நிரந்தர பக்கங்கள்

2/03/2011

டோண்டு பதில்கள் 03.02.2011

pt
டோண்டு சாரின் விமர்சனம்?
கேள்வி-1. எந்தக் கூட்டணியில் இடம்பெற்றாலும் பாமகவுக்கு 45 தொகுதிகள் வேண்டும் என்றார் டாக்டர் ராமதாஸ்.

பதில்: வின்னர் வடிவேலு பாஷையில் கூற வேண்டுமானால், இன்னுமா ராமதாசை இந்த ஊர் நம்புது?

கேள்வி-2. சூர்யாவோட உள்ளங்கையில் பூமத்திய ரேகையே ஓடிக் கொண்டிருக்கிறது என்று பெருமூச்சு விடுகிறது கோடம்பாக்கம்! அந்தளவுக்கு டாப் ரேஞ்சில் இருக்கிறது அவரது ஆசையும் லட்சியமும்! அதற்கேற்றார் போலதான் கேட்கிறாராம் தனது சம்பளத்தையும்.
பதில்: அவர் தந்தை சிவகுமார் தனது நடிப்பு வாழ்க்கையில் இதுவரை தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்தவர். சூர்யா அப்படி இல்லை என்கிறீர்களா? அவர் சம்பளம் அதிகம் கேட்டாலும் அதைத் தர தயாரிப்பாளர்கள் இருந்தால் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை? சமீபத்தில் 1978-ல் இதயம் பேசுகிறது பத்திரிகையில் இப்படித்தான் ஒரு நடிகர் தன் தகுதிக்கு மீறி சம்பளம் கேட்கிறார், அவரது தொழில் முன்னேற்றத்துக்கு இது உகந்ததல்ல என அட்வைஸ் கூறப்பட்டது. சம்பந்தப்பட்ட நடிகர் பெயர் ரஜனிகாந்த்.

கேள்வி-3. போர்க்குற்றவாளி என பல நாடுகளாலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக அமெரி்க்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது
பதில்: இந்தச் செய்தியைத்தானே கூறுகிறீர்கள்? சம்பந்தப்பட்ட அமெரிக்க கோர்ட்டுக்கு இம்மாதிரி வழக்கை விசாரிக்கும் அதிகாரம் உண்டா எனத் தெரியவில்லையே. முதலில் ராஜீவை கொலை செய்வித்த வழக்கில் பிரபாகரனது முக்கியப் பங்கை யாராவது விசாரித்தால் தேவலை.

கேள்வி-4. சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் சட்டத்திற்கு புறம்பாக, பலகோடி அளவிலான பணத்தை பதுக்கியவர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் மசோதா, பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
பதில்: இம்மாதிரி சட்டங்களுக்கு மாரல் பின்னணி இருப்பதில்லை. முன்பெல்லாம் வெளி நாட்டுக்கு ஒரு இந்தியன் போக வேண்டுமென்றால், இந்திய அரசு அவன் சில நூறு டாலர்களுக்கு மேல் எடுத்துச் செல்ல அனுமதிக்காது. இந்த அழகுக்கு அவனது சொந்தப் பணத்தை எடுக்கத்தான் இத்தனை கூத்து. ஆகவே என்ன செய்தார்கள் என்றால், வெளிநாடுகளில் கிடைக்கும் பணத்தை அங்கேயே வங்கிகளில் போட்டு, அங்கு அவர்கள் செல்லும் போது அதை எடுத்து பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக வைத்தார்கள். அதுவும் இந்திய அரசுக்க்கு பொறுக்கவில்லை.

இதையெல்லாம் முடக்க நினைத்த இந்திய அரசு என்னென்னவோ செய்து பார்த்தது. அது முடியவில்லை என்றதும் இப்போது மூக்கால் அழுது மன்னிப்பு பற்றியெல்லாம் பேசுகிறது.

கேள்வி-5. இந்தியா இரு நாடுகளாக பிரிய வேண்டும் என்ற கருத்தை முதலில் வைத்தவர் முகம்மது அலி ஜின்னா அல்ல, மாறாக, சுதந்திரப் போராட்ட வீரர் வீர சவர்க்கர்தான் என்று கூறியுள்ளார் சமீப காலமாக சர்ச்சையாகவே பேசி வரும் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்
பதில்: இது பாகிஸ்தானியருக்குத் தெரியுமா? பாக் டிவி காணக் கிடைக்கும்போதெல்லாம் ஜின்னாவை பற்றிய புகழ்ச்சிகளுக்கு முக்கியப் பின்னணியே அவர் பாகிஸ்தானை இந்தியாவிலிருந்து பிரித்ததுதான்.

அப்போதைய முஸ்லிம் லீகில் இருந்த இசுலாமியர்தான் நாட்டைப் பிரித்தது என்பது சரித்திர உண்மை. அதை இப்போதைய ஓட்டு அரசியலுக்காக திரித்துப் பேசினால் மக்கள் ஏமாந்துவிட மாட்டார்கள்.


ரமணா
கேள்வி-6. கடந்த ஆண்டு 31,735 கோடி லாபம் பெற்றதாய் வரவு செலவு அறிக்கை -2009-2010-அறிவிக்கும் எண்ணெய் நிறுவனங்கள், எங்களுக்கு நஷ்டம் எனவே தான் பெட்ரோல் விலையை ஏற்றுகிறோம் என் சொல்லுவது நியாயமா?
பதில்: அவர்கள் கூறுவது லாபத்தில் குறைவு என்றுதான் நினைக்கிறேன்.

கேள்வி-7. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 40 ரூபாய் மத்திய மாநில அரசு வரிகள். இது சரியா?அரசே இப்படி செய்யலாமா?
பதில்: கண்டிப்பாக தவறுதான் அரசு செய்வது. ஆனால் நாம் ஏதாவது செய்யும் நிலையில் உள்ளோமா?

கேள்வி-8. சதவிகித அடிப்படையில் உள்ள வரியை ஒரு லிட்டருக்கு இவ்வளவு என நிர்ணயம் செய்ய் மறுப்பது நியாயமா?
பதில்: மேலே சொன்ன பதில்தான்.

கேள்வி-8. வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கறுப்பு பண லிஸ்டில் அரசியல் வாதிகள் பெயரும் இருப்பததால் தானே இந்த கண்ணா மூச்சி ஆட்டம்?
பதில்: அதிலும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளே பெரும்பான்மையினராக இருந்தால் வியப்படைவத்ற்கு இல்லை.

கேள்வி-9. ஆன்லைன் வர்த்தகத்தால்தான் உணவுப் பொருட்களின் விஷ விலையேற்றம் என தெரிந்த பிறகும் யாரைக் குஷிபடுத்த இது தொடர்கிறது?
பதில்: எனக்கு ஆன்லைன் வர்த்தகம் பர்றி ஒன்றும் தெரியாது. ஒரு வேளை நீங்கள் எதிர்க்கால ஊக வர்த்தகத்தைக் குறிக்கிறீர்களோ?

கேள்வி-10. இந்தியாவிலே பெட்ரோலுக்கு தமிழகத்தில்தான் 30 % வரி விதிக்கபடுகிறதாமே?
பதில்: என்னிடம் கார் இல்லை. ஆகவே இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் பாண்டிச்சேரியில் தமிழகத்தை விட வரி கம்மி என்பது மட்டும் தெரியும்.

கேள்வி-10. காங். தலைவர் இளங்கோவனின் திடீர் பல்டி?
பதில்: அன்னையின் ஆணை!!!!!

கேள்வி-11. பாமக மதில் மேல் பூனையா?
பதில்: மதில் மேல் பூனையா அல்லது மதிலின் இரு பக்கத்திலிருந்தும் விரட்டப்படும் பூனையா என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்.

கேள்வி-12 .திமுக காங் கேட்கும் 100 தொகுதிகளை கொடுக்குமா?
பதில்: கொடுக்காது என்றுதான் நினைக்கிறேன். சமீபத்தில் 1980 தேர்தல் திமுகாவுக்கு நினைவில் இருந்தால் அவ்வாறு நடக்காது.

கேள்வி-13. ஸ்டாலின் அழகிரி திடீர் சமாதானம் தொடருமா, தொடர்ந்தால் எது வரை?
பதில்: Unstable equilibrium

ezhil arasu
1952 ல் தொடங்கி 2011 வரை நிகழ் பெற்ற அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் பற்றிய கேள்விகளுக்கு உங்களின் நேர்மையான பதில் என்ன?
கேள்வி-14. அண்ணாவுக்கு பிறகு வாழ்கின்ற திறமையான தலைவர் யார்?

பதில்: திமுகாவிலா, ரொம்பத்தான் ஆசை உங்களுக்கு.

கேள்வி-15. கலைஞரிடம் தங்களுக்கு பிடித்த அம்சம் என்ன,என்ன?
பதில்: அவரது அயராத உழைப்பு.

கேள்வி-16. அவரது எந்தத் திறமை கண்டு அதிசியக்கிறீர்கள்?
பதில்: நல்ல ஞாபக சக்தி. அதே சமயம் தேவைப்பட்டால் மறதியை வரவழைத்துக் கொள்வது.

கேள்வி-17. அவரிடன் என்ன மாற்றம் வந்தால் நல்லது என எண்ணுகிறீர்கள்?
பதில்: குடும்ப பாசத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்வது.

கேள்வி-18. 2006-2011 ஆட்சி காலத்தில் உங்களை மிகவும் நெருடியது எது?
பதில்: உலக ரிக்கார்ட் அளவுக்கு ஊழல்கள்

கேள்வி-19. விடுதலைப் புலிகள் விசயத்தில் அவரின் அணுகுமுறை சரிதானே?
பதில்: சரிதான். 1991-ல் பட்ட துன்பம் போதாதா கலைஞருக்கு!

கேள்வி-20. தனிப் பெரும்பான்மை அவருக்கு கிடைக்குமா?
பதில்: He has to keep the fingers crossed.

கேள்வி-21. அவரது நலத் திட்டங்களில் எது மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதாகச் சொல்வீர்கள்
பதில்: அவசர ஆம்புலன்ஸ் திட்டம்

கேள்வி-22. குடும்பத்தில் ஏற்படும் பூசல்களை அவர் கையாளும் விதம் எப்படி?
பதில்: ஏம்பா, அவரே நொந்து போயிருக்கார். இந்தக் கேள்வி தேவையா?

கேள்வி-23. தனது இல்லத்தை தானமாய் கொடுத்தது கண்டு?
பதில்: தயவு செய்து சிரிப்பு மூட்டாதீர்கள்.


ரமணா
கேள்வி-24. தமிழக அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 60 ஆக உயர்தப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்டும் தகவலகள் கோபத்தில் உள்ள ஒரு பகுதி அரசு ஊழியரை சாந்தப்படுத்துமா?
பதில்: பலருக்கு பிரமோஷன் கிடைக்காதே. அவர்கள் சாந்தமடைய மாட்டார்களே.

கேள்வி-25 .அழகிரியாருக்கு திமுகவில் உயர் பதவி வழங்கப்பட்ட பின்னர் ஸ்டாலின் செயல்பாடு என்னவாகும்?
பதில்: தனிப்பட்ட முறையில் நான் அழகிரிக்கே ஆதரவு. ஸ்டாலினை விட அவர் அதிக வல்லவர்.

கேள்வி-26. தினமலரின் செய்தியின்படி தமிழக அரசின் கடன் 1 லடசம் கோடியாய் விட்டதே,இதை எதிர்கட்சிகள் பிரச்சாரம் பண்ணினால் எடுபடுமா?
பதில்: மாதம் ஐம்பதாயிரம் சம்பாதித்தால்கூட ஒரு கோடியை எட்டவே 200 மாதங்கள் ஆகும். அப்படியிருக்க ஒரு லட்சம் கோடியா? அம்மாடியோவ்.

கேள்வி-27. சன் டீவி வீடியோ புகழ் பெங்களுர் சாமியாரை 100 கோடி கேட்டு மிரட்டிய ஆஆஆஆஆஆஆசாமி யாரயிருக்கும்?
பதில்: தெரியாது, அவரது அந்தரங்கம் தெரிந்த முன்னாள் சிஷ்யராக இருக்கலாம்.

கேள்வி-28. முதல்வரின் சமீபத்திய டெல்லி விஜயம் திமுகவுக்கு சறுக்கலா?
பதில்: காங்கிரசுட கூட்டணி முடிவாகி யாருக்கு எவ்வளவு சீட் எனத் தெரிந்தால்தான் அவரது தற்போதைய டில்லி விஜயம் பற்றிக் கருத்து கூற முடியும். அவ்வாறு சரியாக முடிவாகாது முடமானால், சங்குதான்.

மேலும் கேள்விகள் வந்தால் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

71 comments:

  1. டோண்டு சாரின் விமர்சனம்?
    1.கருத்துச் சொல்லி எந்த மாற்றமும் உருவாகப் போறதில்லை. எனக்கு அது பிடிக்கவும் இல்லை. என் சினிமா சிறந்த சினிமாவாக உருவாவதைவிட, வேறு எதிலும் எனக்கு அக்கறை இல்லை. சினிமா மூலம்தான் எனக்கு எல்லாமும் கிடைச்சது.-இயக்குனர் சேரன்
    2.வீர விளையாட்டாயினும் மக்கள் சாவதைத் தடுக்க ஜல்லிக்கட்டை தடை செய்யலாமா? என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி விடுத்துள்ளது. மக்கள் சாவதை நாங்கள் விரும்பவில்லை, நீங்கள் விரும்புகிறீர்களா என்றும் அது கேட்டுள்ளது.
    3.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, அவரது சகோதரர் கலிய பெருமாள் ஆகியோரை சிபிஐ இன்று கைது செய்தது.
    4.விருப்பத்துடன் கூடிய செக்ஸ் உறவை வைத்துக் கொள்வதற்கான தகுதி வயதை 16 என்பதிலிருந்து 12 ஆக குறைக்க வகை செய்யும் சட்ட அம்சத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது.
    5. மைனா பட புகழ் அமலா பால் இந்திய கலாச்சாரத்துக்கு எதிராக பேட்டி கொடுத்து, இளம்பெண்களை கெடுக்கிறார் என்று இந்தி மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

    ReplyDelete
  2. dondu sir raasaa, karunanithi, neenka.... nallavaraa\kettavara ?

    ReplyDelete
  3. /Prakash said...

    From CBI Charge sheet it’s clear that,
    1.There’s NO 1.7 L Crore 2G scam.
    2.No revenue loss to Government. (Instead of getting the License fee fixed and recommended by TRAI from abc company, they collected the same License fee amount from xyz company). Hence there is NO revenue loss to the Govt. What Kabil Sibel said and explained is correct.
    3.Raja and his aides have done a procedural misconduct. (Not Followed First Come First basis on who has applied for License as recommended by TRAI, instead they followed First Come basis on who has paid the License Fee), for that only they’ve been arrested. They’ve not under priced or reduced the Spectrum fee. Spectrum was sold by the price defined by TRAI & Telecom Policy.
    4.I already mentioned in my initial comments that there might be some deviation done by Raja to favor few Companies in awarding 2G license by adjusting First Come First policy and Spectrum related issue is NOT a Scam or Revenue Loss as the Spectrum Fee and other procedures are followed as recommended by TRAI and Telecom Policy. There might be some bribe involved to do this favor for these companies, but that might not be such a huge amount of 1.7 L Crores./

    well explained.

    ReplyDelete
  4. //There might be some bribe involved to do this favor for these companies, but that might not be such a huge amount of 1.7 L Crores.//

    I think prakash wants to say that like the Thasildar or VAO, raja is arrested for getting a bribe of Rs.170.

    Please continue Prakash, we need someone like you so that we can take our case in the right direction. Thamizhuku Vaaitha adimaigal Tiramaisaligal

    ReplyDelete
  5. டோண்டு சார்,

    //ராஜீவை கொலை செய்வித்த வழக்கில் பிரபாகரனது முக்கியப் பங்கை யாராவது விசாரித்தால் தேவலை.//

    ராஜ'ஃபக்'சேவுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவது என்பது 'புரிந்து' கொள்ளக்கூடியதே. ஆனால், அவனுக்கே நீங்கள் வக்காலத்து வாங்கும் போது ராஜிவ் கொலை செய்யப்பட்டது தப்பே இல்லைனு நான் நினைக்கிறேன். இது கொலை கூட இல்லை. களப்பலினு சொல்லலாமா?

    ReplyDelete
  6. ஸ்பெக்ட்ரம் வழக்கில் , அரசின் இழப்பு ஜீரோ எனச் சொல்லி ஒரு வேளை ராசா விடுவிக்கப்பட்டல் இவர்களிடம் பேட்டி கண்டால் என்ன சொல்வார்கள்?
    1.துக்ளக் சோ
    2சுப்பிரமணிய சாமி
    3.ராசா
    4.கனிமொழி
    5.தயாநிதி
    6.ஜெய்லலிதா
    7.விஜய காந்த்
    8.ராமதாசு
    9.ரத்தன் டாடா
    10.நிராடியா

    ReplyDelete
  7. >>அவசர ஆம்புலன்ஸ் திட்டம்

    Isn't this a central government initiative?

    ReplyDelete
  8. I totally agree with seenu
    May be we should deport our beloved Dondu to Srilanka

    ReplyDelete
  9. Pl.go thro the writeup by one Viswamitra in Idli Vadai on Raja’s arrest.
    Very rarely one comes across such brilliant write ups

    ReplyDelete
  10. நண்பரே

    நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம் .

    இந்த வன்கொடுமை சட்டம் என்று ஒன்று உள்ளதே அது எல்லோருக்கும் பொதுவானதா?

    வன்கொடுமை சட்டம் என்றால் என்ன ?

    எனக்கு தெரிந்த வரையில்

    எவரும் அடுத்தவருடைய சாதியை சொல்லி அழைப்பதோ அல்லது கேவலமாக பேசுவதோ கூடாது. இல்லையா ?

    அப்படி இருக்கையில் எல்லோரும் ஏன் & எப்படி பார்பனர்கள் என்று இந்த வலை பதிவில் எழுதுகிறார்கள் ?

    குறுக்கே நூல் போட்டவர்கள் என்று சொல்ல முடிகிறது ?

    இங்கே அந்த வன் கொடுமை சட்டத்திற்கு இடமில்லையா?

    சட்டம் என்பது எல்லோருக்கும் பொது தானே ?


    நன்றி
    ஆனந்த்

    ReplyDelete
  11. //*
    கேள்வி-3. போர்க்குற்றவாளி என பல நாடுகளாலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக அமெரி்க்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது
    பதில்: இந்தச் செய்தியைத்தானே கூறுகிறீர்கள்? சம்பந்தப்பட்ட அமெரிக்க கோர்ட்டுக்கு இம்மாதிரி வழக்கை விசாரிக்கும் அதிகாரம் உண்டா எனத் தெரியவில்லையே. முதலில் ராஜீவை கொலை செய்வித்த வழக்கில் பிரபாகரனது முக்கியப் பங்கை யாராவது விசாரித்தால் தேவலை.
    *//

    டோண்டு சார்,

    உங்களின் நேர்மையான பதிலில் இருந்து அறிய வேண்டிய செய்தி...

    தமிழின அழிப்பில் சிங்களர்களும்... பார்ப்பனர்களும் பங்காளிகள்...

    எல்லா மட்டங்களில் சிங்களர்களின் படுகொலைகளை... உங்களை போன்ற பாசிச பார்ப்பனர்கள் ஆதரித்தே வருகின்றனர்...

    நீங்கள் வேண்டுமானால் ராஜிவ் எனும் நடமாடிய பிண்டம் தமிழ் நாட்டில் சிதறியது ஏன்? என தமிழர்களை குற்றம் சாட்டி தனியாக எழுதலாமே?

    ராஜிவ் வழக்கில் சுனா சாமியின், சந்திரா சாமியின் பங்கை பற்றி நீங்கள் கேள்வி எழுப்புவீர்களா?

    ReplyDelete
  12. பிரபாகரன்,ராஜிவ் இருவரும் உயிரோடு இல்லை, நீங்கள் பேசும் அதே மொழி பேசும் ஐம்பாதயிரம் அப்பாவிகளை கொன்ற ஒரு மனிதர் ராஜபக்சே என்பது உங்களுக்கும் தெரியும்.ஒரு போர்க்குற்றவாளியை மனதார எதிர்க்க உங்களுக்கு மனமில்லை. என்ன காரணம்?

    ReplyDelete
  13. இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொள்ளப்படுவது குறித்து உங்கள் நிலை என்ன?

    ReplyDelete
  14. //இந்தச் செய்தியைத்தானே கூறுகிறீர்கள்? //
    Tamilnet பற்றி நல்லாக புரிந்து வைத்துள்ளீர்கள்.

    ReplyDelete
  15. கேரளா மாநிலத்தில் செம்மை ஆட்சி செய்த மாபலி சக்கரவர்த்தியின் வழித் தோண்றலாய் தாய்த் தமிழகத்தில் நல்லாட்சி புரிந்து நலிந்தோருக்கு நாள் தோறும் நலத்திட உதவிகள் ஆயிராமாயிரம் செய்யும் நல்லோனின் ஆட்சியை தொடர்வதற்கு முட்டுகட்டை போட நினைக்கும் பூணுல்காரர்களின் பத்திரிக்கைகளுக்கு சவுக்கடி கொடுத்தார் தலைவர் பொதுக்குழு விழக்கக் கூட்டத்தில்.
    அவரது இமாலய சாத்னைகளை பாராட்ட மனமில்லா நிலையை தமிழ் சாதிக்கு விளக்கினார்.
    தம்பி ராஜாவின் தொலை தொடர்பு விரிவாக்க சேவையை பராட்டி மகிழந்தார் தலைவர்.
    ஒருவர் கைது செய்ய பட்டதாலே குற்றவாளி என சொல்வது அபத்தம் என்றார்.
    ராசவும் மற்றுமொரு மாபலி சக்கரவர்த்தி என புகழாரம் சூட்டினார்.
    பொய் குற்றச்சாட்டு கூறி கழகத்திற்கு களங்கம் செய்ய நினப்போரை தமிழ் இனம் கவனித்து கொள்ளும் என் சூழுரைத்த்தார்.
    1952 ல் தொடங்கி இன்று வரை கழகத்தின் சாதனை பட்டியலை பெருமையுடன் பறைசாற்றினார்.
    தான் மறைந்தாலும் தான் மக்களுக்கு ஆற்றிய தொண்டுகள் வரலாறு படைக்கும் என்றார்.
    தனது ஆட்சி தொடரும் எனவே கலைஞர் காங்கிரிட் வீட்டு திட்டமும் தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார் தலைவர்.
    காங்,திமுக வெற்றிக் கூட்ட்ணி மக்கள் சேவையில் இணைந்து செயல் படுவதாய் பெருமிதத்துடன் பேசினார்.

    ReplyDelete
  16. //சமீபத்தில் 1978-ல் இதயம் பேசுகிறது பத்திரிகையில் இப்படித்தான் ஒரு நடிகர் தன் தகுதிக்கு மீறி சம்பளம் கேட்கிறார், அவரது தொழில் முன்னேற்றத்துக்கு இது உகந்ததல்ல என அட்வைஸ் கூறப்பட்டது. சம்பந்தப்பட்ட நடிகர் பெயர் ரஜனிகாந்த். //


    பாருடா!

    ReplyDelete
  17. //ஆன்லைன் வர்த்தகத்தால்தான் உணவுப் பொருட்களின் விஷ விலையேற்றம் என தெரிந்த பிறகும் யாரைக் குஷிபடுத்த இது தொடர்கிறது?//


    ஆன்லைன் வர்த்தகம் இந்தியாவில் மட்டும் தான் நடக்குதுன்னு யார் சொன்னா!?

    அது தான் விலையேற்றத்திற்கு காரணம் எனசொல்வதற்கு ஆதாரம் இருக்கா!?

    வெள்ளையன் போன்ற வியாபாரிகள் சொல்வது அனைத்தும் உண்மையா!?

    ReplyDelete
  18. //equilibrium//

    இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்?
    இந்த பெயரில் ஒரு படம் கூட வந்திருந்தது!

    ReplyDelete
  19. //முதலில் ராஜீவை கொலை செய்வித்த வழக்கில் பிரபாகரனது முக்கியப் பங்கை யாராவது விசாரித்தால் தேவலை.//
    அது தான் முதல் குற்றவாளின்னு அறிவிச்சு proclaimed offenderஆக ஆக்கியாச்சே! ஆனால், பிரபாகரனோடு சேர்ந்து/அவனது ஆணைப்படி ராஜீவைக் கொன்ற கும்பலை 'சம்பந்தப்பட்டவர்களே' மன்னித்துவிட்டார்களே? வழக்கும் சொதப்பப்படுகிறது என்று கேள்வி. டப்பு மட்டும் வெச்சிருந்தா போதும் நீங்க தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்!! Law of Omerta மற்றும் சம்பந்தப்பட சட்டதிட்டங்களில் இப்படியெல்லாம் இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை!

    ReplyDelete
  20. //கேள்வி-21. அவரது நலத் திட்டங்களில் எது மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதாகச் சொல்வீர்கள்
    பதில்: அவசர ஆம்புலன்ஸ் திட்டம்//
    ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குட்டி வந்ததுன்னு.... கண்ணதாசன் இந்த சிச்சுவேஷனுக்கும் பொருந்துகிற மாதிரி பாட்டெழுதியிருக்கிறாரே!!!

    ReplyDelete
  21. 10.2.2011:டோண்டுவின் பதில்கள் பதிவுக்கான கேள்விகள்:

    /ezhil arasu said...

    கேரளா மாநிலத்தில் செம்மை ஆட்சி செய்த மாபலி சக்கரவர்த்தியின் வழித் தோண்றலாய் தாய்த் தமிழகத்தில் நல்லாட்சி புரிந்து நலிந்தோருக்கு நாள் தோறும் நலத்திட உதவிகள் ஆயிராமாயிரம் செய்யும் நல்லோனின் ஆட்சியை தொடர்வதற்கு முட்டுகட்டை போட நினைக்கும் பூணுல்காரர்களின் பத்திரிக்கைகளுக்கு சவுக்கடி கொடுத்தார் தலைவர் பொதுக்குழு விழக்கக் கூட்டத்தில்.//

    தினமலரை,தினமணியை,ஹிந்துவை,ஆனந்த விகடனை,துக்ளக்கை ,.......?


    //அவரது இமாலய சாத்னைகளை பாராட்ட மனமில்லா நிலையை தமிழ் சாதிக்கு விளக்கினார்.//


    நடத்தப்படும் பாராட்டுக் கூட்டம் போதவில்லை என அங்கலாய்க்கிறார?

    //தம்பி ராஜாவின் தொலை தொடர்பு விரிவாக்க சேவையை பராட்டி மகிழந்தார் தலைவர்.//

    இவர் எந்த பரவலாக்கலை சொல்கிறார்?

    //ஒருவர் கைது செய்ய பட்டதாலே குற்றவாளி என சொல்வது அபத்தம் என்றார்.//

    திமுகவின் இந்த புதிய வசதியான பகுத்தறிவுக் கொள்கை எப்படி?

    ராசவும் மற்றுமொரு மாபலி சக்கரவர்த்தி என புகழாரம் சூட்டினார்.

    ஜிதமிழ் டீவியின் விஷ்ணுபுராணம் தொடர் திமுக தலைவரின் மன மாற்றத்திற்கு காரணமா?


    //பொய் குற்றச்சாட்டு கூறி கழகத்திற்கு களங்கம் செய்ய நினப்போரை தமிழ் இனம் கவனித்து கொள்ளும் என் சூழுரைத்த்தார்.//

    கருணாநிதியின் சூப்பர் பஞ்ச் டயலாக் இது தானே?
    // 1952 ல் தொடங்கி இன்று வரை கழகத்தின் சாதனை பட்டியலை பெருமையுடன் பறைசாற்றினார்.//

    கிண்டிப் பார்க்கும் காங்கிரசாருக்கு எச்சரிக்கையா?


    //தான் மறைந்தாலும் தான் மக்களுக்கு ஆற்றிய தொண்டுகள் வரலாறு படைக்கும் என்றார்.//

    ஒஹோ அதுதான் 1000 வது தஞ்சை விழாவில் இரண்டாம் ராஜ ராஜனாக தன்னை புகழச் செய்தாரோ?


    //தனது ஆட்சி தொடரும் எனவே கலைஞர் காங்கிரிட் வீட்டு திட்டமும் தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார் தலைவர்.//

    எந்த நம்பிக்கையில் இதை சொல்கிறார்?

    //காங்,திமுக வெற்றிக் கூட்ட்ணி மக்கள் சேவையில் இணைந்து செயல் படுவதாய் பெருமிதத்துடன் பேசினார்.//

    ஸ்பெக்டரம் விவகாரம் போன்ற மக்கள சேவையிலா?

    ReplyDelete
  22. தலைவரின் பொதுக்குழு விளக்க கூட்டத்தின் எழுச்சி உரையின் படி,மேட்டுக்குடியினர் மட்டுமே பயன்படுத்திய அலைபேசியை சாமானியனும் பயன் படுத்த செயல் படுத்தியதால்தான் ,பிற்போக்கு சகதிகள் எப்பாடு பட்டாவது ,சுமத்தப்பட்ட குற்றம் நிருபிக்காத படாத நிலையில் ,ஒடுக்கப்பட்ட இனத்தை சார்ந்த ராசாவுக்கு களங்கம் செய்ய நினைப்பது கண்டு தமிழ் இனம் வருத்தம் கொள்ளும்.
    இந்த போலிக் கணை கொண்டு , சாமானியனின் ஆட்சியை முடிவுக்கு கொணர நினைக்கும் கூட்டத்தின் கனவு பலிக்காது

    ReplyDelete
  23. /Blogger ezhil arasu said...

    தலைவரின் பொதுக்குழு விளக்க கூட்டத்தின் எழுச்சி உரையின் படி,மேட்டுக்குடியினர் மட்டுமே பயன்படுத்திய அலைபேசியை சாமானியனும் பயன் படுத்த செயல் படுத்தியதால்தான் ,பிற்போக்கு சகதிகள் எப்பாடு பட்டாவது ,சுமத்தப்பட்ட குற்றம் நிருபிக்காத படாத நிலையில் ,ஒடுக்கப்பட்ட இனத்தை சார்ந்த ராசாவுக்கு களங்கம் செய்ய நினைப்பது கண்டு தமிழ் இனம் வருத்தம் கொள்ளும்.
    இந்த போலிக் கணை கொண்டு , சாமானியனின் ஆட்சியை முடிவுக்கு கொணர நினைக்கும் கூட்டத்தின் கனவு பலிக்காது/

    புராணக் கதையில் வரும் மாபலி சக்கரவர்த்தியின் கதைப்படி - தமிழ் நாட்டிலும் சுபிட்ஷ முடிவாய் நடந்தால் பகவான விஷ்ணுவுக்கு நன்றி சொல்ல நல்ல மனுஷாள் ஒரு கோடிப்பேர் தயாராயுள்ளதாக செய்தி.
    கலி அவதரமாய் நாறாயணன் பூலோகத்திற்கு பிரசன்னமாகும் நேரம் கனிந்து விட்டதா?
    அக்கிரமங்களை அழித்து எல்லோருக்கும் ஷேமத்தை தர பகவானை பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  24. //காங். தலைவர் இளங்கோவனின் திடீர் பல்டி?
    பதில்: அன்னையின் ஆணை!!!!!//
    சுலோச்சனா சம்பத்துக்கு அவ்வளவு செல்வாக்கா!!!!!!!!!!

    ReplyDelete
  25. ezhil arasu said...
    //..பத்திரிக்கைகளுக்கு சவுக்கடி கொடுத்தார் தலைவர் பொதுக்குழு விழக்கக் கூட்டத்தில்...//

    எழிலு உங்கய்யாவுக்கு சவுக்கடி பார்க்க

    http://oosssai.blogspot.com/2011/02/blog-post_04.html

    உங்கய்யாவோட பொண்டாட்டி / வப்பாட்டி பொண்ணுக்கு வரப்போகும் சவுக்கடிக்கு பார்க்க

    http://thatstamil.oneindia.in/news/2011/02/04/2g-scam-kanimozhi-s-kalaingnar-tv-aid0090.html

    ReplyDelete
  26. //சுலோச்சனா சம்பத்துக்கு அவ்வளவு செல்வாக்கா!!!!!!!!!!//

    அன்னை மாதா தாயார் சோனியா காந்தி.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  27. இந்த நேரத்தில் ஆர்த்தர் கொனன் டாயல் உயிருடன் இருந்திருந்தால் ஷெர்லாக் ஹோம்ஸ் கதை ஒன்று எழிதியிருப்பார். அதன் பெயர்:

    The curious case of a missing vanniyan.

    அதில் காதாநாயகன் "செர்லாக்கு ஓம்சு" இங்கே காணாத மிஸ்டர். அருளைத் தேடியிருப்பார்.

    ReplyDelete
  28. வஜ்ரா said...

    // //The curious case of a missing vanniyan.// //

    'என்னிடம் இனி கருத்து கூற ஏதும் இல்லை' என்று கூறிய 'தேசத் துரோகி' வஜ்ரா - இந்த வன்னியனைத் தேடுவதன் மர்மம் என்னவோ?

    ReplyDelete
  29. நேர்மையான வெளிப்படையான பதில்?


    பத்திரிக்கா தர்மத்தை காப்பதில்
    ஜெ.ஆட்சியை விட கலைஞர் ஆட்சி பாதாகமான ஆட்சியா?

    பார்பணியத்தை எதிர்த்தாலும் கழக ஆட்சியில் பிராமணர்களுக்கு இழைத்திட்ட தீங்கை பட்டியிலட முடியுமா?

    கடவுள் மறுப்புக் கொள்கையில் உறுதியாய் இருந்தாலும் இந்துக்களின் வழிபாட்டுத்தலங்களுக்கு செய்திட்ட கெடுதல்களை சொல்ல முடியுமா?

    அரசின் இலவச மக்கள் நலத் திட்டங்களில் குற்றம் குறை கூற முடியுமா?

    மற்ற மாநிலங்களை போல் இல்லாமல் பஸ்கட்டணம் மற்றும் மின் கட்டணம் ஒரு கட்டுக்குள் வைத்திருப்பதை பாராட்ட வேண்டமா?

    பெருவாரியான குடுமப்ங்களின் வாழ்வாதாரமாய் விளங்கும் சினிமா, ஏழை எளியொரின் ஒரே பொழுது போக்கு எனக் கருதி, அரசின் ஒரு சில சலுகைகள் வழங்கியது மாபெரும் குற்றமா?

    எல்லாக் கிராமங்களுக்கும் குடி தண்ணிர் வழங்கும் அரசை குறை சொல்வது சரியா?

    அலை பேசி கட்டணத்தை வெகுவாய் குறைக்க உதவிய கழக அமைச்சர் ராசாவை குற்றவாளி போல் சித்தரிக்கும் போக்கு நியாமா?

    தமிழ் வளர்க்க செம்மொழி மாநாடு கண்டது மாபெரும் குற்றமா?

    தஞ்சை ராசராசனுக்கு ஆயிரமாவ்து விழா கொண்டாடியது பஞ்சமா பாதகமா?

    ஓமந்துரார் பெரில் அழகு மளிகை சென்னையில் கட்டியது தவறா?

    சென்னையில் நூல்களுக்கு ஒர் ஆலயம் செய்வித்தது பாபச் செயலா?

    தமிழரின் பண்டைய பாரம்பரிய கலைகளாம் கரகாட்டம்,ஒயிலாட்டம் ,மயிலாட்டம் போன்ற அழிந்து வரும் கலைகளுக்கு புது வாழவு தரும் கனிமொழியின் கலையார்வத்தை பகடி பேசலாமா?

    கருத்துக்கு கருத்து மோதல் நியாயம்,ஆனால் அதை விட்டு கலைஞரின் குடும்ப உறவுகளை கேலி பேசுவது நீங்கள் நம்பும் ஆண்டவனுக்கே அடுக்குமா?


    -இந்தக் கேள்விக் கணைகள் தொடரும்

    தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்''. தர்மத்தை நிலைநாட்ட மேலும் கழகமும் கழகத்தாரும் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு முழு மூச்சுடன்தமிழ் மக்களுக்கு சேவை ஆற்றும் தியாக வேள்வியின் வெற்றிப் பயணத்தை தொடர்வார்கள்.இது உறுதி.

    ReplyDelete
  30. //
    இந்த வன்னியனைத் தேடுவதன் மர்மம் என்னவோ?
    //

    பொழுது போகாட்டி எவனாவது "தேசபக்த"னைப்புடித்து மொத்துவது என்று இந்தப்புத்தாண்டிலிருந்து முடிவு செய்துள்ளேன். அது தான் வேறொன்றுமில்லை.

    உங்க ஐயா பத்தி வந்த கேள்விகளுக்கு நீங்க ஏதாச்சும் கட்/காப்பி/பேஸ்ட் பண்ணப்போறீங்களா ? இல்லை புதுசா எதாச்சும் நீங்களே சொந்தமா எழுதப்போறீங்களா ?

    ReplyDelete
  31. ////சுலோச்சனா சம்பத்துக்கு அவ்வளவு செல்வாக்கா!!!!!!!!!!//

    அன்னை மாதா தாயார் சோனியா காந்தி.//
    நீங்கள் மாதாவையும் தாயாரையும் விட்டுவிட்டு எழுதினால் எனக்கு எப்படிப் புரியும்? கட்டியத்தை விட்டுப் போகாமல் கூறவேண்டாமோ!!!

    ReplyDelete
  32. //ஓமந்துரார் பெரில் அழகு மளிகை சென்னையில் கட்டியது தவறா?//
    ஆக, கட்டியது மாளிகை அல்ல! நேர்மையான வெளிப்படையான ஒப்புதலுக்கு நன்றி அளகுராசா அவர்களே!

    ReplyDelete
  33. @வஜ்ரா

    நான் பா.ம.க'வின் செய்திதொடர்பாளர் அல்ல.

    ReplyDelete
  34. //
    நான் பா.ம.க'வின் செய்திதொடர்பாளர் அல்ல.
    //

    ஆத்தாடி....
    அப்புறம் ? (வேற என்ன ?)

    ReplyDelete
  35. //
    நான் பா.ம.க'வின் செய்திதொடர்பாளர் அல்ல.
    //
    ஆத்தாடி....
    அப்புறம் ? (வேற என்ன ?)//

    கொளுக பருப்பு செயலளரு!

    ReplyDelete
  36. இட்லி வடை தளத்தில் பாரதி மணி அவர்கள் சமீபத்தில் எழுதிய கட்டுரைக்கு வந்த மறுமொழி ஒன்றைக் கவனித்தீர்களா?

    பார்ப்பனர்களுக்குக் கம்யூனிஸ்ட்டுகளைப் பிடிக்காது என்றும், வினவு தளத்தைப் படியுங்கள் என்றும் அது பரிந்துரை செய்கிறது.

    ReplyDelete
  37. //ஆத்தாடி...அப்புறம் ? (வேற என்ன ?)//
    வேறு என்ன?இவர்,சாதி வெறி பிடித்து அலைந்து, தலித் தொழிலாளியின் வாயில் மலத்தை திணிக்கும்,கண்ணிமைக்கும் நேரத்தில் தலித் பெண்களை பம்ப் செட் பக்கம் இழுத்துப் போகும்,மரம் வெட்டும் சாதாரண பா ம க தொண்டன்.

    பாலா

    ReplyDelete
  38. http://kokkarakko2011.blogspot.com/2011/02/blog-post_04.html
    பல காலமாக தன் ப்ளாக்கில் ஏதும் காப்பி பேஸ்ட் செய்யாமல் சும்மாயிருக்கும் பாதையோர மரமகற்றும் கட்சிக்காரர் அருள் இந்தப் பதிவைப் படித்து இன்புறட்டும்.
    (அவரது டிசம்பர் 10ஆம் தேதியோடு நின்று போன பசுமைபக்கங்கள் ப்ளாகிலும் இதைப் பினூட்டமாக அளித்திருக்கிறேன். போடமாட்டார் என்று நம்பிக்கை) இங்கே தான் அடிக்கடி வருகிறாரே என்று இங்கேயும் தருகிறேன்!

    ReplyDelete
  39. //
    பார்ப்பனர்களுக்குக் கம்யூனிஸ்ட்டுகளைப் பிடிக்காது என்றும், வினவு தளத்தைப் படியுங்கள் என்றும் அது பரிந்துரை செய்கிறது.
    //

    வினவு தளத்த்தில் எழுதுவதே ஜாதிவெறி பிடித்த ரேபீஸ் வந்த ஒரு பார்ப்ஸ் பன்னாடை தான்.

    ReplyDelete
  40. @Arun Ambie

    நான் எவருடைய பிரதிநிதியும் அல்ல. நீங்கள்தான் இந்துத்வ-பார்ப்பன-சாதிவெறிபிடித்த பயங்கரவாதக் கூட்டத்தின் "கொளுக பருப்பு செயலளரு".

    ReplyDelete
  41. @bala

    எல்லா சமூகங்களில்ம் குற்றவாளிகள் இருப்பது போல - வன்னியரிலும் குற்றம் செய்வோர் இருக்கலாம். ஆனால், ஒரு இனத்தை அழிப்பதே நோக்கமாக வாழும் கூட்டம் பார்ப்பனர் மட்டுமே. பார்ப்பன கொடுங்கோன்மைக்கு உலகில் ஈடு சொல்ல எதுவுமே இல்லை.

    வரலாற்று காலத்திலிருந்து பார்ப்பனக் கொடுமைக்கு ஈடு இணை கிடையாது.

    நந்தனாரைக் கொளுத்தியது, சம்புகன் தலையை வெட்டியது, ஏகலைவன் விரலை துண்டாடியது, நல்ல மாமன்னன் மகாபலியை கொன்றது - என்று பார்ப்பன கூட்டத்தின் சதிகளும் கொடூரங்களும் காலம் காலமாக தொடர்கின்றன.

    இப்போதும், கொடுங்கோலன் ராசபட்சேவுடன் சேர்ந்து - 40000 தமிழர்களை ஒரே வாரத்தில் கொன்ற கொடுமைக்கு ஈடு இணை உலகில் உண்டா?

    ReplyDelete
  42. @arul
    //இப்போதும், கொடுங்கோலன் ராசபட்சேவுடன் சேர்ந்து - 40000 தமிழர்களை ஒரே வாரத்தில் கொன்ற கொடுமைக்கு ஈடு இணை உலகில் உண்டா?//

    அதற்க்கு பதவி ஆசை கொண்டு விளக்கு பிடித்த "பச்சோந்தி வன்னிய கும்பல்" வரலாற்றுக்கு பதில் சொல்ல வேண்டும்.

    பதவி, குடும்ப நலம் இரண்டும் மட்டுமே கொள்கையாக கொண்ட கருணாநிதி போல் பச்சோந்தி ராமதாஸும் கண்துடைப்பு அரி(றி)க்கைகளை தவிர ஒரு முடியை கூட பிடிங்கி போடவில்லை என்பது திண்ணம்.

    தனக்கு வேண்டும் போதெல்லாம், பார்ப்பனர் ஆதிக்கத்தை வெற்றி கொண்டுவிட்டதாக மார்தட்டும் பச்சோந்தி வன்னிய கும்பல், அப்பாவி தமிழர்களை காப்பதில் பணம், பதவி இருந்தும் அழிவுக்கு துணை சென்றுவிட்டு, பார்பனரை காரணம் காட்டுவது, இந்த பச்சோந்தி வன்னிய கும்பலிடம் இருந்து மக்களை காப்பாற்ற இவ்வளவு நாள் பார்ப்பனர்கள் செய்தது சரி என்றே நிருபிக்கிறது.

    ReplyDelete
  43. //கொடுங்கோலன் ராசபட்சேவுடன் சேர்ந்து - 40000 தமிழர்களை ஒரே வாரத்தில் கொன்ற கொடுமைக்கு ஈடு இணை உலகில் உண்டா? // நல்லா அழுத்திக்கேளுங்க அருளு உங்க மனசாட்சியயை.... இனியும் பதவி / ஊழல் வெறிபிடித்த உங்க கூட்டத்தை நம்பி ஏமாற இலங்கை தமிழர்கள் தயாராக இல்லை....

    எதுக்கு எடுத்தாலும் பார்ப்பான் பார்ப்பான் சொல்ற அரிப்புக்கு முதல்ல வைத்தியம் பாருங்க நல்ல டாக்டர்கிட்ட....

    ReplyDelete
  44. ஸ்ரீ ராகவன், நமஸ்தே,

    இஸ்ரேல் சம்பந்தமான தங்களது பல பதிவுகள் படித்தேன்.

    ஒரு காலத்தில் லியான் ஊரிஸை மாங்கு மாங்கு என்று படித்தேன். Mila18, Haj, Armageddon, Exodus are my favourites. I have missed probably Topaz and Exodus Revisited. Also Fredderick forsyth's Odessa file. Especially the last passages of the wonderful conversations between the chased nazi criminal and the chaser where the nazi criminal builds on why and how Germany started acting against jews. Armageddon ல் இவரது உபதேசம். யஹூதிகளை வெறுக்கும் க்றைஸ்தவன் சரியான க்றைஸ்தவன் ஆக முடியாது இத்யாதி.

    யஹூதிகளின் பால் பல காலம் எனக்கு அனுதாபம் இருந்தது. ஹிந்துக்களிடையே எவ்வளவு ஜாதி மொழி இத்யாதி இத்யாதி பிரிவுகளோ அதே அளவு யஹூதிகளிலும். வித்யாசம் யஹுதிகள் சோப்ளாங்கிகள் அல்ல. இதனால் யஹூதிகள் க்றைஸ்தவர்களுக்கும் முஸல்மான்களுக்கும் நாமம் சாத்துபடி பண்ணும்போதெல்லாம் ஏதோ நாமே அவர்களுக்கு சாத்துபடி பண்ணிய குஷி.1948 ல் இஸ்ரேல் உதயம்; 1967 ல் ஒரு வார யுத்தத்தில் முஸல்மான்கள் யுத்தம் ஆரம்பிப்பதை முன்னமே தெரிந்து கொண்டு அவர்கள் தாக்குவதற்கு முன்னமே இவர்கள் தாக்குதல் புரிந்து தங்கள் தேசத்தின் பரப்புக்கு சரி சமமாக அல்லது அதைவிட ஜாஸ்தியாக லெபனான், சிரியா, ஜோர்டன், எகிப்து இங்கிருந்தெல்லாம் ஜமீனை பிடுங்கிக்கொண்டது. பாதி லெபனான், கோலன் ஹைட்ஸ், சினாய் மருவனம் இத்யாதி அபஹரணம். கேம்ப் டேவிட் சந்தி படி சினாய் வாபஸ். ஸமீபத்தில் த்ராணியில்லாமல் லெபனானின் buffer area வாபஸ். ஏதோ நாமே ஜெயித்த மாதிரி இவற்றையெல்லாம் ஒரு காலத்தில் படித்ததுண்டு.

    ஆனால் இதெல்லாம் பழைய கதை. ஊரெல்லாம் தேசமெல்லாம் இவர்களை க்றைஸ்தவர்கள் முஸல்மான்கள் என துரத்திய போது இவர்களுக்கு இடம் கொடுத்தது ஹிந்துஸ்தானம். அந்த ப்ராரப்தம் கொச்சி சைனகாக்கையும் போய் பார்த்தேன். ஆட்டுத்தோலில் இவர்கள் கைப்பட எழுதிய பைபலை பார்த்தேன்.

    அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோபிவா
    ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்யாப்யந்தர: சுசி:

    என்று தான் இப்போது அந்த கசடுகளை களைகிறேன். ஏன். இரண்டு காரணம்

    ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதாம் என்ற படி ஹிந்துஸ்தானம் இவர்களை அங்கீகரித்தது என்றவுடன் இவர்கள் இவர்களை அறவே வெறுக்கும் பாகிஸ்தான் பக்கமா ஹிந்துஸ்தான் பக்கமா என்றெல்லாம் தெரியாத படி கழைக்கூத்தாடி போல் பேலன்ஸ் செய்வதைப் ( சவுத் ஆஃப்ரிகாவையும் சேர்க்கலாம்) பார்க்கும் போது ஹிந்துஸ்தானத்தின் நாலைந்து ஜில்லாக்களுக்கு கூட ஸமமில்லாத நிலப்பரப்பு உள்ள இவர்களுக்கே இப்படி என்றால் நாம் ஏன் இவர்களை பற்றி கவலைப்பட வேண்டும் என தோன்றி விட்டது.

    ஸ்வாமி பூஜ்ய தயானந்த ஸரஸ்வதி மஹராஜ் அவர்கள் யஹூதி ரப்பிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தைகளைப்பற்றி ஸ்ரீமதி ராதா ராஜன் எழுதியதை படிக்க நேர்ந்தது. நம்முடைய உருவ வழிபாட்டைப்பற்றி இவர்கள் மூக்கை நுழைத்ததும் அதற்கு பூஜ்ய ஸ்வாமிஜி ஸால்ஜாப்பு சொன்னதும் படிக்க வெறுப்பாக இருந்தது. ஐயா நான் கட்டையை கும்பிடுகிறேன் மட்டையை கும்பிடுகிறேன். உனக்கென்ன வந்தது. நீ உன் வழியில் போ. நான் என் வழியில் போகிறேன். என சொல்லத்தோன்றியது.

    இப்போது என் நிலை. சுற்றிலும் விரோதிகளால் சூழப்பட்ட நம்மைப்போன்றே இருக்கும் இவர்களை பார்த்து அதிக பக்ஷம் பாடங்கற்கலாம். ஆனால் பதிலுக்கு பதில். ரப்பிகளின் பைபலையே அவர்களுக்கு திரும்ப சொல்லலாமே. கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல். Gaza wall மற்றும் freedom flotila இத்யாதியெல்லாம் தம்மாத்தூண்டு தேசத்துக்கு அவசியமாய் இருந்தாலும் நம் விஷயம் வரும் போது அவன் தர்ம ந்யாயம் பார்க்கும் போது நானும் பார்க்க ஆரம்பித்தேன். வதை முகாம்களில் இவர்கள் எப்படி அவஸ்தைப்பட்டார்களோ அதே ரீதியில் பாலஸ்தீனிய முஸல்மான்களை வதைத்து வருகிறார்கள் என்றே தோன்றுகிறது. ஹிட்லர் ஆஷ்விட்ஜ் டசாவ் மிலா18 சாபிபார் என்று அங்கங்கே கேஸ் சேம்பர் வைத்திருந்தான். இவர்கள் பூரா Gaza மற்றும் West Bank ஐ கிட்டத்தட்ட கேஸ் சேம்பராக அல்லவோ மாற்றி உள்ளார்கள். ஒரு கொடிப்பழங்களான் யஹூதி, க்றைஸ்தவன் மற்றும் முஸல்மான் சும்ப நிசும்பாதி ப்ரக்ருதிகள் மாதிரி. இவர்களுக்கு அடுத்தவனால் விமோசனம் இல்லை. ஒருவனை ஒருவன் அடித்தே சாக வேண்டும்

    இவர்களின் மேலாதிக்யம் பரஸ்பர வெறுப்பு ஒருவனை ஒருவன் நரகத்திற்கு அனுப்ப விழைவது இத்யாதி இவர்களின் சாவு மணி. மிக ஸந்தோஷமான ஸமாசாரம் பஸ்மாசுரன் தன் கையை தன் தலையிலேயே வைத்தது மாதிரி ஐரோப்பா முழுதும் க்றைஸ்தவனும் முஸல்மானும் ஒருவனை ஒருவன் நரகத்திலிருந்து மீட்க தர்ம பரிவர்த்தனம் செய்ய ஆரம்பித்து உள்ளது. கிட்டத்தட்ட ஒரு கொதி நிலை என்று சொல்லலாம்.

    விநாச காலே விபரீத புத்தி.

    ReplyDelete
  45. //தலித் பெண்களை பம்ப் செட் பக்கம்//

    பாலா,
    அது ஏன் வன்னியப் பசங்க தலித் பெண்களை மட்டும் பம்ப் செட் பக்கம் இழுத்துக்கிட்டு போறாங்க?மத்த பெண்களை விட்டுருவாங்களா?

    ReplyDelete
  46. //மத்த பெண்களை விட்டுருவாங்களா?//

    பெரியார் அய்யா,

    நீங்க ஒண்ணு?விட்டு வைப்பாங்களா இந்த மரம் வெட்டி மூஞ்சிங்க?ஒரு தூணுக்கு புடவை சுத்தி விட்டாலே இந்த நாய்ங்க எகிறிப் போய் தூணையே கழட்டிக்கிட்டு போக்ப் பாப்பாங்க;அப்பேற்பட்ட இந்த குண சுந்தரங்கள் நம்ம பா ம் க வினர்.

    எங்க ஊரில் "வ்ன்னியக் கிழார் காமக் கீழார்"னு வசனமே உண்டு.

    ReplyDelete
  47. @'போலி'periyar
    @பத்மநாபன்
    @ RS

    வன்னியர்கள் தலித் பெண்களை திட்டமிட்டு வன்கொடுமை செய்வதாகப் பேசுவது கட்டுக்கதை. அப்படியெல்லாம் எதுவும் இல்லை. குற்ற செயல்கள் குறித்த ஆவணங்களின் படி - வன்கொடுமை செய்வதில் எல்லா சாதி ஆண்களும் உண்டு, பாதிக்கப்படுவதில் எல்லா சாதி பெண்களும் உண்டு.

    இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் மாநிலம் மத்திய பிரதேசம் - அங்கு வன்னியர் எவரும் இல்லை.

    பார்ப்பனர்களின் காமவெறி வரலாற்று சிறப்புடையது. கேரளத்து பார்ப்பனர்கள் நாயர் பெண்களை திருமணத்துக்கு முன்பு புணர்வதை தமது உரிமையாகக் கொண்டிருந்தனர்.

    தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் சிறுமிகளை கடவுளுக்கு மணமுடித்து (தேவரடியாராக்கி) தங்களுக்குள் முறைவைத்து அனுபவித்தனர்.

    இப்போதும் பெரிய மூங்கில் சங்கராச்சாரியும் காஞ்சிபுரம் தேவநாதனும் செய்தவை நாடறியும்.

    "இந்திரனுடைய ப்ரம்மஹத்தி தோஷத்தின் ஒரு பங்கை ஏற்றுக் ஏற்றுக் கொண்டதின் அடையாளம் தான், பெண்கள் மாதவிலக்கு அடைவது" என்று ஒட்டுமொத்த இந்திய பெண்களையே இழிவுபடுத்தும் கூட்டம் தான் பார்ப்பனக்கூட்டம்.

    ''ஸீத்ருகொ மதனாவஸம் ப்ரஜபேன்மனும்;
    அயுதம் ஸோசிராதேவ வாக்பதே; ஸமதாமியாத்"

    - மனுதர்மம்

    'க்ருஹஸ்னேஹ வபத்தனம் நரனம் அல்பமேதஸம்
    குஸ்திரீ கடாத்தி மம்ஸனி மகாமஸே கவம் இவா"

    - கீதை

    ReplyDelete
  48. @அருள்
    என்ன வலிக்கிறதா, வன்னியனின் வன்கொடுமையை சித்தரிக்கும்போது? ஒட்டுமொத்தமாக அச்சாதியை பழி சொல்லக்கூடாது என ஒரு புறம் மூக்கை சிந்துகிறீர்கள், ஆனால் மறுபுறம் பார்ப்பனரை ஒட்டு மொத்தமாகத் தாக்குவீர். இது என்ன போங்கு? வாங்கிக் கட்டிக் கொண்டு போகவும்.

    வன்கொடுமை செய்ய ஏதுவாகத்தானே அச்சட்டத்தையே திரும்பப் பெற மருத்துவர் போராடுகிறார்?

    பார்ப்பனர்களிலும் பாலியல் கொடுமை செய்பவருண்டுதான். ஆனால் அவர்களுக்கு எந்த பார்ப்பனரும் வக்காலத்து வாங்கவில்லை. தேவநாதனோ சங்கராச்சாரியாரோ வழக்கை சந்திக்கத்தான் வேண்டும். அவர்களுக்கு இங்கு யாருமே வக்காலத்து வாங்கவில்லை, வன்னிய ராமதாஸ் சட்டத்தையே வாபஸ் பெறக் கோரும் அளவுக்கு.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  49. //சுற்றிலும் விரோதிகளால் சூழப்பட்ட நம்மைப்போன்றே இருக்கும் இவர்களை பார்த்து அதிக பக்ஷம் பாடங்கற்கலாம்.//

    யஹூதிகள் இஸ்ரேலில் ராஜ்யபார நியமாதிகள், அவர்கள் தமது சத்ருக்களிடமிருந்து தம்மைக் ரக்ஷித்துக் கொள்ளும் பாங்கு இவை நாம் அவர்களிடமிருந்து கற்க வேண்டிய பாடங்கள். மற்றபடி அவர்களை நாம் அங்கீகரித்தவுடன் ப்ரதியுபகாரமாக அவர்கள் நமக்கு ஸதா ஸர்வதா ஸாதகமாக இருப்பார்கள் என்று நாம் எதிர்பார்ப்பது ஸ்லாக்யமில்லை.

    தவிரவும், பூஜ்யஸ்ரீ தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிஜி அவர்கள் ரப்பிக்களிடம் பேசியதும் அவர்கள் நமது உருவ வழிபாட்டைக் கேள்வி கேட்டதும் மட்டுமே கொண்டு அவர்களை த்வேஷிப்பது தகாது.

    நமக்கு வேண்டியதை நாம் தான் பார்த்துக் கொள்ளவேண்டும். உன்னை அங்கீகரித்தேனே நீ எனக்கு ஸர்வமும் ஸாதகமாக இருக்கவில்லையே என்று பேசுவது ராஜ்யபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டுமல்ல எங்குமே ஸ்லாக்யப்படாது.

    அதிகமாக புகழவும் வேண்டாம். அதிகமாக இகழவும் வேண்டாம். இருக்கிறாயா? சௌக்யம்! என்ற அளவில் இருப்பதும் சௌக்யத்துக்கு பங்கம் வருங்கால் ஸ்நேகித தேசங்களிடம் "இதோ பார் இப்படி இருக்கிறது, நான் இது செய்யப்போகிறேன்." என்று சொல்லிவிட்டு செய்தும் காட்டும் திடமும் திறமும் இருந்தால் மட்டுமே மரியாதையோடு வாழ்வது ஸாத்யம்.

    உத்தரே-தாத்மனாத்மானம் நாத்மான-மவஸாதயேத்| ஆத்மைவஷ்யாத்மனோ பந்து-ராத்மைவ ரிபு-ராத்மன:||

    நமக்கு பந்துவோ சத்ருவோ நாம் இருக்கும் விதம் தான். என் தேசத்துக்கு இது நல்லது. நான் இதைத்தான் செய்வேன் என்று நமது தேசத் தலைவர்கள் இருக்கவேண்டும். அப்போது யஹூதிகளென்ன யாரானாலும் நம்மை மதிப்பார்கள். அப்படி யஹூதிகளின் தலைவர்கள் இருப்பதாலேயே அவர்கள் சொல் எங்கும் அம்பலம் ஏறுகிறது.

    P.S: எப்பா ஜெராக்ஸ் அருளு! மணிப்ரவாளம்னா இன்னான்னு கேட்டு கூவினுருந்தியேபா! இப்டிக்கா வந்து கிஸ்னகுமார் அண்ணாத்த ஸொல்லிகிறத பட்சா மணிப்ரவாளம்னா இன்னான்னு பிரியும்பா!

    ReplyDelete
  50. @Arun Ambie

    செத்த பிணத்துக்கு இனி உயிர் கொடுக்க முடியாது.

    யூதர்களுக்கு தனி நாடு உருவாக்கப்பட்டது போன்று பார்ப்பன கூட்டம் தனியொரு நாட்டை உருவாக்கி - அங்கு மணிப்பிரவாளத்தை ஆட்சிமொழி ஆக்கினால்தான் உண்டு. (அதற்கும் கூட வாய்ப்பே இல்லை. தமிழ் பார்ப்பானர்கள் தவிற மாற்ற பார்ப்பானர்கள் அதற்கு உடன்பட மாட்டார்களே!)

    அதுவரைக்க்க்க்க்க்கும் - வெறிபிடித்த பார்ப்பனக் கூட்டத்தினரான அண்ணாத்த கிசுனகுமாரரும் அவரோட தம்பி அருண் அம்பியும் தங்களுக்குள் சங்கேத மொழியாக மணிப்பிரவாளத்தை பயன்படுத்தி இன்புறுங்கள்.

    எலும்பை சுவைக்கும் நாய்க்கு அந்த எலும்பு வாயில் குத்தியதால் வடியும் நாயின் இரத்தம்தான் எலும்பின் சுவை என்று தெரியுமா? மற்றவர் பேசி கேட்கமுடியாத மொழியால் கிடைக்கும் இன்பமும் அதுபோன்றதுதான்.

    ReplyDelete
  51. //எலும்பை சுவைக்கும் நாய்க்கு அந்த எலும்பு வாயில் குத்தியதால் வடியும் நாயின் இரத்தம்தான் எலும்பின் சுவை என்று தெரியுமா?//
    இந்த உதாரணத்தை எங்கிருந்து காப்பி பேஸ்ட் செய்தீர்கள் மிஸ்டர் ஜெராக்ஸ்! இந்த உதாரணத்திற்கும் பேசும் விஷயத்துக்கும் என்ன சம்ம்பந்தம் என்று எங்கிருந்தாவது காப்பி பேஸ்ட் செய்யவும். Take your time!

    //வெறிபிடித்த பார்ப்பனக் கூட்டத்தினரான அண்ணாத்த கிசுனகுமாரரும் அவரோட தம்பி அருண் அம்பியும் தங்களுக்குள் சங்கேத மொழியாக மணிப்பிரவாளத்தை பயன்படுத்தி இன்புறுங்கள்.//

    தாய்மொழியின் ஒரே சிறப்பெழுத்தைக்கூட சரியாக உச்சரிக்க நாக்கு புரளாதவர்கள் (வசம்பு என்றால் என்ன என்று தெரியுமா?) இப்படி கற்பனை செய்துகொண்டும், நிழல் தரும் மரங்களை வெட்டிக் கொண்டும், வன்கொடுமைகளை வழக்கமாக்கிக் கொண்டும் தமிளு தமிளன் என்று உருப்படாத உச்சரிப்பில் பேத்திக் கொண்டும் திரியவேண்டியது தான்.

    ReplyDelete
  52. //மற்றவர் பேசி கேட்கமுடியாத மொழியால் கிடைக்கும் இன்பமும் அதுபோன்றதுதான்.//

    பொன்னியின் செல்வனைப் படித்துப் புரிந்து கொண்டதாகப் பீலாவிட்ட அருளுக்கு இது புரியவில்லையாம்! இதைக் கேட்டால் விக்கிபீடியாவிலிருந்து மணிப்ரவாளம் பற்றிக் காப்பி அடிப்பார்!

    டோண்டு ஐயாவின் தளத்தில் பல சீரியஸ் விஷயங்களை அவர் எழுதுவதால் ரிலாக்ஸ் செய்ய ஒரு காமெடி பீஸ் அவசியம் தான். ஆனா இது சுத்த டம்மி பீஸாவுல்ல இருக்கு?

    ReplyDelete
  53. அருளண்ணன்...

    இலங்கைத் தமிழர் விஷயத்தில் நீங்கள் என்ன கிழித்தீர்கள் என கேட்டால் ..

    சீதைக்கு ராமன் சித்தப்பன்ங்கிற மாதிரி எதோ உளறிக் கொட்டறிங்க...

    தப்பு செய்யறவனை தப்பு செய்யறவனா பாருங்க... அவனுக்கும் மொத்த ஜாதிக்கும் முடிச்சுபோடறது...

    தப்பு செஞ்சுட்டு அப்புறம் ஜாதியை வச்சுட்டு தப்பிலிருந்து தப்பிக்க பார்க்கிறது...
    இந்த அரசியல் சாக்கடையிலிருந்து வெளிய வாங்க.. அப்புறம் சமுக நீதி பேசலாம்...

    ReplyDelete
  54. //ஆனா இது சுத்த டம்மி பீஸாவுல்ல இருக்கு?//

    சாதாரண டம்மி பீஸ் இல்ல முட்டாள் டம்மி பீஸ்.

    நான் இந்த பச்சோந்தி வன்னிய கும்பல் பண்ணிய தமிழின துரோகத்தை பத்தி பேசினா, இந்த பச்சோந்தி, வன்கொடுமை வன்னிய கும்பல் அதுக்கு பதில் சொல்ல வக்கில்லாம பம்பு செட்க்கு தள்ளிக்கொண்டு போன பிராபத்த பேசிண்டு இருக்கு. இதுல வேற மற்ற மாநில பார்ப்பனர பத்தி பேசுது, தமிழ்நாட்ட விட்டு ஒரு அடி எடுத்து வெக்க சொன்னா இந்த பச்சோந்தி வன்னிய கும்பல் துண்ட கானும் துணிய கானும்னு ஓடும்.

    ReplyDelete
  55. டோண்டு அய்யா,

    உங்களுக்கு ஒரு கேள்வி.
    என்ன தான் தமிழ் நாட்டில் உள்ள திராவிட தமிழ் க்ரீமி லேயர் ஓ பி ஸி கும்பலில் மிகவும் பிற்போக்கான, கீழ்த்தரமான க்ரீமி லேயர் ஓ பி ஸி களாக வன்னிய கும்பல் இருந்தாலும்,அவர்கள் மேலும் அதிகமாக கோட்டா யாசிப்பது கேவலமா, கேவலம் இல்லையா?

    பாலா

    ReplyDelete
  56. Arun Ambie said...

    // //டோண்டு ஐயாவின் தளத்தில் பல சீரியஸ் விஷயங்களை அவர் எழுதுவதால்// //

    இதுதான் மிகப்பெரிய காமெடி.

    ReplyDelete
  57. Arun Ambie said...

    // //பொன்னியின் செல்வனைப் படித்துப் புரிந்து கொண்டதாகப் பீலாவிட்ட அருளுக்கு இது புரியவில்லையாம்!// //

    பொன்னியின் செல்வன் மணிப்பிரவாள நடையில் இருப்பதாக மெய்ப்பித்துக் காட்டுங்களேன். ஒரே ஒரு நூல் கூட உங்களுக்கு ஆதரவாக பேசவில்லையே...அது ஏன்?

    ReplyDelete
  58. Arun Ambie said...

    // //தமிளு தமிளன் என்று உருப்படாத உச்சரிப்பில் பேத்திக் கொண்டும் திரியவேண்டியது தான்// //

    சரி... எதுக்கு விசயகாந்தை திட்டுகிறீர்கள்?

    ReplyDelete
  59. bala said...

    // //மேலும் அதிகமாக கோட்டா யாசிப்பது கேவலமா, கேவலம் இல்லையா?// //

    அறிவுக்கொழுந்து பாலா அவர்களே...

    வன்னியர்கள் கேட்கும் இடஒதுக்கீடு என்பது மக்கள் தொகைக்கேற்ப விகாதாச்சார பங்கீடு.

    அதாவது, சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் மக்கள் தொகை விழுக்காட்டைக் கணக்கிட்டு, மக்கள் தொகை எத்தனை விழுக்காடோ, அத்தனை விழுக்காடு இடஒதுக்கீடு கேட்கிறார்கள்.

    இதில் அதிகமாக கேட்கிறார்கள் என்கிற பேச்சுக்கே இடமில்லை.

    புரியாத விடயங்களில் தலையிட்டு உளறாதீர்.

    ReplyDelete
  60. செத்த பிணத்துக்கு ...

    செத்தாத் தான் பிணம்.

    நல்லா இருக்கு ஒம்ம தமிளு அறிவு.

    இத்த வெச்சிகிட்டுத் தான் தமிள வாழவைக்கப்போறீயளாக்கும் ? வெளங்குனாப்புலதான்.

    ReplyDelete
  61. //அதாவது, சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் மக்கள் தொகை விழுக்காட்டைக் கணக்கிட்டு, மக்கள் தொகை எத்தனை விழுக்காடோ, அத்தனை விழுக்காடு இடஒதுக்கீடு கேட்கிறார்கள்.//

    தவறான புரிதல். 100 விழுக்காடுகளை சாதிக்கேற்ப பிரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை, தியரிட்டிகலாகக் கூட.

    அர்சியல் நிர்ணயச் சட்டத்தில் தலித்துகளுக்கு முதலில் இட ஒதுக்கீடு கொடுத்ததே அவர்கள் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்டவர்கள் என்பதாலேதான், அதுவும் பார்லிமெண்டு சட்டசபை இடங்களுக்கு மட்டும்

    பத்தாண்டுகளுக்கு கொண்டு வந்தது, இப்போது தலித்துகளை வன்கொடுமை செய்தவர்களும் அதை அதிகாரப் பிச்சையாகக் கேட்பது நடந்து வருகிறது. மருத்துவரின் பேத்திகளுக்கும் இட ஒதுக்கீடு என்ற கேலிக்கூத்துக்கு ஆளாகி நிற்கிறது.

    ஆகவே வன்னியக் கும்பல்கள் செய்வது கேவலமான காரியம்தான்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  62. @டோண்டு ராகவன்

    ஆள் மட்டும் வளர்ந்தால் போதாது. அறிவும் வளரனும் என்பார்கள். ஒரு விடயத்தைக் குறித்து பேசுவதற்கு முன்பு அது குறித்த அடிப்படைகளை அறிந்து கொள்ள முயல்வதே பெரிய மனிதருக்கு அழகு.

    1. இந்திய அரசால் பிற்படுத்தப்பட்ட மக்கள் மூன்று பிரிவினராக வரிசைப் படுத்தப்பட்டனர். 1. பட்டியல் இனத்தவர், 2. பழங்குடி இனத்தவர், 3. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். (OBC எனப்படுவதன் பின்னணி இதுவே)

    2. பத்தாண்டுகளுக்கு இடஒதுக்கீடு என்பது சட்டமன்ற/நாடாளுமன்ற இடங்களுக்குதான். மற்ற இடஒதுக்கீடுகளுக்கு கால எல்லை எதுவும் இல்லை.

    3. அரசியல் அமைப்பின் 340 ஆம் பிரிவு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வழி செய்கிறது.

    340. Appointment of a Commission to investigate the conditions of backward classes

    (1) The President may by order appoint a Commission consisting of such persons as he thinks fit to investigate the conditions of socially and educationally backward classes within the territory of India and the difficulties under which they labour and to make recommendations as to the steps that should be taken by the Union or any State to remove such difficulties and to improve their condition and as to the grants that should be made for the purpose by the Union or any State the conditions subject to which such grants should be made, and the order appointing such Commission shall define the procedure to be followed by the Commission

    (2) A Commission so appointed shall investigate the matters referred to them and present to the President a report setting out the facts as found by them and making such recommendations as they think proper

    ReplyDelete
  63. டோண்டு ராகவன் Said...

    // //100 விழுக்காடுகளை சாதிக்கேற்ப பிரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை, தியரிட்டிகலாகக் கூட.// //

    ஏன் முடியாது? என விளக்குங்கள்.

    1. ஏற்கனவே, இசுலாமியர்களுக்கு தனி ஒதுக்கீடு, அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே, சாதிகளுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்பது நடைமுறை சாத்தியமானதே.

    2. அனைத்து சாதிகளையும் அவரவர் சமூக, கல்வி, பொருளாதார நிலைக்கு ஏற்ப தொகுப்புகளாக பிரிக்க முடியும். ஒவ்வொரு தொகுப்பினரின் மக்கள்தொகை விழுக்காட்டிற்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிக்க முடியும். அதனையும் கூட பெரிய சாதிகளின் விழுக்காட்டிற்கு ஏற்ப உள் ஒதுக்கீடாக பிரித்து அளிக்க முடியும்.

    3. ஏற்கனவே, 69% இடஒதுக்கீடு உள்ளதை 100% விழுக்காடாக மாற்றுவது முற்றிலும் சாத்தியமானதே.

    ReplyDelete
  64. //ஏற்கனவே, 69% இடஒதுக்கீடு உள்ளதை 100% விழுக்காடாக மாற்றுவது முற்றிலும் சாத்தியமானதே.//
    எந்த இட ஒதுக்கீடாயினும் 50% விழுக்காட்டை தாண்டுவது இப்போதைக்கு இல்லை. 69 விழுக்காடு என்பதே கேலிக்கூத்தாகியுள்ளது, அதற்கேற்ப பொது இடங்களையும் அதிகரித்துள்ளனர்.

    திறமை என ஒன்று இருப்பதை யாருமே ஏற்க மாட்டேன் என்கிறீர்கள். உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு பல கேசுகள் உள்ளன, அல்லது பல ஆப்பரேஷன்கள் செய்ய வேண்டியுள்ளன, அல்லது வேறு ஏதாவது சேவைக்கு தேவை ஏற்படுகிறது.

    நீங்கள் உங்களுக்கு சேவை அளிப்பவரை இட ஒதுக்கீடு முறையில் தேர்ந்தெடுத்து அவர்கள் எல்லோருக்கும் வேலைகளை பங்களித்து விடுவீர்களா அல்லது திறமையானவரைத் தேர்ந்தெடுப்பீர்களா?

    இம்மாதிரி 100% ஒதுக்கீடு உலகில் எந்த நாட்டிலும் இருப்பதாக நான் அறியவில்லை.

    நீங்கள் சொன்ன மூன்று பிரிவினரில் தலித்துகள் பழங்குடியினர் மட்டும் முதலில் இருந்தே உள்ளனர். மற்றவர்கள் இந்த மண்டல் குழப்பத்தால் வந்தது. கிரீமி லேயரையும் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள். நீங்கள் எல்லாம் நியாயஸ்தர்கள் எனச் சொல்லிக் கொள்கிறீர்கள்.

    கேவலமான பிழைப்பு பிழைக்கிறீர்கள்.

    உம்மைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது.

    நீங்கள் அனுமானத்தில் (அதாவது 100% இட ஒதுக்கீடு) பேசுவதாலேயே நானும் வன்கொடுமை செய்யும் தீய வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது எனக் கூறிவிட்டுப் போகிறேனே. காசா பணமா அதைச் சொல்வதற்கு?

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  65. @டோண்டு ராகவன்

    "இடஒதுக்கீடு 50% அளவை தாண்டக்கூடாது" என்பதும் "கிரீமி லேயர்" என்பதும் பார்ப்பன - ஆதிக்க சாதிக்கூட்டத்தைச் சேர்ந்த நீதிபதிகள் "தமக்குத்தாமே" கண்டுபிடித்த சதித்தீர்ப்புகள். இந்த தீர்ப்புகள் புதிய சட்ட திருத்தத்தின் மூலம் தூக்கி எறியப்படும் காலம் வரும்.

    இடஒதுக்கீடு என்பது திறமைக்கு எதிரானது அல்ல. அவ்வாறு கூறுவது சுத்த அயோக்கியத்தனம். பள்ளி, கல்லூரிகளில் தேர்ச்சியடைய பார்ர்ப்பானுக்கு ஒரு மதிப்பெண் மற்றவர்களுக்கு வேறொரு மதிப்பெண் என்று இல்லை.

    மற்றபடி, கேவலமான பிழைப்பு பிழைக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை. வன்னியர்கள் காலம் காலமாக உழைக்கும் பரம்பரையினர். பார்ப்பனர்களைப் போன்று அடுத்தவர் உழைப்பில் வாழ்ந்த 'உஞ்சவிருத்தி' கூட்டம் அல்ல.

    ReplyDelete
  66. //மற்றபடி, கேவலமான பிழைப்பு பிழைக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை. வன்னியர்கள் காலம் காலமாக உழைக்கும் பரம்பரையினர். பார்ப்பனர்களைப் போன்று அடுத்தவர் உழைப்பில் வாழ்ந்த 'உஞ்சவிருத்தி' கூட்டம் அல்ல.//

    பிச்சை கேட்டு அதை உரிமை போல அதட்டி கேட்பது தான் இந்த கேவல பிழைப்பு நடத்தும் பச்சோந்தி வன்னிய கும்பலின் நிலை என்பது தெள்ளந்தெளிவாக தெரிகிறது. பார்ப்பனர் என்றும் இவ்வாறு செய்தது கிடையாது. இன்றும் தலித்துகளின் உழைப்பில் வாழும் கேவலமான வன்னிய கும்பல் மற்றவர்களை பற்றி பேச அருகதை இல்லாதவர்கள்.

    ReplyDelete
  67. என் சாதி பெருசுன்னு சொல்றது, எனக்கு சாமான் பெருசுன்னு சொல்றா மாதிரி கேவலமா இருக்கு!

    ReplyDelete
  68. அருள் said...
    //// //தமிளு தமிளன் என்று உருப்படாத உச்சரிப்பில் பேத்திக் கொண்டும் திரியவேண்டியது தான்// //
    சரி... எதுக்கு விசயகாந்தை திட்டுகிறீர்கள்? //

    தொண்டனுக்குத் தமிழே உயிர் என்று உபதேசம் செய்துவிட்டு தன் பிள்ளைகளை தமிழே சொல்லித்தராத பள்ளிகளில் படிக்க வைத்தவர் விஜயகாந்த் அல்ல. இளைய மரம்வெட்டி, சின்னசிரிஞ்ச் அன்புமணி! அவர்களுக்கு முறைவாசல் செய்யும் உங்களால் அந்த உண்மையை ஒப்புக் கொள்ள முடியுமா?

    //வன்னியர்கள் காலம் காலமாக உழைக்கும் பரம்பரையினர். பார்ப்பனர்களைப் போன்று அடுத்தவர் உழைப்பில் வாழ்ந்த 'உஞ்சவிருத்தி' கூட்டம் அல்ல.//
    வயலில் நாற்று நடுவதில் ஆரம்பித்து கதிரறுக்கும் பெண்கள் வரை தூக்கிக் கொண்டு போய் வன்னியர்கள் உழைத்த உழைப்பு தெரியாதா! உஞ்சவிருத்தி ப்ராமணர்கள் யாரும் அப்படி ஒரு உழைப்பு உழைக்கவில்லை தான்!

    ReplyDelete
  69. பசுமைத் தாயகத்துக்குப் பொருத்தமான ஒரு Quote. A creature that cuts trees, makes paper & writes "Save Trees" on the same paper.

    (ஜெராக்ஸ் அருளு! நாங்கள்லாம் காப்பி பேஸ்ட் செஞ்சாலும் சொல்லிட்டுச் செய்வோம். சொந்த சரக்குன்னு புருடா விட்டு போங்கு ஆட மாட்டோம்!)

    ReplyDelete
  70. //வால்பையன் said...
    என் சாதி பெருசுன்னு சொல்றது, எனக்கு சாமான் பெருசுன்னு சொல்றா மாதிரி கேவலமா இருக்கு! //
    எந்த சாதிக்காரன் தப்பு பண்ணினாலும் ஒரு சாதி மேல பழி போட்டுட்டு தப்பிக்கப் பாக்குறது, எவம் பொண்டாட்டி புள்ள பெத்தாலும் அப்பன் குறிப்பிட்ட ஆளுதான்னு சொல்ற மாதிரி இருக்குங்களே! யாருக்கு அசிங்கம்னு பேசுறவங்களல்லீங்க யோசிக்கோணும்!

    சாதி பேசாம பிரச்சினைகளை பேசி தீர்வு காண முயற்சி பண்றது இங்க யாரும் செய்யறதில்லீங்க.

    ஒருத்தன தாக்க வேண்டியது, அவன் திருப்பித்தாக்கினா "ஐயோ கொல பண்றாங்கப்பா"ன்னு கத்தி அனுதாபம் தேடறதுன்னு இருந்தா tranquil life கஷ்டம் தானுங்க.

    'மரமண்டை'க்கெல்லாம் அது புரியறதில்லீங்க. புரியற பாஷைல சொல்லணுமேன்னு தானுங்க அதே பாணில திருப்பி அடிக்கிறது. இந்த மேட்டர் புரியாம நீங்க பாட்டுக்கு 'பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன்' மாதிரி கருத்து பேசுறீங்களேங்க வால்பையன்!

    ReplyDelete
  71. \\\\\\\\\\யூதர்களுக்கு தனி நாடு உருவாக்கப்பட்டது போன்று பார்ப்பன கூட்டம் தனியொரு நாட்டை உருவாக்கி - அங்கு மணிப்பிரவாளத்தை ஆட்சிமொழி ஆக்கினால்தான் உண்டு. \\\\\\\\\\\\\ அன்புள்ள அருள் தவறு. தினம் ராத்ரி பத்து மணிக்கு பொதிகை பார்க்கவும். ஸ்ரீ சாம் செல்லதுரை அவர்களின் பைபல் ப்ரசங்கமும் அவர் மொழி ப்ரயோகமும். விசேஷம், சுவிசேஷம், ஸ்தோத்ரம் இத்யாதி. தமிழ் பைபல் முழுக்க முழுக்க மணிப்ரவாளம். பூனை கண்ணை மூடிக்கொண்டு லோகம் அஸ்தமனமாகி விட்டது என்பது போன்ற சமாசாரம் தான் இது.

    ReplyDelete