நிரந்தர பக்கங்கள்

3/09/2008

நடேசன் பூங்காவில் வலைப்பதிவர் சந்திப்பு - 09.03.2008

இந்த சந்திப்பு சம்பந்தமாக நடந்த பலவிஷயங்கள் சுவாரசியமானவை.

முதற்கண் இது பற்றி நான் அறிவிப்பு செய்த பதிவு ரொம்ப ஷார்ட் நோட்டீஸ் ஆக ஆகிவிட்டது என நினைக்கிறேன். மேலும் நேற்று எல்லே ராம் அவர்களிடமிருந்து ஃபோன் வந்தது. தான் திடீரென பங்களூர் செல்ல நேர்ந்ததால் தன்னால் வர இயலவில்லை எனக் கூறினார். அவருக்காகவும் பாரதீய நவீன இளவரசன் என்னும் தோஹாவிலிருந்து வந்த பதிவருக்காவும்தான் நான் இந்த சந்திப்பையே ஏற்பாடு செய்தேன். அதிலும் தோஹா பதிவர் நாளைக்கு ஊர் செல்கிறார். ஆகவே மீட்டிங்கை தள்ளிப் போட இயலவில்லை.

இன்னொரு விஷயம் இந்த சந்திப்பு நடக்கும் முன்னரே அது பற்றி பதிவை நம்ம செந்தழல் ரவி போட்டு விட்டார். அதில் சில தூள் வரிகள் உதாரணத்துக்கு:
//என்னுடைய வாடகைக்காரை நடேசன் பூங்கா வாசலில் நிறுத்திய நேரம் சரியாக மணி 6:00..அதியமான் ஏற்கனவே வந்து காத்திருந்தார்...அங்கே வாசலில் நின்று எலந்தப்பழம் விற்றுக்கொண்டிருந்த நன்பரை, வலைப்பதிவு மீட்டிங் உள்ளே நடப்பதாகவும் அதில் வந்து கலந்துகொள்ளுமாறும் வலியுறுத்திக்கொண்டிருந்தார்.//

//உண்மைத்தமிழன் எண்ட்ரி...!!! சார், பக்கத்துல தான் வீடு...நான் டீ சாப்பிட வந்தேன்...
டோண்டு: நோ...இந்த பக்கம் க்ராஸ் பண்ணா உட்கார்ந்து தான் ஆகனும்...நீங்க போக விடமாட்டேன்...பக்கத்துலேயே சிக்கன் பிரியாணி ஸ்டால் இருக்கு...அதுல சிக்கன் பிரியாணி வாங்கித்தரேன்...இருங்க...
உண்மைத்தமிழன்: சார்...நான் வெஜிட்டேரியன்...
டோண்டு: ஆமாம், நீங்க தான் சொல்றீங்களே..."நான் வெஜிட்டேரியன்னு.." அப்ப நீங்க என்.வி தானே...எப்படி மொக்கை போட்டேன் பார்த்தீங்களா ?
உண்மைத்தமிழன் : தாங்கலை...ஆளை விடுங்க...
(அதியமான் வாக்கிங் பாத்தில் இருந்து தும்பைப்பூ நிற வேட்டியணிந்த ஒருவரை பிடித்து இழுத்து வருகிறார்)
டோண்டு: வாங்க சிவஞானம்ஜி. எப்படியோ மீட்டிங் வந்துட்டீங்க...தாங்ஸ்...உங்களுக்கு டட்ச் ட்ரீட்ல 5% டிஸ்கவுண்ட் தரேன் ஓக்கே ?
சிவஞானம்ஜி: யோவ் நான் வாங்கிங் வந்தேன்யா...
அதியமான்: அதெல்லாம் ஒத்துக்கமுடியாது...வலைப்பதிவு வெச்சிருக்கீங்க இல்லையா ? அப்போ நடேசன் பார்க் ஏன் வந்தீங்க ? நீங்க மீட்டிங்ல கலந்துக்கிட்டுத்தான் ஆகணும்.//

மாலை நாலு மணிக்கு கார் வரச்சொல்லியிருந்தேன். அதற்கு சற்று முன்னால் பாரதீய நவீன இளவரசனிடமிருந்தும் சுகுணா திவாகரிடமிருந்தும் ஃபோன் அழைப்புகள் வந்தன. மீட்டிங்கிற்கு வருவதை உறுதி செய்தனர். எனது கார் கிண்டி அருகில் வரும்போது ஓகை அவர்கள் ஃபோன் செய்தார். அவரும் மீட்டிங்கிற்கு வருவதாகக் கூறினார். அடையார் அருகே வரும்போது அதியமானிடமிருந்து ஃபோன். அவர் ஏற்கனவே நடேசன் பூங்காவுக்கு வந்து விட்டதாகக் கூற, என்னை அறியாமல் புன்முறுவல் செய்தேன் (செந்தழல் ரவி மேலே எழுதியது ஞாபகத்துக்கு வந்ததே அதற்கு காரணம்). என் கார் நடேசன் பூங்காவுக்கு வந்த போது மணி சரியாக மாலை ஐந்தரை மணி. என்னை அங்கே டிராப் செய்து விட்டு என் குடும்பத்தினர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு விரைந்தனர். அதியமானும் நானும் ஒரு நல்ல வட்ட பெஞ்சாகப் பார்த்து இடம் பிடித்தோம்.

மாசிவக்குமாருக்கு திடீரென வேலை வந்து விட்டதால் அவரால் வர இயலவில்லை என அதியமான் கூறினார். சற்று நேரத்தில் பாரதீய நவீன இளவரசன் வந்தார். அவரையும் அதியமானையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தேன். அவர் தோஹாவில் பணி புரிகிறார். அவருடன் சந்திப்பு சுஜாதா அஞ்சலி கூட்டத்தன்று நாரதகான சபா கேண்டீனில் வைத்து நடந்தது. மனிதர் சுவாரசியமான பல தகவல்களை அளித்தார். பிறகு ஓகையும் கடைசியில் சுகுணா திவாகரும் வந்தனர். சுகுணா திவாகர் டயட்டிங்கில் இருந்து உடம்பை ட்ரிம்மாக வைத்து ஸ்மார்ட்டாக இருந்தார். இதற்கிடையில் வேர்க்கடலை விற்றுக் கொண்டு வந்த ஒரு குட்டி வியாபாரியிடம் கடலை வாங்கினோம்.

இப்போது பேச்சு பல விஷயங்களைத் தொட ஆரம்பித்தது. பாரதீய நவீன இளவரசன் தோஹா, சவூதி அரேபியா ஆகிய இடங்களில் தினசரி வாழ்க்கையைப் பற்றி பல அரிய விஷயங்களைக் கூறினார். கரூரில் தனது குடும்பத்தினர் தி.க. வில் பங்கேற்று செயல் புரிந்ததை அதியமான் சுவையாகக் கூறினார். தானும் கருப்பு சட்டை போடிருந்ததாகவும் கூறினார்.

சவுதி அரேபியாவில் தலை வெட்டும் தண்டனை பொது மக்கள் முன்னால் நடைபெறப்போவதை அரபி சேனல்களில் கீழே ரன்னிங் டெக்ஸ்டாக வரும் என்றும், விஷயம் தெரிந்தவர்கள் போய்ப் பார்ப்பார்கள் என்றும் பாரதீய நவீன இளவரசன் கூறினார். அரபி தெரியாமல் இருப்பதில் இப்படி ஒரு அனுகூலம் என நினைத்து கொண்டேன். ஏனெனில் அப்படிப் பார்ர்க்க போனால் கண்டிப்பாகப் பார்த்தாக வேண்டுமாம். முகத்தை திருப்பிக் கொண்டாலோ, கண்ணை மூடிக் கொண்டாலோ அதனால் மேலும் தொல்லையாம்.

ஸ்ரீலங்கா நிலைமை பற்றியும் பேசினோம். அதில் உள்ள இந்தியத் தமிழர்கள் ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் இசுலாமியர் ஆகியோரது அணுகு முறைகளில் இருந்த வேறுபாடுகள் பற்றியும் பேசினோம். பங்களூரில் ஐ.டி. கம்பெனிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றியும் பேச நேர்ந்தது. ஐ.டி. கம்பெனியருக்கு நல்ல சம்பளம் கிடைத்தால் என்ன தவறு, அவர்கள் அதை செலவழிக்க, பலருக்கு வேலை கிடைக்கிறது என்பதை அதியமான் துல்லியமாக விளக்கினார். ராவ் என்பவர் தன்னால் முன்பு போல ஹாய்யாக சென்று கறிகாய் வாங்க இயலாத ஆற்றாமையால் அவ்வாறு ஐ.டி. கம்பெனிகள் பற்றி கருத்து தெரிவித்தார் என தமாஷாகக் கூற, சிரிப்பு எழுந்தது.

வெறுமனே எழுத்தை நம்பி தமிழ்நாட்டில் வாழ இயலாத என்ற ஆதங்கத்தை எழுப்பினார் பாரதீய நவீன இளவரசன். அது சற்று கடினமே என்று நான் கூறினேன். வேறு ஏதாவது வேலையை கையில் வைத்து கொண்டு, வயிற்றுப் பாட்டைப் பார்த்த பிறகு வேண்டுமானால் எழுத்தை பார்ப்பது நலம் என்பது எனது கருத்து.

சுஜாதா அவர்களிக்கு தான் எழுதிய அஞ்சலி ஆங்கிலத்தில் வந்ததன் காரணத்தை ஓகை அவர்கள் கூறினார். அவர் பொன்னியின் செல்வன் குழுவில் எல்லோருக்கும் புரிவதற்காக ஆங்கிலத்தில் எழுதியதாகவும் வார்த்தைகள் தாமே வந்து விழுந்தன என்றும் கூறினார். அது அவர் வலைப்பூவிலும் வந்துள்ளது. பொன்னியின் செல்வன் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, அதில் எழுதி வந்து கொண்டிருந்த, திடீரென காலம் சென்ற பதிவர் கார்த்திகேயன் அவர்கள் வைத்திருந்த விஜயநகரம் என்ற வலைப்பூவை அவரது அன்னை தொடர்ச்சியாக நடத்துவது பற்றியும் பேச்சு வந்தது. அந்த விஜயநகரம் வலைப்பூ நான் தமிழ் இணையத்துக்கு வந்தப் புதிதில் பார்த்தது. அவர் அகால மரணம் அடைந்தது பற்றியும் படித்துள்ளேன். அந்த வலைப்பூவை அவர் அன்னை எடுத்து நடத்துவது பற்றிக் கேட்டு ஆச்சரியமாக இருக்கிறது.

மாலை 6.45 அளவில் மா.சிவக்குமாரிடமிருந்து ஃபோன் வந்தது. சந்திப்பு நல்லபடியாகப் போகிறதா என விசாரித்தார். பிறகு சுகுணா திவாகரிடம் ஃபோன் கொடுக்க அவரும் மாசிவகுமாரிடம் பேசினார். அடுத்த ஃபோன் உண்மைத் தமிழனிடமிருந்து வந்தது. பாரதீய நவீன இளவரசனிடம் ஃபோனைக் கொடுத்து அவருடன் பேசச் செய்தேன். ”அஞ்சாதே” என்னும் படத்துக்கு உண்மைத் தமிழன் எழுதிய விமரிசனம் நன்றாக இருந்தது என அவர் பாராட்டினார்.

கிட்டத்தட்ட 7.30 மணிக்கு ரத்னா கஃபே செல்லலாம் எனத் தீர்மானித்தபோது திடீரென பேச்சு தி.நகர் பஸ் டெர்மினஸ் அருகே உள்ள பார்-கம் ரெஸ்டாரண்டுக்கு செல்லலாமா என டைவர்ட் ஆனது. முதலில் பாரதீய நவீன இளவரசன் தயங்கினார். பிறகு ஒத்து கொண்டார். கிளம்பலாம் என தீர்மானித்து எழுந்தபோது, என் வீட்டம்மாவிடமிருந்து ஃபோன். கார் நடேசன் பூங்காவை நெருங்குவதாகவும் நான் உடனே கேட்டுக்கு வர வேண்டும் என்று கூறினார். நான் வேண்டுமானால் இருந்து விட்டு டிரெயினில் வீட்டுக்கு வந்து கொள்கிறேன், அவர்கள் மட்டும் காரில் நங்கநல்லூர் செல்லலாம் என முனகியவாறு கூறிய யோசனையை அவர் உறுதியாக நிராகரித்தார். ஆக மற்ற நால்வரும் பார் செல்ல, நான் மட்டும் கார் செல்ல வேண்டியதாயிற்று.

சுகுணா திவாகரிடம் அவரது வரவிருக்கும் திருமணத்துக்கான வாழ்த்தைக் கூறி, சென்னையிலும் ஒரு ரிசப்ஷன் வைக்குமாறு கூறினேன். செய்வார் என நம்புகிறேன். இந்த மாதக்கடைசியில் இரு துபாய பதிவர்கள் வரவிருப்பதால் இன்னொரு மீட்டிங் நடக்கும்போலத் தெரிகிறது. பிழைத்துக் கிடந்தால் பார்க்கலாம் என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

25 comments:

  1. இந்த பதிவின் மூலமாக சுகுணா திவாகருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...!!!!

    ReplyDelete
  2. //நேற்று எல்லே ராம் அவர்களிடமிருந்து ஃபோன் வந்தது. தான் திடீரென பங்களூர் செல்ல நேர்ந்ததால் தன்னால் வர இயலவில்லை எனக் கூறினார். //

    //ஆக மற்ற நால்வரும் பார் செல்ல, நான் மட்டும் கார் செல்ல வேண்டியதாயிற்று.//

    Do such meetings need higher levels of commitment? :-(((

    ReplyDelete
  3. விஜயநகரம் வலைப்பூ பற்றி பேச்சு வந்ததைப் பற்றி நேற்று இரவில் பதிவு போட்டபோது சேர்க்க மறந்து விட்டேன். இன்று காலை கைப்பிள்ளையின் பதிவு ஒன்றில் அந்த வலைப்பூ பற்றி அதே செய்தியுடன் சுட்டியும் வர அங்கு சென்றதும் நேற்று இதைப் பற்றியும் பேசியது ஞாபகத்துக்கு வந்தது. ஆகவே அது சம்பந்தப்பட்ட பத்தியை இப்போதுதான் சேர்த்தேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. //ஐ.டி. கம்பெனிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றியும் பேச நேர்ந்தது. ஐ.டி. கம்பெனியருக்கு நல்ல சம்பளம் கிடைத்தால் என்ன தவறு//
    thavaru illaithaan. umathu IT companykaarargal mattum athiga sambalam vaangi bangalaa, car endru vasathiyaga
    vaaza vendum. inthiyavai vittu america sendru dollar sambaathikka vendum. matra ezaigal mattum moottai
    thookkikondu kuraintha kooli vaangi kondu kudisaiyil vaaza vendum. ungal varkka neethi super. umathu IT
    companykaarargalai moottai thookka vittaal theriyum appothu!!

    IT companykaarargalaalthan veettu vaadagai matrum matra athiyavasiya porutgalin vilai eri ezigalai
    paathikkirathu. intha varkka petham irukkum varai eppadi ezaigal munneruvaargal?

    komanakrishnan

    ReplyDelete
  5. //திடீரென பேச்சு தி.நகர் பஸ் டெர்மினஸ் அருகே உள்ள பார்-கம் ரெஸ்டாரண்டுக்கு செல்லலாமா என டைவர்ட் ஆனது. முதலில் பாரதீய நவீன இளவரசன் தயங்கினார். பிறகு ஒத்து கொண்டார். //

    Sprite மட்டும்தான் குடித்தேன் என்பதை இந்த இடத்தில் பதிவு செய்துகொள்கிறேன் :)

    ReplyDelete
  6. நல்லவேளை நான் வரலை.. இல்லேன்னா வெறும் ஊறுகாயை மட்டும் தொட்டுக்கின்னு வேடிக்கை பார்க்க வேண்டியிருந்திருக்கும்.. முருகன் காப்பாத்திட்டான்..

    ReplyDelete
  7. பேசாமல் ரத்னா கஃபேவுக்கே போயிருக்கலாம்தான், ஆனாலும் என் வீட்டம்மா முதலிலேயே என்னை பிடிவாதமாக அழைத்து சென்று விட்டதால் இது ஒரு அகாடெமிக் பின்னூட்டம் மட்டுமே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. //IT companykaarargalaalthan veettu vaadagai matrum matra athiyavasiya porutgalin vilai eri ezigalai
    paathikkirathu.//

    அமாம், ஐ.டி காரர்களால் தான் தமிழ்நாட்டில் மின்சார தடை. பறவை காய்ச்சல் கூட இவங்களால தான் உருவானதாம். சுனாமிக்கு கூட ஐ.டி ஆட்கள் தான் காரணமாம்.

    கோமணம், நீ இன்னும் மன நல டாக்டரை பாக்கவில்லயா?

    ReplyDelete
  9. //அமாம், ஐ.டி காரர்களால் தான் தமிழ்நாட்டில் மின்சார தடை//

    oru vithaththil unmai athu thane?. ஐ.டி காரர்களால் Mall pondra periya shopping complexkalil minsaram athigamaga upayokikka pattu matravarkku minsaram sari vara kidaippathillai. Mallkalukku ezigalaa pokiraargal? ஐ.டி காரர்கள்thane?

    komanakrishnan

    ReplyDelete
  10. athu sari dondu avargale, chicken biriyani, bonda, ratna cafe pondra saappattu vishyamathan ungal pathivil
    therikirathe?. uruppadiyaga enna pesineergal, saathiththeergal (theeniyai thavira)?

    komanan

    ReplyDelete
  11. Dear Mr. Dondu,

    I am in Doha and started reading your Blogs only recently ( not as your "samepathil")but regularly. They are intereting and your style of describing must have earned you more respect from knowledgable persons as well as vayitherichal from kathukuttis. PLease, ignore them and carry forward. Wish you all the best. Next time, when i come to Chennai, i will also visit Natesan Poonga.

    ReplyDelete
  12. //அமாம், ஐ.டி காரர்களால் தான் தமிழ்நாட்டில் மின்சார தடை[sic]//

    oru vithaththil unmai athu thane?. ஐ.டி காரர்களால் Mall pondra periya shopping complexkalil minsaram athigamaga upayokikka pattu matravarkku minsaram sari vara kidaippathillai. Mallkalukku ezigalaa pokiraargal? ஐ.டி காரர்கள்thane?//

    அஹா, சென்னையில் இருக்கும் மூன்று shopping center களினால், தமிழ் நாட்டுக்கே மின்சார தட்டுபாடு வந்துவிட்டதாம்.... என்ன உளறல். கடந்த பத்து ஆண்டுகளாக அரசு கூடுதல்/புதிய மின் உற்பத்திக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது உனக்கு தெரியாதா. கலர் டி.வி இலவசமாக கொடுக்க தெரிந்ததே தவிர மின் உற்பத்தியை பெருக்க எவனும் யோசிக்கவில்லை.

    உனக்கு நிச்சயம் மன நல நிபுணரின் உதவி தேவை, உனக்கு பைத்தியத்திற்கு மேல் ஐ.டி போபியா வியாதி இருக்கிறது.

    ReplyDelete
  13. //ஆக மற்ற நால்வரும் பார் செல்ல, நான் மட்டும் கார் செல்ல வேண்டியதாயிற்று.//
    Do such meetings need higher levels of commitment? :-(((//

    யோவ், உன்னய கலியானமா கட்ட சொன்னாங்க? அப்புறம் என்ன கமிட்மேன்ட், கிமிட்மேன்ட் கெட்ட வார்த்தை எல்லாம் பேசுற

    ReplyDelete
  14. //மற்ற நால்வரும் பார் செல்ல, நான் மட்டும் கார் செல்ல வேண்டியதாயிற்று.//

    இங்கதான் நிக்கிறார் டோண்டு.
    நகைசுவை மழையில் நண்பர்களை குளிபாட்டிரிப்பீர்கள் என்று நம்புகிறேன்

    வால்பையன்

    ReplyDelete
  15. //சென்னையில் இருக்கும் மூன்று shopping center களினால், தமிழ் நாட்டுக்கே மின்சார தட்டுபாடு வந்துவிட்டதாம்.... //
    நான் சென்னையை மட்டும் சொல்லவில்லையே. கோவை, மதுரை போன்ற நகரங்களையும்தான் சொல்கிறேன். மால்களை மட்டும் சொல்லவில்லை. மால் போன்ற பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்சுகளையும் சேர்த்து சொன்னேன். மால்கள், மல்டிப்லெக்சு தியேட்டர்கள்,
    நகை கடைகள், போன்றவை எவ்வளவு மின்சாரம் எடுக்கின்றன? இங்கெல்லாம் ஐ.டி.காரன் போகிறானா அல்லது தின கஞ்சி குடித்து மூட்டை தூக்கும் தொழிலாளி போகிறானா? முன்பெல்லாம் 2000 3000 ருபாய் அளவில் இருந்த வீட்டு வாடகைகள் 8000 10000 என்று ஆக காரணம் யார்? தஸ்ஸு புஸ்ஸு என்று தமிழில் பேசாமல் ஆங்கிலத்திலேயே பேசி அளப்பவன் யார்? புது வருட பார்ட்டிகள், கம்பெனி பார்ட்டிகள் போன்றவற்றில் பெண்கள் உட்பட குடித்துவிட்டு கும்மாளம் போடுவது யார்? உடல் வருந்த உழைப்பவன் இவையெல்லாம் செய்வானா? ஜீன்சு போன்ற அறைகுறை ஆடைகள் அணிவது யார்? வேர்வை சிந்த செங்கல் சுமக்கும் தமிழ் பெண் இம்மாதிரி அணிவாளா? இவை தமிழனின் அடையாளமா?

    இவைதான் என் கேள்விகள். இதற்கு பதில் சொல்லாமல் திட்டுகிறாயே வெண்ணை. என்னாலும் திட்ட தெரியும் ...( இது இத்திரிக்கு சம்மந்தமில்லா பதிவுதான். ஆனாலும் ஐ.டி. காரர்கள் பற்றி பேச்சு வந்ததால் அவர்களின் இருண்ட பக்கத்தையும் பதிக்க வேண்டியதாயிற்று, டோண்டு அவர்களெ மன்னிக்கவும். )

    கோமணகிருஷ்ணன்

    ReplyDelete
  16. /வேர்க்கடலை விற்றுக் கொண்டு வந்த ஒரு குட்டி வியாபாரியிடம் கடலை வாங்கினோம்./

    அந்த குட்டியைக் கண்ணில் காட்டவேயில்லையே!!

    ReplyDelete
  17. //அந்த குட்டியைக் கண்ணில் காட்டவேயில்லையே!!//
    அந்தச் சுட்டிப்பெண் நீங்கள் வருவதற்கு முந்தியே வந்தாள். பள்ளியில் படிக்கிறாள். முதலில் வந்து கேட்டபோது ஐந்து நிமிடங்களுக்கு பிறகு வரச்சொன்னோம். கரெக்டாக சொல்லி வைத்தது போல ஐந்து நிமிடங்களுக்கு பிறகு அக்குழந்தை வந்தாள். இன்னும் சற்றுநேரம் கழித்து வரலாமே எனக் கூறியதற்கு தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறிய அக்குழந்தையை அதற்கு மேல் காத்திருக்கச் செய்வதில் மனமில்லை. ஆகவே 4 பொட்டலங்கள் வேர்க்கடலை வாங்கினோம். நீங்கள் லேட்டாக வந்ததால் உங்களுக்கு கிடைக்கவில்லை.

    பிறகு பாரில் பதினொன்றரை மணி வரை இருந்ததாகக் கேள்விப்பட்டேன்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  18. //ஆகவே 4 பொட்டலங்கள் வேர்க்கடலை வாங்கினோம். நீங்கள் லேட்டாக வந்ததால் உங்களுக்கு கிடைக்கவில்லை.//

    அந்த வேர்க்கடலை வாங்கிய செலவும் டட்ச் ட்ரீட் முறையில் அமைந்ததா டோண்டு சார்? :-)

    ReplyDelete
  19. வேர்க்கடலையை நான் டட்ச் ட்ரீட்டில் சேர்க்கவில்லை. நான் எடுத்து தருவதற்குள் அதியமான் கொடுத்து விட்டார்.

    மற்றப்படி எங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் கருத்து ஒற்றுமையால் நான் கொடுப்பதும் அவர் கொடுப்பதும் ஒன்றே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  20. டோண்டு அவர்களிடம் இத்துனை மெல்லிய நகைச்சுவை உணர்வு இருப்பது பாராட்டப்படிவேண்டிய செயல்.

    அன்புடன்
    அரவிந்தன்
    பெங்களூர்

    ReplyDelete
  21. you are a good J

    ReplyDelete
  22. //////அந்த குட்டியைக் கண்ணில் காட்டவேயில்லையே!!//
    ////அந்தச் சுட்டிப்பெண் நீங்கள் வருவதற்கு முந்தியே வந்தாள். பள்ளியில் படிக்கிறாள். முதலில் வந்து கேட்டபோது ஐந்து நிமிடங்களுக்கு பிறகு வரச்சொன்னோம். கரெக்டாக சொல்லி வைத்தது போல ஐந்து நிமிடங்களுக்கு பிறகு அக்குழந்தை வந்தாள். இன்னும் சற்றுநேரம் கழித்து வரலாமே எனக் கூறியதற்கு தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறிய அக்குழந்தையை அதற்கு மேல் காத்திருக்கச் செய்வதில் மனமில்லை. ////

    அந்த பெண் (10 வய‌துதான் இருக்கும்) மிக சூட்டிகையாக. சுறுசுறுப்பாக இருந்தாள். இன்னும் அவள் முகம் கண்ணுக்குளேயே இருக்கிறது. இந்த வய‌தில் இப்படி ஒரு நிலைமை. தத்தெடுத்து வளர்க்க ஆசையாக இருக்கிறது. ஆனால்....

    சுகுனாவுட‌னும், ஒகை அவ‌ர்க‌ளிட‌னும் பாரில் அருமையான‌ விவாத‌ம். புத்த/சமண ம‌த‌ம், பாலி/த‌மிழ், நெடுமாற‌ன், சாரு ம‌சூம்தார், ஸ‌டாலின், பொருளாதார‌ம், சுஜாத்தா, இலக்கியவாதிகளின் பிணக்குகள் என்று பல பல சுவையான விசியங்கள்.

    சுகுனா, பின் நவினுத்துவ பாணியில் எழுத வேண்டுமானால் 4 லார்ஜ் அடித்த பின் தான் முடியுமா ? :))))

    ReplyDelete
  23. <==
    செல்லலாம் என முனகியவாறு கூறிய யோசனையை ==>
    திருமதி.டோண்டு : நீங்க நடந்தே வேணா வாங்க. ஒண்ணும் அவசரமில்லை

    ReplyDelete
  24. எப்ப வாங்கினாங்க குட்டிகிட்ட கடலை. அப்படி எதுவும் வாங்கின மாதிரி ஞாபகம் இல்லையே!? சும்மா கதை விடறாங்களோ!

    ஏனுங்கோ வலை பதிவர்களே... தி.நகர்ல தாம்பா நான் இருக்கேன். பஸ் ஸ்டேண்ட் டெர்மினல்ஸ்ல சரக்கு சாப்பிட மாதிரி இருந்தா என்னையும் சேர்த்துக்குங்க. ப்ளீஸ்.

    ReplyDelete
  25. //தி.நகர்ல தாம்பா நான் இருக்கேன். பஸ் ஸ்டேண்ட் டெர்மினல்ஸ்ல சரக்கு சாப்பிட மாதிரி இருந்தா என்னையும் சேர்த்துக்குங்க. ப்ளீஸ்.//

    அழைப்பு ஓப்பனாகத்தானே கொடுத்திருந்தேன். அடுத்த முறை தவறாம ஆஜராயிடுங்க.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete