நிரந்தர பக்கங்கள்

3/05/2009

டோண்டு பதில்கள் - 05.03.2009

அனானி (120 கேள்விகள் கேட்டவர்):
60. பழைய விவசாய சங்கம்தான் இன்று உதயமாயுள்ள கொங்கு வேளாளக் கவுண்டர் கட்சியா?
பதில்: அப்படித் தெரியவில்லையே. முதலில் ஒரே ஒரு விவசாய சங்கமா இருந்தது? கட்சி சார்புகளுக்கேற்ப ஒன்றுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இருப்பதாகத்தான் படுகிறது. நீங்கள் எந்த சங்கத்தை குறிப்பிடுகிறீர்கள்? எனக்கு பரிச்சயமான ஒரே விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுதானே.

61. புதிய நீதிக்கட்சி-முதலியார், பாமக-வன்னியர், கொ.வே.கட்சி-கவுண்டர், ச.ம.கட்சி-நாடார், பா.பிளாக்-தேவர், தாம்பிராஸ்-பிராமணர் கட்சியை நோக்கி (அகில இந்திய அளவில் முயற்சிகள் தொடக்கம்- 5 - 7% இடஒதுக்கீடு கோரியும்), ஆதிதிராவிடர்-திருமாவளவன் கட்சி, தே.குல.வே-கிருஷ்ணசாமி கட்சி புதிய தமிழகம் இனி யாரெல்லாம் பாக்கி?
பதில்: உண்மையான தேர்தல் வரட்டும். மேலும் பல சாதிக்கட்சிகள் வரக்கூடும். அவற்றில் பெரும்பான்மையாக லெட்டர் பேடு கட்சிகள் இருக்கும் என்று இப்போதே கூறிவிடுகிறேன்.

62. விஜயகாந்த் புத்திசாலியா,இலங்கை விசயத்தில்?
பதில்: பாவம் அவர். திருமங்கலம் தேர்தலில் வாங்கிய அடியில் கலங்கிப் போயிருக்கிறார். அவரைப் போய் இலங்கை பற்றி கேட்கலாமா? ஏதோ காங்கிரஸ் திமுகாவோடு ஒட்டிக் கொள்ளப் போவதாகக் கேள்வி.

63. இலங்கை பிரச்சினை தமிழக தேர்தல் களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற உளவுத்துறை அறிக்கை உண்மையா? உண்மையில் உல்டா ஆகுமா?
பதில்: என்னைப் பொருத்தவரை இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழகத்தின் தேர்தலில் முக்கியமான காரணி இல்லைதான்.

64. இந்த விசயத்தில் இயக்குனர் சீமான் அதிக தீவிரம் காட்டுகிறாரே? அமீரின் நிலை?
பதில்: தெரியவில்லையே.

65. ஸ்டாலின் அடுத்த தேர்தல் தயாரிப்பில் இறங்கிவிட்டாரே?முடிவு எப்படி இருக்கும்?
பதில்: அழகிரிக்கு இது தெரியுமா?

66. தென்பகுதி இந்த தடவை திமுக வசமாகுமா, அழகிரியாரின் கடைக்கண் பார்வையில்?
பதில்: அதற்கு திமுக குடும்ப அரசியலில் ஸ்டாலினின் கை ஓங்காது இருக்க வேண்டுமே.

67. அதிமுக இந்தமுறையும் தோற்றால்?
பதில்: அதற்கு திமுக ஒவ்வொரு தொகுதியையும் திருமங்கலம் தொகுதியாக மாற்ற வேண்டும். பணபலம் அதற்கு தேவையானது அதனிடம் இருந்தாலும் சோ அவர்கள் சொன்னது போல ஆள்பலம் இருக்கிறதா என்பது சந்தேகமே.

68. மீண்டும் தூசிதட்டி ஜெ எடுத்துள்ள எம்ஜிஆர் பார்முலா எடுபடுமா?
பதில்: மக்களின் மறதி பற்றி அவருக்கு நம்பிக்கை அதிகமே.

69. கறுப்பு எம்ஜியார் திமுகவிடம் கூட்டணி சேர்ந்தால், மீண்டும் எம்ஜிஆர் ரசிகர் ஜெ பக்கம் சாய்வார்களா?
பதில்: அது அவர்கள் முதலில் கறுப்பு எம்.ஜி.ஆரை எந்த அளவுக்கு நம்பினார்கள் என்பதை பொருத்ததே.

70. அரசியலில் சுய விளம்பரப் பிரியர் ஜெவை, பல வகைகளில் உ.பி மாயாவதி மிஞ்சுவாரா?
பதில்: மாயாவதிக்கு ஆடியன்ஸ் பல ஹிந்தி பேசும் மாநிலங்களில் உண்டு. ஹிந்திப் படம் தமிழ்ப்படம் ஆகியவற்றின் ரீச் போலத்தான் இருவரது செல்வாக்கும் வித்தியாசப்படுகிறது. மாயாவதி ஜெவை மிஞ்சுவார் என்றுதான் தோன்றுகிறது.

71. சரத் பவாரை பிரதமராக்குவோம் எனும் முலாயமின் திடீர் கோஷம்?
பதில்: அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னு நம்ப கவுண்ட பெல் ஏற்கனவே சொல்லிட்டாரே.

72. வயதில் 75, 85 ஐ தாண்டியவர்கள், உடல் நலக்குறைவு உள்ளவர்கள் ஒதுங்கி இளையவர்களுக்கு (மத்தியில் பிரணாப் அல்லது ராகுல், தமிழ் நாட்டில் ஸ்டாலின் அல்லது அழகிரி) வழிவிடவே மாட்டார்களா?
பதில்: பிரணாப் ஒன்றும் இளைஞர் அல்ல. அவருக்கு 73 வயது முடிந்து விட்டது (பிறந்த தேதி 11-12-1935). மற்றப்படி யாரும் யாருக்கும் வழி எல்லாம் விட்டு கொண்டிருக்க மாட்டார்கள். சொந்த முயற்சியில்தான் வர வேண்டும்.

73. பொதுத்துறை நிறுவனங்களில் ஓய்வுபெறும் வயது 62 ஆகப்போகிறதாமே? இது சரியா?
பதில்: முதலில் எல்லாம் 55 வயதிலேயே ஓய்வு பெறுவார்கள். சில ஆண்டு காலம் பென்ஷன் வாங்கிய பிறகு பிராணனை விடுவார்கள். இப்போதெல்லாம் ஆயுட்காலம் எதிர்பார்ப்பு அதிகரிப்பதால் ஒவ்வொருவரும் பென்ஷன் பெறும் காலம் சராசரியாக அதிகரித்து கொண்டிருக்கிறது. 35 வயதில் ஓய்வு பெற்ற நானே 27 ஆண்டுகளுக்கு மேல் பென்ஷன் வாங்கி விட்டேன் என்றால் பார்த்து கொள்ளுங்களேன். யாராவது நினைக்கலாம் அல்லவா, ஓய்வு பெறும் வயதை உயர்த்தினால் அந்த அளவுக்கு தண்டச் சம்பளம் குறையும் என்று. அதுதான் இப்போதைய சிந்தனை என எனக்குப் படுகிறது. இல்லாவிட்டால் சிந்துபைரவி படத்தில் பென்ஷன் வாங்கும் பெரிசு கிட்டே ஜனகராஜ் பண்ணும் கலாய்த்தல் போலத்தான் செய்ய வேண்டியிருக்கும்.

74. ஒபாமா நின்னு ஆடுவார் போலிருக்கே?
பதில்: முதலில் அவரால் அமெரிக்காவுக்கு ஏதேனும் நல்லது நடக்கட்டும். டெமாக்ரடிக் ஜனாதிபதிகள் ஆட்சிகளில் அமெரிக்கா அதிகம் சிறுமை பட்டதுதான் நடந்திருக்கிறது.

75. தமிழக அரசுத்துறையில் லஞ்சம் பெற்று கொழிப்பதில் யார் நம்பர் ஒன்?
பதில்: ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கும் வணிகவரித் துறைக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுவதாகக் கேள்வி.

76. மத்திய அரசில் இந்த பரிசை தட்டிச் செல்வது யார்?
பதில்: அங்கு யார் லஞ்ச ராசாவோ யாருக்கு தெரியும்?

77. தமிழக அமைச்சரில் இந்த ஊழல் குற்ற்ச்சாட்டுக்கு தப்பியது யார்?
பதில்: யாராக இருக்கும் சொல்லிடுங்க, சஸ்பென்ஸ் தாங்கலியே.

78. மத்திய அரசில் காந்தி கொள்கையுடன் (அன்றைய கக்கன்ஜி போல்) யாராவது?
பதில்: மத்திய அரசில் யாரும் தேறமாட்டார்கள் போலிருக்கிறதே. அது பற்றி துக்ளக் ஆண்டுவிழாவில் சோ அவர்கள் பேசியது இதோ: “பயங்கரவாதிகளின் பணம் பங்கு மார்க்கெட்டில் விளையாடுகிறது என ஜெயலலிதா இட்ட குற்றச்சாட்டை நிதி மந்திரி மறுத்தார் ஆனால் ஜெயலலிதா கூறியதற்கு அடிப்படைகள் உண்டு என கூறப்படுகிறது. மன்மோகன் சிங்கைத் தவிர எல்லா மந்திரிகளும் ஊழல் குற்றச்சாட்டில் உள்ளனர், ஆனால் அவர் மட்டும் நாணயமானவர் எனக் கூறினாலும் அவர் சும்மா இருந்து இதையெல்லாம் பார்த்ததற்காக குற்றவாளியாகிறார். ஸ்பெக்ட்ரம் ஊழலையே எடுத்து கொள்வோம். திடீரென முதலில் வந்தவர்களுக்கே முதலில் காண்ட்ராக்டை அளிப்போம் என்பதற்கு இது என்ன விளையாட்டா? நாலு அளிப்புகளை பார்த்து சிறந்ததைத் தேர்ந்தெடுக்காமல் இது என்ன விபரீத வேலை? ராசா கூறுகிறார் ட்ராய் அமைப்பு சொன்னதைத்தான் தான் நிறைவேற்றியதாக. ஆனால் அந்த அமைப்பு இதை மறுக்க, முன்னால் நியமித்த விலைக்குத்தான் விற்றேன் என மந்திரி கூறுகிறார். எத்தனை முன்னால் நிர்ணயித்த விலை எனக் கேட்டால் 12 ஆண்டுகளுக்கு முன்னால் நிர்ணயித்த விலை என்கிறார். அவர் வீட்டை 12 வருடத்துக்கு முந்தைய விலையில் விற்பாராமா”?

79. லஞ்சம்,லாவண்யம் இவற்றின் இன்றய விஸ்வரூப நிலையை ஒப்பிட்டு சொலவதென்றால் எதோடு ஒப்பிடலாம்?
பதில்: தீவிரவாதத்தோடு என்று கூறலாம் என நினைத்தால், அதுவும் லஞ்ச லாவண்ய கூத்தில்தானே அதிகம் குளிர் காய்கிறது?

80. இலங்கையில் இன்றைய உண்மையான நிலவரம்?
பதில்: தெளிவின்மைதான்.

81. பிரபாகரனின் பையன்தான் போரை வழிநடத்திச் செல்வது எதைக்காடுகிறது?
பதில்: யாருக்கு உண்மை தெரியும்? அங்கிருந்து வரும் எல்லா செய்திகளுமே ஒருதலை பட்சமானவையே.

82. பிரபாகரன் தப்பிவிட்டாரா? இல்லை அடுத்த தாகுதலுக்கு தயராகுகிறாரா?
பதில்: ஒரு வேளை சாமி படத்தில் வரும் முடிவு போல ஆகியிருக்குமோ? அடுத்த முறை அவரே பிரஸ் மீட்டில் வந்தால்தான் தெளிவாகச் சொல்ல இயலும்.

83. புலி பதுங்குவது முழுப்பலத்துடன் பாயவா?
பதில்: அதற்காகவெல்லாம் ரொம்ப நேரம் பதுங்கினால் என்னவென்றுதான் நினைப்பது?

84. ஒரு வேளை இலங்கைப் பிரச்சனையின் போக்கு அங்கு வாழும் தமிழருக்கு எதிராய் போனால் அதனுடய தாக்கம் இங்கு எப்படியிருக்கும்?
பதில்: ராஜரீதியான நிர்ப்பந்தங்கள் இந்தியாவின் தரப்பிலிருந்து செல்லும். அவை என்ன என்பதை வெளிப்படையாக எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க இயலாது.

85. வறுமையில் வாடும் விவசாயிகள் பயிரிடுவதை நிறுத்திவிட்டால்?
பதில்: வேறு வழி ஏதேனும் இருந்தால் அதை அவர்கள் எப்போதோ செய்திருப்பார்களே. இப்போதே பல விவசாய நிலங்கள் மாற்றம் அடைந்து விட்டன. சம்பந்தப்பட்டவர்கள் வேறு வழிவகைகளை கண்டு கொண்டதால்தான் அது நடந்தது.

86. அரசின் உதவிகள் கொழுத்த நிலச் சுவான்தார்களால் சுவாகா செய்யபட்டு விடுகிறதே? (விவசாயக் கடன் தள்ளுபடி)
பதில்: பதிவர் நண்பர் ஒருவரின் சகோதரர் பெரிய நிலச்சுவான்தார். அவர் டிராக்டருக்காக வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என அப்பதிவரே கூறினார். இத்தனைக்கும் அவர் நல்ல செல்வந்தர். நெல்லுக்கு இறைக்கும் நீர் ஆங்காங்கே புல்லுக்கும் பொசிக்குமாம் என கூறுவதை விட புல்லுக்கு இறைத்த நீர் ஆங்காங்கே நெல்லுக்கும் பொசித்ததாம் என்று மாற்றிப் பாட வேண்டும் போலிருக்கிறது.

87. இலவசமின்சாரத்தை பிறருக்கு விற்பனை செய்யும் செயல் மட்டுபடுத்தப்பட்டுள்ளதா?அரசின் கண்காணிப்பு இதில் சரியில்லையே?
பதில்: இலவச மின்சாரத்தை எப்படி விற்பார்களாம்? எனக்கு புரியவில்லையே. கனெக்‌ஷன் வயர் இழுத்து என்றெல்லாம் முடிகிற காரியமா? நான் இதை நம்பவில்லை.

88. பத்திரிக்கை ஆசிரியர், பள்ளி ஆசிரியர் ஒப்பிடுக?
பதில்: இருவருமே திருத்துபவர்கள். ஆனால் பத்திரிகை ஆசிரியர் எழுத்தாளர்களின் கதையை திருத்தி நல்ல கதை கட்டுரைகளாக அவற்றை வெளியிடுபவர். பள்ளி ஆசிரியரோ மாணவரது விடைகளைத் திருத்தி மார்க் போடுபவர். அதே சமயம் மாணவர்களையே திருத்தி அவர்களை நல்ல குடிமகன்களாக உருவாக்க உதவுபவர். பத்திரிகை ஆசிரியர் அப்படி இல்லை. அவருக்கு அது வேலையும் இல்லை.
(மன்னிக்கவும் அனானி, உங்களது மிகுதி கேள்விகளின் பதில்கள் அடுத்த பதிவில்தான்)


கைபர் கணவாய்:
1. போலீஸ்காரங்க தப்பே பண்ணலை, எல்லாமே வக்கீலுங்கதான்னு சொல்லறீங்களா?
பதில்: அப்படி யாரும் இங்கே சொல்லவில்லையே. ஆனால் இந்த லேட்டஸ்ட் மோதலில் சுப்பிரமணியம் சுவாமி மேல் முட்டையடித்து, முதலில் பிரச்சினையை ஆரம்பித்தது வக்கீல்களே. மீதி எல்லாம் செயின் ரியேக்‌ஷனே. இம்மாதிரி விஷயங்களில் முதலில் ஆரம்பித்து வைத்தவருடைய குற்றம்தான் அதிகம். போக்குவரத்து விபத்துகளில் இம்மாதிரி தொடர் விபத்துகளில் கூட முதலில் ஆரம்பித்து வைத்தவரை அடையாளம் காண்பதே போலீசார் செய்யக் கூடிய முதல் வேலை.

2. “எனது சித்தியான கன்னட சினிமா துறையின் நூற்றாண்டு விழாவுக்கும் என்னை அழையுங்கள்” என்று சொன்னார் கமல். அதென்ன சித்தி?
பதில்: அப்படியா சொன்னார் கமல்? ரொம்ப சுவாரசியமாக இருக்கிறதே. நான் கூட ஹிந்தி/உருது மொழிகளை எனது சித்தி மொழிகள் என்று கூறியுள்ளேன். அம்மொழிகளில் சித்தியை மௌசி என்று அழைப்பார்கள். மௌசி என்றால் மா ஜைஸீ (தாயைப் போன்றவள்) என்று பொருள். ஒரு குழந்தையின் தாய் இறந்து விட்டால் பல முறை அத்தாயின் தங்கையையே குழந்தையின் தந்தைக்கு திருமணம் முடிப்பது வழக்கம். அவள்தான் தன் அக்காவின் குழந்தையை தன் குழந்தையைப் போல பார்த்து கொள்வாள் என்ற நம்பிக்கையே காரணம். நான் தில்லியில் இருந்த சமயம் ஒரு ஹிந்திக்காரரிடம் ஹிந்தி எனது சித்திமொழி என ஹிந்தியிலேயே கூற, மனுஷன் ரொம்பவே ஃபீலிங்ஸ் ஆனார்.


எம். கண்ணன்:
1. பா.ம.க, வி.சி போன்ற கட்சிகளை அதிமுக, திமுக இரண்டும் தங்கள் கூட்டணியில் சேர்க்கவில்லையெனில் - மருத்துவர் ஐயா என்ன செய்வார்?
பதில்: அம்மாதிரி ஒரு தேர்தலில் அவர் ஏற்கனவேயே போட்டியிட்டுள்ளாரே. என்ன ரிசல்ட்தான் அப்போது சற்று பிளாங்கி அடித்தது.ஆகவே இப்போது எப்படியாவது எங்காவது ஒட்டிக் கொள்வதே முயற்சியாக இருக்க வேண்டும். முடியாவிட்டால் இருக்கவே இருக்கிறது சுயமரியாதை லேபல்.

2. தமிழ்நாட்டின் முதல்வராக அன்புமணி வந்தால் நல்லது என நான் நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன?
பதில்: இதில் நான் சோ கட்சிதான். இந்த தேர்தலுக்கு ஜெயலலிதாதான் என்னுடைய சாய்ஸ்.

3. பாஜக ஏன் விஜய்காந்தோடு சேர்ந்து போட்டியிடக் கூடாது?
பதில்: பாஜக என்ன மாட்டேன் என்றா சொல்கிறது? ஆனால் தமிழகத்தில் யாரும் அதை சீந்துவது போலத் தெரியவில்லையே.

4. 'எ வெட்னஸ்டே' இந்திப் படம் பார்த்தீர்களா ? அதை கமல்ஹாசன் சரியாக எடுப்பாரா ? இரா.முருகனின் திரைக்கதை + வசனம் எவ்வளவுதூரம் எடுபடும் ?
பதில்: அப்படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் மிக நன்றாக இருந்ததென அறிகிறேன். சற்றே மாறுப்ட்ட கதை. அதை எடுக்க கமலை விட்டால் வேறு ஆள் இல்லை. திரைக்கதை வசனம் + கதை கூட நல்ல தகுதியான நபரிடமே செல்கிறது. இரா முருகன் அல்லது ஜெயமோகன் ரேஞ்சு ஆட்களுக்குத்தான் அந்த சவாலை ஏற்கும் திறமை உண்டு. நண்பர் இரா முருகனுக்கு ஃபோன் செய்து எனது வாழ்த்துக்களை கூறினேன். அவருக்கு நன்றி தெரிவித்து போட்ட ஒரு இடுகையை இங்கு சுட்டுவேன்.

5. உங்கள் நங்கநல்லூர்வாசிகளுக்காக ஏதேனும் பொது சேவை செய்துள்ளீர்களா? செய்யும் / செய்ய போவதில்லை போன்ற எண்ணங்கள் உண்டா?
பதில்: இப்போதைக்கு செய்ய உத்தேசம் ஒன்றும் இல்லைதான். பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.

6. ஜெயலலிதா இந்த வருட கோடைக்கு கோடநாடு செல்வதற்கு ஆப்பாக தேர்தல் வந்துவிட்டதே ? எப்படி பல்வேறு தலைவர்களும் உடல் உபாதைகளுடன் கத்திரி வெயிலில் பிரச்சாரம் செய்யப் போகின்றனர்?
பதில்: தலைவர்களுக்கென்ன, அவர்கள் ஏசி பொருத்திய வேன்களில் வர்வார்கள். கத்திரி வெயில் அவர்களை என்ன செய்துவிட இயலும்?

7. அதிமுகவுக்கு 17/40 (திமுகவுக்கு 6) சீட்கள் கிடக்கும் என சில கருத்து கணிப்புகள் (பயனீர் நாளிதழ்) சொல்கிறதே? அப்படிக் கிடைத்தால் ஆனால் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் திமுகவின் நிலை என்ன?
பதில்: காங்கிரசுக்கு யார் சாதகமோ அவர்களது தயவைத்தான் எடுத்து கொள்ளும். அது அவர்கள் கலாச்சாரத்தில் ஊறியுள்ளதே.

8. பெரும்பாலான பிராமணர்கள் விரும்பிப் பார்க்கும் பல நிகழ்ச்சிகள் ஜெயாடிவியில் ஒளிபரப்பாகின்றன (பக்தி, சங்கீதம், இன்ன பிற). அப்படி இருக்கையில் ஏன் சன்டிவி மட்டுமே உங்கள் வீட்டில்? சினிமா, சீரியல் தவிர எந்த மாதிரியான வித்தியாசமான நிகழ்ச்சிகளும் சன் டிவியில் இல்லாத நிலையில்?
பதில்: சன் டிவி சீரியல்கள் கோலங்கள், மேகலா ஆகியவை எனது ஃபேவரைட். ஆனால் ஜெயா டிவியில் இப்போதைக்கு எங்கே பிராமணன் மட்டுமே ஃபேவரைட்.

9. அலோபதி தவிர மற்ற மாற்று மருத்துவ முறைகளில் நம்பிக்கை உண்டா ? - ஹோமியோபதி, சித்தா, யுனானி, ரெய்கி...?
பதில்: இதுவரை அலோபதி தவிர வேறு எதையும் உபயோகிக்காது வாழ்ந்தாகிவிட்டது. கடவுள் புண்ணியத்தில் நல்ல உடல்நிலைதான்.

10. விஜய்காந்த், சரத்குமார் - இருவருக்கும் எந்தப் படமும் கடந்த 4-5 ஆண்டுகளில் ஹிட் ஆகாமல் இருக்கையில் எப்படி அவர்களுக்கு பட வாய்ப்பும் கட்சி நடத்த பண வாய்ப்பும் வருகிறது ? யார் funding செய்கிறார்கள் ? இவர்களை நம்பி யார் படமெடுக்கிறார்கள்?
பதில்: இந்த மாதிரி விஷயங்களில் என்னைவிட ஆதண்டிக்காக தகவல் தரக்கூடியவர்களில் நண்பர் லக்கிலுக் முக்கியமானவர். அவருக்கு ஃபோன் போட்டு கேட்டதில் அவர் தந்த தகவல்களின் சுருக்கம் இதோ: சரத்குமாரும் சரி விஜயகாந்தும் சரி பி மற்றும் சி மையங்களில் அரசு செலுத்துபவர்கள். ஆகவே அவர்கள் படத்துக்கு வசூல் நிச்சயம். மேலும் பெரிய அளவில் பணம் சேர்த்து விட்டவர்கள். கட்சியில் சேர்த்து கொள்ளப்படும் புதியவர்களும் கணிசமான தொகையுடனேயே சேர்த்து கொள்ளப்படுகிறார்கள். ஜேகே ரித்தீஷ் போன்றவர்களே நினைத்தால் கூட இப்போது கட்சி அமைக்க முடியும் நிலையில் இருக்கும்போது இவர்களுக்கு என்ன கஷ்டம்?


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

23 comments:

  1. //
    87. இலவசமின்சாரத்தை பிறருக்கு விற்பனை செய்யும் செயல் மட்டுபடுத்தப்பட்டுள்ளதா?அரசின் கண்காணிப்பு இதில் சரியில்லையே?
    பதில்: இலவச மின்சாரத்தை எப்படி விற்பார்களாம்? எனக்கு புரியவில்லையே. கனெக்‌ஷன் வயர் இழுத்து என்றெல்லாம் முடிகிற காரியமா? நான் இதை நம்பவில்லை//


    தென்மாவட்ட கிராமங்களில் இது நாளும் நடக்கும் பகல் திருட்டு.
    விவசாய பம்பு செட்டுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள மின்சாரத்தை உபயோகித்து தண்ணிருக்கு ஒருமணி நேர தண்ணீர் சப்ளைக்கு ரூபாய்.10/20/30 என வாங்கப் படுகிறது.தண்ணீர் விற்பனை கன ஜோர்.

    மின்சார அலுவலருக்கும் இதில் கப்பம் உண்டு.
    சில இடங்களில் கொக்கி போட்டு கூட்டுக் கொள்ளையும் சக்கைபோடு போடுகிறதாம்.

    ReplyDelete
  2. //75. தமிழக அரசுத்துறையில் லஞ்சம் பெற்று கொழிப்பதில் யார் நம்பர் ஒன்?
    பதில்: ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கும் வணிகவரித் துறைக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுவதாகக் கேள்வி.//


    பத்திரப் பதிவுத் துறை அலுவலர்கள் கோபித்துக் கொள்ளப் போகிறார்கள்.அவர்களும் கச்சைகட்டி களத்தில்.....

    ReplyDelete
  3. @அனானி
    அப்படியா. ரொம்பக் கொடுமைதான் அது. என்ன செய்வது லஞ்ச லாவண்யம் அடியிலிருந்து மேல் வரை ஊடுறுவியுள்ளது. மோடி மாதிரி யாராவது வந்தால்தான் இதற்கு விடிவு பிறக்கும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. @அனானி
    பத்திரப் பதிவு ஊழியர்களும் இதில் பரிசு பெறும் அளவில்தான் உள்ளனர்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. //76. மத்திய அரசில் இந்த பரிசை தட்டிச் செல்வது யார்?
    பதில்: அங்கு யார் லஞ்ச ராசாவோ யாருக்கு தெரியும்?//

    1.வருமான வரித்துறை
    2.கலால் துறை.

    என்ன இருந்தலும் மத்திய அரசு உழியர்கள் ,தமிழக அரசு உழியர்கள் போல் அந்த அளவுக்கு இன்னும் கெட்டுப் போகவில்லை.
    இந்த லடசணத்தில் 6 சம்பளக்குழு அறிக்கைக்குபின்னர் இந்தியாவிலே தமிழக அரசு உழியர்கள் தான் சம்பளம்+கிம்பளம் இரண்டிலும் கிங்கிரர்கள்.
    அடுத்த ஜென்மத்தில் இவர்களுக்கு ஆண்டவ்ன் என்ன ஜென்மா கொடுப்பான் என கூறவும்(சோவின் எங்கே பிராமனன் அடிப்படையில்?)

    கொழுத்த சம்பளம் வாங்கிக் கொண்டு தனது அன்றாட வேலை செய்வதற்குக் கூட கையேந்தும் இந்த ........
    அனைவரையும் இருட்டு அறையில் தள்ளி குடிக்க தண்ணிர் ,உண்ண உனவு கொடுக்காமால், அவர்களின் லஞ்சப்பணத்தோடு மீதி நாடகளி கடத்த வைத்தால்!

    ReplyDelete
  6. //அடுத்த ஜென்மத்தில் இவர்களுக்கு ஆண்டவ்ன் என்ன ஜென்மா கொடுப்பான் என கூறவும்(சோவின் எங்கே பிராமனன் அடிப்படையில்?)//

    நீங்கள் அணுக வேண்டியது இந்தியன் தாத்தா, கருடபுராணம் புகழ் அம்பி மற்றும் ரமணா.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. //தமிழ்நாட்டின் முதல்வராக அன்புமணி வந்தால் நல்லது என நான் நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன?
    பதில்: இதில் நான் சோ கட்சிதான். இந்த தேர்தலுக்கு ஜெயலலிதாதான் என்னுடைய சாய்ஸ்//

    கண்ணைமூடி கனவுகாண்பது உங்களின் உரிமை.

    மத்தியில் அன்னை இந்திராவின் அருமை மருமாள் சோனியா அம்மையாரின் வார்த்தைக்கும் ம்றுவார்த்தை பேசா மன்மோகன் சிங்கின் ஆட்சியும்,தள்ளாத வயதிலும்,தளர்ந்துவிட்ட உடல் நலிவிலும் தமிழர் நலம் காக்க வேண்டும் எனும் ஒரு கொளகையை உயிர் மூச்சாய் கொண்டு வாழும் வள்ளுவரின் தொலகாப்பிய ஆட்சியும் முடிவு செய்யபட்டுவிட்டது.

    இலவசமே போற்றி போற்றி
    சின்னத்திரையை நம்பினார் கைவிடப்படார்

    நவீன் சால்வா இருக்க பயமேன்

    ReplyDelete
  8. //பழைய விவசாய சங்கம்தான் இன்று உதயமாயுள்ள கொங்கு வேளாளக் கவுண்டர் கட்சியா?//

    வுட்டா விவசாயிகள் எல்லாரும் கவுண்டர்கள்ன்னு சொல்லுவாங்க!

    என்ன குறைச்சல் எதுக்கு சாதிய வளர்க்கனும்,
    அதுலயம் ரெண்டு பிரிவு,
    நாந்தான் உண்மையான கவுண்டன்னு அடிச்சிகிறாங்க!

    நான் மனுசன்ன்னு சொல்லிகிறதுக்கு யாருக்குமே தகுதி இல்லாம போச்சு

    ReplyDelete
  9. //அதிமுக இந்தமுறையும் தோற்றால்?
    பதில்: அதற்கு திமுக ஒவ்வொரு தொகுதியையும் திருமங்கலம் தொகுதியாக மாற்ற வேண்டும். பணபலம் அதற்கு தேவையானது அதனிடம் இருந்தாலும் சோ அவர்கள் சொன்னது போல ஆள்பலம் இருக்கிறதா என்பது சந்தேகமே.//

    தப்போ சரியோ
    நான் இருக்கிறேன் என்று எப்போதும் எதாவது செய்ய வேண்டும். அதுவும் ஒரு வகையான ஆளுமை தான். அதிமுகவுக்கு ஆட்சியில் இருக்கும் போதே அதை செய்ய தெரியாது.

    ஆனாலும் திமுகவின் மேல் உள்ள வெறுப்பால் ஓட்டுகள் சிதரபோவது உறுதி

    ReplyDelete
  10. //வயதில் 75, 85 ஐ தாண்டியவர்கள், உடல் நலக்குறைவு உள்ளவர்கள் ஒதுங்கி இளையவர்களுக்கு (மத்தியில் பிரணாப் அல்லது ராகுல், தமிழ் நாட்டில் ஸ்டாலின் அல்லது அழகிரி) வழிவிடவே மாட்டார்களா?//

    பிரணாப் சரி எதுக்கு ராகுல்,
    தலைமை பண்புகள் என்ன தலைமுறை வழியாக வரும் பண்பா?
    அதிலும் அழகிரி வேற!
    அரசியலில் ஒரு புண்ணாக்கும் தெரியாது, சுற்றிலும் ஜால்ரா தட்டும் ஆட்கள், தலைமை பொறுப்புக்கு வந்தால் நாடு அம்புட்டு தான்.

    ReplyDelete
  11. //முதலில் அவரால் அமெரிக்காவுக்கு ஏதேனும் நல்லது நடக்கட்டும். டெமாக்ரடிக் ஜனாதிபதிகள் ஆட்சிகளில் அமெரிக்கா அதிகம் சிறுமை பட்டதுதான் நடந்திருக்கிறது.//

    இதுவெல்லாம் முன்முடிவுடம் அல்லது பொது புத்தியுடன் கூறும் பதில்.

    அமெரிக்காவை பொறுத்தவரை எல்லோரும் கழுதைகளே

    ReplyDelete
  12. //மத்திய அரசில் இந்த பரிசை தட்டிச் செல்வது யார்?
    பதில்: அங்கு யார் லஞ்ச ராசாவோ யாருக்கு தெரியும்?//

    ராசாவுகெல்லாம் ராசா ராணி தானாமே!

    ReplyDelete
  13. //“பயங்கரவாதிகளின் பணம் பங்கு மார்க்கெட்டில் விளையாடுகிறது என ஜெயலலிதா இட்ட குற்றச்சாட்டை நிதி மந்திரி மறுத்தார் ஆனால் ஜெயலலிதா கூறியதற்கு அடிப்படைகள் உண்டு என கூறப்படுகிறது.//

    சமீபத்தில் வந்த ஜேம்ஸ்பாண்ட் படம் ”கேசினோராயல்” பார்த்திருப்பார்

    ReplyDelete
  14. //இலங்கையில் இன்றைய உண்மையான நிலவரம்?
    பதில்: தெளிவின்மைதான்.//

    உங்களுக்கு தானே!

    ReplyDelete
  15. //மௌசி//

    தமிழில் இது ஒரு சிக்கல்!

    பேசும் போது புரிந்து கொள்ளலாம், ஆனால் எழுதும் போது!

    இதை எப்படி எடுத்து கொள்வது
    மெ ள சி என்றா?
    மெள சி என்றா?

    ReplyDelete
  16. //ஒரு ஹிந்திக்காரரிடம் ஹிந்தி எனது சித்திமொழி என ஹிந்தியிலேயே கூற, மனுஷன் ரொம்பவே ஃபீலிங்ஸ் ஆனார். //

    பின்ன ஆகம்மாட்டாரா
    நீங்க சொல்றபடி பார்த்தா தமிழ் அவருக்கு பெரியம்மா மொழி ஆவுதுல்ல

    ReplyDelete
  17. //தமிழ்நாட்டின் முதல்வராக அன்புமணி வந்தால் நல்லது என நான் நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன?//

    மருந்து பொருள்கள் கட்டுபாட்டு சட்டம் என்று ஒன்று வந்தது.
    அதன் படி விலை அதிகமாக விற்கப்பட்ட மருத்து பொருள்கள் விலை குறைக்கப்பட்டு, அதுவரை அதிகமாக வாங்கிய பணம் அரசுக்கு திரும்ப தர வேண்டும் என உத்திரவிடப்பட்டது.

    ஆனால் பாருங்கள் அன்புக்கு சுவிஸ்ஸில் அன்பு காட்டிவிட்டார்கள் மருந்து கம்பெனிகள்

    ReplyDelete
  18. @வால்பையன்
    இதில் என்ன சந்தேகம், மௌசிதான் மெ ள என்று தமிழில் சேர்ந்தாற்போல் வரவே வராது. அதே போல ஔவையார்தான் ஒ ளவையார் என எப்போதுமே கிடையாது. ஆகவே யாராவது ஒ ளறுகிறான் என்றால் அவர்தான் உளறுகிறார்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  19. ஒபாமா விஷயத்தில் நான் காத்திருந்து பார்க்க விரும்புவேன். ஏனெனில் நான் சொன்னது சமீபத்தில் 1900-லிருந்து இன்றைய தேதி வரைக்கான அமெரிக்க ஜனாதிபதிகளை அவதானித்து கூறியதே. டெமாக்ரடிக்குகளில் ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்டை தவிர்த்து யாருமே தேற மாட்டார்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  20. 84. ஒரு வேளை இலங்கைப் பிரச்சனையின் போக்கு அங்கு வாழும் தமிழருக்கு எதிராய் போனால் அதனுடய தாக்கம் இங்கு எப்படியிருக்கும்?

    பதில்: ராஜரீதியான நிர்ப்பந்தங்கள் இந்தியாவின் தரப்பிலிருந்து செல்லும். அவை என்ன என்பதை வெளிப்படையாக எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க இயலாது.
    u r telling the answer like u r a indian prime minister,enna mayirai pudunkuveenga enru thiriyavillai

    ReplyDelete
  21. // eelavan said...

    84. ஒரு வேளை இலங்கைப் பிரச்சனையின் போக்கு அங்கு வாழும் தமிழருக்கு எதிராய் போனால் அதனுடய தாக்கம் இங்கு எப்படியிருக்கும்?

    பதில்: ராஜரீதியான நிர்ப்பந்தங்கள் இந்தியாவின் தரப்பிலிருந்து செல்லும். அவை என்ன என்பதை வெளிப்படையாக எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க இயலாது.
    u r telling the answer like u r a indian prime minister,enna mayirai pudunkuveenga enru thiriyavillai//

    Indian government will do all possible to protect the sri lankan tamils.
    The elected next government determined to safeguard the interest of srilankan tamils at any cost.
    now even jayalaitha starts saying about the protection of sri lankan tamils.
    bjp is also showing some sympathy towards srilankan tamils.

    congress and dmk are also supporting srilankan tamils.

    somthing will happen after the election provided the vote pattern in tamil nadu should show the full suppport towards the srilankan tamils.

    ReplyDelete
  22. எஸ்.வீ.சேகர் பிராமணர்களுக்கு 7% இடஒதுக்கீடு வாங்குவேன் என்கிறாரே? இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நீங்கள் பிராமணர்களுக்கு 7% இடஒதுக்கீடு கிடைத்தால் சந்தோஷம் அடைவீர்களா ?

    ReplyDelete
  23. சார், EVMல் எந்த அடிப்படையில் வேட்பாளர் பெயர் வரிசைப்படுததப்படுகிறது . உதா: தென்சென்னை தொகுதியில் அ இ அ தி மு க வேட்பாளர் பெயர் (ராஜேந்திரன்) முதலிலும் - கணேசன் பெயர் இரண்டாவதாகவும், பாரதி பெயர் மூன்றாவதாகவும் இருந்தது.alpahbetical வகையிலும், உதைக்கிறது.பிற வேட்பாள்ர் பெயர் தேடுவதற்க்குள் விடிந்துவிடும். மொத்தம் 42 பேர். இதற்கு எதேனும் அடிப்படை விதிகள் உள்ளதா? விளக்கவும். (அ) தெரிந்தவர் மூலம் கேட்டு விளக்கவும்.

    ReplyDelete