நிரந்தர பக்கங்கள்

1/24/2008

ஜெயா டிவி காலை மலர் 25.01.2008 காலை 07.30 மணிக்கு

ஜெயா டிவியில் காலை மலர் நிகழ்ச்சிக்காக என்னை அழைத்து படப்பிடிப்பும் நடந்தது. அது ஒளிபரப்பாகும் தினத்தை ஒரு நாள் முன்னராக கூறுவதாகச் சொல்லியிருந்தார்கள்.

அது 25.01.2008(நாளை) காலை 07.30 மணிக்கு காட்டப்படும் என்று எனக்கு செய்தி வந்துள்ளது. நேரமிருப்பின் பார்க்கவும். முக்கால் மணி நேர நிகழ்ச்சி, அதாவது காலை 07.30 முதல் 08.15 வரை என அறிகிறேன்.

இதற்காக எனக்கு முன்கூட்டியே வாழ்த்து அளித்த லக்கிலுக்குக்கு என் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பேட்டி ஒளிபரப்பப்பட்ட பின்னால் சேர்த்தது
பேட்டிக்கான படபிடிப்பு போன சனிக்கிழமை நடந்தது. அதற்கு முந்தைய நாள் திடீரென நண்பர் உண்மைத் தமிழனிடமிருந்து ஃபோன் வந்தது. அன்று இரவு எட்டு மணி அளவில் நான் ஜெயா டி.வி. தயாரிப்பாளர் ஒருவரை ஃபோனில் அழைத்து பேச வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவ்வாறே அவருடன் பேசியதில் அவர் என்னை அடுத்த நாள் காலை பத்தரை மணியளவில் அவரை ஜெயா டிவி அலுவலகத்தில் வந்து பார்க்குமாறு கூறினார். பிறகு பேசும்போது மீட்டிங் பிற்பகல் ஒன்றரை மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஒன்றரை மணிக்கு சென்றால் சற்று நேரம் பேசினார்கள். என்னென்ன கேள்விகள் கேட்கலாம் என்று ஆலோசனை செய்தோம். பேட்டி கண்டவர் சுமார் 14 கேள்விகள் போல இருக்கும், ஒரு கேள்விக்கு சுமார் இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் வரை பேச இயலுமா என்று கேட்டார். நான் விட்டால் பேசிக் கொண்டே போவேன் என்றும் அவர்தான் என்னை நிறுத்த வேண்டியிருகும் என்று பாதி தமாஷாகவும் பாதி சீரியசாகவும் சொன்னேன். பிறகு சரி ஷூட்டிங்கிற்கு செல்லலாம் என்றார். நான் இதை இவ்வளவு சீக்கிரம் எதிர்ப்பார்க்கவில்லை. அதாவது இன்னொரு நாள் வரச்சொல்லுவார் என எண்ணினேன். A pleasant surprise.

மிக சுருக்கமாக நான் என்னென்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதெற்கெல்லாம் இன்ஸ்ட்ரக்‌ஷன்கள் தந்தனர். அகில இந்திய ரேடியோவில் ஃஃபிரெஞ்சு ஒலிபரப்பு செய்திருந்ததால் அவற்றை சுலபமாக புரிந்து கொள்ள முடிந்தது.

பேட்டி கண்டவர்கள் இதில் ரொம்ப பயிற்சி பெற்றவர்கள். ஆகவே அவர்களது நடவடிக்கைகளில் பிசிறில்லை. சுமார் 40 நிமிட நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட 50 - 60 நிமிடங்களுக்கு ஷூட் செய்து எடிட்டிங் செய்துள்ளனர். கேட்ட கேள்விகளுக்கு தெரிந்த அளவில் பதிலளித்தேன். மொழிபெயர்ப்பு துறை என்பதே என் மூச்சு என்றாகிவிட்ட நிலையில் பதிலளிப்பதில் தயக்கமே ஏற்படவில்லை.

டென்ஷன் என்பதே துளிக்கூட இல்லாத ஷூட்டிங்காக அமைந்ததில் எங்கள் எல்லோருக்கும் திருப்தி. நான் சொன்ன பல விஷயங்கள் ஏற்கனவே நான் என் பதிவுகளில் பலமுறை கூறியவைதான். சகவலைப்பதிவினர் பல முறை அவற்றை படித்திருப்பார்கள்தான். ஆனாலும் அவையே பெரிய ஆடியன்ஸை சென்று அடைவது மகிழ்ச்சியைத் தருகிறது.
25.01.2008 12:53 PM

37 comments:

  1. Great Raghavan Sir.

    ReplyDelete
  2. ஜெயா டிவி பார்ப்பதே கிடையாது. உங்களுக்காக பார்த்து தொலைக்கிறேன்.
    என்ன காலைல அஞ்சு மணிக்கெல்லாம் விழிக்கணும்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் டோண்டு ஸார்!

    உள்ளபடியே மிக மிக சந்தோஷம். ஜெயா டிவி இல்லாத நாட்டில் குடியிருப்பதால் என்னால் நிகழ்ச்சியைப் பார்க்கமுடியாது. இருந்தால் என்ன? லக்கிலுக் போன்ற நண்பர்கள் நிகழ்ச்சியை ரிகார்ட் செய்து யூ-ட்யூபில் அப்லோட் செய்வார்கள் என்ற நம்பிக்கை கண்டிப்பாக இருக்கிறது.

    மறுபடியும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. //ஜெயா டிவி பார்ப்பதே கிடையாது. உங்களுக்காக பார்த்து தொலைக்கிறேன்.
    என்ன காலைல அஞ்சு மணிக்கெல்லாம் விழிக்கணும்.//
    :)))))))
    ஏதேனும் தூரக்கிழக்கு நாட்டிலா இருக்கிறீர்கள்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ராகவன் சார்,

    என்ன நிகழ்ச்சி , எதை பற்றி பேசப்போகின்றீர் என்பது பற்றி சொல்லமுடியுமா?

    பேட்டியா அல்லது ஏதேனும் transliteration பற்றிய நிகழ்ச்சியா?

    வீ எம்

    ReplyDelete
  6. பஹ்ரைன் நாட்டில் வசிக்கிறேன் டோண்டு சார்.

    2 1/2 hours behind india

    ReplyDelete
  7. வீ.எம். அவர்களே,
    மொழிபெயர்ப்பாளனாக பேசப்போகிறேன், காலை மலர் விருந்தினராக.
    தஞ்சாவூர்க்காரன் அவர்களே,
    அதானே. நீங்கள் மேற்கில்தான் இருக்க வேண்டும். ஏதோ குழப்பத்தில் கிழக்கு என கூறி விட்டேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் டோண்டு அவர்களே.மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.இதுபோல் இன்னும் பல சிறப்புகள் உங்களை வந்தடையவேண்டும் என விரும்புகிறேன்

    இந்த நிகழ்ச்சியின் விடியோவை வலையேற்றும்படி அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

    ReplyDelete
  9. கிழக்கு உங்களை ரொம்ப பாதித்து இருக்கிறது, டோண்டு சார்.
    நிகழ்ச்சிய யாராவது ரிகார்டு செய்து வலையில் ஏத்தம் செய்கிரிர்களா?
    அப்படி யாரவது செஞ்சால் நல்லாயிருக்கும்.
    மாசி நிகழ்ச்சி மாதிரி பொட்டியிலே ஹாயா பாக்கலாம்.
    டைம் ரொம்ப சீக்கிரமா இருக்கு நம்மால விழிக்க முடியாது பா.... அது எனக்கு mid-நைட் மாதிரி.

    அடுத்த நிகழ்ச்சி BBC'யா CNN'னா ?

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் திரு இராகவன் அய்யா,
    சிங்கப்பூரில் ஜெயா டி.வி கிடையாது. நாங்கள் பார்ப்பதற்கு வாய்ப்பு உண்டா?
    முடிந்தால் யாராவது பதிவு செய்யுங்கள்.

    அன்புடன்,
    ஜோதிபாரதி.

    ReplyDelete
  11. //டோண்டு சார்.
    நிகழ்ச்சிய யாராவது ரிகார்டு செய்து வலையில் ஏத்தம் செய்கிறீர்களா?//

    சி.டி.க்கு சொல்லி வைத்திருக்கிறேன். அதை வலையில் ஏற்றுவது அடுத்த கட்டம். நண்பர்கள் துணையுடன் செய்ய முடியும் என நினைக்கிறேன். தெரியவில்லை. பார்ப்போம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. டோண்டு சார்! ஜெயா டி.வி பிறந்த பலனை அடையப் போகின்றது. வாழ்த்துக்கள்.
    ஆனாலும் பார்க்க முடியாமல் இருக்கிறதே!!

    புள்ளிராஜா

    ReplyDelete
  13. பாத்துட்டு வந்து மறுபடியும் பின்னூட்டடமிடுறோம் சார்.!

    ReplyDelete
  14. வாழ்த்து(க்)கள்.

    தயவுசெய்து வலையில் ஏற்றுங்கள். நாங்களும் பார்த்துக்கொள்கிறோம்.

    ReplyDelete
  15. மீ த பஸ்டு! பேட்டி வாத்துட்டேன்

    ரொம்ப நல்லா பேசினீங்க!

    மொழிகள் கற்றுக்கொண்ட விதத்தை சொன்னது அருமை.!

    நகைச்சுவையாகக் குறிப்பிட்டீர்கள்!

    வாழ்த்துக்கள் ராகவன் சார்!

    ReplyDelete
  16. ஒரு சந்தேகம். ஜெயா டிவியிலும் நீங்கள் வெறுக்கும் தமிழை எதிர்த்து உங்களுக்கு பிடித்த தேவ பாசைக்கு ஜால்ரா பொட்டு பேசுவீர்களா? திராவிடத்தையும் பகுத்தறிவையும் கிண்டல் செய்து பேசுவீர்களா? ஏனெனில் நீங்களும் பார்ப்பனர். ஜெயா டிவியும் பார்ப்பன டிவி ஆயிற்றே?

    கோமணகிருஷ்னன் (மடிப்பாக்கம்)

    ReplyDelete
  17. தூள் விமரிசனம். நன்றி லக்கிலுக்.
    //* ”தொழில்நுட்ப மொழிபெயர்ப்பு ஏன்?” என்ற கேள்விக்கு “ரொம்ப துட்டு தர்றா, இலக்கியங்களை மொழிபெயர்த்தால் இவ்வளவு தேறாது” என்று வெள்ளந்தியாக நேர்மையாக சொன்னார்.//
    அதிக துட்டு பற்றி பேசியது உண்மையே. ஆனால் அதை ஆதங்கமாகத்தான் சொன்னேன். அதாவது இலக்கிய மொழிபெயர்ப்பு என்பது ஒரு உயர் நிலையில் உள்ள மொழிபெயர்ப்பு. ஆனால் அதற்கு வருமானம் குறைவு என்று கூறி விட்டு, ஹாரி பாட்டர் உதாரணம் கொடுத்தேன். அதாவது என்னால் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் ஹாரி பாட்டர் நாவல்களை ஃபிரெஞ்சிலோ ஜெர்மனிலோ அவற்றின் தற்போதைய மொழிபெயர்ப்பாளர்கள் செய்தது போல மொழி பெயர்த்திருக்க முடியாது என்றேன். ஆக என்னால் முடியாது என்பதாலேயே நான் இலக்கிய மொழி பெயர்ப்பு செய்வதில்லை. அதே சமயம் இவ்வளவு கஷ்டமான அந்த வேலைக்கு துட்டு குறைவு என்பதுதான் வேடிக்கை என்றேன்.

    //ஏற்பாடு செய்து தருவது சொந்தக்காரா? வாடகைக்காரா? என்று குறிப்பிடவில்லை.//
    வாடகைக்காரெல்லாம் என் சொந்தக்கார் என்றிருக்கும்போது ஏன் கார் வாங்க வேண்டும்? :))))

    //மிக மிக அருமையான பேட்டி இது. பேட்டி முழுக்கவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.//
    மிக்க நன்றி லக்கிலுக் அவர்களே.
    உங்கள் பதிவில் ஜாலி ஜம்பரின் பின்னூட்டத்துக்கு பதில்:
    //அதில் பத்து மணி நேரம் சண்டை போடவே சரியாப் போகும்னு வலைப்பதிவர்களுக்குத்தானே தெரியும்.//
    என் விட்டம்மா இதை படித்துவிட்டு அட சண்டைக்கார பிறாம்மணா இப்படியா சண்டைக்கு அலைவீர்கள் என நொடித்து விட்டு, குமட்டில் செல்லமாக குத்தினார். :)))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  18. //ஒரு சந்தேகம். ஜெயா டிவியிலும் நீங்கள் வெறுக்கும் தமிழை எதிர்த்து உங்களுக்கு பிடித்த தேவ பாசைக்கு ஜால்ரா பொட்டு பேசுவீர்களா?//
    லக்கிலுக்கின் விமரிசனம் அதற்கு பதில் சொல்கிறது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் அய்யா...

    தமிழ் மொழி தான் சிறந்த மொழி, பலருக்கு கூறியதற்கு...
    தனக்கு தெரிந்த மொழிகளிலேயே சிறந்த மொழி தமிழ் மொழி என்றார். தமிழ் மொழியின் சிறப்புக்கு திருக்குறளை உதாரணம் காட்டினார். சொல்ல வேண்டிய விஷயத்தை மிக சுருக்கமாக தமிழில் சொல்ல முடியும், அதே நேரம் மிக விரிவான சிந்தனைகளை தூண்ட முடியும் என்று விளக்கினார்.

    ReplyDelete
  20. தூள் விமர்சனத்திற்கு லக்கிலுக் அவர்களை டோண்டு ரசிகர் மன்றம் பாராட்டுகிறது .

    ReplyDelete
  21. டோண்டு,

    மிகுந்த பாராட்டுகள்.

    இன்று பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. சிறப்பாக இருந்தது. ஆழ்ந்த வாசிப்பே மொழி பெயர்ப்பாளனுக்கு உற்ற துணைவன் என்ற உங்கள் கருத்து மிகவும் சரியானதே.

    மொழியைக் கற்றுக் கொள்ளும் பொழுது, 'Don't get conscious' என்ற உங்கள் கூற்றும் மிக்க சரியே. கூச்சப்படாமல் வாய்விட்டு சப்தமாக சொல்லித்தருபவர்களுடன் இணைந்து கத்துங்கள் என்பது சிறந்த அறிவுரை. ஆனால், எல்லோராலும் அதைச் செய்ய முடியுமா என்பது சந்தேகமே.

    அரபு ஹீப்ரு மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆர்வம் இருப்பதாகக் கூறியதைக் கேட்டதும் தோன்றியது உங்களின் இந்த வயதுக்கப்புறமும் கற்றுக் கொள்ள விரும்பும் மனநிலை பிறருக்கு நிச்சயமாக உற்சாகம் ஊட்டக் கூடியதென்று.

    வலைப்பூக்களில் நீங்கள் எழுதுவதைக் குறித்தான மாற்றுக் கருத்துகள் எனக்கு உண்டென்றாலும், 'தாய் மொழியில் புலமை இல்லாதவனால், வேறெந்த மொழியிலும் சிறப்பாக செயல்பட முடியாது' என்பது இன்று தாய்மொழிக் கல்வியை சிறுமையாகப் பார்க்கும் பலருக்கு ஒரு சவுக்கடியாக இருந்திருக்கும்.

    இலக்கியங்களை மொழி பெயர்ப்பது கடினம் அதனால் அதைச் செய்யவில்லை. மேலும் அதில் பணம் இல்லை. எதற்காக அதைச் செய்ய வேண்டும் என்று நேர்மையாகப் பேசியதும் சிறப்பானது.

    உங்கள் வலைப்பூவிலும் சில்லறைச் சண்டைகளைத் தவிர்த்து விட்டு, சிறப்பான பதிவுகளைத் தருவீர்கள் என்று எதிர்பார்க்கலாம் தானே?

    உங்களது பேட்டி, உங்களைப் பற்றிய நல்லெண்ணங்களை அனைவரிடத்திலும் தோற்றுவித்திருக்கும். அதைத் தக்க வைத்துக் கொள்ளும் விதத்தில் தொடர்ந்த்து செயல்படுங்கள்.

    மனம் நிறைந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்

    அன்புடன்

    நண்பன்

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் டோண்டு சார்!!!

    ReplyDelete
  23. sari. ungalai etharku petti eduthaargal? neerenna mahatma ganthiya?

    komanakrishnan

    ReplyDelete
  24. உங்களுக்கு பிரெஞ்சும் ஜெர்மெனும் தான் தெரியும் என்று நினைத்தேன். இத்தாலியனும் தெரியுமா? இது என்ன கலாட்டா?

    கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியை வலையேற்றுங்கள். ஆவலோடு எதிர்பார்க்கிறோம். அதுவும் லக்கிலுக்கின் விமர்சனத்தைப் படித்தபிறகு... I just can't wait :-)

    ReplyDelete
  25. சீக்கிரம் யூடுப்-ல போடுங்க.

    ReplyDelete
  26. டோண்டு சார்,
    முடிந்தால் இங்கு வந்து பாருங்கள்.

    http://chanakyansays.blogspot.com/2008/01/blog-post_25.html

    உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்

    சாணக்யன்

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள் சார், என்னாலும் அந்த நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை, தயவு செய்து விரைவில் அதை வலையில் ஏற்றி எங்களுக்கு கட்சி கொடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்!

    அப்புறம் நான் அடுத்த முறை சென்னை வரும் பொழுது ட்ரீட் கண்டிப்பாக வைத்துவிடுங்கள்!

    வால்பையன்

    ReplyDelete
  28. சாணக்யன் அவர்களே,

    ஆண்-பெண் கற்புநிலைகளில் பாவிக்கப்படும் இரட்டை நிலைகளை பற்றி நான் எழுதிய பதிவுகளை அதற்கான லேபலை சுட்டி பார்க்கவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  29. வாழ்த்துகள் டோண்டுராகவன்! நிகழ்ச்சி வார இறுதியில் வந்ததால் விழித்திருந்து பார்க்க முடிந்தது:-). லக்கி சொல்லியிருந்ததை போல படபடவென பேசினீர்கள். ஆனால் பேட்டியாளார்களால் அதை ஒரு சிறப்பான உரையாடலாக அமைக்க முடியவில்லை என்றே சொல்லுவேன். இன்னும் சிறப்பாக, இன்னும் அதிகப்படியான செய்திகளை, தகவல்களை உங்களிடம் இருந்து வெளிக்கொண்டு வந்திருக்கலாம். அதனாலேதான் நீங்களே அதிகம் பேச வேண்டியதாக இருந்தது என்றும் புரிந்தது. மொழியைக் கற்று கொள்ள இலக்கணத்தை கற்றுக்கொள்ளுங்கள் என்பது புதிதாக கற்க விரும்புவருக்கு தேவையான ஒரு அறிவுரை. வலைப்பதிவுகளைத் தாண்டி மொழிபெயர்ப்பு துறையில் உங்களின் ஆளுமை பலருக்கு தூண்டுகோலாக அமையும். மொழி பெயர்ப்புத் துறையில் பொருளாதார ரீதியிலான உங்கள் வெற்றிக்கு பின் முப்பதாண்டு கால உழைப்பு இருக்கிறது என்பதை சுட்டிகாட்டியது மிகவும் அவசியமானது. எந்த வெற்றிக்குப் பின்னும் நீண்ட கால கடின உழைப்பு இருக்கிறது என்பதை மறக்காமல் குறிப்பிட்டது இளைஞர்களுக்கு நல்ல அறிவுரை.

    அதே போல நான் கற்றிந்த மொழிகளிலே சிறந்ததாக தமிழையே குறிப்பிடுவேன் என்று சொன்னது மகிழ்வைத் தந்தது. பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் உங்கள் பேட்டியை பார்த்தது மகிழ்வைத் தந்தது. அன்றே பின்னூட்டமிட எண்ணியிருந்தேன். சற்று தாமதமாகிவிட்டது. தொடரும் உங்கள் உழைப்பிற்கும் சுறுசுறுப்பிற்கும் பாராட்டுகள். அது தொடர வேண்டும் என்பது என் விருப்பமும் கூட

    ReplyDelete
  30. நன்றி கோபமுள்ள இளைஞன் முத்துக்குமரன் அவர்களே,

    கூற நினைத்தது எவ்வளவோ. ஆனால் நேரம் இல்லை. உதாரணத்துக்கு நான் ஈடுபட்ட திருக்குறள் பரிமேலழகர் உரை ஆங்கில மொழிபெயர்ப்பு பற்றி பேச ஆசைப்பட்டேன். அதே போல தமிழ் சொலவடைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் உள்ள சிக்கல்கள் பற்றியும் பேச எண்ணினேன்.

    என்ன செய்வது, பல மணி நேரங்கள் விடாது பேசும் அளவுக்கு என்னிடம் விஷயங்கள் இருப்பினும் கொடுக்கப்பட்ட நேரம் மிகக்குறைவு.

    பேட்டி கண்டவர்கள் நல்ல பயிற்சி பெற்றவர்கள். பிசிறின்றி ஷூட்டிங் நடந்தது.

    லக்கிலுக்கின் தயவில் என் வசம் நிகழ்ச்சியின் சிடி வந்து விட்டது. அதை வலையில் ஏற்றுவதுதான் பாக்கி. எனது வன்தகட்டிலும் அதை ஏற்றி விட்டேன்.

    அன்புள்ள,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  31. //லக்கிலுக்கின் தயவில் என் வசம் நிகழ்ச்சியின் சிடி வந்து விட்டது. அதை வலையில் ஏற்றுவதுதான் பாக்கி. //

    அதை, அதை, அதைத்தான் எதிர்பார்க்கிறோம்! எவ்வளவு சீக்கிரம் முடியுமோ செய்யவும். அட்வான்ஸ் நன்றிகள்.

    ReplyDelete
  32. Please upload the video version into the net, dondu sir. Humble request.

    Vikram

    ReplyDelete
  33. your post is not readable using google reader in full. Please change your settings to full readable. (in blogger - settings - posts - full)

    thanks

    ReplyDelete