நிரந்தர பக்கங்கள்

10/12/2006

யோம் கிப்பூர் யுத்தம் டோண்டு ராகவனுடையது

இஸ்ரேலுக்கும் எனக்கும் பூர்வ ஜன்ம பந்தம் என்று நான் மனப்பூர்வமாக நினைத்தது என்னை பொருத்தவரை நிஜமாகி விட்டது. யோம் கிப்பூரன்று இஸ்ரேல் மேல் யுத்தம் தொடுக்கப்பட்டது. என் மேலும்தான். என்னுடைய முந்தைய யோம் கிப்பூர் பதிவை வலைப்பூவில் இட்டப் போது அது நல்ல விளைவை ஏற்படுத்தும் என்பதை எதிர்ப்பார்த்தது நிஜம். ஆனால் அது பொய்த்தது. அப்பதிவு ஒரு சமாதானத்துக்கான சமிக்ஞை என்றால் இப்பதிவு ஒரு யுத்த அறிவிப்பு.

நான் மிகவும் மதிக்கும் வலைப்பூ நண்பர் ஒருவர் சொன்ன ஆலோசனையின் பெயரிலும், நானே அது பற்றி யோசித்து வந்ததாலுமே எனது அந்த சமாதான ஆஃபர் தந்தேன். அது ஏற்கப்படவில்லை. மாறாக எதிராளி தரப்பிலிருந்து விரோதச் செய்கைகள் பன்மடங்கு அதிகரித்து, என் மகள் பெயரிலும் வலைப்பூ ஆரம்பிக்க வைத்தது. ஏற்கனவே என் மனைவி பெயரில் இன்னொரு வலைப்பூ ஆரம்பிக்கப் பட்டிருந்தது. அதை தமிழ்மணத்திடம் பேசி லிஸ்டிலிருந்து எடுக்கச் செய்த பிறகே முந்தையப் பதிவையே போட்டேன். அதே போல எனது மகள் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூவையும் தமிழ்மணத்தார் எனது கோரிக்கையை மதித்து நீக்கினர். ஆனால் அவ்விரு பதிவுகளும் பிளாக்கரில் இருக்கும். அதற்கு ஒன்றும் செய்ய முடியாது.

துளசி அவர்களிடம் என்னை இம்பெர்சனேட் செய்து அவரிடமிருந்து நானும் என் மகளும் இருக்கும் படங்களை போலி வாங்கினான். அதே போல மாயவரத்தானை இமிடேட் செய்து ஜூலை மாதமே என்னிடமிருந்து சஷ்டியப்தபூர்த்தி படங்களை வாங்கியிருக்கிறான் என்பதை நான் நேற்று ஜீமெயில் ஆர்கைவ்ஸைப் பார்த்து தெரிந்து கொண்டேன். இப்போதைய நிலை என்னவென்றால், படங்கள் அவனிடம் போய் விட்டன. ஆனால் எனது தளங்களை உடைத்தல்ல. சாதாரண ஜேப்படித் திருடன் ரேஞ்சில்தான் வேலை செய்திருக்கிறான் போலி. என்னைப் போல இமிடேட் செய்ய அவன் உபயோகித்த ஐடி raghtransin at gmail dot com (the last t is missing in raghtransint). அதே போல மாயவரத்தானை இமிடேட் செய்ய உபயோகித்த ஐடி mayiladuturai at gmail dot com (h has been removed from mayiladuthurai). இரண்டு சேட்டுகள் நடந்துள்ளன. வேறு ஏதாவது நடந்ததா என்பதை இப்போதுதான் பார்க்க வேண்டும். என்னிடமிருந்து வரும் மெயில்களை ஐடியை சரிபார்த்து பதிலளிக்கவும் என என் நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் நான் பார்க்க வேண்டும். மேலே கூறியது எல்லாம் மைனஸ் பாயிண்டுகள். ப்ளஸ்ஸில் என்ன இருக்கிறது? முதலில் எனக்கு பக்கபலமாய் இருப்பது என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன். அதே போல லட்சக்கணக்கில் ராமநாமத்தை எழுதும் என் மகளுக்கோ, லட்சுமிநரசிம்மரின் பக்தையான என் மனைவிக்கோ ஒரு கேடும் வராது.

அடுத்த ப்ளஸ் பாயிண்ட் இந்த அறுபது வயது இளைஞன் டோண்டு ராகவனின் மனவுறுதி. அந்த உறுதி அவன் சாகும்வரை அவனுடனேயே இருக்கும். போலி டோண்டு, படங்களைத்தானே போடப் போகிறாய்? போ, போய் போட்டுக் கொள்.

நான் இப்போது என்ன செய்யப் போகிறேன்? நான் பாட்டுக்கு என் மொழிபெயர்ப்பு வேலைகளைப் பார்த்துக் கொண்டு, அதே சமயம் பதிவுகளும் போடப் போகிறேன். இது யுத்தம். தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையேயானது. அதர்மம் இப்போது கொக்கரிக்கிறது, உன் சம்பந்தமானப் படங்களைப் போடுவேன் என்று மிரட்டுகிறது. போட்டுக் கொள் என்று அந்த மிரட்டலுக்கு பதில் கூறியாகி விட்டது. என் இணைய நண்பர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

அதற்கு முன்னால் சதயம் அவர்கள் அவர் பதிவில் போட்டதை இங்கே எடுத்து எழுதுகிறேன்.

"தனிப்பட்ட முறையில் பெரியவர் டோண்டுவிற்காக வருந்தினாலும் இத்தகைய ஆப்புகளை வாங்குவதற்காக அவர் மெனக்கெட்டு உழைத்தார் அல்லது அவரின் நலம்விரும்பிகளை உழைக்க வைத்தார் என்றே நிணைக்கிறேன்.அந்தச் சகோதரியைப் பற்றிய சில பின்னூட்டங்கள் நிச்சயமாய் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்."
ஏன் சார் ஆஷாடபூதித்தனமாக வருத்தமெல்லாம் தெரிவிக்கிறீர். அதற்கு உங்களுக்கு அனானியில் பின்னூட்டம் இட்டவரே மேல். வெளிப்படையாகவே எழுதுகிறார்.

"ஜாக்கிரதை சதயம். நீங்கள் கூறியது போல ஒரு டோண்டு சந்திக்கும் பிரச்சினைகள் போதாதா. நீங்கள் வேறு சனியனை ஏன் விலைக்கு வாங்குகிறீர்கள்? டோண்டு நாசமாய் போகட்டும். அவனால்தானே மட்டுறுத்தல் வந்து தமிழ்மணத்தின் சுதந்திரமே பறிபோனது. நன்றாக வேண்டும் அவனுக்கு."
அதானே, அந்த மட்டுறுத்தலால்தானே உங்கள் பதிவுகள் இற்றைப்படாமல் இருக்கின்றன. போய் ஸ்வீட் சாப்பிடுங்கள் சார்.

"இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் டோண்டு அவர்கள் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பார் என நான் எண்ணவில்லை."
இல்லையே, நன்றாகத் தூங்கிக் கொண்டுதான் இருந்தேன்.

"மற்றபடி தொழில்நுட்ப யுத்தத்தில் உங்கள் கை ஓங்கியிருப்பது உண்மைதான்....உங்களின் திறமையையும், உழைப்பையும், துல்லியத்தையும் பார்த்து என் போன்ற அரைட்ரவுசர்கள் அசந்து போயிருக்கிறோம். உங்களின் பின்னூட்டத்தை நீக்கவே படாதபாடு பட்டேன்...ஹி..ஹி...என்னுடைய தொழில்நுட்ப அறிவு அத்தகையது."
போய் போலி டோண்டு ரசிகர் மன்றம் வைப்பதே நலம், அல்லது சிம்ரன் ஆப்பக்கடையிலிருக்கும் ரசிகர் மன்றத்தின் தலைமைப் பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி, கருத்துச் சுதந்திரம் பறிபோகிறதென்று ஒரு ஹை மாரல் ரீசனுக்காக மட்டுறுத்தலையே செயல்படாது இருப்பவர் போலியின் தரப்பிலிருந்து வரும் கருத்து சுதந்திர கொலைக்கு இப்படி ஏன் ஜிஞ்சா அடிக்கிறீர்கள்? உங்களுக்கும் ஆப்பு வைப்பான் என்ற பயம்தானே காரணம்?

இப்போது போலிக்கு. என்னைப் பொருத்தவரை நீ இல்லை. அவ்வளவுதான். இனிமேல் உன்னை நான் லட்சியம் செய்ய மாட்டேன். நான் பாட்டுக்கு என் பதிவுகளை வழக்கம் போல போட்டுக் கொண்டிருப்பேன். பின்னூட்டங்கள் வருகின்றனவா இல்லையா என்பதைப் பற்றி கவலை இல்லை. இப்போது நண்பர்களுக்கு. இது யுத்தம். தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையில் நடுநிலைமை இருக்க முடியாது. என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

அதற்காக அனானி மற்றும் அதர் ஆப்ஷன்களை நான் திறக்கப் போவதில்லை. ஒரு வலைப்பூ உருவாக்கி, ப்ரொஃபைல் கிடைக்காமல் செய்தால் போலியால் என்ன செய்ய முடியும்? அதே சமயம் இன்னொரு வேண்டுகோள். என் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுபவர்கள் போலி டோண்டுவைப் பற்றி ஒன்றும் பேசாதீர்கள். பின்னூட்டங்கள் சம்பந்தப்பட்ட பதிவுக்கு ஏற்றவையாக இருக்கட்டும். இப்பதிவு மட்டும் நான் மேலே கேட்டுக் கொண்டதற்கு ஒரு விதி விலக்கு என்பதும் வெள்ளிடை மலை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

54 comments:

  1. மற்றவர்களுக்காக கல்லடி பெறத் தயாரான உங்களுக்கு மற்றவர்கள் காட்டும் மரியாதைதான் தங்களை இந்த விஷயத்தில் ஏளனம் செய்வது.

    செருப்படி இவர்களுக்குக் கிடைக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக சாக்கடையில் குளிப்பது மட்டுமல்லாமல், இதை பன்னீர் குளியல் என்றும் நினைக்கிறார்கள்.

    பட்டால் மட்டுமே புத்தி தெளிபவர்களுக்காக பாரம் சுமந்தது தங்களது தவறுதான். இந்தப் பாரத்தைத் தூக்கி எறிந்துவிட்டு எங்களோடு கலந்துரையாட உங்களிடம் எத்தனையோ தகவல்களும், விஷயங்களும், அனுபவங்களும் இருக்கின்றன. நாம் இனி அதில் மட்டும் கவனம் செலுத்துவோம்.

    கோழைகள் பொதுவாகவே மாரல் ரீஸன்களுக்குப் பின்னால் ஒளிபவர்கள்தான். இனி அவர்கள் செருப்படி படட்டும்.

    ReplyDelete
  2. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் நடக்கும் விஷயங்கள் அவ்வளவு மகிழ்ச்சியாக தமிழ் வலைப்பதிவர் யாருக்கும் இருக்க முடியாது. விரைவில் இந்த பிரச்சினைகள் யாருக்கும் பாதிப்பில்லாமல் நல்லபடியாக முடிய வேண்டும் என்றே நினைக்கிறேன்.

    இந்தப் பிரச்சினைகளால் தமிழ் வலைப்பதிவர்கள் distract ஆகிறார்கள் என்பது தான் கொடுமை. நிறைய விவாதங்கள் வேறுமாதிரியான பரிணாமத்துக்கு போவதற்கு இதுவே காரணமாக இருக்கலாம்.

    ReplyDelete
  3. சார்!

    இந்த கேவலம் சம்பந்தமான மற்ற சில பதிவுகளை புரட்டி பார்த்தபோது வேறொன்றும் தெரிந்து கொண்டேன்.

    ராபின்ஹூட் என்பவர் இன்னொரு பதிவரின் மனைவி போட்டோவை பதிவிட்டு இந்த கேவலமான கலாச்சாரத்தை தொடங்கியிருக்கிறார்.

    பலியாடு நீங்கள்....

    ReplyDelete
  4. உங்கள் முந்தய பதிவை கண்டு சமாதானத்துக்கு வழிகிடைத்துவிட்டது என்று மகிழ்ந்தேன்..

    ஆனால் சில பின்னூட்ட வியாதிகள் வந்து பின்னூட்டமிட்டு, பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்திவிட்டு சென்றுவிட்டன..

    சிலபேர் நடுநிலமைவகிப்பதன் காரணம் இன்னுமா உங்களுக்கு புரியவில்லை..இருபக்கத்திலிருந்தும் குண்டுகள் பாயும்போது நடுவில் நிற்க்க அவர்கள் என்ன முட்டாள்களா (!!??)

    இந்த பிரச்சினையால் பலர் வலைபதிப்பதை விட்டே சென்றுவிட்டனர்.....

    இப்போதுவரும் புதிய வலைப்பதிவர்களாவது, இந்த பிரச்சினையில் மூக்கை நுழைத்துக்கொண்டு ஏன் தலை கிறுகிறுக்கவேண்டும் என்றுதான் இந்த பிரச்சினையை முடிக்கவேண்டும் என்று முயற்ச்சிசெய்தோம்..

    இந்த பிரச்சினை அதன் அடுத்த பரிமாணத்தை அடைவதற்க்கான அத்தனை அம்சங்களும் கொண்டது இந்த பதிவு.....

    போர் நடக்கும்போது கலையில் / இலக்கியத்தில் / ஓவியத்தில் நாட்டம் செல்லுமா ? இந்த பிரச்சினையை கவனிப்பதிலேயே பலரின் நேரம் வீணாகிறது...

    எனக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை...

    ReplyDelete
  5. "சிலபேர் நடுநிலமைவகிப்பதன் காரணம் இன்னுமா உங்களுக்கு புரியவில்லை..இருபக்கத்திலிருந்தும் குண்டுகள் பாயும்போது நடுவில் நிற்க்க அவர்கள் என்ன முட்டாள்களா (!!??)"
    மற்றவர்கள் என்ன எழுத வேண்டும், யாருக்கு பின்னூட்டம் இட வேண்டும் என்றெல்லாம் எழுதுவானாம், அதை ஒத்துக் கொள்வார்களாம், ஆகவே வலைப்பதிவை விட்டுப் போய் விடுவார்களாம். நல்லக் கதை ஸ்வாமி. அதைத்தானே போலி எதிர்ப்பார்க்கிறான். அவனுக்கு அதை கொடுப்பவர்கள் எப்படி நடுநிலைமையாளர்கள் ஆக முடியும். ஏன் இப்போது நீங்களும்தான் பின்னூட்டம் இட்டீர்கள். கழுத்தை சீவி விடுவார்களாமா?

    ஆனால் ஒன்று மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் நான் ஆலோசனை மட்டும்தான் கூற முடியும். அவரவர்களே உணர்ந்துதான் காரியம் செய்ய வேண்டும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. மிக்க நன்றி நாட்டாமை அவர்களே. எனது இந்த யுத்தத்தில் உங்களைப் போன்ற நண்பர்கள்தான் எனக்கு பலம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. டோண்டு அய்யா,

    வணங்குகிறேன் உங்களை.

    மனம் தளராமல் பணியைத் தொடரும் உங்களுக்கே வெற்றி.

    பாலா

    ReplyDelete
  8. "பட்டால் மட்டுமே புத்தி தெளிபவர்களுக்காக பாரம் சுமந்தது தங்களது தவறுதான். இந்தப் பாரத்தைத் தூக்கி எறிந்துவிட்டு எங்களோடு கலந்துரையாட உங்களிடம் எத்தனையோ தகவல்களும், விஷயங்களும், அனுபவங்களும் இருக்கின்றன. நாம் இனி அதில் மட்டும் கவனம் செலுத்துவோம்."
    ஆம், நாம் பேச வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. போலியைப் பற்றி ஏன் பேச வேண்டும்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  9. "உங்கள் முந்தய பதிவை கண்டு சமாதானத்துக்கு வழிகிடைத்துவிட்டது என்று மகிழ்ந்தேன்..

    ஆனால் சில பின்னூட்ட வியாதிகள் வந்து பின்னூட்டமிட்டு, பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்திவிட்டு சென்றுவிட்டன.."

    நீங்கள் நினைப்பதுபோல் இல்லை ரவி அவர்களே. நான் பதிவு போட்ட சில நிமிடங்களிலேயே போலி டோண்டு ஆஃபரை கேலி செய்து பதிவு போட்டாகி விட்டது. துளசி அவர்கள் போட்ட அவ்வளவு சமாதானமான, நடுநிலைமைப் பின்னூட்டத்திற்கு அவனிடமிருந்து ஏச்சுக்கள்தான் கிடைத்தன. ம்யூஸ் மற்றும் கால்கரி சிவா மைதானத்துக்கு வராத போதே அவர்களையும் திட்டினான் போலி.

    இவையெல்லாம் உங்கள் தகவலாகக் கூறுகிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. டோண்டு அவர்களே..

    போலிப்பின்னூட்டம் மிக சாதாரணமானது..அதை உடனே டெலீட் செய்வது ( திறந்து பார்க்காமல்) பலன் தரும்..என்னை பொறுத்தவரை..

    ஆனால் புகைப்படங்களை வெளியிடுவது மகா பெரிய தவறு...

    பிரச்சினையின் தீவிரம் உணர்ந்து சிறிது போர் நிறுத்தம் செய்ய முன்வாருங்கள்..

    இஸ்ரேல் செய்யவில்லையா என்ன ?

    எனக்கு தெரிந்தவரை, போலியின் கோரிக்கை சில பதிவுகளை நீக்குவதாம்..

    சென்ற பதிவில் நீங்களே சமாதானம் என்றீர்களே..

    இது என்ன பெரிய டப்பா விஷயம்..நீ
    ங்கள் ஒருசில பதிவுகளை தூக்குவதால் பிரச்சினை ஓயுமானால் அதை செய்வதில் நீங்கள் பிடிவாதம் பிடிப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை..

    ReplyDelete
  11. "இது என்ன பெரிய டப்பா விஷயம்..நீ
    ங்கள் ஒருசில பதிவுகளை தூக்குவதால் பிரச்சினை ஓயுமானால் அதை செய்வதில் நீங்கள் பிடிவாதம் பிடிப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை.."
    சமாதான முயற்சிகள் எல்லாம் என் தரப்பில் செய்து பார்த்தாகி விட்டது. எல்லாம் வீண். யுத்தம் அதன் வழி செல்லும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. ரவி அவர்களே,

    உங்கள் ஆதங்கத்தைப் புரிந்து கொள்கிறேன். நல்ல எண்ணத்தில் முயற்சி செய்கிறீர்கள் என்பதையும் புரிந்து கொள்கிறேன். ஆனால் எதிர்த்தரப்பு இப்போது இருக்கும் மனநிலையில் அதெல்லாம் எடுபடாது என்றுதான் அஞ்சுகிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. நடத்துங்கள் டோண்டு.....

    எனக்கு அவ்வளவாக 1980, 1990 எல்லாம் சமிபம் அல்ல என்றாலும், கடந்த 2 மாதங்களில், எனக்கு போலியிடமிருந்து வந்த மிரட்டல் மற்றும் வசைபாடல் மெயில்களே ஒரு வெறுப்பினை தந்தது.

    நீங்கள் கூறுவது போல, சுத்தமாக விலகி இக்னோர் செய்வதே சால சிறந்தது.

    ReplyDelete
  14. //உங்கள் ஆதங்கத்தைப் புரிந்து கொள்கிறேன். நல்ல எண்ணத்தில் முயற்சி செய்கிறீர்கள் என்பதையும் புரிந்து கொள்கிறேன். ஆனால் எதிர்த்தரப்பு இப்போது இருக்கும் மனநிலையில் அதெல்லாம் எடுபடாது என்றுதான் அஞ்சுகிறேன்//

    இப்படிச் சொன்ன நீங்கள் கீழ்க்கண்ட பின்னூட்டத்தை மட்டுறுத்தி இருக்கலாம். எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது இதுமாதிரி பின்னூட்டங்களே....

    ///போலி என்ற இழி பிறவியோடு சமாதானமாக செல்வது கடினம் தான். அவன் திருந்த மாட்டான்.///

    ReplyDelete
  15. "நீங்கள் கூறுவது போல, சுத்தமாக விலகி இக்னோர் செய்வதே சால சிறந்தது."
    It is just as I said. After this, this Poli does not exist as far as I am concerned.

    I have requested my friends too not to refer to Poli in any way in my subseuent posts, starting this evening, nor in my previous posts on other subjects.

    Regards,
    Dondu N.Raghavan

    ReplyDelete
  16. ///ஆனால் எதிர்த்தரப்பு இப்போது இருக்கும் மனநிலையில் அதெல்லாம் எடுபடாது என்றுதான் அஞ்சுகிறேன்.///

    ஒரு கடைசி முயற்ச்சி செய்யலாம் என்று உள்ளேன். ஒத்துழைப்பு தருவீர்களா ?

    ReplyDelete
  17. லக்கி லுக் அவர்களே,

    ஒரு கை தட்டி ஓசை வராது. அதே போல ஒரு தரப்பு மட்டும் சமாதானத்துக்கு போக முடியாது. இருந்தாலும் அதையும் செய்து பார்த்து விட்டேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  18. ///போலி என்ற இழி பிறவியோடு சமாதானமாக செல்வது கடினம் தான். அவன் திருந்த மாட்டான்.///

    லக்கியாரே...நீர் சொல்வது சரியான கூற்று...எனக்கு தெரிந்து திடீரென முளைத்த இவர் பிரச்சினையை மேலும் தணியவிடாமல் செய்வார்..

    ReplyDelete
  19. டோண்டு சார்,

    உங்கள் மன உறுதியைக் கண்டு வியக்கிறேன். இந்த அசிங்கமான போலிப்பதிவு போடும் மனவக்கிரம் பிடித்த கூட்டத்தின் செய்கைகளுக்கு எல்லையே இல்லாமல் போகிறது.

    அரசியல் திரா'விட'ப் பெத்தடின் கூட்டத்தினர் எவரும் சொந்தப் பெயரில் பதிவு போடும் நேர்மை கிடையாது. பாம்பின் கால் பாம்பறியும் என்பதால்.

    நேர்மையாய்ப் பெயரைக் கூட போட வக்கில்லாதவர்கள், கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் தெரியாத இவர்களிடம் வாதம் செய்வது விரயச்செயல்.

    தொழில் நுட்பக் கல்வியைக் கற்றிருப்பதால் மட்டும் இம்மாதிரி சாக்கடை மனங்கள் நாகரீகம் அடைந்துவிடுவதில்லை என்பது புரிகிறது. நல்ல சிந்தனைகளுக்கும் இவர்கள் இடஒதுக்கீடு தினசரி செய்யவேண்டும்!

    ஒருவரது கருத்து தன்னுடன் ஒத்துப் போவதில்லை என்பதால் எதிர்கருத்துக்காரரது குடும்பப் பெண்களை இழிவாக அவமதிக்கும் செயல் மனிதத் தன்மை கொண்டதில்லை அவனது அசுரகுணமே வெளிவந்து தலைகாட்டுகிறது....

    யுத்தத்தில் வெற்றிகொள்ள இறைவனை வேண்டுகிறேன். தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் அருள் புரியட்டும்.

    தர்மம் வெல்லும் எப்போதும்!

    வலைப்பூ பதிவர் உலகம் தங்களால் கூடுதல் பாதுகாப்புப் பலன் பெறுவது வரலாற்றில் பதிவாகும்.

    அன்புடன்,

    ஹரிஹரன்

    ReplyDelete
  20. டோண்டு சார்...

    முழுமையாக செய்யவேண்டும், சென்ற பதிவில் அதை செய்யவில்லை என்பதே இந்த சிறியோனின் கருத்து..

    சமாதானத்துக்கு ஒரு பதிவு போட்ட பிறகு அதில் வந்த சில பின்னூட்டங்களை மட்டுறுத்தி இருந்தால் நான் மகிழ்ந்திருந்தபடி பிரச்சினை முற்றாக ஒழிந்திருக்கும்...

    ////ஒரு கை தட்டி ஓசை வராது. அதே போல ஒரு தரப்பு மட்டும் சமாதானத்துக்கு போக முடியாது. ////

    நீங்கள் கூறுவது 100 சதவீதம் சரி...

    //இருந்தாலும் அதையும் செய்து பார்த்து விட்டேன்.//

    இன்னும் ஒரு சிறிய முயற்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்..

    ReplyDelete
  21. Good decision.

    Lets ignore this idiot.

    ReplyDelete
  22. நன்றி ஹரிஹரன் மற்றும் வஜ்ரா அவர்களே,

    இந்தப் பதிவுக்குப் பிறகு வரும் பதிவுகள் எல்லாமே போலியின் இருப்பையே அலட்சியப்படுத்தித்தான் வரும் என்பதே எனது முடிவு.

    வேறு நல்ல விஷயங்கள் எழுத வேண்டியுள்ளன. CPWD & IDPL அனுபவங்கள் இன்னும் உள்ளன. சென்னையில் நான் கண்ட வாடிக்கையாளர்கள் அலுவலகங்களில் நான் பெற்ற அனுபவங்கள் எழுத வேண்டும், புதுக்கல்லூரி, திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளி ஆகியவற்றைப் பற்றியெல்லாம் எழுத வேண்டும். எவ்வளவோ வேலைகள் காத்திருக்கின்றன.

    நான் ஏற்கனவே போலிக்காக நேரத்தைக் கணிசமாகச் செலவழித்து விட்டேன். போலியின் பிரச்சினை? இதுவும் கடந்து போகும்.

    பின்னூட்டம் கொடுப்பவர் கொடுக்கட்டும், மற்றவர் அமைதி காக்கட்டும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  23. //உங்கள் மன உறுதியைக் கண்டு வியக்கிறேன். இந்த அசிங்கமான போலிப்பதிவு போடும் மனவக்கிரம் பிடித்த கூட்டத்தின் செய்கைகளுக்கு எல்லையே இல்லாமல் போகிறது.

    அரசியல் திரா'விட'ப் பெத்தடின் கூட்டத்தினர் எவரும் சொந்தப் பெயரில் பதிவு போடும் நேர்மை கிடையாது. பாம்பின் கால் பாம்பறியும் என்பதால்.//

    இந்த மாதிரி பைத்தியக்கார ஆட்களால் தான் பிரச்சினை அதிகமாகிறது....

    டோண்டு சார் போட்ட பதிவுக்கும் அதைத் தொடர்ந்த பின்னூட்டங்களுக்கும் இந்த உளறுவாயரின் உளறல்களுக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.... இங்கு எங்கு வந்தது திராவிடம், கூட்டமெல்லாம்?

    சூடு ஆற ஒரு பதிவு போட்டுவிட்டு இதுமாதிரி மடையர்களின் பின்னூட்டங்களை அனுமதிப்பது என்பது இரட்டைவேடம் போடுவதற்கு சமம்.

    இந்த பின்னூட்டம் வெளியிடப்பட்டாலும் சரி, வெளியிடப்படாவிட்டாலும் சரி... என் மனதில் இருப்பது என்னவென்று சம்பந்தப்பட்ட டோண்டு சாருக்கு மட்டுமாவது புரியும்....

    ReplyDelete
  24. இனி சொல்வதற்க்கு என்னிடம் ஏதுமில்லை..

    காரணம் பாதிக்கப்பட்ட நீங்கள் எடுக்கும் முடிவில் நான் எந்த கருத்தையும் திணிக்க முடியாது..

    நீங்கள் உங்கள் பணியை தொடருங்கள்..

    ReplyDelete
  25. அடுத்தவர் மனைவி,மக்களை வசைபாடுவதையே முழு நேரத்தொழிலாக செய்துவரும் அந்த வக்கிரம் பிடித்த மிருகத்துக்கு இங்கு பலரும் பயப்படுகின்றனர்..டோண்டு தைரியமாக எதிர்க்கிறார்..அதைப்பாராட்டவேண்டும்..அந்தக் காட்டுப்பயலை எல்லோரும் அலட்சியம் செய்ய வேண்டும்..அதை விடுத்து அவனைத் திட்ட வேண்டாம் , பிரச்னையை வளர்க்க வேண்டாம் என்று சிலர் "அட்வைசு" செய்கின்றனர்..தங்கள் தாயை,மனைவியை,மகளை இப்படி தரங்கெட்டு விமர்சித்தால் இப்படித்தான் உங்கள் கருத்துக்களை மாற்றி எழுதி,அந்தப் பொறம்போக்குப் பயலின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு ஒடிவிடுவீர்களா?அறிவுரைகளை அள்ளி விடும்முன் தங்களுக்குள் ஒருமுறை கேட்டுப் பார்க்கவேண்டும்..இது சரியா என்று??...

    எல்லை மீறிப்போகும், தமிழ்மணத்தையே நாறடிக்கும் அந்த நாதாரி சைக்கோவை எல்லொரும் ஒன்று சேர்ந்து கடுமையாக எதிர்க்க வேண்டும்.."வேண்டாம்""விபரீதம்" போன்ற பேத்தல்களை நிறுத்திவிட்டு..

    வல்லவனுக்கு வல்லவன் இவ்வுலகில் உண்டு..என்னை எவனும் அசைக்க முடியாது என்று இறுமாந்திருக்கும் அந்த பொறம்போக்கு பேமானி சீக்கிரமே சிக்கி,சீரழிந்து,செருப்படி படப்போகும் நாள் கண்டிப்பாக வரும்..

    டோண்டு சார்..அவன் யாரெனத் தெரியும் என்கிறீர்கள்..அவன் இவ்வளவு தூரம் போனபின் அவன் யாரென எல்லாருக்கும் ஓப்பனாக டிக்ளேர் செய்யுங்களேன்..அவன் எல்லோருக்கும் டார்ச்சர் தருவதுபோல் நாமும் எல்லா இடங்களிலும் அவன் இவந்தான் என்று சொல்லி அவனை மகிழ்விக்கலாம்..

    ReplyDelete
  26. "அவன் இவ்வளவு தூரம் போனபின் அவன் யாரென எல்லாருக்கும் ஓப்பனாக டிக்ளேர் செய்யுங்களேன்.."

    இல்லை. இப்போது இவ்வாறு செய்வது மறுபடியும் போர் யுக்தி. பழைய பதிவுகளைப் பொறுமையுடன் பார்த்தால் நீங்கள் கேட்கும் விடை கிடைக்கும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  27. டோண்டு சார்: தங்கள் பதிவுகளில் வந்து பின்னூட்டமிட்ட ஒரே காரணத்திற்காக, என் பெயரிலும் ஒரு போலி தளத்தைத் திறந்து, அதில் என்னுடைய படத்தையும் போட்டிருக்கிறான் போலி. படம் தங்கள் பதிவிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது (வலைப்பதிவர் சந்திப்பின் போது எடுக்கப்பட்டதிலிருந்து). இதைப் படிக்கும் அனைவருக்கும் என் வேண்டுகோள் - மட்டுறுத்தும்போது தயவு செய்து என் id யுடன் ஒப்பிட்டு பின்னர் முடிவு செய்யுங்கள். நானும், அவனை சட்டை செய்யப் போவதில்லை. உண்மை ஒரு நாள் வெல்லும்.

    ReplyDelete
  28. இது டோண்டு Vs போலி டோண்டு பிரச்சனை இல்லை. தமிழ் மணத்தின் பிரச்சனை

    தெளிவாகப் புரிந்துள்ளீர்கள். பெரும்பாலானோர் இது என்னவோ டோண்டு என்கிற சுரணை உள்ளவரின் பிரச்சினை என்றுதான் நினைக்கிறார்கள். சுரணையில்லாமலிருக்கவும் சொல்லுகிறார்கள்.

    ReplyDelete
  29. அவன் எல்லோருக்கும் டார்ச்சர் தருவதுபோல் நாமும் எல்லா இடங்களிலும் அவன் இவந்தான் என்று சொல்லி

    இல்லை புலிப்பாண்டி. அந்த நபர் எதிர்பார்ப்பதே இத்தகைய ப்ரபல்யத்தைத்தான். நம்மிடம் உருப்படியான வேறு வேலைகள் இருக்கின்றன. இந்தப் பதிவோடு, இன்றையோடு இந்த விஷயத்திற்கு சங்கு ஊதியாயிற்று. திவஸங்கள்கூடக் கிடையாது. கெட்ட கனவு. துக்கம் தரும் நேர விரயம்.

    ReplyDelete
  30. //உங்கள் மன உறுதியைக் கண்டு வியக்கிறேன். இந்த அசிங்கமான போலிப்பதிவு போடும் மனவக்கிரம் பிடித்த கூட்டத்தின் செய்கைகளுக்கு எல்லையே இல்லாமல் போகிறது.

    அரசியல் திரா'விட'ப் பெத்தடின் கூட்டத்தினர் எவரும் சொந்தப் பெயரில் பதிவு போடும் நேர்மை கிடையாது. பாம்பின் கால் பாம்பறியும் என்பதால்.//

    இன்று ஹரிகரனுக்கு திராவிடத்தின் மீது வாந்தியெடுக்க டோண்டு அய்யா பதிவு கிடைத்திருக்கு...

    ReplyDelete
  31. மிக்க நன்றி கிருஷ்ணா அவர்களே. இக்னோர் செய்வதுதான் சரி. முதலில் வந்த ஷாக் எலாவற்றையும் நான் ஏற்றுக் கொண்டேன். இப்போது ஷாக் வால்யூ இல்லை. வெறுமனே எரிச்சல் மட்டும் வருகிறது, போலியின் ஆள்மாறாட்ட வேலைகளைப் பார்த்தால்.

    அலட்சியமாக ஒதுக்குவோம். நான் எனது அடுத்தப் பதிவை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கே போட்டு விட உத்தேசம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  32. "இன்று ஹரிகரனுக்கு திராவிடத்தின் மீது வாந்தியெடுக்க டோண்டு அய்யா பதிவு கிடைத்திருக்கு..."

    மன்னித்துக் கொள்ளுங்கள் குழலி, எனது அருமை நண்பரே. என் சார்பில் நீங்கள் தைரியமாக ஆப்பு பதிவில் பின்னூட்டமிட்டதை நன்றியுடன் நினைக்கக் கடமைப்பட்டவன் நான். அதே போல பல இடங்களில் என் பெயரில் போலி பின்னூட்டங்கள் வந்த போதெல்லாம் அதை சம்பந்தப்பட்ட பதிவுகளில் எதிர்த்தவரும் நீங்கள்தான். மேலும் நான் அப்போது சந்தித்து வந்த போலியின் தாக்குதலுக்கு எதிராகத் தனிப்பதிவே போட்டீர்கள். நமக்குள் இவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அது தனிப்பட்ட அவதூறுகள் வீசப்படும்போது போது மறக்கப்பட வேண்டும், உண்மையை நிலை நாட்ட வேண்டும் என்று ஒரு தார்மிக நிலை எடுக்கும் நீங்கள் எனது மதிப்புக்குரியவர்.

    உங்கள் மனம் புண்பட்டதற்காக நான் ஹரிஹரன் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன். பதிவுக்கு மட்டும் ஸ்ட்ரிக்டாக பொருந்தும் கமெண்டுகளை போடுமாறு இந்த சந்தர்பத்தில் எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன். கேட்டுக் கொள்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  33. மிக்க நன்றி தமிழக வினோத் துவா ம்யூஸ் அவர்களே. ஆம் திவஸம் கூடக் கிடையாது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  34. //அரசியல் திரா'விட'ப் பெத்தடின் கூட்டத்தினர் எவரும் சொந்தப் பெயரில் பதிவு போடும் நேர்மை கிடையாது. பாம்பின் கால் பாம்பறியும் என்பதால்.//

    இந்த மாதிரி பைத்தியக்கார ஆட்களால் தான் பிரச்சினை அதிகமாகிறது....

    டோண்டு சார் போட்ட பதிவுக்கும் அதைத் தொடர்ந்த பின்னூட்டங்களுக்கும் இந்த உளறுவாயரின் உளறல்களுக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.... இங்கு எங்கு வந்தது திராவிடம், கூட்டமெல்லாம்?//

    ஒரு நபரைப் பிடிக்கவில்லை எனும் போது அரசியல் திரா'விட'ப் பெத்தடின் கூட்டம் முதலில் செய்வது அவரது கேரக்டரைக் கொல்வதுதான். போலிப்பயல் செய்வது எக்ஸாக்லி அதுவே! நான் உளறிச் சொல்லவில்லை, pattern maatch ஆவதைச் சுட்டியிருக்கிறேன். அவ்வளவே!

    லக்கி நான் சொல்லியிருப்பது இங்கும் அரசியல் திரா'விடம் பேசும் கூட்டம்" இங்கும் உங்கள் சுட்டலில் அரசியல் எனும் வார்த்தை விடுபட்டிருக்கிறது.

    வலைப்பதிய வந்து 20நாட்களில் எனக்கு போலிப்பயல் ஆபாச வலைப்பூ எனது போட்டோவைப்போட்டு ஆரம்பித்தான்.

    இப்போதும் ஆபாசப் பின்னூட்டம், இதில் ஆபாசமாய் உன்னைப்பற்றி எழுதியிருக்கிறேன் வந்து படி என்று இன்விடேஷன் வேறு!

    போலியே அழுகிய குப்பை! அதை முற்றிலும் ஒதுக்குவதுதான் சரி!

    இவ்வளவு பேரை அவனது ஆபாச எழுத்து மூலம் தாக்கி எழுதியதற்குப் பரிகாரமாக அவனை முழுமையாக வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டும் இதோ இவன் தான் அந்த அழுகியமனம் படைத்த இழிபிறவி என்று!

    ReplyDelete
  35. ஹரிஹரன் அவர்களே, பதிவின் நோக்கமே போலியின் செயல்களை உரித்துக் காட்டுவதுதான். அதை மறக்கச் செய்யும் சொற்பிரயோகங்களைத் தவிர்க்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  36. " Then one day they came and they took me
    And I could say nothing because I was as guilty as they were"
    நன்றி ஜே அவர்களே. ஆனால் யாருக்கும் எனக்கு வந்தது போன்ற கஷ்டங்கள் வரவேண்டாம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  37. இப்போது ஏதோ நான் ஒரு மெயில் எழுதியதாகக் கூறி புதிதாக ஒரு யாகூ மெயில் முகவரியை போலி அஞ்சல் செய்து கொண்டிருக்கிறானாம். ஹாட்மெயில் ஐடி ஒன்றையும் கொடுத்திருப்பதாகக் கேள்வி.

    mayiladuthurai@gmail.com அல்லது mayavarathaan@gmail.com இந்த இரு மெயில் ஐடிக்களில் மட்டும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்.

    ஒரு சில நாட்களாக அயோக்கியத்தனம் செய்து வந்தவன் கையும் களவுமாக சிக்கிக் கொண்டதால் கொதித்துப் போயிருப்பது கண்கூடு. பரவாயில்லை. அவன் எது வேண்டுமானாலும் உளறட்டும். நம் வேலையை நாம் பார்த்துக் கொண்டு போவோம்.

    ReplyDelete
  38. சோதனையான் இந்த நேரத்தில் உங்களுக்கு எனது ஒத்துழைப்பு எப்போதுமே உண்டு டோண்டு சார்.

    அடுத்த பிளாக்க்ர் மீட்டிங்கில் உங்களை கண்டிப்பாக சந்திக்க முயற்சிப்பேன். அலுவலக வேலையாக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியுள்ளது. ஆகவே பின்னூட்டங்கள் இடுவதில் தாமதம்.

    கிருஷ்ணன்

    ReplyDelete
  39. நானும் உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன், கிருஷ்ணன் அவர்களே?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  40. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  41. டோண்டு சார்,

    தாமதமான முடிவென்றாலும், "போலியைப் பற்றிப் பேசப்போவதில்லை, போலிக்குப் பதில் எழுதப் போவதில்லை" என்ற தங்கள் முடிவு நல்ல முடிவு. அதைச் செய்யுங்கள். தனிப்பட்ட சந்திப்புகளிலும் உரையாடல்களிலும்கூட போலியைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    நிகழ்வுகளைத் திரும்பிப் பார்த்தீர்களென்றால், போலி உங்களை எதிர்த்து முதலில் தன் நடவடிக்கைகளை ஆதரிக்கவில்லை. ஒரு யாஹ¥ மடலாடற்குழுவிலிருந்து அவர் ban செய்யப்பட்டதால், அந்தக் குழுவையும் அதன் மாடரேட்டர்களையும் எதிர்த்துத்தான் ஆரம்பித்தார். உங்களின் சில பதிவுகள் அவரின் புலம்பலுக்கு வலு சேர்த்ததால் உங்களையும் எதிர்ப்புப் பட்டியலில் சேர்த்துக் கொண்டார். அவர் ஆரம்பத்தில் எதிர்த்தவர்கள் யாரும் அவரை மதித்துப் பதில் சொல்லாமல் புறக்கணித்தனர். இது ஒரு நல்ல முடிவு. என்னையும் தாக்கியிருக்கிறார். நான் பொதுவில் கண்டு கொண்டதே இல்லை. ஆனால், என்றைக்காவது சட்டம் அந்தப் போலி யார் என்று கண்டுபிடித்து அவர்மீது நடவடிக்கை எடுக்குமானால், அன்றைக்கு அந்தச் சட்டத்தின் முன் நான் பாதிக்கப்பட்ட விவரங்களைத் தெரிவிப்பேன். இப்படித்தான் நீங்களும் இருந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். முடிந்தால் திரைமறைவில் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கத் தொடர்ந்து முயற்சி செய்திருக்கலாம். அதை விட்டுவிட்டு, பொதுவில் போலியை மதித்துப் பதில் சொல்ல முயன்று, சமாதானம் பேசி, இதெல்லாம் உங்களுக்குத் தேவையா? இதென்ன நாடுகளுக்கிடையேயான எல்லைப் பிரச்னையா இல்லை கருத்துச் சுதந்திரப் போராட்டமா.. பொதுவில் தீர்த்துக் கொள்ள.

    ஆனால், நீங்கள் ஆர்வக் கோளாறிலும், கருத்தை நிலைநாட்டுகிற விவாத மனப்பாங்கிலும், பின்னூட்டம் கிடைக்குமென்ற ஆசையிலும் (ஆமாம், இதுவும் உங்களின் தாழ்வுகளுக்கெல்லாம் ஒரு காரணம்.) போலிக்குப் பதிலுக்குப் பதிலென்று வேலியில் போகிற ஓணானை மடியில் எடுத்து விட்டுக் கொண்டீர்கள். நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல நீங்களும் ஆகிப் போனீர்கள் என்பது வருத்தமான உண்மை. வலைப்பதிவு சந்திப்புகளில் கூட நீங்கள் போலிக்கு கொடுத்த முக்கியத்துவம், அவரைப் பற்றிய பேச்சுகளால் சந்திப்பை நிரப்பியவிதம் ஆகியன குறித்து உங்களைப் பார்த்தாலே காத தூரம் ஓடுகிற உங்களின் நலம் விரும்பிகள் சென்னையில் கூட இருக்கிறார்கள் என்று தெரியுமா? வலைப்பதிவு சந்திப்புகளில் என்ன நடக்கிறது என்பதைப் போலி அடுத்த நாளே அதில் கலந்து கொண்ட யாராவது ஒருவருடன் சாட் செய்து தெரிந்து கொள்கிறார் என்பது தெரியுமா? அப்படிப் போலியுடன் சாட் செய்து விவரம் தந்த ஒரு நண்பரை, ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று ஒருமுறை கேட்டேன். இல்லையென்றால், "என் குடும்பத்தைப் பற்றி எழுதுவானே" என்றார்.

    போலி மின்னஞ்சல் பெயர்களை மாற்றம் செய்துதான் விவரங்களைப் பெற்றார் என்பது மட்டும் உண்மையில்லை. அப்படியானால், அதுபற்றி நேற்று நீங்கள் அனுப்பிய தனிமடல்கள் கூட ஸ்பெஷல்-ஆப்பு பதிவில் அப்படியே இடப்படுவதற்கானக் காரணம் என்ன? நீங்கள் போலியின் மின்னஞ்சலுக்கு அவற்றை அனுப்பவில்லையே. எனவே, ஒன்று, உங்கள் அல்லது நீங்கள் மடல் அனுப்புகிறவர்களின் மின்னஞ்சல்களைப் போலி பார்வையிடுகிறார். hack செய்திருக்கிறார். அல்லது, நல்லவர்கள் என்று நீங்கள் நினைத்துத் தனிமடல் அனுப்புகிறவர்கள் உங்கள் மடல்களைப் போலிக்கு பார்வேர்ட் செய்கிறார்கள். உங்களைச் சுற்றி நண்பர்கள் இருக்கிறார்களா நண்பர்கள் என்ற பெயரில் தூண்டிவிடுகிற எதிரிகள் இருக்கிறார்களா என்றே தெரியாத நிலையில், நீங்கள் யுத்தம் என்று எழுதுவதைப் பார்க்கும்போது சிரிப்பாக வருகிறது.

    ஒரு யோசனை சொல்கிறேன். நீங்கள் வலைப்பதிவு எழுதாவிட்டால் உங்கள் குடியும் முழுகிவிடாது. மற்றவர்கள் குடியும் முழுகிவிடாது. வலைப்பதிவை மூடிவிட்டு வேறு வேலைகளில் ஈடுபடுங்கள். உங்கள் மனைவியையோ மகளையோ இத்தகைய பாதிப்புகளுக்கு ஆளாக்குவது பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். அவர்களுக்காகவாவது வீம்பு, ஈகோ இவற்றையெல்லாம் விட்டுவிட்டு வலைப்பதிவை நிறுத்துங்கள். அவர்களுக்குத் தேவையில்லாத விஷயம் இது. வலைப்பதிவு எழுதாவிட்டால் கை நடுங்கினால், பத்திரிகைகளுக்கு எழுதுங்கள். உங்களுக்குக் கை நடுங்குவதை விட நல்ல குடும்பத்துப் பெண்கள் மானம் கப்பலேறுவதைப் பார்த்து ஒன்றும் செய்ய இயலாமல் இருக்கிற கையாலாகத தனத்தால் எங்கள் மனங்கள் நடுங்குகின்றன. வலைப்பதிவைத்தான் நிறுத்தச் சொல்கிறேன். போலிக்கெதிரான சட்டபூர்வமான நடவடிக்கைகள் இருந்தால் அதில் ஓர் ஆக்ரோஷமான வேகத்துடன் இறங்குங்கள். போலி கையில் விலங்கு மாட்டியபின்னர்தான் வலைப்பதிவு எழுதுவேன் என்று சபதம் மனதில் எடுத்துக் கொள்ளுங்கள்.. அதைவிட்டுவிட்டு, வெட்டியாக யுத்தம், சமாதானம் என்று பேசிக் கொண்டு, போலியைப் பெருந்தன்மையானவர் என்று அவரவர் பட்டம் அளித்துக் கொண்டு... பார்க்கவே அசிங்கமாக இருக்கிறது.

    யுத்த நெறிகள் அறிந்தவருடனும் யுத்த நெறிகளைப் பின்பற்றுபவருடனும் செய்வதுதான் யுத்தம். நீங்கள் இங்கே ஒரு சைக்கோவுடன் யுத்தம் செய்யக் கிளம்பியிருக்கிறீர்கள். அது உங்களையும் முடிவில் சைக்கோவாக்கிவிடும்.

    போலியால் மிகவும் பாதிக்கப்பட்ட துளசி கோபால் அவர்களைப் பார்த்தீர்களா? போலி பெருந்தன்மையானவர் என்று பட்டம் தருகிறார். இதுதான் நிதர்சனம். ஏனென்றால், அவரை விட்டுவிட்டாரே போலி. இப்படித்தான் எல்லாருமே தாங்கள் தாக்கப்படக்கூடாது என்பதற்காக பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள். வலைப்பதிவு திரட்டிகளில் போலியின் பதிவுகள் (உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரிலான பதிவுகள் கூட) அனுமதிக்கப்படுவதும் பின்னர் நீங்கள் கேட்டுக் கொண்ட பின்னரே நீக்கப்படுவதும்கூட உங்களுக்கு எதிரான காழ்ப்புணர்வுகளை மறைமுகமாகவும் பொலிடிகலி கரெக்டாகவும் ஆதரிக்கிற மனப்பாங்கு என்றே நான் பார்க்கிறேன். இப்படிப்பட்ட இடத்தில் யுத்தம் என்று ஆரம்பித்து குடும்பத்தின் மானத்தையும் சேர்த்துக் கெடுக்காதீர்கள். இன்னொன்றையும் சொல்கிறேன். அதைச் செய்வதால் கெட்டுவிட மாட்டீர்கள். மற்றவர்களைப் போலவே போலியுடன் சமாதானமாகப் போங்கள். உங்களுக்காக இல்லாவிட்டாலும் குடும்பத்திற்காக. போலியால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஏறக்குறைய எல்லாரும் அப்படி அவருடன் தனியே மடலிலோ சாட்டிலோ தொடர்பு கொண்டு, மன்னிப்போ வேண்டுதலோ வைத்துச் சமாதானமாகப் போய்விட்டார்கள் என்று அறிகிறேன். யுத்தத்தில் பின்வாங்க வேண்டிய நேரத்தில் பின்வாங்குவதும் வெற்றிதான். அறுபது வயதில் ஓய்வாக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய நேரத்தில், வலைப்பதிவுகள் சந்தோஷத்தைத் தருகிற அனுபவமாக உங்களுக்கு இல்லாமல் செய்து கொண்டதில் பாதிப் பங்கு உங்களுக்கு நிச்சயம் இருக்கிறது. இனியாவது இதையெல்லாம் விட்டொழியுங்கள். எழுத இடமா இல்லை. நேரம் செலவு செய்ய விஷயங்களா இல்லை. Dont become an addict to "poli".

    கடுமையாகத்தான் எழுதியிருக்கிறேன். அதற்காக மன்னிக்கவும். இனிமேலும் உங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாவிட்டால் அந்த மகரநெடுங்குழைகாதன் கூட உங்களைக் காப்பாற்ற முடியாது.

    அன்புடன், பி.கே. சிவகுமார்

    ReplyDelete
  42. மிக்க நன்றி சிவக்குமார் அவர்களே. பாறை போன்ற உங்கள் கலங்காத பண்புக்குத் தலை வணங்குகிறேன். இந்தக் கட்டத்தில் உங்களைப்போல பேசுபவர்கள் குறைவு. ஆகவே அம்மாதிரி மனிதர்களின் ஆதரவு மிக அருமையானது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  43. பி.கே.எஸ். அவர்களே,

    பின்னூட்டத்திற்கு நன்றி. சில விஷயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    போலி மற்றவர்களைத் தாக்கியதற்கும் என்னைத் தாக்கியதற்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு உங்கள் கவனத்திலிருந்து விடுபட்டு விட்டது. மற்றவர்கள் விஷயத்தில் தனிப்பட்ட முறையில் அவரவர்கள் தாக்கப்பட்டனர். தாக்கியது யார் என்று தெரிந்து அலட்சியப்படுத்தவும் முடிந்தது. ஆனால் என் விஷயத்தில் நிலைமையே வேறு, என் பெயரை வைத்து நான் மதிப்பவர்களைத் தாக்கினேன். முதல் அடியே இடுப்புக்கு கீழான அடி என்பதை நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள். இது கேரக்டர் கொலை, நிஜக்கொலையை விடக் கொடுமையானது. சம்பந்தப்பட்டவருடன் எனக்குள்ள நட்பின் மரணத்தை வரவழைக்கக் கூடிய கொலை. ஆகவே இதற்கு வேறுமாதிரியான எதிர்வினைகள்.

    இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நான் செய்தவை காலத்தின் கட்டாயம் என்றுதான் படுகிறது. எனக்கு எப்படிப் படுகிறதோ அப்ப்டித்தானே நான் செயல்படுவேன்.

    இவ்வளவு தூரம் வந்த பிறகு, என்னால் இப்போது போலியை அலட்சியம் செய்ய முடியும். என் மனைவி மற்றும் மகள் பெயரிலான வலைப்பூக்களை அலட்டிக் கொள்ளாமல் காதும் காதும் வைத்தது போல தூக்க முடிந்தது. இதில் தமிழ்மணம் எனக்களித்த ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி. அவை முதலில் திரட்டப்பட்டது சில கண்டிஷன்கள் நிரப்பப்பட்டதால் ஆட்டமேட்டிக்காகத்தான் நிகழ்ந்திருக்க வேண்டும்.

    இணையத்தை விட்டு எப்போது விலகுவது என்பதெல்லாம் எனது முடிவாக இருக்க வேண்டும். ஒரு போலிப் பேர்வழிக்காக பயந்தல்ல.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  44. "போலி மின்னஞ்சல் பெயர்களை மாற்றம் செய்துதான் விவரங்களைப் பெற்றார் என்பது மட்டும் உண்மையில்லை. அப்படியானால், அதுபற்றி நேற்று நீங்கள் அனுப்பிய தனிமடல்கள் கூட ஸ்பெஷல்-ஆப்பு பதிவில் அப்படியே இடப்படுவதற்கானக் காரணம் என்ன? நீங்கள் போலியின் மின்னஞ்சலுக்கு அவற்றை அனுப்பவில்லையே."

    மன்னிக்கவும், இதை தெளிவுபடுத்த மறந்து விட்டேன். நேற்று இரவுதான் மாயவரத்தான் பெயரில் இருந்த போலி ஐடியை கண்டுபிடித்தேன். அதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் நான் மாயவரத்தானுக்கு எழுதுவதாக நினைத்து அதை போலியின் மின்னஞ்சலுக்கு அனுப்பியிருக்கிறேன். உங்களுக்கும் காப்பி அனுப்பியிருக்கிறேன். பிறகு ஜீமெயில் ஆர்கைவ்ஸில் பார்த்து எங்கெல்லாம் mayiladturai வந்தஓ அங்கெல்லாம் போய் பார்த்தேன். முதலில் ஜூலை மாதம் எனது சஷ்டியப்தபூர்த்தி படங்கள் அனுப்பியது, பிறகு தமிழ்மணம் விற்பனையானபோது ஒரு chat இவற்றைத் தவிர்த்து வேறு எங்கும் காண்டாக்ட் வைத்துக் கொள்ளவில்லை. ஆகவே போலி கோட் செய்ததெல்லாம் mayiladuturai ID-ல் என்னிடமிருந்தும், மாயவரத்தானிடம் raghtransin பெயரில் செய்த சேட்டிலிருந்தும்தான் எடுத்துப் போட்டிருக்கிறான். ஆகவே ஹேக்கிங்க் ஒன்றும் இல்லை.

    மேலும் வலைப்பதிவர் மீட்டிங்கிற்கு வந்த நண்பர்களில் அவன் நண்பன் யார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதற்காகக் கவலைப்படவில்லை. மீட்டிங் ஒன்றும் ரகசியம் இல்லையே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  45. இதைத்தான் நான் முதலிருந்து சொல்லிவருகிறேன். ஜஸ்ட் இக்னோர் ஹிம்

    ReplyDelete
  46. Yes Calgary Siva, now I can afford to ignore him.

    Regards,
    Dondu N.Raghavan

    ReplyDelete
  47. நடந்தவை அனைத்தும் மிகவும் வருத்தத்துக்குரியவையே. ம்ம்ம்.. முடிந்த வரையில் உங்கள் குடும்பத்தாரின் புகைப்படங்கள் வெளிவருவதை தவிர்க்கவும். எதுக்கு அவங்க கஷ்டப்படவேண்டும்.

    ReplyDelete
  48. "இனிமேல், மாடரேஷனை மெயில் மூலம் செய்யும் ஆப்சனை எனபிள் செய்யுங்கள். அதனால்,, அந்த பின்னு{ட்டம் உங்கள் மெயிலுக்கு வரும். மெயில் திறந்து படித்துப் பார்த்துவிட்டு பிறகு உங்கள் பிளாக்கர் மாடரேஷனுக்குப் போங்கள். அங்கு அதை ரிஜக்ட் செய்யலாம்."
    அவ்வாறுதான் நான் செய்துள்ளேன். மெயிலிலேயே (ஜிமெயில்) பின்னூட்டமிடுபவர் பெயர் மேல் எலிக்குட்டி வைத்துப் பார்த்தால் திரைக்கு இடது பக்கம் கீழே பிளாக்கர் ஐ.டி. தெரியும், அதிலிருந்தே அவரது அடையாளத்தைக் கண்டு கொள்ளலாம். உதாரணத்துக்கு ம்யூஸ் அவர்கள் பின்னூட்டத்தில், அவரது டிஸ்ப்ளேயில் காட்டப்பட்ட 5279076 அம்மாதிரி எலிக்குட்டி சோதனையில் கீழேயும் தெரிந்தால் தீர்ந்தது விஷயம். ஒரு காலத்தில் போலி டோண்டு என் பெயர் மற்றும் அடைப்புக் குறிகளுக்குள் எனது பிளாக்கர் எண் 4800161 என்பதையெல்லாம் வைத்து dondu(#4800161) என்று டிஸ்ப்ளே பெயர் தருவான். எலிக்குட்டியை வைத்துப் பார்த்தால் ஒரு நிமிடத்தில் குட்டு வெளிப்பட்டு விடும். அதை செய்யக்கூட பல வலைப்பதிவர்கள் சோம்பேறித்தனப்பட்டு நான் வெளியிட்டப் பின்னூட்டமாக நினைத்து கோபத்துடன் பதில் எல்லாம் கொடுத்திருக்கின்றனர். ஆகவேதான் நான் பிரபலப்படுத்திய எலிக்குட்டி சோதனை பற்றி எல்லோருக்கும் தெரிவித்தேன், தெரிவித்தேன், தெரிவித்தேன்,...

    இன்னொரு விஷயம் மட்டுறுத்தலையும் மெயில் பக்கத்திலிருந்தே செய்து விடலாம், நீங்கள் உங்கள் வலைப்பூவுக்கு லாக் இன் செய்திருக்கும் பட்சத்தில். இல்லாவிட்டால் அதற்கான ப்ராம்ப்டுடன் ஒரு புது பக்கம் திறக்கும். பிரச்சினையில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  49. "முடிந்த வரையில் உங்கள் குடும்பத்தாரின் புகைப்படங்கள் வெளிவருவதை தவிர்க்கவும்."

    முயற்சித்து தோல்வியடைந்து விட்டது. எனது மனைவியின் பெயரில் வலைப்பூ திறந்து பெயர் முகவரி மற்ரும் எனது டெலிஃபோன் எண்களை அப்படியே தந்து அசிங்கமாக பதிவுகள் எழுந்த போது அந்த வலைப்பூவை ஓசைப்படாமல் அகற்றும் காரியத்தை செய்தேன். நான் எனது வெப்சைட்டிலிருந்து விவரங்களை பார்க்கச் செய்து அந்த வலைப்பூவில் எனது விவரங்கள் அப்படியே வந்ததை காண்பித்த உடன் தமிழ்மணத்தாரும் ஏற்றுக் கொண்டு காரியமாற்றினர்.

    அதன் பிறகுதான் சண்டையை நிறுத்திக் கொள்ள எனது முந்தைய யோம் கிப்பூர் பதிக்வையே போட்டேன். அதை பலர் வரவேற்றனர். ஆனால் போலி முதலிலிருந்தே அதை ரிஜக்ட் செய்தான். சிலர் துணிந்து அவன் பக்கத்துக்கே போய் ஏன் அவ்வாறு செய்தான் எனக் கேட்க அசிங்கமாக அவர்களை திட்டினான். பிறகு ஏற்க முடியாத அவமானகரமான கண்டிஷன்களையெல்லாம் வைத்தான். ஒரு 10 நாள் பொறுத்துப் பார்த்து, நடுவில் அவன் துளசி அவர்களை ஏமாற்றி என் பெண்ணின் ஃபோட்டோவைப் பெற்று இன்னொரு வலைப்பூ திறந்தான். அதையும் ஓசைப்படாமல் அகற்ற வைத்த பிறகுதான் எனது இப்பதிவை வெளியிட்டேன்.

    இடையில் நான் சற்றே கவனகுறைவாக இருந்ததால் மாயவரத்தான் என நினைத்து அவனிடம் சேட் செய்திருக்கிறேன், அதே போல எனது சஷ்டியப்தபூர்த்தி படங்களையும் அனுப்பியுள்ளேன்.

    இப்போது இன்னும் அசிங்கமான க்ண்டிஷன்கள், பயமுறுத்தல்கள். எனக்கு சாதாரணமாகவே பிளாக்மெயிலர்களைப் பிடிக்காது. சினிமாவில் கூட ஒரு பாத்திரம் படம் முழுக்க பிளாக்மெயிலரால் பீடிக்கப் படுவதாக வந்தால் பணிபவர் மேல்தான் கோபம் கொபமாக வரும்.

    உதாரணத்துக்கு தவப்புதல்வன் என்னும் படத்தில், சிவாஜி மாலைக்கண்ணால் அவதிப்படுபவர், அது அவர் அப்பா தாத்தாவிற்கும் இருந்திருக்கிறது. அதை அவர் அம்மாவிடம் கூறப்போவதாகச் சொல்லி காரியங்களை சாதித்துக் கொள்கிறான் வில்லன். கடைசியில் அம்மாவுக்கு விஷயம் தெரிகிறது. அதனால் என்ன ஆகிவிடும், சற்று அழுவார், அல்லது மயக்கவடைவார், டாக்டரை பக்கத்தில் வைத்துக் கொண்டு கூறி முடித்திருக்க வேண்டிய விஷயத்தை படம் முழுக்க இழுத்து, என்ன கதையோ போங்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  50. நண்பர் பி.கே.சிவகுமார்,

    உங்க பின்னுட்டத்தைப் படிச்சிட்டு அப்படியே போயிருக்கலாம். ஆனா என் சம்பந்தப்பட்ட
    குறிப்பு இருக்கறதாலே அதுக்கு பதில்/விளக்கம் ( எதோ ஒண்ணு) சொல்ல வச்சுட்டீங்க.

    //போலியால் மிகவும் பாதிக்கப்பட்ட துளசி கோபால் அவர்களைப் பார்த்தீர்களா?
    போலி பெருந்தன்மையானவர்
    என்று பட்டம் தருகிறார். இதுதான் நிதர்சனம். ஏனென்றால்,
    அவரை விட்டுவிட்டாரே போலி. //

    போலி என்னை விட்டுவிட்ட விஷயம் உங்க மூலமாத்தான் தெரிஞ்சது. அதுக்கு சந்தோஷம்.
    ஆனா தினப்படி எனக்கு வர்ற மண்டகப்படி அர்ச்சனைகளை அனுப்புவது வேற யாரென்று பார்த்துச்
    சொன்னா நல்லா இருக்கும்.

    இத்தனைக்கும் நான் செஞ்சது என்ன? டோண்டுவை அவர் வீட்டில் சென்று சந்தித்தது.

    டோண்டுவின் சமாதானப்பதிவைப் பார்த்ததும் எப்படியாவது ஒரு நல்ல வழி கிடைக்கட்டும் என்ற
    பேராசையில் பெருந்தன்மையானவர் னு 'புகழ்ந்து' பின்னூட்டம் போட்டதுக்கே சுமாரா
    ஒரு பத்து 'பாமாலைகள்' அனுப்பிட்டார் நம்ம போலி:-))))

    // போலியால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஏறக்குறைய
    எல்லாரும் அப்படி அவருடன் தனியே மடலிலோ சாட்டிலோ தொடர்பு
    கொண்டு, மன்னிப்போ வேண்டுதலோ வைத்துச் சமாதானமாகப் போய்விட்டார்கள்
    என்று அறிகிறேன்.//

    அப்படியா? இதுவும் புதிய தகவல்தான். இப்படிப் பட்ட நல்ல தகவல்களைத் தந்து
    வயித்தில்/மனத்தில் பால் வார்த்துட்டீங்க. நன்றி.

    ஒரு நல்ல நண்பரின் உதவியைக் கொண்டு 'அர்ச்சனைகளைப் படிக்காமலேயே' குப்பைக்கூடைக்கு
    நேரடியாக அனுப்ப முடிகிறது. அப்படியும் தப்பித்தவறி கண்ணுலே பட்டதுன்னா............... யக்.

    இந்தியாவில் பயணம் செய்யும்போது, சில இடங்களில் மனிதக் கழிவுகளை பார்க்கும்படியா
    ஆயிருது. அதுக்காக கண்ணை நோண்டிக்க முடியுதா? காறித் துப்பிட்டுப் போகலான்னா
    நாமும் அப்படி தெருவிலே துப்பணுமான்னு மனசாட்சி இடிக்குது. அருவருப்போடு அந்த
    இடத்தைவிட்டு நகர்ந்து போயிடறேன். அதுபோலத்தான் இதுவும். என்ன ஒண்ணு, அந்த இடம் எதுன்னு
    நினைவுலே வச்சுக்கிட்டு அடுத்தமுறை அங்கே போகாம இருக்க முடியும். இங்கே தபால் பெட்டிக்கு
    நேரடி வரவு.

    டோண்டு சொன்னதுபோல எழுத எவ்வளவோ விஷயங்கள் இருக்கு, நேரமும் குறைவு. மனித வாழ்க்கை
    எவ்வளவு நாள் நீடிக்கும்னு சொல்ல முடியாத நிலையில் கண்ணை மூடுறதுக்கு முன்னாலே செய்ய வேண்டிய
    கடமைகள். எழுத்துக்கள்னு எக்கசக்கம். அதாலதான் நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன்.

    டோண்டு உங்க பதிவுலே இப்படி ஒரு பின்னூட்டம் போட நேர்ந்ததுக்கு மன்னிக்கணும்.
    ஹூம்..... இதுக்கு எத்தனை வரப்போகுதோ?

    ReplyDelete
  51. "பேராசையில் பெருந்தன்மையானவர் னு 'புகழ்ந்து' பின்னூட்டம் போட்டதுக்கே சுமாரா
    ஒரு பத்து 'பாமாலைகள்' அனுப்பிட்டார் நம்ம போலி:-))))"

    எனது அப்பதிவு வந்த சிறிது நேரத்திலேயே போலி அதை நக்கல் செய்து பதிவு போட்டு விட்டான். மேலும், இவ்வளவு நல்ல முறையில் நீங்கள் பதிவு போட்டும அவன் உங்களைத் தாறுமாறாக ஏசியுள்ளான். ஆனால் பலர் இன்னும் போலி திருந்தக்கூடும் என மனப்பால் குடிக்கின்றனர்.

    இப்பதிவில் கூட நான் என்ன கூறுகிறேன்? என்னைப் பொருத்தவரை போலி இல்லை. அடுத்தப் பதிவிலிருந்து அவனை முழுவதாக இக்னோர் செய்வேன். அப்பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களில் ஏதேனும் அவனைப் பற்றி எழுதினால் அதை மட்டுறுத்தித் தடுப்பேன். இது உறுதி. அதே போல இனி வரும் வலைப்பதிவாளர் மீட்டிங்குகளில் அவனைப் பற்றி பேசப்போவதில்லை. என்னைப் பொருத்தவரை அவன் இல்லை. இல்லாதவனைப் பற்றிப் பேச்சும் இல்லை.

    "போலியால் மிகவும் பாதிக்கப்பட்ட துளசி கோபால் அவர்களைப் பார்த்தீர்களா?
    போலி பெருந்தன்மையானவர்
    என்று பட்டம் தருகிறார். இதுதான் நிதர்சனம். ஏனென்றால்,
    அவரை விட்டுவிட்டாரே போலி."
    கண்டிப்பாக இதை நான் நம்பவில்லை.

    அதே போல மற்றப் பெண் பதிவாளர்கள் பற்றியும் நான் நம்பவில்லை. அவ்வாறே எனது பதிவுகளில் பின்னூட்டமிட்டு அவர்கள் போலியின் வசவுகளைப் பெற விரும்பாததையும் நான் முழுக்கவே புரிந்து கொள்கிறேன்.

    இப்போது என்ன செய்யலாம்? அதுதான் வழியைக் கூறியாகி விட்டதே. புது வலைப்பூக்கள் திறப்பது யார் வேண்டுமானாலும் செய்யலாம். பின்னூட்டங்கள் பதிவுக்கு சம்பந்தமானதாக இடலாம். ஆதரவு மற்றும் எதிர்ப்புப் பின்னூட்டங்கள் எதுவாயினும் சரி. ப்ரொஃபைல் கிட்டாதபடி செய்யலாம். புது வலைப்பூக்களை பின்னூட்டங்களுக்கு மட்டும் வைத்துக் கொள்ளலாம். இன்னும் எவ்வளவோ லாம்கள் இருக்கின்றன. ஒரே ஒரு டாது உண்டு. அதுதான் எந்த புது வலைப்பூ யாருடையது என்பதை நெருங்கியவரிடம் கூடக் கூறக்கூடாது. உளவாளிகள் எங்கும் நிறைந்திருக்கின்றனர்.

    இன்னொரு வழி? நேரடியாகப் பின்னூட்டங்கள் இடுவது, நான் செய்வது போல. யாருக்கு எது தேவையோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டுமே தேவையில்லை, வம்பு எதற்கு என்று இருந்தாலும் அதையும் புரிந்து கொள்கிறேன். பயமுறுத்தலுக்கு பணிவதற்கு முடிவெடுப்பதும் ஒரு டிசிஷன்தானே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  52. டோண்டு சார்,

    தனிப்பட்ட முறையில் முதலில் தாக்கப்பட்டவர் தாங்கள்தான் என்ற வகையிலும், மிக மோசமான தாக்குதலுக்கிடையிலும் அஞ்சாமல் தொடர்ந்து

    எழுதிவருபவர் என்ற வகையிலும் உங்களுக்கு என் நன்றியும் பாராட்டும் ஆதரவும். Now comes the ஆனால்.

    ஆனால் சாலையில் நடக்கும் போது வழியில் அசிங்கத்தை பார்த்தால் தாண்டி போகிறோமில்லையா? யார் என்ற ஆராய்ச்சியோ, போர் என்று

    எழுவதோ எதற்கு ( இது ஒரு incomplete analogy தான். எச்சிலை என் மேலல்லவா துப்பினார்கள், போர் தொடுக்காமல் என்ன செய்வது என்று

    இன்னோரு analogy கொடுத்து மடக்கி விடாதீர்கள்). தீங்கிழைத்தவர்களுடன் பிறரை போல் சமாதானமாக போக வேண்டாம். இடத்தை காலி

    பண்ணி ஓட வேண்டாம். பேசாமல் ignore செய்திருக்கலாமே? இப்போது சொல்வதை அப்போதே செய்திருக்கலாமே? இடையில் வந்த

    அசிங்கங்களாவது தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆரோக்கியமாக கருத்து பரிமாற்றம் செய்பவர், மேலோட்டமாக கருத்து பரிமாற்றம் செய்பவர்,

    ஒரளவிற்க்கு விதண்டாவாதம் செய்பவர் எல்லாம் ok. எப்போது ஒருவர் நாகரீக எல்லை தாண்டுகிறாறோ அப்போது ignore செய்து முற்றிலும்

    புறக்கணிப்பதே சரி. இப்போது நீங்கள் சொல்வது போல. அதையும் யுத்தம், போர் யுக்தி, சமிங்கை, என்றெல்லாம் சொல்லி ignore செய்ய

    வேண்டாம். Just simply ignore and keep doing what you do best; i.e writing your opinions without fear. அது ஜாதியை பற்றியோ, கற்பை

    பற்றியோ, அரசியலை பற்றியோ, அல்லது controversy இல்லாத வாடிக்கையாளர்களை பற்றியோ. Now comes the next ஆனால்.

    ஆனால் இதை பற்றி கருத்து சொல்லும் சிலர் போலிகள் உருவாகுவதற்கும், இணயத்தின் environment கெடுவதற்கும் நீங்கள் காரணம் என்று root

    cause ஐ உங்கள் பக்கம் திருப்பி உங்களை உசிப்பியிருக்காவிட்டால் இவ்வளவு மோசமாயிருக்காதோ என்னவோ. PKS அருமையாக

    சொல்லியிருக்கிறார். வலைப்பதிவை நிறுத்த சொன்னது தவிÃ.

    ReplyDelete
  53. "தனிப்பட்ட முறையில் முதலில் தாக்கப்பட்டவர் தாங்கள்தான்.."

    எனக்கு முன்னால் சம்பந்தப்பட்ட போலியால் பலர் தாக்கப்பட்டு வலைப்பூக்களையே விட்டனர்.

    "ஆனால் சாலையில் நடக்கும் போது வழியில் அசிங்கத்தை பார்த்தால் தாண்டி போகிறோமில்லையா? யார் என்ற ஆராய்ச்சியோ, போர் என்று
    எழுவதோ எதற்கு ( இது ஒரு incomplete analogy தான். எச்சிலை என் மேலல்லவா துப்பினார்கள், போர் தொடுக்காமல் என்ன செய்வது என்று
    இன்னோரு analogy கொடுத்து மடக்கி விடாதீர்கள்). தீங்கிழைத்தவர்களுடன் பிறரை போல் சமாதானமாக போக வேண்டாம். இடத்தை காலி பண்ணி ஓட வேண்டாம். பேசாமல் ignore செய்திருக்கலாமே?"
    பல முறை கூறியாகி விட்டது, இருப்பினும் இன்னொரு முறையும் கூறுவேன். எச்சிலை என் மேல் துப்பினால் நானும் இக்னோர் செய்வேன். தெருவில் அசிங்கம் இருந்தால் நானும் இக்னோர் செய்வேன். ஆனால், அவன் என்னைப் போல வேடம் அணிந்து மற்றவரகள் மேல் எச்சில் துப்பினான், தெருவில் அசிங்கம் செய்தான். போலி டோண்டுதான் முதலில் வந்தான், பிறகு போலி மாயவரத்தான் என்றெல்லாம் போயிற்று. ஆனால் அடிப்படை என்னவோ போலி டோண்டுதான். பலர் பலமுறை எலிக்குட்டி சோதனை கூடச் செய்யாது என்னை சாடினர்.

    முக்கியமாக பலருடன் எனக்கிருக்கும் நட்பையே அவன் குழிதோண்டி புதைக்கப் பார்த்தான். இதை இக்னோர் செய்திருக்க வேண்டுமா? என்ன கூறுகிறீர்கள்?

    நான் ஒரு கேம்பெயினாகச் செய்து எவ்வாறு போலியை அடையாளம் கண்டு கொள்வது எல்லாம் கூறி மெதுவாக மற்றவர்களும் அதை புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

    மறுபடியும் கூறுகிறேன், முதலில் அவன் என்னை நேரடியாகத் திட்டவில்லை, என் பெயரில் என் போட்டோ, என் டிஸ்ப்ளே பெயர் எல்லாம் போட்டு மற்றவர்களைத் திட்டினான்.

    இந்த முக்கிய வித்தியாசம் புரியாமல் நீங்கள் எழுதுகிறீர்கள். ஆனால் இப்போது? இப்போது அவனை இக்னோர் செய்ய முடியும். ஏனெனில் அவன் டுண்டுவாக வருகிறான். அது நான் இல்லை என்பது இப்போது எல்லோருக்கும் புரியும்.

    மேலும் என் மகள் மற்றும் மனைவி பெயரிலும் வலைப்பூக்கள் ஆரம்பித்தான். அவற்றை மூடச் செய்து விட்டு இப்போது இந்த அறிவிப்பை விட்டேன். அவ்வளவே.

    நன்றி.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  54. இப்போது போலி மேட்டரிடமிருந்து விடை பெறும் நேரம் வந்து விட்டது. அடுத்தப் பதிவையும் போட்டு விட்டேன். இனிமேல் நான் என் வழக்கமான வேலைகளைப் பார்க்க வேண்டும்.

    இப்பதிவுக்கு ஆதரவாக, எதிராக, ஆதங்கத்துடன் பின்னூட்டமிட்ட எல்லா நண்பர்களுக்கும் நன்றி. இத்துடன் இந்த கமெண்ட் பெட்டியை மூடுகிறேன். பழைய கமெண்டுகள் தெரியும். புதிய கமெண்டுகள் போட இயலாது.

    வரப்போகும் பதிவுகளில் மறந்தும்கூட போலியைப் பற்றி ஒரு பிரஸ்தாபமும் செய்யாதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய பழைய போலி பற்றிய பதிவுகளிலும் அவ்வாறு செய்யாதீர்கள் என்றும் வேண்டிக் கொள்கிறேன்.

    அப்படி ஏதாவது கமெண்ட் வந்தாலும் அவை எடிட் செய்யப்படும் அல்லது ரிஜெக்ட் செய்யப்படும்.

    வாழ்க்கையில் எவ்வளவோ முக்கிய விஷயங்கள் உள்ளன. அவற்றைப் பார்க்கலாமா? வணக்கம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete