நிரந்தர பக்கங்கள்

3/07/2006

கொள்கை வேட்டி என்றால் அண்ணாவுக்கும் வேட்டியில்லை

வைக்கோ அவர்கள் பதவி என்னும் துண்டுக்காக கொள்கை வேட்டியை இழந்தார் என சிலர் குரல் கொடுத்துள்ளனர். அவர் மட்டுமா? பெற்றால் திராவிடநாடு, இல்லையெனில் சுடுகாடு என்று பொருள்பட கோஷம் இட்டவர் அண்ணா அவர்கள். யாருமே திராவிட நாடு கேட்கவில்லை என்றாலும் தான் மட்டும் காஞ்சியில் ஒரு வீட்டின் திண்ணையில் இருந்தவாறு கேட்டுக் கொண்டிருக்க போவதாக முழங்கியவர் அவர். ஆனால் என்ன ஆயிற்று? தனி நாடு கேட்பது அரசியல் சட்டத்துக்கு விரோதம் அவ்வாறு கேட்கும் கட்சியின் அங்கீகாரம் பறிக்கப்படும் என்று ஒரு அறிவிப்பு வந்த உடனேயே அவர் அவசர அவசரமாக அக்கொள்கையை தியாகம் செய்தார், பதவி என்னும் மேல் துண்டுக்காகாக. அவரது அருமைத் தம்பிமார்கள் மட்டும் வேறு எப்படி நடக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?

இப்போது வைக்கோ என்ன செய்து விட்டார் என்று இவ்வளவு எதிர்வினைகள்? அவரை ஒரு பெரிய பீடத்தில் ஏன் நிறுத்த வேண்டும்? அவரும் ஒரு அரசியல்வாதியே. தன் கட்சியின் நலனுக்காக அவர் செய்து கொள்ள வேண்டிய சமரசத்தை அவரே தீர்மானித்துக் கொள்வார். அவர் நெற்றியில் என்ன தியாகி என்று எழுதியா ஒட்டியிருக்கிறது? அவருடைய உழைப்பு மட்டும் வேண்டும் ஆனால் அவர் கட்சிக்கு மிகக் குறைவாக அதுவும் அடாசு தொகுதிகளைத்தான் தருவோம் என சுயநலத்தை மனதில் கொண்டு கருணாநிதி அவர்கள் செயல்படும்போது வைக்கோ இவ்வாறு செய்ததுதான் சரி. அதுவும் கடைசி வரை எல்லோரையும் சஸ்பென்சில் வைத்து கடுக்காய் கொடுத்ததும் சரியே. எந்த அறிவிப்பை எப்போது வெளியிட வேண்டும் என்று அவருக்கு தெரியாதா என்ன?

இப்போது தமிழக வாக்காளர்களுக்கு முன்னால் இரு சாத்தியக்கூறுகள் உள்ளன. திமுக அல்லது அஇஅதிமுக. நம் முன்னால் இருக்கும் ஒரு பெரிய பிரச்சினை தீவிரவாதம். அதை உறுதியாக எதிர்ப்பது ஜெ மட்டுமே. கருணாநிதி அவர்கள் அல்ல. அரசு ஊழியர்கள் ப்ளேக்மெயில் செய்ய இயலாத வண்ணம் நிலைமையை சமாளித்தவர் ஜெ அவர்களே. மழை நீர் சேமிப்புத் திட்டத்தை இரும்புக்கரம் கொண்டு செயலாக்கியவரும் அவரே. கருணாநிதி அவர்களால் அவ்வாறு நிச்சயம் செயல்பட்டிருக்க முடியாது. சொதப்பியிருப்பார்.

மேலும் இப்போது சுமங்கலி கேபிள் விஷன் செய்யும் அடாவடிகள் திமுக ஜெயித்தால் அதிகமாவதற்கு எல்லா வாய்ப்புகளும் உண்டு. ஜெயும் பல தவறுகள் செய்துள்ளார் என்பதையும் மறுக்க இயலாது. ஆனாலும் மத்தியில் இருக்கும் காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் மாநில அளவில் செக் வைக்க தற்போது அவரால்தான் முடியும்.

சோ அவர்கள் துக்ளக் 36-வது ஆண்டு விழா கூட்டத்தில் இது சம்பந்தமாக கூறியதை அப்படியே வழிமொழிகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

39 comments:

  1. Antha Cho solran, Intha Dondu Vazhi Moliyaran...

    ReplyDelete
  2. அட, அட, அட இந்த கிருஷ்ணா அவர்கள் எத்தனை மரியாதை தெரிந்த மனிதராக தென்படுகிறார்!!!

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. ஹீம்... கம்யூனிஸ்ட், மதிமுக, பாமக, விடுதலைச்சிறுத்தைகள்னு நாம ஓட்டு போட்டுடோம்னா.. இந்த தேர்தல் கூட்டணியிலிருந்து அவர்கள் விலகி, ஒரு வித்தியாசமான தமிழகத்துக்கு தேவையான மாற்றத்தை கொண்டுவருவாங்கனு தோணுது...

    ReplyDelete
  4. பா.ம.க.வை தவிர்த்து நீங்கள் கூறுவதுடன் ஒத்து, போகிறேன். ஆனால் அது வெறும் கனவே. குறைந்த பட்சம் இந்த தேர்தலில் திமுகவா அல்லது ஐஅதிமுகவா என்பதுதான் பேச்சே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. வீட்டுக்கு ரேசன் பொருட்களை கொண்டுவருவேன் என்று குழந்தைதனமாக சொல்லும் விஜயகாந்தையே சிலர் ஆதரிக்கும் வேளையில், பாமகவிற்கு ஆட்சி பொறுப்பை கொடுத்துப்பார்த்தால் என்ன ?! தெரிந்த பிசாசுகளைவிட , தெரியாத ஒன்று தேவலாம் அல்லவா ?

    ReplyDelete
  6. Sir, that was a cinematic and jovial and oft repeated comment. If it hurt u, please remove it. Sorry.

    ReplyDelete
  7. விஜயகாந்த் அவர்களை ஆதரிப்பதா? நல்ல ஜோக். மேலும் பழமொழியைத் தவறாகக் கூறுகிறீர்கள் யாத்திரீகன் அவர்களே. திரியாத தேவதையைக் காட்டிலும் தெரிந்த பிசாசே மேல் என்பதுதான் சரியான வெர்ஷன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. பழையன கழிதலும் புதியன புகுதலும் மாற்றமே. :-) காலம் மாற பழமொழியும் அதுக்கு தக்கபடி மாறனும்... ;-)

    ReplyDelete
  9. நீங்கள்தான் என்னை மன்னிக்க வேண்டும் கிருஷ்ணா அவர்களே. ஆண்டவன் சொல்றான் அருணாசல்ம் செய்றான் என்பதை சற்றே மாற்றிக் கூறியுள்ளீர்கள் என்பது எனக்கு இப்போதுதான் உரைக்கிறது. என்ன செய்வது இணையத்தில் சோ அவர்களைப் பற்றி பல அவமரியாதையான பின்னூட்டங்கள் வந்த பின்னணியில் நான் உங்கள் பின்னூட்டத்தை சரியானபடி மதிப்பிடாமல் போனது எனது தவறே.

    அப்பின்னூட்டம் அப்படியே இருக்கட்டும், எனக்கு இம்மாதிரியெல்லாம் அவசரப்படக்கூடாது என்ற ஒரு பாடமாக. மறுபடியும் மன்னிப்பைக் கோருகிறேன்.

    அன்புடன்,.
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. "பழையன கழிதலும் புதியன புகுதலும் மாற்றமே"
    மேலும் பழமொழியெல்லாம் அனுபவிக்கணும் அர்த்தம் எல்லாம் கேக்கக்கூடாது என்று பம்மல் உவ்வே சம்பந்தம் கூறியது போல, அப்படித்தானே?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  11. Periyavanga Periyavanga than sir. Udanadiya ippadi oru manippu pathila. Sir, I bow before u. I learnt an important lesson from u. Thank u.

    ReplyDelete
  12. நன்றி கிருஷ்ணா அவர்களே. நானும்தான் அவசரப்படக்கூடாது என்னும் பாடம் கற்றுக் கொண்டேன் உங்களிடமிருந்து. கணக்கு சரியாகப் போயிற்று.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. இப்போதைக்கு நான் முன்னுரிமை கொடுப்பது தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளே. அது ஜெயிடம்தான் நடக்கும். மேலும் இப்போதே மத்தியில் அமைச்சரவையில் இருப்பதால் திமுக குடும்பத்தினர் போடும் ஆட்டங்கள் சகிக்கவில்லை. அதற்காகவும் நான் ஜெயை இப்போதைக்கு ஆதரிக்கிறேன்.

    அதே நேரத்தில் ஜெ செய்த பல தவறுகளையும் நான் மறக்கவில்லைதான்.

    இரண்டு கெடுதிகளில் எது குறைந்த கெடுதி என்றுதான் பார்க்க வேண்டியிருக்கிறது.

    உங்கள் பின்னூட்டமும் அதே மாதிரி எண்ணங்களின் விளைவே என்பதையும் புரிந்து கொள்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  14. >>> முன்னுரிமை கொடுப்பது தீவிரவாதத்துக்கு

    அய்யா.. தீவிரவாதம்ன்றது வெளிநாட்டுல இருந்து வந்து நம்ம மக்களை கொல்றது மட்டுமில்ல... பஸ்ல நம் நாட்டு அப்பாவி கல்லூரி மாணவிகளை உயிரோடு எரிப்பதும் தீவிரவாதம்தான்...

    >>> குறைந்த கெடுதி

    சிறிய கெடுதி செய்பவரை வேண்டுமானால் தேர்ந்தெடுப்போம் ஆனால் கெடுதியே செய்ததில்லை, செய்வார்களா என்று தெரியவில்லை அப்படிபட்டவர்களை தேர்ந்தெடுக்க மாட்டோம்னு சொல்றீங்களா...

    ReplyDelete
  15. "அய்யா.. தீவிரவாதம்ன்றது வெளிநாட்டுல இருந்து வந்து நம்ம மக்களை கொல்றது மட்டுமில்ல... பஸ்ல நம் நாட்டு அப்பாவி கல்லூரி மாணவிகளை உயிரோடு எரிப்பதும் தீவிரவாதம்தான்..."
    அவ்வாறு செய்தவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதே போல நிலுவையில் இருக்கும் வழக்குகளும் சீக்கிரம் பைசல் செய்யப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

    "கெடுதியே செய்ததில்லை, செய்வார்களா என்று தெரியவில்லை அப்படிபட்டவர்களை தேர்ந்தெடுக்க மாட்டோம்னு சொல்றீங்களா..."
    நீங்கள் யாரைக் கூறுகிறீர்கள் எனத் தெரியவில்லை. கெடுதியே செய்யாதவர் யார்? விஜயகாந்தா? விளக்கவும்.

    மு.க. அவர்களைக் கூறினீர்கள் என்றால் அவர் இப்போது முதலமைச்சராவது தமிழகத்தின் நலனுக்கு ஏற்றதல்ல என்பது என் கருத்து. நீங்கள் மாற்றுக் கருத்து வைத்திருந்தால் அதை மதிக்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  16. //* dondu(#4800161) said... தனி நாடு கேட்பது அரசியல் சட்டத்துக்கு விரோதம் அவ்வாறு கேட்கும் கட்சியின் அங்கீகாரம் பறிக்கப்படும் என்று ஒரு அறிவிப்பு வந்த உடனேயே அவர் அவசர அவசரமாக அக்கொள்கையை தியாகம் செய்தார், பதவி என்னும் மேல் துண்டுக்காகாக. *//

    ஐயா! அண்ணாவின் கொள்கை மாற்றம், பதவிக்காகவா அல்லது அரசியல் சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதற்காகவா? சரியான விளக்கம் தரமுடியுமா?

    ReplyDelete
  17. இல்லீங்க... தேர்தல்னாலே இருக்குறதுலயே... ஒரளவு கொஞ்சம் கெட்டவன் அப்படீன்ற எண்ணம் எல்லோர் கிட்டயும் ஆழமா பதிஞ்சு போச்சு, அது மாறிவரணும் என்பது என் எண்ணம்..

    நீங்கள் சொல்லும் ஜெ, நினைத்திருந்தால் அரசு இயந்திரத்தை முடுக்கி அந்த பஸ் எரிப்பு வழக்கை, தன் கட்சியினருக்கு எதிராயினும் முடிதிருக்க முடியும்.... அதில்லாமல், சாட்சிகள் பல்டி அடித்து, வழக்கை இழுத்தடித்து.... ஒரு பெண் ஆண்டபோதும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியில்லை...

    நான் கூற வந்தது, கம்யூனிஸ்ட், விடுதலைச்சிறுத்தைகள், பாமக.... இவர்களை..

    ReplyDelete
  18. குத்தூஸ் அவர்களே, இந்திய விடுதலை கேட்பது என்பது வெள்ளைக்காரன் காலத்தில் சட்ட விரோதம்தான். அதற்காக கேட்காமல் விட்டார்களா?

    திராவிட நாடு கொள்கையில் அவ்வளவு தீவிரமாக தன்னைக் காட்டிக்கொண்ட அண்ணா அக்கொள்கையை அவ்வளவு வேகமாகக் கைவிட்டது அக்காலக் கட்டத்தில் பலாரால் நகைப்பான விஷயமாகவே பார்க்கப்பட்டது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  19. "நான் கூற வந்தது, கம்யூனிஸ்ட், விடுதலைச்சிறுத்தைகள், பாமக.... இவர்களை.."

    கம்யூனிஸ்டுகள்? இவர்கள் செய்த குளறுபடிகளால் உலகில் இரண்டு நாடுகளே அழிந்தன. அக்கொள்கை தோல்வியடைந்தது. மற்றப்படி பாமகவோ விடுதலை சிறுத்தைகளோ, ஆட்சியைத் தனியாகப் பிடிக்கும் அளவுக்கு இல்லையே. ஆகவே இப்போதைக்கு திமுக, அஇஅதிமுக ஆகிய இரண்டிற்கிடையேதான் போட்டியே. நான் கூறுவது இந்தப் பொது நேர்தலுக்கு.

    அனுமானமாகப் பேச வேண்டுமென்றால் எனக்கு பாஜக ஆட்சிக்கு வருவதே பிடிக்கும். நடக்கக் கூடிய காரியமா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  20. >> இரண்டு நாடுகளே அழிந்தன

    இவர்களுக்கு எதிரான கொள்கை கொண்டவர்களால் உலகமே அழிந்து கொண்டுவருகின்றதே... !!!

    ஒரு நாடு துண்டானால், அது கடைபிடித்த கொள்கை காரணமாயிருக்கவேண்டும் என்பதில்லை, அதை செயல்படுத்திய முறையிலேயே இருக்க வேண்டும்...

    மதுரை மத்திய தொகுதி எம்பி, மோகன் அவர்களை பற்றியும், வெள்ளைக்கண்ணு அவர்கள் பற்றியும் பலருக்கு தெரியாது போல..

    ReplyDelete
  21. "ஒரு நாடு துண்டானால், அது கடைபிடித்த கொள்கை காரணமாயிருக்கவேண்டும் என்பதில்லை, அதை செயல்படுத்திய முறையிலேயே இருக்க வேண்டும்..."
    From each according to ability and to each according to necessity என்ற அடிப்படைக் கொள்கையே மனித இயற்கைக்கு மாறானது. அதுவே முதல் கோணல், முற்றிலும் கோணல் என்றாயிற்று. அப்படிப்பட்ட கொள்கை 70 ஆண்டுகளாக செயல்பட்டு சோவியத் யூனியனே அழிந்தது, கிழக்கு ஜெர்மனி காணாமல் போயிற்று. இதில் நடுவில் 1930களில் ஸ்டாலினால் கொலையுண்ட லட்சக்கணக்கானவர்கள் வேறு.

    நல்லக்கண்ணு அவர்களை விட்டு விட்டீர்களே. சோ அவர்களையும் விட்டுவிட்டீர்களே. ஆனால் இவர்களெல்லாம் சேர்ந்து நாட்டின் நிர்வாகத்தை மேற்கொள்ள முடியாது என்பதே நிஜம். அதை உணர்ந்துதானே சீனாவே முதலாளித்துவ முறைக்கு மாறியது?

    அதெல்லாம் இருக்கட்டும். இப்பதிவின் நோக்கம் தற்போது திமுகவா அதிமுகவா என்பது மட்டுமே. மேக்ரோ பார்வையெல்லாம் இப்போதைக்கு எதற்கு?

    அன்புடன்,
    டோண்டு ராக்வன்

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  22. முத்து (தமிழினி) அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://muthuvintamil.blogspot.com/2006/03/blog-post_05.html

    புதுச்சேரி இரா சுகுமாரன் அவர்களே. முதற்கண் உங்களது பதிவில் பின்னூட்டமிட இயலவில்லை.

