொடுத்ததன் காரணத்தை நீங்களே இப்பதிவில் குறிப்பிட்டதையே அடிப்படையாக வைத்து கூறுவேன்.

    நீங்கள் எழுதினீர்கள்: "ஆனால் சில சமயங்களில் எதிராளி கோபத்தின் உச்சியில் இருக்கும் நேரத்தில் நாம் அமைதியாக இருப்பதை அவர் அலட்சியம் என்று தவறாக நினைக்கவும் வாய்ப்பிருக்கிறது. அத்தகைய விளைவைத்தான் அன்றும் நான் சந்தித்தேன்."

    அதைத்தான் நானும் செய்தேன் சார். ஆனால் என்ன, அலட்சியம் என்று திட்டப்பட்டவர்கள் நினைத்து, அதனால் அவர்களுடன் எனக்கிருக்கும் நட்பு கெடக்கூடாது என்ற எண்ணத்தில் சமயம் கிடைக்கும்போதெல்லாம் சம்பந்தப்பட்டப் பதிவுகளுக்குப் போய் பின்னூட்டமிட்டு எலிக்குட்டி சோதனை, போட்டோ இருப்பது எல்லாவற்றுக்கும் மேலாக என் தனிப்பதிவிலும் என் பின்னூட்டங்கள் நகலிடப்படுவது என்பதையெல்லாம் கூற ஆரம்பித்தேன். அப்படியும் ரயாகரன், வீர வன்னியன், வா.மணிகண்டன் ஆகியோர் அவற்றையெல்லாம் அலட்சியம் செய்தனர்.

    இப்போது இன்னொரு வகை பின்னூட்டத்திற்கு வருவோம். அதாவது ஆபாசம் இருக்காது, ஆனாலும் மீதி எல்லாம், உதாரணத்துக்கு ஜாதி துவேஷம், எல்லாம் இருக்கும். அம்மாதிரிப் பின்னூட்டம் ஒன்று வீர வன்னியன் அவர்களின் பதிவில் வந்தது. அந்தப் பதிவில் நீங்கள் இட்டப் பின்னூட்டம் இதோ:

    "பள்ளு என்றால் என்ன தெரியுமா? மேன்மக்களாகிய பார்ப்பான்கள் எல்லாம் தாழ்த்தப்பட்ட பள்ளர்களைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்போம் என்பதாகும். இவ்வாறு நாங்கள் எங்கள் சென்னைக் கூட்டத்தில் விளக்கம் சொல்வோம்."
    என்று கூறும் இவ்வார நட்சத்திரத்தை (அதாவது டோண்டு ராகவன்) என்னவென்று கூறுவதென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.

    அவருடைய கருத்து (Are you really serious about what you wrote Mr.Dondu?) விமர்சனத்துக்குக் கூட தகுதியில்லாதது என்று எண்ணி ஒதுக்கித் தள்ளுகிறேன்.

    (அதன் பிறகு குழலி வந்து உங்கள் தவறானப் புரிதலை எடுத்துக் காட்டினார், நீங்கள் உங்களுக்கே உரிய பெருந்தன்மையுடன் அதற்காக என்னிடம் மன்னிப்பெல்லாம் கூடக் கேட்டீர்கள், இப்போது நாம் இருவரும் அசைக்க முடியாத அளவுக்கு நட்புடன் இருக்கிறோம் என்பதெல்லாம் பின்னால் வந்தது. உண்மையைக் கூறப்போனால் உங்கள் அருமையான நட்பு கிடைத்ததற்காகவாவது போலி டோண்டுவுக்கு நன்றி கூற வேண்டும். ஏனெனில் இதைப் படித்து அவன் ரத்த அழுத்தம் எல்லாம் இன்னும் ஏறும் அல்லவா?).

    எத்தனை முறை கரடியாகக் கத்தினாலும் ஒரு சாதாரண எலிக்குட்டி சோதனையைச் செய்யக்கூட சோம்பல்பட்டு தவற்றைத் திரும்பத் திரும்ப செய்கிறார்களே, அவர்களிடம் என்னதான் செய்ய முடியும்?

    இப்பின்னூட்டம் உண்மை டோண்டு இட்டதே என்பதைத் தெரிவிக்கும் வகையில் போலி டோண்டு பற்றிய என்னுடைய இப்பதிவிலும் அதை நகலிடுகிறேன். பார்க்க:

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  18. இளவஞ்சி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இப்பின்னூட்டம் அவரது மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://ilavanji.blogspot.com/2006/02/blog-post.html
    கடிதத்திற்கு நன்றி. சுருக்கமாகவே பதிலளிக்க விரும்புகிறேன். பிரச்சினை வெறும் ஆபாசப் பின்னூட்டங்கள் மட்டுமல்ல. என்னுடைய அடையாளத்தைத் திருடி என்னுடையதைப் போலவே வலைப்பூ தயார் செய்து மற்றவர்களை அவர்கள் பதிவிலேயே ஆபாசமாக அர்ச்சித்தவன் போலி டோண்டு என்ற இழிபிறவி. அவனை நான் எனக்கு தெரிந்த முறையில் கையாண்டேன், இப்போது மொத்தமாகவே மட்டுறுத்தல் வந்திருக்கிறது. அது வந்ததிலிருந்து ஏதேனும் அசிங்கப் பின்னூட்டங்களும் வந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் பலருக்கு நான் செய்தது பிடிக்கவில்லை. அவர்களுக்கு மட்டுறுத்தல் தங்கள் பதிவுகளில் செய்ய சோம்பேறித்தனம் என்பதைத் தவிர வேறு காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

    இப்போது வந்து நான் என்னவெல்லாம் செய்திருக்க வேண்டும் என்று அக்கறையாகக் கூற முற்படுகின்றனர். அதாவது நான் இக்னோர் செய்திருக்க வேண்டுமாம். தங்களுக்கு இம்மாதிரி கஷ்டம் வராதபோது இம்மாதிரியெல்லாம் உத்தமமாக உபதேசம் செய்வது எளிதே. அது அது தனக்கு வந்தால் தெரியும். இன்னொரு பதிவாளர் கூறுகிறார், அவர் வலைப்பதிவதையே விட்டுப் போயிருப்பாராம். என்ன செய்வது, நான் அவரில்லையே.

    நான் தனிப்பதிவு போட்டு ஏன் அதில் நான் மற்றப் பதிவுகளில் இட்டப் பின்னூட்டங்களை அதில் நகலிட்டு வந்தேன் என்பதற்கு பல முறை விளக்கம் அளித்தாகி விட்டது. இருப்பினும் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் அதனால் போலி டோண்டு அதிகக் கோபமடைந்தான் என்று சொன்னதையே கூறிக் கொண்டிருந்தால் நானும் விளக்கத்தை திரும்பத் திரும்பத்தான் கூற வேண்டியிருக்கும். என் பெயரில் பல போலி பின்னூட்டங்கள் வருவதால் இதை நான் செய்ய வேண்டியதாயிற்று.
    நான் ப்ளாக்கர் பின்னூட்டங்கள்தான் இடுவேன். அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை கனவிலும் உபயோகிக்க மாட்டேன். ஆகவே எலிக்குட்டி சோதனையில் சரியான ப்ளாக்கர் எண் வர வேண்டும், மற்றும் போட்டோ எனேபிள் செய்யப்பட்டிருந்தால் என் போட்டோவும் வரவேண்டும் என்றெல்லாம் எத்தனை முறை கரடியாகக் கூறியிருப்பேன். அதே சமயம் ப்ளாக்கர் இல்லாத வேறுவகை பதிவுகளில் இந்த சோதனைகள் பிரயோசனப்படாததால் மூன்றாவது சோதனையாக என் தனிப்பதிவில் அம்மாதிரிப் பின்னூட்டங்களை மறுபடியும் நகலிடுவது என்றும் செயல்பட்டு வருகிறேன்.

    வேறு முறை? உண்டு. நான் வேறு எங்குமே பின்னூட்டமிடக்கூடாது. ஆரோக்கியம் அவர்கள் அவ்வாறுதான் செய்தார். அவரைத் தவிர வேறு பலரும் அவ்வாறே செய்தனர். போலி டோண்டுவும் அதைத்தான் எதிர்ப்பார்த்தான். அம்முறை காரியத்துக்காகாது. அது என் சுதந்திரத்தை நானே கட்டுப்படுத்திக் கொள்வதற்கு சமமாகும்.

    என் பதிவுகளை பல காலமாக படித்து வருபவர்களே செய்ய வேண்டிய எளிதான சோதனைகளை செய்யாமல் என்னைப் பற்றி தவறான புரிதல் வருவது போல செய்தபோது, I cannot be too careful.

    இப்பின்னூட்டமும் என்னுடைய இப்பதிவில் பின்னூட்டமாக இடப்படும். அங்கு வருகிறதா என்பதைப் பார்த்தே இப்பின்னூட்டத்தை மட்டுறுத்தி ஏற்றுக் கொள்ளவும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  19. ஜோசஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://ennulagam.blogspot.com/2006/02/73.html

    "நாம ரோட்ல போய்க்கிட்டிருக்கும்போது ஒரு பைத்தியக்காரன் என்னையும் என் மனைவியையும் பார்த்து கீழ்த்தரமான வார்த்தைகளால் என்னை பேசினால் அவன் பைத்தியக்காரன் என்று தெரிந்தும் நான் கோபத்துடன் அவனுடன் மல்லுக்கு நின்றால் எனக்கும் அவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடும். அதுவே அவன் யார் எவர் என்று விசாரித்து அவன் கூறுவதை உதறி தள்ளிவிட்டால் என்னுடைய மரியாதையை என்னால் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும் என்றுதான் நான் கூற வந்தேன்.."

    உங்களைப்போலவே வேஷம் அணிந்து மூன்றாம் நபர் வீட்டிற்கே போய் அவர், அவரது பெண் உறவினர் என்று எல்லோரையும் கீழ்த்தரமான வார்த்தைகளால் அர்ச்சித்து, அது அத்தனையும் நீங்கள் செய்ததே என்று மேலோட்டமாக பார்ப்பவர்கள் செய்யுமாறு செய்தாலும் விட்டு விடுவீர்களா? அதுதான் எனக்கு முதலிலிருந்தே நடந்தது என்கிறேன்.

    இப்போது கூட நீங்கள் குறிப்பிட்டபடி உங்களுக்கு யார் பெயரிலிருந்து உங்களைத் திட்டி போடுவதாக உங்கள் பதிவில் வந்தது என்பதை யோசித்துப் பாருங்கள். அதுதான் சார் பிரச்சினை. என்னை எக்ஸ் அல்லது ஒய் என்ற பெயரில் வந்து திட்டியிருந்தால் நானும்தான் அலட்சியப்படுத்துவேன்.

    ஆனால் dondu(#4800161) என்ற என் டிஸ்ப்ளே பெயரைப் போட்டல்லவா ஊரில் இருந்த அத்தனைப் பதிவுகளுக்கும் போய் பின்னூட்டமிட்டான்? அதுவும் he did it from day 1.
    நான் என்னதான் செய்திருக்க வேண்டும் எனச் சொல்கிறீர்கள்? பதிப்பதை விட்டு ஓடியிருக்க வேண்டுமா அல்லது யாருக்குமே பின்னூட்டம் தராமல் இருக்க வேண்டுமா? போலி விஜய், போலி காசி, போலி மாயவரத்தான் எல்லோரூமே அப்புறம்தான் வந்தார்கள்.

    இப்பின்னூட்டம் உண்மை டோண்டு இட்டதே என்பதைத் தெரிவிக்கும் வகையில் போலி டோண்டு பற்றிய என்னுடைய இப்பதிவிலும் அதை நகலிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  20. இளவஞ்சி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://ilavanji.blogspot.com/2006/02/blog-post.html
    "dondu(#4800161) hat gesagt…
    விவாதம் கொஞ்சம் சூடாத்தான் இருக்கு. எட்டி நின்னு வேடிக்கை பாக்கலாம்.

    12:30 PM, February 04, 2006"


    அதர் ஆப்ஷனை உபயோகித்து மேலே போலி டோண்டு என் பெயரில் பின்னூட்டமிட்டிருக்கிறான். நீங்களும் அதை அனுமதித்துள்ளீர்கள். என்னுடையப் பின்னூட்டங்களில் போட்டோ மற்றும் ப்ளாக்கர் என் இரண்டும் சரியாக வர வேண்டும் என்று நான் எத்தனை முறை கூறினாலும் உங்களுக்கு அது ஏறவில்லையே. சோழனாடனும் இதை பார்க்கட்டும். இப்போதாவது என் பெயரில் வந்தப் போலிப் பின்னூட்டத்தை நீங்கள் நீக்குவீர்கள் என எதிர்ப்பார்க்கிறேன்.

    3ஆம் தேதி மாலையிலிருந்து இன்று காலை 9 மணி வரை நான் ஆஸ்பத்திரியில் இருந்தேன். ஹெர்னியா அறுவை சிகிச்சை. ஆகவே இந்தப் போலிப் பின்னூட்டத்தைப் பார்ப்பதில் தாமதம். இந்த அழகில் நான் சீப் பப்ளிசிடி செய்கிறேன் என்று வேறு வருத்தப்படுகிறீர்கள். அடித்துக் கொள்ள ஆயிரம் கைகள் வேண்டும் ஐயா.

    தலை வலியும் திருகு வலியும் தனக்கு வந்தால் தெரியும் என்பதுதான் உண்மை.

    இப்பின்னூட்டம் என்னுடைய இந்தப் பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  21. முத்து (தமிழினி) அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://muthuvintamil.blogspot.com/2006/02/blog-post_10.html
    "சரி நாலாவது அக்கவுண்ட்"
    "அதை போலி டோண்டு உங்க பேரில வெச்சிருப்பான்.அதை கண்டுக்காதீங்க"

    ஆனால் அதைப் பெற உண்மை டோண்டுவுக்கு ஆதரவாக பல இடங்களில் பின்னூட்டமிட்டிருக்க வேண்டும், வேறு வகைகளில் ஆதரவு கண்பிச்சிருக்கோணும்.

    அது வரைக்கும் உங்களுக்கும் மற்றும் சிலருக்கும் இப்போதெல்லாம் வருவது போல ஆசீர்வாதங்களுடன் செந்தமிழில் மின்னஞ்சல்கள் மட்டும் வரும். அவை என்னுடைய மற்றும் காசி பெயர்களில் இருக்கும் என்பதும் விதி.

    இப்போது இங்கு பின்னூட்டமிடுவது உண்மை டோண்டுவே என்பதைக் காட்ட, இதை நான் என்னுடைய போலி டோண்டு பற்றிய பதிவிலும் பின்னூட்டமாக நகலிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  22. ராமசந்திரன் உஷா அவர்கல் பதிவு ஒன்றில் நான் இட்ட இப்பின்னூட்டம் அவரது மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://nunippul.blogspot.com/2006/02/blog-post_13.html

    அந்த மனம் பிறழ்ந்த போலி டோண்டுவின் செயலால் எல்லாம் அதைரியம் கொள்ளாதீர்கள்.

    உங்களுக்கு கிடைத்தற்கரியக் கணவர் கிடைத்திருக்கிறார். அவர் உங்களுக்கு கொடுத்த வாலெண்டின் பரிசு நிஜமாகவே அற்புதம்தான். அவருக்கும் உங்களுக்கும் என் மனப்பூர்வ ஆசிகள். என் உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் தென் திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் உங்களுக்கு ஒரு குறையும் வைக்க மாட்டான்.

    இப்பின்னூட்டம் உண்மையான டோண்டுவாகிய நானே இட்டேன் என்பதற்கு சான்றாக போலி டோண்டுவைப் பற்றிய என் தனிப்பதிவிலும் நகலிடுகிறேன், பின்னூட்டமாக.

    பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  23. மோகன்தாஸ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://imohandoss.blogspot.com/2006/02/blog-post_113993330913200605.html
    "என்னைப் பொருத்தவரை, டோண்டு அவர்கள் அவருடைய இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என நினைத்தால், காசி அவர்களைப்போல், தேசிகன் அவர்களைப்போல், இல்லை இன்னும் சிலரைப்போல் சொந்தமாக வெப்சைட் வைத்துக்கொள்ளலாம். அந்த இணையத்தளத்தில் உங்களிடம் யாரும் வாலாட்ட முடியாது, உங்கள் இணையத்தளத்தை பார்த்தவர்களைபற்றிய எல்லா விவரங்களையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.(டோண்டு சார் நீங்க என்ன சொல்றீங்க.)"

    நன்றி மோகன்தாஸ் அவர்களே. என்னுடைய பிரச்சினை ரொம்ப எளிமையானது. எனது ப்ளாக்கர் பதிவு பாதுகாப்புடனேயே இருக்கிறது. என்னுடைய கடவுச் சொல்லை நான் ரகசியமாக வைத்திருக்கும் வரை யாரும் உள்ளே அத்து மீறிப் பிரவேசித்து விட முடியாது. எனக்கு வரும் வெளிப்படையாக ஆபாசமாகத் தெரியும் பின்னூட்டங்களை நான் மட்டுறுத்தல் செய்து தடுத்து விடுகிறேன். எனக்கு வரும் தனிப்பட்ட மின்னஞ்சல்களும் அவ்வாறே அகற்றப்படுகின்றன. ஆனால் அழிக்கப்படாது ஜிமெயில் ஆர்கைவ்ஸில் சேமிக்கப்படுத்தப்படுகின்றன.

    உண்மையான பிரச்சினை என் பெயரில் வெளியாகும் போலிப் பின்னூட்டங்களே. அவை மற்ற ப்ளாக்கர் பதிவுகளில் போடப்படுகின்றன. அதனால்தான் உண்மையான டோண்டுதான் தங்கள் பதிவில் பின்னூட்டமிட்டுள்ளானா என்பதை அறிய சம்பந்தப்பட்ட ப்ளாக்கர்கள் செய்து பார்க்க வேண்டி ய மூன்று சோதனைகளைப் பற்றி நேரம் கிடைக்கும்போதெல்லாம் கூறி வருகிறேன்.

    1. டிஸ்ப்ளே பெயர் dondu(#4800161) என்று இருக்கும். கூடவே சம்பந்தப்பட்ட ப்ளாக்கர் பதிவில் ஃபோட்டோ எனேபிள் செய்யப்பட்டிருந்தால் என் படமும் இருக்க வேண்டும்.
    2. எலிக்குட்டி சோதனையில் (மவுஸ் ஓவர்) இடது பக்கம் கீழே என்னுடைய சரியான எண்ணான 4800161 தெரிய வேண்டும்.
    3. நான் இடும் பின்னூட்டம் நான் குறிப்பிட்டிருக்கும் என்னுடையத் தனிப்பதிவிலும் இடப்பட்டிருக்க வேண்டும்.

    அது எல்லாம் செய்தும் புதிய ப்ளாக்கர்களுக்கு அவை தெரியாது குழப்பங்கள் ஏற்பட்டன. ஆனால் நல்ல வேளையாக மட்டுறுத்தல் பொதுவாக்கப்பட்டதில் பிரச்சினை கிட்டத்தட்ட ஒழிந்தது.

    இப்பின்னூட்டமும் போலி டோண்டுவைப் பற்றிய என்னுடைய இப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  24. சாணக்யன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://vurathasindanai.blogspot.com/2006/03/blog-post.html
    நீங்கள் செய்தது அவனை முழுவதுமாகத் தடுக்காது. அவன் என் பெயரில் போலி பதிவும் செய்து வைத்துள்ளான். அதை வைத்துப் பின்னூட்டமிடுவான்.

    உங்கள் பதிவில் ஃபோட்டோ எனேபிள் செய்யப்பட்டிருந்தால். என்னுடைய இந்தப் பின்னூட்டம் டிஸ்ப்ளே பெயர் dondu(#4800161) உடன் போட்டொவும் சேர்ந்து வரும். டிஸ்ப்ளே பெயரில் எலிக்குட்டியை வைத்துப் பார்த்தால் திரைக்கு இடதுபக்கம் கிழே என்னுடைய சரியான ப்ளாக்கர் எண் 4800161 தெரியும்.

    போலியின் விஷயத்தில் போட்டொவும் வரும், டிஸ்ப்ளே பெயரும் dondu(#4800161) என்றுதான் வரும். ஆனால் எலிக்குட்டி சோதனை வேறு எண்ணைக் காட்டும்.

    இது ஒரு புதுக் குழப்பமே அல்ல. இது ரொம்பவும் அதிகமாகப் போனதால்தான் மட்டுறுத்தலே வந்தது.

    இருப்பினும் அதர் ஆப்ஷன் மற்றும் அனானிப் பின்னூட்டங்களை நீங்கள் செயலற்றதாக்கியதே ஒரு முன்னேற்றம்தான்.

    ஆக, இந்தப் பின்னூட்டம் நானே இட்டேன் என்பதற்கு போட்டோ மற்றும் எலைக்குட்டி சோதனையில் சரியான ப்ளாக்கர் எண் ஆகிய இரண்டும் ஒன்றாக ஒத்து வர வேண்டும். மட்டுறுத்தும்போது ஜாக்கிரதையாக இருக்கவும்.

    இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதற்கு ஏதுவான மூன்றாம் சோதனையாக, இதன் நகலை என்னுடைய போலி டோண்டு பற்றிய பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  25. குறும்பன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://kurumban.blogspot.com/2005/11/blog-post.html
    குறும்பன் அவர்களே,
    மேலே என் பெயரில் பின்னூட்டமிட்டது போலி டோண்டுவே. அதை தயவு செய்து நீக்கவும்.

    அவன் என்னுடைய ப்ளாக்கர் எண் 4800161-யை வேண்டுமென்றே உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தவே தன்னுடைய டிஸ்ப்ளே பெயரில் குறிப்பிட்டுள்ளான். அதன் மேல் மௌஸை வைத்துப் பார்த்தால் அவனுடைய உண்மையான எண் 11882041 என்பதைப் பார்க்கலாம்.

    ஆனால் என்னுடைய இந்தப் பின்னூட்டத்தில் ப்ளாக்கர் எண் மற்றும் டிஸ்ப்ளே பெயர் எண் ஆகிய இரண்டுமே 4800161 என்பதைப் பாருங்கள்.

    நான் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் முதலில் வந்துள்ளப் போலிப் பின்னூட்டத்தை அழியுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை நிரூபிக்கும் வகையில் அதன் நகலை என்னுடைய போலி டோண்டு பற்றியப் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். அதில் இப்பின்னூட்டத்தின் நகல் வருகிறதா என்பதைப் பார்த்து மட்டுமே மட்டுறுத்தவும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  26. சுந்தர் அவர்களது பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ: http://agaramuthala.blogspot.com/2006/03/blog-post_31.html

    எனது அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி எனக்கு வாழ்த்தனுப்பிய சுந்தருக்கும் மற்ற அன்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.

    "பெயரைச் சொன்னால் வாரம் நான்கு என்பது தினமும் ஒன்று என ஆகிவிடும். எனவே எஸ்கேப்..."

    அனானி அவர்களே, பெயரைச் சொல்லாவிட்டாலும் போலி டோண்டு process of elimination ஐ வைத்து உங்களைக் கண்டு கொள்வானே!

    இப்பதிவை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை நான் என் தரப்பிலிருந்து போலி டோண்டுவைப் பற்றி இட்டப் பதிவில் பின்னூட்டமிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  27. சுந்தர் அவர்களது பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது: http://agaramuthala.blogspot.com/2006/03/blog-post_31.html

    சதயம் அவர்களே,
    நீங்கள் சுட்டியுள்ள உங்கள் பதிவிலேயே போலி டோண்டு பின்னூட்டமிட்டுள்ளானே. அதைத் தெரிந்தோ தெரியாமலேயோ அனுமதித்திருக்கிறீர்களே. போலி டோண்டு இட்டப் பின்னூட்டம் இதோ:

    "11:47 PM Dondu(#4800161) said
    அனானிகளை தறுதலைகள் என்று சொல்லிவிட முடியாது. சமீபத்தில் 1857ல் நான் மும்பையில் பணியாற்றியபோது பல அனானிகளைச் சந்தித்து இருக்கிறேன். அவர்கள் அன்றாடம் படும் வேதனைகளை நான் பார்த்திருக்கிறேன். இது குறித்து விரைவில் என் வலைப்பூவில் பதிவொன்றை இடுவேன்.

    அனானிகள் பார்ப்பனர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை எதிர்க்கிறேன். அவர்கள் பார்ப்பனர்களை ஆதரித்து எழுதினால் அதனை நான் வரவேற்கிறேன்."

    எலிக்குட்டியை வைத்துப் பார்க்கக்கூட உங்களுக்கு சோம்பல். அதனால்தான் இன்னும் அந்தப் போலிப் பின்னூட்டத்தை இந்த நிமிடம் வரை அப்பதிவில் வைத்திருக்கிறீர்கள்.

    சுந்தர் அவர்கள் இப்பதிவில் எழுதியது: "அது உண்மையான போலி டோண்டுவின் "வழக்கமான" மடல். எளிதாக அதைப் புறக்கணிக்க முடிந்தாலும் (மட்டுறுத்தத்தின் தேவையை மறுபடியும் உணரச் செய்த மடல்!), ..."

    இவ்வளவு நடந்த பின்னாலும் நீங்கள் இங்கு உங்கள் பின்னூட்டத்தில் கூறுகிறார்கள்: "திரு.டோண்டுவின் பதிவில் பின்னூட்டமிட்டதற்காக என்னையும் ஒரு முறை அவர் பாணியில் கடுமையாக சாடியிறுக்கிறார்."
    இதற்குப் பிறகும் போலி டோண்டுவிற்காக வாதாடுகிறீர்கள் என்றால், என்ன செய்வது?

    மட்டுறுத்தல் செய்து கொள்ளுங்கள் என்று காசி அவர்கள் எல்லோருடைய நல்லதற்காகவும் கூறியதற்கே உங்கள் சுதந்திரம் பறிபோவதுபோன்ற ரேஞ்சில் செயல் புரிந்த நீங்கள் இங்கு ஒரு மனநலம் பிறழ்ந்தவன் ஒவ்வொருவர் பதிவுக்கெல்லாம் போய் தான் கூறும் ஆசாமியின் பதிவுக்குப் பின்னூட்டம் இடக்கூடாது என்று கூறுவானாம், அதை எதிர்த்து யாரேனும் பேசினால், அந்த மனநலன் குன்றியவனின் கருத்து சுதந்திரத்துக்கு பங்கம் வந்து விட்டது என்று நீங்கள் பொருமுவீர்களாம். என்ன சார் நடக்கிறது இங்கே?

    மட்டுறுத்தல் தேவையில்லை என்று நீங்கள் ஒரு நிலை எடுத்தபோது உங்களுக்கு கொம்பு சீவிவிட்ட அனேகம் பேர் பேசாமல் தங்கள் பதிவுகளில் மட்டுறுத்தலை நிறைவேற்றிக் கொண்டார்கள் என்பதையும் பார்த்தீர்கள்தானே. அவர்களில் பலர் தாங்கள் மட்டுறுத்தலை எதிர்த்தது தவறான முடிவு என்று வேறு கூறி விட்டார்கள்.

    இப்பதிவை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை நான் என் தரப்பிலிருந்து போலி டோண்டுவைப் பற்றி இட்டப் பதிவில் பின்னூட்டமிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  28. சுந்தர் அவர்களது பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது: http://agaramuthala.blogspot.com/2006/03/blog-post_31.html

    "தமிழ் வலைப்பதிவுகளில் உங்களைக் கதாநாயகனாக ஆக்கிய அந்தப் போலி காமெடியன் or வில்லனுக்கு நீங்கள் கட்டாயம் நன்றி சொல்லியே ஆக வேண்டும். :)."

    எல்லாம் கலந்த உணர்வாக இருக்கிறது. உதாரணத்துக்கு கூகளில் "டோண்டு" என்று தமிழில் தட்டச்சு செய்து சர்ச் பித்தானை அமுக்கினால் சுமார் 14000 ஹிட்ஸ்கள் வருகின்றன. நான் பார்த்தவரை கிட்டத்தட்ட அத்தனையிலும் டோண்டு அல்லது போலி டோண்டு வருகின்றனர்.

    ஆனால் அதற்காக நன்றி? ஒன்று மட்டும் கண்டிப்பாகக் கூற வேண்டும். இது போலி டோண்டுவின் ஒரிஜினல் நோக்கத்துக்கு மாறானது என்பதுதான் அது.

    இப்பதிவையும் உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை நான் என் தரப்பிலிருந்து போலி டோண்டுவைப் பற்றி இட்டப் பதிவில் பின்னூட்டமிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  29. விடாது கறுப்பு அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://karuppupaiyan.blogspot.com/2006/03/blog-post_29.html

    அதர் ஆப்ஷனை உபயோகித்து யாரோ வேலையற்றவர் என் ப்ளாக்கர் எண்ணில் பின்னூட்டமிட்டிருக்கின்றார். அதையும் நீங்கள் மெனக்கெட்டு போடிருக்கிறீர்கள். குமரன் அவர்கள் வேறு மெனக்கெட்டு அதற்கு எதிர்வினை கொடுத்திருக்கிறார்.

    எத்தனை முறை கூறுவது நான் ப்ளாக்கர் பின்னூட்டம்தான் இடுவேன் என்று. அதில் போட்டோ வரும், என் ப்ளாக்கர் எண்ணும் எலிக்குட்டி சோதனையில் வரும் என்று.

    என் பெயரில் வந்துள்ள போலி பின்னூட்டங்களை அழிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இப்படி தற்கால விஷயங்களிலேயே கோட்டை விடும் நீங்களோ குமரன் அவர்களோ என்னத்த ஐயன் வள்ளுவன் சாதியைக் கண்டுபிடிப்பது? வேண்டாத வேலைத்தானே இது?

    இந்தப் பின்னூட்டம் உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை போலி டோண்டு பற்றி நான் இட்டப் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  30. விடாது கறுப்பு அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://karuppupaiyan.blogspot.com/2006/03/blog-post_29.html

    "ஒவ்வொரு முறையும் வரும் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் புரோபைல் சென்று இது இவர்தானா என்று நிரூபணம் செய்தபின்னர் அனுமதிப்பது என்பது வேலையத்த அம்பட்டன் ஆட்டைப்பிடித்து சிரைப்பதற்கு சமமானது."

    தவறு வரும் என்று தெரியும் இடங்களில் அது வராமல் தடுப்பதில் எப்படி வேலையில்லாத நபர் ஒருவர் வருவார்? ஆபாசப் பின்னூட்டங்கள் கூட ஒரு விதத்தில் பரவாயில்லை, அவற்றை ஆபாசம் என்று தெரிந்து ஒதுக்க முடியும். ஆனால் ஆபாசம் இல்லாமலும் மற்றவர் பெயரில் விஷமத்தனமாகவும் எழுதி, அதை சம்பந்தப்பட்டவர் யாருமே கண்டு கொள்ளாமல் போவதில் வரும் பிரச்சினைகள் இப்போது தெரியாது, வரும்போதுதான் உணர முடியும்.

    போலி டோண்டுவின் இப்போதைய நிலையில் என் பெயரில் அவன் இடும் பின்னூட்டங்கள் என் போட்டோவுடன் வராது, என்னுடையவையில் அது வரும்.

    "நீங்கள் மட்டும் என்ன ஸ்பெஷல்?" என்று கேட்பவர்களுக்கு குமுதம் ரிப்போர்டரில் வந்த கட்டுரை பதில் சொல்லும். இது பற்றி நான் குமுதம் ரிப்போர்டருக்கு நன்றி தெரிவித்துப் போட்டப் பதிவு இதோ. பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/blog-post_08.html

    அது இருக்கட்டும். இப்பதிவின் விஷயத்துக்கு இப்போது வருகிறேன். நான் படித்தவரை, என் வகுப்பாசிரியர்கள் (பாஷ்யம் ஐயங்கார், ரங்கா ராவ், ராமஸ்வாமி ஐயர், துரைசாமி ஐயங்கார், ஜயராம ஐயங்கார், பத்மனாப ஐயங்கார், நரசிம்மாச்சாரி ஆகியோர்) மாணவர்களிடம் கூறிய வரையில் அய்யன் வள்ளுவன் நிச்சயமாக பார்ப்பனராக இருந்திருக்க முடியாது. அவர் நெசவுத் தொழில் செய்தவர் என்றுதான் கேள்விப்படுகிறேன். பாண்டிய மன்னனிடம் அமைச்சராகச் சிறப்பாகச் செயல்பட்டதாகவும் அறிகிறேன்.

    இப்போது அவரை பார்ப்பனர் என்று சொந்தம் கொண்டாடுவது பைத்தியக்காரத்தனம். யார் அதை செய்தாலும் கண்டிக்க வேண்டியதே.

    இந்தப் பின்னூட்டம் உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை போலி டோண்டு பற்றி நான் இட்டப் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  31. வேதா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://ushisara.blogspot.com/2006/04/blog-post.html

    வேதா அவர்களே, நீங்கள் கீதா சாம்பசிவம் அவர்கள் பதிவில் இவ்வாறு எழுதியுள்ளீர்கள்.

    "hi first time here.hopped from ambi's.
    neenga ezhuthina matter naanum kumudham reporterla padichen. enaku payangara athirchi. ithula kodumai ennana naan antha poli donduvin commentsa vera oru blogla paathutu atha nejamave avar thaan ezhuthinarnu nethu varaikum nenachen. its highly atrocious. i hope that they find out the culprit soon."

    இது, இதைத்தான் போலி டோண்டு என்ற இழிபிறவி எதிர்பார்த்து வேலை செய்கிறது. ஆகவே உண்மையான டோண்டுதான் பின்னூட்டம் இட்டான் என்பதை அறிய மூன்று சோதனைகள் கொடுத்தேன். அவற்றில் முதல் இரண்டு சோதனைகள் ப்ளாக்கர் பின்னூட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். பிளாக்கர் அல்லாத பின்னூட்டங்களுக்கு மூன்றாவது சோதனை.

    1. போட்டோக்களை எனேபிள் செய்துள்ள உங்கள் பதிவில் கண்டிப்பாக என் போட்டோ வரும்.
    2. dondu(#4800161) என்ற என் டிஸ்ப்ளே பெயரின் மீது எலிக்குட்டியை வைத்துப் பார்த்தால் என்னுடைய சரியான பிளாக்கர் எண்ணான 4800161 கீழே தெரியவேண்டும்.
    சோதனை 1 மற்றும் 2 ஒன்றாக வெற்றி பெற்றால்தான் அது உண்மையான டோண்டுவின் பின்னூட்டம்.
    3. பிளாக்கர் இல்லாத பதிவுகளில் மேலே குறிப்பிட்ட சோதனைகள் பலிக்காததால் மற்றப் பதிவுகளில் நான் இடும் என்னுடைய பின்னூட்டங்களை என்னுடையத் தனிப்பதிவு ஒன்றில் வெளியிடுவேன். உதாரணத்துக்கு இந்தப் பின்னூட்டத்தின் நகலை போலி டோண்டு பற்றி நான் இட்ட இந்தப் பதிவில் பார்க்கவும். http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

    இம்மூன்று சோதனைகளையும் செய்து பார்த்து விட்டே இப்பின்னூட்டத்தையும் மட்டுறுத்தவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  32. கால்கரி சிவா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://sivacalgary.blogspot.com/2006/04/blog-post_15.html

    போலி டோண்டு பற்றி ஒரு வார்த்தை. அவன் என்னவோ தான் ஜாதி வெறி இல்லாது இருப்பதாக ஃபிலிம் காட்டுகிறான். அவனுடைய ஒரு பொய்யை இங்கு வெளிப்படுத்தியே ஆக வேண்டும்.

    யாரையாவது ரொம்ப மோசமாகத் திட்ட வேண்டுமானால் தலித் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு அந்தப் பயலே, அந்தக் கம்னாட்டி என்றுதான் எழுதுகிறான். அவ்வாறு திட்டப்பட்டவர்களில் டி.பி.ஆர். ஜோசஃப், சோம்பேறி பையன், காசி, இலவசக் கொத்தனார் ஆகியோர் அடங்குவர். பார்க்க: http://donducomments.blogspot.com/
    http://jaathiveriyan.blogspot.com/

    உண்மை கூறப்போனால் இதற்காகவே அவனை வன்கொடுமை சட்டத்தில் உள்ளே போட்டு முட்டிக்கு முட்டி தட்டவேண்டும். அவன் இருக்கும் மலேஷிய போலீஸிடம் அதற்கு முன்னால் ரோத்தன் அடியும் கிடைக்க வேண்டும் அவனுக்கு.

    இது தெரிந்தோ தெரியாமலோ பலர் அவன் கூறுவதிலும் உண்மை இருக்கலாமோ என்ற ரேஞ்சில் யோசிக்கின்றனர். அவர்களுக்காகவே இதை இங்கு வெளியிடுகிறேன். அப்படியாவது இழிபிறவியான போலி டோண்டுவை மற்றவர்கள் முழுமையாக அறியட்டும்.

    இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்டும் வகையில் இதை போலி டோண்டு பற்றி நான் எழுதிய பதிவிலும் பின்னூட்டமாக நகலிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  33. பங்களூர் ரவி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://tvpravi.blogspot.com/2006/04/blog-post_17.html
    மேலே என்ன கூற வேண்டுமோ அதை கூறிக் கொண்டு போக வேண்டியதுதானே. பின்புலனை பற்றி அதிகம் அறிய இங்கு செல்லவும்

    http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

    உண்மையான டோண்டு ராகவனாகிய நான் ப்ளாக்கர் பின்னூட்டங்கள்தான் இடுவேன். அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை கனவிலும் உபயோகிக்க மாட்டேன். ஆகவே எலிக்குட்டி சோதனையில் (mouseover) சரியான ப்ளாக்கர் எண் 4800161 வர வேண்டும், மற்றும் போட்டோ எனேபிள் செய்யப்பட்டிருந்தால் என் போட்டோவும் வரவேண்டும். இரண்டு சோதனைகளும் ஒரே சமயத்தில் வெற்றி பெற வேண்டும்.

    இப்பின்னூட்டமும் என்னுடைய இப்பதிவில் பின்னூட்டமாக இடப்படும். அங்கு வருகிறதா என்பதைப் பார்த்தே இப்பின்னூட்டத்தை ஏற்றுக் கொள்ளவும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  34. விடாது கருப்பு என்பவர் பேட்டி எல்லாம் எடுத்து போட்டு இருக்கார். அது என்னான்னு கொஞ்சம் பாத்து அத பத்தி எழுதுங்களேன்...

    ReplyDelete
  35. ராமசந்திரன் உஷா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://nunippul.blogspot.com/2006/04/blog-post_114612027471279721.html

    அந்த இழிபிறவியின் ரசிகர்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லோருமே அவனேதான். அம்மாதிரி 'பேட்டி' கண்டவரைப் பற்றியும் எனக்கு சந்தேகங்கள் உண்டு.

    ஜயராமன் அவர்கள் சொன்னது போல பிளாக்கர் பின்னூட்டங்கள் மட்டும் அனுமதிக்கவும்.

    என்னுடைய போட்டோ மற்றும் பிளாக்கர் எண் சோதனைகள் இரண்டுமே வெற்றி பெற்றால் மட்டும் என் பெயரின் கீழ் வரும் பின்னூட்டங்களை மட்டுறுத்தி அனுமதிக்கவும்.

    இப்பின்னூட்டத்தின் நகலை போலி டோண்டு பற்றிய என் பதிவில் பின்னூட்டமாக இடுவேன், பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  36. கேவிஆர் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://kvraja.blogspot.com/2006/05/kvr.html

    என்ன திடீரென்று உங்கள் மேல் பாசம் கொண்டான்? நான் ஜாதிவெறியன் என்று கூறியவன் உங்களை ஒப்புக்குக் கூட அவ்வாறு குற்றம் சாட்ட முடியாதே? இது என்ன கொடுமை?

    என் விஷயத்திலும் முதலில் அவன் போலி என்றெல்லாம் போட்டுக் கொள்ளவில்லை. மாறாக dondu(#4800161) என்றே போட்டுக் கொண்டு என் ஃபோட்டோவும் சேர்த்துக் கொண்டான். அதை எதிர்த்து நான் எடுத்த நடவடிக்கைகள் இப்போது க்ளாஸிக்காகப் போய்விட்டன.

    இந்த இழிபிறவியை பிடித்து உள்ளே தள்ளி சிறை சாவியை கடலில் எரிந்தால்தான் நிம்மதி.

    இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காண்பிக்க அதன் நகலை போலி டோண்டு பற்றிய என் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  37. நியோ அவர்கள் பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://neo-lemurian.blogspot.com/2006/05/blog-post_25.html
    "முதலில் வசதி படைத்த "முற்பட்ட வகுப்பினர்" இந்த "க்ரீமி லேயர்" திட்டத்தின் மூலம் "வடிகட்டப்பட்டு" ஏழைகளான "முற்பட்ட வகுப்பினருக்கு" கல்வி நிறுவனங்களில் இடம் வழங்கப்பட்டால் என்ன - என்று இந்தக் கட்டுரை கேள்வி கேட்கிறது! நியாயமான கேள்வி!"

    என்ன அபத்தமான கேள்வி! க்ரீமி லேயரை வடிக்கட்டுவதை எதன் சம்பந்தமாகக் கூறுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சலுகை இட ஒதுக்கீட்டிலிருந்து ஐயா. ஆனால் முற்பட்ட வகுப்பினருக்கு, -க்ரீமி லேயரோ இல்லையோ- ஒரு ஒதுக்கீடும் கிடையாது என்பதுதானே உண்மை? இதில் வடிக்கட்டல் எங்கிருந்து வந்தது?

    ஆனால் பிற்படுத்தப்பட்டவர்கள் க்ரீமி லேயர் விஷயம் அப்படியில்லையே. இட ஒதுக்கீட்டில் பெரிய பதவிக்கு வருபவர், அவர் பசங்கள் படித்து விட்டு காலேஜுக்கு வரும் தருணத்தில் நன்றாக முன்னேறியிருப்பார்தானே. அவருடைய பசங்களுக்கு நல்ல தரமான கல்வியை கொடுத்திருப்பார்தானே. அப்பசங்களும் ரிசர்வேஷனில் இடம் பெறுவது எந்த நியாயம்? அதைத்தான் சுப்ரீம் கோர்ட் கூறுகிறது. மற்றப்படி அப்பசங்கள் படிக்கக் கூடாது என்று கூறவில்லை. எல்லோரையும் போல ஓப்பன் லிஸ்டில் வரச் சொல்கிறது. அவ்வளவே.

    தவறான உபயோகத்துக்கு ஆளாகக் கூடிய அதர் ஆப்ஷனை நீங்கள் வைத்துள்ளீர்கள். ஆகவே இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டு ராகவன் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை நான் என்னுடைய போலி டோண்டு பற்றிய பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  38. :)
    Just ignore. Dont ever try to response to such a guy mr.Dondu.. you actually grown him to this extent ..

    ReplyDelete