நிரந்தர பக்கங்கள்

12/03/2010

கோத்ராவுக்கு பிறகு வந்த ஹிந்து முஸ்லிம் கலவரம் சம்பந்தமாக மோதியின் மேல் வைத்தக் குற்றச்சாட்டுகள் விலக்கப்பட்டன

கோத்ராவுக்கு பிறகு வந்த ஹிந்து முஸ்லிம் கலவரம் சம்பந்தமாக மோதியின் மேல் வைத்தக் குற்றச்சாட்டுகள் விலக்கப்பட்டன என மோதியை பற்றிய இந்த வெப்சைட் தெரிவிக்கிறது.

The Supreme Court-appointed Special Investigation Team probing the Gujarat riots cases has given a clean chit to Gujarat Chief Minister Narendra Modi in a post-Godhra riots case citing that there is no substantial evidence to show that the CM willfuly allowed the carnage.

The SIT, which was investigation a case filed by Zakia Jafri, wife of late Congress MP Ehsaan Jafry who was killed by rioters in the Gulbarga Society housing Complex Zakia, alleged that Modi as the then chief minister wilfully stopped the police from stopping the rioters from attacking the society.

The SIT had informed the Supreme Court that it had completed investigations into the murder of Congress MP Ehsaan Jafry during the riots.


இது சம்பந்தமாக இன்னொரு உரல் இங்கே.

தமிழ் பதிவர்கள் இடி போன்ற மௌனம் இந்த விஷயத்தில் அனுஷ்டிப்பதாகத் தோன்றுகிறதே!

பிற்சேர்க்கை: Times Now சேனலில் மட்டும் இந்த breaking news வருகிறது. கீழே அதன் வீடியோ க்ளிப்பிங் (என்னதான் தலைகீழாக நின்றாலும் பதிவுக்குள்ளேயே வரமாட்டேன் என்கிறது. தமிழ்மணம் லோகோவுக்கு கீழேதான் வருவேன் என்கிறது)

பிருந்தா காரட் கூறுகிறார், “அதிர்ச்சி தரும் ரிப்போர்ட், இது எப்படி லீக் ஆச்சு? மக்களை பொருத்தவரை மோதி குற்றவாளியே”.

பொய்சாட்சி புகழ் டீஸ்டா செடால்வாட் கூறுகிறார், “ஒண்ணுமே புரியல்லை, இதுக்கு எப்படி எதிர்வினை புரியறதுன்னு”.

@பிருந்தா: நீங்கள் எந்த மக்களைச் சொல்கிறீர்கள்? ஆங்கில மீடியா, தமிழ் பதிவர்கள் ஆகியோரை விடுங்கள். முக்கியமா குஜராத் மக்களுக்கு மோதியைப் பற்றி நன்றாகத் தெரிஞ்சதுனாலத்தான் அவருக்கு இவ்வளவு தேர்தல் வெற்றிகள். அதுவும் அந்தந்த சமயத்தில் இருந்த தலைமை தேர்தல் கமிஷனர்கள் வெளிப்படையாகவே தங்கள் மோதி விரோதப் போக்கைக் காட்டி, கிட்டத்தட்ட காங்கிரஸ் பூத் ஏஜெண்டுகளாக செயல் பட்டனர் என்பதையும் மறக்கலாகாது.

@டீஸ்டா: ஹாரி பாட்டர் கடைசி நாவலில் வோல்டமோரிடம் கூறியதையே நானும் உங்களுக்கு கூறுவேன், “Try for some remorse".

அது சரி, 1984 சீக்கியக் கொலைகள் புகழ் ராஜீவுக்கு இப்படியெல்லாம் டீம் எல்லாம் வைக்கலை போல இருக்கே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

24 comments:

  1. எப்படி பேசுவாங்க ??? எல்லாத்துக்கும் சேர்த்து வச்சிட்டாங்க இல்லா ஆப்பு ?? இதே வேற மாதிரி தீர்ப்பு வந்திருந்தா இன்னிக்கு முழுக்க எல்லோரும் அதைத்தான் எழுதி இருப்பாங்க.. எல்லோருக்கும் ஒரு பதிவு போச்சு

    ReplyDelete
  2. todays times now have reported the same thing in its first page

    ReplyDelete
  3. ஏன் மோதி சம்பந்தமா யாருமே இது வரைக்கும் ட்விட்டவில்லை/பதிவு போடவில்லை?

    அது சரி, அதுக்குத்தான் டோண்டு ராகவன் இருக்கானேன்னு விட்டிருப்பாங்களோ?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. உண்மை (தாமதமானாலும்)வெளிவரும்,என்பது மறுபடியும் நிரூபிக்கப்பட்டுள்ளது.இதையும் மறுக்கவும் புழுதி வாரி தூற்றவும் சிலர் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  5. என்னத்தை போட ?> போட்டா மோதி நல்லவர்னு ஒத்துக்கணும். அதெப்படி ஒத்துகிறது ? உங்க போஸ்டே ரொம்ப லேட். நான் காலையில் எதிர் பார்த்தேன்

    ReplyDelete
  6. @எல்கே: பதிவில் பிறகு சேர்த்ததையும் பாருங்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. குஜராத் சொர்க்க பூமிதான். ஏன் விட்டுட்டு வந்தோம்னு இருக்கு. எப்போவுமே மக்கள் மாநில நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க. வீட்டு வேலை செய்யும் பெண்கள் கூட இலவசமாய் எது கொடுத்தாலும், வாங்க மாட்டாங்க. பேசின சம்பளத்தைக் கொடுத்தால் போதும்! நாம சும்மா எதுவும் கொடுத்தால் வாங்க மறுப்பாங்க. எங்கே நம்ம மக்கள் இலவசம்னா அலையறாங்களே? அதுவும் ஒரு ஸ்கரப்பருக்குக் கூட ஒரு பெண்மணி வாயைப் பிளக்கற மாதிரி விளம்பரம் வருது! :(

    ReplyDelete
  8. ஸ்வீட் எடு,கொண்டாடுனு கொண்டாட வேண்டிய ஒன்று.

    ReplyDelete
  9. ஒழுங்காக ஆட்சி புரியும் ஒருவரை மதத்தின் பெயரால் ஒதுக்குவதும், சாதியின் பெயரால் சாடுவதும் தான் மதச்சார்பின்மை, முற்போக்கு என்று தவறாக பழகியுள்ளார்கள்...

    நல்லது செய்வதை எற்றுக்கொள்ளவோ அதை நம் மாநிலத்திலும் கடைபிடிக்க செய்வதற்கோ நிச்சயம் பதிய மாட்டார்கள் இந்த ந(கெ)டுநிலைவாதிகள்..அதே சமயத்தில் கெட்டதை எதிர்பார்த்து கொண்டே இருப்பார்கள்...

    சுத்தமான தமிழில் பாரதியின் வரி

    நல்லவே எண்ணல் வேண்டும்....

    இனியாவது......

    ReplyDelete
  10. தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்

    தர்மம் மீண்டும் வெல்லும்.


    எவ்வளவு இழிப்பேச்சுக்கள் , எவ்வளவு தொந்தரவுகள், எவ்வளவு சதிகள் சூழ்ச்சிகள், அத்தனையும் மீறி தன் மேல் குற்றமில்லை என்பதை நிரூபித்து உள்ளார் மோடி.



    இது கசிந்ததைப் பற்றித் தான் குறை கூற முடிகிறதே தவிர உண்மையை ஒத்துக் கொள்ள துணிவில்லாத பிருந்தா ஒரு புறம், 8 வருடங்களாக பொய் சொன்ன பாவத்தைத் தொலைக்க கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பையும் பயன் படுத்தாத கீழ்த்தரமான மீடியா மறு புறம், இவற்றிற்கு மத்தியில் SIT ஆனாலும் சரி, மற்ற விசாரணை ஆனாலும் சரி முழு ஒத்துழைப்பு நல்கி அற்பமான அரசியல் வாதிகள் மத்தியில் தான் ஒரு நேர்மையான உத்தமமான தலைவர் என்பதை நிரூபித்துள்ளார் மோடி. ஓங்கி உயர்ந்து தர்மம் நிற்கிறது.



    சமீபத்தில் நடக்கும் விஷயங்களை எல்லாம் பார்க்கும் போது இந்தியாவிற்கு நல்ல காலம் ஆரம்பித்து விட்டது என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  11. ///முக்கியமா குஜராத் மக்களுக்கு மோடியைப் பற்றி நன்றாகத் தெரிஞ்சதுனாலத்தான் அவருக்கு இவ்வளவு தேர்தல் வெற்றிகள். அதுவும் அந்தந்த சமயத்தில் இருந்த தலைமை தேர்தல் கமிஷனர்கள் வெளிப்படையாகவே தங்கள் மோடி விரோதப் போக்கைக் காட்டி, கிட்டத்தட்ட காங்கிரஸ் பூத் ஏஜெண்டுகளாக செயல் பட்டனர் என்பதையும் மறக்கலாகாது./// 100% true.

    ReplyDelete
  12. //ஏன் மோதி சம்பந்தமா யாருமே இது வரைக்கும் ட்விட்டவில்லை/பதிவு போடவில்லை?// டோன்டு சார், மோடி அவர்கள் சென்னையில் தொழிலதிபர்கள் கூட்டத்தில் உரையாற்றிய நிகழ்ச்சி பற்றி நான் இட்ட ப‌திவு. அன்றைக்குத்தான் ஆராசா பதவி விலகினார் என்று நினைக்கிறேன்

    http://hayyram.blogspot.com/2010/11/blog-post_15.html

    ReplyDelete
  13. அதுமட்டுமல்ல நிதீஷ் குமார் பற்றியும் சிறு குறிப்பு இங்கே!

    http://hayyram.blogspot.com/2010/11/blog-post_25.html

    இது கேள்வி பதில் பகுதிக்கு!

    நிதீஷ் குமாரின் அபார வெற்றிக்கு காரணங்களை வரிசை படுத்தவும்! எனக்குத் தெரியாத விஷயங்கள் ஏதேனும் இருந்தால் தெரிந்து கொள்ள நினைக்கிறேன்.

    ReplyDelete
  14. //சமீபத்தில் நடக்கும் விஷயங்களை எல்லாம் பார்க்கும் போது இந்தியாவிற்கு நல்ல காலம் ஆரம்பித்து விட்டது என்றே தோன்றுகிறது.//

    மாநிலதிருக்கு ஒரு மோடியோ இல்லை நிதிசோ வேண்டும்

    ReplyDelete
  15. உங்கள் பதிவு மூலமே இந்த செய்தியை அறிய முடிந்தது.

    ReplyDelete
  16. இந்த நாட்டின் மதச்சார்பின்மையின் மீதும் நீதி நெறிகளின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கின்ற மக்களுக்கு பின்வரும் இந்த செய்தி ஆச்ச்சர்யமளிக்கலாம். ஏன் ஆவேசத்தை கூட தரலாம். ஆம்.
    குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனப்படுகொலைகளில் இரத்தம் குடிக்கும் ஓநாய் நரேந்திர மோடிக்கு சம்பந்தமில்லையாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை இது ஆச்சர்யத்தை அளிக்கவில்லை. ஏனெனில் கண்ணுக்கு தெரிந்து 1992 வரை மசூதியாக இருந்த பாபர் மசூதியையே மசூதி இல்லை என்று ஒரு காவி வெறியன் நீதிபதி பதவியில் அமர்ந்து கொண்டு தீர்ப்பளிக்கிறான். அதுவும் உயர்நீதிமன்றத்தில் நீதியை காப்பாற்ற போவதாய் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டு நீதிபதியாய் இருந்து கொண்டு நீதியை சாகடிக்கும் போது சிறப்பு விசாரணைக் குழுவில் இருக்கின்ற விசாரணை அதிகாரிகள் மட்டும் நீதியை காப்பாற்றி விடவா போகிறார்கள்? ஆகவே ஆர்.எஸ்.எஸ் அம்பிகளும் பார்ப்பனீய ஓநாய்களும் இதை வைத்துக் கொண்டு மோடி குற்றமற்றவர் என்று ஊளையிடட்டும்.
    http://athikkadayan.blogspot.com/2010/12/blog-post.html

    ReplyDelete
  17. சரவணன்,
    உங்களைப் போன்ற ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தீவிரவாதிகள் இப்படித் தான் புலம்புவீர்கள்.என்ன செய்வது,பரிதாபம் தான்.

    ReplyDelete
  18. ரெண்டு நாள் ஊரில் இல்லை. கண் ஆப்பரேஷன் ஆன அம்மாவ பாக்க ஊருக்குப் போயிட்டேன். அதுக்குள்ள ஒரு பய மோதி மேட்டரில் ரியாக்ட் பண்ணலன்னு இந்தக் குதி குதிச்சிட்டீரே ஓய்? சரி விடும்.

    இன்னொரு குதிக்கிற மேட்டர் தெரியுமா? மோதி தமிழ்நட்டுலேர்ந்து கம்பெனிகளை கிளப்பி குஜராத் கொண்டு போகப் பாக்கறார்னு காங்கிரசு எம்பி கே.எஸ்.அழகிரி எம்பி எம்பிக் குதிக்கிறாராம். தமிழக அரசு மெத்தனம்னு சொல்ல முடியாம மோதி அழுகுணி ஆட்டம் ஆடறார்னு மத்திய வணிக அமைச்சர் ஆனந்த் சர்மாவுக்கு கடுதாசி போட்டிருக்காராம். "நல்ல பிசினஸ் திட்டம் இருந்தா சொல்லுங்கப்பா... ரெண்டு மணி நேரத்தில் அப்ரூவ் பண்ரேன். குஜராத்ல வேலய ஆரம்பிங்க" என்று சென்னை வந்த மோதி தொழிலதிபர்கள் கூட்டத்தில சொல்லிவெச்சார். அதன் பிறகு ஃபோர்டு, ஹூண்டாய் போன்ற கம்பெனிகள் மொத்தமாய் போகலைன்னாலும், கொஞ்சம் கொஞ்சமாய் நகரப் பார்க்கிறார்களாம். அதுதான் இந்த காங்கிரசு எம்பி எம்பி எம்பிக் குதிக்கக் காரணமாம். நிற்க.

    புளுகுணி செதல்வாட் உச்சநீதிமன்றத்தில் வாங்கின குட்டு பற்றி நான் பீட்டர் விட்டிருப்பதால் (http://arunambie.blogspot.com/)தமிழில் எழுத சற்றே தாமதம் ஆகிறது.

    ReplyDelete
  19. @ hayyram: நிதிஷ் வெற்றி பற்றி சில தகவல்கள், புள்ளிவிவரங்கள் இங்கே தந்திருக்கிறேன். http://hmsjr.wordpress.com/

    ReplyDelete
  20. அன்புள்ள டோண்டு,

    தினகரன் பத்திரிகை ஆ ஃ பீஸ் எரிப்பு வழக்கில், தா. கிருஷ்ணன் கொலை வழக்கில், அழகிரி நிரபராதி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. கருணாநிதி மேல் இது வரை ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட நிரூபிக்கப்படவில்லை. அழகிரி குற்றமற்றவர் என்றும், கருணாநிதி நேர்மையானவர் என்றும் நம்புகிறீர்களா?

    ReplyDelete
  21. மீண்டும்:

    அன்புள்ள டோண்டு,

    தினகரன் பத்திரிகை ஆ ஃ பீஸ் எரிப்பு வழக்கில், தா. கிருஷ்ணன் கொலை வழக்கில், அழகிரி நிரபராதி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. கருணாநிதி மேல் இது வரை ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட நிரூபிக்கப்படவில்லை. அழகிரி குற்றமற்றவர் என்றும், கருணாநிதி நேர்மையானவர் என்றும் நம்புகிறீர்களா?

    ReplyDelete
  22. @ஆர்வி
    குழந்தைத்தனமான கேள்வி. மோதி விஷயத்தில் விசேஷ விசாரணை கமிட்டி சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்டது. அதில் மோதி செல்வாக்கு பெற எந்த முயற்சியும் செய்யவில்லை, அவ்வாறு செய்யும் நிலையிலும் அவர் இல்லை.

    ஆனால் கருணாநிதி, அழகிரி விஷயங்களில் போலீசாரின் முழு ஒத்துழைப்பு அவர்களுக்கு உண்டு. சாட்சியங்களை கலைத்ததை தமிழகமே அறியும். கலிபோர்னியாவில் இருக்கும் உங்களுக்கு அது புரியாமல் போகலாம்.

    மேலும் மோதி விஷயத்தில் அவருக்கு எதிராக யார் சாட்சி சொல்ல வந்திருந்தாலும் அவர்கள் ராஜ மரியாதையோடு ட்ரீட் செய்யப்பட்டிருப்பார்கள். ஆனால் அழகிரி விஷயத்திலோ கருணாநிதி விஷயத்திலோ அவ்வாறு வரும் சாட்சிகள் முழுசாக வீடு திரும்பியிருக்க முடியாது, அவ்வாறு திரும்பியிருந்தாலும் ஆட்டோக்கள் அவர்கள் வீட்டுக்கு போயிருக்கும்.

    அதே போலத்தான் கருணாநிதி மற்றும் மன்மோகன் சிங் தேர்தலில் வெற்றி பெற்றதால் குற்றமற்றவர்கள் என நீங்கள் கூறிடுவீர்களா என்றும் என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது (மோதி பெற்ற தேர்தல் வெற்றியை நான் குறிப்பிட்டிருந்தேன்).

    அது பற்றி நான் எனது லேட்டஸ்ட் பதிவில் எழுதியது, “மன்மோகன் சொன்னதையே எடுத்துக் கொள்வோம். காங்கிரஸ் 2009-ல் பணபலத்தால்தான் வெற்றி பெற்றது என்பதை எல்லோருமே அறிவர். அதையே தான் குற்றமற்றவர் என்பதற்கு எடுத்துக்காட்டாகக் கூறியதன் மூலம், வோட்டர்களுக்கு ஒரு லஞ்சமும் தர முயலாது போனாலும் வெற்றி பெற்ற மோதியின் தரப்பை இன்னும் பலமாக்கியுள்ளார். அவர் அறியாமலேயே மோதிக்கு கிடைத்த வெற்றி (2002, 2007 மற்றும் உள்ளாட்சி தேர்தல்) அவர் குஜராத் கலவரத்தில் குற்றமற்றவர் எனக் காட்டுவதை உறுதிபடுத்தியுள்ளார். மன்மோகனுக்கு எனது நன்றிகள். இந்த அழகில் மேலே குறிப்பிட்ட 3 குஜராத் தேர்தல்களிலும் சம்பந்தப்பட்ட தேர்தல் கமிஷன் தலைமை கமிஷனர்கள் காங்கிரசுக்கு பூத் ஏஜெண்டாகவே கோமாளித்தனமாகச் செயல்பட்டனர். இருப்பினும் மோதி ஜெயித்தார்”, பார்க்க: http://dondu.blogspot.com/2011/03/24032011.html

    என்ன பேசுகிறீர்கள் என்பதை யோசித்துப் பேசவும். ஒரு குழந்தைத்தனமான கேள்வியை நீங்கள் கேட்டீர்கள் என்பதலேயே நான் முதலில் இக்னோர் செய்தேன். இப்போது ரிபீட் செய்கிறீர்கள், ஆகவே இந்த பதில்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete