நிரந்தர பக்கங்கள்

11/20/2006

புதிர்கள் புதுசு - 2

"புதிர்கள் புதிசு" போட்டு அஞ்சு நாளாச்சி. இன்னும் சில கேள்விகள் பாக்கி உள்ளன. அவற்றை கேரி ஓவர் செய்து, சில புது புதிர்களைச் சேர்க்கிறேன். கேரி ஓவர் செய்யும்போது, குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக சில மாறுதல்களை செய்துள்ளேன். என்ன கூறுகிறீர்கள்? முந்தைய புதிர்கள் பதிவின் பின்னூட்டப் பெட்டியை மூடி விடுகிறேன். விடைகள் இங்கு தந்தால் போதும்.

இப்புதிர்களை உங்கள் நண்பர்களிடம் விடை தெரிந்த பிறகு கேளுங்கள். அவர்கள் ரசித்தாலோ அல்லது ஏற்கனவே இப்பதிவில் நான் குறிப்பிட்டபடி மைதானம் முழுக்க துரத்தித் துரத்தி உதைத்தாலோ என்னை ஒண்ணும் கேக்கப்படாது.

1. ஆடிட்டர் கோவிந்தாச்சாரியின் மனைவி லேடி டாக்டர் கனகவல்லி தன் கணவர் கேட்டுக் கொண்டபடி கப்பலிலிருந்து நடுக்கடலில் அவரை வீசி எறிகிறார். ஆனால் ஆடிட்டர் கோவிந்தாச்சாரியோ திரும்பப் பறந்து வந்து கப்பலைச் சேருகிறார். என்ன நடந்தது? (அதாவது, அவர்கள் பறவை அல்ல சாமியோவ்).

2. இதன் பொருள் என்ன? --> --> --> --> --> --> --> --> --> -->

3. இதன் பொருள் என்ன?

4. ராமமூர்த்தி மோட்டல் ஒன்றில் தன் மனைவியுடன் தங்கியிருக்கிறார். அன்று இரவு வெளியே கார் பார்க்கிங் வரை செல்கிறார், சற்று நேரம் கழித்து கார் ஹாரனை அழுத்துகிறார், பிறகு ரூமுக்கு திரும்புகிறார்.

5. புது காலணிகளை அணிந்து வேலைக்கு போன பிரதீபா அதனாலேயே மரணம் அடைகிறார்.

6. டோண்டு ராகவன் ஜெயராமனிடம் கூறுகிறான்: நீங்கள் இந்த அறையில் உள்ள நாற்காலியில் உட்காருங்கள், உங்களை சுத்தி சுத்தி 3 முறை ஓடுவேன். அதற்குள் நீங்களாகவே சேரை விட்டு எழுந்து விடுவீர்கள்."
ஜெயராமன்: என்னை என்ன காதில் பூ வைத்தவன் என எண்ணி விட்டீரா? ஏதாவது குண்டூசி வைத்து குத்துவீர்.
டோண்டு: சத்தியமாக இல்லை உம்மை தொடவே மாட்டேன், நேரடியாகவும் சரி அல்லது ஏதாவது குச்சி அல்லது கயிற்றை வைத்தும் சரி.
அதே போல ஜெயராமன் உட்கார்ந்து கொள்ள, டோண்டு இரு முறை சுற்றியதும் ஜெயராமன் தானே எழுந்து விடுகிறார். என்ன நடந்தது? விடை கூற அங்கு டோண்டுவோ ஜெயராமனோ இல்லை. டோண்டு தப்பித்து மான் போல ஓட அவரைத் துரத்திக் கொண்டே ஜெய்ராமனும் ஓடி விட்டார்.

7. விடையில் மைனஸ் வராமல் 21-லிருந்து 2-ஐ எத்தனை முறை கழிக்கலாம்?

8. ஓடும் ரயிலில் கதவுக்குப் பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த கிருஷ்ணமூர்த்தி ராவ் கையில் இருந்த வெள்ளைத் துணியை வீசி எறிந்து விட்டு, கதவைத் திறந்து வெளியே குதித்து தற்கொலை செய்து கொள்கிறான். ரயில் பெட்டியில் யாருமே இல்லை. அவன் மட்டும் ரெயில் பயணத்தில் இல்லாதிருந்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கவே மாட்டான். விளக்குக.

அன்புடன்,
டோண்டு ராகவன்

22 comments:

  1. 3. West Mambalam
    7. Any number of times. Everytime you subtract, you always get 19.

    ReplyDelete
  2. "3. West Mambalam
    7. Any number of times. Everytime you subtract, you always get 19."

    Bull's eye!

    Regards,
    Dondu N.Raghavan

    ReplyDelete
  3. Parasailing விடை தவறு. அதற்கு ஒரு குறைந்த பட்ச உயரம் தேவையாக இருக்கும் அல்லவா. கண்டிப்பாக மிதக்கும் கப்பல் மேல் தளத்துக்கும் கடலுக்கும் இடையில் உள்ள தூரம் அதற்கு போதாது என்றுதான் படுகிறது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. Hi Dondu,

    Here are some answers,

    2) Arrow Marks

    3) apple :))

    4) Ten Times..

    How was that??

    ReplyDelete
  5. "2) Arrow Marks

    3) apple :))

    4) Ten Times..

    How was that??"

    All wrong, I am afraid. That too the third question has already been correctly answered and you go and answer it, and that too wrongly! :)))

    Buck up, my dear young man!

    Regards,
    N.Raghavan

    ReplyDelete
  6. "2. kilakke pogum rail"

    Sorry, you lost me. (I can't follow the reasoning).

    Regards,
    Dondu N.Raghavan

    ReplyDelete
  7. "He is the train driver"
    No, he is a passenger.

    Clue? This is a variation of a puzzle I asked earlier. Do navigate back chronologically along my previous posts, especially the puzzles.

    Regards,
    N.Raghavan

    ReplyDelete
  8. //
    3. இதன் பொருள் என்ன?
    //

    மேற்கு மாம்பலம் என்பது சரியான விடை (அதை ஏற்கனவே சொல்லிவிட்டார்கள்). சரியான தவறான விடை, மேற்கில் இருப்பவர்கள் அனைவரும் மாங்காக்கள் என்பதே. :D

    8. அவன் காதலி அவன் கண் முன்னே ரயிலிலிருந்து தவறி விழுந்துவிட்டாள். அந்த சோகத்தில் அவனும் தற்கொலை செய்துகொள்கிறான்.

    5. புதிய காலணி, புதிதாய் போடப்பட்ட ரோட்டில் ஒட்டிக்கொள்ள, அதை கழட்ட இலகுவாக இல்லாதனால் (பழக்கம் இல்லாதனால்) Accident ஆகி இறக்கிறாள்.

    4. மனைவி ஒரு மறதி வியாதியுடையவள். அவளுக்கு காரை லாக் செய்தோமா என்று சந்தேகம். ஆகயால் கணவனிடம் கேட்க, அதை சரி பார்த்து ஹார்ன் அழுத்துவதாகச் சொல்லி அதையே செய்கிறார்.

    ReplyDelete
  9. "சரியான தவறான விடை, மேற்கில் இருப்பவர்கள் அனைவரும் மாங்காக்கள் என்பதே. :D"
    :)))))

    நீங்கள் தந்த எல்லா விடைகளும் தவறு.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. கேள்வி இரண்டிற்கான பதில்:
    Broken arrow

    ReplyDelete
  11. "Broken arrow"
    தவறான விடை.

    அன்ப்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. 4. மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு கார் ஹாரனை அழுத்திப் பார்க்கிறார். கள்ளக்காதலன் ஜன்னல் வழியாக வெளியில் குதித்துச் செல்கிறானா என்று !!

    ReplyDelete
  13. "மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு கார் ஹாரனை அழுத்திப் பார்க்கிறார். கள்ளக்காதலன் ஜன்னல் வழியாக வெளியில் குதித்துச் செல்கிறானா என்று !!"

    இல்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  14. 1. கோவிந்தாச்சார்யாரை "வீசி எறிகிறாரா" அல்லது விட்டுச் செல்கிறாரா ?

    ஒரு வேளை கனகவல்லி அவரின் அஸ்தியை கரைக்கிறாரோ !! காற்றடித்து பறந்து கப்பலுக்கே வந்து விழுகிறது சாம்பல்.

    ReplyDelete
  15. "ஒரு வேளை கனகவல்லி அவரின் அஸ்தியை கரைக்கிறாரோ !! காற்றடித்து பறந்து கப்பலுக்கே வந்து விழுகிறது சாம்பல்."

    100% சரி. பாராட்டுக்கள் வஜ்ரா அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  16. பதில் வராத கேள்விகளுக்கு பதிலை நீங்களே சொல்லிருங்க சார்...இவ்வளவு நாள் இப்படி விட்டு வைக்காதீங்க...

    ஷங்கர்

    ReplyDelete
  17. "பதில் வராத கேள்விகளுக்கு பதிலை நீங்களே சொல்லிருங்க சார்..."
    அஸ்கு புஸ்கு. இன்னும் 5 கேள்விகள் பாக்கி இருக்கு. கூட 5 புதிர்களை சேர்த்து கூடிய சீக்கிரம் புது புதிர்கள் பதிவு போட்டால் போயிற்று. சில புதிர்கள் அம்மாதிரி பல முறை கேரி ஓவர் செய்யப்பட்டவையே.

    பார்ப்போம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  18. "ரயில் பெட்டியில் யாருமே இல்லை. அவன் மட்டும் ரெயில் பயணத்தில் இல்லாதிருந்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கவே மாட்டான். விளக்குக."

    எதையாவது பாத்து பயந்திருப்பானா இருக்குமோ?

    முகம்மது யூனுஸ்

    ReplyDelete
  19. "எதையாவது பாத்து பயந்திருப்பானா இருக்குமோ?"

    உங்களுக்கு ரொம்பத்தான் கற்பனை ஓடுகிறது போல இருக்கு முகம்மது யூனுஸ் அவர்களே. மற்றப்படி தவறான விடை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  20. சூப்பர் ப்ளாக்குங்கோ!!!

    8- இவன் சரக்கு ரயில் ஓட்டுனராக இருந்திருக்கலாம். ரயிலின் ப்ரேக் இல்லாததால், அடிப்பட்டு திடித்து சாவதை விட இப்படி டக்கென்றூ இறக்கலாம்ன்னு முடிவு பன்னியிருக்கலாம். :P

    7- ஒரே ஒரு முறை மட்டுமே! 21-2=19.. இப்போது 19-இலிருந்துதான் 2-ஐ களிக்கமுடியுமே ஒளிய, 21-இலிருந்து முடியாது.

    5- புது செருப்பு கடித்துவிட்டது????

    3- வெஸ்ட் மாம்பழம் (WEST MAmpazham)

    2- தெர்ன் ரைக்ட் (Turn Right)

    1- பூமெராங்???? (Boomerang????)

    ReplyDelete
  21. Hello my friend:
    சூப்பர் ப்ளாக்குங்கோ!!! நன்றி.

    8- இவன் சரக்கு ரயில் ஓட்டுனராக இருந்திருக்கலாம். ரயிலின் ப்ரேக் இல்லாததால், அடிப்பட்டு திடித்து சாவதை விட இப்படி டக்கென்றூ இறக்கலாம்ன்னு முடிவு பன்னியிருக்கலாம். :P தவறான விடை

    7- ஒரே ஒரு முறை மட்டுமே! 21-2=19.. இப்போது 19-இலிருந்துதான் 2-ஐ களிக்கமுடியுமே ஒளிய, 21-இலிருந்து முடியாது. தவறான விடை. சரியான விடை ஏற்கனவே கூறப்பட்டு விட்டது.

    5- புது செருப்பு கடித்துவிட்டது???? தவறான விடை

    3- வெஸ்ட் மாம்பழம் (WEST MAmpazham). இல்லை, அது மேற்கு மாம்பலம். ஏற்கனவே சரியான விடை கூறப்பட்டு விட்டது. கூறாதது, அப்புதிரை போட்டவருக்கு ழ சொல்ல வராது.:)))

    2- தெர்ன் ரைக்ட் (Turn Right) தவறான விடை

    1- பூமெராங்???? (Boomerang????) தவறான விடை. சரியான விடை ஏற்கனவே கூறப்பட்டு விட்டது.

    சரியான விடைகளை இப்பதிவுக்கான முந்தையப் பின்னூட்டங்களில் காணலாம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  22. இப்பதிவில் இன்னும் விடை வராத கேள்விகளை புதிர்கள் புதுசு - 3 க்கு கேரி ஓவர் செய்வதால், இந்த பின்னூடப் பெட்டியை மூடுகிறேன்.

    விடைகளை புதுப் பதிவில் பின்னூட்டமிடவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete