நிரந்தர பக்கங்கள்

2/14/2009

கம்மல்களை தொலைப்பது போன்ற கடினமான விஷயங்களைச் செய்ய தங்கமணிகளுக்கு எளிய வழிகள்

பாப்பாவுக்கு இனி தங்க கம்மல் இல்லை என்னும் தலைப்பில் பதிவர் கவிதா அவர்களின் இடுகைதான் எனது இப்பதிவுக்கு இன்ஸ்பிரேஷன் என்பதை கூறிவிட்டு துவக்குகிறேன்.

அப்பதிவைப் படித்ததும் சமீபத்தில் 1968-ல் குமுதத்தில் படித்த ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. அதன் சாரத்தை சற்றே இற்றைப்படுத்தி இதோ தருகிறேன்:

கம்மல்/மூக்குத்திகளைத் தொலைப்பது மிகவும் கடினம். ரொம்ப மெனக்கெட வேண்டும். அதைச் செய்ய தங்கமணி கீழ்க்கண்ட ஸ்டெப்களில் செல்ல வேண்டும்.
1. ஒரு வெள்ளிக்கிழமையாக பார்த்து தேர்ந்தெடுக்கவும். மாதத்தில் கடைசி வெள்ளிக் கிழமையாக இருப்பது முக்கியம். கணவரது அலுவலகத்தில் நிதியாண்டு முடிவு களேபரம் இருப்பது அவசியம். ஏன் என்பதை கடைசியில் நீங்களே உணரலாம்.
2. சமையல் மேடையின் மேல் சிங்க் இருக்குமிடமாகப் பார்த்து பக்கத்தில் உட்காரவும். சேலைத் தலைப்பு மேடை மேல் பரவியிருக்க வேண்டும். சிங்க் குழாய் திறந்து தண்ணீர் உளே விழுந்து கொண்டிருக்க வேண்டும்.
3. அவ்வாறு பரவிய தலைப்பின் மேல் ஒரு கிண்ணியை வைக்க வேண்டும். அதில் மூக்குத்தி/கம்மலைக் கழட்டிப் போடவும்.
4. கையில் செல்பேசி இருப்பது அவசியம். தோழி குட்டி ரேவதி பற்றி எஸ்ரா அவர்கள் கூறியது, பக்கத்தாத்து கோமளம் மாமி அப்பளம் இடும்போது, அவாத்து மாமா நான்கைந்து அப்பள உருண்டைகளை லவுட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் மேற்படி கோமளவல்லி மாமியால் கையும் களவுமாக பிடிபட்டு அர்ச்சிக்கப்பட்டது போன்ற நாட்டுக்கே முக்கியமான விஷயங்களை செல்பேசியை தலையை காக்காய் மாதிரி ஒரு பக்கம் சாய்த்து தோளின் மேல் வைத்து கன்னத்தால் அழுத்திக் கொண்டே பேச வேண்டும்.
5. வேலைக்காரி ஜயகவுசல்யாவை விட்டு “அம்மா, பாத்திரம் தேய்க்க புளி போடு, புளி போடு” என்று காது புளிக்கும் வரை கத்தச் சொல்ல வேண்டும்.
6. பேச்சு தடைப்பட, “இதோ போட்டுத் தொலைக்கிறேன்” என கத்திக் கொண்டே விருட்டென எழுந்திருக்க வேண்டும்.
7. கிண்ணி சிங்கில் விழுந்து கவிழ, கம்மல் தண்ணீரில் விழுந்து சிங்க் வெளிக் பைப்புக்குள் செல்ல வேண்டும்.

ஆக இம்மாதிரி ஏழுக்கு குறையாத கஷ்டமான ஸ்டெப்புகள் தங்கமணிக்கு உள்ளன.

ரங்கமணி செய்ய வேண்டியதோ ரொம்ப சுலபமான வேலை. சிங்கிலிருந்து வெளியே சென்ற கம்மலை சாக்கடையில் கையை விட்டு நோண்டி அடுத்த சில மணிகளுக்குள் எடுக்கலாம், இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு, அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு வேறு கம்மல் வாங்குவது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

23 comments:

  1. ஹல்லோ, ஹல்லல்லோ, நல்லாதானே போயிட்டுருக்கு............

    ReplyDelete
  2. @செந்தழல் ரவி
    என்ன சொல்றேள் ரவி, “சமீபத்தில் 1968-ல் குமுதத்தில் படித்த ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. அதன் சாரத்தை சற்றே இற்றைப்படுத்தி இதோ தருகிறேன்” அப்படீன்னு ஒரு வாக்கியம் போட்டேனே பாக்கலையா?

    இற்றைப்படுத்தறதுன்னா அப்டேட் செய்யறதுன்னு அர்த்தம்னு ஒங்க ஆத்துக்காரியை கேட்டுண்டிருந்தா அவா சொல்லியிருப்பாளே?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. //ஹல்லோ, ஹல்லல்லோ, நல்லாதானே போயிட்டுருக்கு............//

    எது நன்னா போயிண்டிருக்கு? கம்மலைத் தொலச்சதா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. இப்ப இப்படி எல்லாம் தொலைக்க முடியாது ராகவன் சார்,

    தங்கம் விற்கிற விலை தெரியும் இல்லையா???

    யார் தொலைச்சாலும் அவங்களுக்கு சங்குத்தான்..!! :))

    ReplyDelete
  5. //சமீபத்தில் 1968-ல் குமுதத்தில் படித்த ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது.//

    ராகவன் சார், 1968 உங்களுக்கு சமீபமா? போச்சு போங்க.. !! அப்படின்னா 2009 இனிமே தான் வரும் இல்லையா? :)

    ReplyDelete
  6. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.

    இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

    நட்புடன்
    வலைபூக்கள் குழுவிநர்

    ReplyDelete
  7. //இற்றைப்படுத்தறதுன்னா அப்டேட் செய்யறதுன்னு அர்த்தம்னு ஒங்க ஆத்துக்காரியை கேட்டுண்டிருந்தா அவா சொல்லியிருப்பாளே?
    ///

    இதில் ஒன்றும் நுண்ணரசியல் உள்குத்து இல்லையே ? வெள்ளந்தியான உங்களை நம்புகிறேன்...

    கருநாடகத்தவரான என்னுடைய மனைவி தமிழை கற்று பேசுவதே பெரிய விஷயம். இதில் இற்றைப்படுத்துதல் ? அப்டேட் செய்வதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்..

    மாற்றி எழுதுதல் என்று வேண்டுமானால் சொல்லலாம்...

    இருந்தாலும் உங்களிடம் மொழிபெயர்ப்பில் வம்புக்கு வருவது கொஞ்சம் கிலி தான். மொழிபெயர்ப்பாளர்களில் தலைவாசல் ப்ரோஸ் டாக் காமில் எப்போதும் முன்னால வந்து நிக்குறீரே ?

    ReplyDelete
  8. @செந்தழல் ரவி
    நீங்கள் என் நண்பர். உள்குத்தெல்லாம் உங்களுக்கு கிடையாது. ஸ்ட்ரைட் கலாய்த்தல்தான்.

    மற்றப்படி காலத்துக்கேற்ப செல்பேசியை கொண்டு வந்ததுதான் இற்றைப்படுத்தல். 1964- வெர்ஷனில் இரு நண்பிகள் கிச்சனில் உட்கார்ந்து நேருக்கு நேர் வம்பு பேசுவதாகக் கூறப்பட்டது. அதை செல்பேசியாக ஆக்கினேன்.

    ப்ரோஸ்காம் தலைவாசல் பற்றி எழுதியதற்கு நன்றி.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  9. ராகவன்,

    உங்களோட பதிவுகளை படிச்சிருக்கேன். உங்களுக்கு நகைச்சுவை இயல்பிலேயே இருக்கு. ஆனா இந்த பதிவ படிக்க ஆரம்பித்த போது, எனக்கு இருந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பதே உண்மை. பலர் இந்த பதிவை ஆஹா ஓஹோன்னு பின்னூட்டம் போட்டு, உங்களோட பதிவுக்கு சரியான ஒரு பின்னூட்டம் போடலைங்கறது என் அபிப்ராயம். சுருங்கச் சொன்னால், பலர் ஃபார்மாலிடிக்கு போட்டிருக்கிறார்கள். ஒருவனுடைய நல்ல படைப்புக்கு ஆதாரம் அவனுக்கு கிடைக்கும் நல்ல பின்னூட்டங்கள். இது என்னோட கருத்து. நான் யாரையும் குத்தம் செய்ய வரலைங்கோ.

    ReplyDelete
  10. "கம்மல்களை தொலைப்பதற்கு ஒரு பதிவு போட்ட மாதிரி, தொலைக்காமல் இருப்பதற்கும் ஒரு பதிவு போட்டிருக்கலாம் சார்"....However, its very intresting comedy....!!!! நன்றீ

    ReplyDelete
  11. Kindly send the email followup comments to my mail id....

    ReplyDelete
  12. டோண்டு அங்கிள்,

    எப்படின்னே தெரியல ஆனா கடந்த எட்டு மாசமா உங்களோட பதிவு எதையுமே படிக்காம விட்டு விட்டேன். ஆனால், தமிழிச் தளத்தில் இந்த பதிவை பார்த்தவுடன் ஆஹா, இதோ நம்ம ஆளு என்று வந்து வீடேன்.

    அதுவும் சமீபத்தில் என்ற வாக்கியத்தை பார்த்தவுடன் நிரம்ப மகிழ்ச்சி அடைந்தேன்.

    இனிமேல் என்னுடைய கணினியில் உங்கள் வலைப் பூவை இற்றைபடுத்தி விடுகிறேன். என்ன சரிதானே?

    கிங் விஸ்வா.

    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  13. சுவாமின் இது என்ன கூத்து...

    இப்படி எல்லாம் கத்து கொடுத்து, செலவு வச்சுடுவீர் போலிருக்கு..

    ReplyDelete
  14. 1. இளங்கோவன், வாசன் போன்ற மத்திய அமைச்சர்கள் இதுவரை தமிழ்நாட்டுக்கோ, இந்தியாவுக்கோ என்ன செய்துள்ளனர் ? அவர்கள் துறையில் கடந்த 4 ஆண்டுகளில் என்ன நடக்கிறது என்பதாவது அவர்களுக்குத் தெரியுமா ? இதுபோல தானே ராதிகா செல்வி, ரகுபதி போன்றோரும் ? அன்புமணி, வேலு, பாலு, சிதம்பரம், ராசா தவிர மற்ற அமைச்சர்கள் எல்லாம் சும்மா தானே ?

    2. மாலன், சாரு நிவேதிதா, ஞாநி, இரா.முருகன் போன்ற பலரும் உங்களை விட 5 அல்லது 7 வயதே சிறியவர்கள். இவர்கள் எல்லோரும் இளமையுடன் காட்சியளிக்கின்றனறே ? இவர்களிடம் டிப்ஸ் கேட்டதுண்டா ?

    3. உங்கள் வீட்டில் ஜெயலலிதாவின் சிறந்த திட்டமான - மழைநீர் சேகரிப்புத்தொட்டி கட்டியுள்ளீரா ? அதனால் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளதா ?

    4. பேரன் பேத்திகளுடன் விளையாட நேரம் ஒதுக்குவீர்களா ? அவர்கள் லெவலுக்கு இறங்கி அவர்களுடன் நேரம் போக்க முடிகிறதா ?

    5. ஈழத்தமிழர்கள் தத்தளித்துக்கொண்டும், முத்துக்குமார் தியாகம் செய்த போதிலும், தானுண்டு வாராவாரம் ஓசி பாசில் புது படம் பார்த்து ப்ளாகில் விமர்சனம் - யாரு மனசுல யாரு - முதல் காதல் - முதல் முத்தம் என பதிவுகள் போடுவதுதான் வாழ்க்கையின் நிதர்சனம் இல்லையா ?

    6. சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக ஹிண்டுவின் ஸ்போர்ட்ஸ் எடிட்டராக, கிரிக்கெட் எடிட்டராக இருந்த (அசாருதீனின் மேட்ச் ஃபிக்ஸிங் சமயத்தில் ஹிண்டுவை விட்டு வெளியேற்றப்பட்ட) ஆர்.மோகன் தற்போது டெக்கான் க்ரோனிகிளின் சென்னை பதிப்பு ஆசிரியராக ஆகியிருக்கிறாரே ? படிக்கிறீரா ?


    7. ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார் மகன்கள் திருமணத்தில் ஜெ. வாழ்த்திப்பேசியது சரி. சோ எதற்கு இந்தக் கூட்டத்தில் வாழ்த்திப் பேச போனார் ? ஒரு சீரியல் ஸ்லாட்டுக்காக இவ்வளவா ?

    8. டெக்கான் கிரோனிக்கிள் தேர்தல் கணிப்பில் அதிமுகவுக்கு 15 சீட்கள் கிடைக்குமாமே ? ஆக அடுத்த மத்திய அரசுக்கு தலைவலிதானே ?

    9. காதலர் தினத்தில் மனைவியும் காதலியுமான வாழ்க்கைத் துணைக்கு என்ன பரிசு கொடுத்தீர்கள்

    வியாழன் கேள்விகள் பகுதிக்கு: சுரேஷ் கிருஷ்ணா

    ReplyDelete
  15. 16.சுயமரியாதை இயக்கத்தின் தற்போதைய நிலை?
    17.ஜெ-வைகோ பிரிவு வந்து விடும் போலுள்ளதே?
    18.இலங்கைப் பிரச்சனையில் பாஜகவின் திடீர் கரிசனம்?ஏன்?
    19.அறிவொளி இயக்கம் வெற்றியா?இல்லை வழக்கம் போல்?
    20.விவசாயிக்கு கட்டுபிடியாகும் விலை கிடக்காவிட்டால் உணவு உற்பத்தியின் கதி?

    ReplyDelete
  16. 21. சாதரண மக்களிடையே 1000 ரூபாய் பழக்கம் அதிகமாயுள்ளதே ?
    22.பணவீக்கம் குறைவதாய் சொல்வது உண்மையா?
    23.மத்திய அரசு நோட்டாய் அடித்து தள்ளுகிறதே,பணவீக்கம் மீண்டும் வீங்குமா?
    24.ஏறிய விலைவாசி குறையாதபோது வங்கி சேமிப்பு வட்டி குறைப்பு நியாயமா?
    25.வங்கிகளில் விவசாயி அல்லாதோரும் ( including bank staff and officers)
    வேளான் கடன் பெறுவது தேசத் துரோகம் அல்லவா?(7 % interset bearing agri jewel laon))

    ReplyDelete
  17. 36.தற்போது கொடுத்து சிவந்த கரம் யாருடையது?
    37.தேன் பானைக்குள் கைவிட்டவன் புறங்கை நக்குவது புதிதல்ல -சொன்னவர் (அரசியல்வாதி)யார்?உண்மையில் நடப்பது என்ன?
    38.மணல் கொள்ளை,மரக் கொள்ளை,கல்விக் கொள்ளை இதில் எது முந்துகிறது இப்போது?
    39.இலவச வேட்டி சேலை வழங்குவது மானம் காக்கும் செயலா அல்லது?
    40.நல்லாட்சியின் மாண்பு என்ன?

    ReplyDelete
  18. 41.சுதந்திர இந்தியாவின் நிரந்தரக் குருடன் யார்?
    42.நிரந்தரச் செவிடன் யார்?
    43.நிரந்தர முடவன் யார்?
    44.நிரந்திர ஊமை யார்
    45.நிரந்தர உணர்வற்றவன் யார்?

    ReplyDelete
  19. 46. அரசு/தனியார் வங்கிகளில் போடும் பணம் எந்த இலக்கு வரை( லிமிட்) பாதுகாப்பானது?( வங்கிகளுக்கு அமெரிக்கா நிலை வந்தால்)
    47.வங்கி லாக்கரில் வைத்துள்ள மதிப்பு மிகு பொருட்கள் திருடு போனால்?
    48.ஒரு பக்கம் அரசுத்துறை வங்கிகளின் பங்கு விற்பனை மறு பக்கம் அரசின் பங்குத் தொகை கூட்டல் (செண்ட்ரல்,யுகோ,விஜயா வங்கி)இது ஏன்?( இதில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் எங்கே வருகிறார்)
    49.தங்கம் எங்கு போய் நிற்கும் ((ஆன்லைன்(வால்பையன்) புண்ணியத்தால்))
    50.கம்பெனிகள் திரட்டும் டெபாசிட் களுக்கு இன்சுரன்ஸ் பாதுகாப்பு உண்டா?(deposit insurance corporation of india)

    ReplyDelete
  20. 26.தேக்குமர வளர்ப்புத் திட்டத்தில் போட்ட பணம்,கால்வாசியாவது யாருக்காவது தேறியிருக்குமா?
    27.விவசாயிகள் சங்கத்தின் இன்றைய நிலை எப்படி?
    28.அன்றைய வெள்ளையன் ஆட்சிக்கும் இன்றய கொள்ளையர்களின் ஆட்சிக்கும் உள்ள ?
    29.மீண்டும் விவேகானந்தர் பிறந்து வந்தால்?
    30.தமிழக மந்திரிகளில் இருப்பதற்குள் யாரின் செயல் பாடு பரவாயில்லை?

    ReplyDelete
  21. 31.ஒபாமாவின் அதிரடி ஆட்சிபற்றி ஒரு வரியில் உங்கள் விமர்சனம்?
    32.காங்கிரஸ் ஆட்சிபற்றி ஒருவரியில்?
    33.கலைஞரது ஆட்சிபற்றி ஒர் வார்த்தையில்?
    34.அரசுகள் வழங்கும் பென்சன் செலவு வரும் 10 ஆண்டுகளில் வேலைபார்க்கும் மாத சம்பள செலவைவிட கூடும் போது என்னவாகும்?
    35.ஆளாளுக்கு பூமி வெப்பமேறலை சரி செய்யப் போகிறேன் என மரங்களை நட தடபுடல் பண்ணினார்களே? ரிசல்ட்?

    ReplyDelete
  22. இந்தியாவில் வரலாறு காணாத அளவு விலையை தொட்டது தங்கம்.

    சமீபத்தில் தங்கத்தின் மதிப்பு ஒரு அவுண்ஸுக்கு 1030 டாலர் என்று விலை உயர்ந்த போதும் நமது ரூபாயின் மதிப்பு குறைந்திருந்ததால் அது 1350 ரூபாய்க்கு(24 காரட்) மேல் போகவில்லை.

    ஆனால் தற்ச்சயம் தங்கத்தின் மதிப்பு டாலரின் 973$ மட்டுமே, ஆனால் இந்திய மதிப்பு 1583 ரூபாய்(24 காரட்)

    அதிலும் குறிப்பிட்டு சொல்லவேண்டியது நமது பட்ஜெட்டுக்கு பிறகு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 1.15 பைசா குறைந்திருக்கிறது.

    கடந்த நான்கு வருடத்தில் மட்டும் தங்கம் வரலாறு காணாத அளவு விலை உயர்ந்துள்ளதை கவனிக்கவும்.

    அமெரிக்கா புஷ்ஸு போறதுக்கு முன்னாடி எல்லாத்துக்கும்(பெண்களுக்கு) ஆப்பு வச்சிட்டு போயிட்டார்

    ReplyDelete