நிரந்தர பக்கங்கள்

7/10/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் 10.07.2009

டோண்டு பதில்கள்
டோண்டு பதில்களை நான் விளையாட்டாக ஆரம்பித்தேன். விளையாட்டாகவே ஜஸ்ட் லைக் தட் ஒரு அனானி (நிச்சயம் எனது நலத்தை விரும்பும் இனிய நண்பரே என்பதில் ஐயமில்லை) கேள்வி பதில்கள் பதிவு வரிசை ஒன்றை ஆரம்பிக்கலாமே எனக்கூறி, போணி செய்ய சில கேள்விகளை கேட்டு வைக்க, நானும் தமாஷாக ஆரம்பித்து வைக்க விளையாட்டு போல 16 மாதங்கள் சென்று விட்டன.

தானே கேள்வி தானே பதில் நிபுணர்கள் கெக்கலி காட்ட, இந்த பதிவு வரிசை நடந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்திலேயே நான் சில முடிவுகள் எடுத்தேன். அதாவது ஒவ்வொரு முறையும் கையில் கேள்விகள் ஏதும் மிச்சம் வைக்கக் கூடாது. அடுத்த வாரத்துக்கு என சேமித்து வைக்கக் கூடாது. Zero budgetting என ஆங்கிலத்தில் கூறுவார்கள். ஒவ்வொரு நிதியாண்டுக்கும் ஒரு குறிப்பிட்ட ப்ராஜக்ட் தனது அவசியத்தை நிரூபிக்க வேண்டும். ஆரம்பித்தாயிற்றே நடத்த வேண்டுமே என நினைப்பது சூதாட்ட விடுதியில் போட்ட காசை எடுக்கும் முயற்சியில் தொடர்ந்து சூதாடுவதைப் போன்றது. அதை தவிர்க்க வேண்டும் என்ற முடிவால்தான் நான் இந்த வழியைத் தேர்ந்தெடுத்தேன். அவ்வாறு செய்ததில் இந்த 16 மாதங்களில் ஒரே ஒரு முறை பதிலளிக்க கேள்விகளே இல்லாமல் போயிற்று. அப்போதைய பதிவும் இல்லை. சில முறைகள் விரல் விட்டு என்ணக் கூடிய அளவிலேயே கேள்விகள் வந்தன. அதற்காகவும் கவலைப்படவில்லை.

நமது உற்சாகத்துக்காக எழுதுகிறோம். இதில் என்ன கொலைவெறி வேண்டிக் கிடக்கிறது. கேள்விகள் வந்தால் பதிவு, இல்லாவிட்டால் இல்லை. ரொம்ப சிம்பிள். எழுத்தாளர் நண்பர் பாரா அவர்கள் ஒரு சேட்டில் கேள்விகளை தெரிவு செய்து கேடகரைஸ் எல்லாம் செய்ய ஆலோசனை கூறினார். மிகவும் நல்ல யோசனை, ஆனால் எனது அமைவுகளுக்கு அதை செய்ய இயலவில்லை. மேலே சொன்னதைத்தான் அவருக்கும் கூறினேன். நேற்றைய பதிவு சற்றே அதிக நீளமாக போய் விட்டது. காப்பி செய்து வேர்ட் பக்கத்தில் ஒட்டினால் 20 பக்கங்களுக்கு மேல் வந்தது. 4000 வார்த்தைகளுக்கும் மேல். எனது தமிழ் படிக்கும் வேகத்துக்கு வெறும் வாசிப்பே 10 நிமிடங்கள் எடுக்கும். ஆகவே கேள்விகளை லிமிட் செய்யுமாறு பல நண்பர்களின் ஆலோசனைகள் வருகின்றன. பார்ப்போம்.


அனுகூல சத்ருக்கள்
ஸ்ரீலங்கா தமிழர்கள் நிலை மிகவும் டெலிகேட்டாக இருக்கிறது. ஸ்ரீலங்கா அரசை ராஜரீக முறையில் இந்தியா நிர்ப்பந்திக்கும் நேரம் இது. இப்போது போய் புலிகள் இன்னும் யுத்தம் செய்யப்போவதாக கிளப்பப்படும் செய்திகளை பரப்புபவர்கள் பொறுப்பற்ற முறையிலேயே செயல்படுகின்றனர். கரும்புலிகள் இலங்கையில் பல பகுதிகளில் ஊடுருவியுள்ளனர் என்ற வதந்திகள் ஸ்ரீலங்கா அரசுக்குத்தான் சாதகமாகப் போகும் என்பதை மறக்கலாகாது. இதுதான் சாக்கு என தமிழர்களை கேம்புகளில் வைக்கும் நிலை நீடிப்பதுதான் நடக்கும் என அஞ்ச வேண்டியுள்ளது. சமாதான முயற்சிகளை தொடர்வது மிகக் கடினமான காரியம்தான். இருந்தாலும் வேறு வழியில்லை. வீராப்பு பேச்சுகளை குறைத்தல் நலம்.

ஃபிரெஞ்சு எழுத்தாளர் Marek Halter
மாரெக் ஹால்டெர் 1936-ல் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். ஹிட்லரின் படைகளிடமிருந்து தப்பிக்க அவரது குடும்பம் பல ஊர்களுக்கு குடிபெயர்ந்து கடைசியில் ஃபிரான்சில் வசிக்கலாயிற்று. அவரது La Mémoire d'Abraham என்னும் புத்தகத்தை நான் யதேச்சையாக தில்லியில் உள்ள அல்லியான்ஸ் ஃபிரான்சேஸ் நூலகத்தில் பார்த்தேன். படித்து பிரமித்தேன். அது ஒரு குடும்பத்தின் கதை. கி.பி. 70-ல் இஸ்ரேலில் ஆரம்பித்து 1936-ல் போலந்தில் முடிகிறது. அக்குடும்பத்தில் ஒரு பழக்கம். முக்கிய நிகழ்ச்சிகளை டயரி ரூபத்தில் எழுதி வருவார்கள். அந்த டயரி 1800 ஆண்டுகளுக்கு மேல் தலைமுறை தலைமுறையாய் கைமாறி வந்துள்ளது. கி.பி. 70-ல் யூதர்கள் இஸ்ரேலிலிருந்து துரத்தப்பட்டு பல நாடுகளில் நாடற்றவர்களாக அலைந்து வந்துள்ளனர். சில நாடுகளில் சில காலம் இருக்க வேண்டியது, பிறகு அங்கிருந்து துரத்தப்பட வேண்டியது என்றே அவர்கள் காலம் கழிந்தது. நடுநடுவே அவ்வப்போது நடக்கும் படுகொலைகள் வேறு. அவற்றுக்கு pogroms என தனிப்பெயரே சூட்டியிருந்தார்கள்.

போராட்டங்கள், சிறு சந்தோஷங்கள் என்றெல்லாம் காலம் கழிந்துள்ளது. கடைசியில் மாரெக் ஹால்டெரின் தாத்தா போலந்தில் வார்சா கெட்டோ போரில் இறக்கும் வரை கதை தொடர்ந்தது. கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு ஒரு குடும்பத்தின் போராட்டங்களை பார்த்து நிகழ்காலத்துக்கு வந்து சேரும் அனுபவத்தை அப்புத்தகத்தை படித்தால்தான் தெரிந்து கொள்ள இயலும். அடுத்த ஆண்டு பிழைத்து கிடந்தால் யெருசலத்தில் சந்திப்போம் என்றுதான் ஒருவருக்கொருவரிடமிருந்து விடை பெறும்போது அவர்கள் கூறிக் கொள்வார்கள். கடைசியில் 1948-ல் இஸ்ரேல் உருவானது சரித்திரத்தின் ஒரு மகத்தான தருணமே.

விடாமுயற்சிக்கு எடுத்துக் காட்டு இஸ்ரவேலர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

36 comments:

  1. //இப்போது போய் புலிகள் இன்னும் யுத்தம் செய்யப்போவதாக கிளப்பப்படும் செய்திகளை பரப்புபவர்கள் பொறுப்பற்ற முறையிலேயே செயல்படுகின்றனர்

    உண்மை ! உண்மை !!
    பஞ்சாமிர்தம் சூப்பர் !!

    ReplyDelete
  2. Question 1:
    Have you seen N.Ram's interview in Junior Vikatan? What is your opinion on that interview ? Link to the interview "http://www.vikatan.com/jv/2009/jul/12072009/jv0301.asp"

    Question 2:
    Compare Cho Vs N.Ram

    Question 3:
    Prabhakaran's latest CD compares Tamils (i think srilankan Tamils) with Jews. Link "http://www.vikatan.com/jv/2009/jul/08072009/jv0301.asp"

    Question 4:
    Compare MGR Vs Jayalalitha

    Regards
    Venkat V

    ReplyDelete
  3. டோண்டு பதில்கள் பதிவுக்குத்தான் சமீபகாலமாய் அதிக பின்னூட்டங்கள் வருவதை பார்த்தால்?

    1.டோண்டு பதில்கள் - 09.07.2009-Posted by dondu(#11168674346665545885) at 7/09/2009 05:00:00 AM 58 comments
    2.டோண்டு பதில்கள் - 25.06.2009-
    Posted by dondu(#11168674346665545885) at 6/25/2009 05:00:00 AM 52 comments
    Labels: டோண்டு பதில்கள்
    3.Posted by dondu(#11168674346665545885) at 6/18/2009 05:00:00 AM 53 comments
    Labels: டோண்டு பதில்கள்

    ReplyDelete
  4. Dondu Sir,

    Kelvi ketbapathu easy.. Ana intha bathil solarthu irruke..athuthan romba kastam (I think this was Crazy Mohan's dialog in one of Kamal's movie).

    I am sure it takes a lot of time to answer the question, but I do read all your answers.

    Regards.
    Partha.

    ReplyDelete
  5. 1.தே.மு.தி.க.வின் வளர்ச்சி தொடருமா?கேப்டனின் முதல்வர் கனவு?
    2.அ.தி.மு.க.வுடன் கம்யூனிஸ்டுகள் தேனிலவு ?
    3.சட்டங்களைக் கண்டு பயப்படமால் உள்ள அரசியல்வாதிகள்?
    4.எழுத்தாளர்களுக்கு அரசு சலுகையை கூட்டலாமே?
    5.இன்றைய பிள்ளைகளிடம் எதற்கெடுத்தாலும் ஆர்க்குமெண்ட் செய்யும் ம்னோநிலை ஏன்?
    6.அரிசி விலை கடுமையாக ஏறிவிட்டதே-ஒரு ரூபாய் திட்டம் காரணமா?
    7.‘ஸ்பெக்ட்ரம்’ விவகாரம் கோவிந்தவா?
    8.வேலை கிடைக்கவில்லை என்று அவதிப்படும் இன்றைய இளஞர்களுக்கு டோண்டுவின் அட்வைஸ்?
    9.ஒரு பெண்ணின் காதல் எதில் ஆரம்பிக்கிறது?எதில் முடிகிறது?
    10.எந்திரன் படம் ரஜினிக்கு கைகொடுக்குமா?இல்லை?
    11.உங்களுக்குப் மிகவும் பிடித்த பதிவு?(மிகுந்த மன நிறைவுடன்)
    12. இந்த வயதிலும் மன்மோகன் எதற்கும் அஞ்சாமல் அசர மாட்டேன்கிறாரே
    13.தி.மு.க. இல்லாத காங்கிரஸ் கூட்டணி ?
    14.ஜெ இல்லாத அதிமுக?
    15.கலைஞர் ஆங்கிலத்தில் பேசுவதிலும் வல்லவரா?
    16.தீவிரவாத எதிர்ப்பு பலப்படுத்தபப்டும் என்று சொல்லி கொண்டிருக்கிறார்களே ஆனால்?
    17. எல்லாத் திராவிடக் கட்சிகளை மூட்டை முடிச்சுகளோடு வழியனுப்பும் காலம் வருமா?
    18. தந்திக் கட்டனங்கள் மினிமம் ரூ25 ஆக்கிவிட்டார்களே?
    19.விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் போரில் என்றால்?தமிழர் நிலை?
    20.அரசியல் உலகில் வலிமை வாய்ந்தது மதமா, சாதியா?
    21.அரசு கேபிள் டி.வி இருக்கிறதா?
    22.குழந்தைத் தொழிலாளார்கள் குறைந்து வருவதாய் வரும் தகவல்கள் உண்மையா?
    23. பதவி கோரிக்கையுடன் உதார் விடும் தமிழகக் காங்கிரஸைக் கொஞ்சங்கூடக் கண்டு கொள்ளமாட்டேன்கிறாரே, கலைஞர்?
    24. தமிழ்கத்தில் பத்திரிகைகள் பெருகுவதால் யாருக்கு இலாபம்?
    25.அரசியலில் கொடிகட்டி பறக்க என்ன தேவை?
    26.மக்கள் தொலைக்காட்சி பார்பீர்களா?
    27. மேல்நாட்டு நாகரீக மோகத்தில் பெண்களைப் போல ஆண்களும் இப்போது முடி வளர்க்கிறார்கள். கம்மலை போட்டுக் கொள்கிறார்களே?
    28. கொங்கு மண்டலத்தில் கள் வேண்டுவோர் அமைப்பின் போராட்டம் பிசுபிசுத்துவிட்டதா?
    29.மசாஜ் கிளப்பு போன்ற விவகாரமான கிளப்புகளை அரசு அனுமதிப்பதை பார்த்தால்?
    30.அரசியல்வாதிகள் ஏன் ‘பினாமி’களையே சார்ந்திருக்கிறார்களே?
    31.உங்களால் மறக்க முடியாத மேடைப்பேச்சு யாருடையது? எந்த நகரில்?
    32.ஜெயாடீவியின் காலைமலர் நேர்முக ஒளிபபடக் காட்சியின் இணைப்பு ரெடியா?

    ReplyDelete
  6. ///ஆகவே கேள்விகளை லிமிட் செய்யுமாறு பல நண்பர்களின் ஆலோசனைகள் வருகின்றன.//
    நான் கூட சொல்லனும்னு நெனச்சேன் சார். இந்த வாரம் கொஞ்சம் அதிகம்தான். இந்த மாதிரி வரும்பட்சத்தில், அதை, பார்ட்1, பார்ட்2... எனப் பிரித்து வியாழன், வெள்ளி... என வருமாறு செய்யலாம்.

    ReplyDelete
  7. கேள்வி பதிலுக்காக...
    1. நண்பன் ஒருவன் கிண்டலுக்காக ‘அலங்கரிக்கப்பட்ட கோலம் அலங்கோலம், அழகான கோலம் அலங்கோலம்’ என்கிறான். இப்போது நான் அப்படியெல்லாம் அல்ல, அலங்கோலம்னா இதுதான்னு சொல்லனும்.
    என்ன சொல்ல?
    2. பார்க்கப்போனால், வெப்பமாக இருக்கும் நமது இடங்களில் உடல் வெளியே தெரியும்படி ஆடைகளும், குளிர் பிரதேசங்களில் முழுவதும் போத்திக்கொள்ளும் ஆடைகளும்தானே கலாச்சாரமாய் இருக்கவேண்டும். ஆனால், நிலைமை தலைகீழாய் இருப்பதெப்படி?

    ReplyDelete
  8. கேள்வி பதிலுக்காக...
    3. சென்னையில், விதிப்படி, ஆட்டோ, பைக் விட எங்குமே கட்டணம் கிடையாது என்று ஒரு ஆட்டோ டிரைவர் கூறினார். உண்மையா?
    4. நிறுவனங்கள், அலுவலகங்கள் இருக்கும் கட்டிடங்களில் பார்க்கிங் வசதி கட்டாயம் செய்து கொடுக்கவேண்டும் என்று வரைமுறை இருக்கிறதா? (கேபிள் சங்கர் சார் பதிவைப் பார்த்தவுடன் தோன்றியது)
    5. பாலியல் குற்றங்களைத் தடுக்கும் அரசு, அதற்கு வடிகால் ஏதும் இல்லாததைப் பற்றி எண்ணாதது ஏன்? (புரியும் என்று நினைக்கிறேன்... பாலியல் தொழிலிக்கு அங்கீகாரம் குடுப்பது பற்றி)

    ReplyDelete
  9. எவனோ ஒருவன் said...

    ///ஆகவே கேள்விகளை லிமிட் செய்யுமாறு பல நண்பர்களின் ஆலோசனைகள் வருகின்றன.//
    நான் கூட சொல்லனும்னு நெனச்சேன் சார். இந்த வாரம் கொஞ்சம் அதிகம்தான். இந்த மாதிரி வரும்பட்சத்தில், அதை, பார்ட்1, பார்ட்2... எனப் பிரித்து வியாழன், வெள்ளி... என வருமாறு செய்யலாம்.//


    VERY GOOD IDEA

    QUESTIONS ASKED BY FRIENDS UPTO 23:59 HRS OF TUESDAY CAN BE ANSWERED AS PART I ON THURUSDAY AS USUAL AND THE REMAINING QUESTIONS CAN BE ANSWERED ON FRIDAY AS PART II.

    ReplyDelete
  10. 1.பாதாள சாக்கடைதிட்டம் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சேவைக்கட்டணம் கொட்டப்போகிறாதா?
    2.டீசல் விலை ஏற்றியவுடன் ஆம்னி அதிபர்கள் ஏற்றிம்கட்டனத்தை, அரசு விலைகுறைப்பு செய்த பின்னும்(பலதடவை) குறைக்க மனம்வருவதில்லையே ஏன்?
    3.வழக்கமாய் உங்களை கலாய்க்கும் பதிவர்களில்,பின்னூட்டாளர்களில்
    உங்களை மிகவும் கவர்ந்தவர் யார்?
    4.தண்ணிர் விலை ஒரு லிட்டர் ரூபாய் 15, ஆனால் பால் விலை? அவர்களின் கோரிக்கை நியாயம்தானே?
    5.தமிழ்மணத்தில் ஒட்டுப்போட ஓபன் ஐடி தேவை.ஓட்டுக்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதே-உங்கள் விமர்சனம்?

    ReplyDelete
  11. ///இதுதான் சாக்கு என தமிழர்களை கேம்புகளில் வைக்கும் நிலை நீடிப்பதுதான் நடக்கும்////
    அன்னா.. ராமயங்கார், கேம்பு எல்லா தமிழாளும் சௌக்கியமா திவ்யமா மூனு வேள நன்னா சாப்பிண்டு இருக்கான்னு சொல்றா.. நீங்க என்ன சொல்றேள்... நீங்க அவா பத்திரிகை படிக்கறவாளாச்சே...
    ஒங்க அபிப்ராயம் வேறயா இருக்கான்னா....?

    ReplyDelete
  12. //Anonymous Anonymous said...

    ///இதுதான் சாக்கு என தமிழர்களை கேம்புகளில் வைக்கும் நிலை நீடிப்பதுதான் நடக்கும்////
    அன்னா.. ராமயங்கார், கேம்பு எல்லா தமிழாளும் சௌக்கியமா திவ்யமா மூனு வேள நன்னா சாப்பிண்டு இருக்கான்னு சொல்றா.. நீங்க என்ன சொல்றேள்... நீங்க அவா பத்திரிகை படிக்கறவாளாச்சே...
    ஒங்க அபிப்ராயம் வேறயா இருக்கான்னா....?//
    பிராமணர்களை,அவர்களது மொழியை,அவர்களது பழக்க வழக்கங்களை பகடி பேசுவது இக்காலத்திலும் சரியில்லை.

    ReplyDelete
  13. //
    Question 3:
    Prabhakaran's latest CD compares Tamils (i think srilankan Tamils) with Jews.
    //

    I guess its nonsense.

    30 ஆண்டுகள் குரில்லா போரை நடத்தி அதன் collateral ஆக தமிழர்கள் சாகும்போது, 2000 ஆண்டுகள் துரத்தப்பட்டு வெறுக்கப்பட்ட ஒரு இனத்துடன் ஒப்பிட்டுக்கொள்வது என்பது கேட்பவன் கேணையாக இருந்தால்....
    (fill up the blanks)...

    எல்.டி.டீ.இ இயக்கத்தை ஆதரிப்பவர்கள் யூத மக்களுடன் தமிழர்களை ஒப்பிட்டு "பாவம்" என்று பரிதாபத்தை சம்பாதிக்க நினைக்கிறார்கள். அத்தகய அருகதையற்றவர்கள் தமிழ் விடுதலைப் புலிகள்.


    தமிழர்களையும் (இலங்கைத்தமிழர்கள்) விடுதலைப்புலிகளையும் வேறு படுத்திப்பார்க்கவேண்டிய கட்டாயத்தில் தற்போது தமிழகத்துத் தமிழர்கள் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  14. புதுக்கோட்டுக்கு ஜூட் விட்டு ரொம்ப நாளாச்சு போலிருக்கே?

    ReplyDelete
  15. //பிராமணர்களை,அவர்களது மொழியை,அவர்களது பழக்க வழக்கங்களை பகடி பேசுவது இக்காலத்திலும் ///
    அண்ணா.. நான்தான் அந்த அனானி பஸ்ட் கமண்ட் போட்டேன்.. இந்த அனானி பிராமண பாச பேசக் கூடாதாம்.. கிண்டல் பண்றேனாம்.. ஒங்க பிளாக்க படிக்காத இந்த so and so வுக்கு ஒரு அனுதாபம்... அய்யா அனானியாரே.. பழைய பிளாக்க போய்ப் பாரும்...அன்னா, எங்கே பிராமணன் சீரியலப் பத்தி சொல்லும் போது.. அவருக்குப் பிடித்த பிராமண பாசன்னு சொல்லியிருக்கிறார்.. அதுலெர்ந்துதான் அவருக்குப் பிடிச்ச மாதிரி அதே பாசயில கமண்ட் போட்டுண்டு வர்றேன்.. முதல்ல அவர் பிளாக்க ஒழுங்கா படியும்... அப்பறம் பேசலாம்...பிளாக் போடலாம்... முந்திரி கொட்ட மாதிரி அபிப்பிராயம் சொல்லப்படாது.. புரிஞ்சுக்கும்....
    அன்புள்ள அனானி.

    ReplyDelete
  16. //விடாமுயற்சிக்கு எடுத்துக் காட்டு இஸ்ரவேலர்கள்.//

    நான் ஒரு கேள்வி கேட்டிருந்தேன்!

    யூதர்களை இஸ்லாமியர்களும் வெறுக்க காரணம் என்ன?

    ReplyDelete
  17. @வால்பையன்
    இசுலாமியர்களும் யூதர்களும் உண்மையில் சகோதரர்களே. பைபிளின் பழைய ஏற்பாட்டை யூதர்களும் இசுலாமியர்களும் ஒத்து கொள்கின்றனர். இருவருக்கும் முதிருந்த மூதாதையர் ஆபிரஹாம் என்னும் இப்ராஹீம். இரு இனத்தவர்களின் பழக்க வழக்கங்களும் வெகுவாகவே ஒத்து போகும். இசுலாமியர்களுக்கு ஹலால் முறை உணவு தயாரிப்பு என்றால் யூதர்களுக்கு கோஷர் முறை. இரு முறைகளுமே மூசா நபி சொன்ன வழியில்தான் வருகின்றன.

    சகோதரர்களுக்குள் பகை ஏற்பட்டால் மிகப் பெரிய அளவில் வருவதை நாம் பார்த்துத்தானே வருகிறோம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  18. //டோண்டு பதில்கள் பதிவுக்குத்தான் சமீபகாலமாய் அதிக பின்னூட்டங்கள் வருவதை பார்த்தால்?//
    அவற்றில் பெரும்பான்மையானவை வால் பையனுடையதாகத்தான் இருக்கும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  19. // dondu(#11168674346665545885) said...

    //டோண்டு பதில்கள் பதிவுக்குத்தான் சமீபகாலமாய் அதிக பின்னூட்டங்கள் வருவதை பார்த்தால்?//
    அவற்றில் பெரும்பான்மையானவை வால் பையனுடையதாகத்தான் இருக்கும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்//

    ithuthaan unmaiyaana paasam

    ReplyDelete
  20. //
    யூதர்களை இஸ்லாமியர்களும் வெறுக்க காரணம் என்ன?
    //

    வால்,

    யூதர்களுக்கும் அரபிகளுக்கும் உள்ள சண்டை தற்போது ஏற்பட்டதே.

    இரண்டாம் உலகப்போருக்கு முன்பு வரை பல இஸ்லமிய அரசாங்கங்கள் யூதர்களை வரவேற்றுள்ளன.
    பாரசீகத்தில் (ஈரான்) இன்னும் யூதர்கள் இருக்கிறார்கள்.
    ஐரோப்பாவில் விரட்டியடிக்கப்பட்ட போது அரேபியாவிலும், ஆசியாவிலும் தஞ்சம் அடைந்தவர்கள் யூதர்க்ள். அப்போது அவர்களை சில அடிப்படைவாதிகள் தவிற மற்றவர்கள் வெகுவாக கண்டுகொள்ளவில்லை.

    இஸ்ரேல் என்ற நாடு உருவானதும் தான் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் குரல் ஓங்கி யூத வெறுப்பு அதிக அளவில் இசுலாமியர்களிடம் பரப்பப்பட்டு வருகிறது. இன்று இந்தியாவில் உள்ள ஜமா மசூதியில் இஸ்ரேல் கொடியை போட்டு மிதிக்கிறார்கள் என்றால் அதற்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகளே காரணம்.

    உண்மையில் லெபனானிலிருந்து, துருக்கியிலிருந்து, ஜோர்டனிலுருந்து, எகிப்திலிருந்து, மற்றும் எதியோப்பியாவிலிருந்தும் பல இஸ்லாமியர்கள் படிப்பு,வேலை விசயமாக இஸ்ரேல் வருகிறார்கள்.

    இந்த இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் இஸ்ரேலை அங்கீகரித்துவிட்ட நாடுகள்.

    சவூதி, குவைத், அரபு எமிரேட்ஸ் (அமீரகம்), பாகிஸ்தான், இரான் போன்ற நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை.

    ReplyDelete
  21. எவனோ ஒருவன்,
    நீங்கள் கோயில் சிற்பமெல்லாம் பார்த்ததில்லையா. நம் கலாச்சாரம் தான் வெளிப்படையாக இருந்துவந்துள்ளது. ஒரு சில மதக்கொள்கள் கத்தி முனையில் பரப்பப்பட்டதால் தான் முழுவதும் மூடிக்கொள்ளும் கலாச்சாரம் தற்போது இருக்கிறது. அது கூடியவிரைவில் மாறிவிடும்...அது நம் கையில் தான் இருக்கிறது.

    ReplyDelete
  22. //எவனோ ஒருவன்,
    நீங்கள் கோயில் சிற்பமெல்லாம் பார்த்ததில்லையா. நம் கலாச்சாரம் தான் வெளிப்படையாக இருந்துவந்துள்ளது. ஒரு சில மதக்கொள்கள் கத்தி முனையில் பரப்பப்பட்டதால் தான் முழுவதும் மூடிக்கொள்ளும் கலாச்சாரம் தற்போது இருக்கிறது. அது கூடியவிரைவில் மாறிவிடும்...அது நம் கையில் தான் இருக்கிறது. //

    நான் மத்தத்தையும் கடவுளையும் வெறுக்க காரணம் இதுவும் ஒன்று,
    கத்தி முனையில் பரப்பட்ட மதத்தை பற்றி சொல்பவர், கழுவிலேற்றி கொன்ற மதம் தான் இந்து மதம் என்பதை ஏன் மறந்தீர்கள்!

    ReplyDelete
  23. அனானியின் பதிலுக்கு நன்றி.
    //அது கூடியவிரைவில் மாறிவிடும்...அது நம் கையில் தான் இருக்கிறது.//
    மாறிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், தெற்கே வளர்ந்த எனக்கு அதை எற்றுக்கொள்ள கடினமாக இருக்கிறது.
    ---
    ஆனால் அந்தப் பக்கம் ஏன் திறந்த மாதிரி கலாச்சாரம் இருக்கிறது என்பதற்கு பதில் இல்லையா?
    ---
    டோண்டு பெரியப்பா என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

    ReplyDelete
  24. சர்ச்சை உண்டு பண்ணக்கூடிய ஒரு சொல் டோண்டுவால் நீக்கப்பட்டதுJuly 15, 2009 4:43 AM

    //கத்தி முனையில் பரப்பட்ட மதத்தை பற்றி சொல்பவர், கழுவிலேற்றி கொன்ற மதம் தான் இந்து மதம் என்பதை ஏன் மறந்தீர்கள்!
    //

    100000 = 10 என்றால் சரியா ?

    சமணர்கள் அனைவரையும் கூண்டோடு கழுவிலேற்றினார்களா ?

    வாதத்தில் தோற்ற சமண முனிவர்கள் கழுவிலேறினார்கள். சாதாரண சமண வியாபாரிகள், சமண வைத்தியர்கள், சமண குப்பை அள்ளுபவர்கள் எல்லாம் என்ன கழுவிலேறினது போல் பேசுகிறீர்களே?

    தவறான ஒப்பீடு வால்பையன்.


    //
    ஆனால் அந்தப் பக்கம் ஏன் திறந்த மாதிரி கலாச்சாரம் இருக்கிறது என்பதற்கு பதில் இல்லையா?
    //

    எந்தப்பக்கம் ?

    எது மக்களின் இயல்போ அதன் படிதான் அவர்கள் வாழ்வார்கள்.

    எல்லாம் போட்டு மறைத்தாலும் விலைமாது விலைமாது தான். ரேட் கூட மாறாது !

    திறந்து திரிந்தாலும் குடும்பப்பெண் குடும்பப்பெண் தான்.

    ReplyDelete
  25. your sharp and expert comments about
    the followimg personalities whose date of birth falls in the month of july.
    1.famous political leader
    2.famous business magnet
    3.famous cine actor
    4.famous cine director
    5.famous doctor
    6.famous engineer
    7.famous writer
    8.famous poet
    9.famous blogger
    10.your close friend

    ReplyDelete
  26. //100000 = 10 என்றால் சரியா ?//

    இது என்ன ஒப்பீடு என்று தெரியவில்லை!

    இந்துமதம்=இஸ்லாம்மதம்

    இது தான் சரி!
    நான் இந்த மதத்தை சேர்ந்தவன் என்பவனால் பிரச்சனையில்லை, என் மதமே பெரிது என்பவனால் தான் பிரச்சனை.

    அந்த வகையில் இந்தியாவில் இந்து மதத்தால் தானே பிரச்சனை!

    ReplyDelete
  27. @வால்
    //அந்த வகையில் இந்தியாவில் இந்து மதத்தால் தானே பிரச்சனை!//
    அப்படியென்றால் எப்போதும் பெரும்பான்மை இனத்தவரால்தான் பிரச்சனை வருமா?

    ReplyDelete
  28. //எவனோ ஒருவன் said...
    @வால்
    //அந்த வகையில் இந்தியாவில் இந்து மதத்தால் தானே பிரச்சனை!//
    அப்படியென்றால் எப்போதும் பெரும்பான்மை இனத்தவரால்தான் பிரச்சனை வருமா?//

    தன் இனம், தன் மதம், தன் சாதியே பெரிது என்று நினைக்கும் எவனாலும் பிரச்சனை வரும், வந்துகிட்டு இருக்கு, இனியும் வரும்.


    இந்தியாவில் பாபர் மசூதியை இடுக்கும் முன்னர் இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஊடுறுவல் இல்லை!

    ReplyDelete
  29. நன்றி வால்.
    //தன் இனம், தன் மதம், தன் சாதியே பெரிது என்று நினைக்கும் எவனாலும் பிரச்சனை வரும், வந்துகிட்டு இருக்கு, இனியும் வரும்.//
    பிரச்சனை ஆரம்பிப்பது யாரானாலும், அதிகம் அடி வாங்குவது என்னவோ சிறுபான்மை இனமே எனத் தோன்றுகிறது. அடிவாங்குவது என்ன, அழிந்துவிடுவதற்குக் கூட வாய்ப்பு இருக்கிறதே!

    ReplyDelete
  30. //பிரச்சனை ஆரம்பிப்பது யாரானாலும், அதிகம் அடி வாங்குவது என்னவோ சிறுபான்மை இனமே எனத் தோன்றுகிறது. அடிவாங்குவது என்ன, அழிந்துவிடுவதற்குக் கூட வாய்ப்பு இருக்கிறதே! //


    மொத்த இந்தியாவும் சேர்ந்து மொத்த இஸ்லாமியர்களை வெட்டப்போவதில்லை!
    இந்த மத பிரச்சனையில் சமமான மதத்தினரையே இழந்திருக்கிறது!
    வருத்தமெல்லாம் அப்பாவிகளும் இதில் பலியானதே!

    மத அடையாளங்களை துறந்து வாழ ஒரு மனிதனுக்கு என்ன கஷ்டம்னு எனக்கு தெரியல!

    ReplyDelete
  31. //your sharp and expert comments about
    the followimg personalities whose date of birth falls in the month of july.//
    ஜூலையில் பிறப்பது என்ன விசேஷம் எனத் தெரியவில்லை. மேலும் கேள்விகள் தெளிவாக இல்லை. மன்னிக்கவும். இவற்றுக்கெல்லாம் பதிலளித்து கொண்டிருந்தால் முடிவேயில்லாமல் போய் கொண்டிருக்கும். ஆளை விடுங்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  32. //மொத்த இந்தியாவும் சேர்ந்து மொத்த இஸ்லாமியர்களை வெட்டப்போவதில்லை!
    இந்த மத பிரச்சனையில் சமமான மதத்தினரையே இழந்திருக்கிறது!//
    நான் இனம் இனம் என்றுதானே குறிப்பிடுகிறேன். அதற்கு ஏன் எப்போதும் மதத்தையே இழுக்கிறீர்கள்.
    இனம் என்றாலே மதம் என்றுதான் அர்த்தமா?

    ReplyDelete
  33. ஆரிய இனம், திராவிட இனம் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை!

    அவை கலந்து பல நூற்றாண்டுகள் ஆகிருச்சு!
    ஆனா மதம் மாறியவர்கள் தான் குணத்தை மாத்தல!

    ReplyDelete
  34. //

    இந்தியாவில் பாபர் மசூதியை இடுக்கும் முன்னர் இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஊடுறுவல் இல்லை!
    //

    சுத்தப்பேத்தல்


    காசுமீர் பிரச்சனை இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்தே இருந்து வந்துள்ளது. தயவு செய்து உங்கள் அறியாமையை இப்படி பரைசாற்றாதீர்கள்.

    ReplyDelete
  35. //காசுமீர் பிரச்சனை இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்தே இருந்து வந்துள்ளது. தயவு செய்து உங்கள் அறியாமையை இப்படி பரைசாற்றாதீர்கள். //

    நீங்க பேத்தாதிங்க!
    இந்தியாவில் இருக்கும் எந்த இஸ்லாமியனும் காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்க சொல்லி சொல்லவில்லை! பாகிஸ்தானியில் இருந்து ஊடுறுவதல் மட்டுமே! அதுவும் காஷ்மீரில் மட்டுமே!

    பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனையை சொறிஞ்சிவிட்டுகிட்டே இருந்தா அப்படிதான் நடக்கும்!

    ReplyDelete
  36. //
    இந்தியாவில் இருக்கும் எந்த இஸ்லாமியனும் காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்க சொல்லி சொல்லவில்லை! பாகிஸ்தானியில் இருந்து ஊடுறுவதல் மட்டுமே! அதுவும் காஷ்மீரில் மட்டுமே!
    //

    பிரச்சனை காஷ்மீர் அல்ல. நீங்கள் சொல்லிய தீவிரவாத ஊடுருவல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு தான் என்ற சொல்லாடல்.

    இஸ்லாமியத் தீவிரவாதப்பிரச்சனை என்றுமே இருந்துவந்துள்ளது. அது பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு வெளியில் தெரிய ஆரம்பித்துவிட்டது என்பது உண்மை நிலை.

    இந்த நாற்றத்தை எவ்வளவு செகுலர் அத்தர் போட்டாலும் மறைக்க முடியாது.

    ReplyDelete