நிரந்தர பக்கங்கள்

3/20/2006

புதிர்கள் பத்து - 3

வழக்கம்போலவே சில நாட்களுக்குள் விடை கிடைக்காத வினாக்கள் கேரி ஓவர் செய்யப்பட்டு அடுத்த கேள்விகள் பட்டியலில் சேர்க்கப்படும். முதல் 5 கேள்விகள் புதிர்கள் பத்து - 2லிருந்து கேரி ஓவர் ஆனவை.

1. எம்.ஜி. ஆர். அவர்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் சிவாஜி அவர்களுக்குத் தெரியும். என்ன அது? இதில் பல விடைகள் வந்து குழப்பம் ஆனதால் இங்கொரு க்ளூ. இருவருக்கும் ஒரே விஷயம்தான் நடந்தது.

2. இமயமலை ஏறுவதற்காக அந்த மலையடிவாரத்துக்கு சென்றவன் காலை உணவுக்கு ஆம்லெட் எடுத்துக் கொண்டதால் மரணமடைந்தான். ஏன்? ஆம்லட்டை அவன் முகாமிலிருந்தே கொண்டு வந்ததால் அவன் அடுப்பு எதையும் மூட்டவில்லை என்பது நான் கொடுக்கும் ஒரு க்ளூ.

3. பாலைவனத்தில் வழி தவறிய ஒருவன் ஒரு சப்பாத்திக் கள்ளி அருகே வருகிறான். அதில் ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி குத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை எடுத்துப் படித்த அவன் தன் துப்பாக்கியால் தன்னையே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான்.

4. ஒரு பார்வையற்றவன் ஓர் ஆஸ்பத்திரி ரிசப்ஷனில் யாருக்காகவோ காத்திருக்கிறான். அவன் பக்கத்து நாற்காலியில் அவன் முன்பின் அறியாத இன்னொருவன் கையில் கூடையுடன் அமர்கிறான். அவனிடம் பேச்சுக் கொடுக்காமலேயே அவன் கூடையில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து, அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்கிறான். என்ன நடக்கிறது இங்கே?

5. திவான் பகதூர் ஆவுடையப்பர் ஒரு காரியம் செய்தார். அதிலிருந்து அவர் மேல் பெருமதிப்பு வைத்திருந்த சென்னை ராஜதானி கவர்னர் அவருடன் பேசுவதையே நிறுத்தி விட்டார். ஏன்? (1930-ல் இந்த நிகழ்ச்சி நடந்தது, ஆனால் 2006-லும் இது நடக்கக் கூடும்)

6. For a change, two puzzles in English. A plane has three wheels and flies. What has got four wheels and flies?

7. A man arrives in a town on Friday. He leaves town after two days again on Friday. How come?

8. 29 வயதே ஆன கிருஷ்ணமூர்த்தி எப்போதும் விமானத்தில் முதல் வகுப்பில்தான் பயணம் செய்வார். அவர் பேசுவதை எல்லா முக்கியப் பிரமுகர்களும் காதுகொடுத்து கேட்பார்கள். பயணம் முடிந்து அவர் தங்குவது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்தான். ஒரு வணிகத்தையும் எங்கும் முடிக்காமல் அவர் மறுபடி பயணம் செய்வார். என்ன நடக்கிறது இங்கே. ஆனாலும் யாரிடமிருந்தும் அவர் எதுவும் தானமாகப் பெறுவதில்லை. தேவையுமில்லை. அவர் ஜோஸ்யரும் இல்லை, கன்ஸல்டண்டும் இல்லை.

9. நீச்சல் உடையில் 3 பெண்கள் நிற்கின்றனர். அதில் ஒருத்திக்கு சந்தோஷம் மற்ற இருவருக்கும் துக்கம். ஆனால் சந்தோஷமானவள் அழுகிறாள், மற்ற இருவரும் புன்னகை புரிகின்றனர். என்ன நடக்கிறது இங்கே?

10. உலகில் 1000 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொருவருடைய இடது கையிலும் கட்டை விரலைச் சேர்த்து ஐந்து விரல்கள். எல்லாருடைய இடது கை விரல்களையும் ஒன்றாகப் பெருக்கினால் வரும் எண்ணை எழுத முடியுமா? என்ன எண் வரும்? (கேள்வி முழுமையாக்கப்பட்டது, ஏனெனில் நான் கேட்டது அரைகுறை விடையை வரவழைக்கக் கூடியது.)

அன்புடன்,
டோண்டு ராகவன்

41 comments:

  1. 9. அழகிப் போட்டி

    ReplyDelete
  2. லதா அவர்களே, அழகிப் போட்டி சரியான விடை.

    பத்தாவது கேள்விக்கான நீங்கள் கொடுத்த இப்போதைய விடை தவறு. அவசரப்பட்டால் வாத்தியார் சுழித்துவிடுவார். இக்கேள்விக்கு விடை கூறினால் மட்டும் போதாது, அதை நிலை நிறுத்தவும் வேண்டும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. 7. Friday is the name of the vehicle he travelled

    ReplyDelete
  4. லதா அவர்களே 7-ஆம் கேள்விக்காக நான் யோசித்து வைத்த பதில் அவன் வந்த குதிரையின் பெயர் வெள்ளிக்கிழமை என்பதே. இருப்பினும் நீங்கள் கூறியதும் சரியான விடை என்று ஏற்றுக் கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. a bin lorry?

    Right answer, congrats. I expected this question to be answered the last.

    Regards,
    Dondu N.Raghavan

    ReplyDelete
  6. அவர் விமானத்தின் pilot அல்லது
    crew member

    ReplyDelete
  7. 8. கிருஷ்ணமூர்த்தி வானூர்தி ஒட்டும் வலவன்.

    - சிமுலேஷன்

    ReplyDelete
  8. விமானத்தில் முதல் வகுப்புக்கான ஸ்டூவர்ட் அவர். பைலட் என்பதை விடுத்துப் பார்த்தால் நீங்கள் சரியான விடை கொடுத்தீர்கள் ஜயஸ்ரீ அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  9. சிமுலேஷன் அவர்களே, பைலட்டின் கேபின் விமானத்தில் முதல் வகுப்பாகக் கருதப்படாது. எப்படியும் சரியான விடையை ஜயஸ்ரீ அவர்கள் ஒரு நிமிட வித்தியாசத்தில் முந்திக் கொண்டு கூறிவிட்டார்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. 1. எம்.ஜி.ஆர் இன் நினைவு நாள் (இறந்த தினம்)

    ReplyDelete
  11. 2. அவன் அடுப்பு மூட்டாத்தால் குளிரில் விறைத்துச் செத்துவிட்டான்.

    அல்லது

    நெருப்பு மூட்டாததால் வன விலங்கிடம் மாட்டி இறக்கின்றான்.

    - சிமுலேஷன்

    ReplyDelete
  12. ஜயஸ்ரீ அவர்களே, முதல் கேள்வி பல முறை கேரி ஓவர் ஆகிவிட்டது. இது வரை நீங்கள் கொடுத்த விடைதான் சரியானது என்று கருத தகுதி வாய்ந்ததாகத் தோன்ருகிறது. என்ன, விடையின் வாசகம் சற்றே மாறுபடும்.

    "எம்.ஜி. ஆர் இறந்தது சிவாஜிக்கு தெரியும் ஆனால் சிவாஜி இறந்தது எம்.ஜி.ஆருக்குத் தெரியாது."

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. என்னுடைய அனுமானம் என்னவெனில்,
    எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்கும் ஏதோ ஒரு விருது வழங்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு முதலிலும் சிவாஜி அவர்களுக்கு எம்.ஜி.ஆர் இறந்த பின்பும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த விருதின் பெயர் தெரியவில்லை. தெரிந்தவர்கள் விடையை விடுவியுங்கள்.
    தேடிப் பார்த்து விட்டேன் பாரத ரத்னா இல்லை.

    ReplyDelete
  14. 2. அவன் அடுப்பு மூட்டாத்தால் குளிரில் விறைத்துச் செத்துவிட்டான்.

    அல்லது

    நெருப்பு மூட்டாததால் வன விலங்கிடம் மாட்டி இறக்கின்றான்.
    தவறான விடை சிமுலேஷன் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  15. 6. helicopter

    தவறான விடை கால்கரி சிவா அவர்களே. குப்பை லாரி என்ற சரியான விடையை ஜயஸ்ரீ ஏற்கனவே கூறி விட்டார்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  16. தவறான விடை மகேஸ் அவர்களே. சரியான விடை ஏற்கனவே ஜயஸ்ரீ கூறிவிட்டார். விடை போங்குத்தனமானது என்று நான் முந்தையப் பதிவில் க்ளூ கூடக் க்லொடுத்திருந்தேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  17. கேள்விகள் 2, 3, 4, 5 மற்றும் 10 மட்டுமே விடையளிக்க பாக்கி உள்ளன.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  18. 2.ஆம்லெட்டில் யாராவது விஷம் கலந்து இருக்கலாம்

    ReplyDelete
  19. 2.ஆம்லெட்டில் யாராவது விஷம் கலந்து இருக்கலாம்

    தவறான விடை மகேஸ் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  20. 5) Avar poondu saapida aarampithar. Allathu vengayam..

    ReplyDelete
  21. 1) oruvaruku dhoora parvai, matroruvaruku kitta parvai?

    ReplyDelete
  22. 4) Guess 1: Ethenum radio veithu iruka vendum athu sathamaga padi kondum irunthu iruka vendum. Parvai atravanuku kadhum kekkatha padi okkatkarnthu kondiruka mudiyamal kilambi irukalam.

    Guess 2: Mannenei pondra ethenum ennai veithu irukalam. Than thatti vittal athu kotti athanal nadaka mudiyamal pogalam endru ezhunthu poirukalam.

    ReplyDelete
  23. 10. விடை : முடியும்.

    ( நீங்கள் கேட்டது முடியுமா என்றுதானே? எண் என்ன என்று இல்லையே )

    ReplyDelete
  24. 10) 5*4*3*2*1
    தவறான விடை மகேஸ் அவர்களே.

    #10. Yes you can
    தவறான விடை வேலையில்லாப் பட்டம் அவர்களே. என்ன எண் என்பதையும் கூற வேண்டும். கேள்வியை திருத்தி விடுகிறேன்.

    #5. Dhiwan Bahadur died in 1930, and hence the Governor had to stop talking to him :)
    சரியான விடை வேலையில்லாப் பட்டம் அவர்களே.

    முத்துக்குமாரன் புராணம் அவர்களே, நான்காம் மற்றும் ஐந்தாம் கேள்விகளுக்கான பதில்கள் தவறு.

    ReplyDelete
  25. "4.The person with the bag had dried fish(karuvadu) in his basket.The blind fellow found this out by smell and moved out of the place."

    Not correct. The answer is very elegant. It will be nice to work it out. Hence I will give one clue. Remember, it is a hospital and you are not likely to bring karuvaadu nor a loud blaring transistor. The man sitting beside the blind man brought someting in a basket, which other persons waiting did not object to. Only the blind man objected to it.

    Regards,
    Dondu N.Ragahvan

    ReplyDelete
  26. "I guess this too is wrong.:-D"

    You are correct - only as far as your guess about the answer being wrong is concerned. He he he.

    If the baby is bawling, others too will object. One more clue. Whatever the neighbor brought in his basket, was not visible or audible to anyone else in the waiting hall.

    Regards,
    Dondu N.Raghavan

    ReplyDelete
  27. "Blind people do have good hearing sense."

    But not to the extent of sounds beyond the humanly audible frequencies range!

    Regards,
    N.Raghavan

    ReplyDelete
  28. "five to the power of thousand crores ?"

    No, make a little lateral thinking effort. Answer and the reasoning are quite simple.

    Regards,
    Dondu N.Raghavan

    ReplyDelete
  29. "Blind man nadakkiraan - righta sir"
    ஹா ஹா ஹா ஹா. நல்ல அறுவை ஜோக், ஆனால் தவறான விடை.

    Answer for Question 5:- something to do with budget?
    தவறான விடை. சரியான விடை ஏற்கனவே வந்து விட்டது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  30. Dear வாலில்லாப்பட்டம், sorry for wrongly pronouncing the name. The answer for the second question involving the bear is wrong.

    The answer to question 10 is wrong. The answer is very elegant and requires lateral thinking.

    The answer to the question 4 is a very interesting construct and I will grant you credit for it provided no one else gives the correct answer within 24 hours from now. Then I will give the correct answer but you will be given credit.

    Regards,
    Dondu N.Raghavan

    ReplyDelete
  31. u did not validate my answer for question 1.

    ReplyDelete
  32. "oruvaruku dhoora parvai, matroruvaruku kitta parvai?"

    Wrong answer. Correct answer has already been given, namely Sivaji knows that MGR is dead, on hte other hand, MGR does not know that Sivaji is dead.

    Questions yet to be solved are 2, 3, 4 and 10. Good luck.

    Regards,
    N.Raghavan

    ReplyDelete
  33. 2. He chokes on the omlette (and he could not drink any water as it is frozen).
    3. The piece of paper was a marker left by the man himself. He was going around in circles, and when he came back to the same place, he shot hismself out of desperation.

    ReplyDelete
  34. Dear cat on the wall, your answer to question 3 is correct. And I thought that this question would be among the earliest ones to be answered!

    Your answer to qestion 2 is very elegant and though not coinciding with the answer i had in mind, I will grant you the point for this.

    Regards,
    Dondu N.Raghavan

    ReplyDelete
  35. இப்போது பார்வையற்றவர் பற்றியக் கேள்விக்கான விடை தருகிறேன், ஏனெனில் நான் கொடுத்த கெடு முடிந்து விட்டது. பாயிண்ட் வாலில்லாப் பட்டம் அவர்களுக்கே. இருப்பினும் நான் நினைத்த விடை இதோ.

    பார்வையற்றவருக்கு பூனை ஒவ்வாமை உண்டு. அது அருகில் வரும்போதே அவர் உடலில் விரும்பத்தகாத அரிப்பு ஏற்படும். பக்கத்து நாற்காலியில் அமர்ந்தவரின் கூடையில் பூனை இருந்தது. பார்வையற்றவருக்கு அரிப்பு வந்தது, ஆகவே அவர் இடத்தை விட்டு அகன்றார்.

    இப்போது கேள்வி 2ஐப் பார்ப்போம். மதில் மேல் பூனைக்கு நான் பாயிண்ட் கொடுத்தாலும், நான் யோசித்து வைத்த விடையை இப்போது கூறுகிறேன். ஆம்லட்டில் மிளகுத் தூள் போட அது அவன் நாசியில் நுழைந்து அடுக்குத் தும்மல் போட, அந்த அதிர்ச்சியில் பனிச்சரிவு ஏற்பட, சரி சரி, அடிக்காதீங்கப்பா.

    கேள்வி பத்துக்கான க்ளூவாக விடையைத் தருகிறேன் அது எப்படி என்பதைக் கூறினால் போதும். விடை 0.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  36. The reasoning for the answer to the tenth question is quite right.

    This copletes the answers to the ten puzzles.

    Regards,
    Dondu N.Raghavan

    ReplyDelete