நிரந்தர பக்கங்கள்

5/18/2009

ரொம்ப நாளைக்கு அப்புறம் மொக்கை

மின்னஞ்சல் மூலமாக எனக்கு இன்று வந்த நல்முத்துக்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

தத்துவம் எண் 1001:
வாழ்க்கை என்பது பனைமரம் போல; ஏறினா நுங்கு, விழுந்தா சங்கு!

தத்துவம் எண் 1002:
வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயம்தான் பெரிய மாற்றத்தை உருவாக்கும் எடுத்துக்காட்டு. நமீதா எவ்ளோ பெரிய நடிகை, ஆனா அவங்க பாப்புலர் ஆனதுக்கு அவங்களோட சின்ன சின்ன டிரெஸ்தான் காரணம் என்பதை நினைவில் கொள்க.

தத்துவம் எண் 1003:
பயம்தான் தோல்விக்கு முக்கியக் காரணம். அதனாலே இனிமே கண்ணாடியை பாக்காதீங்க.

தத்துவம் எண் 1004:
வாழ்க்கை என்பது ரயில் மாதிரி. முதல் இரண்டு பெஞ்ச் வி.ஐ.பி.; நடுவில் ரெண்டு பெஞ்ச் ஜெனெரல்; கடைசி ரெண்டு பெஞ்ச் ஸ்லீப்பர்.

தத்துவம் எண் 1005:
ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள், பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்.

தத்துவம் எண் 1006:
வெற்றியைத் தேடி அலைந்தபோது “வீண்முயற்சி” என்றவர்கள், வெற்றியை அடைந்ததும் “விடாமுயற்சி” என்றர்கள்.

தத்துவம் எண் 1007:
நீ செய்யும் தவறுகூட புனிதம் ஆகும், அதை நீ ஒப்புக் கொள்ளும்போது.


மொக்கை எண் 2001:
3GAPA6 அப்படீன்னா என்ன? தெரியல்லியா இது கூட? ஐயே, மூஞ்சியைப் பாரு.

மொக்கை எண் 2002:
வாடிக்கையாளர்: இந்த டிவியின் விலை என்ன 10,000 ரூபாயா? அப்படி என்னய்யா ஸ்பெஷல் அதுல?
சேல்ஸ்மென்: டிவியில விஜய் படம் வந்தா, அதுவா சேனல் மாறிடும்.

மொக்கை எண் 2003:
எங்க ஊர்ல நிறைய படிச்சவர் ஒருத்தர் இருந்தாரு. ஒரு ஊருக்கு அவர் போனபோது பெனட்றில் கொடுத்தாங்க, இன்னொரு ஊரிலேயோ களைக்கோடின் தந்தாங்களாம். ஏன்னாக்க, கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிரப்பு.

மொக்கை எண் 2004:
பிரும்மச்சாரியின் தினசரி பிரார்த்தனை என்னவென்றால், “கடவுளே எனக்குன்னு ஒண்ணும் வேண்டாம், என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் ஃபிகர் மருமகளா வரட்டும்”.

மொக்கை எண் 2005:
ஒரு பாம்பு வந்து உங்களை கடிச்சா என்ன பண்ணுவீங்க?
கண்டிப்பா அதை சாரி கேக்கச் சொல்லுவேன்.

மொக்கை எண் 2006:
ANGRY எப்போ இனிப்பா மாறும்? J-ஐ சேர்த்துக் கொண்டால்.


அன்புடன்,
டோண்டு ராகவன்

11 comments:

  1. இந்தப்பதிவு ரொம்ப அவசியம் :(-

    ReplyDelete
  2. nee podurathellaam mogga thaane! athula nompa naalaikkappuram????

    vekkamaa illa?

    ReplyDelete
  3. யாம் படித்த பதிவுகளிலே இப்பதிவு போல் மொக்கை / அறுவையானதை எங்கும் காணோம்..

    உமது பெயரை..."டோண்டு ராகவன்" என்பதற்கு பதிலாக "மகா மொக்கை ராகவன்" என்று திருத்திக்கொள்ளவும்..

    ReplyDelete
  4. தத்துவம் 1002 , ஆகா, ஓகோ, பேஷ்,பேஷ்,

    ReplyDelete
  5. நல்லாருக்கு மொக்கைகள்

    ReplyDelete
  6. Idhu Special "mokkai" nu vena solli irukkalam..Aana Romaba naal apparam nu sonnadhu over...Yellame ippadi thane iruku..Krish

    ReplyDelete
  7. mudiyala... sir ennala mudiyala....

    ReplyDelete
  8. டிவியில விஜய் படம் வந்தா, அதுவா சேனல் மாறிடும்.///////////


    இந்த டிவி எங்கு கிடைக்கும்...

    ReplyDelete
  9. நல்லாருக்கு மொக்கைகள்

    ReplyDelete