நிரந்தர பக்கங்கள்

7/22/2010

தமிழனின் கெத்து

என் கணினி குரு முகுந்தன் அனுப்பிய மின்னஞ்சலின் தமிழாக்கம் இதோ.

மைக்ரோசாஃப்டின் ஐரோப்பிய தலைமையகத்துக்கு ஒரு தலைமை நிர்வாகி தேவைப்பட்டது. ஆகவே ஒரு பெரிய walk in நேர்காணலுக்கு ஏற்பாடு செய்தார். 5000 பேர் குழுமினர்.

அவர்களில் ஒருவன்தான் நம்ம ராமசாமி.

பில் கேட்ஸ்: இவ்வளவு பேர் வந்ததுக்கு மிக்க நன்றி. “ஜாவா தெரியாதவங்க எல்லாம் தயவு செய்து போயிடுங்க”
உடனே 2000 பேர் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

ராமசாமி நினைக்கிறான், 'ஜாவாவா? அப்படீன்னா என்ன? அதனால என்ன இருந்துதான் பார்ப்போமே. கழுத்தையா சீவிடுவாங்க!'

பில் கேட்ஸ்: குறைந்த பட்சம் 100 பேரையாவது மேய்த்து வேலை வாங்கியவர்கள் மட்டும் இருக்கவும்.
அடுத்த 2000 பேர் உடனேயே போயிடறாங்க.

ராமசாமி நினைக்கிறான், 'யாரையும் நான் மேய்ச்சதில்லைதான். அதனால என்ன இருந்துதான் பார்ப்போமே. கழுத்தையா சீவிடுவாங்க!'

பில் கேட்ஸ்: மேலாண்மை டிப்ளமாக்கள் இல்லாதவர் எல்லாம் தயவு செய்து போயிடுங்க.
உடனே 500 பேர் இடத்தை காலி செய்யறாங்க.

ராமசாமி நினைக்கிறான், 'நான் பி.யு.சி.-யோட படிப்பை விட்டாச்சு. அதனால என்ன, இருந்துதான் பார்ப்போமே. கழுத்தையா சீவிடுவாங்க!

கடைசியா, பில் கேட்ஸ் சொல்லறாரு, ‘செர்போ-குரோஷிய மொழி பேசத் தெரியாதவங்க இங்கே வேண்டாம்’.

இப்போ 498 பேர் போயாச்சு.

ராமசாமி நினைக்கிறான், 'செர்போ-குரோஷிய மொழி பேசத் தெரியவே தெரியாதுதான். அதனால என்ன இருந்துதான் பார்ப்போமே. கழுத்தையா சீவிடுவாங்க!

கடைசியா ராமசாமியும் இன்னும் ஒரே ஒரு ஆளும்தான் இருக்காங்க; மீதி எல்லோரும் போயாச்சு.

இப்போ பில் கேட்ஸ் இவங்க கிட்டே வரார். “அப்போ ஒங்க ரெண்டு பேருக்குத்தான் 'செர்போ-குரோஷிய மொழி பேசத் தெரியும் அல்லவா. எங்கே ரெண்டு பேரும் அந்த பாஷையிலே ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கோங்க’.

அசால்ட்டா ராமசாமி அந்த இன்னோரு ஆளைப் பார்த்து பேசுகிறான், ‘நான் ராமசாமி, வத்தலகுண்டு சொந்த ஊரு. நீங்க எந்தப் பக்கம்’.

இன்னொரு ஆள் சொல்றான், ‘நான் கிருஷ்ணசாமி, கும்பகோணம் பக்கம்’

அன்புடன்,
டோண்டு ராகவன்

54 comments:

  1. ஹா.. ஹா.. ஹா.. ரொம்ப நல்லா இருக்குது..

    ReplyDelete
  2. இப்படியே வெறும் 'ஜோக்' மட்டுமே எழுதிகிட்டே (or சுட்டுபோட்டுகிட்டே) இருந்தீங்கன்னா ரொம்ப நன்னா இருக்கும்.

    ReplyDelete
  3. यह तो बहुत अच्छा ही!

    ReplyDelete
  4. यह तो बहुत अच्छा ही

    Danke schön!

    Mit freundlichen Grüßen,
    Dondu N. Raghavan

    ReplyDelete
  5. പോസ്റ് നന്നായിട്ടുണ്ട് സാറേ!

    ReplyDelete
  6. :-)) நல்ல காமெடி தான்.

    ReplyDelete
  7. @#$%^&^%$)(*&*^#!}{$%^&**(%#@@@@&&*^%##(*&^%$()()*&^

    பதிவு நல்லா இருக்குன்னு செர்போ-குரோஷிய மொழியில சொன்னேன்

    ReplyDelete
  8. ஆருயிர் ஆருள் எங்கெருந்தாலும் களத்தில் இறங்கி தமிழன் இங்கே இகழப்படுவதை காப்பாற்றிக் கொடுக்க வேணுமாய் வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  9. Anonymous said...
    ஆருயிர் ஆருள் எங்கெருந்தாலும் களத்தில் இறங்கி தமிழன் இங்கே இகழப்படுவதை காப்பாற்றிக் கொடுக்க வேணுமாய் வேண்டிக் கொள்கிறேன்
    +++++++++++++++++++++++++++++++++++

    Arul will come only to defend vanniyars and vanniyarism. Sorry!!

    ReplyDelete
  10. என்னது இராஜகோபால் ஆச்சாரி தமிழக முதல்வராகி இருக்காரா ?

    ReplyDelete
  11. கொஞ்சம் பழைய ஆனால் நல்ல ஜோக். இதே ஜோக்கை தெலுங்கர்கள் 2 பேருடன் படித்தேன். ஆனால், அது தான் நச். உண்மையும் கூட.

    ReplyDelete
  12. ரொம்ப பழசு...
    இது
    ஆந்திரா காரர்கள் அவர்களுக்குள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்...

    பஞ்சாபி, மலையாளத்தான் அவிங்களுக்குள் சொல்லியும் கேட்டுள்ளேன்..

    ReplyDelete
  13. ஜோக்குகளில் ஒரிஜினல் ஜோக் என்பது அபூர்வம். பஞ்ச் பத்திரிகையில் ஒரு கார்ட்டூன் பார்த்தேன். அதில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததாக அறியப்பட்ட பழைய குகை ஒன்றில் ஒரு கோட்டோவியம் இருந்தது.

    அதை பார்த்த ஒரு புதை பொருள் நிபுணர் தனது சகபாடியை பார்த்து பேசுகிறார், “அடேடே இதப்பாருய்யா, நம்ம ப்ரொஃப்சர் சொன்ன ஜோக்கு இங்கே இருக்கு”.

    இந்த ஜோக்கையே எடுத்து கொள்ளுங்கள். எனது ஊகம் சரியானால் இது இரண்டு யூதர்கள் சம்பந்தப்பட்டது. இருவரும் இட்டிஷ் பேசுவார்கள். கதையும் 19-ஆம் நூற்றாண்டில் நடந்ததாக இருக்கும். அந்த ஜோக்கும் ஒரிஜினலாக இருந்திருக்காது.

    அதுக்கென்ன இப்போ.

    என்னைப் பொருத்தவரை புது ஜோக் என்பது கேட்பவருக்கு புதிதாக இருக்க வேண்டும். எனக்கு அது புதிதாகப் பட்டது அவ்வளவே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  14. டோண்டு ராகவன் Said...

    // //எனது ஊகம் சரியானால் இது இரண்டு யூதர்கள் சம்பந்தப்பட்டது. இருவரும் இட்டிஷ் பேசுவார்கள். கதையும் 19-ஆம் நூற்றாண்டில் நடந்ததாக இருக்கும்.// //

    தெலுகு, மலையாளம், பஞ்சாபி, இட்டிஷ் - ஆனா பாருங்க, இரண்டுபேர் சமஸ்கிருதம் பேசினதா மட்டும் இந்த 'ஜோக்கை' சொல்லவே முடியாது.

    ஏன்னா, அந்த மொழியைதான் 'யாரும்' 'எப்போதும்' பேசினதே இல்லையே!

    ReplyDelete
  15. டோண்டு ராகவன்

    // //यह तो बहुत अच्छा ही

    Danke schön!

    Mit freundlichen Grüßen,// //

    "இது ரொம்ப நல்லா இருக்கு"

    "நன்றி, மிக்க அன்புடன்"

    ......ஏதோ முடிஞ்சவரைக்கும்!

    ReplyDelete
  16. // ஏன்னா, அந்த மொழியைதான் 'யாரும்' 'எப்போதும்' பேசினதே இல்லையே! //

    அருள் ரொம்ப மொக்கையா இருக்கு இந்த ஜோக்.

    ReplyDelete
  17. நான் வால்பையன், மதுரை பக்கம்!

    எனக்கும் வேலை கிடைக்குமா?!

    ReplyDelete
  18. பில் கேட்ஸ் ஊரு மதுரை பக்கமா இருக்க போகுத்துங்க :-)

    ReplyDelete
  19. ARUL-
    sanskrit speeches audio for you.

    (please select and play)

    http://surasa.net/music/samskrta-vani/sbharati.php

    ReplyDelete
  20. //ARUL-
    sanskrit speeches audio for you.//


    ராம்ஜி, ”சம்ஸா”கிருதா ஒரு மொழிபாடமாகவே இருப்பது தெரியும், ஆனால் யார் பேசி கொண்டிருக்கிறார்கள்! அது தேவலிபி என்று புருடா தானே விட்டு கொண்டிருக்கிறார்கள்!

    நீங்கள் கொடுக்கும் ஒரு ஆடியோ ஆதாரம் பாப்ஸ் அனைவரும் வீட்டில் சம்ஸாகிருதமே பேசுகிறார்கள் என்பதை ஊர்ஜீதப்படுதுமா!?

    ReplyDelete
  21. //நான் வால்பையன், மதுரை பக்கம்!

    எனக்கும் வேலை கிடைக்குமா?! //

    உங்களுக்குத் தான் கொட்டை அடிக்கிற வேலை இருக்கே.

    ReplyDelete
  22. ராம்ஜி_யாஹூ said...

    // //ARUL-
    sanskrit speeches audio for you.

    (please select and play)

    http://surasa.net/music/samskrta-vani/sbharati.php// //

    சமஸ்கிருதம் என்பதின் பொருளே, ஆக்கப்பட்ட அல்லது (செயற்கையாக) உருவாக்கப்பட்ட மொழி என்று பொருள். 'சம்' = (வேறுபட்ட மொழிகளை) ஒன்றாக்கி, 'க்ரதம்' = உருவாக்கப்பட்டது என்பதாகும்.

    அந்த மொழியை இப்போது எவரும் பேச்சு மொழியாக பயன்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல, அது எப்போதுமே பேச்சு வழக்கிற்கான மொழியாக இருக்கவில்லை.

    வேதங்களையும் புராணங்களையும் தொகுப்பதற்கான ஒருவித சங்கேத மொழியாக மட்டுமே சமஸ்கிருதம் இருந்து வந்துள்ளது.

    ReplyDelete
  23. //நீங்கள் கொடுக்கும் ஒரு ஆடியோ ஆதாரம் பாப்ஸ் அனைவரும் வீட்டில் சம்ஸாகிருதமே பேசுகிறார்கள் என்பதை ஊர்ஜீதப்படுதுமா!? //

    எனக்கு தெரிந்தவர்கள் வீட்டில் அனைவரும் சமஸ்க்ருதம்தான் பேசுகிறார்கள் .. அதில் என்ன தவறு இருக்கிறது ?? எஹ்டோ நாட்டில் பிறந்த ஆங்கிலமும், உருதுவும் பேசப் படும் பொழுது, இந்திய மொழியான சமஸ்க்ருதம் பேசப்படுவதில் தவறு இல்லை

    ReplyDelete
  24. அருள் மற்றும் வால்பையனுக்கு

    கீழ்க்கண்ட ஊர்களில் மக்கள் பேசுவதற்கு சமஸ்க்ருதம் மட்டுமே உபயோகப் படுத்துகின்றனர் (இனப் பாகுபாடு இல்லாமல் )

    In these Indian villages, inhabitants of all castes speak Sanskrit natively since childhood:

    1. Mattur in Karnataka,[37]
    2. Jhiri, District: Rajgadh, Madhya Pradesh,[38]
    3. Ganoda, District: Banswada, Rajasthan,[39]
    4. Bawali, District: Bagapat, Uttar Pradesh
    5. Mohad, District: Narasinhpur, Madhya Pradesh

    ReplyDelete
  25. ஆதாரம் இங்கே

    http://timesofindia.indiatimes.com/articleshow/msid-1199965,curpg-1.cms

    ReplyDelete
  26. //இந்திய மொழியான சமஸ்க்ருதம் பேசப்படுவதில் தவறு இல்லை//


    ஆங்கிலம் கூட இந்தியமொழி என்பீர்கள் போலயே!

    ReplyDelete
  27. //ஆங்கிலம் கூட இந்தியமொழி என்பீர்கள் போலயே!//
    உங்களுக்கு விஷயமே தெரியாதா? அரசியல் நிர்ணயச் சட்டத்தின்படி ஆங்கிலமும் இந்திய மொழிகளில் ஒன்றே.

    நாகாலாந்து மாநிலத்தின் ஆட்சிமொழி கூட.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  28. ///உங்களுக்கு விஷயமே தெரியாதா? அரசியல் நிர்ணயச் சட்டத்தின்படி ஆங்கிலமும் இந்திய மொழிகளில் ஒன்றே.///

    ஆங்கிலம் இந்திய மொழி அல்ல! இந்தியாவில் பேசப்படும் ஒரு மொழி அவ்வளவுதான். English is one of the official languages in India.

    Tamil is also one of the official languages in Singapore. ஏமாந்தா தமிழ "சிங்கப்பூர் மொழி" "மலேசிய மொழி" என்று சொல்வீர்கள் போலிருக்கிறது!!!

    வால் பையன் சொன்னது சரி "ஆங்கிலம் இந்திய மொழி கிடையாது!" இந்தியாவில் உபயோகேப்படுத்தும் ஒரு மொழி அவ்வளவே.

    ReplyDelete
  29. LK said...

    // //அருள் மற்றும் வால்பையனுக்கு

    கீழ்க்கண்ட ஊர்களில் மக்கள் பேசுவதற்கு சமஸ்க்ருதம் மட்டுமே உபயோகப் படுத்துகின்றனர் (இனப் பாகுபாடு இல்லாமல் )

    In these Indian villages, inhabitants of all castes speak Sanskrit natively since childhood:

    1. Mattur in Karnataka,[37]
    2. Jhiri, District: Rajgadh, Madhya Pradesh,[38]
    3. Ganoda, District: Banswada, Rajasthan,[39]
    4. Bawali, District: Bagapat, Uttar Pradesh
    5. Mohad, District: Narasinhpur, Madhya Pradesh]// //

    ஒரு உதாரணத்திற்கு Mattur ஐ எடுத்துக்கொண்டால், இது கிருஷ்ணதேவராயரால் வேதத்தையும் சமஸ்கிருதத்தையும் வளர்ப்பதற்காகவே ஏராளமான தானங்கள் கொடுத்து "உருவாக்கப்பட்டுள்ளது".

    அங்கிருப்பவர்கள் தமிழ்நாட்டிலிருந்து குடியேறியவர்கள், அப்பகுதியின் மண்ணின் மைந்தர்கள் அல்ல.

    தொடர்ந்து உடுப்பி பேஜாவர் மடம் போன்றவற்றால், ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

    எனவே, அங்கு பேசப்படுவதாகக் கூறப்படுவது - காலகாலமாக பேசப்படும் இயல்பான மொழி அல்ல.

    அது ஒரு 'நெகிழி (பிளஸ்டிக்) பூ' போன்றதுதான். இயற்கையானது அல்ல.

    ReplyDelete
  30. பல்லாண்டுகளுக்கு முன் மின்னஞ்சலில் சுற்றிய புனைவை பதிவாக்கி விட்டீர்கள்!

    மோரல் ஆஃப் த ஸ்டோரி என்ன?

    நம்மாளு எங்க போனாலும் பொழச்சுக்குவான்?

    நம்மாளுன்னா தமிழன் தானே?

    :)))

    ReplyDelete
  31. //பல்லாண்டுகளுக்கு முன் மின்னஞ்சலில் சுற்றிய புனைவை பதிவாக்கி விட்டீர்கள்!//

    நான் ஏற்கனவேயே வஜராவுக்கான பதிலில் சொன்ன மாதிரி, ஜோக்குகளில் ஒரிஜினல் ஜோக் என்பது அபூர்வம். இந்த ஜோக் மின்னஞ்சல்கள் காலத்துக்கும் முந்தையது என்பது எனது அனுமானம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  32. 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் 1,028,610,328 பேர்களில் வெறும் 14,135 பேர் மட்டுமே தமது தாய்மொழியாக சமஸ்கிருதத்தை அறிவித்துள்ளனர்.

    இப்படிப்பட்ட ஒரு மிகநுண்ணிய மொழிக்காக மக்கள்பணம் பலப்பல கோடிகள் செலவிடப்படுவது நியாயமா? நீதியா?

    ReplyDelete
  33. இலவசங்கள் என்ற பெயரில் மக்கள் வரிப் பணத்தை வீணடிப்பதை விட இது எவ்வளவோ பரவாயில்லை

    ReplyDelete
  34. @Arul
    சமஸ்க்ரிதம் ஒரு தனி மொழியாக பேசும் மக்கள் வெகு குறைவு என்றாலும் இன்று அது எல்லா இந்திய மொழிகளிலும் கலந்து எல்லோராலும் பேசப் பட்டு வருகிறது.
    நீங்கள் பெருமைப் படும் தலைவர்கள் கூட அந்த மொழிப் பெயரைத் தான் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
    சங்கமித்ரா , சௌம்யா, ராம, தாச, நிதி, கருணா, கிரி, தயா இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
    காலம் தாண்டி வாழ்தல் என்பது இது தான்

    ReplyDelete
  35. @Arul, Val

    உங்கள் எழுத்தில் கூட கலந்து இருக்கு.
    யூகம் ( ஊகம் )

    ஊர்ஜிதம், ஜோக், புருடா, ஆடியோ இதெல்லாம் தமிழ் தானாமா? இப்போ தமிழ் ஆயிடிச்சாமா?

    //ஏன்னா, அந்த மொழியைதான் 'யாரும்' 'எப்போதும்' பேசினதே இல்லையே//

    பேச்சு வழக்கா இல்லாத ஒரு மொழிக்கு இன்னும் ஏன் இப்படி மிரளறீங்க.
    அந்த நேரத்திலே ஆங்கிலம் கலக்காம தமிழ் எழுத கத்துக்கலாம் இல்லையா? ஒ, ஆங்கில கலந்தா தப்பில்லை என்பது உங்கள் கொள்கை இல்லையா?

    ReplyDelete
  36. அருள் has left a new comment on your post "தமிழனின் கெத்து":

    virutcham said...

    // //பேச்சு வழக்கா இல்லாத ஒரு மொழிக்கு இன்னும் ஏன் இப்படி மிரளறீங்க.// //

    சமஸ்கிருதத்தைக் கண்டு மிரள்கிறோமா? நல்ல நகைச்சுவைதான்.

    ஒரு மொழியிலிருந்து மற்ற மொழிகளுக்கு வார்த்தைகள் இடம்பெயர்வது இயல்புதான். அப்படிப்பார்த்தால் தமிழ் சொற்கள் இல்லாத மொழி எதுவுமே உலகில் இருக்காது. 'அரிசி' உலகின் மிகப் பல மொழிகளில் அரிசி என்ற வார்த்தையை சார்ந்துதான் (Rice) கூறப்படுகிறது. உலகின் எந்த நாட்டிற்கு போனாலும் உணவகங்களில் அரிசி கஞ்சி 'கஞ்சி' என்றுதான் அழைக்கப்படுகிறது.

    உலகில் இருக்கிற 6000 மொழிகளில் சமஸ்கிருதமும் ஒரு மொழியாகக் கிடந்துவிட்டுப் போவதில் ஒன்றும் மாற்றுக்கருத்து இல்லை.

    ஆனால், சமஸ்கிருதம் தமிழை விட உயர்வானது, கர்நாடக இசை தமிழிசையைவிட உயர்வானது, பார்ப்பான் தமிழர்களைவிட உயர்வானவன் - என்று உயர்வு தாழ்வு பேசுவதுதான் சிக்கல்.

    கூடவே, இந்திய அரசு அங்கீகரித்துள்ள எல்லா மொழிகளையும் சமமாக நடத்தாமல், ஓரவஞ்சனையாக சமஸ்கிருத்தத்திற்கு மட்டும் கோடிகோடியாக கொட்டி அழுவது நியாயமா? இதுதான் எல்லோருக்குமான அரசு செய்கிற வேலையா? இந்த கொடுமைக்கு முடிவு கட்டப்பட வேன்டும்.

    Publish this comment.

    Reject this comment.

    Moderate comments for this blog.


    Posted by அருள் to Dondus dos and donts at July 24, 2010 4:25 PM

    மன்னிக்க வேண்டுகிறேன் அருள். உங்கள் பின்னூட்டத்தை மட்டுறுத்தும்போது தவறுதலாக ரிஜக்ட் பட்டனை அழுத்தி விட்டேன். ஆகையால் இங்கு அதை காப்பி பேஸ்ட் செய்து போடுகிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  37. @Arul
    நீங்க ரொம்பவே மிரண்டு போய் இருக்கீங்க. பாருங்க, பேச்சு மொழி இல்லை எனும் போது அது உயர்வு என்று யாரவது சொன்னால் தான் என்ன?
    இன்றைக்கு வருவாய் ஈட்ட பயன்படும் மொழி நமக்கு ஆங்கிலம் என்பதால் நான் ஆங்கிலக் கலப்பை சுட்டிக் காட்டிய போது அதை தவிர்த்து விட்டு திரும்பவும் சம்ச்க்ரிதத்தையே சுத்தி வரீங்க. ஆங்கிலம் உயர்ந்தது என்று ஒப்புக் கொள்ளத் தயாரா இருக்கீங்க. ஆங்கில வழிக் கல்வியை ஆதரித்துப் பேசத் தயங்குவதில்லை.
    நம்ம தலைவர்கள் அவர்கள் குடும்பப் பெயரில் தமிழைக் காணோம் என்பது மட்டும் அல்ல எந்த மொழியை எதிர்த்துக் கொண்டு இருக்காங்களோ அதில் கூச்சமில்லாமல் பெயர் வைத்துக் கொள்கிறார்கள் என்பதை கண்டு கொள்ளாமல் இருப்பதில் உங்களுக்கும் கூச்சமில்லை.

    அரிசி, rice என்பது மாதிரி அல்ல சம்ச்க்ரிதக் கலப்பு இந்திய மொழிகளில் என்பது தான் உங்கள் மிரட்சிக்கான காரணம். அது கிட்டத் தட்ட ஒரு இரெண்டறக் கலப்பு. இது தான் உங்களை மிரள வைப்பது. தனித் தமிழ் பேசும் போதே எது தனித் தமிழ் என்று புரியாத மிரட்சி.
    ஒரு நகைச்சுவையைக் கூட அனுபவிக்க முடியாத அளவு மிரட்சி

    ReplyDelete
  38. @Arul

    செந்தமிழ் மாநாட்டில், அதன் வலைத் தளத்தில் கூட கர்நாடக சங்கீதம் தான் ஒலித்தது. முத்தமிழர் பேத்தி மேடை ஏறி வாசித்து தமிழ்க் கலை தானா?

    நீங்களாவது உங்க குடும்ப நிகழ்ச்சிகளில் கரகாட்டம், கிராமியப் பாடல் இன்ன பிற தமிழ் நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்யுங்க. இதை நான் கேலிக்காகச் சொல்லவில்லை. உண்மையாகத் தான் சொல்லுகிறேன். கரகாட்டம் வெறும் கவர்ச்சி ஆட்டமாகப் போய்க் கொண்டு இருக்கும் அவலத்தில் இருந்து காப்பாற்ற எதாவது செய்யணும்.

    மார்கழி மாசம் சபாக்கள் கர்நாடக சங்கீதம் பாடினா, சித்திரை (தப்பு, இப்போ தை இல்லையா.) சரி தை மாதம் முழுவதும் தமிழ் பாடல்கள் மட்டும் அல்ல தமிழ் இசை மட்டும் கூடவே தமிழ் கலை நடனங்கள் இத்யாதிகள் மட்டும் என்று ஒரு அறிவிப்பு செய்யலாமே. எல்லா சபாவும் ஒத்துழைக்கலையா , சரி அரசே ஒரு சபா ஏற்பாடு செய்ய முடியாதா?

    எனக்கு அதிகாரம் இருந்திருந்தால் இதை நான் எப்போதோ செய்து இருப்பேன். சும்மா வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டு இருக்க மாட்டேன்.

    ReplyDelete
  39. டோண்டு சார்,
    நீங்கள் சொன்ன ஜோக் பழசு என்று சொன்னது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்ப தெரியுது... ஐடி ஃபீல்டுல மிக மிக சமீபத்தில் உருவான ஜோக்கு அது...ஆனா...

    அருளு...நீங்க அடிக்கிற ஜோக்கெல்லாம் பெரியார் காலத்துல இருந்து இருக்குற ஜோக்கு...கேட்டுக் கேட்டு புளித்துவிட்டது...

    அருள் என்பவர் சொல்வதுக்கும் இந்தப் பதிவுக்கும் இருக்கும் ஒரே சம்பந்தம் இது தான்.

    ReplyDelete
  40. virutcham said...

    // //அரிசி, rice என்பது மாதிரி அல்ல சம்ச்க்ரிதக் கலப்பு இந்திய மொழிகளில் என்பது தான் உங்கள் மிரட்சிக்கான காரணம். அது கிட்டத் தட்ட ஒரு இரெண்டறக் கலப்பு.// //

    சிலநூறு பேர்கூட பேசாத மொழியைக் கண்டு பலகோடிபேரின் மொழியைப் பேசுவோர் மிரள்வதா? அய்யோ பாவம்....

    இந்திய மொழிகளில் உங்களது "சம்ச்க்ரிதக் கலப்பு" என்பது வேறு, தமிழ் மொழி வேறு. இந்தியாவின் மற்றமொழிகளால் தனித்தியங்க முடியாது. ஆனால், தமிழின் நிலை அப்படி அல்ல. தமிழில் கலக்கும் இதர மொழிகள் அதனோடு கலக்க முடியாமல் காலப்போக்கில் தானாகவே அகன்று போகும்.

    பாரதியாரின் உரைநடைக் கட்டுரைகளை படித்துப்பாருங்கள், இன்றைய காலத்து உரைநடைகளை அத்துடன் ஒப்பிட்டுப்பாருங்கள் - உண்மை விளங்கும்.

    50, 60 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலில் போட்டியிடுவோர் "அபேட்சகர்கள்'' எனப்பட்டனர் - இன்று யாருக்கும் அபேட்சகரைத் தெரியாது. "வேட்பாளரை"த்தான் தெரியும். தமிழில் கலக்கும் பெரும்பாலான 'அன்னிய' வார்த்தைகளின் நிலை இப்படித்தான் போகும்.

    ReplyDelete
  41. நானும் அதே தான் சொல்லுகிட்டு இருக்கேன். ஐயோ பாவமா ஏன் அதையே சொல்லறீங்க என்று.
    அந்நிய மொழிகள் காலப் போக்கில் வெளியேறினால் சந்தோசம் தான். சந்தோசம் - இதற்கு இணையான தமிழ் என்னப்பா? இந்தியாவில் மட்டுமே அறியப் படும் மொழிகள், இந்தியர்கள் வாழும் இடங்களில் இந்தியர்களின் பாரம்பரியம் சொல்லும் மொழிகள் இந்திய மொழிகள். அப்போ எது அந்நிய மொழி என்பது புரியுது இல்லையா?

    நம் முந்தைய தலைமுறைக்கு
    ( பெரும்பான்மையை சொல்லுகிறேன் ) பேசத் தெரியாத மொழி, நம்மில் பெரும்பாலர் முதன்மை மொழியாக கற்காத மொழி, இன்றைய தலைமுறையினர் அதிகம் கற்கும் மொழி, நம் நாட்டுக்குள் நுழைந்தே சில நூறு ஆண்டுகளே ஆன மொழி. ஆனால் இந்த மொழியை கலக்காமல் ஒரு தமிழனால் இன்று பேச முடியாது என்ற நிலை.

    ஆனால் பல்லாயிரம் வருடங்களாக நம் நாட்டில் இருக்கும் ஒரு மொழி. இன்று பேச்சு வழக்கில் இல்லாத மொழி. ஆனாலும் இது உங்களுக்கு உறுத்திக் கொண்டே இருக்கிறது என்பதாலேயே சொல்லுகிறேன் இது மிரட்சி என்று.

    ReplyDelete
  42. நான் சொல்லும் மற்ற விஷயங்களை கவனமாக தவிர்த்துக் கொண்டே இருக்கீங்களே. போகட்டும். பாவம். அதுக்கு நீக என்ன செய்வீங்க.

    தமிழன் வளராமல் தமிழ் மட்டும் எப்படி வளரும்? தமிழ் வளராமல் தமிழன் வளர்ந்து விட்டாலோ அல்லது தமிழன் வளராமல் தமிழ் வளர்ந்து விட்டாலோ அது சரியாகுமா?

    இன்று தமிழ் கலைகளை தன வாழ்வாழ்வாதாரத்துக்கு சார்ந்து நிற்கும் தமிழர்களை இந்து சமய சம்பிரதாயங்களே வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது. அவன் சார்ந்த மதத்தையும் அதன் சம்பிரதாயங்களையும் பழித்துக் கொண்டு அதை நிராகரிப்பவர்கள் அவனின் வாழ்கையில் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
    இதையாவது புரிந்து வைத்து இருக்கீர்களா?
    நீர், நிலம், மலை, மரம், விலங்குகள், பறவைகள் என்று இயற்கையின் அனைத்து அம்சங்களையும் தெய்வமாக்கி வைத்து இருப்பதாலேயே இன்று மனிதனின் அடிப்படை வாழ்வுக்குத் தேவையான அனைத்தும் கிடைத்துக் கொண்டு இருக்கிறது.


    மரங்களை அழித்து மனிதம் வளர்க்கும்(?), இயற்கையை அழித்து இதயம் வளர்க்கும் (?) மனிதர்கள் கொஞ்சம் சிந்திக்கலாம்.
    தப்பில்லை

    ReplyDelete
  43. வானேறிJuly 25, 2010 12:05 AM

    சந்தோசம் என்பதன் தமிழ் மகிழ்ச்சி
    இதெல்லாம் தெரியாமல் தமிழில் எழுத வந்து விட்டீர்களே விருட்சம் ?

    ReplyDelete
  44. நன்றி. தமிழ் எழுதும் போது சட்டென்று நம் பேச்சு வழக்கில் இல்லாத வார்த்தைகள் நினைவுக்கு வருவதில்லை என்பதை சுட்டிக் காட்ட இது உதவும் என்று நினைத்ததால் வெளிப்படையாகக் கேட்டேன். இது கூட தெரியாதா என்று யாராவது கேட்டு விடுவார்கள் என்று நான் தயங்க வில்லை.

    மேலும் உண்மையைச் சொல்லுங்கள் பேசும் போது இப்படி முழுமையாக தமிழில் தான் பேசுகிறீர்களா?

    ReplyDelete
  45. பொங்குதமிழ் திராவிட சேனல் (கால்வாயா, இல்லை வாய்க்காலா?) மக்கள் டீ.வி எல்லாம் பார்ப்பதில்லையா மிஸ்டர் மரம்! (தமிழில் விருட்சத்துக்கு அது தானே அர்த்தம் ?)

    ஆனாலும் இங்கு ஆங்கில கு.ந செய்துகொண்டே அன்னிய மொழியை வெறுக்கும் சில விருட்ச சிரங்கள் தொல்லை தாங்க முடியவில்லை..

    ReplyDelete
  46. // //நம் முந்தைய தலைமுறைக்கு பேசத் தெரியாத மொழி, நம்மில் பெரும்பாலர் முதன்மை மொழியாக கற்காத மொழி, இன்றைய தலைமுறையினர் அதிகம் கற்கும் மொழி, நம் நாட்டுக்குள் நுழைந்தே சில நூறு ஆண்டுகளே ஆன மொழி. ஆனால் இந்த மொழியை கலக்காமல் ஒரு தமிழனால் இன்று பேச முடியாது என்ற நிலை. // //

    ஒரு மொழி என்கிற அடிப்படையில் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டின் முதல் மொழி தமிழ். அதற்குரிய இடம் அளிக்கப்படவேண்டும் என்பதே கோரிக்கை.

    ஆங்கில மொழியை ஒரு மொழிப்பாடமாக கற்கவேண்டிய தேவை இன்று இருக்கிறது. எனவே, அதனை வெறும் மொழிப்பாடமாக மட்டும் அனைத்து மாணவர்களும் கற்கச் செய்தல் வேண்டும். மாறாக, தமிழை அழித்து ஆங்கிலத்தை புகுத்துவது முற்றிலும் தவறு.

    பேச்சுவழக்கில் எவரும் எந்தமொழியில் பேசிக்கொண்டாலும் அதில் ஒரு குற்றமும் இல்லை. அதேநேரத்தில், தமிழில் பேசுகையில் தமிழில் மட்டும் பேசவேண்டும் என்பதும் ஒரு இலக்காக முன்வைக்கப்படுகிறது. அதாவது, ஒன்று ஆங்கிலத்தில் பேசுங்கள் அல்லது தமிழில் பேசுங்கள் - தமிழோடு ஆங்கிலத்தைக் கலக்காதீர் என்று கோரப்படுகிறது.

    இவையெல்லாம் இலக்குகள்தான் - நடைமுறைக்கு வர நீண்டநாட்கள் ஆகலாம்.

    இதெல்லாம் போகட்டும் - தமிழகச் சூழலில் சமஸ்கிருத்தத்திற்கு என்ன தேவை இருக்கிறது?

    ReplyDelete
  47. பாருங்க அருள், உங்கள் சுருதி/ஸ்ருதி குறைந்து விட்டது. நீங்கள் சொல்லும் கோரிக்கை தானே எல்லோரும் சொல்லிக்கிட்டு இருக்காங்க. நீங்கள் மட்டும் தானா சொல்லுறீங்க.
    திராவிட ஆட்சி தானே ரொம்ப காலம் நடந்து கிட்டு இருக்கு. இன்னும் தமிழன் இருக்கறதை எல்லாம் சேட்டு கிட்டே அடமானம் வைத்து, வித்து கடன் வாங்கி தான் நீங்க சொன்ன ஆங்கிலத்தின் அவசியம் அந்த வழிக் கல்வியை தன பிள்ளைகளுக்கு கொடுக்க போராடிகிட்டு இருக்கான்.
    ஆங்கிலம் வருவாய்க்கு வழி தரும் மொழி. எந்த அந்நிய மொழி வருமானம் தரும் என்றாலும் நாம ஓடிப் போய் படிப்போம். இதற்கு நியாயமும் சொல்லிப்போம்

    அதனாலேயே கல்வி தனியார் மயம் ஆகி வியாபாரம் ஆகிப் போனது. தெருவில் உள்ள பெயர் பலகைகளை மட்டும் தமிழ்படுத்தி நாம தமிழ் வளர்ப்போம்.

    சமஸ்க்ரிதத்தின் அவசியம் என்ன? ஒன்னும் தனியா இல்லை.
    சில wider meaning, ஒலி சிறப்பு அதில் இருக்கு. அது தேவையா இருக்கு.
    சில வார்த்தைகளுக்கு இன்னும் நேரடி தமிழ் இல்லை அல்லது வழக்கில் இல்லை.
    உதாரணம் ஸ்ருதி , பக்தி, சுகம், துக்கம் இப்படி நிறைய.
    தர்மம் என்கிற வார்த்தைக்கு இணையான ஒரு வார்த்தை எந்த மொழியிலும் இல்லை என்று ஒரு புரிதல் இருக்கு. தவறு என்றால் இணையான வார்த்தையை சொல்லவும்.
    நான் விருட்சம் என்பதை தேர்ந்து எடுத்ததற்கு காரணம் wider meaning தான். மரம் என்றால் கருவேல மரம் முதற்கொண்டு ஆலம் வரை பொதுவாகக் குறிக்கும்.

    மேலும் நிறைய படைப்புகள் சமஸ்க்ரிதத்தில் இருக்கு. அதை எல்லாம் ஆவணப் படுத்தவும், பிற மொழி ஆக்கம் செய்யவும் வேணும் இல்லையா. நாம ஒரு மொழி (அந்தமான்உதாரணம் ) முற்றிலும் அழிந்த பின் போச்சு போச்சு என்று சொல்லக் கூடாது இல்லையா ?

    ReplyDelete
  48. virutcham said...

    // //நாம ஒரு மொழி முற்றிலும் அழிந்த பின் போச்சு போச்சு என்று சொல்லக் கூடாது இல்லையா ?// //

    அடடா...

    உங்களது பெரிய மனதிற்கு தலை வணங்குகிறேன்.

    அப்படியே இந்தியாவில் அழிவின் விளிம்பில் உள்ள 196 மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கு அளிக்கப்படும் அதேஅளவு ஆதரவும் கவனிப்பும் நிதியுதவியும் அளிக்கப்படுகிறதா? என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.

    Revive India's 196 endangered languages: experts - http://beta.thehindu.com/news/national/article37802.ece

    உங்களுக்காக அழிவின் விளிம்பில் 196 மொழிகளின் பட்டியல்: A'tong, Adi, Ahom, Aimol, Aiton, Aka, Anal, Andro, Angami, Angika, Ao, Apatani, Asur, Badaga, Baghati, Balti, Bangani, Bangni, Bawm, Bellari, Bhadravahi, Bhalesi, Bharmauri, Bhumji, Biete, Birhor, Bishnupriya Manipuri Creole, Bodo, Bokar, Bori, Brokshat, Bunan, Byangsi, Chambeali, Chang, Chokri, Churahi, Cuona Menba, Dakpa, Darma, Deori, Dimasa, Gadaba, Galo, Gangte, Garhwali, Geta, Gondi, Gorum, Great andamanese, Gutob, Handuri, Hill Miri, Hmar, Ho, Hrangkhol, Idu, Irula, Jad, Jangshung, Jarawa, Jaunsari, Juang, Kabui, Kachari, Kanashi, Kangdi, Karbi, Khamba, Khampti, Kharia, Khasali, Khasi, Kheza, Khiamngan, Khoirao, Khowa, Kinnauri, Koch, Koda, Kodagu, Koireng, Kokborok, Kolami, Kom, Konda, Konyak, Koraga, Korku, Korwa, Kota, Kui, Kului, Kumaoni, Kundal Shahi, Kurru, Kuruba, Kurux (India), Kuvi, Ladakhi , Lamgang, Lamongse, Langrong, Lepcha, Lhota, Liangmai, Limbu, Lishpa, Luro, Mahasui, Malto, Manchad, Manda, Mandeali, Mao, Mara, Maram, Maring, Mech, Meithei, Miji, Miju, Milang, Minyong, Mising, Mizo, Motuo Menba, Moyon, Mra, Mundari, Muot, Mzieme, Na, Nahali, Naiki, Nihali, Nocte, Nruanghmei, Nyishi, Onge, Padam, Padri, Paite, Pangvali, Parji, Pasi, Pengo, Phom, Pochuri, Pu, Purik, Purum, Rabha, Rangkas, Remo, Rengma, Rongpo, Ruga, Sanenyo, Sangtam, Sengmai, Sentilese, Sherdukpen, Sherpa, Shompen, Simi, Singpho, Sirmaudi, Sora,Spiti, Sulung, Tagin, Tai Nora, Tai Phake, Tai Rong, Takahanyilang, Tamang, Tangam, Tangkhul, Tangsa, Tarao, Taruang, Thado, Tinan,Tiwa, Toda, Tolcha, Toto, Tshangla, Tulu, Turi, Wancho, Yimchungru, Zaiwa, Zangskari, Zeme

    ReplyDelete
  49. இணையான தமிழ் வார்த்தை இல்லையா? ஏன் இல்லை? என்று பாஞ்சு வருவீங்க என்று பார்த்தால் மறுபடியும் சம்ஸ் சம்ஸ் என்றே சொல்லிக்கிட்டு இருக்கீங்களே.
    நீங்கள் கொடுத்திருக்கும் பட்டியலை நானும் பார்த்தேன். இந்த மொழிகளை ஏதாவது ஒரு வகையில் வழக்கில் வைத்திருக்கும் மக்கள் கணிசமாக இல்லாத வரையில் அரசால் ஆவணப் படுத்த மட்டுமே இயலும். வாழ வைப்பது சிரமம். இப்போ நாம பல நூறு கோடி கொட்டி தமிழ் வளர்த்தோமே. அதில் எத்தனை சதவிகிதம் தமிழன் வாழ செலவு செய்தோம்? அடிப்படை சுகாதார வசதி கூட இல்லாத தமிழ் வழிக் கல்விக் கூடங்கள், சுகாதாரமில்லாத மருத்துவமனைகள் இதெல்லாம் சீர் செய்து விட்டோமா?

    ReplyDelete
  50. தமிழையும் சமஸ்கிருதம் போல் மியூசியத்தில் "வாழவைக்கவே" செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

    ஆங்கிலம் செம்மொழி எல்லாம் கிடையாது...இலத்தீன் தான் செம்மொழி.

    ReplyDelete
  51. virutcham said...

    // //நீங்கள் கொடுத்திருக்கும் பட்டியலை நானும் பார்த்தேன். இந்த மொழிகளை ஏதாவது ஒரு வகையில் வழக்கில் வைத்திருக்கும் மக்கள் கணிசமாக இல்லாத வரையில் அரசால் ஆவணப் படுத்த மட்டுமே இயலும். வாழ வைப்பது சிரமம்.// //

    சமஸ்கிருதத்துடன் ஒப்பிட்டால், இந்தியாவில் அழிவின் விளிம்பில் உள்ள 196 மொழிகளில் பல மொழிகளைப் பேசுவோர் எண்ணிக்கை அதிகம்.

    Gondi - 2,713,790,
    Tulu - 1,722,768,
    Meithei - 1,250,000,
    Khasi - 912,000,
    Kodagu - 166,187,
    Mandeali - 611,930,
    Mizo - 529,000,
    Irula - 200,000,

    ஆனால், சமஸ்கிருதத்தை தாய்மொழி என்போர் - 14,135 பேர் மட்டுமே.

    சமஸ்கிருதத்திற்கு அளிக்கப்படும் அதேஅளவு ஆதரவும் கவனிப்பும் நிதியுதவியும் இந்த மொழிகளுக்கும் அளிக்கப்படுகிறதா?

    http://www.unesco.org/culture/ich/index.php?pg=00206

    ReplyDelete
  52. தகவலுக்கு நன்றி. இந்த மொழி பேசுவோர் எண்ணிக்கை அதிகம் என்பது மட்டும் போதுமா? அந்த மக்களில் கற்றவர் இருந்து அவர்கள் முயற்சியும் இதில் இருந்தால் அரசு தரப்பு உதவியும் கிடைப்பது சுலபமாகும். அல்லது நம்ம தமிழ் மாதிரி அதிகாரத்தில் ஆவது இருந்தால் நடக்கும்.
    ஒரு பத்திரிக்கையில் முதன் முதலில் அதன் பெயரைத் தெரிந்து கொண்டு ஒ, இப்படி எல்லாம் மொழிகள் இருக்கா என்று நினைக்கும் போதே அதன் மேல் பாசமும் வந்து காக்கும் எண்ணமும் வந்தா தப்பில்லை தான். எல்லா மொழிகளுக்கும் நிதி ஒதுக்கி ஆவன செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்டால் அதில் நியாயம் இருக்கிறது. ஏன் சம்ஸ் க்கு மட்டும் என்று கேட்பது நியாயமா என்று யோசிக்கவும்.

    அப்புறம் இந்த சம்ஸ் மொழியை தாய் மொழியா கொள்ளாத மக்களிலும் இந்த மொழியை கற்க விருபுவோர் இருக்காங்க. அந்த எண்ணிக்கை கணக்கெடுக்கப் பட்டு இருக்காது. நான் தொடர்ந்து இதைப் பற்றி சொல்ல முடியும். ஆனால் உங்களுக்குப் பிடிக்காது.

    நீங்கள் கொஞ்சம் சமஸ்க்ரிதக் கலக்கத்தில் இருந்து வெளிப்பட்டு தமிழுக்கு ஏதாவது செய்ய முடியுமா என்று பார்ப்பது ஆக்க பூர்வமாக இருக்கும். நன்றி

    ReplyDelete