நிரந்தர பக்கங்கள்

9/11/2008

மங்களூர் சிவா திருமணம்

நண்பர் மங்களூர் சிவாவின் கல்யாணம் எளிமையாக, மனதிற்கு நிறைவு தரும் முறையில் நடந்தது. காலை 7.30 -லிருந்து 9.00 மணி வரை முகூர்த்தம். எனது மின்ரயில் கோடம்பாக்கத்தை அடைந்தபோது மணி காலை 7.30 ஆகி விட்டது. ரயில் நிலையத்திற்கு மேற்கு பக்கம் வந்து ஆட்டோ பிடித்து கோவிலுக்கு போனேன். ஒரே கூட்டமாக இருந்தது. இன்று மட்டும் 150 திருமணங்கள். லிஸ்டில் சிவராமன் பூங்கொடி பெயர் இல்லை.

நம்ம லக்கிலுக்குக்கை செல்பேசியில் கூப்பிட்டேன். அவர் தான் திருமணத்துக்கு வரவில்லை என கூறிவிட்டார். பிறகு மருத்துவர் ப்ரூனோவுக்கு போன் செய்தால் அவரும் வரவில்லை என கூறினார். சரி என்று சிவாவுக்கே ஃபோன் செய்தால் செல்லை எடுக்கவேயில்லை. கடைசியில் உண்மைத் தமிழனை கூப்பிட்டால் அவர் அப்போதுதான் திருமணத்திற்கே கிளம்பி கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து உண்மைத் தமிழனிடமிருந்து கால் வந்தது. எல்லோரும் தெப்பக்குளத்துக்கு அருகில் கூடியுள்ளனர் என அவர் கூறினார். அங்கு போயும் முதலில் கண்டுபிடிக்க முடியவில்லை. மறுபடியும் சிவாவுக்கு ஃபோன் செய்தால் இப்போது அவர் லைனில் வந்தார். என்னை பார்த்து விட்டதாகவும், அப்படியே அதே இடத்தில் இருக்குமாறும் கூறிவிட்டு நண்பரை அனுப்பினார். அவர் பக்கத்திலேதான் இருந்திருக்கிறார்.

நான் சிவாவுக்கும் மணப்பெண்ணுக்கும் வாழ்த்து தெரிவித்தேன். பெண்ணுடன் சில வரிகள் ஜெர்மனில் பேசினேன். நான் போவதற்கு சற்று முன்புதான் மாங்கல்யதாரணம் நடந்து முடிந்திருந்தது.

உள்ளே சென்று முருகனை தரிசனம் செய்தோம். பதிவர்கள் தாமிரா, அப்துல்லா, வெண்பூ, அவர் மனைவி மற்றும் சுட்டிக் குழந்தை, சஞ்சய் [இவரை முரளிகண்ணன்தானே என்று கேட்டதற்கு ஆமாம் என்றார் :)]. வெண்பூவின் மனைவி உள்ளே சன்னிதி வரை சென்று விபூதி பெற்று வந்தார். அங்கிருந்து சரவணா பவனுக்கு எல்லோரும் சென்றோம். அதற்குள் உண்மைத் தமிழனிடமிருந்து ஒரு அழைப்பு. அவர் கோவிலுக்கு வந்து விட்டிருந்தார். அவரையும் சரவணா பவனுக்கே வரச்சொன்னோம்.

ஹோட்டலுக்கு போகும் வழியில் G3 மற்றும் இம்சை அரசி வந்தனர். சரவணாபவனில் செமக்கூட்டம். நாற்காலிகள் காலியாக ஆக ஒவ்வொருவராக உட்கார்ந்தோம். ஹோட்டலில் ஸ்ரீ (ஒற்றை அன்றில்) என்னும் பதிவருடன் அறிமுகம். அப்துல்லா உபவாசத்தில் இருப்பதால் எதுவும் சாப்பிடவில்லை. சஞ்சய் எங்கள் எல்லோரையும் அமர்த்தும் பொறுப்பை ஏற்று கொண்டார். மணமகன் சிவாவின் சகோதரியும் வந்தார்.

நேற்றுத்தான் கோவிலில் சிவா திருமணத்திற்காக புக் செய்திருக்கிறார். அதனால் லிஸ்டில் பெயர் வரவில்லை. கோவிலில் நடக்கும் திருமணம் எளிமையாகவும் அதே சமயம் மன நிறைவாகவும் நடக்கும் என்பதை இன்றுதான் நேரடியாக உணர்ந்தேன். உண்மையான சமரசம் இங்குதான் உள்ளது.

போட்டோக்களை எனக்கு மின்னஞ்சல் செய்வதாக சஞ்சய் கூறியுள்ளார். அவை வந்ததும் அவற்றையும் வலை ஏற்றுகிறேன்.

அப்படியே ஒரு மினி பதிவர் சந்திப்பாகவும் அமைந்ததும் மகிழ்ச்சிக்குரியதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12 comments:

  1. புதியதாக பல பதிவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.. கூட்டம் அதிகமாக இருந்தாலும் பதிவர்கள் எல்லோரும் பேசிக் கொள்ள முடிந்தது.

    ReplyDelete
  2. ஆமாம் வெண்பூ! இன்று நானும்,நீங்களும்.சஞ்சயும்,தாமிராவும்அடித்த அரட்டை.... வேணாம் வராதவங்களுக்கு பொறாமையா இருக்கும் :)

    ReplyDelete
  3. மங்களூர் சிவாவுக்கும், அவரது துணைவியாருக்கும் வாழ்த்துக்கள்!

    ஒரு தவிர்க்க இயலாத பிரச்சினையால் இன்று காலை திருமணத்துக்கு வர இயலவில்லை :-(

    ReplyDelete
  4. அன்புள்ள டோன்டு சார், நான் வந்து இணைப்பு தருவதற்குள் நீங்களே என் பதிவுக்கு வந்து பின்னூட்டமிட்டுள்ளீர்கள். உங்கள் அன்பிற்கு நன்றி. பத்திரிகை ரிப்போர்ட் போல மிகத்தெளிவான ரிப்போர்ட் உங்களுடையது. நன்றி. தொடர்ந்து என் பதிவுகளை படித்து கருத்து கூறினால் மகிழ்வேன். உங்களை சந்தித்ததிலும் மிக மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  5. I dont know who is Mangalore Siva, but my hearty wishes and congratulations for him!!!

    Vikram

    ReplyDelete
  6. சார் நானும் பதிவு போட்டுட்டேன்

    ReplyDelete
  7. //சுட்டிக் குழந்தை சஞ்சய் [இவரை முரளிகண்ணன்தானே என்று கேட்டதற்கு ஆமாம் என்றார் :)]//

    என்ன பண்றது... கொஞ்ச நேரத்துலையே உண்மை தமிழன் அண்ணாச்சி உங்க முன்னாடி என் பேரை கேட்டு விளையாட்டை முடிச்சி வச்சிட்டாரே.. இல்லைனா நீங்களும் முரளிகண்ணனை சந்தித்ததாக எழுதி இருப்பீர்கள். அவர் இதை படிச்சிட்டு அநியாயத்துக்கு குழம்பி போய் இருப்பார்.. :))

    ReplyDelete
  8. போட்டோ இன்று அனுப்பி வைக்கிறேன்..

    ReplyDelete
  9. எனக்கு இங்கே ஒரு உறவினரின் (தங்கமணி சைடு) திருமணம் இருந்ததால் வரமுடியவில்லை, என் வாழ்த்துகளையும் இங்கே பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  10. //எனது மின்ரயில் கோடம்பாக்கத்தை அடைந்தபோது மணி காலை 7.30 ஆகி விட்டது //

    மின் ரயிலையும் வாங்கிவிட்டீர்களா ?
    வாழ்த்துகள்.
    :-)

    ReplyDelete
  11. நேரில் வந்திருந்து வாழ்த்தியமைக்கு , பதிவுக்கு மிக்க நன்றி டோண்டு சார்.

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள், பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete