நிரந்தர பக்கங்கள்

4/24/2009

மூச்சுத் திணற வெயிலில் 1000 கிலோமீட்டர்களுக்கு மேல் கார்ப்பயணம்

கடந்த திங்களன்று (20.04.2009) காலை என் மனைவியும் மகளும் மிக விரும்பி கேட்டு கொண்டதில் ஒரு கார்ப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்தேன். அதன்படி காலை ஒன்பதரை வாக்கில் எனது காரில் புறப்பட்டோம். அதற்கு முன்னால் வியாழனன்று வரவேண்டிய டோண்டு பதில்கள் பதிவை முடிவாக எழுதி, வியாழன் காலை 5 மணிக்கு பப்ளிஷ் ஆகுமாறு முன்னமைவு (presetting) செய்து வைத்தேன்.

நேராக நாமக்கல் செல்ல முடிவு செய்தோம். இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் அங்கே பகல் 12 மணியளவில் சென்றபோது நரசிம்மர் கோவிலில் நடை சாத்தியிருந்தார்கள். அங்கு பிற்பகல் 4.30 வரை காத்திருக்க இயலாததால், மனமின்றி திருச்சி திரும்பியிருந்தோம். இது ரொம்ப நாளாக எங்களை உறுத்திய விஷயம். ஆகவே இம்முறை நேராகவே அங்கு சென்றோம். அங்கு போய் சேரும்போது மாலை ஐந்து மணி. பகல் முழுக்க அக்கினிக் காற்று. நாமக்கல்லில் காரிலிருந்து இறங்கி ஆஞ்சனேயர் கோவிலுக்கு வெறுங்காலுடன் சில நூறு அடிகள் சென்றதில் கால்கள் கொப்பளித்து விட்டன. பிறகு நரசிம்மர் சன்னிதிக்கு சென்று ஆசைதீர சேவித்து வந்தோம். கோவிலை விட்டு வரும்போது புழுதிக்காற்று ஆரம்பித்து தூறல்கள் விழுந்தன. அங்கிருந்து கிளம்பி கரூர் சென்றோம். அங்குள்ள பெருமாள் கோவிலுக்கு செல்லும் போது மணி ஏழடிக்க சில நிமிடங்கள் இருந்தன. காரிலிருந்து இறங்கி நான் பல படிகள் எறிச்செல்வதற்கும் உள்ளே அன்றைய தினத்திற்காக திரையை சாத்துவதற்கும் சரியாக இருந்தது. அக்கோவிலில் ஏழுமணிக்கே நடை சாத்துவார்கள் என்பது எனக்கு அப்போதுதான் தெரிந்தது. ஒரே ஏமாற்றம்.

அங்கேயே ரூம் போட்டு தங்கி அடுத்த நாள் காலை திரும்ப முயற்சி செய்யலாம் என நினைக்கையில் சொல்லி வைத்தாற்போல் மின்சாரம் கட். உள்ளூர்க்காரர்கள் சொற்படி திரும்ப எப்போது மின்சாரம் வரும் எனச்சொல்ல இயலாத நிலை. ஆகவே நேரே திருச்சிக்கே வண்டியை விடச்சொன்னேன். கரூர் ஊரெல்லை தாண்டியதும் பயங்கர சூறாவளி மழை. வழியில் எந்த ஊரிலும் மின்சாரம் இல்லை. மரங்கள் காற்றில் பேயாட்டம் போடுகின்றன. நடுவில் குளித்தலையில் ஒரு டிபன் ஹோட்டலில் இன்வெர்டர் மூலம் விளக்கு எரிந்தது. அங்கு லைட்டாக டிபன். திருச்சி செல்லும்போது இரவு பத்துக்கு மேல் ஆகிவிட்டது. அஜந்தா ஹோட்டலில் ரூம் போட்டுவிட்டு அருகில் இருந்த ப்ரௌசிங் கஃபேக்கு சென்று எனது மின்னஞ்சல்களை பார்த்தேன். நல்ல வேளையாக மொழிபெயர்ப்பு வேலைகள் எதுவும் காத்திருக்கவில்லை.

அடுத்த நாள் காலை ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை திருப்தியாக சேவித்தோம். திருச்சி தொகுதியில் வேட்பாளராக அன்று விண்ணப்பிருந்த அதிமுகவின் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கோவிலில் வந்து பூஜை செய்ததில் பொதுமக்களுக்கு சிறிது தாமதம் ஏற்பட்டது. திருச்சிக்கு திரும்பும்போது மணி 11.30 ஆகிவிட்டது. குடும்பத்தை ரூமுக்கு அனுப்பிவிட்டு ப்ரௌசிங் மையத்துக்கு சென்றேன். வாடிக்கையாள் ஒரு பெரிய மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். அதை ஜெர்மனில் மொழிமாற்றம் செய்து அவருக்கு அனுப்ப சரியாக ஒரு மணி நேரம் ஆயிற்று. (840 ரூபாய்க்கு பில்).

அஜந்தா ஹோட்டலிலேயே சாப்பிட்டு விட்டு அங்கிருந்து நாகைக்கு புறப்பட்டோம். நடுவழியில் எதிர்ப்பாராத நிலையில் தஞ்சை மாரியம்மன் கோவில் தரிசனம் கிடைத்தது. நாகைக்கு செல்லும்போது மாலை ஐந்தரை போல ஆகிவிட்டது. சௌந்திரராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று சேவித்தோம். நான் சமீபத்தில் 1953-ல் அக்கோவிலை பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் இடையில் பல மாறுதல்கள். உள்ளூர் பட்டாசாரியாரிடம் (30 வயது இளைஞர்) இது பற்றி பேசும்போது அவரிடம் இதைக்குறிப்பிட்டேன். எப்போது நான் கடைசியாக அங்கு வந்தேன் என அவர் கேட்டதற்கு சமீபத்தில் 1953-ல் என்று கூற, அவர் ஒருமாதிரி என்னைப் பார்த்தவாறு ஜாக்கிரதையாக ஆனால் வேகமாக் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

மறு நாள் காலை சென்னைக்கு புறப்பட்டோம். காரைக்கால் வழியாக செல்வதுதான் குறுக்கு வழி, ஆனால் எனது காருக்கு பாண்டிச்சேரிக்கான பெர்மிட் இல்லை. அது வேண்டுமென்றால் திண்டிவனத்துக்கு அருகில்தான் போட்டு கொள்ள வேண்டுமாம். பாண்டி அரசின் இந்தப் போக்கு புரிந்து கொள்ள இயலவில்லை. இது சம்பந்தமாக நான் சில ஆண்டுகளுக்கு முன்னால் அப்போதைய பாண்டி முதல்வரிடமே பல இடங்களில் பெர்மிட் வழங்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டு கொண்டேன். அவரும் ஆவன செய்வதாக உறுதியளித்தார். இப்போது அவர் பதவியே காலி. இங்கும் அது பற்றிய எனது புகாரை மறுபடி பதிவுசெய்வேன்.

சுண்டைக்காய் அளவுள்ள இந்த மாநிலத்துக்கு இதில் என்ன காண்டு இருக்க முடியும்? பண வரவுதானே. வாங்கித் தொலைக்காமல் என்ன பிடுங்குகிறார்கள்? திருச்சி செல்ல வேண்டிய நான் இதற்காக திண்டிவனத்தில் டைவர்ட் ஆகி பாண்டி தரப்பாக சென்று பெர்மிட் போட்டு கொண்டு பிறகு திரும்பவந்து திருச்சி செல்வது என்பது நடக்கக்கூடிய காரியமா? அல்ல்து தஞ்சையிலிருந்து ஒருவர் காரைக்கால் செல்ல வேண்டுமானால் அவர் திண்டிவனத்துக்கு வந்து சுற்றி செல்லவியலுமா? யாராவது இது சம்பந்தமாக அவர்கள் கையை முறுக்கினால் தேவலை.

நாகையிலிருந்து நாகூர், சன்னா நல்லூர் என்றெல்லாம் சென்று மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், பண்ருட்டி என்ற ரூட்டில் பயணித்து சென்னை திரும்பும்போது புதன் மாலை.

நடுவில் எதிர்பாராத போனசாக கூதனூர் சரஸ்வதி கோவிலிலும், திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவிலிலும் சென்று சேவித்தோம். இந்த லலிதாம்பிகை கோவிலில் அம்பிகைக்கு தங்க கொலுசு போட்டிருக்கிறார்கள். பங்களூருவை சார்த்த மைதிலி ராஜகோபாலாச்சாரி அவர்கள் கனவில் இந்த அம்பிகை வந்து தனக்கு தங்கக் கொலுசு போடும்படி அவரிடம் கேட்டிருக்கிறார். ஒரு ஆசாரமான வைணவக் குடும்பத்தை சார்ந்த மைதிலி அவர்களுக்கு ஒரே ஆச்சரியம். முதல் எந்த ஊர்கோவிலில் உள்ள அம்மன் என்பது அவருக்கு தெரியவில்லை. பிறகு எதேச்சையாக ஒரு பத்திரிகையில் பல அம்பிகைக் கோவில்களில் உள்ள அம்பாள்கள் படங்களைப் பார்த்திருக்கிறார். அவற்றில் திருமீயச்சூர் லலிதாம்பிகையின் அம்மனை பார்த்ததுமே அவருக்கு விளங்கி விட்டது, கனவில் வந்தது இந்த அம்மனே என்று. ஆகவே அக்கோவிலுக்கு சென்று தனது ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். கோவிலை சார்ந்தவர்கள் முதலில் அவர் சொன்னதை நம்பவில்லை. கொலுசு போடும்வசதிகள் சிலையின் கால்களில் இல்லை என ம்றுத்துள்ளனர். ஆனால் இப்பெண்மனி பிடிவாதமாக இருக்க, அவர்கள் சிலையின் கணுக்காலை ஆராய்ந்ததில் கொலுசு போடும் அளவுக்கு அதில் துவாரங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். பிறகு அப்பெண்மணி தான் கொண்டு சென்ற கொலுசை அணிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் இக்கோவிலுக்கு சென்றிருந்தோம். அன்று விசேட நாளாகையால் ஒரே கும்பல். அம்மனை அருகிலிருந்து தரிசிக்க இயலவில்லை. பிறகு காரில் கும்பகோணம் திரும்பும் சமயம் கோவிலின் இந்த கதையை அதன் தலப்புராணத்தில் கண்டதும் துள்ளி குதித்தேன். வீட்டம்மாவிடம் சந்தேகத்துடன் கேட்டபோது இந்த மைதிலி ராஜகோபாலாச்சாரி தனது ஒன்றுவிட்ட சித்தி என்று கூறினார். அடடா இது தெரிந்திருந்தால் அந்த கொலுசையும் பார்த்திருந்திருக்கலாமே என அங்கலாய்ப்பு ஏற்பட்டது. அடுத்த முறை பார்த்து கொள்ளலாம் என அப்போது விட்டிருந்தோம்.

இப்பயணத்தில் நாங்கள் எதிர்ப்பாராத தருணத்தில் இந்த கோவில் எங்கள் பாதையில் வந்தது அம்பிகையின் அருளே. இம்முறை கோவில் அர்ச்சகரிடம் இது பற்றி கூறி இந்த மைதிலி அவர்கள் எனது சின்ன மாமியார் என கூறினேன். அவர்களும் சந்தோஷமாக எங்களுக்கு தீபாராதனை வெளிச்சத்தில் அக்கொலுசுகளை நன்கு காட்டினார்.

சும்மா சொல்லப்படாது. பயணம் முழுக்க அனல் காற்றுதான். மூச்சு திணறியது. இருந்தாலும் எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்பது லலிதாம்பிகையின் ஆசிகளால்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

27 comments:

  1. பாண்டிசேரி பர்மிட் வாங்க ஊர் நுழைவு எல்லையிலேயே டோல்கேட் போட்டுவிடலாம், ஆனால் பாண்டி போலிஸ்காரர்கள் எப்படி தொப்பையை வளர்ப்பதாம்.

    பாண்டி யூனியன் பிரதேசமாக இருக்கலாம், ஆனால் அது இந்தியாவில் தான் இருக்கிறது.

    தேசியகுணம் மாறுமா?

    ReplyDelete
  2. "நடுவில் குளித்தலையில் ஒரு டிபன் ஹோட்டலில் இன்வெர்டர் மூலம் விளக்கு எரிந்தது. அங்கு லைட்டாக டிபன்"

    டோண்டு சார் அந்த டிபன் சென்டர் ஐயர் நடத்துவதா?

    டோரவின் பயணங்கள் மாதிரி
    இது டோண்டுவின் பயணங்கள்.

    :-))))))))))))

    me the First??

    ReplyDelete
  3. ராஜ சுப்ரமணியம்April 24, 2009 12:09 PM

    நல்ல பதிவு. மற்ற பயணிகளுக்கு மிகவும் பயன் தரும்.

    திருமயிச்சூர் எங்கு உள்ளது? அங்கு போய் ஸ்ரீலலிதாம்பிகையை சேவிக்க ஆசையாக உள்ளது.

    ReplyDelete
  4. IYYA

    THANGAL ITHHANAI KOVILKAL THARISATHHU ENNAVO NANGAL THARISITHHATHU POLAVEY IRUNTHATHU.
    MIKKA MAGIZCHI.

    KARUNAKARAN

    ReplyDelete
  5. \\சமீபத்தில் 1953-ல் என்று கூற, அவர் ஒருமாதிரி என்னைப் பார்த்தவாறு ஜாக்கிரதையாக ஆனால் வேகமாக் அந்த இடத்தை விட்டு அகன்றார்.//

    இப்படி 1953 ஐ எல்லாம் சமீபத்தில் நீர் விளித்தால் iyer என்ன அஞ்சு வயசு குழந்தை கூட உம்மை பார்த்தல் ஓடும்.

    சரியான குடாக்கு ஆகா இருக்கீரீரே. (குடாக்கு என்றால் என்ன என்று சோவிடம் கேட்கவும்)

    ReplyDelete
  6. @வால்பையன்
    நானும் அதைத்தானே ரங்கசாமி அவர்களிடம் வலியுறுத்தினேன். மனித நல்லபடியாகத்தான் பதிலளித்தார். ஆனால் பலன் ஏதும் லேது.

    நான் கேள்விப்பட்டது என்னவேன்றால் காரைக்கால், பாண்டி எல்லைகளில் இருக்கும் உள்ளூர் டாக்சிக்காரர்கள் தரும் பிரஷரால்தான் நிலைமை அப்படியே இருக்கிறது என்பதுதான். வெளியூர்க்காரர்கள் தாங்கள் பயணம் செய்த கார்களை பார்டருக்கு வெளியே நிறுத்திவிட்டு யூனியன் பிரதேசத்துக்குள் செல்ல அந்த டாக்சிகளை உபயோகிக்கும் கட்டாயத்துக்கு ஆளாகின்றனர்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. @ராஜ சுப்பிரமணியம்
    மன்னிக்கவும் அந்த ஊரின் பெயர் திருமீயச்சூர். பிழையாக எழுதிவிட்டேன். உடனே சரி செய்து விடுகிறேன்.

    இக்கோவில் வேளாக்குறிச்சி மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பேரளம் புகைவண்டி நிலையத்துக்கு மேற்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பேரளம் பேருந்து நிலையத்திலிருந்தும் கிட்டத்தட்ட அதே தூரம்தான். பேரளம் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் ச்ல்லும் வழியில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில் பயணீத்தாலும் பேரளத்தை அடையலாம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. @புதுவை சிவா
    ஐயர் நடத்தும் ஹோட்டல் என்றுதான் நினைக்கிறேன். மெயின் ரோடிலேயே உள்ளது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  9. நீங்க உங்க சொந்த காரைத்தானே உபயோகித்து இருப்பீர்கள். அதற்கு பர்மிட் தேவையில்லையே...

    ReplyDelete
  10. நிஜமாகவே உங்களுக்கு தெரியாதா இந்த பெரிசு டோண்டு ராகவன் “எனது” கார் என்று வாடகைக்காரைத்தான் கூறும் என்று?

    பிளாக்கர் சந்திப்புகள் பற்றிய பதிவுகளிலும் எழுதியிருக்குமே “எனது” மின்ரயில்/பஸ் என்று? ஊருக்கு புதுசா நீங்க?

    அன்புடன்,
    முரளி மனோகர்

    ReplyDelete
  11. "ஸ்ரீரங்கத்துலேந்து திருச்சிக்கு செல்லும் போது"

    ஏதோ இரண்டு தனி ஊரு மாதிரி எழுதி இருக்கீங்க ! ஸ்ரீரங்கம் மொத்தமா 2 கிலோமீட்டர் இருந்தா பெருசு !

    ReplyDelete
  12. @மணிகண்டன்
    நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் நான் சொல்வது என்னவென்றால் கோவில் தரிசனம் முடிந்து திருச்சிக்கு திரும்பிய நேரத்தை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. இயா
    தங்கள் இத்தனை கோவில்கள் தரிசத்து என்னவோ நங்கள் தரிசித்து போலவே இருந்தது .
    மிக்க மகிழ்ச்சி .
    *********************
    கருணாகரன்
    நீங்கள் கூகிள் tranlitaration செய்தல் மேலே உள்ள தமிழ் செய்தி கிடைக்கும்
    எங்களுக்கு படிக்க ஏதுவாக இருக்கும் !!
    http://www.google.co.in/transliterate/indic/Tamil
    IYYA

    THANGAL ITHHANAI KOVILKAL THARISATHHU ENNAVO NANGAL THARISITHHATHU POLAVEY IRUNTHATHU.
    MIKKA MAGIZCHI.

    KARUNAKARAN

    ReplyDelete
  14. ஏசி காரா நார்மல் காரா, வெயில்ல எப்படி தான் ட்ரிப் எல்லாம் போறிங்களோ? என்னதான் கோயில்ன்னாலும்..வெயிலுக்கு சாமியே லீவு எடுக்குற நேரம்

    ReplyDelete
  15. @அக்னி பார்வை
    ஏசி கார்தான். ஆனால் ஏசி போட நான் அனுமதிப்பதில்லை. ஏனெனில் அது பல தொல்லைகளையும் உடல் உபாதைகளையும் கொண்டுவரும். காசு கொடுத்து தேள் கொட்டு வாங்கிய கதையாகிவிடும்.

    காரில் போகும்போது ஜாலியாகத்தான் இருக்கும் ஆனால் கீழே இறங்கி கோவில்களுக்கு செல்லும்போதும் ஏசியை கூடவேவா கொண்டு செல்ல முடியும் (ஒரு சூர்யா விளம்பரப்படத்தில் காட்டியது போல)?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  16. சௌந்திரராஜ பெருமாள் கோவிலை சுற்றி தான் என் இளமை பொழுதுகள் கழிந்தன.
    30 வயது பட்டாச்சாரியார் பெயர் கேட்கவில்லையா?

    ReplyDelete
  17. //கரூர் ஊரெல்லை தாண்டியதும் பயங்கர சூறாவளி மழை. வழியில் எந்த ஊரிலும் மின்சாரம் இல்லை. மரங்கள் காற்றில் பேயாட்டம் போடுகின்றன//

    1000 கீ.மீட்ட்ரும் வெயில்னா எப்படி கொஞ்சம் மழையும் பெஞ்சுருக்குல.

    ReplyDelete
  18. @வடுவூர் குமார்
    பெயரையெல்லாம் கேட்கவில்லை, அதற்குள் அவர் அங்கிருந்து வேகமாகச் சென்று விட்டார். :))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  19. A car, a good bank balance, and retired life with unlimited time at your disposal - are needed to go to all the temples you had visited. Plus that temple should have a connection with a family attachment of yours so that your bhakthi will grow more and more. You will be interested to worship that goddess.

    Ambikai, maariamman, nammaazvaar, then thiruppeerai - a heady mixture of bhakti.

    All gods are one - isnt Raagava...? Then you can also go to Velankanni and Nagore which are not far away. And become a role model of matha nallininakkanam.

    You have a long way to go indeed! But do you have time now before you end your ultimate revolution?

    ReplyDelete
  20. //A car, a good bank balance, and retired life with unlimited time at your disposal - are needed to go to all the temples you had visited.//

    என்னது, ரிடயர்ட் வாழ்க்கையா? யார் சொன்னது? இப்போதும் கணினியில் ஒரு நாளைக்கு 15 மணிநேர வேலை செய்கிறேன். இந்த டூரின் போதும் வாடிக்கையாளரின் கோப்புகளை மொழிபெயர்க்க வேண்டியதாயிற்றே. அதையும் குறிப்பிட்டுள்ளேனே.

    கடவுள் அருள் இப்படியே இருந்தால் எனது கடைசி மூச்சு வரை வேலை செய்வேன். சங்கராபரணம் படத்தில் வரும் சங்கர சாஸ்திரிகளின் சாவுதான் என்னை பொருத்தவரை உத்தமமான சாவு.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  21. thalaippai paarthaal yedho paalaivanathil ottagathil payanam seydhadhu pola buildup

    ReplyDelete
  22. I havent seen that film. How did that priest die, which you like to have for yours?

    ReplyDelete
  23. @அனானி
    சங்கர சாஸ்திரி என்பவர் வைதீக காரியம் செய்யும் சாஸ்திரி அல்ல. பாடகர்.

    சங்கராபரணம் படத்தில் வரும் இப்பாட்டை சுட்டவும், http://www.youtube.com/watch?v=vnwG4XetYjM
    டேப் முடிந்த அடுத்த சில நொடிகளில் அவர் மேடையிலேயே சாகிறார்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  24. Nalla padivu sir. But in current season/situations why to travel by car so long. I prefer to reach a centrally located place like trichy by train and then take a car from there. Its safe and comfortable. Hope you consider this some time.

    -Swami

    ReplyDelete
  25. http://www.google.co.in/transliterate/indic

    உங்களது ஆலோசொனைக்கு மிக்க நன்றி

    KARUNAKARN

    ReplyDelete
  26. Thanks to you, I watched/listened to the song. A good song, both male and female voices, and realistic performances.

    So, he dies on the stage, in harness, as they say, i.e doing his own job, here, doing a thing closer to his heart.

    I now remember I had seen the film when I was small. I remember the singer had some encounter with a woman of prostitute class - such a class is available in AP - freely during the British Raj (See the film Devdasi) and now, clandestinely.

    He is rescued, or rather, his song was completed by the child born of that low class woman, Manju Bargavi!!

    What an irony, Raagavan! Indeed, of all the bloggers I have been reading, it is you that need such a divine death. Atonement for your upper-casteism!

    Get you saved by a low class person at your last hour of breath. Isn't your wish? Vaikuntam is sure for you!

    Hope that comes true! Wish your mixture of gods and goddesses - at least one of them grant you that wish - to die in the lap of a lowest human beings, condemned by your forefathers!

    My name is Vaghulabaranan. You can call me Vaghul.

    ReplyDelete
  27. வேளாக்குறிச்சி மாவட்டமல்ல!!! வேளாக்குறிச்சி ஆதீனம். ராகவன் நீங்கள்
    எங்களூருக்கு போவது தெரிந்திருந்தால் (வாய்ப்புகள் இல்லை என தெரியும்)
    அங்கே இருக்கும் வீற்றிருக்கும் பெருமாள் கோவிலுக்கு உங்களை
    போக கேட்டுக் கொண்டிருக்கலாம். எனக்கு கடவுள் விடயங்களில் ஆர்வம்
    கிடையாது; இருப்பினும் எனது குடும்பத்து கோவிலாயிற்றே! மேலும்
    நீங்கள் பெருமாளை சேவிப்பவர் இல்லையா..

    எனது எள்ளு தாத்தா
    மூங்கில் புதரில் பெருமாளை கண்டெடுத்த இடத்தில் கட்டப்பட்ட கோவில், அருகே
    அழகான இலுப்பை தோப்பு, தென்னந்தோப்பு - பட்டாச்சாரியார் இல்லம்.

    நன்றி திருமீயச்சூர் போனதற்கு. மேலும் இது எமன் பிறந்ததாகச் சொல்லப்படுகிற
    ஊர்!


    **
    வாசன்

    நியு மெக்ஸிக்கோ யு எஸ் ஏ

    ReplyDelete