    கொள்கைதான் வேட்டி என்று அண்ணா கூறும் பட்சத்தில் அவரே வேட்டியில்லாதுதான் போனார். இது பற்றி பார்க்க என் பதிவு: http://dondu.blogspot.com/2006/03/blog-post_07.html

    உண்மையான டோண்டுதான் இப்பின்னூட்டம் இட்டான் என்பதை குறிக்கும் வண்ணமாக இப்பின்னூட்டத்தின் நகலை நான் மேலே கூறிய பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_07.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  23. முத்து (தமிழினி) அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://muthuvintamil.blogspot.com/2006/03/blog-post_05.html

    அப்படியா முத்து அவர்களே. அப்படியென்றானல் என் பதிவில் வந்து தைரியமாகப் பின்னூட்டம் இடுவதுதானே. அவ்வாறு யார் தைரியமாக வருகிறார்கள், யார் எவருடைய கோபத்துக்கோ பயந்து வராமல் இருக்கிறார்கள் என்பதையும் நான் கவனித்துத்தான் வருகிறேன்.

    அண்ணா வேட்டியில்லாமல் போனது குறித்து சம்பந்தப்பட்டக் காலக் கட்டத்திலேயே பேசிச் சிரித்தாகி விட்டது. அப்போது நீங்கள் பிறக்கக்கூட இல்லை என்பதை நினைவூட்டுகிறேன். நான் அச்செய்திகளை அவை வரும்போதே படித்தவன் என்பதையும் கூறிவிடுகிறேன்.

    மற்றப்படி பாஜகவைப பற்றிப் பேசியது கூட நடக்க முடியாத காரியத்துக்கு உதாரணத்துக்குத்தான்.

    காவேரி விஷயம்? ஒப்பந்தம் முடியும் தருணத்தில் ஆட்சியில் இருந்தது முக அவர்கள்தான். இந்திரா அவர்களுடன் பலம் வாய்ந்த கூட்டணியில் இருந்தும் சொதப்பியது அவரே. அதற்காகவே அவர் ஆட்சிக்கு வரக்கூடாது. ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.

    உண்மையான டோண்டுதான் இப்பின்னூட்டம் இட்டான் என்பதை குறிக்கும் வண்ணமாக இப்பின்னூட்டத்தின் நகலை நான் இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_07.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  24. Hearty welcome Muththu. Perfectly ok. more than ok. But do have your say.

    Regards,
    Dondu N.Raghavan

    ReplyDelete
  25. முத்து (தமிழினி) அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://muthuvintamil.blogspot.com/2006/03/blog-post_05.html

    "அப்போது இந்திராகாந்தி கருணாநிதி தயவில்தான் ஆட்சியில் இருந்தாரா?"

    இந்திரா காங்கிரசுக்கு சட்டசபையில் ஒரு சீட் கூடத் தராத அளவுக்கு அவர் பலம் இருந்தது.

    ஏன் அச்சமயம் சரியாகப் பேசி ஒப்பந்தத்தை மீட்சி செய்யவில்லை என்பதற்கு நாஞ்சில் மனோகரன் அவர்கள் பிற்காலத்தில் துக்ளக்குக்கு கொடுத்த பேட்டியில் மென்று விழுங்கினார் என்பதும் நிஜம்.

    அண்ணா அவர்கள் வேட்டியை இழந்தபோது துக்ளக் பத்திரிகையே வரவில்லை என்பதும் உங்களுக்குத் தெரியாமல் போனதில் அதிசயம் இல்லைதான். அதைக் குறிப்பிட்டு கேலி பேசியவை குமுதம், கல்கி, விகடன் ஆகிய பத்திரிகைகளே. இன்னும் ஒரு விஷயம். அக்காலக் கட்டத்தில் துக்ளக் இருந்திருந்தாலும் மற்ற பத்திரிகைகள் அளவுக்கு தனிப்பட்ட அளவில் கேலி பேசியிருக்காது என்பதும் உண்மையே. ஏனெனில் அது மற்ற எல்லா பத்திரிகைகளையும் விட கண்ணியத்தை அதிகம் கடைபிடித்தது. கிசு கிசுவெல்லாம் அது எழுதியதே இல்லை.

    அது சரி அது என்ன தேசியம்? நான் அதை குத்தகைக்கு எடுத்திருக்கிறேனா என்ன? இந்த தேர்தலில் திமுகவா அதிமுகவா என்பது பற்றித்தான் சர்ச்சையே என்பதை மறக்காதீர்கள்.

    உண்மையான டோண்டுதான் இப்பின்னூட்டம் இட்டான் என்பதை குறிக்கும் வண்ணமாக இப்பின்னூட்டத்தின் நகலை நான் மேலே கூறிய பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_07.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  26. மன்னிக்கவும்... நல்லகண்ணுவைத்தான் தவறுதலாக வெள்ளைக்கண்ணு என்று குறிப்பிட்டேன்... இங்கே சோ பற்றி சொல்வதற்கு எனக்கெதுவும் இல்லை
    >>> இயற்கைக்கு மாறானது

    அப்படி பார்த்தால் Survival of the Fittest என்ற கொள்கையின் படியல்லவா, நாமெல்லாம் இன்று ஆயுதமேந்தி கற்காலத்தில் போராடிக்கொண்டிருக்கவேண்டும்...

    நம்க்கு கிடைத்த பகுத்தறிவைக்கொண்டு, எது சரி என்று நிர்ணயித்து அதை நடைபடுத்த வேண்டுமே தவிர, இதெல்லாம் இயற்கை, ஒன்றும் செய்ய இயலாது என்று கைவிடுவது சரியல்ல..

    நிஜம் எதுவென்று, செயலிலே இறங்கும் முன் உங்களைபோன்றோர் முடிவு பண்ணிவிட்ட பிறகு, பின் அது எப்படி நிஜமாகும் ?

    ReplyDelete
  27. "அப்படி பார்த்தால் Survival of the Fittest என்ற கொள்கையின் படியல்லவா, நாமெல்லாம் இன்று ஆயுதமேந்தி கற்காலத்தில் போராடிக்கொண்டிருக்கவேண்டும்..."

    அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. என்ன, ஆயுதங்கள் மட்டும் நவீன ஆயுதங்கள். அவ்வளவே. வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமைதானே இப்போது ஆட்சி செலுத்துகிறது? உலகமயமாக்கல் என்பது என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? தகுதியுடையதுவே பிழைக்கும் என்ற டார்வின் கோட்பாடு மறுக்க முடியாதது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  28. எவராயினும் ஆயுதமேந்தி வலிமையை நிருபித்தால் மண்டியிடத்தயார் என கூறுவதுபோல் உள்ளது...

    அப்படி பார்த்தால் மிருகங்களுக்கும் நமக்கும் எந்த வித்தியாசமுமில்லை....

    இந்த கொள்கையில்தான் இருப்பேன் என்றால், இறுதியில் ஒருவரும் மிஞ்சமாட்டோம்..

    ReplyDelete
  29. திரு.டோண்டு அவர்கள் சொல்வது சரி.திமுகவை எதிர்த்து கட்சி ஆரம்பித்த வைகோ, தனது கட்சி வளர வேண்டுமானால் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதுதான் சரி.

    ReplyDelete
  30. "அப்படி பார்த்தால் மிருகங்களுக்கும் நமக்கும் எந்த வித்தியாசமுமில்லை...."

    அப்படி ஒரேயடியாக எளிமைப்படுத்த முடியாது. போட்டி இருந்து கொண்டே இருக்கும். சில சமயம் பலவீனமானதும் வெற்றிபெறும். அதையும் கூர்ந்து கவனித்தால் பலமுள்ளவர் வேண்டுமென்றே விட்டுக் கொடுத்திருப்பார் என்பது தெரிய வரும். அதுதான் நாகரீகத்தின் தாக்கம். ஸ்பார்டா தேசத்தில் குழந்தையை வெட்ட வெளியில் விட்டு விடுவார்கள். அதுவே பிழைத்துக் கொள்ளட்டும் என்று. இப்போது குழந்தை பலவீனமாக இருந்தால் உடனே இன்குபேட்டரில் வைப்பதில்லையா? எல்லாமே நாகரீகத்தின் வெளிப்பாடே. மனம் தளறாதீர்கள். இப்போது நடப்பது வலிமைக்கும் வலிமையின்மைக்கும் நடக்கும் போராட்டங்கள். வலிமையானவரிடம் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தவும் தயங்குவதில்லை.

    யோசிக்க ஆரம்பித்தால் எங்கோ போய் விடுவோம். வைக்கோவை மறந்து விடுவோம் என அஞ்சுகிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  31. "திரு.டோண்டு அவர்கள் சொல்வது சரி.திமுகவை எதிர்த்து கட்சி ஆரம்பித்த வைகோ, தனது கட்சி வளர வேண்டுமானால் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதுதான் சரி."

    அப்பாடா, நீங்களாவது பதிவின் பொருளை மறக்காது இருந்தீர்களே. மிக்க நன்றி சித்தன் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  32. முத்து (தமிழினி) அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://muthuvintamil.blogspot.com/2006/03/blog-post_05.html

    "அப்பத்தான் நான் பிறக்கவே இல்லையே..எனக்கு தெரியாது."
    ஆனாலும் எல்லாம் தெரிந்த மாதிரி அதை நான் துக்ளக்கில் படித்திருப்பேன் என்று கூறும்போது இது நினைவுக்கு வராததுதான் இடிக்கிறது.
    "தாய்நாட்டுக்காக துப்பாக்கி தூக்குபவன் உங்களுக்கு தீவிரவாதி.அவர்களை கருணாநிதி வளர்த்துவிடுவார்"
    தன் தாய்நாட்டுக்காக துப்பாக்கி தூகியது எல்லாம் சரிதான், ஆனால் நம் நாட்டவரை அதை வைத்துப் போட்டுத் தள்ளினானே. அவனைத்தானே முக ஆதரிக்கிறார். அப்படிப்பட்ட தீவிரவாதிகளை ஒடுக்கும் ஜெதான் இப்போது நமக்கு தேவை.
    "வேலைநிறுத்தம் உரிமையை பறிக்க காரணமாக இருந்தவர்."
    நாட்டையே ப்ளேக்மெயில் செய்யும் அளவுக்கு ஆட்டம் போட்ட அரசு ஊழியர்களை கட்டுக்கு கொண்டு வர ஜெதான் சரியான ஆள். அதற்காகவே அவரை ஆதரிக்க வேண்டும்.
    நீங்களே வேறு இடத்தில் கூறியது போல கருணாநிதி 1970ல் நடந்ததையெல்லாம் கூறி எல்லார் டென்ஷனையும் ஏற்றியதுதான் பலன். கூட்டணியிலேயே பாருங்கள். அவருக்கு என்ன கண்ட்ரோல் இருக்கிறது. ஆளாளுக்கு பேசுகிறார்கள். பேசிப்பேசியே பலரை தன்னை விட்டு விலகச் செய்தவர்தானே அவர். அதுவும் நீங்கள் கூறியது. அதில் எனக்கு உடன்பாடு உண்டு.

    மற்றப்படி சர்வாதிகாரம் எதேச்சாதிகாரம் முக அவர்களிடம் கூடத்தான் உண்டு. ஆனால் எல்லோருக்கும் அது கேலியாகவே படுகிறது. அந்தளவுக்கு அவருக்கு ஆளுமை குறைவு.

    உண்மையான டோண்டுதான் இப்பின்னூட்டம் இட்டான் என்பதை குறிக்கும் வண்ணமாக இப்பின்னூட்டத்தின் நகலை நான் மேலே கூறிய பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_07.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  33. சுகுமாரன் அவர்கள பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://rajasugumaran.blogspot.com/2006/03/blog-post_114190046022414049.html#comments
    சுகுமாரன் அவர்களே,

    நீண்ட தலைப்பு நீங்கள் கொடுத்ததே உங்கள் பதிவு காணாமல் போனதற்கு காரணம்.

    உங்கள் பதிவுக்கு எதிர்வினையாக நான் கொடுத்தபதிவின் தலைப்பு "
    கொள்கை வேட்டி என்றால் அண்ணாவுக்கும் வேட்டியில்லை". அதுவே நீண்ட தலைப்பாக இருந்து விடப்போகிறது என்று உதறல்தான். ஆனாலும் உங்கள் தலைப்பு படு நீளம்.

    "தம்பி வைக்கோவுக்கு வேட்டியில்லை" என்று தலைப்பு கொடுத்துப் பாருங்கள். தேதியையும் மாற்றுங்கள். ஜம்மென்று வரும் அப்பதிவு.

    அப்படியே என்னுடைய பதிவுக்கும் வாருங்கள். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_07.html

    இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை மேலே கூறிய என் பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_07.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்
    அடுத்தப் பின்னூட்டம்: இதென்ன கொடுமை, மட்டுறுத்தலையும் செயல்படுத்துங்கள் ஸ்வாமி.

    ReplyDelete
  34. சுகுமாரன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://rajasugumaran.blogspot.com/2006/03/blog-post_114190277717928743.html#comments

    தேவலையே. தலைப்பின் நீளத்தைக் குறைத்ததும் பின்னூட்டமிடும் பக்கமும் திறக்க முடிகிறதே.

    இனிமேல் என்ன? தலைப்பு நீண்ட பழைய பதிவைத் தூக்கி விடுங்கள்.

    இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை மேலே கூறிய என் பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_07.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  35. வணக்கம் திரு டோண்டு அய்யா,
    தங்களின் பதிவை ஏற்கனவே பார்த்தாலும் பின்னூட்டம் அளிக்க இயலவில்லை “எனது வாழ்வில் இனி ஜெயலலிதாவுடன் கூட்டணி இல்லை என்று சிறையிலிருந்து வெளிவந்த போது வைகோ பேசினார். அது வெற்று கோஷமாகியிருக்கிறது. வைகோவின் நம்பத்தன்மையை சிதைக்கும் இந்த மாற்றம் ஒரு சந்தர்ப்பவாதம் தான்“. (இந்தியா டுடே தமிழ் மார்ச் 15 2006.)
    இப்படி வைகோவின் முடிவுகளை பலர் விமர்சனம் செய்துள்ளனர்.
    புதுச்சேரி இரா. சுகுமாரன்

    ReplyDelete
  36. சந்தர்ப்பவாதம்தான், யார் இல்லை என்று சொன்னது. மற்றவர்கள் எல்லோரும் செய்வதையே வைக்கோவும் செய்து தான் அரசியல்வாதி என்று நிரூபித்திருக்கிறார். அதனால் என்ன? ஊரே சிரித்தால் கல்யாணம்தானே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  37. வணக்கம்,
    யாரோ என்வலைப்பதிவில் விளையாடுகிறீர்கள் என்பது தெரிகிறது. அவர்கள் அவர்கள் கருத்தை பதிவு செய்ய நாகரீகமாக பதிவுசெய்தால் நன்றாக இருக்கும்.

    என் வலைப்பதிவில்
    பார்க்கவும்


    புதுச்சேரி இரா. சுகுமாரன்

    ReplyDelete
  38. சுகுமாரன் அவர்களே, இது ஒன்றும் புதிது அல்ல. உங்களுக்கு அவ்வாறு பின்னூட்டமிட்டது போலி டோண்டு என்ற இழிபிறவியாகும். அவனுடைய dondu(#4800161) என்ற டிஸ்ப்ளே பெயரில் எலிக்குட்டியை வைத்துப் பார்த்தால் திரைக்குக் கீழே இடது பக்கம் அவனுடைய ப்ளாக்கர் எண்ணான 11882041 வெளியில் தெரியும். உண்மை டோண்டுவுடைய ப்ளாக்கர் எண் 4800161.

    யார் என் பதிவில் வந்துப் பின்னூட்டமிட்டாலும் அவர்களுக்கு அசிங்கமாகப் பின்னூட்டம் இடுவது அவன் வாடிக்கையாகிப் போயிற்று. அதனாலேயே அவனது சொந்தப் பதிவு தமிழ்மணத்திலிருந்து தூக்கப்பட்டது. கற்றாருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பார்கள். போலி டோண்டு என்ற இந்த இழிபிறவிக்கோ செல்லும் இடமெல்லாம் கல்தா என்றே வந்திருக்கிறது.

    வைக்கோவுக்கு வேட்டியில்லை என்று நீங்கள் போட்டதன் மூலம் தன் மானத்தைப் பற்றி யோசிக்கிறீர்கள் என்று தெரிகிறது. இப்போது இந்த இழிபிறவி உங்களை வெளிப்படையாக மிரட்டுகிறது, எனக்கு பின்னூட்டம் போடக்கூடாது என்று. வேட்டியை இழக்க நீங்கள் விரும்ப மாட்டீர்கள்தானே.

    இன்னொன்று, அந்த இழிபிறவியின் அசிங்கப் பின்னூட்டங்களை அழியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். எல்லோரும் அப்படித்தான் மாடரேஷனில் செய்கிறோம். அசிங்கப் பின்னூட்டமாக இல்லையென்றாலும் கூட என்னுடைய ஐடியை திருடி எழுதுகிறான் அவன். அதுவே ஒரு குற்றம்தான். ஆகவே dondu(#4800161) என்ற டிஸ்ப்ளே பெயரைத் தாங்கி வரும் பின்னூட்டங்கள் எலிக்குட்டி சோதனையில் என்னுடையவை அல்ல என்று தெரியும் பட்சத்தில் அவற்றை அழிப்பதே முறை என்பதையும் உங்கள் மேலான கவனத்துக்கு வைக்கிறேன். நல்ல முடிவு எடுப்பீர்கள் என நம்புகிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete