நிரந்தர பக்கங்கள்

6/01/2010

ஒட்டகத்துக்கு நடந்தது என்ன? - ஒரு நீதிக்கதை

அரேபியாவில் ஒட்டகங்கள் அதிகம். அவ்வூரின் சீதோஷ்ண நிலை அப்படி. ஆனால் அது பற்றி இப்பதிவு இல்லை.

அந்த ஒட்டகங்களில் ஒன்றின் மேல் பாரம் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று கூறிக் கொண்டே அதை செய்த வண்ணமே இருந்தார்கள். ஒட்டகத்தின் தாங்கும் சக்தியின் எல்லையும் கடந்து விட்டது. பிறகும் அது சிரமப்பட்டு நிலையாக நின்றது. கடைசியில் ஒட்டக முதலாளியின் சின்னப்பெண் ஒரே ஒரு துரும்பை அதன் மீது ஏற்றினாள். அது பொதேரென கீழே வீழ்ந்தது. விழும்போது அப்பெண்ணையும் பலமாகக் கடித்தது

ஒட்டகத்துக்கு வேண்டாதவர்கள் கூறினார்கள், போயும் போயும் இந்தத் துரும்பைக்கூடவா தாள முடியாது, ரொம்ப பலவீனமான ஒட்டகம் போலிருக்கு என்றனர். பாவம் அந்தப் பெண் என்றும் கூறினர். அவர்களுக்கு தெரிந்தது துரும்பு மட்டுமே.

Any resemblance to the things that happened here between certain Tamil bloggers is purely intentional.

கிட்டத்தட்ட ஓராண்டாக ஒரு பதிவரை இம்மாதிரி தேவையில்லாமல் நையாண்டி எல்லாம் செய்து வந்திருக்கிறார்கள். அப்படியாவது நையாண்டி செய்யப்பட்டவர் செய்தவர்களுக்கு நெருங்கிய நண்பரா? அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே. அப்படியிருக்க ஏன் இந்த நையாண்டியெல்லாம்? இது என்ன ஒரு மச்சினி அக்கா புருஷனை கிண்டல் செய்யற மாதிரின்னு நினைச்சிருப்பாங்களோ?

நேற்று இது சம்பந்தமாக ஒரு பதிவரிடம் தொலை பேசினேன். அவரிடமும் இதையே கூறினேன். கிண்டல் செய்ய ஒரு பாந்தமான மனநிலை இரு தரப்பினருக்குமே இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் இந்த சீண்டல்கள் எல்லாம் uncalled for.

ஆதிமூல கிருஷ்ணன் நர்சிமை பேட்டி எடுத்த பதிவை பார்த்தேன். அதில் நர்சிம் அடக்கமாகவே தன் பதில்களை தந்திருக்கிறார். அவ்வப்போது சுய எள்ளலையும் செய்து கொள்கிறார். ஆனால் அதை கிண்டல் அடித்து விஜி எழுதிய பதிவைப் பற்றி என்ன சொல்ல? Vicious, vitriolic. வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை. அவதூறாக பல விஷயங்களை எழுதி அதையெல்லாம் கிண்டல் எனக்கூறிக்கொள்ள அவர் என்ன பாதிக்கப்பட்டவரின் மச்சினியா, நெருங்கிய தோழியா? என்ன அடிப்படையில் இந்தத் தாக்குதல்? ஆனால் இம்மாதிரியாக நர்சிமை தாக்கி வரும் பதிவுகள் இதற்கு முன்னமேயே வந்துள்ளன எனவும் கூறப்படுகிறது.

ஒட்டகம் எவ்வளவுதான் பொறுத்துக் கொள்ளும்? என்ன வெறுமனே கீழே விழவில்லை கடைசியாக துரும்பை ஏற்றியவரையும் பலமாகத் தாக்கி விட்டது.

இப்போது பலமாகத் தாக்கியதை மட்டும் வைத்துக் கொண்டு எல்லோரும் குதிக்கிறார்கள்.

நெருங்கிய நண்பர்களுக்கிடையே கூட பலமுறை கேலிகள் நையாண்டிகள் கொலையில் முடிந்திருக்கின்றன.

அப்படியிருக்க இங்கே என்ன நட்பா பாழாய் போகிறது?

ஒட்டகத்துக்கு ஒரு வார்த்தை. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. ஆகவே அவ்வப்போது பதிலடி கொடுத்து விடுவதே நல்லது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

69 comments:

  1. ம்.ம். ....நடத்துங்க!

    ReplyDelete
  2. நேசன்..., said...
    இந்தப் பிரச்சினை குறித்தான என் முதல் பின்னூட்டம் இது தான்!....நீங்கள் அவரை ஆதரித்து விட்டீர்கள் அல்லவா....அவ்வளவு தான் போச்சு!..பார்ப்பனன் பார்ப்பனனை ஆதரிக்கிறான் என சொல்லப் போகிறார்கள்!பாருங்கள் நடப்பதை!....

    June 01, 2010 4:27 PM

    :))))

    ReplyDelete
  3. erkanbave vinavu ulla nulanchiduchui. vinavu vantha entha visayamum urupatthadu illa

    ReplyDelete
  4. ஓ அவர் என்ன சாதி என்று தெரிந்துவிட்டதா ?

    ReplyDelete
  5. இந்த பதிவும் வரலாறு காணாத நெகட்டிவ் ஓட்டு வாங்கி சாதனை படைக்கும்.

    ReplyDelete
  6. செந்தழல் ரவி
    செந்தழல் ரவி
    செந்தழல் ரவி

    எங்கிருந்தாலும் மேடைய விட்டு இறங்கவும்.

    ReplyDelete
  7. //இந்த பதிவும் வரலாறு காணாத நெகட்டிவ் ஓட்டு வாங்கி சாதனை படைக்கும்.//
    போடாங்ங்.. மயிரே போச்சு

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. ஐ ஜாலி, இப்போ டோண்டு ,லக்கிலுக்,ஆதிஷா எல்லாம் ஒரே கட்சி ....இப்போ என்ன பண்ணுவிங்க?..இப்போ என்ன பண்ணுவிங்க..?

    ReplyDelete
  9. பாராட்டுக்கு நன்றி டோண்டு ஸார்.

    ReplyDelete
  10. நானும் உங்களுக்கு ஒரு நீதிக்கதை சொல்ல விரும்புகிறேன்.

    ரெண்டுபேர் சண்டை போட்டுக்கொண்டார்கள், அதில் ஒருவன் ரொம்ப முசுடு, சட்டென்று கைநீட்டி விடுகிறான். இவன் மூக்கு உடைந்துபோகிறது. போலீஸ், கோர்ட்டு என்று சென்று கடைசியில் நீதிபதி சொல்றார் "அவன் உன்னைத் திட்டுனா - நீயும் திருப்பித்திட்டியிருக்கலாம், புகார் கொடுத்து இருக்கலாம், ஆனா அடிச்சே பாரு அது தப்பு, போ மாமியார் வீட்டுக்கு" சட்டம் அப்படித்தானாம்

    இவ்வளவு கேவலமாகவா? படித்தவர்கள்தானே இங்கே இருக்கிறது?

    ReplyDelete
  11. //போடாங்ங்.. மயிரே போச்சு//

    ஆ மயிர் போச்சா.ஆனால் எதுக்கு போன மயிர் பெரிய தாடி மூஞ்சியில் ஒட்டிக்கொண்டது?

    ReplyDelete
  12. இன்னொரு கதை சொல்லியா?

    ReplyDelete
  13. நானும் பார்த்து விட்டேன், நரசிம் சம்மந்தமான இந்த விடயத்தில் எந்த பதிவிருந்தாலும் அதில் வந்து குந்திக்கொண்டு வாய்க்கு வந்தபடி அர்ச்சனை செய்கிறார்
    ஒரு மா மனிதர்! அவர் திரு செந்தழில் இரவி அவர்கள்! நானும் இது சம்மந்தமான எல்லா பதிவையும் ஒரு ரவுண்டு போய் பார்த்தேன், பின்னூட்டங்களையும்
    படித்தேன்! ஒருவர், அதான், நண்பர் செந்தழில், மிக தீவிரமாக நர்சிம்மை சாடுவதில் நேரத்தை கழிக்கிறார்! பாருங்கள் , எங்கெல்லாம் நர்சிம் பற்றி எழுதிகிரார்களோ அங்கெல்லாம் ஆஜராகி திட்டி தீர்க்கிறார்! என்ன பிரச்சனை என்பது தெளிவாக தெரியவில்லை (ஏனென்றால் திரு செந்தழில் இரவி எப்பொழுதும் ஒரு அஜெண்டாவோடுதான் எதையும் செய்வார்! வரலாறு பேசுகிறது! நர்சிம் கிருத்துவ கடவுளாரைப்பற்றி எதுவும் தப்பாக எழுதியதாக தெரியவில்லை! அவர் அப்படி எழுதும் ஆளும் இல்லை என்று நினைக்கிறேன்! அப்படி இருக்கையில் திரு செந்தேழிலாருக்கு ஏன் இந்த கொலை வெறி என்று புரியவில்லை!)

    சரி அதையும் விடுங்க!

    இந்த விடயத்தில் இப்பொழுது சாமி ஆடுவது நம்ம வினவு கும்பல்! நம்ம வினவு நண்பர்கள் இப்பொழுது புதிய வலை உலக தாதாக்களாக ஆகியிருக்கிறார்கள்
    என்று பலர் கொதிப்படைந்திருக்கிறார்கள்! எல்லோருக்கும் இது இப்போழுதுதானா தெரிந்தது? அட சாமி, இவங்க யார் என்பதை நான் பல மாதங்களாகவே
    சொல்லிக்கிட்டுதானே இருக்கேன்! இந்த யோக்கிய சிகாமணிகள் அவமானங்களை பற்றி பேசுகிறார்களாம்! எப்படி? தங்களின் குப்பை வலைப்பதிவில் ஒரு இந்து கடவுளாரின் படத்தை ஜட்டியின் மேல் போட்டு, அப்படிதான் போடுவேன் ஏனென்றால் இது கடவுள் இல்லை, இந்து மதம் மதமே இல்லை என்று வாய்க்கு வந்தபடி ஏசும் கூட்டம், மற்றவரை பார்த்து சொல்லுகிறது, அவமானபடுத்துகிரீர்கள் என்று!!!! அதற்க்கு ஜால்ரா அடிக்கும் மற்றொரு கூட்டம், இந்த சிவப்பு கயவர்கள் நம் நாட்டை அழிக்க நினைத்த மாவோவின் படத்தை பச்சை குத்தி கூத்தாடும் வன்முறை விரும்பிகள் என்று தெரிந்தும் அங்கு போய் கும்மி அடிக்கிறார்கள், தங்களின் முற்போக்கு தன்மையை உலகிற்கு காண்பிக்க! சீ .... .......

    ஹலோ திரு ஈரோடு கோடீஸ், இங்கே யாரும் யாரையும் அடிக்கவில்லை! வரம்பு மீறி (பதில்களாக) எழுதப்பட்டது உண்மை! அதற்க்கு வருந்தி அதை பதிவிலிருந்து எடுத்தும் விட்டார் நர்சிம்! இப்பொழுது எல்லோரையும் பார்த்து வாங்க வந்து அடியுங்கள் என்று கூப்பாடு போடுவது வினவு கண்மணிகள் மற்றும் சில ஜால்ராக்கள்! மாமியார் வீட்டுக்கு போக வேண்டியவர்கள் யார் என்று முழு விடயத்தை பார்த்தால்தான் புரியும்! ஆதலால் உங்களின் அறிவார்ந்த யோசனைகளை அங்கே போய் காட்டவும்!

    நர்சிம் போன்ற நல்ல எழுத்தாளர்கள் வரம்பு மீறி எழுதுவது நல்லதல்ல, பதிலே என்றாலும் கூட! அது அயோக்கியர்களுக்கு வேண்டுமானாலும்
    சாதாரண விடயமாக இருக்கலாம்! அவர்கள் அதற்க்கு பெயரும் வைப்பார்கள், அதாவது முற்போக்கு எழுத்துகள் மற்றும் புரட்சி எழுத்துகள் என்று! அதுதான் அவர்களின் தரம்! அதை செய்ய அவர்கள் இருக்கிறார்கள்! நர்சிம் அப்படி எழுத வேண்டிய அவசியமில்லை! செந்தழில் இரவி போன்ற அறிவுக்களஞ்சியங்கள் இடம் அறிவுரை பெற தேவையும் இல்லை!

    நன்றி

    ReplyDelete
  14. இங்க என்ன தான் நடக்குது.
    நீதி சொல்ல யாரும் இல்லியா.

    ReplyDelete
  15. திரு டோண்டு சார்,

    நர்சிம் கோபப்பட்டது தவறு என்று யாரும் சொல்லவில்லை.ஆனால் அதை அவர் பதிவு செய்தவிதம் தான் தவறு. அவரை ஆதரிக்கும் நீங்கள் அவரின் வார்த்தை பிரயோகத்தை ஒப்புகொள்ளுகரீர்கள?.ஒரு சக பதிவரை (ஆணோ அல்லது பெண்ணோ ) இவ்வளவு கீழ்தரமாக விமர்சிப்பது சரியா?. இதற்கு உங்களின் உண்மையான பதில் வேண்டும்.

    அன்புடன் ,

    திரு

    ReplyDelete
  16. @திருப்பார்வை
    வார்த்தைப் பிரயோகம் தவறுதான். அது சரி எனக் கூறவில்லை.

    அதே சமயம் சீண்டியவர்கள் என்ன அவருக்கு அவ்வளவு நெருக்கமானவர்களா, அப்படியெல்லாம் இத்தனை மாதங்களாக சுவாதீனமாக கிண்டல் செய்ய இங்கே என்ன அன்னியோனியமா பாழாப் போகிறது.

    கடைசி துரும்பு.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  17. @திருப்பார்வை

    நரசிம் எழுதிய விதமும் வார்த்தைகளும் தவறு. ஆனால் எழுதத் தூண்டியது யாரு?? அதை யாரும் கண்டிக்க மறுக்கிறீர்களே ??

    ReplyDelete
  18. @திருப்பார்வை

    எனக்குத் தெரிந்து இதனை பிரச்சனைக்கும் காரணமான பதிவை நீக்க சொல்லி கேட்டும் நீக்கப் படாத பொழுதே நரசிம் அந்த பதிவை இட்டார் .

    ReplyDelete
  19. இதோ பாரு காக்கா!!!
    ---------------------

    அன்று எழுதியது! அதாவது ஹுசைன் படங்கள் சம்மந்தமாக இந்துமதத்தை தாக்கி நண்பர் செந்தழில் இரவி எழுதியபோது, அவர் தன் மதக்கடவுளை தூற்றிய ஒரு பதிவை எப்படி இகழ்ந்தார் என்று சுட்டிக்காட்டினேன்! நண்பர் அதற்க்கு சொன்னது, "நான் இப்பொழுது திரிந்து விட்டேன்" என்று! அதாவது அவர் இப்பொழுது முழு நாத்தீகர் ஆகிவிட்டாராம் ஆதலால் இந்து மதத்தை தாக்கும் உரிமை அவருக்கு வந்து விட்டதாம்!

    நர்சிம் பெண்மையை இழிவாக இகழ்ந்து விட்டார் என்று எல்லா பதிவிலும் கும்மி அடிக்கும் நம் நண்பர் இரவி பற்றி இப்பொழுது கிடைத்த தகவல்!

    //இப்போது நர்சிம்மின் கதையை ஆபாசம் அருவருப்பு என்று முண்டியடித்துக் கொண்டு எதிர்க்க வரும் செந்தழல் ரவி அச்சமயம் என்னைப் பற்றி ஆபாசக் கதை எழுத முனைந்ததையும் பின் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்குப் பயந்து அவ்விடுகையை நீக்கியதையும் நினைக்க வேடிக்கையாக இருக்கிறது. கோவி. கண்ணன் அவர்களோடும் செந்தழல் ரவி இது போன்று நசுக்கிக் காற்றைப் பிரித்து விட்டதும் நினைவுக்கு வருகிறது//
    - இதை எழுதியது வளர்மதி என்ற சகோதரி. பைத்தியக்காரன் அவர்களின் பதிவில் வந்த பின்னூட்டத்தில் பார்த்தேன்!

    இதற்க்கு திரு செந்தேழிலின் பதில்
    // வளர்மதி. நீங்கள் சுட்டிக்காட்டிய விஷயம் குறித்து. அப்படி உங்கள் மனம் வலிக்குமாறு நான் எழுதியிருந்தால் மன்னித்துவிடுங்கள் உங்களை பற்றி - அந்த சம்பவக்கோர்வைகள் நடந்து காலம் கடந்தே - புரிதல் ஏற்பட்டது.//

    எப்படி எப்படி. எல்லாம் செய்ய நினைத்து, அது கண்டுபிடிக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டு, கைவிட்டபின் அவரும் அதை நிறுத்திவிட்டாராம்! மேலும் இப்பொழுது வருந்துகிறாராம்! மேலும் அந்த தவறை பற்றி காலம் கடந்து புரிதல் ஏற்பட்டதாம் திரு செந்தழில் இரவிக்கு!!!

    இதோ பாரு காக்கா
    சத்தம் போட்டது ரொம்ப சோக்கா
    தான் செய்த அசிங்கம் வந்தது ப்ளாஷ் பாக்கா
    அத கேட்டதும் சாரி சொன்னது சும்மா நாக்கா
    இதை எல்லாம் பாக்குறவன் எல்லாம் சுத்த பேக்கா??

    இவருக்கு மட்டும் காலம் கடந்து புரிதல் வருமாம்! அப்போ மத்தவனுக்கு?
    (கொஞ்சம் வாந்தி வருகிற மாதிரி இருக்கு. பாக்கிய முடித்து விட்டு வந்து எழுதுகிறேன்)

    நன்றி

    ReplyDelete
  20. @LK/Dondu,

    நிச்சயம் மயில் மற்றும் முல்லை செய்ததும் தவறு தான்.ஆனால் அவர்கள் ஒரு படி கீழ் இறங்கினார்கள் என்றால் நர்சிம் தடாலடியாக பல படிகள் கீழ் இறங்கிவிட்டார். நர்சிம் போன்ற ஒரு matured பதிவரிடம் இருந்து இதை நான் எதிர்பார்கவில்லை.

    அன்புடன்,

    திரு

    ReplyDelete
  21. //செந்தழில் இரவி போன்ற அறிவுக்களஞ்சியங்கள் இடம் அறிவுரை பெற தேவையும் இல்லை!//

    செந்தழல் ரவி அறிவுக் களஞ்சியமா?மூஞ்சியைப் பார்த்தால் அப்படி தெரியவில்லையே.தாடி இல்லாத ஓவியர் மாதிரி தானே அசப்பில பார்த்தால் தெரிகிறது.

    ReplyDelete
  22. சபாஷ் சரியான போட்டி

    இப்ப பதிவுலகம் சரியா பிரிஞ்சு நிக்குது

    வினவு கும்பல் மர்றும் அல்லக் கைகள் குமுறி அப்புறம் ஜால்ரா தட்டுரது திட்டு வாங்குன அம்மாவும் தோழர் கும்பல் என்பதால்தான்..அதனால் தான் அவர்கள் பக்க தவறுகள் இவர்களுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு.மேல் சாவனிசம் தப்புன்னா அதுக்கு பதில் ஃபிமேல் சாவனிசமா? உனக்கு சம்மந்தமில்லாத ஆளைப் பத்தி என்ன மசிருக்கு இந்த அளவு கிண்டல் அடிக்கிறது? இது என்ன கொள்கை ரீதியான எதிர்ப்பா? நக்கலு..அதையும் ஏன் தொடர்ந்து நக்குற..இப்ப அந்த ஆளு திருப்பி தாக்கும் போது தங்க முடியலையாக்கும் ?இதுல எதிர்புன்னா கண்ணியமா பகடி கட்டணுமாம்..எப்படி..எப்படி..அடி..ஆனா வலிக்காத மாதிரி அடி அப்படியா? கடைசியாக ஒன்று கிராமத்துல சொல்லுவாங்க "வேலில போறதை...உல்ல விட்டுக்கிட்டு குத்துதே குடையுதேன்னாளாம் " இதுவும் அந்தக் கதைதான்

    ReplyDelete
  23. இந்த மொத்த நிகழ்சியிலும் செந்தழல் ரவி யின் ஜால்ரா சத்தம்தான் காதைக் கிழிக்கிறது.முன்னாடி நீயும் இப்படிதான செஞ்ச என்று வளர்மதி சொன்னா" இப்ப நான் மனம் திருந்திய மைந்தன் " அப்படின்னு மன்னிப்பு கேட்குது.
    இதைச் சுட்டிக் காட்டிய வளர்மதியும் சாமானிய ஆலில்லை..ஏதோ சொந்தத் தகராலில் ஒரு பதிவரை "ஜாதிப் புத்தி" என்று திட்டிய ஆள்தான்..இப்ப இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நான் அப்ப சொன்னது சரி தான் அப்படின்னு ஜல்லி அடிக்குறாரு.

    இதுலேந்து ஒண்ணு தெளிவா தெரியுது..இந்த கம்யூனிச கும்பலுக்கே பதில் சொல்ல முடியலைனா SOP வந்து ஜாதியைச் சொல்லி திட்ட வேண்டியது

    இதுல இன்னொரு அலம்பல் "ஆணாதிக்கத்தை " நிலை நிருத்துனது மனு சாஸ்திரமாம்..அடங்கொண்ணியா..அமெரிக்காவிலும்,ஐரோப்பாவிலும் இருக்குறா ஆணாதிக்கத்துக்கும் மனுதான் காரணமா.. அமெரிக்காவிலும்..ஐரோப்பாவிலும் "பார்ப்பனீய சிந்தனை" அப்படீன்னு புதுசா எதாவது கட விரிச்சாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

    ReplyDelete
  24. இந்த விஷயத்தைப் ஃபாலோ செய்து படித்தேன்.

    பாதி நாள் வேஸ்டானது தான் மிச்சம். பிக்காலித் தனமான பிரச்சனை. கடைசியில் as usual பார்ப்பானீயம் என்று டிரம்ப் கார்ட் அடித்துவிட்டார்கள்.

    எப்படியோ, சாரு நிபேதிதாவின் சீடர்களும் கம்யூனிஸ கருமாந்திரங்களும் அடித்துக்கொள்ளட்டுமே. அவிங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு செத்து சீரழியட்டுமே.

    இப்ப இவனுங்கள்ளாம் பிலாக் எழுதல்லன்னா ஒண்ணும் வானம் இடிந்து விழப்போறதில்லை.

    ReplyDelete
  25. //
    vinavu vantha entha visayamum urupatthadu illa
    //

    வினவு வந்த பிலாக்கும் அமீனா வந்த வீடும் ஒண்ணு தான்.

    ReplyDelete
  26. //இப்ப இவனுங்கள்ளாம் பிலாக் எழுதல்லன்னா ஒண்ணும் வானம் இடிந்து விழப்போறதில்லை.//

    மொத்த தமிழ் ப்லொக்கர்களும் எழுதிலென்னாகூட வானம் இடியாது வஜ்ரா

    ReplyDelete
  27. நான் பாஸிடிவ் ஓட்டு ஒண்ணு போட்டுக்கிறேன்!

    ReplyDelete
  28. //இவருக்கு மட்டும் காலம் கடந்து புரிதல் வருமாம்! அப்போ மத்தவனுக்கு?
    (கொஞ்சம் வாந்தி வருகிற மாதிரி இருக்கு. பாக்கிய முடித்து விட்டு வந்து எழுதுகிறேன்)//

    NO உங்க பின்னூட்டத்தை சீரியஸா படிச்சுக்கிட்டு வந்துக்கிட்டு இருந்தேன். இந்த இடத்தில் நிஜமாகவே குப்புன்னு சிரிப்பு வந்துடுச்சி!. :)
    நானும் எதாவது எழுதனும்னு பார்த்தால் கையில ஒட்டிக்குமோன்னு யோசனையா இருக்கு!

    ReplyDelete
  29. இதுல பதிக்கப் பட்ட பெண் பதிவர் அப்படியே தைரியமா நிக்குறாராம்..நெறைய பேரு அவருக்கு சல்யூட் வைக்கிறாங்க..வரம்பு மீறி அடுத்தவர் மனதைப் புண் படுத்துகிறோம் என்பது கூட தெரியாமல் குழு கிடைத்து விட்டது என்றவுடன் பொதுப் புத்தியுடன் அடுத்தவரை கும்முவது அதுவும் தொடர்ந்து சைகொதனமாக என்றால் அதனால் ஏற்படும் எதிர் விளைவுகளை தாங்கத்தான் வேண்டும்.இதில் என்ன பெரிய பெருமை இருக்கிறது? எதோ அந்தப் பதிவரை மனிதரில் புனிதராக்கும் முயற்சி எல்லாம் சும்மா ஜல்லிதான்..இதெல்லாம் ஒரு பெண் ஆணை பலாத்காரம் செய்து விட்டாலும்,அந்த வழக்கு பொதுவில் வந்தால் ஆணை ஜெயிலில் போடும் "பொதுப் புத்தி"தான்.

    இதில் நியாயம் என்பதல்லாம் கூட்டம் சேர்ந்து கோஷமிட்டு தம் பக்கத்தை பலப்படுத்தும் உட்டாலக்கடிதான்.

    இதில் உன் உரிமை என்பதெல்லாம் அடுத்தவரின் மூக்கு நுனி மட்டும்தான் என்று எந்த "கம்மி"யாவது அந்தப் பெண் பதிவரிடம் ஒரு முறையேனும் சொன்னாரார்களா தெரியாது..அட்லீஸ்ட் அல்லக் கைகளாவது சொல்லியிருக்கலாம்

    ReplyDelete
  30. நீ முதலில் போட்ட பதிவில் அல்லது பின்னூட்டத்தில் மொள்ளமாரித் தனமும் இல்லை என்றால் அந்தப் பதிவு பின்னூட்டங்களை ஏன் தூக்க வேண்டும்..எதிர் வினை கடுமையாக வந்தவுடன் வந்த குற்ற உணர்வுதானே? எங்கே..தைரியமிருந்தால் அதே பதிவர் நான் செய்ததனைத்தும் சரிதான் என ஒரு பதிவு போடட்டுமே பார்ப்போம் "இவர்களுடைய தார்மீக ஞாயம் " எதுவரை என்று

    ReplyDelete
  31. இதில் இந்த " கம்மி " கும்பல் தனக்கு சாதகமானதாக இப்போதைக்கு நினைக்கும் இருவரை பார்பன குலத்தில் பிறந்து பார்ப்பனீயம் இல்லாத பார்ப்பனர்கள் என்று தங்களுடைய பிரத்தியேக "பார்ப்பனியோமீட்டரில்" அளந்து பார்த்து சர்ட்டிஃபிகேட் கொடுத்திருக்கிறது.ஒரு காலத்தில் இதே போல் சர்டிபிகேட் வாங்கி பின் அதே வாய்களால் கூசாமல் ஆப்பு வாங்கிய ஞானி போன்றோர் வரிசையில் இவர்களும் சேரும் நாள் வெகு தொலைவில் இல்லை
    " வரலாறு முக்கியம் அமைச்சரே"

    ReplyDelete
  32. Mr. டோண்டு ,

    i think Chennai weather is very HOT .
    Please take care of your Ill health.


    Tamilan
    Qatar

    ReplyDelete
  33. வாழ்க மனு தர்மம்.

    ReplyDelete
  34. //இந்த பதிவும் வரலாறு காணாத நெகட்டிவ் ஓட்டு வாங்கி சாதனை படைக்கும்.//
    போடாங்ங்.. மயிரே போச்சு//

    அது என்னா ஐய்ரே... மீனிங்கு?

    ReplyDelete
  35. //செந்தழல் ரவி said...
    இந்த பதிவும் வரலாறு காணாத நெகட்டிவ் ஓட்டு வாங்கி சாதனை படைக்கும்.//

    இவரு பதிவுலக அழகிரி போலக்கீது, சொன்னாப்பிடியே அப்படியே மைனஸ் ஓட்டுங்க அள்ளுதே!.இவரும் அழகிரி மாதிரியே டெக்னிக் எதுனாச்சும் வெச்சிருக்காரா?

    ReplyDelete
  36. ஆனால் அதை கிண்டல் அடித்து விஜி எழுதிய பதிவைப் பற்றி என்ன சொல்ல? Vicious, vitriolic. வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை.
    ////////////////////////////////////

    பகடி! நக்கல்!

    ஆனால் அதைப் பார்த்து நரசிம் எழுதியாது ஆண் என்ற திமிர்! பெண்ணை அதிக பட்சம் கேவலப்படுத்த நாம் உபயோகப்படுத்தும் வார்த்தை விலைமகள்! நரசிம் எழுதிய அந்தக் கேவலமான எழுத்துக்கு மயில் எழுதிய பின்னூட்டம் "மிக மிக சந்தோசம், இவ்வளவு தானே முடியும்"

    ஊரக்கூட்டி நடுவுல நிக்க வச்சு செருப்பால அடிச்சாக் கூட இவ்வளவு உரைக்காது! ஒரே வார்த்தையில் கொன்னுபுட்டாங்க!

    ReplyDelete
  37. @Phantom Mohan
    என்னோட அடிப்படை கேள்விக்கு பதில் சொல்லுங்க? உரிமையோட கிண்டல் செய்வதற்கும் ஏதேனும் அவங்களுக்குள்ள ஏதேனும் சுமுக உறவு இருந்ததா? அதுவும் விடாம செய்யறதுக்கு? என்ன அர்த்தம் இதுக்கு?

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  38. எதிரியை எந்த இடத்தில் அடித்தல் வலிக்குமோ அந்த இடத்தில் தான் அடிக்க வேண்டும்
    நர்சிம் செய்தது 100% சரி

    ReplyDelete
  39. இந்த பிரச்சனைய இவ்ளோ பெருச ஆக வேண்டியது இல்ல.என்ன இருந்தாலும் நர்சிம் அவரை பற்றி எழுதிய புனைவு கொஞ்சம் ஓவர்..அனால் அதற்காக அவருடைய ஜாதியை இழுப்பது தேவை இல்லாதது..வேண்டும் என்றல் அவர் ஆணாதிக்கச் செயதார் என்று கொள்ளலாம்.

    ReplyDelete
  40. அவரது கோபத்தை காட்ட நினைத்தாலும் இவராவது நேரடியக சொல்லலாமே, என்னை சீண்டாதீர்கள் என்று! பதிலடி இப்படி தான் கொடுக்கனும்னு வேதத்தில் இருக்கா!?, அதுக்கு தான் எல்லாரும் சேர்ந்து கும்முறாங்க!, இப்போ உங்க முதுகும் கிடைச்சிருச்சு அவுங்களுக்கு.

    ReplyDelete
  41. //உரிமையோட கிண்டல் செய்வதற்கும் ஏதேனும் அவங்களுக்குள்ள ஏதேனும் சுமுக உறவு இருந்ததா? அதுவும் விடாம செய்யறதுக்கு? என்ன அர்த்தம் இதுக்கு?//


    ரெண்டு பேரும் வலைபதிவர்கள் என்ற தகுதி போதாதா!?
    வரும் போதே சொந்தம் யாராவது இருக்காங்களான்னு பார்த்துட்டு தான் ப்ளாக் பக்கமே வரனுமா, இப்போதிருக்கும் பதிவுகலில் அரசியல் ரீதியாக பிரிந்திருப்பவர்கள் இப்படி தான் கேவலமா எழுதுறாங்களா!?

    ReplyDelete
  42. @Phantom Mohan
    என்னோட அடிப்படை கேள்விக்கு பதில் சொல்லுங்க? உரிமையோட கிண்டல் செய்வதற்கும் ஏதேனும் அவங்களுக்குள்ள ஏதேனும் சுமுக உறவு இருந்ததா? அதுவும் விடாம செய்யறதுக்கு? என்ன அர்த்தம் இதுக்கு?

    டோண்டு ராகவன்
    //////////////////////////

    சார் நீங்கள் கேட்பது நியாயமான கேள்வி..... நான் அவர்கள் இருவரையும் இதைப்பற்றி எழுதிய அனைத்துப் பதிவிலும் சென்று கண்டனம் தெரிவித்துள்ளேன். இத்தனைக்கும் நரசிம் யார் என்றே எனக்கு சத்தியமா தெரியாது, நான் வலையுலகத்துக்கு வந்து இரண்டு மாதம் ஆகிறது.
    அவர்களின் முன்விரோதம் எனக்கு தெரியாது, அனால் விஜி எழுதியதைப் போன்று நிறைய கிண்டல் பதிவுகளை படித்துள்ளேன். ஏன் உங்களை திட்டாத திட்டா? நீங்கள் அதை எதிர்கொண்ட விதம் இவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. ஒரு பெண் என்ற காரணத்தால் அவள் தோற்றத்தை, அவள் நடத்தையை, அவள் பிறப்பை, அவள் தாயை, எல்லாவற்றுக்கும் மேலாக அவள் குழந்தையை கொள்வேன் என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது!

    எங்கே உன் குழந்தயை கொன்று விடுவேன் என்று ஒரு ஆணிடம் மிரட்டச் சொல்லுங்கள் பார்ப்போம்? பதிலடி எப்படி இருக்கும் என்று அவருக்கும் தெரியும்! என்னைப் பொறுத்த வரை அனைத்து பதிவர்களும் இருவருக்கும் கண்டனங்களை தெரிவித்து பொதுவாக ஒரு கடித்ததை அல்லது வேறு எதாவது ரூபத்தில் / விதமாக எழுதி அனைவரது வலைப்பூவிலும் மாட்டலாம். பிரச்சனை முடியும், அதை விட்டு ஆளாளுக்கு தத்தம் கருத்தை ஒரு பதிவாக போட்டால் வளர்ந்து கொண்டே தான் போகும்! இதை இத்துடன் முடிப்பது நல்லது!

    ReplyDelete
  43. //"மிக மிக சந்தோசம், இவ்வளவு தானே முடியும்"///

    இப்படி பின்னூட்டம் போட்டுட்ட புர்ச்சியா?

    வேறென்ன சொல்ல முடியும்..பீல கால வுட்டா கால்ல சந்தனமா ஒட்டும்..இதை அந்த நக்கல் பதிவு போடுவதற்கு முன்னால் யோசித்திருக்க வேண்டும்

    ReplyDelete
  44. வினவு கும்பலுக்கு செருப்படி

    http://www.shobasakthi.com/shobasakthi/?p=687

    ReplyDelete
  45. டோண்டு சார், உங்க பதிவை ஆதரிக்கிறேன்.

    ReplyDelete
  46. //ரெண்டு பேரும் வலைபதிவர்கள் என்ற தகுதி போதாதா!?
    வரும் போதே சொந்தம் யாராவது இருக்காங்களான்னு பார்த்துட்டு தான் ப்ளாக் பக்கமே வரனுமா, இப்போதிருக்கும் பதிவுகலில் அரசியல் ரீதியாக பிரிந்திருப்பவர்கள் இப்படி தான் கேவலமா எழுதுறாங்களா!//
    தல வால் பையா நீங்க எழுதேரத மாதிரி எல்லாம் வருமா? கொஞ்சம் பிளாஷ் பேக்கை நினைத்துக் கொள்ளவும்.

    ReplyDelete
  47. என்னை ஒருவர் அப்படி திட்டுகிறார் கண்டியுங்கள் என்று அந்த கோஷ்டிகளிடம் கெஞ்சாத குறையாக கேட்கிறேன். ஒருத்தரும் கண்டுக்கவில்லை. நாளை நானும் அந்த ஒட்டகத்தைப் போல கடித்தால் அன்னைக்கு வந்து என்னை திட்டுவார்கள். வாழ்க சர்வாதிகாரம்.

    ReplyDelete
  48. சார் உண்மையில் இந்த இடுகை ஆபாசம் என்று சொல்லும் வால்பையன் போடும் அதிகமான இடுகையின் தலைப்பே ஆபாசத்தை தாங்கித் தான் வரும்.
    அதுபோல நண்பர் செந்தழல் ரவி போடாத சினிமா கிசுகிசா! அவர் வந்து இதைக் கண்டிக்கிறார்.
    லேனா அக்காவுக்கு பதிவிட்ட வினவு இதைத் தான் செய்தார். இன்று அடுத்தவருக்கு தீர்ப்பு சொல்ல வந்துவிட்டார்.
    உண்மையில் பாதிக்க பட்டவர்களுக்கிடையே ஒரு சுமுகததை ஏற்படுத்தாமல் அதை ஊதி குளிர்காய்கிறார்கள் நம்ம ____________(இஷ்டப்பட்டதை நிரப்பிக் கொள்ளவும்)

    ReplyDelete
  49. டோண்டு சார்,

    ஒரு பார்ப்பனீய திமிர் பிடித்த குரூரமான ஒருவருக்கு இவ்வளவு சப்பை கட்டும் நீங்கள்... அந்த இடத்தில் ஒரு நாயுடுவோ, தேவரோ, வன்னியரோ இருந்தால் என்ன செய்வீர்கள்?

    மதுரையில் ஒரு பூக்காரி விபசாரி என எழுதிய அந்த பதிவரின் எழுத்துக்களை... மதுரையில் இருக்கும் பூக்காரிகளிடம் காட்டி... அவர்களை விளக்காறு கொண்டு அடித்தாலும்... பார்ப்பன சங்க பின்னணி கொண்டு அந்த குரூர பதிவர் திருந்துவாரா?

    மதுரை பூக்காரியை விபசாரி என புனைந்த அந்த குரூர மனிதர்... 1000 பெண்களுக்கு மேல் உறவு கொண்ட பொறுக்கி பயல்கள் சங்கராச்சாரிகளை பற்றி ஒரு உண்மை கதை எழுதட்டுமே...

    இவ்வளவு கேடு கெட்ட ஒரு குரூர வெறி... இவ்வளவு காலம் முகமுடியோடு திரிந்து இருக்கிறது... இப்போது நீல சாயம் வெளுத்து போச்சு...

    உங்களுக்கு போலிக்கும் எவ்வளவோ பிரச்சனைகள் நடந்திருக்கலாம்... போலி உங்களை எவ்வளவோ தாக்கி இருக்கலாம்... நீங்கள் இப்படியா குரூரமாக நடந்து கொண்டீர்கள்?

    உங்களை போன்ற வைதீக பார்ப்பனர்களை கூட நம்பலாம்... உங்களிடம் என்ன ஆயுதம் இருக்கிறது என தெரிந்த ஒன்று... ஆனால் அந்த குரூரமான ஜாதி வெறி பிடித்த... லௌதீக பார்ப்பனர்கள் ஆபத்தனாவர்கள்...

    அந்த பதிவர் பார்ப்பனர் எனும் ஒன்றை மட்டும் தள்ளி வைத்து விட்டு... பூக்காரி மகளை கொலை செய்து விடாதே எனும் குரூர சொல்லாடல்களை பற்றி... என்ன சொல்கிறீர்கள்? உங்களுக்கு பிள்ளைகள்... பேர பிள்ளைகள் இருக்கலாம்... உங்கள் வீட்டு பிள்ளைகளை இப்படி குரூரமாக எழுதினால்... எழுதியவர் பார்ப்பனர் என்றால் ஆதரிப்பீர்களா?

    நீங்கள் வயதில் மூத்தவர்... உங்களை போன்றவர்கள்... சமூகத்தில் நிலவும் ஜாதி வெறிதனத்தை குறைக்க வேண்டியவர்கள்... ஆனால் நீங்கள் எல்லாம் சைக்கோ... சோ... பாணியில் ஜாதி வெறிக்கு தூபம் போடுவது... சமுதாய கேடு...

    மனநோயாளி சோவின் வக்கிர எழுத்துக்களை அவனின் ஜாதிகாரர்களும்... வக்கிர புத்தி கொண்ட மற்ற ஜாதிகாரர்களும் மட்டுமே படிப்பார்கள்...

    உங்கள் தளத்தை நிறைய பேர் பார்க்க வரும் போது... இது போன்ற ஜாதி வெறிக்கு ஆதரவாக எழுதும் போது... மூத்தவர் எனும் உங்கள் மீது இருக்கும் மரியாதை குறையவும் வாய்ப்புண்டு...

    ReplyDelete
  50. @தமிழ்குரல்
    பதிவோட அடிப்படை கேள்விக்கு பதில் சொல்லவும்.
    கிட்டத்தட்ட ஓராண்டாக ஒரு பதிவரை இம்மாதிரி தேவையில்லாமல் நையாண்டி எல்லாம் செய்து வந்திருக்கிறார்கள். அப்படியாவது நையாண்டி செய்யப்பட்டவர் செய்தவர்களுக்கு நெருங்கிய நண்பரா? அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே. அப்படியிருக்க ஏன் இந்த நையாண்டியெல்லாம்? இது என்ன ஒரு மச்சினி அக்கா புருஷனை கிண்டல் செய்யற மாதிரின்னு நினைச்சிருப்பாங்களோ?

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  51. தமிழ் குரல் என்ற கருத்தாளரே,

    சமந்தப்பட்டவர்களே சாதிச் சண்டையிடாத போது அதில் சாதிச்சன்டையை துணிக்க நினைக்கும் உங்க நல்ல எண்ணத்திற்கு எனது பாராட்டுக்கள்.

    இதைப் ஒன்ற ஒரு இடுகையை தினமும் இடும் வால்பையனை ஒரு நாத்திக மதத்திற்காரன் என்கிற ஒரே காரணத்திற்காக கண்டு கொள்ளாமல் இருக்கும் உங்கள் பகுத்தறிவையும் பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  52. தமிழ் வலைப்பதிவுலகம் அதே மாதிரிதான் இருக்கிறது.

    என்ன செய்வது தமிழ் தெரிந்து தொலைந்துவிட்டது.

    தமிழை சாவடிக்க வேறே யாரும் தேவையில்லை தமிழுணர்வு உள்ளவர்கள் போதும்

    ReplyDelete
  53. //இதைப் ஒன்ற ஒரு இடுகையை தினமும் இடும் வால்பையனை ஒரு நாத்திக மதத்திற்காரன் என்கிற ஒரே காரணத்திற்காக கண்டு கொள்ளாமல் இருக்கும் உங்கள் பகுத்தறிவையும் பாராட்டுகிறேன். //

    சம்பளமும் வாக்குறதில்லை, நீ எனக்கு மாமன், மச்சானும் கிடையாது, ஆனா எங்க போனாலும் எனக்கு இப்படி இலவச விளம்பரம் தர்றியே! நீ ரொம்பஆஆஆஆஆ நல்லவன் தான்!

    ReplyDelete
  54. பரிந்துரை விளையாட்டு!!!
    -------------------------------------------------

    ஒரு அறிவாளி தன் பதிவில் ஒரு நாலு லிங்க்கு போட்டு, தோ படியுங்கள்
    என்று மட்டும் எழுதுகிறார்! அதற்க்கு ஒரு பத்து பரிந்துரைகள்! கவனிக்க வேண்டியது, இந்த அசுரத்தனமான அல்ப ஆசாமிக்கு முகமூடி மட்டும் தேவை!

    இயல்பாகவே விடத்தை கக்கும் ஒரு அசிங்கம் ஒன்று ஒரு முக்கால் பக்கம் மூச்சு முட்ட முக்கியதர்க்கு பரிந்துரைகள் பல! எழுதியது என்னமோ அசிங்க
    ஆர்ப்பரிப்புகள்! அதில் கும்மி அடித்தது என்னவோ அதே நாலு சாம்ப்ராணிகள், அனால் ஏகப்பட்ட பரிந்துரைகள்! இந்த சகதிக்கும் முகமூடி தேவை!

    இதைபோல இன்னும் சில சொத்தைகள் வாய்க்கு வந்ததை துப்பி போட்டு விட்டு, அதற்க்கும் நான்கைந்து குப்பை காப்பாளர்கள் வந்து அழுக்கு போதவில்லை
    தோண்டி எடுத்து அப்புங்கள், வாய் திறந்து உண்ணுகிறோம் என்ற அலப்பல்! பரிந்துரை மேல் பரிந்துரை வேறு! அதாவது உன்னாலே நான் கேட்ட வார்த்தைகள் கற்றேன், என்னாலே நீ ஏதாவது கற்றாயா, வாழ்க புரட்சி என்று துதியுடன்! உனக்கு என் முத்திரை, எனக்கு உன் முத்திரை என்ற கணக்கு!

    முத்தாய்பிற்கு முன், பைத்தியம் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் நண்பர் ஒருவர், இந்த பாம்புகளுக்கு பண்ணை நடத்த சொல்லுகிறார்! விடம் எடுப்பதற்காக அல்ல, காலை சுற்றி அவைகள் கடித்து பழக காணிக்கையாய் இருக்க! இவரைப்போன்ற அறிஞர்கள் இந்த மாவோ கூடத்தின் usefull idiots படையை
    சேர்ந்தவர்கள்! எதுக்கும் இதைப்போன்ற ஜால்ராக்கள் இருக்கட்டும், புரட்ச்சி வரும்வரி இவைகள் உபயோகப்படலாம் என்ற எண்ணத்தில் இவர்கள்
    வளர்க்கப்படுகிறார்கள் என்பது கூட புரியாது, வக்காலத்து வாங்குவதில் இன்ப சுகம் காண பழகிக்கொண்டவர்கள்! சொல்லி வைத்தார்ப்போல இவர் பதிவிற்கும் பல பரிந்துரைகள்!

    ReplyDelete
  55. இவர்கள் எழுதுவதும், அந்த கணினியில் பாக்க்மேன் விளையாட்டு ஆடுவதும் ஒன்றுதான்! பாக்மன் (ஆரம்பகால versions நான் ஆடியது உண்டு)ஆட்டத்தில்
    பப்பில்களை உடைத்து பாய்ண்ட்களை எடுத்து முழுங்க வரும் சுறாக்களிடமிருந்து தப்பிக்க வேண்டும்! தமாஷாக இருக்கும்! பாய்ண்ட்டு எடுக்க எடுக்க குஷியாக இருக்கும்! அது தரும் போதை தலைக்கு ஏறி, ஒரு நல்லைக்கு ஒரு அரை மணி நேரம் ஆடவில்லை என்றால் வேலை ஓடாது!

    அதே போலதான் நம்ம தமிழ் பதிவு எழுதும் முற்போக்கு செம்மல்களும்!

    கண்டதை எழுதி, முதுகு சொரிய, யார் நன்றாக சொறிந்தார்கள் என்று தங்களின் குட்டை உலகிற்கு சொல்ல கிடைத்த நல்ல குட்டை இந்த திரட்டிகள்! முதுகு சொரியும் வழிமுறைதான் இந்த பின்னூட்டம் இடும் வழிமுறை!. இந்த முதுகு சொறிதலுக்கு முத்தாய்ப்பு, "பரிந்துரை" என்ற விளையாட்டு!

    இங்கே எழுதப்படாத சட்டம், திட்டி எழுதினால், அதாவது நாங்களோ அல்லது எங்களுக்கோ வேண்டப்பட்டவர்கள் திட்டினால், முதலில் செய்யவேண்டியது, பரிந்துரை! "அருமை", "வழிமொழிகிறேன்" "மிக சரி" "டௌசர் கிழ்சிடீங்க" என்ற சொல்ல ஒரு கூட்டம்! இவர்களின் அடுத்தகட்ட வழிமுறை பரிந்துரை!

    அதாவது உலகெல்லாம் சொல்லுதுபார் என்று சொல்ல துடிக்கும் உலகம் தெரியாத, உலகுக்கே தெரியாத ஒரு சுண்டெலிகள் கூட்டம் தங்களுடைய இல்லாத இன்றியமையாமையை உலகிற்கு சொல்ல நடத்தும் வழிமுறைதான் இந்த பரிந்துரை டிராமா!

    இவர்களின் கடவுள் ஜோசெப் ஸ்டாலின் வோட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் தேர்தல் வழிமுரைப்பற்றி ஒருமுறை சொன்னார்! Its not the people that vote counts, its the people who count the vote! அதாவது, ஓட்டுப்போடும் மக்கள் கூட்டம் முக்கியமில்லை, அதை எண்ணும் கூட்டமே முக்கியம்! ஸ்டாலின் வழி வந்தவர்கள் ஆயிற்றே! அதே வழிமுரைதானே இவர்களுக்கும்!

    இவர்கள் வழிமுறைகளில், ஒட்டு (இங்கே பரிந்துரை) என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்றை உலகிற்கு சொல்லவதற்கு மட்டுமே! இது பிற்போக்கு, இது பொறிக்கித்தனம், இது அராஜகம்,இது முற்போக்கு, இது புரட்சி, ஏனென்றால் நங்கள் முடிவெடுத்துவிட்டோம் என்று தாங்களாகவே எடுத்த முடிவை வெளியே சொல்ல பயன்படும் வழிமுறைதான் இந்த பரிந்துரை விளையாட்டு!

    அதுவும் திரட்டிகளில் இவர்களின் குத்தகை மற்றும் அடிமைகள் பல இருப்பதால் இந்த விளாயாட்டு கன கச்சிதமாய் நடக்கிறது!

    இதனால் என்ன பயன் என்று பார்த்தால் - ஹி ஹி ஹி, ஒன்றும் இல்லை!

    (மாவோ, ஸ்டாலின், சே குவேரா போன்ற மா மனிதர்கள் உயிருடன் இருந்தார்களானால், சந்தோசப்படுவார்கள், இன்னுமாட எங்கள இவெங்க நம்புறாங்க என்று!)

    நன்றி

    ReplyDelete
  56. இன்னும் ஒரு மேதாவி பாக்கி! இவருக்கு அப்பப்போ கோபம் வரும் ! இவர் எல்லோரையும் ஏசுவார்! பிற்போக்காளர்களை கண்டால் இவருக்கு கோபம் வருமாம்! அதை எதிர்ப்பது இவரின் உரிமையாம்! ஆதலால் இவர் எல்லோரையும் சாடுவாராம்! போதாக்குறைக்கு முகமூடியுடன் வருபவர்களை கண்டால் இவருக்கு ஆகாதாம்! ஆனால் இவர்களின் தோழர்களெல்லாம் முகமூடியுடன் வந்தால் அதற்க்கும் ஒரு விளக்கம் ரெடி! அதையும் யாராவது கேள்வி கேட்டால் வார்னிங் கொடுப்பாராம்! போதாக்குறைக்கு வாரத்திற்கு ஒரு ரெண்டு பக்கம் எழுதி, இந்த நாட்டு பாரம்பிரியங்களை திட்டி அதற்க்கு பின்னூட்டம் வருகிறதா என்று மணிக்கணக்கில் பார்த்துகொண்டிருப்பார்! அவ்வளவாக ஜன நடமாட்டம் இல்லாததால், இந்தமாதிரி சான்சு கிடைத்தால் போட்டு தாக்காமலா விடுவார்!
    அதற்க்கும் பரிந்துரைகள் பல! குத்துவது யாரென்று பார்த்தால், அதே கும்பல்தான்! பரவாஇல்லை விடுங்க, இன்னைக்கு நல்லா தூங்கட்டும் என்று விட்டால், இந்த காமடியை கண்டு சும்மா இருக்க முடியவில்லை!

    சரி, இந்த குப்பையை கிளறிய உலகமகா உத்தமர்கள் தளத்தில் வந்து கும்மி அடிப்பவர் யாரென்று பார்த்தால், அது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம்தான்! ஒரு பத்து பேர் பூச்சாண்டி, கேள்விக்குறி, கொக்கா மொக்கா என்று பெயர்வைத்க்கொண்டு வேலை விட்டி இல்லாத சிலர்! இவர்கள் எழுத்துகளை கூர்ந்து கவனித்தால் இவர்கள் எல்லாம் ஒரு சில ஆசாமிகளின் வேறு வேறு முகமூடிகள்தான் என்பது தெரியவரும்!

    நான் சில காலம் முன்னர் எழுதிய (அவர்கள் தளத்தில் போய் எழுதியது. ஒரு முறை அடி பட்ட பிறகு என் பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை,அவ்வளவோ பயம் :-))) ஹி ஹி)வினவு டாக்க்டிக்ஸ் பற்றிய ஒரு பத்தியை இங்கே பிறகு பதிவிடுகிறேன்! அதற்க்கு முன்னர் இந்த பரிந்துரை பைத்திக்காரத்த்னத்தை பற்றி இன்னும் கொஞ்சம்!!

    அதாவது இந்த தமிழ்மணம் இந்து மதம், இந்தியா, இந்திய இறையாண்மை, இந்திய பாரம்பரியம் பற்றி திட்டுபவர்களுக்கு ஒரு தளமாக ஆகிப்போய்
    விட்டபடியால், ஒத்த கருத்துடைய இதுபோன்றவர்கள் சமயம் கிடைக்கும்போழுதேல்லாம் ஒன்றாக கூடி காட்டு கூச்சல் போடுகிறார்கள்! அதானால் ஒன்றும் குடி மூழ்கி போகாதுதான்! இது எப்படி என்றால் விரட்டி அடிக்கப்பட்ட ஒரு பத்து தவளைகள், பிழைக்க இடம் தேடி அலையும்போழுது கிடைத்த இடம்தான் இந்த திரட்டிகள்! இவர்கள் எழுதிய குப்பைகளை இவர்களே படித்து மகிழ்ந்து, கூத்தாடி கொண்டாடி, புரட்ச்சி வந்தது பார், முற்போக்கு பார், உலகமே வாழ்த்துது பார் என்று கூவ கிடைத்த ஒரு சான்சு! இதானால் கெட்டது இவர்களின் பிழைப்பு, அதாவது இவர்களை வேலைக்கு எடுத்து கணினியெல்லாம் கொடுத்து தங்களுக்க்காகத்தான் வேலை செய்கிறார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் கம்பனிகாரர்களின் பிழைப்பு!!

    ReplyDelete
  57. //இன்னும் ஒரு மேதாவி பாக்கி! இவருக்கு அப்பப்போ கோபம் வரும் ! இவர் எல்லோரையும் ஏசுவார்! பிற்போக்காளர்களை கண்டால் இவருக்கு கோபம் வருமாம்! அதை எதிர்ப்பது இவரின் உரிமையாம்! ஆதலால் இவர் எல்லோரையும் சாடுவாராம்! போதாக்குறைக்கு முகமூடியுடன் வருபவர்களை கண்டால் இவ//

    ஆஹா,யார் அந்த மேதாவி?சென்னையில் வசிக்கும் ஒரு பிரபல வெடரிநரி டாக்டர் தானே?

    ReplyDelete
  58. மலைக் கோட்டை மன்னாரு, சோடா புட்டி காணம போயிடுச்சாமே.

    கோடு போட்டா பணியன் போட்டவன் எல்லாம் ப்ளாக்கு எழுதலைன்னு யாரு கேட்டது ?

    ReplyDelete
  59. NO - இது யாருங்க, Proxy டோண்டுவா?
    ஆனா எப்படி எல்லாரும் உடனே ஒன்னா வந்து கத்த ஆரம்பிச்சுர்ரீங்க?

    ReplyDelete
  60. //ஈரோடு கோடீஸ் said...
    NO - இது யாருங்க, Proxy டோண்டுவா?
    ஆனா எப்படி எல்லாரும் உடனே ஒன்னா வந்து கத்த ஆரம்பிச்சுர்ரீங்க?
    ///

    vaayyaa kootiisu

    Nee kanaikkum poothu maththavanga kaththak kuutaatha?

    ReplyDelete
  61. நர்சிம் தனது வலைத்தளத்தில் ஒரு வாசகர் கடிதம் வெளியிடுகிறார்
    2. அதை கேலி செய்து தீபா பகடி வெளியிடுகிறார்
    3. பிரச்சனை வருகிறது. சமாதானம்
    அதன் பிற்கு
    1. ஆதி தனது தளத்தில் நர்சிமின் பேட்டி வெளியிடுகிறார்
    2. அதன் பிறகு மதுர நீ தளத்தில் ஒரு அனானி பேட்டி வருகிறது
    3. அந்த மதுர நீ தளத்தின் சுட்டி சந்தன முல்லையா டிவிட்டரில் அளிக்கப்படுகிறது
    கேள்வி 1. அந்த தளத்தை நடத்துவது யார்
    2. அது சந்தனமுல்லைக்கு எப்படி கிடைத்தது அங்கு யாரும் பார்க்க வில்லை

    3. மயில் விஜி போன் செய்து நர்சிம் உங்களை பற்றி எழுதுகிறேன் என்கிறார்
    6. மதுர நீயில் இருந்து பேட்டி மறைந்து மயில் தளத்தில் வருகிறது
    கேள்வி
    3. மதுர நீ தளத்திற்கும் மயிலுக்கு என்ன சம்மந்தம்
    கேள்வி 4 : ஏன் முதலில் அது மயில் தளத்தில் வெளியிடப்படவில்லை

    கேள்வி 5 மயில் விஜி இது போல் எத்தனை அனானி / போலி தளங்களை நடத்துகிறார்

    7. மயில் தளத்தில் சந்தனமுல்லை நர்சிமை குறிவைத்து தாக்குகிறார்
    8. இடுகையை நீக்குமாறு சிலர் கூறுகிறார்கள்
    9. சந்தனமுல்லை முடியாது என்கிறார்

    கேள்வி 6 : அந்த இடுகை மயில் எழுதியதாக இருந்தால் சந்தனமுல்லை ஏன் முடியாது என்கிறார்

    10. இப்ப நர்சிம் பூக்காரி எழுதுகிறார். அதில் பூக்காரியை (பார்க்க பூக்கரியை - எந்த பெயரும் இல்லை) விபச்சாரி என்கிறார்
    ஆனால் மயிலோ நர்சிமிடம் தொலைபேசி அது நீ என்று சொல்லிவிட்டார்
    நர்சிம் பெயர் குறிப்பிட வில்லை

    கேள்வி 7 : பிறகு ஏன் இவர்களுக்கு பொத்துகிட்டு வருது
    ஏன். அப்படி என்றால் இது வரை முல்லை செய்தது தெரிந்தவர்களுக்கு தானே பொருள்படும். அப்படி பட்டவர்கள் முல்லையை கண்டிக்காமல் நர்சிமை மட்டும் வெளுத்து வாங்குவது சரியா

    ReplyDelete
  62. வினவு என்ற பெயரில் ஒரு சீனக் கூட்டம் இத்தனை நாளாக எழுதி வந்த நிற இன வெறிப் பதிவுகள் எல்லாம் சுகுணா திவாகரின் வெளிப்படுத்தல் மூலம் னார் நாராய்க் கிழிந்து விட்டது.

    இப்போது வினவு தளத்தில் பின்னூட்டங்களை எல்லாம் மட்டுறுத்தல் செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் சுகுணா திவாகருக்கு தமிழச்சியின் ஒரு மிரட்டல் வேறு.

    http://suguna2896.blogspot.com/2010_06_01_archive.html

    http://www.shobasakthi.com/shobasakthi/?p=697

    ReplyDelete
  63. நான் நோவின் ரசிகனாகி விட்டேன்

    ReplyDelete
  64. இத்தனை நாள் பை..கூலிக்கு மாரடித்திருக்கிறார் போலும். நர்சிம் எது எழுதினாலும் இவர் பின்னூட்டம்தான் முதலில்..

    ReplyDelete
  65. I read blogs of Tamil, Telugu, Malayalam and Hindi.
    In no other blogs other than Tamil, there is no craze ahout history, literarture or cinema. They all 90% of the time write about social causes, national events/happenings.
    I hope everyone has read about Frogs in a jar story. Typical Tamil Frogs.

    ReplyDelete
  66. //உரிமையோட கிண்டல் செய்வதற்கும் ஏதேனும் அவங்களுக்குள்ள ஏதேனும் சுமுக உறவு இருந்ததா? அதுவும் விடாம செய்யறதுக்கு? என்ன அர்த்தம் இதுக்கு?//

    இந்த ஐந்து வருடத்துல மொத தடவையா பெரியவர் டோண்டுவோட கேள்வியோட ஒத்துப் போறேன்...

    என்ன கொடுமை சார் இது !

    :))

    ReplyDelete
  67. செந்தழல் ரவி பற்றி ஆளாளுக்கு கருத்துச் சொல்வதாய் கடித்து துப்பியிருக்கின்றனர்.

    என்னுடய அவதானிப்பில் அவர் ஒரு ”அவசரக் கருத்தாளர்” அவ்வளவே!.

    ReplyDelete