நிரந்தர பக்கங்கள்

7/18/2006

இம்சை அரசன் தூண்டிய நினைவுகள்

இம்சை அரசன் புலிகேசி படம் வந்ததுமே நான் எதிர்பார்த்தது ஒன்றைத்தான். அது நடந்து விட்டது. அதாவது அப்படத்தை கர்னாடகாவில் தடை செய்து விட்டார்கள்.

நான் சமீபத்தில் எழுபதுகளில் பம்பாயில் இருந்தபோது எனது நண்பன் ஸ்ரீனிவாசமூர்த்தி கூறியது நினைவுக்கு வருகிறது. அவன் ஷிமோகாவைச் சேர்ந்தவன். "கர்னாடகாவில் உள்ள பள்ளிகளில் இப்போது கூட (எழுபதுகளில்) சரித்திரப் பாடங்களில் புலிகேசிதான் ஹீரோ. வாதாபி கொண்டான் நரசிம்மவர்ம பல்லவன் கொடுங்கோல் மன்னனாகவே சித்தரிக்கப்படுகிறார்." எழுபதுகளில் உள்ள நிலைமைதான் தற்போதும் என்று உறுதியாக நினைக்கிறேன்.

இதே போல பழைய சரித்திரங்கள் இன்னும் நமது தற்கால நம்பிக்கைகளின் மீது ஆட்சி செலுத்துகின்றன என்பதையும் பார்க்கிறேன். உதாரணத்துக்கு "வீரபாண்டிய கட்டபொம்மன்" படம் ஐம்பதுகளில் வெளியானபோது தமிழ்நாட்டில் எட்டையபுரத்தில் உள்ள தியேட்டர்களில் ஒன்றில்கூடத் திரையிடப்படவேயில்லை என்பது பத்திரிகை செய்தி. ஊர்கட்டுப்பாடுதான் அதற்குக் காரணம். தங்கள் மஹாராஜாவின் மீது அவ்வளவு பக்தி ஊர் மக்களுக்கு. ஒன்று இரண்டு மூன்று என்று கூறும்போது கூட, ஆறு, ஏழு, மஹாராஜா, ஒன்பது, பத்து என்றுதான் எண்ணுவார்களாம். ஏனெனில் எட்டு என்று கூறிவிட்டால் மஹாராஜாவைப் பெயர் வைத்துக் கூப்பிடுவதுபோல ஆகிவிடுமாம். அதனால்தான் பாரதியார் கூட தன் எழுத்துக்களில் வீர பாண்டிய கட்டபொம்மனைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன். அக்காலக் கட்டங்களில் கட்டபொம்முவை கொள்ளைக்காரனாகத்தான் குறிப்பிட்டனர் பலர். பாரதியாரும் அவ்வாறே கருதியிருக்கலாம்.

இன்னொரு உதாரணம் "தர்பண் (Dharpan)" என்ற தொடரில் காண்பித்த ஒரு கதையே. (பை தி வே, இந்த தர்பண் சமீபத்தில் எண்பதுகளில் வந்த ஒரு அருமையான தொலைக்காட்சித் தொடர். அது பற்றி பிறகு, வேறொரு பதிவில்). அதில் இந்தியாவில் உள்ள பல மொழிகளில் வந்த சிறந்த சிறுகதைகள் படமாக்கப்பட்டன. அதில் ஒரு கதை பற்றி இங்கே கூறுவேன்.

அது ஒரு ஒரியமொழிக்கதை. புவனேஸ்வரில் ஓர் அலுவலகத்தில் இரண்டு நண்பர்கள். ஒருவர் ஒரிஸ்ஸாவைச் சேர்ந்தவர், இன்னொருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். இருவரும் ஒரிஸ்ஸாக்காரர் வீட்டில். ஒரிஸ்ஸாக்காரர் கிருஷ்ணதேவராயரை பற்றி இகழ்ச்சியாகப் பேசி தங்கள் பழங்காலத்து கலிங்கதேசத்து மன்னரை உயர்த்திப் பேச சீறி எழுகிறார் ஆந்திராக்காரர். பேச்சு தடித்து விரோதமாகப் போகும் நிலையில், ஒரிஸ்ஸாக்காரரின் மனைவி பேச்சில் குறுக்கிடுகிறார்.

அவர் கேட்கிறார்: "இந்த விஷயங்களெல்லாம் நடந்து பல நூற்றாண்டுகளாகி விட்டன. உங்கள் வாதத்தில் கிருஷ்ணதேவராயர் அல்லது ஒரிய மன்னர்தான் சிறந்தவர் என்று ஸ்தாபிப்பதால் உங்களில் ஒருவருக்கேனும் ஏதேனும் பிரயோசனம் உண்டா? இப்போதைக்கு பே கமிஷன் அரியர்ஸை கிருஷ்ணதேவராயரோ, கிருஷ்ணராஜுவோ வாங்கித்தர இயலுமோ? என்ன இது சிறுபிள்ளத்தனமால்ல இருக்கு." (கடைசி வாக்கியத்தை நிச்சயமாகவே வடிவேலு பாணியில் அவர் கூறவில்லை என்பதை நான் இங்கு கூறிவைக்கிறேன்). இரு நண்பர்களும் சிரிக்க, கதை சுமுகமாக முடிகிறது.

இம்மாதிரித்தான் உள்ளூர் மக்களின் செண்டிமெண்ட்டில் சரித்திரம் தப்ப இயலவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

51 comments:

  1. நன்றி எழுத்துப்பிழை அவர்களே, பிழையைத் திருத்தி விட்டேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. தடை செய்யப்பட இதுதான் காரணமா..

    ஒரு விதத்தில் பார்த்தால் ஆரம்ப உயர்நிலைப் பள்ளிகளின் வரலாற்றில் சித்தரிக்கப் படும் சில செய்திகளும் ஆட்களும் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மட்டுமே பார்க்கப்பட்டு எழுதப்பட்டவையே.. பல கோணங்களைக் காட்டி குழந்தைகளைக் குழப்பவும் முடியாது.. ஒரு வரலாற்று ஆசிரியரின் முக்கியத்துவம் எனக்கு இப்போதுதான் புரிகிறது.

    வாழ்த்துக்கள்
    சுகா

    ReplyDelete
  3. I hear theres nobody called pulikesi the 23rd... it a totally fictious character.

    (Disclaimer : This might as well be my personal rant on the movie politics in karnataka.;))

    Also, if ppl. tend to recollect pulikesi (whatever number) when they see this movie... am sure this movie mocks pulikesi (I havent seen the movie yet). So, I dont see any rationale in banning the movie.

    Having been in Bangalore for almost 6 years, I feel that the kannada film industry acts like a bully. For godsake let the people decide about the movie and pulikesi. Some other mockable rules in the kannada film industry are:

    - Never dub a movie. One can only remake the movie, so that you give employment to the kannada film industry people.
    (Now dont get carried away by the reasoning. The quality of kannada remakes most of the times falter, that ppl. only watch the original (in that language - I adore the bangaloreans for thier multi-lingual talent) - even though it is released late, which brings us to the second rule)

    - Other language movies (or is it only for tamil movies? - I dont remember) only 7 days after it is released in other places.

    Non-enforceable rules are:
    - Feel free to break up theatres and riot to protest against the Kaveri-panel decision/late annavaru catching cold (let me make it clear that I like annavaru Rajkumar for his personal integrity and acting)

    All this while the sun shines and pirated CD makers make hay of the situation.

    All this for a cosmopolitan Benthagaluru.

    sigh!

    ReplyDelete
  4. நண்பர் ம்யூஸ் அவர்கள் எனது பதிவைப் பார்க்க இயலாததால் வருத்தப்பட்டு எனக்கு மின்னஞ்சல் இட, நான் அவருக்கு என்னுடைய இப்பதிவை நகலெடுத்து அனுப்பிக்க அவரது பதில் இதோ. அவரது அனுமதியுடன் இது வெளியிடப் படுகிறது. ஓவர் டு ம்யூஸ்:

    "மூதாதையரைப் போற்றுவது குடும்பம் என்கிற ஒரு "அமைப்பின்" முக்கியமான விஷயம். என் மூதாதையரை நான் பெருமைப்படுத்தினால் என் சந்ததியினர் என்னைப் பெருமைப்படுத்துவர் என்கிற நப்பாசையின் விளைவு. இதனாலேயே ஒவ்வொரு குழுவினரும் தங்களது குழு வரலாற்றில் பிரபலமான ஒரு முன்னோரை, அவரது செயல்களை உயர்வாகவே பார்க்க விரும்புகிறார்கள்.

    மேலும், ஒரு குழுவைச் சார்ந்தவர்கள் தங்களது வரலாறாகத் தங்களது மூதாதையரின் வாழ்க்கை முறையை நினைக்கிறார்கள். இக்கருத்தானது தங்களது மூதாதையரை மரியாதையாகப் பார்க்க வைக்கிறது. மூதாதையரை இகழ்வது தங்களையும், தங்களது நம்பிக்கைகளையும், தங்களது வருங்கால சந்ததியினரையும் கீழ்மைப்படுத்தும் முயற்சி என்ற உணர்வும் தோன்றுகிறது.

    தனது மூதாதையர் தவறு செய்திருந்தால், அந்தத் தவறை நியாயப்படுத்தவும், பெருமைப்படுத்தும் காரியங்கள் செய்திருந்தால் அந்த மூதாதையரை தெய்வமாக்கவோ அல்லது தெய்வத்திற்கு இணையாகப் போற்றவோ முற்படுகிறார்கள்.

    தங்களது மூதாதையரை ஒரு சமூகம் இகழுமானால், அந்த சமூகம் தன்னம்பிக்கை அற்றதாகவே ஆகிவிடுகிறது என்பதும் நடைமுறை உண்மை.

    இதை நமது சமகால அரஸியல், ஸமூக நடவடிக்கைகளில் காணலாம். அந்த வகையில்தான் கர்னாடகா அரஸு இம்ஸை........கேஸி படத்தைத் தடை செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    இது போன்ற வெறுமே உணர்வு பூர்வமான விஷயங்களில் நாம் ஈடுபடுவதற்குக் காரணம் நாம் ஒவ்வொருவரும் நம்மை ஒரு குழுவோடு இணைத்துள்ளோம். இந்தக் குழுவானது பிறப்பு அடிப்படையிலுமிருக்கலாம் அல்லது கருத்து அடிப்படையிலுமிருக்கலாம். இதிலிருந்து விலகி நிற்பது ஒன்றுதான் ஒவ்வொரு விஷயத்தையும் ஆப்ஜெக்டிவாக அணுகச் செய்யும். கடினம்தான்.


    >>> உதாரணத்துக்கு "வீரபாண்டிய கட்டபொம்மன்" படம் ஐம்பதுகளில் வெளியானபோது ....<<<<

    >>>> அக்காலக் கட்டங்களில் கட்டபொம்முவை கொள்ளைக்காரனாகத்தான் குறிப்பிட்டனர் பலர்.<<<<<

    முதன்முதலில் வீரபாண்டிய கட்டபொம்மனை ஒரு தேசிய வீரனாக அறிமுகம் செய்தது சிலம்புச் செல்வர் ம பொ ஸி தான் என்று படித்த ஞாபகம். ஒரு தேஸியத்தலைவர் அறிமுகம் செய்ததாலும், தேஸியத்தை உயர்த்துவதாக இருந்ததாலும், தேஸியத்தை எதிர்த்து அசட்டுப் பிசட்டு என்று ஏதாவது சொல்லியே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் (இன்றுவரையில்) இருப்பதாலும், அந்த "வீரபாண்டிய கட்டபொம்மனை" திராவிட அமைப்புகள் எதிர்த்துவந்தன. அவனுக்கு எதிராகப் பல கட்டுரைகளும், கதைகளும் வெளியாயின. லேனா தமிழ்வாணணின் தந்தையான, கல்கண்டு இதழின் ஸ்தாபகர் தமிழ்வாணன் கட்டபொம்மனை ஒரு கொள்ளைக்காரன் என்று நிறுவும் ஒரு புத்தகத்தையே வெளியிட்டார் என்றும் படித்துள்ளேன்.

    ஆனால், திராவிட ஆதிக்கம் குறைந்து தமிழர் ஆதிக்கம் அதிகமானபோது (அதாவது ராமஸாமி நாயக்கரை விட்டு, அண்ணா முதலானோர் கண்ணீர்த் துளிகளாய் வெளியேறியபோது) அதே கட்டபொம்மனை தமிழுக்காகப் பாடுபட்டவன்போல உருமாற்றி, உணர்ச்சிகளைத் தூண்டும் படம் எடுத்தனர். எனக்கென்னமோ, கட்டபொம்மு தமிழில் பேசி இருப்பானா என்பதே ஸந்தேகம்.

    அதே சமயத்தில் கவிஞர் கண்ணதாஸனின் தயாரிப்பில் வெளியான "மருது ஸகோதரர்கள்" என்கிற அற்புதமான படம் "கட்டபொம்மனுக்கு" எதிராகப் போட்டி போட முடியாமல் பெட்டிக்குள் துவண்டது. காரணம் இந்தப் படத்தில் இளைய மருது உணர்வுக்கு ஆர்ப்பட்டவராகவும், பெரிய மருது அறிவுக்கு ஆர்பட்டவராகவும் காட்டப்பட்டனர். அறிவுக்கு ஆட்பட்ட பெரிய மருதுவின் முடிவுகளே வெற்றிபெற்றன. அதாவது, ஆங்கிலேயரை எதிர்த்து அழிந்தது. இந்த உண்மையை அந்தப் படம் அப்படியே காட்டியிருந்தது. மேலும் போரினால் மக்கள் துயரடைவதையும் இது காட்டியிருந்தது. இது ஒருவித சோகமான ட்ராஜடி முடிவை அளித்தன. மக்களுக்குப் பிடிக்கவில்லை. உண்மையை விட கற்பனையின் பலம் அதிகம். (அதிலும் அந்த கற்பனை ஸ்வர்க்கத்தைக் காட்டுவதாக இருப்பின், அந்த ஸ்வர்க்கத்தில் 73 கன்னிப்பெண்கள் உங்களுக்கு காமசுகம் அளிக்கக் காத்திருக்கின்றனர் என்றும் கூறினால் அதைவிட வேறென்ன வேண்டும்?)

    விளைவு? கண்ணதாஸன் கடனாளியானார். நாமோ கீழ்த்தர ஸெக்ஸ் கதைகளை ஆர்ப்பாட்ட தமிழ் நடையில் கட்டுரையாக வெளியிட்ட த்ராவிட ஸிகாமணிகளைத் தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் என்று சிலை வைத்து, பிறந்த இறந்த நாட்களில் திவஸம் கொண்டாடி, "இனமானத் தலைவர் .............. வால்க" என்ற ஜபத்தை கோஷங்களாகச் செய்துவருகிறோம்.

    சூழ் நிலைகளுக்கேற்றவாறு வரலாற்றை மாற்றிக்கொள்வது. அப்படி மாற்றப்பட்ட வரலாறே உண்மை என்று நம்புவது. இப்படித்தான் நமது வரலாற்றறிவும் இருக்கிறது.

    என்னே நம் பகுத்தறிவு, என்னே நம் தமிழறிவு !!


    >>> பாரதியாரும் அவ்வாறே கருதியிருக்கலாம்...<<<

    1. கட்டபொம்மு அந்த காலத்தில் அவ்வளவு ப்ரபலமாக இல்லாமலிருந்திருக்கலாம்.

    2. அல்லது தாங்கள் கருதும்வகையில் அவன் ஒரு கொள்ளைக்காரனாகவே மக்கள் அறிந்து கொண்டிருக்கலாம். உதாரணத்திற்கு ஸ்ரீ வைகுண்டத்தில் வாழ்ந்த "ஜம்பு லிங்க நாடான்" என்கிற கொள்ளைக்காரன். ஒருவிதத்தில் நம்மூரு ராபின் ஹூட். இவனது தொந்தரவு தாங்காமல் என் தாத்தா ஊரையே மாற்றவேண்டியிருந்தது. ஆனால் இதே ஆளைப் பாராட்டி தினத்தந்தியில் ஒரு தொடர்கதை வந்தது.

    3. அவனது செயல்பாடுகள் உண்மையான ஸுதந்திரப் போராட்ட வீரனுக்கு அடையாளமாக இல்லை என்று மஹாகவி கருதியிருக்கலாம்.

    எனக்கு மூன்றாவதே காரணம் என்று தோன்றுகிறது.


    அதெல்லாம் இருக்கட்டும் ஸார். இனி உங்களது கட்டுரைகளை எப்படிப் படிப்பது? காங்கிரஸ் அரஸாங்கம் ப்ளாக்ஸ்பாட்டை தடை செய்துவிட்டதே. இப்படி மாறி மாறி மெயில் அனுப்புவதுதான் வழியா?

    தடை செய்யப்பட்ட வலைத்தளங்கள் பெரும்பாலும் இந்தியாவிற்காகக் குரல் கொடுப்பவை. பாகிஸ்தான் முதலான தீவிரவாத நாடுகளை எதிர்ப்பவை. அவற்றை ஏன் தடை செய்தார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை இந்தியாவை ஆதரிப்பது இந்திய அரஸாங்கத்திற்கு விரோதம் என்று நமது அரஸு நினைக்கிறதா?

    அதனால்தான் தீவிரவாத இயக்கங்கள் தைரியமாக குண்டு வைக்கின்றன. இதுவரை இந்த இந்திய அரசாங்கம் ஒரு தீவிரவாதிக்காவது தண்டனை அளித்திருக்கிறதா? பார்லிமெண்டில் குண்டு வைத்தவன் கூட ஸாக்ஷிகளில்லை என்று காரணம் காட்டப்பட்டு விடுதலை செய்யப்படுகிறான்.

    நாமும், நமது பத்திரிக்கைகளும் தீவிரவாதிகளை குண்டு வெடிக்கப்பட்ட சமயத்தில் மட்டுமே கண்டிக்கிறோம்.

    எளியவன் தோளில் வலியவன் என்பதுதான் நிரந்தர உண்மை."

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. நன்றி சுகா மற்றும் வி வி தேவன் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. வாதாபி மன்னர் இரண்டாம் புலிகேசி கன்னடத்தை தாய் மொழியாக கொண்டவர் அல்ல என்றும் அவர் பிராஹிரத மொழி பேசியவர் என்றும் வரலாறு கூறுகிறது. அவர் அந்நாளில் பேசிய பிராஹிரத மொழி பின்னர் மருவி கன்னடமானது. ஆனாலும் வடக்கே நர்மதையிலிருந்து, தெற்கே துங்கபத்திரை வரை ஒரு குடையின் கீழ் ஆண்ட ஒரு மாவீரரின் மேல் கன்னட மக்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளது ஒன்றும் தவரான செயல் ஆகாது. மேலும், அந்நாளில் புலிகெசி படை எடுத்து வந்து மகேந்திரவர்மரை வென்றதும், அதற்கு நரஷிம்ஹவர்மர் வாதாபி மீது படை எடுத்து சென்று வாதாபி கொண்டதும், அதற்கு பழிவாங்கும் பொருட்டு இரண்டாம் புலிகேசியின் மைந்தர் விக்ரமாதித்யர் மீண்டும் காஞ்சி மீது படை எடுத்ததும் வரலாறு.

    தங்களது வம்சப்புகழை காப்பாற்ற மன்னர்கள் இவ்வாறு போர் புறிவதும், அவ்வெற்றியில் கிட்டிய பொருட்களை (கொள்ளையடித்த என்று கூட சொல்லலாம்) எடுத்து வந்து தனது நாட்டு மக்களுக்கு அளிப்பதும் வழக்கம். இதனால் தோற்ற நாட்டு மக்களுக்கு வென்ற நாட்டு மக்கள் கொடுங்கோளனாகவே தெரிவார்கள். தமிழ்நாட்டு குழந்தைகளுக்கு புலிகேசி கொடுங்கோளனாகவும், கன்னடத்து குழந்தைகளுக்கு நரஷிம்ஹவர்மர் கொடுங்கோளனாகவும் தெரிகிறார்கள்.

    ReplyDelete
  7. சத்தியப்பிரியன் அவர்களே,

    நீங்கள் கூறியது எனது இப்பதிவின் கருத்துடன் ஒத்துப் போகிறது. சத்தியாஸ்ரேயன் என்னும் பட்டப் பெயர் கொண்ட இரண்டாம் புலிகேசி வடக்கேயிருந்து வந்த ஹர்ஷரையே போரில் வென்று ஹர்ஷ சாம்ராஜ்யம் தெற்கே பரவாமல் தடுத்தவர்.

    அவர் மஹேந்திரவர்மர் மீது படையெடுக்க, மஹேந்திரவர்ம பல்லவர் அடக்கி வாசித்து யுத்தம் செய்து அவரை வெறுப்பேற்ற, பிறகு சமாதானம் வந்தாலும் மறுபடி போர் மூண்டு... என்பதைப் பற்றியெல்லாம் கல்கி அவர்களின் சிவகாமியின் சபதத்திலிருந்து படிக்கலாம்.

    எனக்கு ஒரு சந்தேகம். அந்தப் புத்தகத்தைக் கன்னடத்திற்கு யாராவது மொழி பெயர்த்திருக்கிறார்களா?

    அதே நேரத்தில் கிருஷ்ணதேவராயரோ, கிருஷ்ணதேவ ராஜுவோ வந்தா நமக்கு பே கமிஷன் அர்ரியர்ஸ் வாங்கிக் கொடுக்கப் போகிறார்கள் என்று கேள்வி கேட்ட அப்பெண்மணியும் லாஜிக்கலாகத்தானே பிரச்சினையை அணுகியிருக்கிறார்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. வேறொரு வழிமுறையைப் பயன்படுத்தி என்னால் ப்ளாக்ஸ்பாட்டைப் பார்க்க முடிகிறது. விக்கிப்பீடியாவிற்கு நன்றிகள்.

    எந்த காலத்திலும் மாறாத விஷயங்கள் என்று சில உண்டு. உதாரணமாக அந்தந்த காலங்களில் ஆளுபவர்களின் தேவைக்காக வரலாற்றைப் பயன்படுத்துவது.

    இந்த படம் தடை செய்யப்பட்டதற்கான நிஜமான காரணங்களை வி வி தேவன் பட்டியலிட்டிருக்கிறார். அவைதான் உண்மையான காரணங்கள்.

    தமிழ் படங்களை ரீ மேக் செய்வது டாக்டர். ராஜ்குமார் ஆரம்பித்து வைத்த பாரம்பர்யம். ரீ மேக் என்றால் அப்படி ஒரு காப்பி ரீ மேக். நடிகர்களையும், பாஷையையும் தவிர்த்து எல்லாமே அப்பட்டமான காப்பிதான். தமிழ் படங்களில் நடித்த நடிகர்களின் கர்ச்சீப்பிலிருந்து, உடைகள்வரை (துவைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்).

    உதாரணமாக ஷரத் குமார் இரட்டை வேடம் போட்டு நடித்த ஒரு படத்தை விஷ்ணுவர்த்தனைப் போட்டு எடுத்தார்கள். தமிழ் படத்தில் ஷரத் குமார் களத்து மேட்டில் வேலை செய்வதாகவும், அவருடைய உடம்பின் அழகில் ஒரு பெண் மயங்குவதாகவும் காட்ஷி. ஷரத் குமாரின் இரும்பு உடம்பை விஸ்தாரமாகக் காட்டியிருப்பார்கள். அடக் கடவுளே, அதையும் காப்பியடித்து வயதான விஷ்ணுவர்த்தணின் மெய்யழகில் (?) ஒரு பெண் மயங்குவதாகக் காப்பி - எல்லாம் தளர்ந்து போய், தொந்தியும், தொப்பையுமாய்.

    இப்படி எல்லாம் செய்தால் பின்னர் எப்படி ஸார், கன்னட ரீ மேக்குகள் ஓடும்? மக்கள் ஒரிஜினலையே தமிழில் பார்த்து ரஸிக்கிறார்கள்.

    ஹிந்தி மற்றும் தெலுகு படங்களும் ஓடுகின்றன. ஆனால் இந்த கன்னட வெறியர்கள் இவற்றை எதிர்க்காததற்குக் காரணம் இந்தப் படங்களை இவர்கள் இன்னும் ரீமேக் செய்ய ஆரம்பிக்கவில்லை என்பதுதான்.

    தமிழ்-கன்னட ப்ரச்சினையை அரஸியல்வாதிகள் போல ஸினிமாக்காரர்களும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.


    ஒரு காலத்தில் கமல ஹாஸன் நல்ல படங்களை கன்னடத்தில்தான் எடுக்க முடியும் என்று கூறி படித்திருக்கிறேன். இன்னமும் நல்ல டைரக்டர்கள் இருக்கிறார்கள். ராஜ்குமார் குடும்பத்தின் ஆதிக்கத்தால்தான் இவ்வளவு ப்ரச்சினையும்.

    நம்மூரிலும் ஒரு குடும்பம் நூற்றுக்கணக்கான டெலிச்சேனல்களையும், பத்திரிக்கைகளையும் வைத்துக்கொண்டு மீடியாவை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருக்கிறது. போக போகத் தெரியும்.

    >>> அதே நேரத்தில் கிருஷ்ணதேவராயரோ, கிருஷ்ணதேவ ராஜுவோ வந்தா நமக்கு பே கமிஷன் அர்ரியர்ஸ் வாங்கிக் கொடுக்கப் போகிறார்கள் என்று கேள்வி கேட்ட அப்பெண்மணியும் லாஜிக்கலாகத்தானே பிரச்சினையை அணுகியிருக்கிறார்?<<<

    அந்தப் பெண்மணியின் வாதம் சரிதான். ஆனால் இந்தக் காலத்து ராஜாக்கள் நம்முடைய சம்பளத்தை நிர்ணயிக்கிறார்கள். இவர்களது தெய்வங்களாக அந்தக் காலத்து ராஜாக்கள் இருக்கிறார்கள். அந்தக் காலத்து ராஜாக்களின் பகையை இவர்களின் நல்வாழ்வுக்காக அப்படியே மெய்ன்டைன் செய்கிறார்கள். உதாரணத்திற்கு தமிழ் படங்கள், அதன் கன்னட ரீ மேக்குகள் வெளியாகி பல நாட்கள் கழித்துதான் வெளி வரவேண்டும் என்பது. வருடந்தோறும் மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டால் எங்களுக்குப் ப்ரச்சினை என்று சொல்லி தமிழ் விவஸாயிகளை கொல்லுவது. பெங்களூரில் பிடிஏ விற்கும் நிலங்களை கன்னடர்கள் மட்டுமே வங்க முடியும் என்று வைத்திருப்பது. என்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டு போகலாம்.

    ReplyDelete
  9. "ஷரத் குமாரின் இரும்பு உடம்பை விஸ்தாரமாகக் காட்டியிருப்பார்கள். அடக் கடவுளே, அதையும் காப்பியடித்து வயதான விஷ்ணுவர்த்தணின் மெய்யழகில் (?) ஒரு பெண் மயங்குவதாகக் காப்பி - எல்லாம் தளர்ந்து போய், தொந்தியும், தொப்பையுமாய்."

    :)))).
    தவறு செய்து விட்டார்கள். சரத்குமாரின் உடலை அப்படியே வைத்துக் கொண்டு விஷ்ணுவர்த்தனின் தலையை சூப்பர்போஸ் செய்திருக்க வேண்டும்!

    அதே போல உரிமைக்குரல் படத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆந்திர விவசாயியின் பஞ்சக்கச்ச வேட்டியைக் கட்டிக் கொண்டு வருவார்.

    கன்னடத்தில் நான் பார்த்த நல்ல படங்கள்: ஹம்ஸகீதே, கன்னேஷ்வர் ராமா, ஒந்தனூரிக் கதா ஆகியவை மட்டுமே. பிடித்த நடிகர்கள் ஷங்கர் நாக், அனந்த் நாக், கிரீஷ் கார்னாட் மட்டுமே. நம்மூர் சாருஹாசன் கன்னடத்தில் நடித்து அவார்டையும் தட்டிச் சென்ற படத்தை காண முடியவில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. நம்மவா(பாப்பான்) சாருஹாசன் என்று சொல்லும் வோய்!

    ReplyDelete
  11. /////நீங்கள் கூறியது எனது இப்பதிவின் கருத்துடன் ஒத்துப் போகிறது. சத்தியாஸ்ரேயன் என்னும் பட்டப் பெயர் கொண்ட இரண்டாம் புலிகேசி வடக்கேயிருந்து வந்த ஹர்ஷரையே போரில் வென்று ஹர்ஷ சாம்ராஜ்யம் தெற்கே பரவாமல் தடுத்தவர்.//////

    இது தவறான தகவல் என்று நினைக்கிறேன் டோண்டு சார்.... தெற்கே படையெடுத்து வந்த ஹர்ஷவர்த்தனரிடம் புலிகேசி ஒரு ஒப்பந்தம் மூலமாக சமாதானமாக போனதாகத் தான் நான் வரலாறு படித்திருக்கிறேன்.... தவறாக இருந்தால் திருத்துங்கள்....

    ஆனாலும் ஹர்ஷவர்த்தனர் அந்த சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் போரிடவும் தயாராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.... அத்தகைய வீரம் புலிகேசி மன்னரிடம் இருந்தது.....

    ReplyDelete
  12. சாருஹாசன் தமிழகத்தைச் சேர்ந்தவர், நம்மவர். அது போதும் எனக்கு. அப்படத்தின் பெயரும் இப்போதுதான் நினைவுக்கு வந்தது. தபரணகதே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. ஒரு போரில் போரிட்டும் வெற்றி பெறலாம், போரே செய்யாதும் வெற்றி பெறலாம். ஹர்ஷவர்த்தனர் அதுவரை போரில் தோற்றவரல்ல. இரு மன்னர்களுமே ராஜதந்திரத்துடன் நடந்துகொண்டு பெருஞ்சேதத்தைத் தவிர்த்திருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  14. மியூஸ் எழுதுவதை பார்க்கையில் ரொம்ப காமெடியாக உள்ளது....செல்லரித்துப்போன பழைய புத்தகத்தை அலமாரியில் இருந்து தூசு தட்டி எடுத்து படிப்பதுபோல் இருக்கிறது..

    ReplyDelete
  15. "செல்லரித்துப்போன பழைய புத்தகத்தை அலமாரியில் இருந்து தூசு தட்டி எடுத்து படிப்பதுபோல் இருக்கிறது.."

    அப்படியா? விளக்கவியலுமா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  16. ////மியூஸ் எழுதுவதை பார்க்கையில் ரொம்ப காமெடியாக உள்ளது....செல்லரித்துப்போன பழைய புத்தகத்தை அலமாரியில் இருந்து தூசு தட்டி எடுத்து படிப்பதுபோல் இருக்கிறது.. /////

    சூப்பர் ரவி... நான் இதை சபைநாகரிகம் கருதி சொல்லவில்லை..... நீங்கள் சொன்னதால் வழிமொழிகிறேன்....

    வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கும் திராவிட இயக்கங்களுக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை.... அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் கூட காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்தவர் தான்....

    கொஞ்சம் ஏமாந்தால் எலி கூட ஏரோப்ளேன் ஓட்டுமாம் என்ற சொற்றொடர் ஏனோ தேவையில்லாமல் ஞாபகம் வருகிறது.....

    ReplyDelete
  17. சரி, சரி, நீங்களாவது விளக்குங்கள் லக்கிலுக்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  18. கைப்புண்ணுக்கு கண்ணாடி வேணுமா டோண்டு சார்.... ம்யூஸ் உங்களுக்கு மின்மடலில் அனுப்பிய பின்னூட்டத்தை திரும்பிப் படியுங்கள்.... எனக்கென்னவோ ரொம்பவும் ஓவராக சம்பந்தா சம்பந்தமில்லாமல் வாய்க்கு வந்ததை உளறி இருப்பதாகத் தெரிகிறது.... ஒருவேளை உங்களுக்கு கருத்துப் பெட்டகமாகத் தெரிகிறதோ என்னவோ? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பார்வை.....

    ReplyDelete
  19. புலிகேசி படத்தடையில் பல உள்குத்துக்கள் உண்டு. முக்கியக் காரணமே தமிழ்ப்படங்களுக்கு கன்னடப் படங்கள் ஈடில்லை என்ற பொறாமையே காரணம். அதில் தலைமை வகிப்பது ராஜ்குமார் கோஷ்டி, அரசியல் தரப்பில் வட்டல் நாகராஜ் வகையறாக்கள். அதைத்தான் ம்யூஸ் விவரித்தார் (வட்டல் நாகராஜ் என் சேர்க்கை). இதில் என்ன பிரச்சினை?

    நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டீர்களா என்பதை செந்தழல் ரவி கூற வேண்டியதுதான் பாக்கி.

    மற்றப்படி உங்கள் பழமொழி "கைப்பூணுக்கு கண்ணாடி தேவையா" என்றிருக்க வேண்டும். இதை ஔவை ஷண்முகி படத்தில் வரும் ஒரு காட்சியில் பார்க்கலாம். நாகேஷ் கமல் கால்முடிகளை ஷேவ் செய்துவிட்டு அங்கு கண்ணாடி வேறு வைத்துக் காண்பிப்பார். கமல் ப்டேலெனத் தலையில் அடித்துக் கொள்வார்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  20. டோண்டு அவர்களே...

    நான் சொல்லுவது அதில் உள்ள கருத்துக்களை அல்ல...அதன் நடையை தான்...

    அரஸியல், ஸமூக = அரசியல், சமூகம் என்றல்லவா இருக்கவேண்டும்...

    நாங்கள் சென்னைத்தமிழ் எழுதுவதுபோல் இது ஏதாவது தனி நடையா ? ஸரியில்லையே...சீ..சரியில்லையே...ஸனியன் அதை படித்து படித்து ஸரியாகவே வரமாட்டேங்குது...

    மேலும் ஒரு பிழை - வாட்டாள் நாகராஜ் என்று வரவேண்டும்...

    அவர் நம்ம தெருவுல தான் பாஸ் குடியிருக்கார்...தமிழ் ஒழிக என்று குரல் கொடுத்துக்கொண்டிருந்தாலும் அவர் டிரைவர் உட்பட எல்லாம் தமிழர்கள் தான்...எந்த அரசியல்வாதியை நம்ப முடியுது - வெளிவேஷம்தான்...(வேசம் அப்படீன்னா நல்லாயிருக்காதுங்க ஸார்.)

    :) :)

    ReplyDelete
  21. ///நான் இதை சபைநாகரிகம் கருதி சொல்லவில்லை....///

    அதெல்லாம் பார்க்கத்தேவையில்லை...இதை விட கேவலமாக எல்லாம் - வலையில் இருக்கு...மியூஸ் அடுத்த காமெடி செய்யும்போது - நான் ஆள் இல்லை என்றால் நீங்க விட்டுடாதீங்க லக்கி.....

    அப்பப்போ மானிட்டர் செய்துக்கிட்டு இருங்க ஜி

    ReplyDelete
  22. "நான் சொல்லுவது அதில் உள்ள கருத்துக்களை அல்ல...அதன் நடையை தான்..."

    நானும் நீங்கள் அதை கூறுவதாகத்தான் புரிந்து கொண்டேன். இருந்தாலும் உங்கள் வாயிலிருந்தே அதை வரவழைக்க நினைத்தேன். ஆக உங்கள் கருத்தும் லக்கி லுக் கருத்தும் இதில் ஒத்துப்போகவில்லை என்பது புரிகிறது.

    இப்போது ம்யூஸின் நடைக்கு வருவோம். நான் சமீபத்தில் 1952-ல் என்று கூறுவதுபோல அவர் அதிகம் ஸ எழுத்தை பாவிக்கிறார். இதை ஒரு harmless habit ஆகப் பார்த்து புன்னகை செய்து கருத்தை எடுத்துக் கொள்வதையே நான் விரும்புகிறேன். ஒரு குழந்தை க கூறாது த என்று கூறுவதை பெரியவர்கள் ரசிப்பதுபோல என வைத்துக் கொள்ளுங்களேன். ஆனால் விஷயங்களை தொகுத்து எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே. தமிழ்நாட்டு வினோத் துவா என்று நான் அவருக்கு பெயர் வைத்திருக்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  23. /////எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே. தமிழ்நாட்டு வினோத் துவா என்று நான் அவருக்கு பெயர் வைத்திருக்கிறேன்.//////

    NO COMMENTS

    :-)))))))))))

    ReplyDelete
  24. சார்,

    ஒங்க பதிவ விட அதுக்கு பின்னூட்டங்கள் சுவாரசியமாக இருக்கின்றன:))

    ReplyDelete
  25. எப்படியானால் என்ன சுவாரசியம் கூடுவது நல்லதுதானே. அது சரி இன்னும் எங்கே சூரியனைக் காணோம்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  26. இது தமிழ்த் திரைப்படங்கள் மேல் அனைத்து கன்னடர்களின் பொறாமை என்று உறுதியாய்ச் சொல்லிவிட முடியாது.

    தமிழ்த் திரைப்படங்கள் உடனடியாக ரிலீஸ் ஆவது ஏன் கூடாது? அதே திரைப்படம் எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட குடும்பத்தினரின் ஏகபோக ஆக்ரமிப்பு கன்னட திரைப்படத்துறையில் காணப்படுவதே "தமிழ்த் திரைப்படக்" காழ்ப்புணர்ச்சிக்கு முக்கிய காரணம்.

    நம்மூரில் தொலைக்காட்சி, கேபிள் எல்லாம் கையில் வைத்திருக்கும் கருணாநிதி குடும்பத்தினரது ஏகபோகத்தில் செய்தி செய்தியாக வருகிறதா... மாற்றுத் தரப்பு தொலைக்காட்சி நிறுவனங்கள் எப்படி ரிவிட் அடிக்கப்படுகின்றன.

    இப்படி ஒரேமாதிரியான ஏகபோக குணாதிசயங்கள் கொண்ட குடும்பம் "ஒரு உறையில் எப்படி இரு வாள்" இருக்க அனுமதித்து வாளாதிருக்கும்?

    ReplyDelete
  27. "இது தமிழ்த் திரைப்படங்கள் மேல் அனைத்து கன்னடர்களின் பொறாமை என்று உறுதியாய்ச் சொல்லிவிட முடியாது."
    இருக்கலாம், ஆனால் யார் பொறாமைபட்டால் மிக அதிக பாதிப்போ அவர்கள் பட்டுத் தொலைத்து விட்டார்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  28. வினோத் துவா ??? அவர் யார் என்று தெரியவில்லையே எனக்கு...

    கொஞ்சம் சொல்லுங்க..

    ReplyDelete
  29. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு போட்டிருக்கிறீர்கள்.. ப்ளாக்ஸ்பாட் தடை அங்கே உள்ளதா ?? நீங்கி விட்டதா ??

    ****

    வடிவேலு புலிகேசியை கேவலப்படுத்துவது போலவா படத்தில் நடித்திருக்கிறார், கர்நாடகா அதை தடை செய்ய ??

    ****
    //
    ஒங்க பதிவ விட அதுக்கு பின்னூட்டங்கள் சுவாரசியமாக இருக்கின்றன:))//
    உங்க எல்லா பதிவிலும் என்று சொல்ல முடியாது.. இந்த பதிவில் பின்னூட்டங்கள் பதிவை விட சுவாரஸ்யமாக இருக்கின்றன !!

    ReplyDelete
  30. வினோத் துவாதான் வட நாட்டு ம்யூஸ்!:)))))

    சீரியஸாக. எண்பது மற்றும் தொண்ணூறுகளில் பிரணாய் ராய் என்பவர் தூர்தர்ஷன் செய்திப் படங்களில் கொடிகட்டிப் பறந்தார். அவரது குழுவைச் சேர்ந்தவர்தான் இந்த வினோத் துவா.

    அப்போதெல்லாம் தூர்தர்ஷனில் எலெக்ஷன் விவாதங்கள் மிகப் பிரபலம். எலெக்ஷன் ரிசல்டுகள் லைவ் கவரேஜ் அப்போதுதான் பிரபலமாக ஆரம்பித்தது. இவர்கள் பேனலில் பிரணாய் ராய், வினோத் துவா இன்னும் ஒருவர் பெயர் மறந்து விட்டது எல்லோரும் இருப்பார்கள். அவ்வப்போது தொட்டுக் கொள்வதற்கு முக்கிய அரசியல் தலைவர்களும் வருவார்கள். விவாதம் தூள் பறக்கும். பிரணாய் கேள்வி மழை பொழிய, அரசியல்வாதிகள் சமாளிக்க, பிரணாய் ராய் பிறகு தன் கருத்துக்களை கூற என்று நேரம் போவதே தெரியாது. அரை மணிக்கொரு முறை விளம்பர இடைவேளை வேறு. அப்போது பிரணாய் ராய் வினோத் துவாவைப் பார்க்க, அதுவரை பெரும்பான்மையாக ஆங்கிலத்தில் நடந்த விவாதங்களை தன் அலட்டாத குரலில் ஹிந்தியில் ஓரிரு பாராவில் தொகுத்துக் கூறுவார் வினோத் துவா. அவருடைய ஹிந்தி மிக அருமையானது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  31. வாருங்கள் சோம்பேறி பையன் அவர்களே.

    தடை என்னமோ அப்படியேத்தான் உள்ளது. இருந்தாலும் நம்ம பசங்க அதை உடைத்து விட்டார்களே. என்னைப் பொருத்தவரை பிரச்சினை இல்லை, எதுக்கும் மரத்தைத் தொட்டுக்கறேன்.

    "//
    ஒங்க பதிவ விட அதுக்கு பின்னூட்டங்கள் சுவாரசியமாக இருக்கின்றன:))//
    உங்க எல்லா பதிவிலும் என்று சொல்ல முடியாது.. இந்த பதிவில் பின்னூட்டங்கள் பதிவை விட சுவாரஸ்யமாக இருக்கின்றன !!"

    நான் ஏற்கனவே கூறியபடி எப்படியானால் என்ன, மொத்தத்தில் சுவாரசியம்தானே முக்கியம்?

    இஸ்ரேலிலா இருக்கிறீர்கள்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  32. செந்தழல் ரவி,

    >>> ........ஸரியில்லையே...சீ..சரியில்லையே...ஸனியன் அதை படித்து படித்து ஸரியாகவே வரமாட்டேங்குது...... <<<<

    :-D.

    தங்களின் இந்த கேலி எனக்குப் பிடித்திருக்கிறது. ரஸிக்கிறேன்.

    ReplyDelete
  33. லக்கி லுக்,

    >>>> வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கும் திராவிட இயக்கங்களுக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை.... அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் கூட காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்தவர் தான்....<<<<

    ஸிவாஜி கணேஸன் (செந்தழல் ரவி தலையில் அடித்துக்கொள்ளும் சத்தம் இங்கே கேட்கிறது) ஆரம்ப காலங்களில் திராவிட கும்பல்களோடுதான் நெருங்கிய தொடர்புடையவராய் இருந்தார். அவருக்கு ஸிவாஜி என்று பெயரிட்டதுகூட அறிஞர் அண்ணா என்று படித்திருக்கிறேன். கலைஞர் கருணாநிதி த்ராவிட பாரம்பர்யத்திற்குள் கொண்டு வந்தவர்களுள் இருவர் மிகப் பெரிய நடிகர்கள் - எம் ஜி ஆர் மற்றும் ஸிவாஜி கணேஸன். ஸிவாஜியின் குழந்தைகள் இன்றும் கலைஞரை சித்தப்பா என்றுதான் அழைக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் த்ராவிட கும்பல்களின் பல நாடகங்களுக்கு பணமே வாங்காமல் நடித்துக் கொடுத்தவர் ஸிவாஜி. அவருடைய த்ராவிடப் பாரம்பர்யம், காமராஜரின்மேல் அவருக்கிருந்த பக்திக்கு ஸமமானது.

    >>> கொஞ்சம் ஏமாந்தால் எலி கூட ஏரோப்ளேன் ஓட்டுமாம் என்ற சொற்றொடர் ஏனோ தேவையில்லாமல் ஞாபகம் வருகிறது..... <<<<

    இனி விஷயங்களைத் தெரிந்து கொண்டு பதிவிட்டீர்களானால் ஏமாற வேண்டிய அவஸ்யமில்லை.

    ReplyDelete
  34. ரொம்ப நன்னா சொன்னேள் போங்கோ ம்யூஸ் அவர்களே. ஸமீபத்தில் 1950களில் ஸிவாஜி கணேஸன் திருப்பதிக்கு போய் வந்ததைக் பரிஹாஸம் செய்தவர்கள் திமுகவினர். இப்போது மஞ்சள் துண்டு ஸகிதம் மந்தஹாஸமாகப் பகுத்தறிவுப் பகலவன் ஈவே ராமஸாமி நாயக்கரின் பேருக்கு பெருமை ஸேர்க்கிறார்கள் அவர்தம் ஸிஷ்ய கோடிகள். லோகமே கெட்டுப் போச்சுன்னா.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்
    பி.கு. ஸெந்தழல் ரவி அவர்கள் மன்னிக்கவும்.

    ReplyDelete
  35. வீர பாண்டிய கட்டபொம்மன் தொடர்பான திராவிட இயக்கங்களின்
    நிலைப்பாடு பற்றி ம்யுஸ் கூறியிருப்பது அரைவேக்காட்டுத் தனமானது
    'கட்ட்பொம்மன் ஒரு கொள்ளைக்காரன்' என்று தான் நிரூபிப்பதாக திரு ம.பொ.சி, திருஅண்ணாதுரை,திரு மு.கருணாநிதி
    ஆகியோரௌக்கு திரு தமிழ்வாணன்
    சவால் விட்டதை அப்பொழுதைய மாணவர்களான நீங்களும் நானும் அறிவோம். இதில் தி.இயக்கத்தின் நிலை தெளிவாக தெரிகின்றது..தி இயக்கங்கள்மீது ம்யூஸிற்கு எரிச்சல் இருந்தாலும் வரலாற்று திரிபுவாததில் அவர் ஈடுபட வேண்டாம்

    எந்த சுதந்திர போராட்டவாதியையும் ஆங்கிலேய அரசு போராட்டவீரன் என்றா அரசு ஆவணங்களில் பதிந்து இருக்கும்?வேலூர் சிப்பாய் கலகத்தில்
    இறந்த வீரர்களை எல்லாம் போராட்ட வீரர்கள் என்றா ஆவணங்களில் குறிப்பிட்டுஇருப்பார்கள்?

    ReplyDelete
  36. கட்டபொம்மன் நெல்மூட்டைகளை கொள்ளையடித்து கழுதைகள் மூலமாகவும் கட்டைவண்டிகள் மூலமாகவும் கொண்டு சென்றதாகவும் ஸ்ரீவைகுண்டத்தில் திருடியதாக அமைச்சர் மேல் பலியைப் போட்டார் (உதாரணத்துக்கு) அவ்வாறுதான் எங்கோ படித்தோ கேள்விப்பட்டதாக நினைவு.
    நடிகர் திலகத்தை புதுக்கோட்டையில் அவமானப்படுத்தியதாகவும் கேள்வி அந்த படத்தில் புதுக்கோட்டை அரசர் ராஜராஜ........ என்று சொன்னதற்காக

    ReplyDelete
  37. சரித்திர நாயகர்களும் ஆசாபாசம் நிறைந்த மனிதர்களே என்பதை நாம் நினைவு கொள்ள வேண்டும். கட்டபொம்மன் தனது மந்திரியை காட்டிக் கொடுத்தது வரலாறு, ஆனால் திரைப்படத்தில் அவர் அவ்வாறு செய்ததாகக் காண்பிக்கவில்லை.

    அவர் தன் குடிமக்களிடம் வரிவசூலிக்கும்போது மிகக்கடுமையாகவே நடந்து கொண்டதாகவும் படித்துள்ளேன்.

    இருப்பினும் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் அற்புதமாக இருந்தது அவ்வளவே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  38. //காலங்களில் திராவிட கும்பல்களோடுதான் நெருங்கிய தொடர்புடையவராய் இருந்தார். அவருக்கு ஸிவாஜி என்று பெயரிட்டதுகூட அறிஞர் அண்ணா என்று படித்திருக்கிறேன்.//

    ம்யூஸ் சொன்னது போல் அண்ணா வைத்த பெயரில்லை சிவாஜி எனும் பெயர் பெரியாரால் வழங்கப்பட்டது ஆமா நானும் பாக்கிறன் என்னா திராவிட கும்பல் களின் நாடகங்களுக்கு? நாங்க பார்ப்பன கும்பல்னு சொன்னா ஒடனே கூடிப் பேசி கும்மியடிப்பிங்க இல்லன்னா அவரோட பின்னூட்டத்த நீக்குன்னு ஒரே சத்தம் அப்புறம் ம்யூஸ் நீங்க இந்த ச சி சோ எல்லாத்தையும் ஸ் ஸ ஸோ ஷி ஷ் ந்னு வடமொழியிலியே எழுதுறிங்க பாக்கவும் படிக்கவும் சகிக்கல இன்னும் ஒன்னு

    அது த்ராவிடம் இல்ல திராவிடம்

    ReplyDelete
  39. மகேந்திரன்,

    >>>> சிவாஜி எனும் பெயர் பெரியாரால் வழங்கப்பட்டது <<<<

    தெரியும். தெரிந்தே வெண்டுமென்றேதான் தவறான தகவலைத் தந்தேன். லக்கி லுக் என்ன சொல்லுகிறார் என்று பார்ப்பதற்காகச் செய்தது. நாடகத்தை எழுதியது அண்ணா, பெயர் வைத்தது ராமஸாமி நாயக்கர். அந்த நாடகத்திலேயே குல்லுக பட்டராக நடித்தது யார் தெரியுமா?

    >>> என்னா திராவிட கும்பல் களின் <<<

    தமிழுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக்கொள்ளும் த்ராவிட ஸிகாமணிகள் தங்களை த்ராவிடர்களாக அடையாளம் காட்டிக்கொள்ளும் முயற்சியின் விளைவுதான் இது. காரணம் தமிழர் குழு என்றாகிவிட்டால் தமிழர் என்று (இவர்களால்) ஒத்துக்கொள்ளப்படுபவர்கள் மட்டுமே தலைவர்களாக முடியுமென்ற நிலை வந்துவிடும். அந்த வகையில் பார்த்தால் இப்போதுள்ள த்ராவிட தலைவர்கள் யாரும் கட்ஷியின் தலைவராக இருக்க முடியாது (ராமஸாமி நாயக்கர் முதல் வைகோ வரை). அதனால்தான் இவர்கள் தங்களை த்ராவிடர்களாக ஐடென்டிஃபை செய்துகொள்கிறார்கள்.

    வேண்டுமானால் த்ராவிட கும்பல்கள் என்பதற்குப் பதிலாக இனி த்ராவிட குழுக்கள் என்று கூறுகிறேன். அப்படி அழைப்பது பண்பட்டதாகவுமிருக்கிறது (அந்த குழுக்களின் நடவடிக்கைகள் அப்படி இல்லை என்றாலும்).


    >>> ச சி சோ எல்லாத்தையும் ஸ் ஸ ஸோ ஷி ஷ் ந்னு வடமொழியிலியே எழுதுறிங்க பாக்கவும் படிக்கவும் சகிக்கல <<<<

    தமிழின் சிறப்பே எழுத்திற்கும் உச்சரிப்பிற்கும் வித்யாஸம் இல்லாமலிருப்பதுதான். ஆங்கிலம் போலில்லை. தமிழிலேயே உள்ள எழுத்துக்களை தேவையில்லாத அரஸியல் பூச்சாண்டிகளுக்காக மாற்றிக் கொள்வது தமிழின் அழகை காயப்படுத்தும் முயற்சியே. நான் எல்லா இடங்களிலும் "ச"விற்குப் பதிலாக "ஸ" உபயோகப்படுத்தவில்லை. அப்படி உபயோகித்தால் அது ஆபாஸாமாகவே இருக்கும்.

    தமிழன் அரஸியல்வாதியானதுதான் தமிழ்தாயின் பெரும் இழப்பு. நான் ஒரு ஸாதாரண தமிழன்.

    ReplyDelete
  40. சிவஞானம் அவர்களே,

    >> இதில் தி.இயக்கத்தின் நிலை தெளிவாக தெரிகின்றது..<<<

    அதையும் நான் கூறியிருக்கிறேனே.

    "ஆனால், திராவிட ஆதிக்கம் குறைந்து தமிழர் ஆதிக்கம் அதிகமானபோது (அதாவது ராமஸாமி நாயக்கரை விட்டு, அண்ணா முதலானோர் கண்ணீர்த் துளிகளாய் வெளியேறியபோது) அதே கட்டபொம்மனை தமிழுக்காகப் பாடுபட்டவன்போல உருமாற்றி, உணர்ச்சிகளைத் தூண்டும் படம் எடுத்தனர்."


    தமிழ் தேஸியத்தை முன்வைத்தவர்களான அண்ணா முதலானோர் கட்டபொம்மனை தமிழ் அரஸனாக சித்தரிப்பது ஏறுக்கொள்ளக் கூடியதுதானே?

    ReplyDelete
  41. சிவஞானம் அவர்களே,

    இன்னுமொரு ஸந்தேகம்.

    >>>> வீர பாண்டிய கட்டபொம்மன் தொடர்பான திராவிட இயக்கங்களின்
    நிலைப்பாடு பற்றி ம்யுஸ் கூறியிருப்பது அரைவேக்காட்டுத் தனமானது
    'கட்ட்பொம்மன் ஒரு கொள்ளைக்காரன்' என்று தான் நிரூபிப்பதாக திரு ம.பொ.சி, திருஅண்ணாதுரை,திரு மு.கருணாநிதி
    ஆகியோரௌக்கு திரு தமிழ்வாணன்
    சவால் விட்டதை அப்பொழுதைய மாணவர்களான நீங்களும் நானும் அறிவோம். இதில் தி.இயக்கத்தின் நிலை தெளிவாக தெரிகின்றது..<<<<


    திருஅண்ணாதுரை,திரு மு.கருணாநிதி ஆகியோர் தி. இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இல்லையா?

    ReplyDelete
  42. /////தெரியும். தெரிந்தே வெண்டுமென்றேதான் தவறான தகவலைத் தந்தேன். லக்கி லுக் என்ன சொல்லுகிறார் என்று பார்ப்பதற்காகச் செய்தது./////

    டோண்டு சார்!

    இந்த அரைவேக்காட்டையா வினோ துவா என்றீர்கள்.... செம்ம டரியல் தான் போங்கோ.......

    எனக்கென்னவோ சம்பந்தமில்லாம பெரியார் சொன்னது நினைவுக்கு வருகிறது.....

    ReplyDelete
  43. "இந்த அரைவேக்காட்டையா வினோ துவா என்றீர்கள்.... செம்ம டரியல் தான் போங்கோ......."
    அது வினோத் துவா. ஒருவர் நீண்ட விளக்கமாகக் கூறுவதை அழகாகச் சுருக்கித் தருவது வினோத் துவா மற்றும் ம்யூஸ். அரை வேக்காடு என்று எப்படி கூறுகிறீர்கள். அது சரி ட்ரியல் என்றால் என்ன? ட்ரையலா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  44. டரியல் என்றால் சுக்குநூறாக்குவது என்றும் சொல்லலாம்....

    (நன்றி : இம்சை அரசன்)

    ReplyDelete
  45. "டரியல் என்றால் சுக்குநூறாக்குவது என்றும் சொல்லலாம்....

    (நன்றி : இம்சை அரசன்)"

    ஆககககக.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  46. ///ஆககககக////

    இதுக்கு என்ன சார் அர்த்தம்?

    க.க.மு :-(

    ReplyDelete
  47. ஆகககக
    உபயம் இம்சை அரசன் (இம்ஸை அரஸன்).

    அன்புடன்,
    டோண்டு டோண்டு ராகவன்

    ReplyDelete
  48. லக்கி லுக்,

    >>> இந்த அரைவேக்காட்டையா வினோ துவா என்றீர்கள் <<<<

    பல விஷயங்களில் நான் அரைவேக்காடாகவிருப்பது உண்மைதான். மாற்றிக்கொள்ளவும் ஆஸையுண்டு. தாங்கள் நான் அரைவேக்காடு என்று கண்டுபிடித்ததற்குக் காரணங்கள் கூறினீர்களேயானால் திருத்திக்கொள்ள முயற்சி செய்கிறேன். தயவு செய்து சொல்லுங்கள், பார்க்கலாம்.

    ReplyDelete
  49. ஆமாம் ஸொல்லுங்கள் லக்கி லுக் அவர்களே. நீங்கள் கூறும் காரணங்களே அரைவேக்காடாயிருந்தாலும் பரவாயில்லை, அவற்றை வேக வைத்து ம்யூஸ் அவர்கள் எடுத்துக் கொள்வார். :)))))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  50. ""வீரபாண்டிய கட்டபொம்மன்" படம் ஐம்பதுகளில் வெளியானபோது தமிழ்நாட்டில் எட்டையபுரத்தில் உள்ள தியேட்டர்களில் ஒன்றில்கூடத் திரையிடப்படவேயில்லை என்பது பத்திரிகை செய்தி. ஊர்கட்டுப்பாடுதான் அதற்குக் காரணம்."

    ஆ, அப்படியா? இப்போத்தான் இந்தப் பதிவை பாத்தேன். துடிக்கிறது மீசை. அடேய் எட்டப்பா, இங்க வந்தும் ஒன் புத்தியைக் காட்டிட்டியே அப்பா?

    கட்டபொம்மன்

    ReplyDelete
  51. "துடிக்கிறது மீசை. அடேய் எட்டப்பா, இங்க வந்தும் ஒன் புத்தியைக் காட்டிட்டியே அப்பா?"

    :))))))))))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete