நிரந்தர பக்கங்கள்

7/14/2009

வீடியோக்கள் வலையேற்றப்பட்டன, நன்றி வீரமாமுனிவருக்கு!

ஏற்கனவே போன நேர்காணலுக்கான வீடியோக்களை வலையேற்றிய அனுபவம் இருந்ததால் இம்முறை அவ்வளவு கடினமாக இராது என நினைத்தேன். ஆனால் என்ன அக்கிரமம்? dat-லிருந்து எம்பெக் வடிவுக்கு மாற்ற நான் முன்பு கண்டுணர்ந்த நிரல் எக்ஸ் வீடியோ கன்வர்டர் (X video converter) நிறுவ முயன்றால் அட்வாட்ச் (Adwatch of Adaware) இந்த நிரலில் Worm32 sbot இருப்பதாக கூறி அதை திறக்க அனுமதி மறுத்தது. இது என்னடா கிணறு வெட்ட பூதம் கிளம்பியது எனப் பார்த்து, அந்த நிரலை அனின்ஸ்டால் செய்து கோப்பையே மொத்தமாக வன்தகட்டிலிருந்து அழித்து எறிந்தேன். மறுபடியும் கூகளுக்கு போனால் ஒன்றும் சரியாக அமையவில்லை. அப்போதுதான் பதிவர் பிரதாப் பெஸ்கி (எவனோ ஒருவன்) உதவிக்கு வந்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

அவர் ஒரு வீடியோ மாற்றியின் ஜிப் செய்த கோப்பு ஒன்றை அனுப்பினார். அது rar-ல் இருந்ததால் என்னால் அதை திறக்க இயலவில்லை. ஆகவே மறுபடி அன்புடன் winzip-ல் கோப்பை அனுப்பினார். ஆக முதல் ஸ்டெப் ஓவர்.

மொத்த டேப் 35 நிமிடத்துக்கு மேல் இருந்ததால் அதை நான்காக உடைக்க வேண்டியிருந்தது. இரண்டு மூன்று மென்பொருட்களை ஒன்றன் பின்றாக பார்த்து தரவிறக்கி எல்லாம் செய்த பிறகு பார்த்தால் 30% மட்டும்தான் கன்வெர்ட் செய்ய முடியும், தேவையானால் விலை கொடுத்து வாங்கு என கூறப்பட்டது. முதலிலேயே தெரிந்திருந்தால் தரவிறக்கியிருக்கவே மாட்டேனே நாயே என அவன்களை திட்டி விட்டு, கடைசியில் Free Video Cutter என்னும் மென்பொருளை கண்டுபிடித்து தரவிறக்கி, வீடியோக்களை நான்காக பிரித்தேன். நான்கையும் யூ ட்யூப்பில் எனது பக்கத்துக்கு சென்று அப்லோட் செய்ய ஆணை கொடுத்தேன். பல மணி நேரம் பிடிக்கும் ஆப்பரேஷன். காலை ஒன்பதரை மணியளவில் ஆரம்பித்தது.

போன முறை மாதிரி ஸ்க்ரீனுக்கு நடுவே “unregistered" வராது என்பதில் ஒரு நிம்மதி. ஆனால் அத்துடன் பிரச்சினைகள் தீரவில்லையே. முதல் பாகம் வலையேற்ற தேவைப்பட்ட நேரம் மூன்றரை மணிகளுக்கும் அதிகம். ஒரு மணி நேரத்தில் இணைய இணைப்பு போனதில் அதுவரை அப்லோட் செய்தது வேஸ்ட் ஆகிப்போயிற்று. இரண்டரை மணி நேரத்தில் இன்னொரு தடங்கல் இணைப்பில் ஆக அதுவும் வேஸ்ட். நமக்கு வேறு பொறுமை இல்லையாதலால் அவ்வப்போது எதையாவது நோண்டி பார்க்க மறுபடி முதலிலிருந்தே ஆரம்பிக்க வேண்டியிருந்தது. கடைசியாக விடாமுயற்சி பிற்பகல் மூன்றுக்கு மேல் தொடங்கி மாலை 7 மணியளவில் முடிந்தது. அதுவும் முதல் பாகம் மட்டுமே. இப்போது இரண்டாம் பாகம் வலையேற்பு நடக்கிறது. இரவு 11 மணி வரை இதுவே எடுக்கும். அதற்குள் மின்சாரம் போகாது இருக்க வேண்டும். இணையத் தொடர்பு சொதப்பாமல் இருக்க வேண்டும்.

அதுவும் முதல் பகுதியை வலையேற்றும் கடைசி முயற்சியின்போது பொறுமையை இழந்து அவ்வப்போது அப்லோடிங் பக்கத்தை பார்த்து ஏதேனும் நோண்டி ஆப்பு வைத்து கொள்ளாமல் இருக்க ஒரு டிஸ்ட்ராக்சன் தேவைப்பட்டத்து. அதற்கு துணையாக நான் தேர்ந்தெடுத்தவைதான் நண்பர் ஜீவியின் பதிவுகள். ஆரம்பத்திலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக லேட்டஸ்ட் வரை சுட்டி பார்த்ததில் நேரம் போனதே தெரியவில்லை. அப்லோடிங்கும் முடிந்து இங்கு சுட்டியும் தர முடிந்தது. ஆக ஸ்பெஷல் நன்றிகள் அவருக்கும்.
முதல் பகுதி கீழே எம்பெட் செய்யப்பட்டுள்ளது.



பயந்தது போலவே இரண்டாம் பகுதியின் மேலேற்ற முடிய 44 நிமிடங்கள் இருந்த போது ஓரிரு நிமிடங்களுக்கு பவர் நின்று போனதில் அதுவும் கோவிந்தா. விடுவதாக இல்லை என்னும் முனைப்புடன் அதை மீண்டும் துவங்கி முடிகும்போது மணி விடியற்காலை 01.54.
இரண்டாம் பகுதி கீழே எம்பெட் செய்யப்பட்டுள்ளது.



விடியற்காலை ஐந்தரை மணியளவில் கண் விழித்து பார்த்தால் மூன்றாம் பகுதி அப்லோடிங் முடிந்து விட்டிருக்கிறது.
மூன்றாம் பகுதியை கீழே பார்க்கவும்.



காலை சரியாக 08.10-க்கு நான்காம் பகுதி வலையேற்றம் செய்யப்பட்டது. அது அடுத்த முப்பது நிமிடத்தில் எல்லா பிராசஸிங் வேலைகளும் முடிந்து சரியாகப் பார்க்கக் கிடைக்கும். இருப்பினும் சுட்டி இப்போதே வந்து விட்டது.
நான்காம் பகுதியை கீழே பார்க்கலாம்.



அப்பாடா ஏதோ எவரெஸ்டையே பிடித்த திருப்தி. ஆனால் ஒன்று. இரவில் தூங்கும் நேரத்தில் இம்மாதிரியான மெகா வலையேற்றங்களை வைத்து கொள்வதே சிறப்பு. இரவில் அப்லோடிங்கின் வேகம் அதிகரிக்கிறது. நாம் பாட்டுக்கு தூங்கப் போவதால் அருகில் அமர்ந்து ஏதேனும் விஷமம் செய்து கொண்டிராமல் நம்மையே நம்மிடமிருந்து காப்பாற்றுகிறது. சொன்னாலும் சொன்னேன், அனுபவித்தே சொன்னேன்.

ஒரு குறிப்பிட்ட பகுதியை பார்க்க ஹைப்பர் லிங்கில் வலது க்ளிக்கின் மூலம் புது ஜன்னலில் அதை திறக்கவும். டௌன்லோட் ஆக சற்று நேரம் ஆகும் ஆதலால் ஆரம்பித்த உடனேயே ப்ளேக்கு ஸ்டாப் போடவும். சற்று கணிசமான அளவு சேர்ந்ததும் ப்ளேயை ரிலீஸ் செய்யலாம். வீடியோவை தொடர்ச்சியாக பார்க்கலாம். இதே மாதிரி மீதி எல்லா 4 பகுதிகளுக்கும் செய்யலாம்.

இதில் பரமார்த்த குரு கதை எழுதிய வீரமாமுனிவர் எங்கிருந்து வந்தார் எனக் கேட்பவர்களுக்கு, அவரது பூர்வாஸ்ரம பெயர் பெஸ்கியாகும். நமது பதிவருக்கும் அவரது பெயரையே (அது அவரது தாத்தாவின் பெயராம்) வைத்துள்ளனர். பை தி வே அவர் தன்னை எனது பேரன் ரேஞ்சுக்கு நினைத்து கொண்டிருந்திருக்கிறார். பிறகு கஷ்டப்பட்டு எனது வயது அவரின் பெரியப்பா ஆவதற்கு மட்டுமே ஏற்றது (அப்படி என்னப்பா எனக்கு வயசாகி விட்டது) என அவரை ஒத்து கொள்ள செய்தேன். அவருக்கு மீண்டும் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

30 comments:

  1. விளம்பரம் எல்லாம் இல்லாமல் செய்திருந்தால் கோப்பின் அளவு குறைந்திருக்குமே!!
    நகர்படத்தை முழுமையாக இன்னும் பார்க்கவில்லை.

    ReplyDelete
  2. Dondu Sir,

    Last time kalai malar la vandha matter theriya kudathnu getup change a ?

    Apdiya Youthu thaan ponga....

    "Avanae kolupeduthu azhikatha vara.. Blog apdiyae thaan irukum".... Nice Punch

    ReplyDelete
  3. @வடுவூர் குமார்
    வீடியோவை நான்காகப் பிரிக்க வேண்டிய மென்பொருளை தேடுவதே பெரும்பாடாக போன நிலையில் முதல் ஒரு நிமிட விளம்பரத்தை கட் செய்ய மறந்துவிட்டேன். :)

    @திவ்யதேசம்
    நன்றி. :)

    அன்புட,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. Night 2 mani varaikum muzhichirundhutu, Kaalaila epdi sir 5 maniku elundhirukeenga... Nejamavae Youth u thaan...

    Give link for 3 & 4 th part

    ReplyDelete
  5. @திவ்யதேசம்
    மூன்றாம் பதிவையும் ஏற்றியாகி விட்டது. நான்காம் பதிவு வலையேற இன்னும் இரண்டரை மணி நேரம் ஆகும் என அறிவிப்பு யூட்யூப் அப்லோடிங் பக்கம் தருகிறது.

    மூன்றாம் பகுதி under processing என யூட்யூப் வீடியோ காட்டும் பக்கம் கூறுகிறது. இன்னும் சில நிமிடங்களில் அதை பார்க்கவியலும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. Thanks for sharing, Its nice.

    But the TV person (especially that male) talks more than you, that is irritating. I think this is with all Male VJ's in Jaya TV.

    This is the main reason for the failure of Jaya TV. The VJ's do not allow the guests to speak lot.

    That is why I can not watch your videos fully. That guy really irritating and makes the programme as much boring as he can.

    You could have removed the title song etc

    ReplyDelete
  7. Dondu Sir,

    Watched all three parts till now, will wait for the next one.

    Interview was very good and you answered one of my questions in the interview itself. I always wanted to know how we can write in Tamil, your interview provided the answer.


    Regards.
    Partha.

    ReplyDelete
  8. மக்களின் கருத்துகளை பார்ப்போம்!

    ReplyDelete
  9. சில TIPS.

    1. download வேகம் அதிகரிக்க, பாதியில் விட்டுப்போனாலும் விட்ட இடத்தில் இருந்து தொடங்க

    Free Download Manager 3.0 பயன் படுத்தலாம் (இலவசம்)
    சுட்டி
    http://www.tucows.com/preview/377174

    (uploading வேகம் அதிகரிக்க youtube ல் வசதி இல்லை என்று நினைக்கிறேன்)

    2. video conversion

    Free Video Converter 1.0 (இலவசம்)

    சுட்டி
    http://www.tucows.com/preview/518513

    3. youtube ல் ஏற்றுவதற்கு mp4 format, resolution 320x240
    ஏற்றது. மேற்கண்ட இலவச மென்பொருள் பயன்படுத்தி எந்த வீடியோவையும் convert செய்யலாம்.

    4. youtube ல் இருந்து டவுன்லோடு செய்ய
    http://keepvid.com/ என்னும் தளத்திற்கு சென்று தேவையன உரலைக் கொடுக்கவும். பிறகு டவுன்லோடு பட்டனை அழுத்தினால் 2 link கொடுப்பார்கள் ஒன்று flv (low quality மற்றது mp4 (high quality)


    நன்றி.

    ReplyDelete
  10. Dondu Sir,

    can you post the translation of this article by Arun Shourie ?

    http://www.indianexpress.com/news/on-the-way-down/488780/0

    though he has written with BJP in mind - even ADMK, DMK can be looked at through this prism.

    - Mahesh

    ReplyDelete
  11. இதற்கு முன்னாலேயே ஒரு பதிவில் இந்த மாதிரி செய்ய ஒரு இலவச மென்பொருள் சொல்லியிருந்தேன் என்று நினைக்கிறேன்.VirtualDub.

    ReplyDelete
  12. முதல் பகுதியில்...
    பாண்டித்யமா? பண்டித்யமா?
    எனக்கு தெரிந்து பண்டித்யம்.
    நகர்பட தெளிவு அருமையாக இருக்கு.
    மீதி பகுதிகளையும் பார்த்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
  13. 3 ம் பகுதியிலிருந்து குரலும், படமும் சிங்க் ஆகாமல் வருகிறது. என்னுடைய ஃபிளாஷ் பிளேயரில் பிரச்சனையா அல்லது அனைவருக்கும் அப்படித்தானா என்று தெரியவில்லை ?

    மொழிபெயர்ப்பு பற்றி சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள். எப்படி ஹாரி பாட்டர் போன்ற நாவல்கள் உடனடியாக அதுவும் சிறப்பாக ஆங்கிலத்திலிருந்து ஜெர்மன் மற்றும் பிரஞ்சுக்கு மொழிபெயர்க்கப்படுகிறதோ அதோ போல் தமிழில் எழுதப்படும் நாவல்கள் கதைகள் கன்னடம், மலையாளம் ஹிந்தி என்று மொழிபெயர்க்கப்படுவதில்லையே!

    கன்னடம், இந்தி மொழி நாவல்கள் தமிழிலும் வருவது அபூர்வமாக இருக்கிறதே ஏன் ?

    இந்தியாவில் இந்திய மொழிப் புலமை படைத்தவர்காள் ஏன் மொழி பெயர்ப்பு செய்வது இல்லை அல்லது அதற்கான தகுந்த சூழல் ஏன் ஏற்படவில்லை ?

    ReplyDelete
  14. படத்தைப் பார்த்துவிட்டு


    இரண்டுக்கும் ஒற்றுமைகளே அதிகம் என்று எண்ண நேர்ந்தது.

    ReplyDelete
  15. 1.Define corruption and its types and explain with living examples?
    2.waht is your opinion about the resignation of Metroman Mr E Sridharan ?
    3.Offense is the best defense - your view and comment?
    4. Kerala CM V. S.Achuthanandan out of Polit Bureau -what next?
    5. provery makes ignorancy or ignorancy makes the provery - which is true?
    6. Why number 13 is considered as unlucky.
    7. What do you think about Naxalism - Terrorism - Social revolt of the deprived ?
    8.What will happen if China attacks India?
    9.What produces love ?
    10.What is the significance of dream-tell your personal experience?

    ReplyDelete
  16. 11.Who is responsible for the delay of 26/11 probe?how to set right it?
    12.Why blood pressure flactuates time to time for all?
    13.Why great people is called as star all over the world?
    14.What is the colour of knowledge?
    15.Why plastic carry bag is not hygenic to humanbeings?
    16. Do u agree in splitting the states into two and tell the merits and demerits?
    17.navratna company-explain the requirements?
    18.Which state Police is functioning o.k?
    19. will it be possible to forget our past and wholly concentrate on present for a common man?
    20.Suggest simple ways to stay healthy at the age of 60?

    ReplyDelete
  17. /வால்பையன் said...


    நடந்து முடிந்த நிகழ்ச்சிக்கு எனது விமர்சனம்!

    சும்மா ஒரு விளம்பரம்தேன்//

    வாழ்க வளமுடன்
    வாரிசு நலமுடன்
    வால்பையன் எந்நாளும்
    வானத்து சூரியன்போல

    ReplyDelete
  18. @வஜ்ரா
    ஒரிஜினல் சிடியிலேயே அப்படித்தான் வந்துள்ளது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  19. டோண்டு,

    விடாமல் நான்கு பாகங்களையும் பார்த்து முடித்தேன். உங்களைப் பற்றிய பல சுவையான தகவல்கள் தெரிந்து கொண்டேன். நல்ல நேர்காணல்!

    Keep it up!

    ReplyDelete
  20. ஜெயாத் தொலைக்காட்சியில் காலைமலரில் உங்கள் நேர்முகம் பற்றிய வீடியோ தொகுப்பு அருமை.

    பாராட்டுக்கள்.

    தொடரட்டும் உங்கள் பதிவுலகச் சேவை
    அனைவரையும் பண்பு பாராட்டும் நற்குணத்திற்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  21. நன்றியும் வாழ்த்துகளும்!

    ReplyDelete
  22. நாளை கேள்வி பதில் பதிவுக்கு:

    கவி அரசின் இந்த பாடல் வரிகளை கேட்டுகும்போது
    என்ன உணர்வு மேலோங்குகிறது?

    1.ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
    உள்ளத்தில் உள்ளது அமைதி
    2.உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
    உலகம் உன்னிடம் மயங்கும்...
    3.அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்
    4.வந்தவரெல்லாம் தங்கி விட்டால் - இந்த மண்ணில் நமக்கெ இடமேது?
    5.ஆடும் வரை ஆட்டம்
    ஆயிரத்தில் நாட்டம்
    கூடிவரும் கூட்டம்
    கொள்ளிவரை வருமா?
    6.பருவம் என்னும் காற்றிலே
    பறக்கும் காதல் தேரிலே
    ஆணும் பெண்ணும் மகிழ்வர்
    சுகம் பெறுவர் - அதிசயம் காண்பார்
    7.அன்புக்கோ இருவர் வேண்டும்
    அழுகைக்கோ ஒருவர் போதும்
    இன்பத்துக் கிருவர் வேண்டும்
    ஏக்கத்துக் கொருவர் போதும்.
    8.சொத்து சுகம் நாடார் , சொந்தந்தனை நாடார்
    பொன்னென்றும் நாடார் , பொருள் நாடார், தான்பிறந்த
    அன்னையையும் நாடார் , ஆசைதனை நாடார் ,
    நாடொன்றே நாடித்தன் நலமொன்றும் நாடாத
    நாடாரை நாடென்றார்.
    9.ஒரு கோல மயில் என் துணையிருப்பு
    இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
    நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு
    10.உண்டென்றால் அது உண்டு
    உண்டென்றால் அது உண்டு
    இல்லையென்றால் அது இல்லை
    இல்லையென்றால் அது இல்லை

    ReplyDelete
  23. 1. திருமதி. மன்மோகன் சிங்கும் திருமதி சர்கோசி (கார்லா ப்ரூனி) யும் பிரெஞ்சு தேசியதினத்தில் என்ன பேசியிருப்பார்கள் என ஜூ.வி டயலாக் டைப்பில் உங்கள் கற்பனையை வெளிப்படுத்துங்களேன் ? (பார்க்க இன்றைய ஹிண்டு கடைசி பக்க போடோ). -இந்தியில் இவரும் பிரெஞ்சில் அவரும் சொல்வதாக போட்டால் பேஷ்.

    2. இதுநாள் வரை இந்திய குடியரசு தினத்தில் நாம் தான் பல்வேறு நாட்டு தலைவர்களை அழைத்து 3 மணிநேரம் உட்காரவைத்து அணிவகுப்பை பார்க்க வைப்போம். ஒரு இந்தியப் பிரதமரை ஒரு வளர்ந்த நாடு தங்கள் தேசிய தினத்தில் கூப்பிடுவது இது தான் முதல் முறையா ?

    ReplyDelete
  24. Video quality is too good! I am amazed. Is it how you get TV reception these days?

    ReplyDelete
  25. இது எனது முதல் வரவு பதிவுகள் அருமை தொடருங்கள்....

    ReplyDelete
  26. எனக்காக ஒரு கேள்வி ... பதில் தர இயலுமா?

    இந்த வருடம் தான் முதல் முறை ஐ.டி. ரிடர்ன்ஸ் பையில் செய்வேன். ஆயிரம் ரூபாய்க்கு மேலே டேக்ஸ் கட். சாப்ட்வேர் துறை என்பதால், சில வருடங்கள் முன் வாங்கிய சம்பளம் கணக்கு வழக்கு கேட்பார்களா? பழைய கம்பெனி சில நூறு மட்டும் டேக்ஸ் அதிகம் கட் செய்திருந்தாலும் ... விட்டுவிட்டேன்! ரெண்ட் பில் சப்மிட் செய்யவில்லை என்ற காரணம்.

    - புதியவன், பெங்களூர்.

    ReplyDelete
  27. @புதியவன், பெங்களூர்
    இம்மாதிரியான கேள்விகள் எல்லாம் ஏதேனும் ஆடிட்டரை கேட்பதே முறை. பதிலளிக்கும் தகுதி எனக்கு இல்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  28. சார்கோழிJuly 16, 2009 12:32 AM

    //
    2. இதுநாள் வரை இந்திய குடியரசு தினத்தில் நாம் தான் பல்வேறு நாட்டு தலைவர்களை அழைத்து 3 மணிநேரம் உட்காரவைத்து அணிவகுப்பை பார்க்க வைப்போம். ஒரு இந்தியப் பிரதமரை ஒரு வளர்ந்த நாடு தங்கள் தேசிய தினத்தில் கூப்பிடுவது இது தான் முதல் முறையா ?
    //

    இல்லை. bastille day அன்று ஒவ்வொரு வருடம் ஒரு நாட்டுத்தலைவரை அமர வைத்து அணிவகுப்பு நடத்துவது ஃபிரான்ஸ் நாட்டில் பல வருடங்களாகவே நடந்துவருகிறது.

    இந்தியாவின் குடியரசுத்தலைவர் தான் இத்தகய மரியாதையை ஏற்பார். அதற்குத்தோதாக நாமும் குடியரசுத்தலைவரை ரப்பர் ஸ்டாம்ப் என்ற முறையிலேயே முக்கிய பணிகள் ஏதுமில்லாமல் வைத்துள்ளோம்.

    ReplyDelete
  29. நன்றி!

    இன்னொரு தளத்தில் கேள்வி கேட்டுள்ளேன்.

    - புதியவன், பெங்களூர்

    ReplyDelete