நிரந்தர பக்கங்கள்

6/27/2006

உட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னில் வலைப்பதிவர் சந்திப்பு

நண்பர்களே,

வரும் ஞாயிற்றுக் கிழமை, ஜூலை மாதம் 2-ஆம் தேதி மாலை 6 மணியளவில் சென்னை உட்லேண்ட்ஸ் டிரைவ்-இன்னில் ஒரு சென்னை வலைப்பதிவாளர்கள் சந்திப்பு வைக்க எண்ணியுள்ளோம் (டிபிஆர். ஜோசஃப் மற்றும் நானும்). சென்னை வலைப்பதிவாளர்கள், சென்னையில் தற்சமயம் இருக்கும் வெளியூர் வலைப்பதிவாளர்கள் ஆகியோரைக் கண்டு உரையாட ஆசை. சந்திப்பு சுமார் 2 மணி நீடிக்கலாம்.

போன முறையே செய்திருக்க வேண்டியது, ஆனால் செய்யவில்லை. மீட்டிங்கிற்கான செலவு பற்றி பேசுகிறேன். இம்முறை சந்திப்புக்கு வருபவர்கள் எல்லோருமே செலவை பகிர்ந்து கொள்கிறோம். செலவு என்ன பெரிய செலவு, போண்டா, காபி ஆகியவைக்கு ஆவதுதான். நிறைய பேர் வந்தால் ஒரு ஹாலை அங்கே இரண்டு மணி நேரத்துக்கு எடுக்க வேண்டி வரலாம். சாதாரணமாக இது தேவைப்படாது, பார்க்கலாம்.

This will be Dutch treat.

போன முறை குறைந்த அவகாச அறிவிப்பு விட்டதால் பலர் வர முடியவில்லை. ஆகவே இம்முறை போதிய அவகாசம் கொடுத்துள்ளோம். வர எண்ணம் உள்ளவர்கள் இப்பதிவின் பின்னூட்டமாக அதை வெளியிடலாம். தொலைபேசியிலும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

டோண்டு ராகவன்: 9884012948
டி.பி.ஆர். ஜோசஃப்: 9840751117

என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

74 comments:

  1. wow, first time visiting. am impressed. :)

    ReplyDelete
  2. "wow, first time visiting. am impressed. :)"

    Do you mean the blog post or the proposed meeting? Kindly clarify. :)

    Regards,
    Dondu N.Raghavan

    ReplyDelete
  3. ம் ஜோல்னாப் பையைத் தூக்கி தோள்ள மாட்டிக்க வேண்டியதுதான்.

    சரி! வாழ்த்துக்கள். இம்முறை நிறைய பேரை சந்தித்து உரையாடுங்கள்.

    அனைவரையும் விசாரித்ததாக கூறுங்கள். சந்திப்பு பற்றி விலாவாரியாக பதிவும் போடுங்கள்.

    ReplyDelete
  4. நன்றி, நாமக்கல் சிபி அவர்களே. உங்களுக்கும் நயனதாராவுக்கும் நட்பு என்றெல்லாம் அடிபட்டதே, யாருடைய பதிவு என்பதை மறந்து விட்டேன். உங்களை சிலாகித்து அதில் பின்னூட்டமும் இட்டேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. இந்த போண்டாவைத்தவிர எதுவும் தெரியாதா தலைவா உங்களுக்கு...மிஞ்சி மிஞ்சி போனா நாலே முக்கா ரூவா ஆகப்போவுது...மசால் தோசை - கீரை வடைன்னு எதாவது அடியுங்க...

    அங்க ராஜான்னு ஒரு சர்வர் இருக்கான்...அவனிடம் ரவியைத் தெரியும்னு சொல்லிபாருங்க...

    :)

    ReplyDelete
  6. நன்றி செந்தழல் ரவி அவர்களே,

    நீங்கள் கூறியபடியே செய்தால் போயிற்று.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. //உங்களுக்கும் நயனதாராவுக்கும் நட்பு என்றெல்லாம் அடிபட்டதே, யாருடைய பதிவு என்பதை மறந்து விட்டேன்.//

    manasu வின் பதிவில். தாங்கள் கொடுத்திருந்த நற்சான்றிதழையும் பார்த்தேன். பதிலும் சொல்லியிருக்கிறேனே!


    :))

    ReplyDelete
  8. தயவு செய்து மனசு பதிவின் சுட்டி தரவும். எங்கே போட்டேன் என்பதை மறந்து தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  9. //இந்த போண்டாவைத்தவிர எதுவும் தெரியாதா தலைவா உங்களுக்கு...மிஞ்சி மிஞ்சி போனா நாலே முக்கா ரூவா ஆகப்போவுது...//

    ரவி நல்லா விசாரிச்சுப் பாருங்க! மெகா சைஸ் போண்டாவா இருக்கப் போகுது!

    போன சந்திப்புல டோண்டு சார் ஒரே ஒரு போண்டா சாப்பிட்டதுல(யே) டின்னர் ஹெவி ஆயிடுச்சுன்னார்.

    :)

    ReplyDelete
  10. http://akannabiran.blogspot.com/2006/06/blog-post_20.html

    ReplyDelete
  11. என்ன சிபி, சேட் கணக்கில் பின்னூட்டங்கள் வேக வேகமாக வருகின்றன? சபாஷ்.

    சுட்டிக்கு நன்றி. போடிக்கெல்லாம் வரமாட்டேன். சின்னப் பசங்களுக்கும் அவர்கள் கோட்டா ஃபிகர்கள் கிட்டக் கடவது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. போடிக்கெல்லாம் --> போட்டிக்கெல்லாம் என்று படிக்கவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. டோண்டு ராகவன் சார்,

    தங்கள் ஏற்பாட்டுக்கும் இந்த அழைப்புக்கும் நன்றி.

    நான் போனில் பேசியபடி, ஞாயிறு மாலை தங்களை சந்திப்பேன். இப்போதைக்கு வேறு வேலை ஒன்றும் குறுக்கிடவில்லை. மற்ற நண்பர்களையும் சந்திக்க ஆவல்.

    Looking forward!

    நன்றி

    ReplyDelete
  14. மிக்க நன்றி ஜயராமன் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  15. ஹைய்யா 02/07
    ஹைய்யோ போண்டா,

    ReplyDelete
  16. சரி, போண்டா வேண்டாமென்றால் வடை சாம்பார் இருக்கவே இருக்கு.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  17. Sorry Sir,

    I am posting from a surfing centre.

    I'll be there.

    I hope more bloggers would make it to the meet..

    ReplyDelete
  18. நன்றி ஜோசஃப் அவர்களே. நானும் அதையேத்தான் எதிர்ப்பார்க்கிறேன். 6 ந்நள் இருக்கே, பார்க்கலாம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  19. டோண்டு சார்,

    இனிமையான சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.

    நான் சென்னைக்கு ஆகஸ்ட் இரண்டாவது வார வாக்கில் 15நாள் விடுமுறையில் வர இருக்கிறேன்.

    சென்னை வலைபதிவர் சந்திப்பு மாதமொருமுறை நடக்கின்றதா?

    அன்புடன்,

    ஹரிஹரன்

    ReplyDelete
  20. பின்னூட்டத்துக்கு நன்றி ஹரிஹரன் அவர்களே. ஆகஸ்ட் மாதம் சந்தித்தால் போயிற்று. என் தொலைபேசி எண்தான் இருக்கிறதே.

    எப்போது வேண்டுமானாலும் பேசலாமே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  21. உட்லண்ட்ஸ் டிரைவ் இன் என்றால் அண்ணா மேம்பாலம் பக்கத்துல இருக்குறதுதான....அதற்குள் உடம்பு தேறினால் வர முயல்கிறேன். போன முறை வர முடியாமல் போய் விட்டது.

    ReplyDelete
  22. நன்றி ராகவன் அவர்களே. உடம்பு இப்போது தேவலையா? நன்றாக ஓய்வு எடுங்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  23. சந்திப்பு இனிதே நடக்க வாழ்த்துக்கள், நயன் தாரா அல்லது அஸின் சிறப்பு விருந்தினராக அழைக்கும் என்னம் இருந்தால் சொல்லுங்கள் அடித்து பிடித்து வந்து விடுகிறேன்...
    சிபியும் இருப்பார்.. :-)

    ReplyDelete
  24. ஆகா எனக்கு இன்னைக்குத்தான தெரியுது எப்பிட்றா டோண்டு சாருக்கு மட்டும் நூற்றுக்கணக்குல பின்னூட்டம் வருதுன்னு எல்லாம் அவரே போட்டுக்குறார். இங்க இப்ப இருக்கிற 23 ல 11 அவரே போட்டது. சார் நீங்க புட்பால் வெளாட போனா எதிர் டீம் ஈசியா ஜெயிக்கும், ஸேம் சைடு கோல்தான்:
    எதுக்கும் ஒரு :)) போட்ருவும் :))))
    ( இந்த பின்னூட்டம் வருமா?))

    ReplyDelete
  25. ( இந்த பின்னூட்டம் வருமா?))
    கண்டிப்பாக வரும்.

    வீட்டுக்கு ஒருவர் வருகிறார். அவர் வருகைக்கு நன்றி தெரிவிப்பதில்லையா, இல்லை அவர் வந்தால் வரட்டும் என்று நீங்கள் கோலங்கள் சீரியல் பார்ப்பவரா?

    இதற்கு பெயர் அடிப்படை நாகரிகம். அதனது பை ப்ராடக்டாக அதிகப் பின்னூட்ட்ங்கள் வந்தால் வேண்டாம் என்றா கூறப் போகிறேன்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  26. //விருந்தாளி வந்தால்// விருந்தாளி வரும்போது அழைப்பது நாகரீகமே ஆனால் அவர் சும்மா தெருவில் இறங்கிவிட்டு திரும்ப வீட்டுக்கு வரும்போது அழைத்தால் கொஞ்சம் கூச்சமாக அல்லவா இருக்கிறது:))

    ReplyDelete
  27. "அவர் சும்மா தெருவில் இறங்கிவிட்டு திரும்ப வீட்டுக்கு வரும்போது அழைத்தால்..."

    அவர் ஏதாவது புதிதாகக் கேட்டால் பதிலளிக்க மாட்டீர்களா என்ன? அல்லது விருந்தாளி அவ்வாறு திரும்பி வரும்போது அபியையும் தொல்ஸையும்தான் பார்ப்பீர்களா (கோலன்ங்கள்).

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  28. பின்னூட்டங்களின் எண்ணிக்கை 27
    ஆனால் அறுவர் மட்டுமே [உங்களையும் சேர்த்து] வருவதற்கான
    அறிகுறி தெரிகின்றது...போண்டா இல்லே;மசால்தோசைனு சொல்லிப்
    பாருங்க;ஒருவேளை ந்யூஸிலேயிருந்துகூட வலைப்பதிவர் வரக்கூடும்

    ReplyDelete
  29. மசால்தோசை ஆர்டர் செய்வதிலும் பிரச்சினை இல்லை. ஏற்பாடு எப்படியென்றால் பில் தொகை எவ்வளவுக்கு வருகிறதோ அதை அப்படியே எல்லோரும் சமமாகப் பங்கு கொள்வதுதான். அச்சமயம் யார் என்ன சாப்பிட்டார்கள் என்றெல்லாம் பார்க்கப் போவதில்லை, அது சள்ளை பிடித்த காரியம்.

    உதாரணத்துக்கு, மொத்த பில் 300 ரூபாய், 10 பேர் இருந்தார்கள் என்றால் ஆளுக்கு 30 ரூபாய். தீர்ந்தது விஷயம்.

    மசால்தோசை வேண்டுபவர்கள் அதையும் ஆர்டர் செய்யலாம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  30. நியூஸியிலே இருந்து மசால் தோசைக்கெல்லாம் யாரும் வரமாட்டாங்க. 'மசால் வடை'ன்னு சொல்லிப்பாருங்க. வரலாம்:-))))

    சந்திப்பு நன்றாக நடக்க வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  31. "நியூஸியிலே இருந்து மசால் தோசைக்கெல்லாம் யாரும் வரமாட்டாங்க. 'மசால் வடை'ன்னு சொல்லிப்பாருங்க. வரலாம்:-))))"

    சொன்னால் போயிற்று, "மசால் வடை".

    மசால் வடாவுக்கும் இங்கு தடா இல்லை!

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  32. யார் என்ன சாப்பிட்டார்கள் என்றெல்லாம் பார்க்கபோவதில்லை//
    வர்ரே வாஹ்..

    ReplyDelete
  33. வர்ரே வாஹ்..

    யார் பார்க்கிறார்களோ இல்லையோ, சப்ளையர் பார்ப்பார்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  34. //உதாரணத்துக்கு, மொத்த பில் 300 ரூபாய், 10 பேர் இருந்தார்கள் என்றால் ஆளுக்கு 30 ரூபாய். தீர்ந்தது விஷயம்//
    டோண்டு சார், எப்படி இப்படித் தைரியமாகச் சொன்னீங்க.
    என்னய மாதிரி சாப்பிடக் கூச்சப்பாடாத ஆட்கள் யாராவது வந்தால் தீர்ந்தது கதை.
    (நானும் எல்லா இடத்திலும் இப்படிச் சாப்பிட மாட்டேன், நன்கு பழகிய நண்பர்களுடன் சென்றால் பலருக்கு பர்ஸ் காலியிருகிறது)

    ReplyDelete
  35. "என்னய மாதிரி சாப்பிடக் கூச்சப்பாடாத ஆட்கள் யாராவது வந்தால் தீர்ந்தது கதை.
    (நானும் எல்லா இடத்திலும் இப்படிச் சாப்பிட மாட்டேன், நன்கு பழகிய நண்பர்களுடன் சென்றால் பலருக்கு பர்ஸ் காலியிருகிறது)"
    நீங்கள் சென்னைக்கு வரும்போது அதை டெஸ்ட் செய்தால் போகிறது, அதே டிரைவ் இன்னில்.

    மரவண்டுவுடன் அப்புறம் பேசினீர்களா?


    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  36. //மரவண்டுவுடன் அப்புறம் பேசினீர்களா?//
    மரவண்டுவுடன் கூகுள் சாட் மூலம் பேசினேன். மரவண்டு இந்த முறை வலைப்பதிவாளர்கள் சந்திப்பிற்கு வருகிறாறா?

    ReplyDelete
  37. மரவண்டுவும் வருவார் என்றுதான் நினைக்கிறேன். அவரிடமிருந்து இது வரை போன் காலோ, பின்னூட்டமோ வரவில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  38. சாரே, நானும் ஆஜராகிறேன். வீடும் பக்கத்தில் தான்.

    ReplyDelete
  39. "சாரே, நானும் ஆஜராகிறேன். வீடும் பக்கத்தில் தான்."

    மிக்க மகிழ்ச்சி தங்கவேல் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  40. சிவஞானம் சார்,

    இந்த முறை நிச்சயம் நிறையபேர் வருவாங்க பாருங்க..

    டோண்டு சார்,

    சென்னையில நிறை வலைஞர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது..

    ஆனாலும் பலருக்கும் இத்தகைய கூட்டங்களில் கலந்துக்கொள்வதில் நாட்டம் இருப்பதில்லை என்பதை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது..

    என்ன செய்வது.. நாம் பாட்டுக்கு மாதம் ஒருமுறை நடத்திக்கொண்டே இருப்போம்..

    நரைத்த தலைகளுக்கு வேறு என்ன வேலை என்று நினைப்பவர்கள் நாளாக ஆக வருவார்கள்..

    என்ற நம்பிக்கையுடன்,
    இணை கூட்ட அமைப்பாளர்(?!)
    டிபிஆர். ஜோசஃப்

    ReplyDelete
  41. உங்கள் நம்பிக்கையை நானும் பகிர்ந்து கொள்கிறேன் ஜோசஃப் அவர்களே. நம்பிக்கைதானே வாழ்க்கை?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  42. தங்கவேல் மரவண்டு அவர்களையும் சேர்த்தால்
    8 ஆகின்றது
    நாளை இன்னும் அதிகரிக்கும் என்று
    நம்புகிறேன்

    ReplyDelete
  43. மகேஸ் அவசியம் வந்துடுங்க. நல்ல சான்ஸ்.சும்மா பூந்து வெள்ளாடிடுவோம்

    ReplyDelete
  44. என்ன சார் பெங்களூர் வலைப்பதிவர்கள் கூட்டத்துக்கு போட்டியா இது :-? நடக்கட்டும் நடக்கட்டும்


    அன்புடன்
    ஐயப்பன்

    ReplyDelete
  45. மகேஸ் அவர்களே, சிவஞானம்ஜியுடன் உங்களை அழைப்பதில் நானும் என்னை இணைத்துக் கொள்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  46. ஐயப்பன் அவர்களே,

    9-ஆம் தேதி உங்கள் மீட்டிங்குடன் க்ளாஷ் ஆகக் கூடாது என்ற எண்ணத்தில்தான் 2-ஆம் தேதியே சென்னை மீட்டிங்கை வைத்தேன். முடிந்தால் பங்களூருக்கு நான் வர எண்ணியிருக்கிறேன். நீங்கள் இடமும் நேரமும் முடிவு செய்து விட்டீர்களா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  47. வருக சந்திரசேகர் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  48. //மகேஸ் அவர்களே, சிவஞானம்ஜியுடன் உங்களை அழைப்பதில் நானும் என்னை இணைத்துக் கொள்கிறேன்//
    அழைப்பிற்கு நன்றி டோண்டு மற்றும் சிவஞானம் சார். ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதக் கூட்டதில் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  49. அப்போது மீட்டிங் இருக்கிற்தோ இல்லையோ, கண்டிப்பாக நாம் இருவரும் சந்திக்கிறோம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  50. அடிக்கடி உட்லண்ட்ஸில் சந்திப்பு நடக்கும் மர்மம் என்ன?வெயிட்டரை வெயிட்டாக கவனித்து பில் குறைக்கும் வேலை ஏதேனும் நடக்கிறதா?:D

    போண்டா வடை ஜீரணப் பிராப்தி ரஸ்து.

    ReplyDelete
  51. "வெயிட்டரை வெயிட்டாக கவனித்து பில் குறைக்கும் வேலை ஏதேனும் நடக்கிறதா?:D"

    வெயிட்டரை கவனிப்பது பிடிபட்டால் நம்மை கவனித்து விடுவார்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  52. அது விளையாட்டுக்கு சொன்னது டோண்டு அவர்களே.தவறாக நினைக்க வேண்டாம்.

    ReplyDelete
  53. "அது விளையாட்டுக்கு சொன்னது டோண்டு அவர்களே.தவறாக நினைக்க வேண்டாம்."

    விளையாட்டை ரசித்துத்தான் பதில் பின்னூட்டம் இட்டேன், கவலை வேண்டாம். கூடவே 'கவனிப்பு' சொல்லை வைத்து விளையாட எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  54. டோண்டு ராகவன் சார்,
    வாழ்த்துக்கள்.சந்திப்பு பற்றி விலாவாரியாக பதிவு போடவும்.


    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  55. நன்றி ஓ பார்ட்டி மற்றும் சரவணன் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  56. >>>>> சென்னையில நிறை வலைஞர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது..
    ஆனாலும் பலருக்கும் இத்தகைய கூட்டங்களில் கலந்துக்கொள்வதில் நாட்டம் இருப்பதில்லை என்பதை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது.. <<<<

    டோண்டு சார்... இந்த மாதிரி சந்திப்புக்கு வருபவர்களெல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் பதிவுகளை விடாமல் படித்து பின்னூட்டமிடுபவர்கள்.., என்னைபோன்ற.. அரிதாக வலைப்பூக்களை நியாபகம் வைத்து மீண்டும் அடிக்கடி வந்திடாத வலைஞர்கள் அங்கே வந்தால், நீங்கள் உங்களுக்குள்ளாக பேசிக்கொள்ளும் கதை புரியாது என்றே தவித்து விடுகின்றோம்...

    மேலும்..ஊரில் இல்லை நான் :-(

    ReplyDelete
  57. யாத்ரீகன் அவர்களே,

    நீங்கள் இந்த மீட்டிங்குங்கு வருபவர்களை எல்லாம் என்ன உசத்தியாக சொல்லுகிறீர்கள். உண்மை என்னவென்றால், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நான் மாதக்கணக்கில் பதிவு போடுவதில்லை. சிவஞானம் ஐயாவின் பதிவுகளையும் காண்பதில்லை. மரவண்டுவும் அப்படித்தான்.

    நான் போனதடவை பார்த்தவர்களில் ஜோசப்சார் (இப்போ சூசை சாராக ஆகிவிட்டார்....) டோண்டு மாமா ரெண்டு பேர்தான் மாங்கு மாங்கு என்று எழுதித்தள்ளுகிறார்கள் (ஆனால், நன்றாகத்தான இருக்கிறது...)

    அதனால், இதெல்லாம் ஒரு தடையாக யாரும் நினைக்ககூடாது என்பதற்காகத்தான் சொல்கிறேன்.

    நான் டோண்டு சாருடனும் (மாமா என்று மறுபடியும் சொன்னால் அடிக்கவந்துவிடுவார்..) ஜோசப் சாருடன் போடாத பின்னூட்ட சண்டை கிடையாது. ஆனாலும், இம்மாதிரி மீட்டிங்கில் பல சுவாரசியங்கள் நிகழ்கின்றன.

    நீங்கள் என்ன, எங்கள் மீட்டிங்கில், ப்ளாக் டெக்னாலசியை பற்றி பேசப்போகிறோம் என்றா நினைக்கிறீர்கள். என்னமோ தினசரி பதிவு பண்ணுபவர்கள் மட்டும்தான் வர வேண்டும் என்று சொல்லி விட்டீர்களே.

    இம்மாதிரி சந்திப்புகள் அன்பை வளர்க்கின்றன. நாளை அவர்களின் பதிவுகளை படிக்கும்போது ஒரு நட்பு இழை வெளிப்படுகிறது.

    இங்கு கடித்து, குதறி விழுந்து பிடுங்கும் பலபேர் இம்மாதிரி சந்திப்புகளுக்கு வந்தால் அவர்கள் இன்னும் தன்மைப்பட்டு விடுவார்கள் என்பது நிச்சயம்.

    நன்றி

    ReplyDelete
  58. யாத்ரீகன்சார்
    நான் இன்றுதான் முதல் பதிவே
    போட்டேன்;இது வரையில் பின்னூட்டம் மட்டுமே போட்டுள்ளேன்
    [ஆனா அதற்கு வாங்கிக் கட்டியது ஏராள்ம்.....அது வேறு கதை]
    சென்ற சந்திப்புக்கு செல்லாமலிருந்தால் பதிவுகள் போடுவதில் ஈடுபாடு காட்டியிருக்கவே
    மாட்டேன்
    எவ்விதத் தயக்கமுமின்றி வாங்க.
    இது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் சுகானுபவம்...அம்பிடுதேன்

    ReplyDelete
  59. ஜயராமன் மற்றும் சிவஞானம்ஜி அவர்கள் கூறுவதை நான் வழி மொழிகிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  60. உள்ளேனய்யா, வேலைப் பளுவில், ஓரிரு மாசம் தமிழ்மணம் பக்கம் எட்டிப்பார்க்காம இருந்து, தவிச்ச வாய்க்கு தண்ணி மட்டுமில்ல, தோசையே தர்றேங்கறீங்க, கைக்காசு போடணும் அம்புட்டுதானே, கட்டாயம் வர்றேன்.
    மரபூர் ஜெய. சந்திரசேகரன்

    ReplyDelete
  61. நன்றி சந்திரசேகரன் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  62. TRC அவர்களே
    மரபூர் ஜெய சந்திரசேகரன் அவர்களே
    வருக வருக
    உங்கள் வரவு நல்வரவு ஆகுக

    ReplyDelete
  63. 06/30/06 மாலை 6 மணி வரையில்
    பெங்களூர் சந்திப்பிற்கு 12 எண்ட்ரிகள்
    இங்கே சென்னை முகவரி கொடுத்திருக்கும் வலைப்பூவர்கள் சிலரிடமிருந்து இன்னும் பதில் இல்லை
    இன்னும் ஒரு அறிவிப்பு கொடுங்களேன்

    ReplyDelete
  64. சிவஞானம்ஜி அவர்களே,

    எனக்குத் தெரிந்து வருவதாக பின்னூட்டம் மூலமாகவோ அல்லது தொலை பேசி மூலமாகவோ வருவதாகக் கூறியவர்கள் லிஸ்ட் இதோ. இதில் நாமும் வருகிறோம்.

    1. ஜோசஃப் அவர்கள்
    2. சிவஞானம்ஜி அவர்கள்
    3. ஜெயராமன் அவர்கள்
    4. டி.ஆர்.சி. அவர்கள்
    5. தங்கவேல் அவர்கள்
    6. மரபூர் சந்திரசேகர் அவர்கள்
    7. பாலா அவர்கள்
    8. மரவண்டு அவர்கள் (எதிர்ப்பார்க்கிறேன்)
    9. ரவி பாலசுப்பிரமணியன்
    10. டோண்டு ராகவன்

    இன்னும் ஒரு நாள் இருக்கிறதே பார்க்கலாம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  65. விட்டுப் போன பெயர்கள்:
    11. கோ.ராகவன்
    12. எஸ்.கே. (சைபர் பிரம்மா)

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  66. நான் இம்முறை கண்டிப்பாக வலைப்பதிவாளர் சந்திப்பில் கலந்து கொள்கிறேன்.

    நன்றி
    இரவி பாலசுப்பிரமணியன்.

    ReplyDelete
  67. சந்திப்பு பற்றிய அறிவிப்பு தமிழ்மணத்தின் முகப்புப் பக்கத்தில்
    எல்லாநேரத்திலும் தெரிவதில்லை.பதிவுகள் அதிகம் என்பதாலும் இட நெருக்கடியாலும்
    பின்னுக்குப் போய் விடுகின்றது;மேலோட்டமான பார்வையில் தென்படுவதில்லை. அந்த நேரத்தில்வருகைதரும் வலைப்பூவர்களுக்கு தெரியாமல் போகக்கூடிய வாய்ப்பு உள்ளது.எனவே மீளறிவிப்பு செய்வது பற்றி யோசித்துப் பாருங்கள்,விடுமுறையில் மட்டுமே விஜயம் செய்பவர்களும்
    உண்டே!

    ReplyDelete
  68. அப்படியில்லை சிவஞானம்ஜி அவர்களே. புதுப்பதிவு இன்னு வேகமாகவே காணாது போய்விடுகிறது. பின்னூட்டங்கள் போடும் ஒவ்வொரு முறையும் இற்றைப்படுத்தப் படுத்தப்படுவதால் அது வெளியில் தெரியும் வாய்ப்பு அதிகம். அதனால்தானே நான் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் முடிந்தவரை தனித்தனியாக நன்றி தெரிவிக்கிறேன்.

    மேலும் இப்போது 12 பேர் சேர்ந்து விட்டோம். அதிகம் வந்தால் சந்தோஷம், இல்லாவிட்டால் எல்லோருமே ஒருவருக்கொருவர் பேச முடியும் என்பதுவூம் நல்ல விஷயந்தானே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  69. ராகவன் தன்னை அழைத்துச்செல்லுமாறு கேட்டிருக்காறே
    ஜோசப் அவ்வேண்டுகோளைப் பார்த்திருப்பாரா

    ReplyDelete
  70. "ராகவன் தன்னை அழைத்துச்செல்லுமாறு கேட்டிருக்காறே
    ஜோசப் அவ்வேண்டுகோளைப் பார்த்திருப்பாரா"

    கோ ராகவனா கேட்டார், எங்கே?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  71. ஜோஸப் அவர்களின் "ஆறோ இது ஆறோ"வின் பின்னூட்டங்களில் கடைசிக்கு முந்தைய பின்னூட்டத்தைப்
    பார்க்கவும்.....கோட்டூர்புரம் நீங்கள்
    வரும் வழியிலா?

    ReplyDelete
  72. கோட்டூர்புறம் சற்று சுற்றுவழி, அதோடு அன்று நான் சில இடங்களை கம்பைன் செய்து போவதால் கோட்டூர்புரம் பக்கம் செல்வது கடினம்.

    ஜோசஃப் சார்தான் பதிலும் கொடுத்திருக்கிறாரே?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  73. இன்றுதான் வலைப்பதிவாளர் மீட்டிங். பதிவு மறுபடியும் முதல் பக்கத்தில் வரவேண்டும் என்பதற்காகவே இப்பின்னூட்டம்.

    விவரங்கள் பதிவினுள்ளே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete