எம். கண்ணன்:
1. நேர்காணல், செவ்வி, பேட்டி - எது சரி? எது நன்றாக உள்ளது?
பதில்: எல்லாவற்றுக்கும் ஒரே பொருள்தானே?
2. தமிழ் சேட்டிலைட் தொலைக்காட்சிகளின் ஆரம்ப காலத்தில் மணிலாவிலிருந்தெல்லாம் சூடாக அரசியல் பேட்டி எடுத்து பரபரப்பு ஏற்படுத்திய (வாழப்பாடியார் பேட்டி ஞாபகமிருக்கிறதா?) ரபி பெர்நாட் இப்போது ஜெயாடிவியில் ஊசிப்போன பேட்டிகளை எடுத்து வருவது எதனால்? (ஜெயா டிவி ஞாயிறு இரவு 10மணி)
பதில்: நீங்கள் சொல்லும் ஆரம்ப காலத்தில் நான் தில்லியில் வசித்து வந்தேன். ஆகையால் அவற்றைப் பார்க்க எனக்கு வாய்ப்பே இல்லை. எது எப்படியானாலும் தற்போதைய பேட்டிகளை நான் அதிகம் பார்ப்பதில்லை.
3. சன் டிவி வீரபாண்டியன் பேட்டிகள் (சன் செய்திகள் - சனி இரவு 9 மணி) ஒரு காலத்தில் விறுவிறுப்பாக இருந்தன. ஆனால் அதுவும் இப்போது நமுத்துப் போய் உள்ளது எதனால்?
பதில்: பேட்டி காணப்படுபவரை சங்கடப்பட்த்தும் கேள்விகள், அவற்றைத் திறம்பட சமாளித்தல் ஆகியவையே ஒரு பேட்டியின் விறுவிறுப்புக்கு வழிகோலும். அதே கேள்விகளால் சேனலை கண்ட்ரோல் செய்பவர்களும் சங்கடம் அடைவார்கள் என்றால், பேட்டி காண்பவரை அடக்கி வாசிக்கத்தான் சொல்வார்கள். அதுதான் இங்கு காரணம்.
4. முன்பெல்லாம் விகடன், குமுதத்தில் வட இந்திய (மற்ற மாநில) முக்கிய அரசியல் தலைவர்களின் பேட்டியும் அடிக்கடி வரும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக பெரும்பாலும் தமிழக தலைகளுடனேயே குண்டு சட்டியில் குதிரை ஓட்டுகிறார்களே ஏன்?
பதில்: அந்தந்த பத்திரிகைகளின் முன்ன்னுரிமைகளில் வரும் மாறுதல்களே இதற்குக் காரணம்.
5. பத்திரிக்கைகாரர்களை சந்திக்காத ஒரே பிரதமர் மன்மோகன்தானோ? சோனியாவும் பேட்டிகள் ஏதும் (சமீபத்தில்) கொடுப்பதில்லையே ஏன்?
பதில்: இங்கு ஒரு நேர்காணலின் வீடியோவை பாருங்களேன். சோனியாவும் சரி, மன்மோகனும் சரி கேள்விகளுக்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை. மன்மோகன் பெயருக்குத்தான் பிரதமர் என்பதையும் மறக்கலாகாது. சோனியாவை க்வாட்ரோச்சி பற்றியெல்லாம் கேள்வி கேட்டால் அவர் காலி.
6. தமிழ்நாட்டில் கலைஞர், ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ் போன்ற தினசரி மாற்றி மாற்றி அறிக்கை விடும் அரசியல் வேறெந்த மாநிலத்திலும் நடப்பது போல் தெரியவில்லையே?
பதில்: அரசியல்வாதிகள் எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரித்தான் இருப்பார்கள். அந்தந்த உள்ளூர் பத்திரிகைகளைப் பார்த்தால் புரியும்.
7. ஜெயமோகன் தென் திருப்பேரை கோயில் சென்றது பற்றி எழுதியுள்ளாரே? படித்தீரா?
பதில்: அதைப் படிக்காமலா? எப்படியும் ஜெயமோகன் எனது பிளாக் ரோலில் இருக்கிறார். ஆகவே அவ்ர் எழுதுவது எதையுமே மிஸ் செய்வதில்லை.
8. ஞாநியை ஏன் எந்த டிவி சானலும் பேட்டி எடுக்க உபயோகிக்கவில்லை? நன்றாக பேட்டி எடுப்பாரே? (மாலன் சன் நியூசில் இருந்தவரை எடுத்த அரசியல் பேட்டிகள் வெறும் வழவழ கொழகொழ பேட்டிகள்)
பதில்: அதானே ஏன் செய்யவில்லை? நான் நினைக்கிறேன், ஞாநி சுலபத்தில் சமரசங்கள் செய்து கொள்வதில்லை. அவரை பயன்படுத்தாதற்கு அதுதான் காரணம் என நினைக்கிறேன்.
9. தமிழ் அரசியல் மற்றும் பத்திரிக்கை அரங்கில் யார் எடுத்த பேட்டிகள் உங்களுக்கு பிடிக்கும்? சிறந்த பேட்டி எடுப்பவர்? பேட்டி எடுக்கப்பட்டவர்?
பதில்: பேட்டி எடுப்பவர்கள் என்று தனியாக நான் பார்த்ததில்லை. அப்படியே பார்த்தாலும் அகில இந்திய அளவில் கரண் தாப்பரை மிகவும் பிடிக்கும். எடுக்கப்பட்டவர்கள் என்று பார்த்தால் எனக்கு பிடித்தவர்கள் சோ மற்றும் மோடி மட்டுமே. ஏன் என்று சொல்லவும் வேண்டுமா? Coffee with Anu எனக்கு பிடித்த நிகழ்ச்சி. ஆனால் இது அரசியல் பேட்டியில் வராது அல்லவா? மோடியை சோ பேட்டி கண்டால் நன்றாகவே இருக்கும் என நான் நம்புகிறேன்.
10. ஆங்கிலத்தில் கரண் தாப்பர் (cnn-ibn) எடுக்கும் காரசார பேட்டிகள், NDTVயில் ஷேகர் குப்தா எடுக்கும் 'Walk the Talk' பேட்டிகள் போல் தமிழில் எந்த சானலிலும் நல்ல அரசியல் பேட்டியாளர்களோ, பேட்டி நிகழ்ச்சிகளோ வருவதில்லையே ஏன்? (ஆட்டோ பயம்தான் காரணமா?)
பதில்: முந்தைய கேள்வியில் சொன்னதைப் போல கரண் தாப்பரை எனக்கு பிடிக்கும். தில்லியில் இருந்த சமயம் அவரோடு தொலை பேசியுள்ளேன். சேகர் குப்தா எடுத்த பேட்டிகள் பார்த்ததில்லை. இப்போதெல்லாம் பார்ப்பதெல்லாம் தமிழ்ச்சேனல்கள்தான். NDTV எல்லாம் பார்ப்பதில்லை.
சேதுராமன்:
1. அறிமுக இளைஞர் அரசியல்வாதிக்கு, அறிவு,அனுபவம், அடக்கம், பண்பு, பணம் மிகமிகத் தேவை! இவைகளில் முதல் நான்கும் மருந்துக்குக்கூட வருண் காந்தியிடம் இல்லை போல் இருக்கிறதே? தேறுவாரா?
பதில்: நாவடக்கமும் மிகவும் தேவை அரசியல்வாதிக்கு. யாகாவாராயினும் நாகாக்க என்பதை முக்கியமாக அவர்கள் மறக்கக் கூடாது. வருண் காந்தி இதை அறிவது முக்கியம். அதுவும் காங்கிரஸ் சார்பு செயல்பாட்டை உடைய தேர்தல் கமிஷன் இம்மாதிரி தருணத்துக்காகவே காத்திருக்கிறது என்பதையும் அவர் மறக்கக்கூடாது.
அதே சமயம் தேர்தல் கமிஷன் செய்வதும் அட்டூழியமே. தங்களுக்கு ஜூரிஸ்டிக்ஷன் இல்லாத இடத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது. வருண் காந்தியை தேர்தலில் நிறுத்தக்கூடாது என்று சொல்லும் அதிகாரம் அவர்களுக்கு கிடையவே கிடையாது. தங்களது பாரபட்சமற்றத் தன்மைக்கு பங்கம் விளைவித்து கொண்டதே பலன். 2002 குஜராத் தேர்தலின்போது மோடியை அப்போதைய தேர்தல் கமிஷனர் கோமாளி என மைக் ஆனாக இருக்கும்போதே வர்ணித்து அசடு வழிந்தார். அவரது மூக்கை குஜராத் மக்கள் நன்றாக உடைத்தனர். 2007 தேர்தலில் சோனியா காந்தி பேசியதை அடக்கி வாசித்து மோடியை மட்டும் சாடினார்கள். ஆனால் காங்கிரஸ்காரர்கள் என்ன பேசினாலும் கண்டு கொள்ளாமல் போவதே அவர்களுக்கு வாடிக்கையாயிற்று.
2. நாட்டில் பொதுத் தேர்தல் 2009ல் நடக்கும் என்று தெரிந்தும் கூட ஐ.பி.எல். போட்டிகளுக்கு நாள் குறிப்பிட்டார்கள். இவர்களுக்கு நாட்டில் அக்கரை இருந்தால் இந்த சமயம் பார்த்து, போட்டிகளை வெளி நாட்டில் வைத்து தேர்தலைப் புறக்கணிக்கலாமா?
பதில்: அரசியல் நிர்ணயச் சட்டத்தால் கட்டுப்படுத்தப்படும் தேர்தல்களின் காலகட்டம் மாற்ற முடியாதது. அப்போது ஐ.பி.எல். போட்டிகளை வைத்து கொண்டது தவறுதான். தேர்தல் தேதிகளை வேண்டுமானால் மாற்றுங்கள் என்பதௌ தின்னுக் கொழுத்த கொழுப்புடன் கூடிய அராஜகம். இப்போ வெளி நாட்டுக்கு போறாங்களாம். ஒழியட்டும்.
3. தமிழ் நாட்டில் கொலை, கொள்ளைகள் நிகழாத நாட்களே கிடையாது என்ற மாதிரி நாளுக்கொரு சம்பவம் நடந்து கொண்டே இருக்கிறது. இன்று பார்த்தீர்களா, நல்ல படிப்பும், ஏ.ஜி. காரியாலயத்தில் வேலை செய்பவரும் காரைத் திருடியகப்பட்டுக் கொண்டதை - இல்லாதவன்தான் திருடுகிறான் என்றால்,இவரது திருட்டு எதில் சேர்த்தி?
பதில்: கொலை, கொள்ளை ஆகியவை இருப்பதுபோலத்தான் இருந்து வருகின்றன. என்ன விஷயங்கள் உடனுக்குடன் வெளியாகின்றன. அவ்வளவே.
வெங்கி என்னும் பாபா:
1) 'டோண்டு' பெயர்க்காரணம் கூறுக?
பதில்: ஏற்கனவேயே இக்கேள்விக்கு பலமுறை பதிலளித்துள்ளேனே. உதாரணத்துக்கு இங்கே பார்க்கவும்.
2) தேர்தல் சமயத்தில் கிரிக்கெட் போட்டிக்கு பாதுகாப்பு தரவியலாத நிலைக்கு நமது நாட்டில் பாதுகாப்பு போதிய அளவில் இல்லை என்று கூறலாமா?
பதில்: இல்லை அதை நான் ஒத்து கொள்ளவில்லை.
3) IPL போட்டிக்கு வேறு நாட்டிற்க்கு மாற்றப்பட்டது, நரேந்த்ர மோடி கூறியது போல் நமது நாட்டிற்க்கு கேவலமா?
பதில்: இல்லை. மோடி கூறுவது எனக்கு ஏற்புடையது இல்லை. இது பற்றி நான் போட்ட பதிவில் கூறியதையே கன்ஃபர்ம் செய்கிறேன்.
4) சோ தேர்தல் பிரச்சாரத்தில் இடுபட்டுளார் என்று துக்ளக் ஆண்டுவிழாவில் அவர் கூற கேட்டேன். அவர் எந்தெந்த கட்சிக்கு பிரச்சாரம் செய்துள்ளார்?
பதில்: எனக்குத் தெரிந்து அவர் சமீபத்தில் 1971-லிருந்து தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசியிருக்கிறார். அந்த ஆண்டு பழைய காங்கிரஸ், சுதந்திரா கட்சி, ஜனசங் ஆகிய கட்சிகளுக்கும், 1977-ல் ஜனதா கட்சிக்கும், அதன் பிறகு பாஜகவுக்கும் பேசியிருக்கிறார். மற்ற கட்சிகள் விவரங்கள் கைவசம் இல்லை.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
சேதுராமன் கேட்ட முதல் கேள்விக்கான பதிலில்!
ReplyDeleteவருணுக்கு நாவடக்கம் தேவை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அது மறைமுகமாக வருணை ஆதரிப்பதாக தான் அர்த்தம் கொடுக்கிறது.
வருணுக்கு மனதளவில் கூட அந்த எண்ணம் தோன்றியிருக்கக்கூடாது என்பது தான் சரியான பதிலாக இருக்கும்.
தேர்தல் கமிசனையோ, காவல்துறையையோ குறை சொல்ல வேண்டியதில்லை. அது யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் ஜால்ரா அடிக்கும்.
//தேர்தல் தேதிகளை வேண்டுமானால் மாற்றுங்கள் என்பதௌ தின்னுக் கொழுத்த கொழுப்புடன் கூடிய அராஜகம். இப்போ வெளி நாட்டுக்கு போறாங்களாம். ஒழியட்டும்.//
ReplyDeleteஒரு முதலாளித்துவ ஆதரவாளர் பேசும் பேச்சா இது!
அவன் முதலாளி போட்ட காசை எடுக்க வேண்டும். உங்களை பற்றி அவனுகென்ன கவலை.
உலகமயமாக்கலை பற்றி அவ்வளவு பேசுறிங்க! தென் ஆப்பிரிக்காவும் உலகத்தில் தானே இருக்கு!
உங்களுகுள்ளும் கம்யூனிசம் ஒளிந்திருக்கும் போலவே! இருங்க அதியமான் அண்ணன்கிட்ட போட்டு கொடுகிறேன்.
//அகில இந்திய அளவில் கரண் தாப்பரை மிகவும் பிடிக்கும். எடுக்கப்பட்டவர்கள் என்று பார்த்தால் எனக்கு பிடித்தவர்கள் சோ மற்றும் மோடி மட்டுமே//
ReplyDeleteகரண் தாப்பர் மோடி-ஐ பேட்டி எடுத்ததை பார்த்தீர்களா? (last year.. during gujarat election time)
:)))))))))))))))
//கரண் தாப்பர் மோடி-ஐ பேட்டி எடுத்ததை பார்த்தீர்களா? (last year.. during gujarat election time)//
ReplyDeleteபார்க்கவில்லை, ஆனால் கேள்விப்பட்டேன். அதனால் என்ன கடைசியில் வெற்றி மோடிக்குத்தானே. ஆங்கில பத்திரிகையாளர்களை செருப்பால் அடித்து விட்டார்களே குஜராத்தியர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அகில இந்திய அளவில் கரண் தாப்பரை மிகவும் பிடிக்கும். //
ReplyDeleteகரண் தாப்பார் ஜெயலலிதாவை BBC Hard Talkகிற்காக எடுத்த பேட்டியை பார்த்திருக்கிறீர்களா? (பார்க்காவிட்டால் http://video.google.com/videoplay?docid=43516720611501596 )
இந்த பேட்டியை பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?
you can also find the transcript of karan's interview with jaya here,
ReplyDeletehttp://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/09/printable/040930_jayainterview.shtml