நிரந்தர பக்கங்கள்

2/14/2010

இன்று பிரதோஷம், நாளை வாலண்டைன்ஸ் டே - ஒரு மறு பிரசுரம்

தலைப்பை கடைசியில் ஜஸ்டிஃபை செய்கிறேன்.

உலகமே காதலர்களை காதலிக்கிறது என்று பொருள் வரும் ஆங்கிலச் சொலவடை உண்டு. அவர்களுடன் இந்த தினம் சேர்த்து சொல்லப்படுகிறது.

புனிதர் வேலண்டைன் தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது. அந்த நாள்தான் காதலிகள்/காதலர்கள் தத்தம் (இது முக்கியமாக அண்டர்லைன் செய்ய வேண்டியது) காதலர்/காதலிக்கு தங்கள் காதலை வலியுறுத்திக் கூறுவர். அன்று வேலண்டைன் கார்டுகள், மிட்டாய்கள் அல்லது தரும ஸ்தாபனங்களுக்கு டொனேஷன் (பெயர் சொல்லாது அளித்தல்) ஆகியவை நடைபெறும். பூக்கள் சர்வ சாதாரணமாக அளிக்கப்படும்.

வேலண்டைன் தினம் என்பது இரண்டு கிறித்துவத் தியாகிகள் நினைவாக வந்தது. இருவரது பெயரும் வேலண்டைன் ஆகும். மத்திய காலம் என அறியப்படும் Middle Ages- ல் இந்த தினம் காதலர்களுக்கு சொந்த தினமாக மாறியது. ஏனெனில் அப்போதுதான் ஷிவால்ரி என்று அழைக்கப்படும் பண்பு வேர் ஊன்றியது. இந்த தினத்தில் வேலண்டைன் என்று அழைக்கப்படும் கடிதங்களை காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வர். இப்போதெல்லாம் அக்கடிதம் இதய வடிவத்தில் இறக்கையுடன் கூடிய காதல் கடவுளாம் க்யூப்பிடை வைத்து வருகிறது. 19-ஆம் நூற்றாண்டு வரை கையால் எழுதப்பட்டு வந்த இது, அச்சமயத்தில்தான் அச்சடித்த கார்டுகளில் வர ஆரம்பித்தது. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 100 கோடி கார்டுகள் பரிமாறிக் கொள்வதாக நம்பத்தகாத வட்டாரங்கள் (கார்டுகள் விற்பவர்கள்) கூறுகின்றன. கிறிஸ்துமசுக்கு அப்புறம் இவ்வகை கார்டுகள்தான் அதிகம் பாப்புலர் என்றும் அதே வட்டாரங்கள் கூறுகின்றன.

உலகமயமாக்கலின் உபயத்தில் இம்மாதிரி கார்டுகள் இந்தியாவிலும் அதிகமாக புழங்குகின்றன. ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா, பின் நவீனத்துவ பொதுவுடைமைவாதிகள், தமிழ்குடிதாங்கி ஆகியோரைத் தவிர்த்து கிட்டத்தட்ட எல்லோராலும் இந்த தேசத்திலும் வரவேற்கப்படுகிறது.

எங்கள் வீட்டில் இது ஆண்டுக்கு 24 முறை கொண்டாடப்படுகிறது. அதை பற்றி நான் இந்தப் பதிவில் கீழ்க்கண்ட பின்னூட்டம் இட்டுள்ளேன்.

"At 1:29 AM, dondu(#4800161) சொல்வது...
ஒரு பிப்ரவரி -14-ல் என் வீட்டம்மாவுக்கு ஹேப்பி வேலண்டைன்ஸ் டே என்று கூறியதற்கு ஒரு நிமிடம் என்னை விழித்துப் பார்த்து விட்டு, இன்னைக்கு பிரதோஷம், கோயிலுக்குப் போகணும் என்று கூறிவிட்டு எங்கள் ஊர் லக்ஷ்மிநரசிம்மர் கோவிலுக்கு விரைந்தார்.

அன்று முதல் எங்கள் வீட்டில் பிரதோஷமெல்லாம் வேலண்டைன் டேயாகவும், vice versa ஆகவும் உருவெடுத்தன".

ஆகவே இன்று பிரதோஷம், வாலண்டைன்ஸ் டே இந்த மாதம் 11-ஆம் தேதியே முடிந்து விட்டது.

பை தி வே டி.பி.ஆர். ஜோசஃப் தம்பதியருக்கு திருமணதின வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

33 comments:

  1. சூப்பர் பதிவு.

    லஷ்மி நரசிம்மர் கோயிலில் ஒரு 73 வயது மதிக்கத்தக்க இளைஞர் கோயிலுக்கு வரும் ஜோடிகளை கலாய்த்துக் கொண்டே இருப்பார். வாலண்டைன்ஸ் டேவும் அதுவுமா ஏதாவது அப்பாவி ஜோடி அந்த கோயிலுக்கு போயி மாட்டிக்கிட்டா அவ்ளோ தான் :-)))))

    ReplyDelete
  2. திருமணமானவர்களுக்கு மனைவி அல்லது கணவன் சிரித்துப் பேசும் நாட்கள் அததனையுமே வாலெண்டைன்ஸ் டே தான் சார்!

    அது நீங்கள் சொல்லும் 24 நாட்களுக்கும் குறையாது என்று நம்புகிறேன்!:-))))))))))

    ReplyDelete
  3. அவர் மிகவும் மரியாதைக்குரிய பெரியவர். அவர் பெயர் கோவில் ராகவன். லட்சுமி நரசிம்மசுவாமி கோவிலின் நிர்வாகி.

    நான் என் வீட்டம்மாவிடம் இப்போதுதான் இந்த விஷயம் பற்றி கேட்ட போது, அவர் பொங்கி எழுந்து விட்டார். கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் அம்மாதிரி காதலர்கள் இவ்வாறு எல்லோரும் பார்க்க ஈஷிக் கொண்டு, அசிங்கமாக பேசிக் கொண்டு கோவிலுக்கு ஏன் வரவேண்டும்? எங்காவது பார்க்கு, பீச்சு என்று போய்த் தொலைவதுதானே என்று சீறினார்.

    அந்த மரியாதைக்குரிய பெரியவரை கேலி செய்யும் எந்த பின்னூட்டத்தையும் நான் இனிமேல் அனுமதிப்பதாக இல்லை.

    லக்கிலுக் அவர்களே, உங்கள் தந்தையிடம் அவரைப் பற்றி கேட்கவும். நான் கூறியதை அவரும் உறுதி செய்வார்.

    அந்த கோவிலுக்காகவே உடல், பொருள், ஆவி அத்தனையும் அர்ப்பணித்து வேலை செய்யும் அப்பெரியவரை பற்றி கேலி பேசாதீர்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. ஆஹா! அப்போ அது நீங்க இல்லையா!

    மன்னிக்கவும்!

    ReplyDelete
  5. //அது நீங்கள் சொல்லும் 24 நாட்களுக்கும் குறையாது என்று நம்புகிறேன்!:-))))))))))//
    100% உண்மை. :-)))))))

    அன்புட,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. //ஆஹா! அப்போ அது நீங்க இல்லையா!//

    இல்லை. :)))))
    பரவாயில்லை. நான் என்று நினைத்துத்தானே சொன்னீர்கள்? என்னைக் கலாய்க்க நண்பர்களுக்கு உரிமை உண்டு. நீங்கள் என் நண்பர்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. சார்!

    அந்தப் பெரியவரை நான் எதுவும் கிண்டல் செய்யவில்லையே.

    இருவாரம் முன்பு அந்தக் கோயிலுக்கு சென்றபோது ஒரு தம்பதியை செம வாரு வாரிக்கொண்டிருந்தார். மனைவி, கணவனை ஏதோ காரணத்துக்காக நச்சரித்துக் கொண்டிருந்தபோது,

    "ஏம்மா, கோயிலுக்கு வந்து கூட உன் ஆத்துக்காரனை நிம்மதியா உடமாட்டியா, அவனை கொஞ்சம் ப்ரீயா விடறதுதானே" என்று நக்கல் அடித்துக் கொண்டிருந்தார். தம்பதிகளும் சிரித்தவாறே நகர்ந்தனர்.

    பொதுவாக கோயிலில் நிர்வாகிகள் (அர்ச்சகர்கள் அல்ல) வரும் பக்தர்களிடம் சிடுசிடுப்பு காட்டுவதையே பல இடங்களில் கண்டிருக்கிறேன். இக்கோயிலில் வித்தியாசமாக எல்லோரிடமும் செம ஜாலியாக பழகும் நிர்வாகியை கண்டதும் எனக்கு கொஞ்சம் வித்தியாசமாகப் பட்டது. அதையே உங்களிடம் பகிர்ந்துகொண்டேன்.

    அக்கோயிலுக்கு வரும் காதலர்களிடம் கூட அந்தப் பெரியர் ஏதும் கடுமையாக நடந்து கொண்டதாக தெரியவில்லை :-)

    ReplyDelete
  8. இப்ப உங்களுக்கு காதலர் தின வாழ்த்து சொல்வதா இல்லை பிரதோஷ வாழ்த்து சொல்வதா என்று தெரியாமல் குழம்பி போயிருக்கிறேன்.

    அடடே..அப்புறம் லட்சுமி நரசிம்மர் கூட காதல் தம்பதி போலிருக்கே?அவர்களுக்கும் இனிய காதலர் தின மற்றும் பிரதோஷ வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. நாந்தான் உங்களை தவறாக புரிந்து கொண்டேன் லக்கிலுக். மன்னிக்கவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. //இப்ப உங்களுக்கு காதலர் தின வாழ்த்து சொல்வதா இல்லை பிரதோஷ வாழ்த்து சொல்வதா என்று தெரியாமல் குழம்பி போயிருக்கிறேன்.//
    பிரச்தோஷ வாழ்த்துக்கள்னு சொன்னா மனத்தளவில் எனக்கு நெருக்கமாக வந்து விட்டீர்கள் என அர்த்தம்.

    //அடடே..அப்புறம் லட்சுமி நரசிம்மர் கூட காதல் தம்பதி போலிருக்கே?அவர்களுக்கும் இனிய காதலர் தின மற்றும் பிரதோஷ வாழ்த்துக்கள்.//
    எங்கேயோ போயிட்டீங்க சார். நன்றி.
    பாற்கடல் காதலர்கள் அல்லவா அவர்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  11. டோண்டு சார்,

    லஷ்மி நரசிம்மர் கோயிலின் ஹாஸ்பிடாலிட்டி பற்றி பேசும்போது மற்ற சில கோயில்கள் வணிகமயமாக்கப்படுவது பற்றியும் விமர்சிக்க வேண்டியிருக்கிறது.

    குறிப்பாக நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலும், அருகிலேயே ஒரு மடத்தால் பரமாரிக்கப்படும் ராஜேஸ்வரி கோயிலும்... இவை திருக்கோயில் மாதிரியாக இல்லாமல் கார்ப்பரேட் கம்பெனிகள் மாதிரியாக மாறிக் கொண்டிருக்கிறது.... இக்கோயில்களில் Volunteers எனப்படுபவர்கள் கறாராகவும், பக்தர்களிடம் சிடுசிடுவென்று நடந்து கொள்ளும் முறையும் என்னத்தைச் சொல்ல... 10 ஆண்டுகளுக்கு முன்பு என் பள்ளிப் பருவத்தில் பார்த்த ஆஞ்சநேயர் கோயில் வேறு... இப்போது பார்க்கும் ஆஞ்சநேயர் கோயில் வேறு... ஏதோ லைனில் போகிறோம்... தள்ளு, தள்ளு என்று தள்ளி விட்டு விடுகிறார்கள்... என்ன எல்லாருக்குமே இப்போது தங்குதடையின்றி பிரசாதம் கிடைக்கிறது :-))))

    இதையெல்லாம் நாங்கள் சொன்னால் ஏதோ காழ்ப்புணர்ச்சியில் பேசுவதாக சொல்லுவார்கள். உங்களைப் போன்றவர்களும் இதை உணர்கிறீர்கள் தானே?

    வணிகமயமாக்கப்படும் திருக்கோயில்களைப் பற்றி ஒரு பதிவிடுங்களேன். பெரிய கோயில்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல... வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கபாலீசுவரர் கோயிலும், வடபழனி ஆண்டவர் திருக்கோயிலும் முழுக்க முழுக்க வணிகமயமாக்கப் பட்டிருக்கின்றன... அந்தக் கோயிலுக்கு நம்பி வரும் பக்தர்களுக்கு இது துரோகமல்லவா?

    இதைப்பற்றி நீங்கள் பேசினால் உங்களுக்கு எதிர்ப்புகள் வரக்கூடும். ஆனாலும் யாராவது பூனைக்கு மணி கட்டவேண்டும் அல்லவா?

    இவற்றில் விதிவிலக்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில். அங்கே அர்ச்சகர்கள் பக்தர்களிடம் காட்டும் கனிவும், அக்கறையும் தனி... (இங்கேயும் கூட அறநிலையத்துறை ஊழியர்கள் ஏடாகூடமாக நடந்து கொள்கிறார்கள்)

    ReplyDelete
  12. If you enter the temple, please try to look and think only about God. If you can do so, you will get real peace.
    If you started looking surroundings, you would not feel the peace.
    Note:
    At once time Swami Vivekanada entered into the temple, he followed all the practise, what the lay person do. For him, no need to follow the practise or no need even go to temple. But he did. Hence, remove your Ego etc. and surrender you to God.

    ReplyDelete
  13. //If you started looking surroundings, you would not feel the peace.//

    எல்லோரும் விவேகானந்தர் ஆயிட முடியுமா?

    ReplyDelete
  14. ரொம்ப சுமாரான விஷயத்துக்கு ஒரு புது திரைக்கதை, அப்புறம் காதலர் தினம் பிரதோஷமான காமெடி இப்படி எல்லாத்தையும் சரி விகிதத்தில் கலந்து ஒரு புது கதையை சொல்ல முயற்சி பண்ணி இருக்கீங்க. ஆனா இதுல எனக்குத் தெரிஞ்ச டோண்டுவைக் காணுமே :(

    ReplyDelete
  15. // லக்கிலுக் said...
    அக்கோயிலுக்கு வரும் காதலர்களிடம் கூட அந்தப் பெரியர் ஏதும் கடுமையாக நடந்து கொண்டதாக தெரியவில்லை :-) //

    லக்கிலுக், வாழ்த்துகள் :-))))))))

    ReplyDelete
  16. உங்களுக்கு இன்னிக்குத்தான் வேலண்டைன்ஸ் டே இல்லையா!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. ராகவன் சார்,

    யார் கொண்டாடினாலும் கொண்டாடாவிட்டாலும் பிப்.14 ஐ எங்களுடைய குடும்பத்தில் நிச்சயம் கொண்டாடுவோம்.

    ஏன்னா அது எங்க திருமண நாள்:))

    அத ஒலகமே கொண்டாடறதுல ரெட்டிப்பு சந்தோஷம்..

    ReplyDelete
  18. //ரொம்ப சுமாரான விஷயத்துக்கு ஒரு புது திரைக்கதை, அப்புறம் காதலர் தினம் பிரதோஷமான காமெடி இப்படி எல்லாத்தையும் சரி விகிதத்தில் கலந்து ஒரு புது கதையை சொல்ல முயற்சி பண்ணி இருக்கீங்க.//

    முயற்சியுடையார் இகழ்ச்சியடையார். :)))))))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  19. //யார் கொண்டாடினாலும் கொண்டாடாவிட்டாலும் பிப்.14 ஐ எங்களுடைய குடும்பத்தில் நிச்சயம் கொண்டாடுவோம்.//
    How sweet!!

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  20. //முயற்சியுடையார் இகழ்ச்சியடையார். :)))))))//

    இந்த லொள்ளு தானே வேண்டாம்கிறது....

    ReplyDelete
  21. டோண்டு அவர்களே.. உங்கள் பதிவில் நான் முழுமையாகப் படித்தது இது. மற்ற பதிவுகளுக்கு அவ்வப்போது வருவேன்.. சமீபத்தீல் 1955-இல், சமீபத்தில் 1922-இல் என்று ஆரம்பித்திருப்பதைக் கண்டு குழம்பிப் போய் வந்த வழியிலேயே திரும்பிவிடுவேன் :-) இந்தப் பதிவு அருமை.

    ReplyDelete
  22. வணக்கமும் நன்றியும் தெரிவிக்கிறேன் சேதுக்கரசி அவர்களே. முதல் தடவையாக இப்போதுதான் வழி தெரிந்து வந்ததற்கு நன்றி.

    என்னுடைய சமீபத்தில் என்பது நான் ஏற்கனவே பல இடங்களில் குறிப்பிட்டபடி 'நேற்று நடந்தது போல இருக்கு' என்னும் வகையைச் சார்ந்தது. அந்த வகையில் சமீபத்தில் 1950 வரை என்பது வரும். அதற்கு முந்தைய வருடங்களை நான் அம்மாதிரி சில சமயம் குறிப்பிட்டது ஒரு தமாஷ்தான். ஏனெனில் 'சமீபத்தில்' என்பது இந்த டோண்டு ராகவன் புழங்கும் வட்டங்களில் அவனுடன் ஜோடி சேர்க்கப்பட்டு விட்டது. தமிழ்மணமும் அந்த வட்டங்களில் ஒன்று. அப்படி நான் குறிப்பிடாத சமயங்களில் நண்பர்களே கவலைப்பட்டு அதை கேட்கிறார்கள்.

    எல்லாம் ஒரு தமாஷ்தான். முதல் தடையை உடைக்க உதவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  23. Febraury 15 thaane aiya pradhosham? kuzhapamaga irukuke

    ReplyDelete
  24. //Febraury 15 thaane aiya pradhosham? kuzhapamaga irukuke//

    என்ன குழப்பம்? எங்ள் அகத்தில் பிப்ரவரி 14 தான் பிரதோஷம். இந்த ஆண்டு பிப்ரவரி 15ம் மீதி 23 நாகளும் வேலண்டைன்ஸ் நாட்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  25. //If you started looking surroundings, you would not feel the peace// 'Ananimus' is 100 per cent right. But, Luckylook has a point......somebody has to bell the cat! majority of temples in TN are commercialised...something has to be done..importance to promoting values is very less, servicing poor and the downtrodden sections are nowhere in the agenda of temple authorities...

    ReplyDelete
  26. சுவாரசியமான பதிவு! ஒவ்வொரு பிரதோஷ தினத்திலும் மனைவிக்கு இன்னமும் காதலர் தின வாழ்த்துக்கள் சொல்கிறீர்களா? :-)

    ReplyDelete
  27. நங்கநல்லூர் கோயிலுக்கு சில முறை வந்திருக்கிறேன், புளி சாதம் பிரசாதம் சாப்பிட்டு இருக்கிறேன், எல்லா நாட்களுமே இதேதனா அல்லது மெனு மாறுமா?

    ReplyDelete
  28. ல‌க்கிலுக் சொன்ன‌ மாதிரி தான் என‌க்கும் தோனுது‍ அந்த‌ ஆஞ்ச‌நேய‌ர் கோவில்.வாச‌லில் இருந்தே த‌ரிசிக்க‌முடிகிற‌ அள‌வுக்கு இருக்கும் ஆஞ்ச‌நேய‌ரை உள்ளே போய் தான் சேவிக்க‌னும் என்ப‌து கிடையாது என்று எண்ணுவ‌தால் வாச‌லோடு ஒரு கும்பிடு.

    ReplyDelete
  29. எங்கே வால்ப்பையனைக் காணோம் ?

    ReplyDelete
  30. வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete
  31. I have to totally agree with Luckylook on Anjaneyar temple ethics. I grew up with that temple and how much me and my friends used to enjoy the bike ride every saturday from adambakkam to anjaneya temple. Now I live in US and during my last visit to the temple after 4 years, I had a very bad experience and how much it's been commercialized. volunteers were so rude and arrogant.
    But still cherish those good old days and felt very sad that my kids couldn't have the same kind of experience.
    Nostalgic
    Nandita

    ReplyDelete
  32. பிரதோஷத்திற்குமு சிவனுக்கும்தான் கனெக்‌ஷன்.

    எப்படி இங்கே நரசிம்மர் வந்தார்?

    ReplyDelete