நிரந்தர பக்கங்கள்

3/31/2006

டோண்டுவின் இரண்டாம் திருமணம்

திருமணம் என்றாலே இனிய நினைவுகள்தானே. அதுவும் இரண்டாம் திருமணம் என்பது த்ரில்தான். எனக்கு இரண்டாம் திருமணம் நாளைக்கு. பெண்? கடந்த 53 ஆண்டுகளாகக் காதலிக்கும் அதே பெண்தான். சமீபத்தில் 1974-ல் நடந்த எங்கள் முதல் கல்யாணம் நேற்றுத்தான் நடந்தது போல இருக்க, இப்போது இரண்டாம் முறையாக அவள் கழுத்தில் தாலி கட்டப் போகிறேன்.

திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேற்பார்வை? கல்யாணப் பெண்தான். நடத்துவது? என் பெண்ணும் மாப்பிள்ளையும்தான்.

இதற்குள் பலருக்கு என்ன விஷயம் என்று புரிதிருக்க வேண்டும். எங்கள் பக்கத்தவர் இதை சஷ்டியப்தபூர்த்தி என்பார்கள். அறுபதாம் ஆண்டு நிறைவு விழா என்றும் கூறலாம். சிலர் மணி விழா என்பார்கள். எதுவானால் என்ன கடந்த பார்த்திப ஆண்டு பங்குனி மாதம் பரணி நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு ஏப்ரல் 1 சஷ்டியப்தபூர்த்தி.

இருவரும் பிழைத்துக் கிடந்தால் இருபது ஆண்டுகள் கழித்து மூன்றாம் திருமணம். சதாபிஷேகம் என்று அதை கூறுவார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின் குறிப்பு: ஒரு முறைதான் பப்ளிஷ் பட்டனை அழுத்தினாலும் இரண்டு முறை பதிவு வந்து விட்டது. அவற்றில் ஒன்றை நீக்க வேண்டியதாயிற்று.

82 comments:

  1. மணங்கள் பல கண்டு
    தினம் புது மாப்பிளையாய்
    சதமடிக்க எனது வாழ்த்துக்கள்!
    ( நிச்சயமாக இது ஏப்ரல் 1 க்காக எழுதபட்ட பதிவல்ல என நினைக்கின்றேன்!)

    ReplyDelete
  2. Dear Mr. Raghavan,

    Hearty Congratulations to you and Mrs. Raghavan.

    Regards,
    Rajesh

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. மீண்டும் மணநாள் காணும் இனிய நண்பருக்கு
    என் உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!
    இன்னும் 20 ஆண்டுகள் கழித்து
    இதேபோல வாழ்த்த வேண்டுகிறேன்!!!!

    ReplyDelete
  5. டோண்டு ஐயா,
    அஷ்டியப்த தம்பதிகளிடம் ஆசி வாங்குவது எங்கள் வழக்கம். எங்களை ஆசிர்வதியுங்கள். உங்களிடம் உங்கள் சதாபிஷேக நிகழ்சியிலும் வந்து ஆசிர்வாதம் பெற என் ஆசை.


    அன்புடன்

    கால்கரி சிவா

    ReplyDelete
  6. இவ்ளோ short noticeல சொன்ன எப்படி... சரி பரவாயில்லை... உங்கள் எண்பதாம் திருமண விழாவிற்கு வருகிறேன்.. சஷ்டியப்தபூர்த்தி விழா வாழ்த்துக்கள்..

    சக வலைஞர்களுக்கு ::

    இந்த பதிவின் சொந்தக்காரர் JUST GOT MARRIED.. எனவே, இரு நாட்களுக்கு பின்னூட்ட பெட்டிக்கு விடுமுறை விடப்படுகிறது :))

    ReplyDelete
  7. வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்
    ஆனாலும் அன்பு மாறாதது
    மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்
    பிரிவென்னும் சொல்லே அறியாதது

    அழகான மனைவி அன்பான துணைவி
    அமைந்தாலே பேரின்பமே

    - உங்கள் இருவருக்கும் இறைவன் சந்தோஷங்களையும் தேக ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் அளிக்கட்டும்.

    ReplyDelete
  8. மணிவிழா காணும் இராகவன் தம்பதியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! வருடங்களின் சுழற்சியினை ஒருமுறை கண்ட இராகவன், ஆயிரம் முழுமதி காணவும் வாழ்த்துக்கள் !!
    நூறாண்டு காலம் வாழ்க!
    நோய்நொடிகள் இல்லாமல் வாழ்க!

    ReplyDelete
  9. டோண்டு ஐயா,

    மறுபடியும் Mrs.டோண்டுவை April 1 அன்னிக்கு முட்டாளாக்கப் போறீங்க! (இல்ல நீங்க மறுபடி அவங்களால முட்டாளாக்க படுறீங்களா?) :-P
    Just Kidding

    "வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்" என்ற வசனம் ரொம்ப பழசு.

    :-)

    அறுபதாம் கல்யாணத்துக்கு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வரதட்சணை வாங்குவிங்களா ?

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் டோண்டு அவர்களே. காலை டிபனுக்கு இட்லிவடை உண்டா ?

    ReplyDelete
  12. Dear Thiru. Raghavan,

    Congratulations! May God bless you and your wife with all the health and wealth.

    Thanks and regards, PK Sivakumar

    ReplyDelete
  13. வாழ்த்துகள் டோண்டு!

    .:dYNo:.

    ReplyDelete
  14. நன்றி சிங். செயகுமார் அவர்களே. இது நட்சத்திரப் பிறந்த நாள். ஆங்கிலத் தேதி ஏப்ரல் 4-ல்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் திரு.டோண்டு அவர்களே

    ( தலைப்பை தெளிவாக போட வேண்டாமா..பெரிசுக்கு இது தேவையா என்று நினைக்க போகிறார்கள் மக்கள்)

    ReplyDelete
  16. நன்றி ராஜ் சந்திரா, ஸ்ரீகாந்த், முகமூடி, ரவிஷா, கோபி, சில்வியா, பி.கே.எஸ், நாட்டாமை, சுந்தர், மணியன் அவர்களே.

    ரவிஷா: அப்போது எனக்கு ஏழு வயதுதான். அவருக்கு நான்கு வயது. அத்தைப் பெண். அப்போதே மனதில் நான் நிச்சயம் செய்து வைத்தது.

    கோபி: அந்த ஆறு வயதுக் கனவுப் பெண்ணை விசாரித்ததாகக் கூறவும். உங்கள் கனவுப் பதிவின் பின்னூட்டத்தில் என் கதையைக் கோடி காட்டியிருந்தேனே.

    இட்லி வடை அவர்களே. இன்று மாலை ஜபம் இருக்கிறது. அப்போது டிபன் உண்டு. நாளை காலை 9 மணிக்குள் முஹூர்த்தம் முடிவதால் நேரடியாகவே சாப்பாடுதான்.

    நாட்டாமை: ப்ளாக்கருக்கு நீங்கள் எழுதிய கடிதத்துக்கு என் நன்றி.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  17. Actually I waqs the first to greet you! Where did my post go??

    Anyway, Hearty congrats!!

    ReplyDelete
  18. தினகர் அவர்களே,
    போட்டோக்கள் போடுவதா? வேறே வினையே வேண்டாம். போலி டோண்டு வந்து என் வீட்டுப் பெண்களின் போட்டோவையெல்லாம் சந்திக்கு இழுப்பான். அவன் தொல்லை ஒழிந்ததும்தான் ப்ளாக்கர் வாழ்க்கையே நார்மல் ஆகும் எனப் படுகிறது. நீங்களும் போட்டோக்கள் எல்லாம் போடும்போது ஜாக்கிரதையாகவே இருங்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  19. ( தலைப்பை தெளிவாக போட வேண்டாமா..பெரிசுக்கு இது தேவையா என்று நினைக்க போகிறார்கள் மக்கள்)

    அதுக்காகத்தானே அவ்வாறு தலைப்பைப் போட்டது!!!

    அது சரி நான் உங்கள் மின்னஞ்சலுக்கு அழைப்பு அனுப்பியிருந்தேனே, வந்ததா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  20. எஸ்.கே. அவர்களே,
    உங்கள் பின்னூட்டத்தை ஏற்று விட்டேன், ஆனால் பப்ளிஷ் ஆகவில்லை. இப்போது வந்து விட்டது. அதுவும் சரியான வரிசையில்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  21. இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. pallandu pallandu
    pallayirathandu..............
    udal nalam sirandhu vazhga!

    ReplyDelete
  23. 31ஆம் தேதி இந்தப் பதிவைப் போட்டதால் போனால் போகிறதென்று [:-))] நம்புகிறேன்.

    தங்கள் மண வாழ்க்கை மேன்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    அன்புடன்,
    சுபமூகா

    ReplyDelete
  24. வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகிறேன்.

    தங்களை போன்ற பெரியவர்கள் எங்களைப் போன்ற இளையவர்களுக்கு வழிகாட்டி.

    அன்புடன்

    குமரன்

    ReplyDelete
  25. வாழ்த்தறதா வணக்கம் சொல்றதா.. புரியலை... All the Best sir!

    ReplyDelete
  26. சஷ்டியப்தபூர்த்தி தம்பதிகளிடம் ஆசி பெற்றால் புண்ணியம் உண்டுன்னு பெரியவங்க சொல்வாங்க!

    நாங்களும் தம்பதி சமேதரா ஆசி வாங்கிக்கறோம்! வாழ்த்துங்க சார்.

    (இதன் நகல்:
    http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

    ReplyDelete
  27. Thanks Kurumban, Sivagnanamji, Subamuka, Kumaran, Sadhayam and Rajini Ramki.

    Regards,
    Dondu N.Raghavan

    ReplyDelete
  28. நன்றி நாமக்கல் சிபி அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  29. என் நமஸ்காரங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  30. டோண்டு சார்,
    சஷ்டியப்தபூர்த்திக்கு வாழ்த்துகள்.

    53 வருட காதலா.. அப்ப்ப்பா....

    ReplyDelete
  31. இனிய மணி விழா வாழ்த்துக்கள் டோண்டு சார். நல்ல உடல் நலத்துடன் நீங்களும் உங்கள் துணைவியாரும் நூறாண்டுகள் வாழ வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்.

    உங்கள் குடும்பத்தாரின் மகிழ்வோடு என்னையும் இணைத்துக் கொள்கிறேன்

    ReplyDelete
  32. மனமார்ந்த வாழ்த்துக்கள் டோண்டு அவர்களே.

    ReplyDelete
  33. "53 வருட காதலா.. அப்ப்ப்பா...."
    ஆம் சமீபத்தில் 1953-லிருந்து.

    நன்றி ராமனாதன் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  34. நன்றி பெனாத்தலார், முத்துக் குமரன், வெங்கடேஷ் சர்மா, முத்து, ஆறுமுகம், பறக்கும் பட்டம் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  35. "கருத்து வேறுபாடு இருந்த பொழுதும்;முகம் காணா உங்கள் மூர்க்க எழுத்தில்( ஆமாம்- அப்படிதான்) எனக்கொரு மோகமுண்டு.சிந்திக்க ,தேட வைக்குமெழுத்து."
    கருத்து வேறுபாடு இருப்பினும் இவ்வாறு சமயம் போது என்றால் ஆதரவு கரம் நீட்டுவதுதான் மனித நேயம். அதை அழகாக பாவிக்கும் உங்களுக்கு என் மனப்பூர்வ ஆசிகள் பார்வை அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  36. பார்ட்னர்,
    ரேஞ்சே மாறியிருக்கு. நல்லா இருந்திச்சு.

    ஆனால், ஒரு ட்விஸ்ட் கொடுத்துருவீங்கன்னு நினச்சேன் - அதாவது கடவுளின் மரணத்திற்குப் பிறகு அந்த 16-ம் நாளுக்குள் உலக மக்கள் எல்லோரும் வேற்றுமையில்லாமல் இருந்து, பிறகு கடவுள் அப்பாயிண்ட்மெண்ட் முடிஞ்சதும் அந்தக் கடவுளை வச்சே சண்டை வந்து - பழைய குருடி கதவைத் திறடின்னு - பழைய நிலைக்கே வந்திருவாங்களோன்னு நினச்சேன் :-)

    ReplyDelete
  37. 60-ம் வயது தாண்டும் இளைஞன் டோண்டுவிற்கும் அவரது துணைவியாருக்கும் இன்னும் பல காலம் நல்ல நலத்தோடு வாழ,
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. பக்கத்துப் பதிவுக்கு வந்து விட்டீர்கள் என நினைக்கிறேன் தருமி அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  39. 60-ம் வயது தாண்டும் இளைஞன் டோண்டுவிற்கும் அவரது துணைவியாருக்கும் இன்னும் பல காலம் நல்ல நலத்தோடு வாழ,
    வாழ்த்துக்கள்

    நன்றி தருமி அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  40. வாழ்த்துக்கள் டோண்டு சார்.
    இந்த 60 ம் திருமணத்திற்கும் முதல் இரவு மற்றும் தேன் நிலவு போன்ற சமாச்சாரங்கள் எல்லாம் உண்டா? :)))

    ReplyDelete
  41. Ungalukkum ungal manaivikkum en manamaarntha namaskaarangal. May God bless you and your family with all his blessings.

    ReplyDelete
  42. வாழ்த்துக்கள் டோண்டு சார்.
    இந்த 60 ம் திருமணத்திற்கும் முதல் இரவு மற்றும் தேன் நிலவு போன்ற சமாச்சாரங்கள் எல்லாம் உண்டா? :)))

    எனக்கு ஆட்சேபணை இல்லை. :)))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  43. நன்றி கீதா மற்றும் மனசாட்சி அவர்களே.

    மனசாட்சி அவர்கள் கேட்க் கேள்விகளுக்கு மேலே உள்ளப் பின்னூட்டங்களிலேயே பதில் உண்டு.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  44. ///அவன் தொல்லை ஒழிந்ததும்தான் ப்ளாக்கர் வாழ்க்கையே நார்மல் ஆகும் எனப் படுகிறது. ///

    I mean it in all earnestness. If I wer to upload the photos of my female relatives, he is sure to make improper use of them. But no block to my photos being uploaded.

    Regards,
    Dondu Raghavan

    ReplyDelete
  45. உங்கள் மணிவிழா சிறந்து இன்பமும் மகிழ்வும் பொங்க எனது உளமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  46. தவறுக்கும் அதனால் நடந்துள்ள தடங்கலுக்கும் வருந்துகிறேன். (நீங்களே அதை நிறுத்திவிடமாட்டீர்களா என ஆசைப்பட்டேன்!)

    மீண்டும் வாழ்த்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொள்கிறேன்.

    வாழ்த்துக்கள்........

    ReplyDelete
  47. நன்றி ராகவன், மனசக்தி மற்றும் தருமி அவர்களே.

    தருமி அவர்களே, நீங்கள் குறிப்பிட்டக் கதையை நான் படித்திருக்கிறேன். அதனால்தான் அது என்ன என்று புரிந்தது.

    அன்புள்ள,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  48. வாழ்த்துக்கள் அய்யா.

    ReplyDelete
  49. இன்னும் பல்லாண்டுகள் இருவரும் வாழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  50. பின்னூட்டம் 60ஐத் தாண்டி விட்டது.So, உங்களுடையு daily circulation 100 இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  51. நன்றி இலவசக் கொத்தனார் மற்றும் சிவா அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  52. //அப்போது எனக்கு ஏழு வயதுதான். அவருக்கு நான்கு வயது. அத்தைப் பெண்.//

    நீங்க ரொம்ப சீக்கிரம் முடிவு பண்ணீட்டிங்க. என் விஷயத்துல நான் 11 வயசுல முடிவெடுத்தாலும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து முடிவெடுத்தது சமீபத்துல (:-P) 1999ல் தான்

    ReplyDelete
  53. "நீங்க ரொம்ப சீக்கிரம் முடிவு பண்ணீட்டிங்க."
    அதுதான் டோண்டு. தனக்கு எது நல்லது என்று தீர்மானிப்பதில் அவனுக்கு குருட்டு அதிர்ஷ்டம் உண்டு.

    ஆன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  54. Dear Sir,

    Hearty congratulations for sashtiapthapoorthi and i will pray to god for a happier and healthier life.

    Regards
    Ravi Balasubramanian

    ReplyDelete
  55. வாழ்த்துக்கள் ஐயா..

    ReplyDelete
  56. congratulations.

    paalakaatu pakkathile endru paatu paada pogireergala?

    ReplyDelete
  57. Thanks Ravi, Athirai and Ramki.

    By the way Athirai, there are similarities between Prestige Padmanaban and Dondu Raghavan. One similarity is obviously glaring and I will refrain from telling it out. Another similarity is their marrying their respective aththaippeN.

    But there is a big dissimilarity. As the story unfolds, Prestige Padmanaban is a 55 year old man whereas Dondu Raghavan is 60 years young!

    Regards,
    N.Raghavan

    ReplyDelete
  58. கால்கரி சிவா அவர்களே,

    காலையிலிருந்து கணினிக்கும் கல்யாண வேலைக்கும் இடையில் கண்ணாமூச்சி ஆடியதில் உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி தெரிவிக்க மறந்து விட்டேன். மன்னிக்கவும்.

    கண்டிப்பாக என் சதாபிஷேத்துக்காவது வருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  59. அன்பின் டோண்டு மாமா,
    ரொம்ப சந்தோஷம். சென்னையில் இருந்திருந்தால் வந்திருப்பேன்..
    நிச்சயமாக உங்கள் சதாபிஷேகத்திற்கு வருகிறேன்.
    என்றென்றும் அன்புடன்,
    சீமாச்சு...

    ReplyDelete
  60. நன்றி சீமாச்சு அவர்களே. என் அப்பன் ஹ்டென் திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் அருள் இருந்தால் அவ்வாறே நடக்கும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  61. நமஸ்காரம் டோண்டு சார். தம்பதி சமேதரா எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க. சதாபிஷேகத்துக்கு நாங்க வர்றோம்.

    ReplyDelete
  62. அன்பின் டோண்டு அவர்களே..
    வாழ்த்துக்கள் & மகிழ்ச்சி.

    தங்களின் ஆசிர்வாதத்தை எதிர்பார்க்கும்
    மாயக்கூத்தன் கிருஷ்ணன்.

    ReplyDelete
  63. வாழ்த்துகள் அண்ணா.

    கட்டாயம் சதாபிஷேகம் கொண்டாடுவீங்க, அப்போவும் நாங்க வாழ்த்துவோம்.

    வாழ்த்துவது
    பரஞ்சோதி

    ReplyDelete
  64. புது மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் வாழ்த்துக்கள்... 3வது திருமணம் நடக்கவும்

    ReplyDelete
  65. மிக்க நன்றி நிலாப் பெண்ணே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  66. அன்பின் டோ ண்டு அவர்களே,

    தாங்களும் தங்கள் துணைவியாருக்கும் நல்ல ஆயுளும், ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் என்றும் குறைவின்றி இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    இரு நாட்களாக ஊரில் இல்லாததால் பதிவுகளை சரியாகப் பார்க்கவியலவில்லை. தாமதமாக இட்டதற்கு மன்னிக்கவும்.
    அன்புடன்
    க.சுதாகர்

    ReplyDelete
  67. நன்றி ஸ்ரீமங்கை அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  68. நன்றி மாயக்கூத்தன், விஸ்வாமித்ரா மற்றும் பரஞ்சோதி அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  69. டோண்டு ராகவன்

    இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  70. //ஒரு முறைதான் பப்ளிஷ் பட்டனை அழுத்தினாலும் இரண்டு முறை பதிவு வந்து விட்டது. அவற்றில் ஒன்றை நீக்க வேண்டியதாயிற்று//

    இன்னா சார்! வாழ்க்கையில "publish" பொத்தானை இரண்டு முறை அழுத்திட்டீங்களோ?

    ReplyDelete
  71. நன்றி ராமசாமி அவர்களே. நீங்கள் இந்தப் பதிவில் பின்னூட்டமிட, நான் அதை இப்பதிவின் இரண்டாம் பகுதியில் தேடியிருக்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  72. இன்னா சார்! வாழ்க்கையில "publish" பொத்தானை இரண்டு முறை அழுத்திட்டீங்களோ?

    இது பரவாயில்லை சீனு அவர்களே. ப்ளாக்கிங் செய்ய ஆரம்பித்தப் புதிதில் பதிவு ஒன்று பப்ளிஷ் ஆகாது வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள, பலமுறை பப்லிஷ் பட்டனை அழுத்தியதில் ஒரே பதிவு 6 முறை வந்தது. பிறகு கஷ்டப்பட்டு தேவையில்லாத காப்பிகளை அழிக்க வேண்டியதாயிற்று.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  73. நன்றி சந்திரவதனா மற்றும் ஜயஸ்ரீ அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  74. நன்றி புது புத்தகம் மற்றும் விடாது பச்சை அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  75. 60(இரண்டா)ம் கல்யாணம் காணும் டோண்டு அவர்களே வாழ்த்துக்கள்!
    மூன்றாம் திருமணம் நிச்சயம் உண்டு!

    ReplyDelete
  76. மிக்க நன்றி வெளிகண்ட நாதர் அவர்களே. எல்லாம் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  77. Make mine the 100th post and please accept my pranams one more time!!

    ReplyDelete
  78. நன்றி எஸ்.கே. அவர்களே. உங்களுக்கு என் ஆசிகள் எப்போதும் உண்டு.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  79. வணக்கம் டோண்டு ஐயா,

    முன்பு போல வலைப்பதிவுகள் பக்கம் அடிக்கடி வர முடியாத அளவுக்கு கொஞ்சம் வேலை பளு. இன்று தான் தங்களது இப்பதிவைப் பார்த்தேன்.

    53 வருட காதல், இப்போது அறுபதாம் ஆண்டு நிறைவு விழா!!! ஏழு வயதில் இருந்தே காதலா? வயதில் மட்டுமல்ல, காதலிலும் நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவே மூத்தவர்.

    உங்கள் இரண்டாம் திருமணத்தில் எங்களை போன்ற ஜூனியர்களை இணையம் வழியாக வாழ்த்துங்கள். மூன்றாம் திருமணத்திற்கு நேரில் வந்து ஆசிர்வாதங்களை வாங்கிக்கொள்கிறோம்.

    ReplyDelete