இப்போது சென்னையில் காலை 05.40. கண்விழித்ததும் வழக்கம்போல கணினியை ஆன் செய்து, இணைய இணைப்பைத் தர, கூகள் டாக்கில் ஜிவ்வென்று மேல் எழும்பியது மின்னஞ்சல் என் அருமை நண்பர் செல்வம்$ அவர்களிடமிருந்து. தேன் கூட்டில் இன்றைய வலைப்பதிவராக என்னை குறிப்பிட்டுள்ளார்கள் என்ற செய்தியை தெரிவிக்கிறார் அவர்.
தேன்கூட்டில் வந்த write up-ஐ கீழே கொடுத்துள்ளேன். நடு நடுவில் எனது கமெண்டுகளையும் இடாலிக்ஸ், தடித்த எழுத்தில் இட்டுள்ளேன்.
சென்னையை சேர்ந்த டோண்டு என்ற நரசிம்மன் ராகவன் அவர்களை அறியாதவர்களே வலைபதிவு உலகில் இல்லை எனலாம். (இது ரொம்ப ஓவர்)
தமிழ்நாட்டின் புகழ் பெற்ற மொழி பெயர்ப்பாளராக இருக்கும் டோண்டு மொழிபெயர்ப்பு துறையில் 30 ஆண்டு அனுபவம் பெற்றவர். பொதுத்துறையில் எஞ்சினியராக வேலை செய்து விருப்ப ஓய்வு பெற்ற டோண்டு 2004 முதல் வலைபதிவு செய்து வருகிறார்.
நேர்மைக்காக குரல் தர தயங்காத டோண்டு நகைச்சுவையுடன், அதே சமயம் வலிமையாக தன் கருத்தை சொல்வதிலும் தன் ஆதர்ச பத்திரிக்கையாளரான சோ அவர்களை போலவே இருக்கிறார்.(சோ அவர்களுடன் என்னை ஒப்பிட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்)
இதுவரை டோண்டு பின்னூட்டமிடாத வலைபதிவுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.(ஆகவே போலி டோண்டு ஒவ்வொரு பதிவாகப் போய் என் பெயரில் தவறாக பின்னூட்டம் இட்ட போது வேலை பளு அதிகமானாலும், பின்னூட்டங்களே இடாது இருப்போம் என ஒரு நாளும் யோசிக்கக் கூட இல்லை)
தமிழ்மணத்தில் இரு முறை நட்சத்திரமானவர் என்ற பெருமையும் டோண்டுவுக்கு உண்டு. (காசி மற்றும் மதி அவர்களுக்கு மிக்க நன்றி).
தமது பிளாக்கர் எண்ணை கூட நினைவு வைத்திராத வலை பதிவர்கள் இவரது பிளாக்கர் எண்ணை தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் சொல்லுவார்கள். (இந்த ஐடியாவைக் கொடுத்த மதி அவர்களுக்கு மீண்டும் என் நன்றி)
முற்போக்கு கருத்துக்களை கொண்ட சிறந்த பெண்ணியவாதியான டோண்டு சமூகத்தால் அடக்கப்பட்ட தலித்களுக்கும்,பெண்களுக்கும் குரல் தர தயங்கியதே இல்லை. இரட்டை டம்ளர் முறையை ஒழிக்க இவர் போட்ட பதிவுகள் அனைவராலும் விரும்பி வாசிக்கப்பட்டன.தலித் ஆபிசர்களை கட்டாய காத்திருப்பில் வைப்பதை கண்டித்து இவர் எழுதிய பதிவுகள் மிகவும் புகழ் பெற்றவை. கற்புநிலை பற்றி இவர் எழுதிய பதிவுகள் வலைபதிவு உலகையே அதிசயத்துடன் திரும்பி பார்க்க வைத்தவை.
பின்னூட்ட சூப்பர்ஸ்டார் என்றே இவரை வேடிக்கையாக சொல்லுவார்கள்.பிரையன் லாரா போல் சர்வசாதாரணமாக 400, 500 என்று பின்னூட்டம் வாங்குவார். இஸ்ரேல் ஆதரவு, (பூர்வ ஜன்ம பந்தம்) சோ ஆதரவு, ராஜாஜி மீது மாறாத அன்பு,மகரநெடுங்குழைகாதன் மீது எல்லை தாண்டிய பக்தி (அவன் அருளின்றி டோண்டு ஏது?), தலித்கள் மீது அன்பு,பெண்ணியம், வணிக ஞானம் என தம் கருத்தை துணிந்து வல்லமையோடும்,நெஞ்சு துணிவோடும் உரத்து சொல்லும் டோண்டுவை வலைபதிவு உலகின் சச்சின் டெண்டுல்கர் என்று அழைத்தால் மிகையல்ல. (மறுபடியும் ரொம்ப ஓவர்)
நன்றி: #வாசகர் பரிந்துரை (19/06/06)
தேன்கூட்டிற்கும், என்னை பரிந்துரை செய்த வாசகருக்கும் மிக்க நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்த்துக்கள் டோண்டு சார்!
ReplyDeleteமிக்க நன்றி ஜீவா அவர்களே.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
சிறப்பான ஒருவருக்கு செய்த சிறப்பான செயல் இது!
ReplyDeleteமட்டற்ற மகிழ்ச்சி!
துவக்கி வைத்த பின்னர் வரவே இல்லையே நம் பக்கம்!
மிக்க நன்றி எஸ்.கே. அவர்களே.
ReplyDeleteஇப்போதுதான் உங்கள் ஒரு பதிவில் பின்னூட்டமிட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மிக்க நன்றி!
ReplyDelete"ஆறு" பற்றியும் கருத்து சொல்வீர்களென வேண்டுகிறேன்.
ஆறு பற்றியும் கருத்து போட்டாகி விட்டது. மிக அருமையான பதிவு. வாழ்க்கை அற்புதமயமானது.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
//பிரையன் லாரா போல் சர்வசாதாரணமாக 400, 500 என்று பின்னூட்டம் வாங்குவார்.//
ReplyDeleteஅதுல பாதி மத்த பதிவுகள்ல போட்ட உங்க பின்னூட்ட நகல் தானே சார்.. அதைச் சொல்லாம விட்டுட்டாங்க!! :)
வாழ்த்துகள் :)
நன்றி பொன்ஸ் அவர்களே. அந்த நகல் பின்னூட்டங்கள் போலி டோண்டுவுக்கு எதிரான என் போர் யுக்தியை சேர்ந்தவை.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்த்துக்கள்
ReplyDeleteடோண்டு சார்,
ReplyDeleteவிஷயம் அறிந்ததும் சந்தோஷப்பட்டேன். வாழ்த்துக்கள்.
>>> டோண்டுவை வலைபதிவு உலகின் சச்சின் டெண்டுல்கர் என்று அழைத்தால்<<<<
உண்மையில் சச்சினை கிரிக்கெட் உலகின் டோண்டு என்றல்லவா நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
:-)
நன்றி, தருமி மற்றும் பட்டாம்பூச்சி அவர்களே.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
ம்யூஸ் அவர்களே,
ReplyDeleteநீங்கள் கூறுவது ஓவரோ ஓவர் (ஆஸ்ட்த்ரேலிய ஓவர்-8 பந்துகள்). மிக்க நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மகிழ்ச்சி டோண்டு அவர்களே
ReplyDeleteஹரிஹரன் அவர்களே,
ReplyDeleteநன்றி. சைக்கிள் ஒரு நாளைக்கு 40+40 அல்ல, 20+20 தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மிக்க நன்றி சிவஞானம்ஜி அவர்களே.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்த்துகள் டோண்டு சார்.
ReplyDeleteவாழ்த்துக்கள்!!
ReplyDelete//சென்னையை சேர்ந்த டோண்டு என்ற நரசிம்மன் ராகவன் அவர்களை அறியாதவர்களே வலைபதிவு உலகில் இல்லை எனலாம். (இது ரொம்ப ஓவர்)//
வலைப்பதிவுலகில் என்றில்லாவிட்டாலும் தமிழ்மணத்திலும் தேன்கூட்டிலும் உங்களை அறியாதவர் இருக்க முடியாது.
வாழ்த்துகள்.
ReplyDeleteதேன் கூடு சொன்னது ஒன்றும் மிகையே இல்லை. நான் அதிசயித்து பார்க்கும் வலைப்பதிவாளர்களில் நீங்களும் ஒருவர்.
எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் கொண்ட பணியில் தளராது செல்லும் பாணி என்னை வியக்க வைக்கிறது. உங்க போராட்டக்குணம் எங்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறது.
மீண்டும் வாழ்த்துகள்
- பரஞ்சோதி
மிக்க நன்றி முத்துக்குமரன் அவர்களே. உங்கள் பழைய போட்டோ மிக ஸ்மார்ட்டாக, துறுதுறுவென இருந்தது. அதையே திரும்பப் போடுங்களேன்.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
மிக்க நன்றி மணியன் அவர்களே.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி பரஞ்சோதி அவர்களே. நீங்கள்தானே டால்ஸ்டாய் அவர்களது கதைகளை வலைப்பூவில் பதித்தது. "What men live by" என்ற கதைக்கு நான் பின்னூட்டமும் இட்டேன்.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் டோண்டு ஐயா.
ReplyDeleteமிக மிக நன்றி செல்வன் அவர்களே.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
//உங்கள் பழைய போட்டோ மிக ஸ்மார்ட்டாக, துறுதுறுவென இருந்தது. அதையே திரும்பப் போடுங்களேன்.//
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
உள்குத்தேதும் இல்லை என்றே நினைக்கிறேன். :-)). உங்கள் விருப்பப்படியே மாற்றிவிட்டேன் சார்.
நன்றி
என் கோரிக்கைக்கு மதிப்பு கொடுத்து உடனே பழைய படத்தை மீட்டதற்கு மிக்க நன்றி முத்துக் குமரன் அவர்களே.
ReplyDeleteஉள்குத்து எதுவும் இல்லை என்பதை உறுதி செய்கிறேன். அப்படத்தின் dynamic young man's look எனக்கு மிகவும் பிடிக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
(Putting people on Pedestal is a global phenomenon...!!)
ReplyDeleteஓவரா புகழ்ந்தாலும் டோண்டு சார் டோண்டு சார் தான்...
ரஜினி ரசிகர்கள் போல்...
"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்!! "
-டோண்டு(#4800161) ரசிகர் மன்றம்,
சிம்ரன் ஆப்பக்கடை முதல் மாடி
இஸ்ரேல் பஸ் ஸ்டாண்ட்
இஸ்ரேல்
:))
உங்களுக்கு என் அப்பா வயது என்றாலும் உங்கள் பதிவுகள், பின்னூட்டங்கள் படிக்கும்போது ஏதோ என் கல்லூரி நண்பர்களுடன் அடிக்கும் லூட்டியும் ஞாபகம் வரும். (எனக்கு வயது 25!) I think thats you speciality...You keep your thoughts young and many people miss it.
Congratulations.
sincerely
-டோண்டு(#4800161) ரசிகர் மன்றம்,
ReplyDeleteசிம்ரன் ஆப்பக்கடை முதல் மாடி
இஸ்ரேல் பஸ் ஸ்டாண்ட்
இஸ்ரேல்
விவேகானந்தர் தெருவை விட்டு விட்டீர்களே!!!!
மிக்க நன்றி வஜ்ரா ஷங்கர் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்த்துக்கள் டோண்டு சார்
ReplyDeleteநன்றி லக்கிலுக் அவர்களே.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
தேன்கூட்டுப்பிழிவின் அளவுக்கதிகமான இனிப்பை நீங்கள் 'ஓவர்' என்று சொல்லிவிட்டதால்.... சொல்லிவிட்டதாலும், வாழ்த்துக்கள் சார்.
ReplyDeleteநன்றி ராஜா அவர்களே.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
ஒன்றைப் போட மறந்து விட்டார்கள்.
ReplyDelete50 60 வருடங்கள்கூட இவருக்கு மிகச் சமீபம். "சமீபத்தில் 1952..." என்று சொல்வதுதான் இவருடைய சிறப்பம்சம்
"சமீபத்தில் 1952..." என்று சொல்வதுதான் இவருடைய சிறப்பம்சம்"
ReplyDeleteஅதானே. நன்றி சிவப்பிரகாசம் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// உள்குத்து எதுவும் இல்லை என்பதை உறுதி செய்கிறேன். அப்படத்தின் dynamic young man's look எனக்கு மிகவும் பிடிக்கும்.//
ReplyDeleteரெம்ப நன்றி டோண்டு சார்.
நான் விளையாட்டுக்குத்தான் அப்படி கேட்டேன்.என் குடும்பத்தாருக்கும் அந்த படம் மிகவும் பிடிக்கும். தமிழகம் வரும்போது உங்களைச் சந்திக்கிறேன்.( ஆகஸ்டில்).
**
பதிவுக்கு சம்பந்தமில்லாதது -
தமிழ்மணம் விற்பனைக்கு என்று முகப்பில் வருகிறதே. ஏதேனும் விபரங்கள் தெரியுமா?
முத்துக் குமரன் அவர்களே,
ReplyDeleteதமிழ்மணம் விற்பனை பற்றி சிறிது நேரம் முன்புதான் நான் கவனித்தேன். ஒரு தளத்தை நடத்துவது என்பது சிக்கல் மிகுந்த காரியம் அல்லவா?
ஆகஸ்டில் உங்களை சந்திக்க நானும் ஆவலுடன் உள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார், நீங்களும் trc sir-ம் கரெக்டாக் கண்டு பிடிச்சுட்டீங்க. அதன் முதலிலேயே அவர் ஜெமினியில் வேலை பார்த்தது பத்தி எழுதலை.அப்புறம் உங்க நண்பர் நிறைய விசிட் செய்கிறார். தமிழினியிடம் சொல்லுங்கள். இன்னிக்கு என்ன உங்களுக்கு என் வலைப்பூ பக்கம் வர நேர்ந்தது? இல்லாட்டி இன்னும் ஒரு இரண்டு பதிவு சித்தப்பா பத்தி ஓட்டி இருப்பேன்.
ReplyDeleteநானே உங்களை வாழ்த்த வரணும்னு இருந்த போது நீங்களே வந்துட்டீங்க. தேன்கூட்டி
ReplyDeleteற்கு எங்கள் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அப்புறம் தமிழ்மணம் விற்பனைக்கு என்று மூன்று நாட்களாக வருகிறதே? அதனால் நம் வெளியீடுகளுக்கு ஏதாவது தடங்கல் வருமா?
நன்றி கீதா அவர்களே. அசோக மித்திரன் கொத்தமங்களம் சுப்புவை பற்றி எழுதியதை உங்கள் அதே சித்தப்பா பதிவில் பின்னூட்டமாக இட்டுள்ளேன். நேரம் கிடைக்கும்போது சித்தப்பாவைக் கேட்கவும். அவரை நான் விசாரித்ததாகவும் கூறவும். அவர் எனது அபிமான எழுத்தாளர்.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி கீதா அவர்களே. தமிழ்மணம் விற்பனை குறித்து எனக்கு ரொம்பத் தெரியாது.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார், நீங்க படிச்சது இந்த ஒரு பதிவு தான். சித்தப்பா பத்தி நிறையப் பதிவு போட்டிருக்கேன். அதிலே தான் முதலிலேயே அவர் ஜெமினியில் வேலை பார்த்தார் என்று கூறவில்லை. கூறினால் கண்டுப்பிடித்திருப்பார்கள் இல்லையா அதான். ஆனால் அதை உங்களுக்குத் தெளிவாக்கவில்லை.
ReplyDeleteசித்தப்பாவை பற்றி ஏற்கனவே பதிவு போட்டீர்களா என்ன? தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லையே?
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
பதிவுலகின் சிம்மத்துக்கு இந்த சிற்றெறும்பின் வாழ்த்துக்கள்.இன்னும் பல சிறப்புக்கள் உங்களை வந்தடையப் போவது திண்ணம்.
ReplyDeleteநன்றி ராஜரிஷி சோ ரசிகன் அவர்களே. மற்றப்படி சிம்மம் என்றெல்லாம் அழைக்காதீர்கள், ரொம்ப கூச்சமாக இருக்கிறது.
ReplyDeleteநான் சோ அவர்கள் பற்றி போட்ட பதிவுகளை படித்தீர்களா?
http://dondu.blogspot.com/2005/01/thuglak-35th-anniversary-meeting-on.html
http://dondu.blogspot.com/2005/02/blog-post_20.html
http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்கள் சோ பற்றிய பதிவுகளை படித்திருக்கிறேன்.மிகவும் நன்றாக உள்ளது.
ReplyDeleteஅதானே, படிக்காமலா எனக்கு அம்மாதிரி பின்னூட்டம் இட்டிருப்பீர்கள்?
ReplyDeleteஇணையத்தில் பலர் சோ அவர்களை மிக அதிகமாக எதிர்க்கின்றனர். அவர்களும் அவரைப் பற்றிப் பதிவுகள் போட்டுள்ளனர். அவற்றைப் படிப்பதும் முக்கியம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்த்துக்கள் டோன்டு அவர்களே...உங்கள் வலைப்பதிவை பற்றி விகடன்.காம் ல கொஞ்ச நாளுக்கு முன் படித்தேன்..ஆனால் இப்போ தான் உங்கள் வலை பக்கத்திற்கு வர முடிந்தது.....
ReplyDeleteநன்றி ஸ்யாம் அவர்களே,
ReplyDeleteவிகடன்.காமில் என்னை பற்றி வந்ததா? நான் பார்க்கவில்லையே? சுட்டி தர இயலுமா? ஒரு வேளை குமுதம் ரிப்போர்டர் கட்டுரையை குறிப்பிட்டீர்களா?
நிற்க, உங்கள் பதிவுக்குப் போய் பார்த்தேன். அது என்ன தங்கிலீஷில் போட்டுத் தாக்கியிருக்கிறீர்கள்? தமிழ்மணத்தின் இந்தப் பக்கத்துக்கு செல்லவும். அங்கு இகலப்பைக்கு சுட்டி தரப்பட்டுள்ளது. உங்கள் கணினியில் நிறுவிக் கொண்டு தமிழில் தட்டச்சு செய்யவும். தமிழ்மண கருவிப் பட்டையை சேர்த்துக் கொள்ளவும்.
பார்க்க: http://www.thamizmanam.com/resources.php
அன்புடன்,
டோண்டு ராகவன்
அடடடடடா..
ReplyDeleteஒங்கள பத்தி ஒங்களவிட தேன்கூடுகாரங்க நல்லாவே (நன்னாவே?) தெரிஞ்சி வச்சிருக்காங்களே சார்..
வாழ்த்துக்கள்..
ரொம்பத்தான் ஓவரா எழுதிட்டாங்க, ஜோசஃப் அவர்களே. எனக்கு ரொம்ப கூச்சமாகி விட்டது.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்