நிரந்தர பக்கங்கள்

3/13/2010

கருணாநிதியும் சங்கமமும்

சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த சங்கமம் என்னும் படத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். ரஹ்மான், விந்தியா, விஜயகுமார், மணிவண்ணன், ராதாரவி ஆகியோரின் சிறப்பான நடிப்போடு அப்படம் வந்தும் வசூலில் அவ்வளவு உற்சாகமானதாக இல்லை. உலகத்திரைகளிலேயே முதன்முதலாக என்னும் முழக்கத்துடன் சன் டிவி அதை படம் வெளியான வெகு குறுகிய காலத்தில் ஒளிபரப்பியது வசூல் பிரச்சினையால் வந்ததா அல்லது அதற்கு காரணமாக அமைந்ததா என்ற விவரங்களெல்லாம் இப்பதிவுக்கான விஷயமும் இல்லை.

அப்படத்தில் விஜயகுமார் ஒரு பரத நாட்டிய கலைஞர். ஒரு அறிவிப்பை வெளியிடுவார். ஏதோ கலைகளுக்கான நினைவுச்சின்னமாம், அதை தனது காலத்துக்குள்ளேயே முடிக்க வேண்டுமாம். ஆகவே அதற்கான முழுபணத்தையும் தானே தந்து விடுவதாக கூறுவார். மற்றவர்களிடமிருந்து பணம் ஏதும் வேண்டாம் என்பார். நாட்டுப்புற நடனக்கலைஞரான மணிவண்ணனோ இம்மாதிரியான பெரிய விஷயங்களுக்கு எல்லோரும் சேர்ந்து பணம் தருவதே முறை என விஜயகுமார் சொன்னதை மறுத்து பேச, அதுவே கதையின் முக்கிய கருவாக போனது.

இப்பதிவில் நான் எடுத்து கொள்ள நினைப்பது விஜயகுமாரின் சுய புகழ்ச்சிக்கான பேராசையையே. அம்மாதிரி கூட யாராவது இருப்பார்களா என்ன? இருக்கிறார்களே. நான் குறிப்பது நமது மாண்புமிகு முதல்வர் கருணாநிதி அவர்களையே.

முதலில், 13.03.2010 தேதியிட்ட துக்ளக்கின் இந்த அட்டைப்பட தூள் கார்ட்டூனை பாருங்கள்.

அதுதான் இப்பதிவின் விஷயம். அப்படியாவது தோட்டாதரணியை வைத்து டோம் செட் போட்டு, உடனே களையப்படப்போகும் அந்த செட்டுக்காக இரண்டு கோடி ரூபாயை விரயம் செய்து, சட்டசபை கட்டிடத்தை திறந்து வைக்க என்ன அவசியம் சார்? ஒரு கட்டிடம் நிர்மாணத்தில் இருக்கும்போது அதற்குள் செல்லும் அனுமதியே மிகவும் குறுகிய அளவிலேயே இருக்கும். வேலை நடக்கும் இடத்தை ஒப்பந்தக்காரரிடம் ஹேண்ட் ஓவர் செய்தபிறகே காரியங்கள் துவங்கும். கட்டிடத்தின் முழுமை சான்றிதழ் என ஒரு விஷயம் உண்டு. அது வந்தபிறகே கட்டிடத்தை உபயோகிக்கவே ஆரம்பிக்க இயலும். இந்த இடைபட்ட காலத்தில் ஒப்பந்தக்காரர் போகலாம், அவருக்கு வேலை தந்த அரசு துறை பொறியாளர்கள் செல்லலாம், போனால் போகிறது என அரசு அமைச்சர்கள் வேலையை பார்க்கிறேன் பேர்வழி என போகலாம். அவ்வளவுதான். அதை துவங்க என்ன தேவைப்படும்? முக்கியமாக கட்டிடம் முடிவடைத்திருக்க வேண்டும். இப்போது நிலைமை என்னவென்றால் இன்னும் டோம் கட்டவில்லை. சீவின இளநீர் ரூபத்தில் மேல்பகுதி திறந்திருக்கிறது. அதன் மூலம் மழை தாராளமாக உள்ளே வரும். வெய்யில் பற்றி கேட்கவே வேண்டாம்.

நான் இம்மாதிரி கட்டுமானங்களை வெவ்வேறு கோலங்களில் மத்திய பொதுப்பணி துறை வேலை செய்த மத்திய ரிசர்வ் போலீஸ் வளாகத்தில் பார்த்தவரை, மேல்கூரை இல்லாமல் உள்ளே எந்த ஃபினிஷிங் வேலைகளும் நடைபெறாது. ஏன் என்பது வெளிப்படையான விஷயம். சிறு குழந்தை கூட சொன்னால் புரிந்து கொள்ளும் விஷயம் அது. அதில் போய் மேலே டோம் மாதிரி செட் போட்டு பிரதம மந்திரி, நாட்டின் “அன்னையார்” ஆகியோரை வரவழைத்து கூத்தடிப்பது பொறுப்பற்ற செயல். இந்த இரண்டு கோடி ரூபாய்க்கு யார் பொறுப்பு? முத்துவேலரா தருவார்? சங்கமத்திலாவது விஜயகுமார் தன் கைப்பணத்தைத்தான் செலவழித்தார்.

அப்படியாயினும் இதை ஏன் செய்திருப்பார்? சில ஊகங்கள்:
1. மஞ்சள் துண்டை அணியுமாறு அவருக்கு ஆலோசனை தந்த ஜோசியர் இது நல்ல நாள் என்றிருப்பாரோ?
2. அல்லது குறிப்பிட்ட தேதியில் இந்த நிகழ்ச்சி நடைபெறாவிட்டால் அன்றை கலைஞர் டிவிக்கு நிகழ்ச்சி நிரலில் பிரச்சினை வருமா? எவ்வளவு தடவைதான் மானாட மயிலாடு எல்லாம் பார்த்து கொண்டிருப்பது?

முழுமை சான்றிதழை ஒருவேளை அதிகாரிகளின் கையை முறுக்கி வாங்கியிருப்பார்களோ?

அன்புடன்,
டோண்டு ராகவன்

புதுவை சிவாவின் விருப்பத்தை ஒட்டி இரு படங்களை இணக்கிறேன். செய்திக்கு இங்கே செல்லவும்.

முதலாவது, இந்த சட்டசபையின் ஒட்டுமொத்த பறவை பார்வை.

இரண்டாவதுதான் டோம் செட். முதுகை காட்டி நிற்பவர் தோட்டா தரணியோ அல்லது வேறு யாரோ. நல்ல கொழுத்த வேலையை பிடித்த அவருக்கு சக ஃப்ரீலேன்சர் என்னும் முறையில் இந்த டோண்டு ராகவனின் வாழ்த்துக்கள்.

24 comments:

  1. அதற்குள் கட்டிடத்திற்கு தர சான்று கிடைத்து விட்டதாக வேறு! மக்களை இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்களோ!

    ReplyDelete
  2. டோண்டு சார்

    அந்த செட் போட்ட மேற்கூரை போட்டோவை பதிவில் இனைக்கவும்.

    ReplyDelete
  3. it seems u r supporting GREEN saree?

    ReplyDelete
  4. புதுவை சிவா, திருப்திதானே?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. @ttpian
    மஞ்சள் துண்டு செய்யும் அசட்டு காரியத்தை பேசும் இப்பதிவில் பச்சை புடவையை பற்றி ஏன் பேச வேண்டும்? அவரை ஆதரிக்கிறேன் என மொட்டையாக கூறிட இயலாது. இப்போதைக்கு கருணாநிதி ஆட்சி முடிவுக்கு வருவதே நலம். அவ்வளவுதான்.

    பச்சை புடவையும் லேசுப்பட்டவர் இல்லை என நான் இங்கே கூறுவது, உங்கள் பின்னூட்டத்தால் வந்த கேள்விக்கான ப்திலே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. Veeramani will give periyar virudhu to MK for this also

    ReplyDelete
  7. Inner burning????
    Try some local Goli-soda.

    Tamilan

    ReplyDelete
  8. தேவையில்லாத செலவுகள்...

    கம்ப்ளீஷன் சர்டிபிகேட் இல்லாமல் எந்த காண்ட்ராக்டும் முடித்ததாக கருதப் பட இயலாது. ஸ்ட்ரக்சுரல் வேலையே இன்னும் முடிந்த மாதிரி தெரியலை... அதுக்கப்புறம் பினிஷிங்... அது முடிய இன்னும் குறைஞ்சது 4 மாசம் ஆகும் போலிருக்கு..

    என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது..

    ReplyDelete
  9. it is all waste of public money. All the politicians including P.M. / C.M. should have the responsibility for wasting the public money in these manner.

    ReplyDelete
  10. தமிழ்நாடு தந்த தன்னிகரில்லா தலைவனை தரணி தாலாட்டட்டும்!!

    Suthran

    ReplyDelete
  11. // தரணி//

    யாருய்யா இது தரணி.கோலிவுட் புது முகமா?

    ReplyDelete
  12. கழுதைக்கு வாக்குப்பட்டா உதைக்கும் கடிக்கும் புலம்பலாமா? வம்பன் சொத்து வீணன் கையில். வாழ்க காந்தி தேசம் !

    ReplyDelete
  13. இது பற்றி டிவிட்டரில் வேண்டியது எழுதி விட்டேன். முதலில் ஒரு கவர்மெண்ட் கட்டடத்திற்கு 450 கோடி என்பது மிக மிக அதிகம்! மக்கள் பணம் விரயம். இந்த 2 கோடி பற்றி சொல்லவே வேண்டாம் :(

    தமிழ் சினிமா ஒரு தனியார் துறை, அதற்கு இலவச நிலம்! அதை பரம ஏழைகளுக்கு வழங்கினால் யாரும் ஒன்றும் சொல்லப் போவதில்லை!

    ReplyDelete
  14. பாமரன்March 13, 2010 7:28 PM

    எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம் செய்யும் ஜெயாவும் இது பற்றியோ, புது செக்ரடேரியட்டுக்கான ஆடம்பரச் செலவு பற்றியும் கள்ள மௌனம் சாதிப்பது ஏன் ? புது செக்ரடேரியட் அவசியம் தான். 425 கோடியில் ஒரு பில்டிங்க் தேவையா? ஐடி கம்பெனிகள் கூட இவ்வளவு ஆடம்பரமாக செலவு செய்வதில்லையே! இன்னும் சாலை விரிவாக்கம், மற்ற புது கட்டடங்கள், என்று ஏகப்பட்ட செலவு! அருகாமையில் இருக்கும் பேச்சிலர் மேன்ஷங்களுக்கு கெடுபிடி! கட்டட பாதுகாப்புக்கு 24 கோடி என்று கமிஷனர் கூறியதாக செய்தி வந்தது.

    இன்னொரு விஷயம். சினிமா என்னும் ஒரு தனியார் துறைக்குக்கு பல கோடிகள் பெறும் அரசு நிலத்தை தானமாகக் கொடுத்ததைப் பற்றி யாரும் எதுவும் பெரிதாகப் பேசவில்லையே! மக்களைச் சுரண்டிப் பிழைக்கும் தியேட்டர்காரர்களும் திருந்துவது மாதிரி தெரியவில்லை! கூத்தாடிகளுக்கு வீடுகள் வேண்டுமென்றால், அவர்களே நிதி திரட்டலாமே! கோடியில் புரளும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் துட்டுக்கு ஏற்பாடு பண்ணலாமே!

    ReplyDelete
  15. Cant this be stopped with a PIL? Atleast the temporary dome issue I mean....

    ReplyDelete
  16. 2010/3/14 Tamilish Support
    - Hide quoted text -


    Hi Dondu,

    Congrats!

    Your story titled 'கருணாநிதியும் சங்கமமும்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 14th March 2010 01:25:01 AM GMT



    Here is the link to the story: http://www.tamilish.com/story/202789

    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team
    நன்றி தமிலிஷ்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  17. பேராசிரியர் பெரியார் தாசன் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டாராமே!

    தமிழ் வலைப்பதிவு பெரியார் தாசர்கள் இதைப் பற்றி எதுவும் பேசாமல் இருக்கிறார்களே என்பது ஆச்சரியமாக இருக்கிறது.


    இஸ்லாத்தில் நாத்திகம் பேசினால் தலையை வெட்டிவிடுவார்கள் என்பது பேராசிரியருக்குக் கொஞ்ச நாளில் தெரியவரும் என்று நம்புவோம்.

    ReplyDelete
  18. சிங்கையில் ஒரு க‌ட்டிட‌த்தின் உள்ளே பொதுவாக‌ நுழைய‌ ஒரு அனும‌தி தேவைப்ப‌டும்(TOP-Temporary Occupation Certificate) அது கிடைத்தால் தான் க‌ட்டிட‌த்தின் பாதுகாப்பு ஓரள‌வு உருதிப்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து,ந‌ம்மூரில் அப்ப‌டி எதுவும் இருக்கா? நாம் சொந்த‌மாக‌ க‌ட்டுகிற‌ வீட்டைகூட‌ அப்ப‌டி யாரும் சோத‌னைசெய்வ‌தில்லை,எல்லாம் குத்த‌கைக்கார‌ர் கையில் தான்.
    ஐ எஸ் ஓ 9001 எல்லாம் ந‌டைமுறையில் இருக்கா என்று தெரிய‌வில்லை.

    ReplyDelete
  19. புட்ட‌ப‌ர்த்தியில் கூட‌ இந்த‌ மாதிரி க‌டைசி நேர‌ வேலையில்(திற‌ப்பு விழாவுக்காக‌- ந‌ர‌சிம்ம‌ராவ்) அங்குள்ள‌ ம‌ருத்துவ‌ ம‌னை Dome பெயிண்ட் அடிச்சோம்.

    ReplyDelete
  20. //பேராசிரியர் பெரியார் தாசன் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டாராமே!

    தமிழ் வலைப்பதிவு பெரியார் தாசர்கள் இதைப் பற்றி எதுவும் பேசாமல் இருக்கிறார்களே என்பது ஆச்சரியமாக இருக்கிறது.//

    வஜ்ரா, பெரியார்தாசனின் தாடி,குல்லாயுடன் கூடிய ஃபோட்டோ கிடைத்தால் எடுத்து போடும்படி வேண்டிக்கொள்கிறேன். விஷம் போல் உயர்ந்த விலை வாசியால் நொந்து நூலாய் போயிருக்கும் எம்மக்கள் வேதனை மறந்து சிரித்திட இது உதவினால் இஸ்லாமே மக்களை ஆனந்த்த்தில் ஆழ்த்திடும் சிறந்த மார்க்கம் என்பதில் மக்களுக்கு நம்பிக்கை பிறக்குமல்லவ/?

    ReplyDelete
  21. பேரா பெரி.தா இன்று அப்புதுல்லா ஆகிவிட்டார்

    http://arabnews.com/saudiarabia/article29180.ece

    அவருக்கு தாடி எல்லாம் முளைக்க இன்னும் நாளாகும்.

    ReplyDelete
  22. வலைஞன்March 16, 2010 3:00 PM

    எந்தவித சிரமமும் இன்றி இருக்க இதோ ஒரு temp plate

    செய்தி: முதல்வர் கருணாநிதி ஏழைகளுக்கு இலவச தர்பூஸ் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.இதற்கான செலவு வருடம் ௫௦ 50 கோடி ருபாய்

    பதிவர்கள்:இது சற்றும் தேவையற்ற திட்டம் வரிப்பணம் பாழ்

    பின்னூட்டம் 1 (வாசகர்கள்):
    மக்களை இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்களோ!

    முரசொலி:
    என்ன செய்வது
    இவர்களுக்கு கொடுத்தால் அவாளுக்கு கோபம வருது

    ReplyDelete
  23. இது போன்ற கட்டி முடிக்காத கட்டிடத்தை தோட்டா தரணி வைத்து பூசி மெழுகி, ஒரு கட்டிடம் போலவே தோற்றம் பெற செய்த கலைஞர் அவர்களே, முத்தமிழ் வித்தகரே, தமிழ்நாட்டை வித்தவரே - இதற்காகவே ஒரு பாராட்டு விழா எடுக்கலாமே....

    (ஜல்லி கவி ஜெகத்ரட்சகன்...)

    ReplyDelete
  24. //முத்தமிழ் வித்தகரே, தமிழ்நாட்டை வித்தவரே//
    இப்படி சொன்னா நன்னா இன்னும் இருக்கும் போல இருக்கே, “முத்தமிழ் வித்தவரே, தமிழ்நாட்டை வித்தவரே”.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete