9/28/2006

சுனாமி நிவாரணப் பணிகளில் R.S.S-ன் பங்கு - a conspiracy of silence!

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் பற்றி இப்போது பேச்சுக்கள் வரும்போது நான் சுமார் 20 மாதங்களுக்கு முன் போட்ட இந்த இடுகை ஞாபகத்துக்கு வந்தது. ஆகவே அதை மீள்பதிவு செய்கிறேன். அப்போதையப் பின்னூட்டங்களும் அப்படியே இருக்கின்றன. பார்ப்போம் இப்போதைய எதிர்வினைகளை. இப்போது பதிவுக்கு போவோம்.

எல்லாரும் சொல்லி வைத்தது போல ஒரு விஷயத்தில் மௌனம் காக்கின்றனர்.

சுனாமியின் பின் தொடரும் மீட்பு நடவடிக்கையில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் மிகுந்த மனிதாபத்துடன் தொண்டாற்றி வருகின்றனர். மற்றவர்கள் தொடக் கூசும் பிணங்களை அறுவெறுப்பின்றித் தொட்டுத்தூக்கி அந்திமக் கிரியைகள் செய்கின்றனர்.

தலைவரின் குடும்ப சேனல் மற்றும் அதன் எதிரிச் சேனல் இவ்விரண்டும் இதில் மௌனம் கடைப் பிடிக்கின்றன. என்ன ஒற்றுமை போங்கள்! கண்ணேறுதான் கழிக்க வேண்டும்!

ஆனால் ஒன்று. இது பல வருடங்களாகவே நடைப் பெற்று வருகிறது.

நெருக்கடி நிலையின் உச்சக் கட்டத்தில் விசாகப் பட்டினத்தில் புயல். அதிலும் இத்தொண்டர்கள் அரும்பணியாற்றினர். நியூஸ் ரீல் காட்சி பிரேமில் ஒரு சில நிமிடங்கள் ஆர்.எஸ்.எஸ் சேவா மண்டல் என்ற பேனர் அரங்கில் இருந்த நான் காணக் கிடைத்தது. அதற்காக சம்பந்தப்பட்ட கேமரா மேன் சஸ்பெண்ட் செய்யப் பட்டார் என்பதைப் பற்றிப் பிறகுப் படித்தேன்.

சுனாமி போது கூட சம்பந்தப்பட்டக் கலெக்டர்களே உள்ளூர் ஆர்.எஸ்.எஸ் காரர்களின் உதவி நாடினர் என்றுத் துக்ளக்கில் (Issue dated 12-01-05, page 36) படித்தேன்.

ஜெயமோகன் இதைப் பற்றி எழுதியதற்கு பதிலளிக்கும் வகையில் பதிவை வெளியிட்ட ரோஸா வஸந்த் (postings dated 7th and 8th Jan, 2005) அவர்களும் அவர் கருத்துக்குப் பின்னூட்டம் இட்டவர்களும் சுழற்றிச் சுழற்றி பத்தி பத்தியாக எழுதினாலும் ஆர்.எஸ்ஸ்.எஸ்ஸின் பங்கை அவர்களால் மறைக்க முடியவில்லை.

"ஜெயமோகன் இது பற்றி எழுதியது உண்மை என்றுதான் ஒத்துக் கொள்ள வேண்டும்" என்று ரோஸா வசந்த் எழுதியுள்ளார். ஆனால் இவர்கள் யாரும் இத்தனை ஆண்டுகளாக கடைப் பிடிக்கப்பட்டு வரும் மௌன சூழ்ச்சியைப் பற்றிக் கூறாது சௌகரியமாகத் தவிர்த்து விட்டார்கள்.

போகட்டும் எத்தனை நாட்களுக்குத்தான் இது நடக்கும் என்பதையும் பார்த்து விடுவோமே?

அன்புடன்,
ராகவன்

9 comments:

ROSAVASANTH said...

நான் எழுதியது ஜெயமோகனுக்கான் பதில் இல்லை. அதை முன்வைத்து வேறு சில விஷயங்களை பேசுதல். RSSஇன் பங்கு குறித்து நான் மௌனம் காத்ததில்லை. உதவி குறித்த என் பதிவில் அதை குறித்திருக்கிறேன்.

ஆனால் இதை முன்வைத்து RSS குறித்த பிம்பங்களை உருவாக்கும் நோக்கங்களுக்கு என்னால் உதவ முடியாது. (அப்படி உதவியதாக வேறு சிலர் வாசிக்க வாய்புண்டு, நியாயமும் உண்டு. ஆனால் என்னால் அது தவிர்க்க முடியாதது.) மற்றவர்கள் தங்கள் பார்வையில் கருத்தை சொல்லியிருக்கிறார்கள். அவர்களும் RSSபணிகளை மறைத்துவிட்டு பேசவில்லை. அக்னாலெட்ஜ் செய்தே கருத்தை சொல்லியிருக்கிறார்கள். மற்றபடி இங்கே இது குறித்து பேச எனக்கு எதுவும் இல்லை.

அது சரி, ஜெயமோகன் தன் 'நடு நிலமையை' காண்பிக்கவாவது த.மு.மு.க. மற்றும் கிருஸ்தவ இயக்கங்கள் பற்றி சொல்லியிருக்கிறாரே! நீங்கள் ஏன் விட்டு வீட்டீர்கள். RSS பணிகளை மற்றவர் மறைக்கிறார்கள் என்று சொல்லும் நீங்கள், அன்னை தெராசாவின் காலகட்டத்தில், யாராலும் செய்ய இயலாத பணிக்ளை அவர் செய்தது குறித்து RSS பேசும் விஷயங்கள் குறித்து என்ன சொல்கிறீர்கள்? அது குறித்த மற்ற துவேஷ பிரச்சாரம் குறித்து...?

ரவி ஸ்ரீநிவாஸ் said...

Oxfam,Medicine Sans Frontiers, TNSF and many other NGOs and groups are involved in disaster relief.RSS has supporters in media and hence it gets a better coverage.at the same time how the money sent from abroad for disaster relief was diverted to hindu
fundamenatalist outfits had been documented.while one
acknowledges the efforts of RSS the other side that RSS
has specific aims and objectives that are communal
cannot be ignored. Dondus dont try to pretend that the
other side is non existent.it is the real face the
humanitarian measures are masks.

dondu(#11168674346665545885) said...

To Rosavasanth:
இந்தச் சுனாமியைப் பற்றி மட்டும் நான் பேச வரவில்லை. எனக்குத் தெரிந்து 28 வருடங்களுக்கு முன் நான் நேரில் பார்த்ததையும் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளேன்.

நான் எழுத வந்ததன் நோக்கம் ஆர்.எஸ்.எஸின் சேவை மறைக்கப்பட்டது என்பதை முன்னிருத்துவதுதான். அதை செய்யும் போது மற்றச் சேவையாளர்களைப் பற்றி எழுத விட்டுப் போய் விட்டது தவறுதான். மன்னிக்கவும்.

அதைப் பற்றி எழுதிய ஜெயமோகனும் அவர் ஒப்புக்காகத்தான் அதைக் குறிப்பிட்டார் என்றத் தொனி உங்கள் பின்னூட்டத்தில் தெரிகிறது என்று எனக்குப் படுகிறதே? ("அது சரி, ஜெயமோகன் தன் 'நடு நிலமையை' காண்பிக்கவாவது த.மு.மு.க. மற்றும் கிருஸ்தவ இயக்கங்கள் பற்றி சொல்லியிருக்கிறாரே!").

என்னதான் சப்பைக் கட்டுக் கட்டினாலும் இவ்வளவு ஆண்டுகள் நிகழ்ந்து வரும் மௌன சூழ்ச்சி இல்லை என்று ஆகி விடுமா?

To Ravi Srinivas: Even assuming for a moment that what you say about the other side of the RSS is true, (I do not subscribe to that view, by the way), this does not justify the suppression of the part played by the RSS in the relief operations all these years.

I am 58 years old. I remember things of 1970's as if they happened yesterday. I do not recall much about reading the media coverage of RSS's services all these years. At least not in The Hindu or other widely read Newspapers. Nor was there much said in the Tamil blogs about the RSS doing service. It seems to be a fashion to hurl abuse at the RSS.
Regards,
Dondu Raghavan

அன்புடன்,
டோண்டு

dondu(#11168674346665545885) said...

துளசி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://thulasidhalam.blogspot.com/2005/09/blog-post_09.html#comments

இம்மாதிரிப் பிணங்களை அப்புறப்படுத்தாது தாமதிப்பதையும், மீட்புப் பணிகளுக்கு வந்தவர்களே கலங்குவதைப் பார்க்கும் போதும், பேரழிவுப் புயல் மற்றும் பெரிய விபத்துகளில் நம் ஆர்.எஸ்.எஸ். ஆறும் பணிகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அரசு அலுவலகர்களே அம்மாதிரித் தருணங்களில் அவர்களுக்கு அழைப்பு விடுப்பதும் அவர்களும் கடைமை உணர்வுடன் பிணங்களை ஜாதி மதம் பார்க்காது அப்புறப்படுத்துவதும், எல்லா உதவிகளையும் அவர்கள் செய்த பிறகு அரசு அமைப்புகளும் மீடியாக்களும் அவர்கள் பங்கை இருட்டடிப்பு செய்வதும் எல்லாமே ஒவ்வொரு முறையும் விளையாட்டுப் போல நடக்கின்றன என்பதும் இச்சமயத்தில் நினைவுக்கு வந்து தொலைக்கின்றனவே.

இது பற்றி நான் எழுதிய பதிவு இதோ. பார்க்க:

http://dondu.blogspot.com/2005/01/rss-conspiracy-of-silence.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வஜ்ரா அவர்களே,

ஒரே ஒரு பாராவை நீக்கியுள்ளேன். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

நன்றி,
டோண்டு ராகவன்

"R.S.S இயக்கத்தை demonize செய்வது Great Secular game...இதில் விளையாடவேண்டும் என்றால் மிச்ச நரிகள் (missionary) செய்யும் சேவையை (ஒரு கையில் பைபிள், ஒரு கையில் புளியோதரை பாக்கெட்) பாராட்டி சீராட்டி எழுதவேண்டும்...

அப்புறம் RSS பற்றி மூச், அப்படியே எழுதினாலும் ஏதோ சக்களத்திப் பிள்ளையைப் பற்றி பேசுவது போல் பேசிவிட்டுச் செல்லவேண்டும் என்பது பத்திரிக்கை உலகின் எழுதப்படாத சட்டம்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

RSS மீட்டிங் எல்லாம் போய் பார்த்தால் தான் தெரியும்...எத்தனை பார்ப்பானர்கள் இருக்கிறார்கள் என்று...!

--
Posted by வஜ்ரா to Dondus dos and donts at 9/28/2006"

வஜ்ரா said...

To Dondu,

I perfectly understand. I will differ from posting such things hereafter.

To Ravisrinivas,

//
Oxfam,Medicine Sans Frontiers, TNSF and many other NGOs and groups are involved in disaster relief.RSS has supporters in media and hence it gets a better coverage.at the same time how the money sent from abroad for disaster relief was diverted to hindu
fundamenatalist outfits had been documented.while one
acknowledges the efforts of RSS the other side that RSS
has specific aims and objectives that are communal
cannot be ignored.
//

TNSF - Tamil nadu science forum has chapters all over tamil nadu. Most of its members have marxist association. Balaji Sampath is the fountain head of TNSF in Chennai

I have attended TNSF meetings in Madurai and Rallies in Madurai.

They use their funds from AID and ASHA (whose Tamil nadu chapter is TNSF) for marxist studies and maoist rebels who are known India haters.

Look for yourselves this is a document repository of TNSF's major money contributing NGO.

Sandeep pandey the AID leader, says Kashmir is neither India's nor pakistan's.
//

Government should become more serious about the peace process in Kashmir and involve all the voices of Kashmir, however militant they might be. It is after all their land. It is neither Indian nor Pakistani land
//

This is the kind of NGO that you want to support. (do not forget Sandeep pandey is IIT alumni).

And I sincerely ask you to define "hindu fundamentalism".

RSS has no media coverage and Dondu has shown exactly that.

RSS may beleive in a political ideology that differs from marxist leanings. That does not justify the treatment meated out to RSS in mainstream media. Afterall in democracy arent we allowed to disagree?

dondu(#11168674346665545885) said...

புரிதலுக்கு நன்றி வஜ்ரா அவர்களே.

உங்கள் இந்தப் பின்னூட்டத்திலிருந்து பல புதிய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். மிக்க நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

ஆர். எஸ். எஸ்ஸினுடைய தலைமையகத்தில் ஜனாப் அப்துல் கலாம் அவர்களின் படத்தை அவர் ஜனாதிபதியாக ஆவதற்கு முன்னரே திறந்து வைத்தார்களாமே.

என்னுடைய ஆர். எஸ். எஸ் நண்பர்கள் அனைவரும் இஸ்லாமியரில் நேர்மையாக உள்ள பலர் குரல் கொடுக்க முடியாத நிலைமையில் உள்ளதாகக் கூறி வருத்தப்பட்டார்கள். ஆர். எஸ். எஸ் என்பது இஸ்லாமியர் அனைவரையும் தீவிரவாதிகளாகவல்லவா கருதுகிறது? என்று கேட்டதற்கு, அது ஆர். எஸ். எஸ் பற்றிய மற்றவர்களின் கருத்துத்தானேயொழிந்து இந்த அமைப்பு அங்கனம் ஒருபோதும் கருதியதில்லை என்றும் கூறினர். வெளிப்படையாக பல விஷயங்களைக்கூறிய அவர்கள் இந்த விஷயத்தில் ஒரே மாதிரியாக பல்வேறு தருணங்களில் ஒரே கருத்தைக் கூறியதிலிருந்து இவர்கள் என்னிடம் உண்மையே கூறினர் என்று தோன்றுகின்றது.

ஆர். எஸ். எஸ் பற்றிய கொடூர பிம்பம்பற்றி அது கவலைப்படாமல் இருப்பது அதன் பலவீனம்தான். அதுவே அந்தப் பிம்பத்தை நியாயப்படுத்துவதாக நடைமுறை உலகம் கருதுகின்றது.

dondu(#11168674346665545885) said...

நன்றி ம்யூஸ் அவர்களே. ஆர்.எஸ்.எஸ். தனது கடமையைச் செய்து வருகிறது. நிர்வாகத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகளுக்கு அதன் அருமை தெரிந்திருக்கிறது. எப்படியாவது உதவி வந்தால் போது அரசும் அமைதி காக்கிறது. சங்கடம் தீர்ந்தபின்னரும் அரசு இன்னும் அதிக அமைதி காத்து ஒன்றும் பேசாமல் விடுவதைத்தான் நான் பதிவாகப் போட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது