pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.உயரமான தொலைக்காட்சி கோபுரம்: ஜப்பான் கின்னஸ் சாதனை
2.டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
3.லோக்பால் வரம்புக்குள் சிபிஐ: ஹசாரே குழு
4.கூடங்குளம்: பேச்சு தோல்வி
5.அமெரிக்க நிறுவனங்களின் அச்சம் நீக்கப்படும்: மன்மோகன்
6.1996 உலகக் கோப்பையில் சூதாட்டம்?
7.மருந்துகளின் விலையை மிக அதிகமாக உயர்த்தக்கூடாது: உச்ச நீதிமன்றம்
8.சிம்பு பற்றி தவறான வதந்திகள் பரப்புகிறார்கள்: டி.ராஜேந்தர்
9.விலை உயர்வைக் குறைக்க மனம் இருந்தால் மார்க்கம் உண்டு: கருணாநிதி
10.தமிழக காங்கிரஸை பலப்படுத்துங்கள்: ஞானதேசிகனுக்கு சோனியா காந்தி உத்தரவு
ரமணா
1.தமிழக்த்தில் பஸ்,பால் கட்டணங்கள் அதீத உயர்வு?
2.அத்வானியின் ரத யாத்திரை வெற்றியா?
3.ராகுல் மாயா பைட் எப்படி?
4.காங் மம்தா ஊடல் பற்றி?
5.ஞானதேசிகன் காங்கிரசை கரை சேர்ப்பார?
6.விஜயகாந்த் போராட்டம் ஜெவை எதிர்த்து?
7.அதிமுகவின் மக்கள் செல்வாக்கு இனி?
8.சுக்கிராமுக்கு ஜெயில்?
9.சச்சின் அதிரடி 100/100 பற்றி?
10.பாமக வின் எதிர்காலம்?
ஏம்பா பிடி மற்றும் ரமணா, நீங்கள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? டோண்டு ராகவன் என்ன காதில் பூ வைத்துக் கொண்டிருக்கிறானா? அவனுக்கு வேறு உருப்படியான வேலைகளும் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவற்றை செய்கிறானோ இல்லையோ உங்க்ளது கேனத்தனமான கேள்விகள் அவனுக்கு தேவையில்லை. கேள்விகளே தேவை இல்லை என ஒரு ஸ்டெப் முன்சென்று கூறி விடுகிறேன்.
பல முறை பலர் குறிப்பிட்டு விட்டார்கள், அவர்கள் இருவரும் ஒரே நபர், அதுதான் டோண்டு ராகவன் என. அது நிச்சயமாக டோண்டு ராகவன் இல்லை ஆனால் இருவரும் ஒரே நபர்தான் என மட்டும் நினைக்கிறேன். கேள்விகளையாவது புத்திசாலித்தனமாக கேட்கிறீர்களா? இணையத்தில் ஏதாவது செய்தி பக்கத்திற்கு போய் காப்பி பேஸ்ட் செய்து கேள்விகள் அனுப்புகிறீர்கள். சரி, பதில்கள் போட்டால், எதுவுமே நடக்காதது மாதிரி மேலும் கேள்விகள். நானும் ஏதோ பொழுது போகின்றதே என பதிலளிக்கிறேன். ஆனால் எனது பொறுமை இவ்வளவுதான், இதற்கு மேல் இல்லை. எது எப்படியாயினும் பதில்களை மூட்டை கட்டுகிறேன். போட்ட பதிவுகள்? அவை இருக்கட்டும், கேனத்தனமாக இருக்கின்றன கேள்விகள் என்றாலும்.
ரமணாவுக்கு வலைப்பூ இல்லை அதே சமயம், பிடிக்கு ப்ரொஃபைலே இல்லை.
மேலும் கேள்விகள் வந்தால் அவை மட்டுறுத்தலில் தடை செய்யப்படும். எல்லா விஷயங்களும் முடிவுக்கு வரவேண்டியதுதான்.
கொலை வெறியுடன்,
டோண்டு ராகவன்
போச்சுடா சாமி! கொலைவெறி இன்னும் அடங்கலையா?
ReplyDelete:-((((
Whatever be it,I salute both tt and Ramana for their amazing sense of humour and you dondu for your great sportsman spirit!
ReplyDeletewhy this kolaveri dondu?
ReplyDeleteஅப்பாடா நிம்மதி!!! இனி நல்ல பதிவுகளை எதிர்பார்க்கலாம்.
ReplyDeleteஇனி உங்கள் டிரேட் மார்க் காரசார
ReplyDeleteபதிவுகளை எதிர்பார்க்கலாம்.கேள்விபதில்
அறிக்கையில் ஒரு நிறைவு கிடைக்கவில்லை.நல்ல முடிவு.நன்றிசார்
ஏதாவது தமிழ்ப் பேப்பரைப் படித்து விட்டு செய்திகளை எடுத்துக் கொண்டு பிண்னாடி ஒரு கேள்விக்குறி போட்டுவிட்டால் அது கேள்வியாகி விடுமா? நான் முன்பே சொன்னேன் உங்கள் கேள்வி பதிலகள் அறுவையாகப் போய்க் கொண்டிருக்கின்றன. anyway, better late than never.
ReplyDeleteBetter late than never. Thanks a lot.
ReplyDeletewhy this kolaveri பாட்டு MTVல் கேளுங்கள்.... செம ஹிட்டாமே!
ReplyDeleteஇதச்சாக்கு வெச்சாவது ஏதாவது பதிவு போட்டுகொண்டிருந்தீர்கள். இனி அதுவும்போச்சா. சரி, வாரம் ஒருமுறையாவது ஏதாவது எழுதுங்கள். நங்கநல்லூர் பஞ்சாமிர்தமாவது தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDelete26/11 தீவிரவாதத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவுடன் எல்லாவிதத்திலும் ஒத்துழைக்கத் தயார் என்கிறது. இது குறித்த என் எண்ணங்களை இங்கே (http://ch-arunprabu.blogspot.com/2011/11/2611.html) பதிவு செய்துள்ளேன். நேரமிருக்கும் போது படித்து உங்கள் பார்வைகளைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
ReplyDelete(இது டோண்டு பதில்களுக்கான கேள்வி அல்ல.)