நிரந்தர பக்கங்கள்

3/06/2008

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு

அன்புள்ள சகவலைப்பதிவர்களே,

திடீரெனத் தோன்றியது. நான் வலைப்பதிவர்கள் மீட்டிங் கூப்பிட்டு 13 மாதங்கள் ஆகப்போகிறது. வெளியூர்/வெளிநாட்டிலிருந்து சில பதிவர்கள் வந்திருக்கின்றனர். அவர்களை எல்லாம் சந்திக்கும் சாக்கில் ஒரு மீட்டிங் கூப்பிடலாம் என்று உத்தேசித்துள்ளேன். ஆகவே இப்பதிவு.

வரும் ஞாயிறன்று (09.03.2008) சென்னை தி.நகர் நடேசன் பூங்காவில் மாலை 5.30 மணியளவில் சந்திக்கலாம் என எண்ணியுள்ளேன். வர விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் பின்னூட்டத்திலோ அல்லது எனது மொபைல் தொலைபேசியிலோ (9884012948- இது சென்னை எண்) அதை கூறலாம்.

சிறிது நேரம் பேசிவிட்டு, கடைசியில் அருகில் இருக்கும் ரத்னா கஃபேயில் சிற்றுண்டி. டோண்டு கூப்பிடும் சந்திப்புகளில் வழமையாக வருவது போல இங்கும் ரத்னா கஃபேயில் டட்ச் முறைப்படி செலவுகள் சமமாகப் பங்கிட்டு கொள்ளப்படும். மீட்டிங்கிற்கு வந்து விட்டு ரத்னா கஃபேக்கு வராதவர்கள் இந்த டட்ச் முறையில் வரமாட்டார்கள் என்பதையும் தெளிவுபடுத்தி விடுகிறேன்.

சந்திப்பில் பேச என்று ஒரு விஷயமும் இப்போதைக்கு இல்லை. வெறுமனே தோழமைக்கான சந்திப்பு. என்ன பேசுவது என்பது அப்போது சமயசந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி முடிவு செய்யப்படும். இன்னொரு விஷயம், வலைப்பதிவுகளை வெறுமனே படிப்பவர்களும் வரலாம் வலைப்பதிவுகளில் அக்கறை இருக்க வேண்டும் அவ்வளவே.

இது பற்றி நான் சில பதிவர்களிடம் பேசினேன். அவர்கள் பாரதீய இளவரசன், எல்லே ராம் மற்றும் அதியமான். வால்பையன் ஊரில் இல்லை. அவர் வரும் ஞாயிறன்று சென்னை வந்தால் வருவதாகக் கூறினார்.

என் உள்ளம்கவர் கள்வன் என் அப்பன் தென் திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் தயவில் எல்லாமே நல்லபடியாக முடியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

15 comments:

  1. வணக்கம்

    எங்களுக்கும் இந்த மாதிரி கலந்தது கொள்ள ஆசை தான் ஆனால் வர இயலவில்லை.
    அடுத்த முறை சற்று முன்னரே தெரியப்படுத்தவும்.கூட்டம் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. என்ன கொடுமை சார்! நான் மார்ச் 13 வருகிறேன் என தெரிந்தும் இப்படி செஞ்சா எப்படி!!! சரி எல்லே ராம் மார்ச் 14 என் கூட காளியாகுடி பொங்கலும் ராஜெந்திரன் கரை பீடாவும் சாப்பிட ரெடியான்னு கேளுங்க!!:-))

    ReplyDelete
  3. நிச்சயம் வர முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  4. எனக்கும் வரவேண்டுமென்று ஆசைதான்
    ஆனால் ரத்னா கபே சாப்பாடு என்று சொல்கிறீர்களே
    முனியாண்டி விலாஸ் கிடையாதா!!!
    சும்மா தமாஸ்! :)))

    வால்பையன்

    ReplyDelete
  5. அன்புள்ள வால்பையன்,

    தி.நகர் பேருந்து நிலையம் அருகில் திவ்யமான பார் கம் ஹோட்டல் உண்டு. சிக்கன் பிரியாணி நன்றாக இருக்கும். இன்னொரு நாளைக்கு நாம் இருவரும் மற்றும் அசைவ/தண்ணி விருப்பமுள்ள நண்பர்களும் சேர்ந்து சென்றால் போயிற்று.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. //திவ்யமான பார் கம் ஹோட்டல் //

    ஆகா இப்படியல்லவா இருக்கவேண்டும் சந்திப்பு

    வால்பையன்

    ReplyDelete
  7. //இன்னொரு நாளைக்கு நாம் இருவரும் மற்றும் அசைவ/தண்ணி விருப்பமுள்ள நண்பர்களும் சேர்ந்து சென்றால் போயிற்று.//

    ஒரு ஐயங்கார் பயல் செய்யும் வேலையா இது. மகர நெடுங்குழைகாதான் உன்னை கவனிக்கட்டும்.

    ReplyDelete
  8. //திவ்யமான பார் கம் ஹோட்டல் //

    சார் அதுவும் டச் முறையில் நடத்தப்படுமா. என்னை போல side-dish மட்டும் முழுங்கும் ஆசாமிகளுக்கு டச் முறை ஒத்துவராதே.

    ReplyDelete
  9. //என்னை போல side-dish மட்டும் முழுங்கும் ஆசாமிகளுக்கு டச் முறை ஒத்துவராதே//
    ஒத்து வராதுதான், ஆகவே வராதே.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. //மகர நெடுங்குழைகாதான் உன்னை கவனிக்கட்டும்.//

    அது யாருங்க சார், போலிஸ் காரரா?

    வால்பையன்

    ReplyDelete
  11. //ஒத்து வராதுதான், ஆகவே வராதே.//

    ஹி ஹீ ஹீ அசைவ/தண்ணி விருப்பமுள்ள என்று சொன்னது தெரிந்தேதான் கேட்டேன், சும்மா தமாசு

    ReplyDelete
  12. //அது யாருங்க சார், போலிஸ் காரரா?//

    போலீஸ்காரர் இல்ல அவர் போலீஸ்காதர்.

    ReplyDelete
  13. //தெரிந்தேதான் கேட்டேன், சும்மா தமாசு//
    எது எப்படியானாலும் தண்ணி/அசைவ பார்ட்டி நாளன்னைக்கு இல்லை. வெறும் ரத்னா கஃபேதான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  14. இங்கே ஒரு கும்மி ஆரம்பமாகுதுன்னு நினைக்கிறேன்

    வால்பையன்

    ReplyDelete
  15. சார் மீட்டிங் நல்லபடியா நடக்க வாழ்த்துக்கள். மீட்டிங் பற்றிய பதிவை படிக்க ஆவல்.

    ReplyDelete