நிரந்தர பக்கங்கள்

10/20/2009

ரொம்ப நாட்களுக்கு பிறகு மீண்டும் புதிர்கள்

புதிர்கள் விஷயம் வழக்கம் போலத்தான். விடைகள் தர இயலாத கேள்விகள் அடுத்த புதிர்கள் பதிவுக்கு கேரி ஓவர் ஆகும். அம்புட்டுதேன்.

1. ராமகிருஷ்ணமாச்சாரிக்கு கோபமான கோபம். “அதெப்படி? நான் அறுபது மைல் வேகத்துலே காரை ஓட்டினேன் போல. அதனால போலீஸ் பிடிச்சுட்டாங்க. ஆனால் அதே தெருவில் எழுபது மைல் வேகத்துக்கு குறையாத அளவில் காரை ஓட்டின அந்தக் கட்டேல போனவங்க ரெண்டு பே ரை மட்டும் ஒண்ணுமே சொல்லாம விட்டுட்டாங்க”? அதானே, ஏன் அப்படி நடந்தது?

2. வேலை செய்யற இடத்துல துணி கிழிஞ்சதாலே வடிவேலு செத்துட்டான். இது நியாயமா?

3. ஒரே தெருவில எதிரெதிரா வந்த காருங்க மோதிக்கலைதான். ஆனாலும் ஒவ்வொரு காரிலிருந்தும் ஒரு பயணிங்கற கணக்குல மொத்தம் ரெண்டு பேர் அவுட்டு. எப்படி?

4. விஷத்தை சாப்பிடலைன்னா கூட இந்த தம்பதிங்க இறந்துட்டாங்க, ஏன்?

5. நாற்காலியோட முருகனை அவங்க அப்பா அம்மாவே கட்டறாங்க. ஆனால் முருகன் கோபித்து கொள்ளவில்லை.

6. மஞ்சுளா சென்னையில் செத்தாள். ஆனால் கமலாவோ கடலிலேயே செத்தாள். கமலா செத்ததற்கு மட்டும் எல்லோரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். மஞ்சுளா செத்ததுக்கு அவளைத் திட்டினர். என்ன வில்லத்தனம்?

7. அடிக்கடி சிலேடையால் ஆங்கிலேய மன்னனை வெறுப்பேற்றியதால் விதூஷகனுக்கு தூக்கு தண்டனை தந்தான் மன்னன். பிறகு மனமிரங்கி இனிமேல் சிலேடை பண்ணாமலிலிருந்தால் மன்னிப்பு என செய்தி அனுப்ப, அப்பவும் சிலேடையை விடாததால் விதூஷகன் தூக்கிலிடப்பட்டான். என்ன நடந்தது?

8. 1964-ல் பிறந்த ஒருவன் 28 வயதில் 1968-ல் இறக்கிறான். எப்படி சாத்தியம்?

9. மாட்டை 30 அடி நீளக் கயிற்றாலே கட்டியிருக்காங்க, ஆனாக்க அதனால் நாற்பது அடிதூரத்துல இருக்கற வைக்கோற்போரை மேய இயலுகிறது, எப்படி?

10. இந்த இரு சொற்களில் நிறையா எழுத்துக்கள் உள்ளன. அவை என்ன?


அன்புடன்,
டோண்டு ராகவன்

35 comments:

  1. 1. அது ஆம்புலன்ஸ் அல்லது போலீஸ் வண்டியோ இல்ல அரசு வண்டியா இருக்கலாம்

    2.கிழிஞ்ச துணியால அவன் தூக்கு மாட்டி இருந்து இருப்பான்.

    9. மாட்டின் காலில் கயிற்றை கட்டி இருபார்கள் .

    10. டோண்டு ராகவன் (ஹி ஹி ஹி )

    ReplyDelete
  2. @ரோமியோ பாய்
    எல்லா விடைகளுமே தவ்று. எனிவே கடைசி விடைக்கு :)))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. //ஒரே தெருவில எதிரெதிரா வந்த காருங்க மோதிக்கலைதான். ஆனாலும் ஒவ்வொரு காரிலிருந்தும் ஒரு பயணிங்கற கணக்குல மொத்தம் ரெண்டு பேர் அவுட்டு. எப்படி?//

    இது ஆம்புலன்சாக இருக்கலாம்!

    ReplyDelete
  4. //மஞ்சுளா சென்னையில் செத்தாள். ஆனால் கமலாவோ கடலிலேயே செத்தாள். கமலா செத்ததற்கு மட்டும் எல்லோரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். மஞ்சுளா செத்ததுக்கு அவளைத் திட்டினர். என்ன வில்லத்தனம்?//


    எந்த சீரியலில் வரும் வில்லி மஞ்சுளா!?

    ReplyDelete
  5. //மாட்டை 30 அடி நீளக் கயிற்றாலே கட்டியிருக்காங்க, ஆனாக்க அதனால் நாற்பது அடிதூரத்துல இருக்கற வைக்கோற்போரை மேய இயலுகிறது, எப்படி?//

    ஒரு முனையை கழித்தில் கட்டி, ஒரு முனையை சும்மா விட்றுப்பாங்க!

    ReplyDelete
  6. //இந்த இரு சொற்களில் நிறையா எழுத்துக்கள் உள்ளன. அவை என்ன?//

    போஸ்ட் பாக்ஸ்

    ReplyDelete
  7. @வால்பையன்
    போஸ்ட் பாக்ஸ் மர்றும் மாட்டுக் கயிறு சரியான விடை. மர்ற இரு விடைகளும் தவறு.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. 9. அவன் பிறந்ததுவும் இறந்ததுவும் ஒரு பெரீய்ய்ய ஆஸ்பத்திரிலே, சரியா? (பட்டென்று பலூனை பஞ்சர் பண்ண வேண்டமென்றுதான் நேரடியான விடை சொல்லவில்லை)

    - சிமுலேஷன்

    ReplyDelete
  9. @சிமுலேஷன்
    சரியான விடை. அவை அறையின் எண்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. 1. எழுபது மைல் வேகத்தில் வந்தது அவரைப் பிடிக்க வந்த போலீஸ் காரர்களே. (அந்த வேகத்தில் வந்தால் தான் அவரைப் பிடிக்க முடியும்.)

    3.ஏற்கெனெவே இறந்த உடல்களைத் தான் இந்த இரு கார்களும் சுமந்து வந்தன.

    4.ரொம்ப வயசாகி இறந்து விட்டார்களோ?

    5. முருகன் என்பது அவர்கள் வீட்டு நாய்.

    6. இரண்டும் செயற்கை கோள்களின் பெயர்கள்.

    8. 1964 - லேபர் ரூம் 1968 - ஆபரேஷன் ரூம்.

    ReplyDelete
  11. விடைகளைத் தெரிந்து கொள்ள.. :)

    ReplyDelete
  12. //1. ராமகிருஷ்ணமாச்சாரிக்கு கோபமான கோபம். “அதெப்படி? நான் அறுபது மைல் வேகத்துலே காரை ஓட்டினேன் போல. அதனால போலீஸ் பிடிச்சுட்டாங்க. ஆனால் அதே தெருவில் எழுபது மைல் வேகத்துக்கு குறையாத அளவில் காரை ஓட்டின அந்தக் கட்டேல போனவங்க ரெண்டு பே ரை மட்டும் ஒண்ணுமே சொல்லாம விட்டுட்டாங்க”? அதானே, ஏன் அப்படி நடந்தது?//

    கட்டேல போன பிறகு (அவனுங்க விபத்துல இறந்த பிறகு) அவனுங்களை என்ன பண்ண முடியும்?

    ReplyDelete
  13. //4. விஷத்தை சாப்பிடலைன்னா கூட இந்த தம்பதிங்க இறந்துட்டாங்க, ஏன்?//

    தம் அடிச்சி அடிச்சி, பதி இறந்துட்டாரோ?

    பதி - ஆண்(குறில்)
    பதிங்க - ஆண்கள்(நெடில்)?

    ReplyDelete
  14. //2. வேலை செய்யற இடத்துல துணி கிழிஞ்சதாலே வடிவேலு செத்துட்டான். இது நியாயமா?//

    கிழிஞ்ச துணி எஸ்கலேட்டர், லிஃப்ட் அல்லது வேறு ஏதாவது சாதனத்தில் சிக்கி அதுல செத்திருக்கலாம்.

    ReplyDelete
  15. 1. ஏனென்றால், அந்த “கட்டைல” போறவனுங்கதான் ராமகிருஷ்ணமாச்சாரியை பிடித்த போலிஸ்காரர்கள்! சரியா?
    3. ரெண்டும் Obituary Van? சரியா?

    ReplyDelete
  16. முதல் கேள்விக்கு இதுவரை அளிக்கப்பட்ட விடைகள் எல்லாமே தவறு. கட்டெல போனவங்கன்னு சொன்னது வெறுமனே திட்டுதான். அவங்க போலீஸ்காரங்களும் இல்லை. ராமகிருஷ்ணமாச்சாரி செஞ்ச வேலைக்கு அவன் உயிரோட வந்ததே ஆச்சரியம்.

    சுதாகர் சொன்ன மாதிரித்தான் வடிவேலு செத்தான்.

    மூன்றாம்/நான்காம்/ஐந்தாம்/ஆறாம் கேள்விக்கான சரியான விடை இதுவரை வரவில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவ்ன்

    ReplyDelete
  17. 1. He drove in one way street at 60 mph (in wrong direction)

    ReplyDelete
  18. 1. எதிரெதிர் பாதைகளில் செல்கிறார்கள். வேகக்கட்டுப்பாடு மாறுபடுகிறது.

    ReplyDelete
  19. //1. He drove in one way street at 60 mph (in wrong direction)//
    சரியான விடை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  20. //5. முருகன் என்பது அவர்கள் வீட்டு நாய்.//
    எப்படி முடியும்? நாயோட அப்பா அம்மாவாலே நாயைக் கட்ட முடியுமா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  21. 5. முருகனை கார் சீட்டோடு இணைக்க, சீட் பெல்ட் மாட்டுராங்க.. சரியா?

    ReplyDelete
  22. //5. முருகனை கார் சீட்டோடு இணைக்க, சீட் பெல்ட் மாட்டுராங்க.. சரியா?//
    சரியான விடை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  23. 4. வயசானதாலே இறந்து போனாங்களோ?

    ReplyDelete
  24. 5. முருகன் ஏரோப்லனில் போகையில் sealt belt போட்டு விடுகிறார்கள்.

    6. இரண்டும் புயலின் பெயர்கள். மஞ்சுளா புயல் கரையைக் கடந்து, சென்னையில் வலுவிழந்ததால் மக்கள் அந்த புயலைத் திட்டினர். கமலா புயலோ, கடலிலே வலுவிழந்ததால், மக்கள் வாழ்த்தினர்.

    ReplyDelete
  25. //மஞ்சுளா சென்னையில் செத்தாள். ஆனால் கமலாவோ கடலிலேயே செத்தாள். கமலா செத்ததற்கு மட்டும் எல்லோரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். மஞ்சுளா செத்ததுக்கு அவளைத் திட்டினர். என்ன வில்லத்தனம்?//

    Manjula and Kamala are names given to cyclonic formations

    ReplyDelete
  26. //6. இரண்டும் புயலின் பெயர்கள். மஞ்சுளா புயல் கரையைக் கடந்து, சென்னையில் வலுவிழந்ததால் மக்கள் அந்த புயலைத் திட்டினர். கமலா புயலோ, கடலிலே வலுவிழந்ததால், மக்கள் வாழ்த்தினர்.//
    சரியான விடை. முருகன் புதிருக்கு ஏற்கனவேயே விடை வந்து விட்டது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  27. 6. மஞ்சுளா, கமலா - ரெண்டும் வெடிகுண்டு பெயரா?

    ReplyDelete
  28. கேள்விகள் 3, 4 மற்றும் 7-க்கு விடை இன்னும் வரவில்லை. நாளைக்குள் வரவில்லை அடுத்த புதிர்கள் பதிவுக்கு அவை கேரி ஓவர் செய்யப்படும். அப்பதிவு டோண்டு பதில்கள் - 22.10.2009-க்கு அடுத்து வரும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  29. 4. ரெண்டு தம்பதிகளும் சாப்பிடாமலே இறந்துட்டாங்களா?

    ReplyDelete
  30. @குரு
    ஆக்சுவலா இந்த தம்பதிங்க சாப்பிட்டது ஒரு பழம்.

    கமலா மஞ்சுளா புதிருக்கு சரியான விடை ஏற்கனவே வந்த்துவிட்டது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  31. 7. விதூஷகனுக்கு பைத்தியம் பிடித்திருக்கும்!

    ReplyDelete
  32. 3. கார் ரெண்டும் ஒண்ணோட ஒண்ணு மோதவில்லை. ரெண்டும் தனித்தனியா வேற எது மேலயோ அல்லது வேற எதுவோ கார் மேலயோ மோதிடுச்சோ?

    ReplyDelete
  33. 4. கத்தியால குத்திக் கொலை செய்துகொண்டிருக்காலாம். அல்லது ஏதாவது ஒவ்வாத பண்டங்கள் சாப்பிட்டு anaphylactic shock வந்து இறந்திருக்கலாம்.

    ReplyDelete
  34. @வஜ்ரா
    தவறான விடை

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  35. கேள்விகள் எண் 3, 4 மற்றும் 7 அடுத்த புதிர்கள் பதிவுக்கு கேரி ஓவர் செய்யப்பட்டு விட்டன.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete