நிரந்தர பக்கங்கள்

12/05/2007

சரோஜாதேவி புத்தகங்களும் இன்னும் பிற இலக்கியங்களும்

இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் போட நினைத்து துவங்கினால் நிறைய வருவதால் தனிப்பதிவாகவே போட்டு விடுகிறேனே.

அப்பதிவில் சொன்னது மாதிரி சரோஜாதேவி புத்தகங்களால் பாதிக்கப்படாத இளைஞனே இருக்க முடியாதுதான். சமீபத்தில் 1971 முதல் 1974 வரை நான் பம்பாயில் வசித்த போது அவற்றை நிறைய படித்ததை இங்கே எழுதியுள்ளேன். சரோஜாதேவி புத்தகங்கள் சென்னையில் காணக் கிடைக்கவில்லை. பங்களூரில் பப்ளிஷ் செய்வதாகக் கேள்வி. எழுபது எண்பதுகளில் சென்னையில் மருதம் என்ற பெயரில் இம்மாதிரி பலான புத்தகங்கள் வந்தன. எண்பதுகளில் தில்லியில் மதுக்குடம் என்ற பெயரிலும் புத்தகங்கள் வந்தன.

அப்போது கேட்ட ஒரு டயலாக், இரண்டு நண்பர்களுக்குள்.

ஒருவன்: டேய் நம்ம ராமு நேத்திக்கு என்ன செஞ்சான் தெரியுமா, மதறாஸ் ஸ்டோர்ஸில் போய் மதுக்குடமும் ஞானபூமியும் கேட்டிருக்கான். என்ன என்று கேட்டால் அவன் அப்பாவுக்கும் அவனுக்கும் தேவையானதையே கேட்டானாம்.

இன்னொருவன்: பாவம்டா ராமுவின் அப்பா. தனக்கு ஞானபூமி வாங்கப்போன இடத்திலேயே தன் மகன் மதுக்குடமும் கேட்டான் அப்படீன்னா எவ்வளவு வருத்தப்படுவார்?

ஒருவன்: டேய் அடங்குடா, ராமு ஞானபூமி கேட்டது தனக்காகத்தான். புரிஞ்சுக்கோ.

விடலைப்பருவம் தாண்டும்போது இதெல்லாம் ஒரு காலத்தின் கட்டாயமே. கஷ்டப்பட்டு நான் வாங்கி வந்தால் எனக்கு தெரிந்த பெரிசுகள் சில "அடேய் அயோக்கியா, இதெல்லாம் படிக்கிற வயசாடா உனக்கு" என்று அதட்டி புத்தகத்தைப் பிடுங்கிக் கொண்டு தாங்கள் படிக்க எடுத்து செல்வார்கள்.

அமெரிக்க, பிரிட்டிஷ் நூல்நிலையங்களிலிருந்து புத்தகம் எடுக்கும்போது சில குறிப்பிட்ட எழுத்தாளர்களை தேடிப் போவேன். நூர்றுக் கணக்கான பக்கங்களில் அள்ளித் தெளித்தது போல அங்கங்கே பலான மேட்டர்கள் வரும். அவற்றை கண்டுபிடிக்க நேக் வேண்டும். அவ்வாறான சில புத்தகங்கள் எடுத்து வந்தால் அப்போதென்று என் தந்தையோ, பெரியப்பாவோ அல்லது சித்தப்பாவோ வந்து "என்னடா புத்தகம், காண்பி" என்று அதட்டல் போட்டு அதை வாங்கி புரட்டுவார்கள். எப்படி புரட்டினாலும் அவர்களுக்கென்று அதே பலான பக்கங்களே மாட்டும். ரொம்ப கஷ்டம்.

நான் ஜெர்மன் மற்றும் ஃபிரெஞ்சு படித்ததற்கு இம்மாதிரி தலையீடுகளை தவிர்ப்பதுவும் ஒரு முக்கிய காரணம். ஆனால் இதில் சோகம் என்னவென்றால், மேக்ஸ் ம்யுல்லர் பவனிலோ அல்லியான்ஸ் ஃபிரான்ஸேய்ஸிலோ கிடைத்த புத்தகங்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப சைவமே.

இந்த போர்னோகிராஃபி என்பது ஒரு தனி உலகம். அதை எழுதுவது ஒரு கலை. துரதிர்ஷ்டவசமாக அதை எழுத நல்ல எழுத்தாளர்கள் கிடைப்பதில்லை. மொழிவீச்சின் முழுமையும் தெரியாதவர்களே அதில் ஆட்சி செலுத்துகின்றனர். இர்விங் வேலஸ், ஹெரால்ட் ராப்பின்ஸ், சிட்னி ஷெல்டன் போன்ற எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களில் அவ்வப்போது கிளுகிளுப்பை உண்டாக்குவர். அவ்வளவே. நினைத்தால் அவர்கள் நல்ல போர்னோகிராஃபி எழுதலாம். எழுதுவார்களாக இருக்கும். அப்போது வேறு பெயரில் எழுதுவார்கள். நம்மூர் ஸ்ரீவேணுகோபாலன் புஷ்பா தங்கதுரையாக மாறியது போல.

நல்ல எழுத்தாளர்கள் இல்லாததால், கழிசடைகள் இந்தத் துறையில் அதிகம். தவறில்லாது சேர்ந்தாப்போல் பத்து வாக்கியங்கள் கூட எழுதத் தெரியாதவர்கள்தான் இங்கு அதிகம். கணினியில் நிலைமை இன்னும் மோசம். பலான சைட்டுகள் என்றாலே வைரஸ் பிரச்சினை வேறு வந்து தொலைக்கிறது. வெறுமனே டெக்ஸ்ட் கோப்புகள்தான் என்றால் அவற்றில் வைரஸ் இருக்காது என்று கேள்வி. மேலும் சட்டம் இதில் என்ன சொல்கிறது என்பதும் தெளிவாக இல்லை.

அமெரிக்காவில் போர்னோகிராஃபி சட்டத்தை உள்ளடக்கமாக்கி இர்விங் வேலஸ் "ஏழு நிமிடங்கள்" என்னும் நாவல் எழுதினார்.

எனக்கு பிடித்த எழுத்தாளர் டெட் மார்க் (Ted Mark). எழுபதுகளில் அவர் மிகப் பிரபலம். இப்போதெல்லாம் இணையத்தில் புத்தகங்கள் எண்ணற்ற அளவில் படிக்கக் கிடைக்கின்றன. ஆனால் பிரச்சின என்னவோ பழையதுதான். நன்றாக எழுதுபவர்கள் மிகக் குறைவே. மீதி எல்லாம் தப்பும் தவறுமாக இலக்கணப் பிழைகளுடன் எழுதுபவர்களே.

மனது வைத்தால் நம்ம சுஜாதா சார் செய்யலாம். செய்வாரா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

36 comments:

  1. அப்போ சொஜாதா சார் எழுதறது இன்னா ஒலக எலக்கியமா???

    ஆணாதிக்க மனதுடன் மூன்றாந்தர நகைச்சுவை/எள்ளல் களோடு போர்னோவை கழிசடையாக்கிய பெருமை சுஜாதாவிற்கு உண்டு...

    ReplyDelete
  2. //ஆணாதிக்க மனதுடன் மூன்றாந்தர நகைச்சுவை/எள்ளல் களோடு போர்னோவை கழிசடையாக்கிய பெருமை சுஜாதாவிற்கு உண்டு...//
    சும்மா சொன்னால் போதாது, உதாரணங்களுடன் நிலைநிறுத்தவும்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. /சும்மா சொன்னால் போதாது, உதாரணங்களுடன் நிலைநிறுத்தவும்/

    ஏன் அவரது எழுத்துக்களைப் படித்ததில்லையா நீங்கள்.?

    ReplyDelete
  4. 2 Comments - Show Original Post
    Collapse comments

    அய்யனார் said...
    அப்போ சொஜாதா சார் எழுதறது இன்னா ஒலக எலக்கியமா???

    ஆணாதிக்க மனதுடன் மூன்றாந்தர நகைச்சுவை/எள்ளல் களோடு போர்னோவை கழிசடையாக்கிய பெருமை சுஜாதாவிற்கு உண்டு...



    இது மெய்யாலுமே அய்யனார் கமெண்ட்டா

    ReplyDelete
  5. அய்யனார் கூறுவது உண்மைதான். டோண்டு சார், 'சாக்கு மூட்டைக்குள் போட்ட பூனைக்குட்டிகளை போல' என்று பெண்களின் மார்பகங்களை சுஜாதா வர்ணித்துள்ளார். அதே போல, மற்றொரு கதையில் 'அந்த நடிகைக்கு மார் கட்டு (market) சரியில்லை' என்று இரு பொருள் பட எழுதியிள்ளார். சுஜாதா ஒரு திறமையான எழுத்தாளர்தான். இல்லை என்று கூறவில்லை. ஆனால் இதற்காக தரம் தாழ்ந்து எழுதவேண்டாம் அல்லவா?

    ReplyDelete
  6. போர்னோ இலக்கியத்தை வரவேற்கிறீர்கள். அதுபோக இன்னும் என்னவெல்லாம் வரவேற்கப்போகிறீர்களோ தெரியவில்லை. இருந்தாலும் உங்களது கருத்துக்களைச் சுதந்திரம் என்ற போர்வையில் வெட்டவெளிச்சமாகப் பதிகிறீர்கள். கலக்குங்க டோன்டு சாரே

    ReplyDelete
  7. DONDU, you are very naughty, too naughty, super naughty!
    you are so old to think about Sarojadevi! shhhhhh...no no no Dondu..and dont write about porno. There are many young kids blogging. Be an example man!!
    dont be kiddish talking about Sarojadevi and Porno.

    ReplyDelete
  8. பிற்பகல் 1:30 மணிக்கே நீங்க பதிவு போட்டச்சு. இதுவரை ஒரு பின்னுட்டம்தான் வந்திருக்க்கு.

    ReplyDelete
  9. //ஆனால் இதற்காக தரம் தாழ்ந்து எழுதவேண்டாம் அல்லவா?//

    போர்னோ என்பதையும் அசிங்கமில்லாமல் எழுதலாம். அது மிகக் கடினமான காரியம். எல்லோராலும் முடியாது.

    இது பற்றி எனது ஃபிரெஞ்சு ஆசிரியர் திரு. லாற்ட்டே அவர்கள் மிகவும் கூறியுள்ளார்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. //இந்த போர்னோகிராஃபி என்பது ஒரு தனி உலகம். அதை எழுதுவது ஒரு கலை. துரதிர்ஷ்டவசமாக அதை எழுத நல்ல எழுத்தாளர்கள் கிடைப்பதில்லை.//

    தமிழில் வரும் போர்னோகிராஃபி புத்தகங்கள் சுத்த மோசம். உறவுகளை கொச்சை படுத்தியிருப்பார்கள். 20-30 வருடங்களுக்கு முன் வந்த போர்னோகிராஃபி படங்களும் இப்படியேத்தான். இப்போ பரவாயில்லை...;)

    ReplyDelete
  11. சீனு அவர்களே,

    ஏற்கனவே நான் சொன்னது மாதிரி இது ஒரு தனி கலை. படிப்பவரது சுவாரசியம் குறையாது எழுத வேண்டும். சொல்லாண்மை வேண்டும். வாசகர்களது கற்பனையை தூண்ட வேண்டும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. //'சாக்கு மூட்டைக்குள் போட்ட பூனைக்குட்டிகளை போல'//மட்டும்தான் சுஜாதா வர்ணித்துள்ளார். அது வாசகரது கற்பனையைத் தூண்டுகிறது.

    நைலான் கயிறு என்னும் படத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்.
    "அந்த போலீஸ்காரன் மராத்தியில் கணேஷின் முன்னோர்களைப் பற்றிய தனது சந்தேகங்களை உரக்க கூவியவாறு வந்தான்" என்று.

    அப்படியே திட்டியதை வார்த்தை பிசகாது போட்டிருந்தால் இவ்வளவு சுவாரசியம் வராது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. சுஜாதா கடைந்தெடுத்த ஒன்னாம் நம்பர் 'க(ச)தை' எழுத்தாளர். பெண்ணை வர்ணிக்கும் போது அவளுக்கு 'ஏராளமான மார்பு' என்ற சொல்லாடலை தமிழுக்கு தந்தவரே அவர்தான். கணேஷ்-வசந்த் உரையாடலை மீண்டும் மீண்டும்படித்து பாருங்கள்.

    ஜெயகாந்தனின் 'சினிமாவுக்குப் போன சித்தாளு' சாரு நிவேத்திதாவின் '0 டிகிரி' படித்து விட்டு எழுதுங்கள்

    ReplyDelete
  14. இங்கே வந்து சுஜாதா அசிங்கமா எழுதுறாரு. ஜெயகாந்தன் வக்கிரமா எழுதுறாரு என்று கத்துபவர்கள் தான் முதலில் அதைப் படித்து ஜொள்ளு வடித்தவர்களாக இருப்பார்கள்.

    ReplyDelete
  15. enna perisu.. daily saroja devi book padichittu ore practicals-a?

    ReplyDelete
  16. //அவளுக்கு 'ஏராளமான மார்பு' என்ற சொல்லாடலை தமிழுக்கு தந்தவரே அவர்தான்.//
    Generously endowed at the top என்று ஆங்கிலத்தில் படித்து மயங்குகிறோமே. அதையே தமிழில் அழகாகத் தருகிறார் சுஜாதா. இதில் என்ன தவறு?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  17. //enna perisu.. daily saroja devi book padichittu ore practicals-a?//
    சமீபத்தில் 1946-ல் பிறந்த எனக்கு அப்படி என்ன வயதாகி விட்டதாம்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  18. சரோஜாதேவி சரி.... அது என்ன "இன்னும் பிற இலக்கியங்களும்"? என் கண்ணிலேயே படவில்லையே!

    ReplyDelete
  19. //சமீபத்தில் 1946-ல் பிறந்த எனக்கு அப்படி என்ன வயதாகி விட்டதாம்?//

    இந்தியாவை விட ஒரு வயது அதிகம்.

    ReplyDelete
  20. தமிழனின் நகைசுவை உணர்வு மிகவும் கேட்டு விட்டதென நினைக்கிறேன்,
    porno-வையும் நகைசுவை உணர்வோடு தந்துள்ள சுஜாதாவை புரிந்து கொள்ள முடியாதவர்கள், அவரை முழுதாக படித்து விட்டு வந்து பின்னோட்டம் போடுங்கள்,

    ReplyDelete
  21. தயவு செய்து என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் நண்பர்களே!

    http://valpaiyan.blogspot.com/

    வால்பையன்

    ReplyDelete
  22. //இதில் என்ன தவறு?
    //

    no thavaru. because he paarpanar

    ReplyDelete
  23. (Though belated) Wish you a very happy Diginity Day, the December 6!

    ReplyDelete
  24. |||| சமீபத்தில் 1946-ல் பிறந்த எனக்கு அப்படி என்ன வயதாகி விட்டதாம்? ||||


    வயதில் பெரியவன்; மனதால் இளைஞன்.

    அதாவது மெண்டலி ரிடார்டட்.

    ReplyDelete
  25. //Wish you a very happy Diginity Day, the December 6!//
    புரியவில்லையே? விளக்க முடியுமா? கூகளில் பார்த்தால் விவரம் காணக்கிடைக்கவில்லையே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  26. இன்னுமா சரோஜா தேவி புத்தகம்!?!?!?

    இப்பதான் சிடி, டிவிடி என ப்ளாட்பாரத்துல போட்டு விக்கிறானே. அதுலயும் பாரின் சிடில டைட்டில், சப் டைட்டில்லாம் வேற போடுவான். இந்த கலை படைப்புக்கு எதுக்கு அதெல்லாம்னு தெரியாது!!

    ReplyDelete
  27. ---- புரியவில்லையே? விளக்க முடியுமா? கூகளில் பார்த்தால் விவரம் காணக்கிடைக்கவில்லையே. ----

    அட, கூகிளைத் தாண்டியும் உலகம் இருக்கும் போலிருக்கிறதே !

    டிசம்பர் 6ம் தேதி "டிகினிட்டி டே"யாகக் கொண்டாடப்படுவதற்குக் காரணங்கள் இரண்டு:

    1. அன்றுதான் ஒடுக்கப்பட்டவர்களின் குரலான மதிப்பிற்குரிய அம்பேத்கார் பிறந்தார்.

    2. ஒடுக்கப்படுபவர்கள், ஒடுக்குபவர்களின் கோயில் ஆக்கிரமிப்பை அகற்றிய நாள் இது.

    இதுபோன்ற நல்ல காரியங்கள் நடப்பதால்தான் மார்கழி மாதத்தை புனிதமானது என்று நல்லவர்கள் சொல்கிறார்கள் போலும்.

    ReplyDelete
  28. அட கருமமே எழுதுவதற்கும் படிப்பதற்கும் என்னற்ற விடயங்கள் இருப்பினும், புத்தி ஏன் இப்படி போகிறது?. சரி சரோஜாதேவி, மருதம் எல்லாம் நல்லா இல்லை என்று சொல்லுறீங்களே, அப்ப எது நல்லா இருக்கும்னு தெரியும்ல? அப்பன்னா நீங்களே எழுதலாம்ல

    ReplyDelete
  29. //அட கருமமே எழுதுவதற்கும் படிப்பதற்கும் என்னற்ற விடயங்கள் இருப்பினும், புத்தி ஏன் இப்படி போகிறது?.//
    வெறுமனே போலியா சீ, தூன்னு எல்லாம் சொல்லிட்டு திருட்டுத்தனமாக படிப்பவன் இந்த டோண்டு ராகவன் அல்ல.

    பை தி வே, பம்பாயில் இருந்தபோது சரோஜாதேவி கதை ஒன்றை எழுதலாம் என்று பார்த்தால் ஒரு பாராவுக்கு மேல் ஓடவில்லை. பைத்தியக்காரத்தனமாக தோன்றியது நான் எழுதியது. ஆகவே இது நம்மால் ஆகாது என்றிருப்பதே எனக்கு உத்தமம்.

    அதே சமயம் அசைவ ஜோக்குகள் என்றால் நான் கேட்டவற்றை தமிழ், ஹிந்தி/உருது, ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் ஃபிரெஞ்சில் நன்றாகவே சொல்வேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  30. //*
    வெறுமனே போலியா சீ, தூன்னு எல்லாம் சொல்லிட்டு திருட்டுத்தனமாக படிப்பவன் இந்த டோண்டு ராகவன் அல்ல.
    *//
    திருட்டுதனமா படிச்சாஎன்ன பப்ளிக்கா படிச்சா என்னா எல்லாம் ஒன்னுதானே. என்னுடைய கேள்வியை புரிஞ்சுக்கலைன்னு நினைக்குறேன். இந்த வயசுல போயி இப்படி யாருமே எழுதமாடேங்க்குறாங்களேன்னு புலம்புறீங்களே? இதை உங்கள் மனைவி, மகள், மகன் படித்தால் என்ன நினைப்பார்கள்?

    ReplyDelete
  31. //இந்த வயசுல போயி இப்படி யாருமே எழுதமாடேங்க்குறாங்களேன்னு புலம்புறீங்களே?//
    நானும்தான் கேட்கிறேன், அப்படி என்னதான் வயது ஆகிவிட்டது?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  32. என்ன சாமி நீங்க பிஞ்சில பழுத்த ஆளா, பருவம் பிந்தி பழுத்த ஆளா ? ஒண்ணுமே புரியல‌

    புள்ளிராஜா

    ReplyDelete
  33. >இந்த வயசுல போயி இப்படி யாருமே எழுதமாடேங்க்குறாங்களேன்னு புலம்புறீங்களே? இதை உங்கள் மனைவி, மகள், மகன் படித்தால் என்ன நினைப்பார்கள்?

    What a hypocracy.? It is alright to read it when you are a teenager, but not so later in life. As if teenagers don't have brothers, sisters, parents, friends and whonot.

    ReplyDelete
  34. /*
    What a hypocracy.? It is alright to read it when you are a teenager, but not so later in life. As if teenagers don't have brothers, sisters, parents, friends and whonot.
    */
    தை மாச உச்சிவெயிலு மன்டைய பொளக்குதுன்னு சொல்லுறீங்க. என்ன செய்யிறது. நல்ல கறிவேப்பிலை, கொன்்சமா பச்சை மிளகாய்போட்டு நிறைய நீர்மோர் சாப்பிடுங்கள்.

    ReplyDelete
  35. >மனது வைத்தால் நம்ம சுஜாதா சார் செய்யலாம். செய்வாரா?

    Writing requires not only 'manasu' , but also suitable imagination in that field. I doubt whether Sujata has requisite imagination for literature dealing with sexual passions. D.H.lawrence in the making?forget it.

    ReplyDelete
  36. why XXX boks are named as சரோஜாதேவி books

    ReplyDelete