நிரந்தர பக்கங்கள்

6/04/2009

டோண்டு பதில்கள் - 04.06.2009

எம்.கண்ணன்:

1. நாணயங்களில் முன்பெல்லாம் தலை (சிங்க இலச்சினை) ஒரு பக்கமும், பூ (காசு மதிப்பு எண்) இன்னொரு பக்கமும் இருந்தது. ஆனால் தற்போது சிங்க இலச்சினை மற்றும் காசு எண் இரண்டும் ஒரே பக்கம் இருக்கிறதே? ஏன்? பூவா தலையா போடும்போது எதை பூ என்றும் தலை என்றும் கொள்வார்கள்?
பதில்: இதெல்லாம் ஒரு பிரச்சினையா? சிங்கமுகம் இருக்கும் பக்கம் தலை, அது இல்லாத பக்கம் பூ. ரொம்ப சிம்பிள் சார். என் நண்பன் அறுவைதிலகம் வெங்கடரமணி இச்சமயம் நினைவுக்கு வருகிறான். ஒரு நாள் சீரியசாக யோசித்த வண்ணம் கூறினான், “மச்சி, உலகில் இருவகை மனிதர்கள்தான் உள்ளனர்”. அது என்னப்பா இருவகை எனக் கேட்டதற்கு, “ஒரு வகையினர் உலகில் இருவகையின மனிதர்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள், இன்னொரு வகையினர் அவ்வாறு கூறுவதில்லை” என பிறாண்டினான்.

2. முன்பெல்லாம் நாணயங்களில் ஏதாவது ஒரு தேசத் தலைவர் அல்லது நாட்டின் வரைபடம் அல்லது திட்டம் போன்றவை (பூ) ஒரு பக்கம் இருக்கும். தற்போது இரட்டை விரலும், பிளஸ் (அல்லது சிலுவை?) போல ஏதோ முத்திரைகள் வருகின்றனவே? இதை யார் முடிவு செய்கிறார்கள்? அரசு அதிகாரிகளா? இல்லை எந்தத் துறை அமைச்சர்? இல்லை சோனியாவை திருப்திப்படுத்தவா?
பதில்: மற்ற நாணயங்கள் பற்றி தெரியாது. ஆனால் இப்போது வெளிவந்திருக்கும் பத்து ரூபாய் நாணயத்தின் வடிவமைப்பு நிதி அமைச்சகத்தால் National Institute of Design வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆக அதன் கேவலமான டிசைனுக்கு National Institute of Design மட்டுமே பொறுப்பு.

எது எப்படியாயினும் இம்மாதிரி பழைய காலத்து ஓட்டை காலணாவை நினைவுபடுத்தும் வடிவமைப்பு சகிக்கவில்லை என்பதே நிஜம். ஒட்டுமொத்த பொறுப்பு நிதியமைச்சகத்துக்குத்தான் இருகிறது. சோனியாவை திருப்திப்படுத்தவா என்பது இக்கேள்விக்கு தேவையற்ற விஷயம்.

3. ஜட்டிகளில் சிறந்தது எது? ஏன்? டான்டெக்ஸ் எலாஸ்டிக்? பட்டா பட்டி அண்டர்வியர்? பாதசாரி கடைகளில் விற்கும் 10 அல்லது 15 ரூபாய் ஜட்டிகள்? வி.ஐ.பி? அல்லது கோமணம்? அல்லது காத்தாட இருப்பது (கோடையில்)?
பதில்: தம்பியை சைட் வாங்கவிடாது தடுக்கும் எந்த வடிவமைப்புமே சிறந்ததே. கோமணம் பல வேறுவகைகளில் தொல்லை தரும். பட்டாபட்டி அண்டர்வேர், அல்லது காற்றோட்டமா விடுவது பாவமூட்டையை சுமக்க வைக்கும்.

4. 86-ஆம் பிறந்த நாள் காணும் கலைஞர் கருணாநிதிக்கு தற்போது என்ன சொல்லி வாழ்த்துவீர்கள்? ஏன்? 86 வயது ஆகும் போது அவர் அளவிற்கு உழைக்க உடல்வலுவும், மன உறுதியும், ஞாபக சக்தியும் நமக்கெல்லாம் (உங்களுக்கும் கூட) இருக்குமா?
பதில்: வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் என சொல்லிவிட்டு போக வேண்டியதுதான். நீங்கள் குறிப்பிட்ட அவரது எல்ல நல்ல பாயிண்டுகளும் அவர் வயதை அடையும்போது எனக்கும் இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.

5. நிகழ்ச்சிகளிலோ, பேட்டிகளிலோ கமல்ஹாசன் பேசுவது பல சமயம் புரிவதில்லையே? எப்படி இருந்த கமல் ஏன் இப்படி ஆகிவிட்டார்?
பதில்: ஏன் வாய்க்குள்ளேயே பேசிக் கொள்கிறாரா? நான் கவனிக்கவில்லையே?

6. உங்கள் மாப்பிளையுடன் உங்கள் உறவு (மாமனாராக) எப்படி? மாமியார் மருமகள் உறவுக்கும் மாமனார் மருமகன் உறவுக்கும் என்ன வித்தியாசத்தைக் காணுகிறீர்கள்? எல்லா விஷயங்களையும் அரட்டை உண்டா? இல்லை ஒருவித டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுவீர்களா?
பதில்: ரொம்பவும் பெர்சனலான கேள்வி. வேறு ஏதாவது மாற்றி கேட்கவும்.

7. முகச் சவரம் செய்ய சரியான பிளேடு (தற்போது மார்க்கெட்டில் கிடைப்பதில்) எது? ஒரு சிலருக்கு மட்டும் பளபள என முகச் சவரம் செய்த பிறகு இருக்கிறது. சிலருக்கு எந்த பிளேடை உபயோகித்தாலும் ஒரு சில மணிநேரங்களில் கறுப்போடுகிறதே? தினமும் சவரம் செய்வது போர் இல்லையோ?
பதில்: அவரது ஹார்மோன் அளவை பொருத்தது. எனக்கு பிடிப்பது ஜிய்யெட் (Gillette).

8. இகாரஸ் பிரகாஷ் என்ற மிகப் பிரபலமான பதிவர் எங்கிருக்கிறார் தற்போது? திருமணத்திற்கு பிறகும், குழந்தை பிறந்தவுடன் ஆளையே காணோமே? அவர் தானே கில்லி தளத்தை நடத்தி வந்தது? இட்லி வடை குழுவில் ஒரு கோயிஞ்சாமியாகவும் இருந்தார் அல்லவா?
பதில்: சமீபகாலமாக நான் அவரைப் பார்க்கவில்லை. கில்லி தளத்தை நடத்தியது அவரே. மற்ற விஷயங்கள் பற்றி தெரியாது. அவரது வலைப்பூவிலும் அவர் அக்டோபர் 2008-க்கு பிறகு பதிவு எதுவும் போடவில்லை. இப்போதுதான் அவருடன் மொபைல் மூலம் பேசினேன். மனிதர் தனது சொந்த தொழிலில் படுபிசி. ஆகவே வலைத்தளங்களுக்கு வருவதில்லை. மற்றப்படி மிகவும் நலமாக இருக்கிறார்.

9. உங்கள் கணிப்பில், தற்போதைய வாழ்க்கை முறையில் ஒரு மிடில் கிளாஸ் ஆசாமி சென்னையில் வசிக்க மாதம் மினிமம் எவ்வளவு பணம் தேவைப்படும் ? (தங்க, உணவு, போக்குவரத்து, துணி, இதர செலவுகள்)? தனியே இருந்தால் எவ்வளவு தேவைப்படும்? குடும்பத்தினருடன் இருக்க (மனைவி, குழந்தைகள்) எவ்வளவு தேவைப்படும்?
பதில்: என் குடும்ப செலவுகளிலிருந்து கூற முயற்சிக்கிறேன். மாதத்துக்கு பத்திரிகை, மேகசின்கள் ரூ. 500, இண்டர்நெட் ரூபாய் 2200 (இரு இணைப்புகள்), செல்பேசி ரூபாய் 2000, பால் ரூபாய் 1000, டெலிபோன்கள் (2) ரூபாய் 1000, அரிசி ரூபாய் 600, மளிகை சாமான்கள் ரூபாய் 500, கேஸ் ரூபாய் 200, வாடகை லேது (சொந்த வீடாக இல்லாவிட்டால் ரூபாய் 4000-க்கு குறையாது), வைத்தியச் செலவு ரூபாய் 500. சுமார் 13000-க்கு கணக்கு வருகிறது.

10. தி.நகர் உஸ்மான் ரோடில் ஒரு நாளைக்கு சுமார் எவ்வளவு பணப் புழக்கம் / ரொட்டேஷன் இருக்கும்? சென்னையின் மற்ற பகுதிகளை விட உஸ்மான் ரோட்டுக்கு மட்டும் (அதாவது தி.நகர், பாண்டிபஜார், ரங்கநாதன் தெரு ஏரியாக்கள்) எப்படி இவ்வளவு வியாபார முக்கியத்துவம் வந்தது? ஏன் மற்ற ஏரியாக்கள் இந்த அளவு முக்கியத்துவம் பெறவில்லை?
பதில்: சென்னையின் எல்லா பகுதிகளுடனும் தி.நகர் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது (மின் ரயில், பஸ்கள்). ஏற்கனவே பணக்காரர்கள் அதிகம் வாழ்ந்த இடம். தாரளமாக செலவு செய்ய அஞ்சாத மக்கள். ஒருவித கிரிட்டிகல் mass தாண்டியவுடன், வசதிகள் தானே பெருகுகின்றன. மற்றப்படி தினசரி பணப்புழக்கம் பல ஆயிரம் கோடிகளில் இருக்கும். அதையேல்லாம் யார் கணக்கு செய்து பார்க்கவியலும்?


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

37 comments:

  1. //சிங்கமுகம் இருக்கும் பக்கம் தலை, அது இல்லாத பக்கம் பூ.//

    இல்லை. நாணயத்தின் எண் இருக்கும் பக்கம் எப்பொழுதும் பூ (Tail) என்றறியப்படும். ஒரு கிரிக்கெட் மேட்ச் டாஸ் போடும்போது இந்த பிரச்சினை ஏற்பட்டபோது தீர்வாக சொன்னதை ஹிந்துவில் படித்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. //ஒரு கிரிக்கெட் மேட்ச் டாஸ் போடும்போது இந்த பிரச்சினை ஏற்பட்டபோது தீர்வாக சொன்னதை ஹிந்துவில் படித்திருக்கிறேன்.//
    இருக்கலாம், ஆனால் அக்காலகட்டத்தில் தலை ஒரு ஒரு பக்கத்திலும் நம்பர் மறுபக்கத்திலும் போட்டு வந்தனர்.

    நான் சொல்வது எக்காலத்துக்கும் பொருந்தும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. இப்பொழுதுள்ள நாண‌யங்களில் கிறித்துவ சிலுவை குறியை மறைமுகமாக புகுத்தியிருப்பதாக கேள்வி.நீங்கள் வெளியுட்டுள்ள பத்து ரூபாய் நாணயத்தின் படத்தில் இதை காணலாம். விடைஇத்தாலி தியாகத் திலகத்திற்குதான் தெரியும்.

    இந்த புதிய‌ 1 ரூ, 2 ரூ நாண‌யங்களுக்கிடையே உருவத்தில அத்தனை வித்தியாசம் இல்லை, அவசரத்தில் மாற்றி கொடுத்துவிடும் வாய்ப்புகள் அதிகம். மேலும் வயதானவர்கள் , கண்பார்வை இல்லாதவர்கள் சிறிது சிரமப்பட்டே வித்தியாசத்தை கண்டுப்பிடிக்க வேண்டியுள்ளது

    நன்றி,
    ராம்குமரன்

    ReplyDelete
  4. //“ஒரு வகையினர் உலகில் இருவகையின மனிதர்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள், இன்னொரு வகையினர் அவ்வாறு கூறுவதில்லை” என பிறாண்டினான்./

    ஹா ஹா ஹா
    அருமையான நண்பருக்கோ அவரு!
    அடிக்கடி இப்படி பிறாண்ட சொல்லுங்க!

    ReplyDelete
  5. //காற்றோட்டமா விடுவது பாவமூட்டையை சுமக்க வைக்கும்.//

    எனக்கு இதில் உடன்பாடில்லை!

    உடை கண்டுபிடித்த சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அனைவருக்கும் ஓப்பன் சோர்ஸ் தான்!

    உங்களுக்கு ஜட்டி பொடுவது பிடிக்கும் என்பதற்காக, ஜட்டி போடாமல் இருப்பது பாவமூட்டை சுமப்பது என்று எங்கள் சங்கத்து ஆட்களை கேவலப்படுத்துவது நல்லதுக்கல்ல!

    ReplyDelete
  6. >>>
    5. நிகழ்ச்சிகளிலோ, பேட்டிகளிலோ கமல்ஹாசன் பேசுவது பல சமயம் புரிவதில்லையே? எப்படி இருந்த கமல் ஏன் இப்படி ஆகிவிட்டார்?
    பதில்: ஏன் வாய்க்குள்ளேயே பேசிக் கொள்கிறாரா? நான் கவனிக்கவில்லையே?
    >>>>>>>>>>>>>>>>>>>

    Please see the contradictory statements from one line to next line (sample below)

    http://thatstamil.oneindia.in/movies/heroes/2009/06/04-im-doing-what-mgr-instructed-me.html

    இந்த திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை எனது சாதனை அல்ல. எனக்குப் பிந்தைய தலைமுறை படைப்பாளிகளை உருவாக்கும் ஒரு அக்கறையின் வெளிப்பாடு. அதேபோல இது ஒன்றும் தொடர்ச்சியான இடைவெளிகளில் நடத்தப்படும் வகுப்புகள் கிடையாது. தேவையென்றால் அடுத்த மாதமே கூட நடத்துவேன்.

    இது எனது சாதனையும் அல்ல. ஒரு ஆசானாக இதில் நான் பங்கேற்கவில்லை. ஆசான் என்ற போர்வையில் கற்றுக் கொள்ள உள்ளே நுழைந்த ஒரு மாணவன்தான் நான். இன்னும் கேள்வி எழுப்புகிற திமிர் எனக்குள் அப்படியே இருப்பதால் என்னால் ஒரு ஆசிரியனாக முடியாது.

    ReplyDelete
  7. @வால்பையன்
    ஜட்டி போடாமல் அரை கிலோமீட்டர் தூரம் வேகமாக ஓடுங்கள் அல்லது சைக்கிள் விடவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. //தம்பியை சைட் வாங்கவிடாது தடுக்கும் எந்த வடிவமைப்புமே சிறந்ததே//

    அருமை. அருமை.

    சாரு தோத்துட்டாரு :-)

    ReplyDelete
  9. //நிகழ்ச்சிகளிலோ, பேட்டிகளிலோ கமல்ஹாசன் பேசுவது பல சமயம் புரிவதில்லையே?//

    அது வேறு வகையான மொழி ஆளுமை!
    இலக்கியமோகம் வந்தபின் கமலுக்கு இந்த வியாதி தொத்தி கொண்டது!

    சமான்யனுக்கு புரியாமல் பேசுவது தான் இப்போதய ட்ரெண்ட். அதனால் விளிம்பு நிலை மனிதர்களிடமிருந்து கமல் தொலை தூரம் சென்று கொண்டிருப்பது உண்மை!

    எல்லாத்துக்கும் காரணம் கூட இருக்கும் அல்லக்கைங்க உசுப்பேத்திவிடுறது தான்!

    ReplyDelete
  10. //ஜிய்யெட் (Gillette). //

    Gillette என்பது என்ன மொழி சொல், அதை ஏன் நீங்கள் அப்படி உச்சரிக்கிறீர்கள்!

    அதை ஜில்லெட் என்பதோ
    கில்லெட் என்பதோ தவறா?

    (நான் கில்லெட் என்று தான் உச்சரிப்பேன்)

    ReplyDelete
  11. //மிடில் கிளாஸ் ஆசாமி சென்னையில் வசிக்க மாதம் மினிமம் எவ்வளவு பணம் தேவைப்படும் ?//

    குறைந்தது 5000 போதுமானது!
    வீட்டுவாடகை 1500 லிருந்து ஆரம்பிக்கும் வீடுகள் இருக்கிறது. கொஞ்சம் அவுட்டர் போகனும். சிக்கன நடவடிக்கை(ரெண்டு போன் வச்சு பந்தா காட்டாமல் இருந்தால்) எடுத்தால் ஐயாயிரத்திலும் மிச்சம் பிடிப்பால் என் மனைவி!

    ReplyDelete
  12. ஜிய்யெட் என்பது பிரெஞ்சு உச்சரிப்பு, ஏனெனில் அது பிரெஞ்சு பெயர்ச்சொல். ஆனால் கம்பெனி என்னவோ அமெரிக்க கம்பெனிதான்.

    முதலில் நான் அந்த பிளேடை சமீபத்தில் 1971-ல் உபயோகிக்க ஆரம்பித்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள், 60 முறை ஒரே பிளேடை உபயோகித்தேன். அவ்வளவு கூர்மையானது. இப்போதெல்லாம் அம்மாதிரி க்வாலிடி பிளேடுகள் வருவதில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. ஜிலெட் ஃப்ரெஞ்ச் பெயராக இருந்தாலும் , ஜிலெட் என் பேர் வைத்துள்ளவரக்ள் அமெரிக்கர்களாக உள்ளது - விகி படி. பிரான்சில் இருக்கும் ஜிலெட் என்ற ஊருக்கு ஒரு L தான்.

    நான் ஜிலெட் பிளேட் கம்பெனியின் லண்டன் ஆபீஸ் பக்கம் நிறைய காலம் இருந்தேன். அதை எல்லோரும் ஜிலெட் என்றதான் அழைப்பர். மேலும் அந்த கட்டிடம் 1930ல் ஆர்ட் டெகோ ஸ்டைலில் கட்டப் பட்ட அலுவலகத்தின் சிறந்த உதாரணம். அந்த இடத்திற்கு பெயர் ஜிலெட் கார்னர்.

    http://en.wikipedia.org/wiki/Gillette_Corner

    அதனால் அது ‘பாதுகாக்கப்பட்ட கட்டிடம்’ அப்படியென்றால் யாரும் அதை இடிக்க முடியது

    இப்போ ஜிலெட் கம்பெனி அங்கில்லை

    விஜயராகவன்

    ReplyDelete
  14. I wish coins to be smaller, otherwise it bothers my wallet.


    1. How to post our questions? (:-))

    2. I would like to know what is going on with river linking projects?
    Is it possible? what are pros&cons?
    (I feel pros dominates)

    ReplyDelete
  15. போயும் போயும் சாருவுடன் 'தல'யை கம்பேர் செய்த லக்கி லுக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  16. 60 தடவைகளாக ஒரே பிளேடை பயன்படுத்தினீர்களா? தினமும் ஷேவ் செய்வீர்களா அல்லது எடுத்து பார்த்து விட்டு பத்திரமாக வைத்து விடுவீர்களா? (இதை அடுத்த வாரக் கேள்வியாகவும் வைத்துக் கொள்ளலாம்)

    ReplyDelete
  17. ஷோபனா ரவி என்ற செய்தி வாசிப்பாளர் இப்படித்தான் நடை முறையில் பழகிய பெயர்களைக் கூட ஒழுங்காக உச்சரிக்கிறேன் பேர்வழி என்று கடித்து குதறுவார். அது சரி என்று நினைக்கிறீர்களா?!

    ஜிய்யட் என்றால் உங்களை தவிர தமிழ்நாட்டில் வேறு ஒருவருக்கும் புரியப்போவதில்லை. அந்த கண்றாவியை ஜில்லட் என்றே சொல்லிவிட்டுப் போங்களேன். வேண்டுமானால் ஜெர்மனிகாரனிடம் ஜிய்யட் என்று சொல்ல வேண்டியது தானே?

    ReplyDelete
  18. 'அக்னி நட்சத்திரம்' எப்படி? என்னத்தை சாப்பிட்டு சூட்டை தணித்தீர்கள்?

    ReplyDelete
  19. இலங்கைத் தமிழர்கள் (இனிமேல் ஈழத் தமிழர்கள் என்று சொல்லக்கூடாதாமே?) பல வார்த்தைகளை இப்படி மாற்றி ஏன் சொல்கிறார்கள்? ஜெர்மனியை யெர்மேனி என்பது போல? டி.வி.யை ரி.வி. என்கிறார்களே?

    ReplyDelete
  20. கடைசியாக கோலி குண்டு, கிட்டிப்புள் (கில்லி), பம்பரம் எல்லாம் எப்போது விளையாடினீர்கள்?

    ReplyDelete
  21. 'படுத்துக் கொண்டே ஜெயித்தவர்' என்று தேர்தலில் எம்.ஜி.ஆர்க்கு இமேஜ் உண்டு. அதை இப்போது கருணாநிதிக்கு பயன்படுத்தப் பார்க்கிறார்களே. உடம்பின் சகல பாகங்களிலிருந்தும் சிரிப்பு வரவில்லை?

    ReplyDelete
  22. கும்மி என்ற அழகான தமிழ் வார்த்தையை நீங்கள் KUMMI என்று உச்சரிப்பீர்களா? அல்லது குவிற்கு அழுத்தம் தந்து GUMMI என்று உச்சரிப்பீர்களா? அது என்ன பார்ப்பனர்கள் மட்டும் அதை GUMMI என்று உச்சரிக்கிறீர்கள். வாயில் வசம்பு வைத்து தேய்க்க வேண்டுமோ?

    ReplyDelete
  23. கிழக்கிலிருந்து புத்தகம் எழுதித் தரச் சொல்லி உங்களிடம் யாரும் கேட்க வில்லையா? அல்லது புத்தகம் அச்சடித்துத் தாருங்கள் என்று நீங்கள் போய் கேட்கவில்லையா?

    ReplyDelete
  24. தமிழில் எந்த தமிழ் பிடிக்கும்? சென்னை? மதுரை? கோவை? நெல்லை? தஞ்சை? இலங்கை? மலேஷியா'லா'?

    ReplyDelete
  25. ஆ,ஊ என்றால் ஆரியம், திராவிடம் என்று கண்டபடிக்கு பேசும் ஆளை கேஸ் போட்டு பதவியை விட்டு விரட்ட முடியாதா?

    ReplyDelete
  26. எந்த எந்த பத்திரிகைகள் காசு கொடுத்து வாங்குகிறீர்கள்?

    ReplyDelete
  27. BITடுப் படம் பார்த்ததுண்டா?

    ReplyDelete
  28. //ஜிய்யட் என்றால் உங்களை தவிர தமிழ்நாட்டில் வேறு ஒருவருக்கும் புரியப்போவதில்லை.//
    சமீபத்தில் 1975-ல் பிரெஞ்சு கற்கும் முன்னால் நானும் அதை ஜில்லெட் என்றுதான் சொல்லிவந்தேன். அந்த ஆண்டு பிரெஞ்சு உச்சரிப்புகள் தெரிந்து கொண்ட பின்னால் தவறாக உச்சரிக்க மனம் வரவில்லை. புதிதாக ஒன்றை கற்கும்போது அதில் தீவிரமாக ஈடுபடுவது என்பது சாதாரணமாக நடக்கும் விஷயம்தானே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  29. //Anonymous said...

    போயும் போயும் சாருவுடன் 'தல'யை கம்பேர் செய்த லக்கி லுக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.//

    அப்படி போடுங்க அருவாளை!

    ReplyDelete
  30. I think the amount you quoted as 500 for provisions is very less. R u referring for one person or for family..?

    ReplyDelete
  31. ஜில்லட் குறித்த பின்னூட்டங்கள் சுவாரசியமாய் இருக்கின்றன.

    ஜில்லட் கம்பனி 20 வருடம் முன்பு மேக்-3 என்ற மூன்று பிளேட் ரேசரைக் கண்டுபிடித்தது. அதற்கு அவர்கள் செலவு செய்த தொகை 750 மில்லியன் டாலர்கள். அதாவது, 3750 கோடி ரூபாய்.

    அவர்களின் மேக்-3 பற்றிய ஒரு திரைப்படம் வெளியிட்டார்கள். லேசர் வெல்டிங் இணைப்புகளுடன் வளைந்துகொடுக்கும் மூன்று பிளேட்களை பொருத்தும் விஞ்ஞானமும், சவரம் செய்வதன் நுணுக்கங்களையும் விளக்கும் சிறந்த விளம்பரப்படம் அது. எனது நண்பன் பார்த்தசாரதி ஜில்லடின் அதிகாரியாக இருந்தபோது அவன் இல்லத்தில் இஸ்தான்புல் நகரத்தில் அதைப்பார்த்தது நினைவுக்கு வருகிறது.

    நீங்கள் மேக்-3 தான் உபயோகப் படுத்துகிறீர்களா என்று தெரியவில்லை?

    தற்போது ஜில்லட் கம்பனிக்காரர்கள் 5 பிளேட் ப்யூஷன் என்ற ரேசரைக் கண்டுபிடித்துள்ளார்கள். ரேசரின் பிளேட் எண்ணிக்கை கருணாநிதி குடும்ப அமைச்சர் நம்பர் போல அதிகரித்துக்கொண்டே போகிறது.

    ஒவ்வொரு வரியும் எல்லாப் பாவங்களையும் போக்கும் என்பது வால்மீகி ராமாயணம். அதில் ராமர் அரியணை ஏறி பட்டமுழுக்குப் போகும்போது அவர் வனவாசத்தின் தாடி, ஜடைகளைக் களைந்து ஷவரம் பண்ணியதைச் சிறப்பாகச்சொல்கிறார். நடுங்காத கைகளும், எரிச்சலில்லாத கத்தியும், விரைவாக முடித்தலும் ஷவரத்திற்குத் தேவையாம்.

    நன்றி

    ஜயராமன்

    ReplyDelete
  32. வாருங்கள் ஜயராமன். நான் உபயோகித்தது மிகவும் சாதாரணமான ஒற்றை பிளேட் ரேசர்தான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  33. //இருக்கலாம், ஆனால் அக்காலகட்டத்தில் தலை ஒரு ஒரு பக்கத்திலும் நம்பர் மறுபக்கத்திலும் போட்டு வந்தனர்.

    நான் சொல்வது எக்காலத்துக்கும் பொருந்தும்.//

    அய்யா, நான் சொல்வது இக்காலத்து வழக்கம்தான். நாணயத்தின் எண் இருக்கும் பக்கம்தான் எப்பொழுதும் ‘பூ’ (Tail) என்றழைக்கப்படும். அப்புறமும் விடாப்பிடியா ‘நான் சொல்றது’ன்னா... நடைமுறையைச் சொல்றேன். கூகுள்ல போய்ப் பாருங்க.

    ReplyDelete
  34. //அய்யா, நான் சொல்வது இக்காலத்து வழக்கம்தான். நாணயத்தின் எண் இருக்கும் பக்கம்தான் எப்பொழுதும் ‘பூ’ (Tail) என்றழைக்கப்படும். அப்புறமும் விடாப்பிடியா ‘நான் சொல்றது’ன்னா... நடைமுறையைச் சொல்றேன். கூகுள்ல போய்ப் பாருங்க.//

    அப்டீங்கறீங்க? ஒரிஜினல் கேள்வியைப் பாருங்க.

    //1. நாணயங்களில் முன்பெல்லாம் தலை (சிங்க இலச்சினை) ஒரு பக்கமும், பூ (காசு மதிப்பு எண்) இன்னொரு பக்கமும் இருந்தது. ஆனால் தற்போது சிங்க இலச்சினை மற்றும் காசு எண் இரண்டும் ஒரே பக்கம் இருக்கிறதே? ஏன்? பூவா தலையா போடும்போது எதை பூ என்றும் தலை என்றும் கொள்வார்கள்?//

    என் கிட்ட இப்ப ஒரு ஐம்பது பைசா நாணயம் இருக்கு. 2002-க்கானது. அதுல சிங்க முகமும் காசு எண் ரெண்டுமே ஒரே பக்கத்திலேதான் இருக்கு. ஆகவேதான் நான் சொல்றேன், சிங்க முகம் இருக்கற பக்கம் தலை, மற்றொரு பக்கம் பூ அப்படீன்னு.

    எங்க C.P.W.D. Executive Engineer ராமானுஜம்தான் எனக்கு இப்போ ஞாபகத்துக்கு வரார்.

    பொதுப்பணிதுறை கட்டிய கட்டிடங்களில் டாய்லட்டுக்கு பக்கத்தில் நாட்டர் கூலர்களை வைப்பது பற்றி ஒரு பதிவில் எழுதியிருந்தேன், பார்க்க: http://dondu.blogspot.com/2009/05/03052009.html

    அதற்கு காரணமாக கூறப்பட்டது என்னவென்றால் தண்ணீர் பைப் கனெக்‌ஷன்கள் காரணமே இது என்பார்கள். அதாவது கக்கூசுக்கு செல்லும் தண்ணீர்தான் வாட்டர் கூலர்களுக்கும் என்றாகிறது. வாட்டர் கூலருக்கும் டாய்லட்டுகளுக்கும் இடையில் ஒரு குறைந்தபட்ச இடைவெளி ஸ்பெசிஃபிகேஷனில் உண்டு என்றும் கூறப்பட்டது.

    ஆனால், நடைமுறையில் அந்த குறைந்தபட்ச இடைவெளியை அவர்கள் அதிகப்பட்சமாக எண்ணியே செயல்பட்டு வந்துள்ளனர் எனத் தெரிகிறது. ஒரு நீண்ட காரிடாரில் ஒரு மூலையில் டாய்லட்டும், இன்னொரு மூலையில் வாட்டர் கூலர் அமைத்தல் பிரச்சினை கணிசமான அளவில் குறையும். ஆனால் அவ்வாறு செய்ய மாட்டார்கள், ஏனெனில் வாட்டர் பைப் நீளம் அதிகமாகி விடுமாம். இங்குதான் நம்ம வடுவூர் குமாருக்கு ஒரு கேள்வி. வாட்டர் பைப் மீட்டருக்கு என்ன ரேட். ஒரு ஐம்பது மீட்டர் அதிகமாகுமா, ஒரு கூலருக்கு? மொத்த கட்டிடத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் செல்லும்போது, இந்த அதிக விலை சுண்டைக்காய்தானே. ஆனால் பலன் அனேகம் அல்லவா? சுகாதார பாதுகாப்பு, வாட்டர் கூலருக்கருகில் நாற்றமின்மை ஆகியவற்றையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் அல்லவா? அதுவும் கட்டிடங்கள் அறுபது ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கப் போகின்றன. (சாஸ்திரி பவன் கட்டியே நாற்பது ஆண்டுகளுக்கு மேலாயிற்று). இத்தனை ஆண்டுகளூம் அந்த நாற்றம் விடாமல் இருந்து வந்திருக்கிறது, இன்னும் இருக்கப் போகிறது.

    இந்த விஷயத்தை மேலே கூறிய ராமானுஜத்திடம் சொன்ன போது அவரும் வாட்டர் கனெக்‌ஷன் விஷயத்தைத்தான் கூறினார். டாய்லட் என்பதை எல்லோருமே க்ளீனாக வைத்து கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். (They are supposed to keep it clean).

    அப்படியில்லை என்பதுதான் பிரச்சினை என்பதை அவர் யோசித்தும் பார்க்கவில்லை. இங்கும் அதே மாதிரித்தான், சிங்க முகம், காசு மதிப்பின் எண் இரண்டும் ஒரே பக்கத்தில் வந்தால் என்பது பற்றித்தான். நீங்கள் கூகளிட்டு பார்க்கச் சொல்கிறீர்கள். இப்போது இப்பின்னூட்டத்தை நான் எழுதும்போதே என் கையில் மேலே நான் குறிப்பிட்ட அந்த 50 பைசா நாணயம் இருக்கிறது. இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்பதுதான் பிரச்சினையே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  35. Dondu Saar,

    Meyalumeh Rs500 for Maligai per month?, Ennaku doubtaaah iruku ivalavu kammiyaahnu...? by the way members familylanu ennaku teriyadhu....sorry if am wrong...
    Aani

    ReplyDelete
  36. ஜட்டிகளில் சிறந்தது ஜாக்கி ஜட்டியே !!!!!! ஜாக்கி ஜட்டியே !!!!!! ஜாக்கி ஜட்டியே !!!!!!

    ReplyDelete
  37. ஜில்லெட்டை கிய்யெட் என்று உச்சரிக்கவேண்டும் என்பது அது எதைக்குறிக்கும் என்பதைப் பொருத்தது.

    சவரம் செய்யும் பிளேடைக் குறிக்கும் என்றால் அதை ஜில்லெட் என்றே உச்சரிக்கலாம். ஏனென்றால் அந்த பிளேடை விற்பவர்களே (கம்பெனி விளம்பரங்கள், promo video) அப்படித்தான் அந்த வார்த்தையை உச்சரிக்கிறார்கள்.

    ReplyDelete