நிரந்தர பக்கங்கள்

8/11/2012

திராவிட அரசியலின் தரக்குறைவும் வெட்கம் கெட்டத்தனமும்

ஈவேராமசாமி நாயக்கர் பற்றி நன்கு அறிந்தவர்களில் திமுகவினரே முக்கியமானவர்கள். அவர்கள் இவருடன் முரண்பட்டு நின்ற காலகட்டம் 1949 முதல் 1967 வரை ஆகும். அச்சமயத்தில் இரு தரப்பினரும் எதிர்தரப்பினரின் வண்டவாளத்தை வண்டியில் ஏற்றினர். உதாரணத்துக்கு சமீபக்த்தில் 1962-ல் வெளியான முரசொலி கார்ட்டூன்களை கீழேகாணலாம்.



இமேஜ் பெரிதாக இல்லை என குறை நீங்க, கேப்ஷன்களை கீழே  மீண்டும் தருகிறேன்.

துணிவிலை உயர்ந்ததேன்?
புலைச்சி எல்லாம் ஜம்பர் போட ஆரம்பிச்சுட்டா அதனாலதான்.

வேலையில்லா திண்டாட்டம் ஏன்?
பள்ளு பறையனுங்க படிக்க ஆரம்பிச்சுட்டானுங்க அதனாலதான்.

அரிசிவிலை உயர்ந்ததேன்?
கள் குடிக்கிற பசங்களெல்லம் சோறு திங்கறாங்க அதனாலதான்.

கார்டு கவர் விலையெல்லாம் உயர்ந்ததேன்?
தபால்காரனெல்லாம் அதிக சம்பளம் வாங்கறானே அதனால்

விபூதி பூசிக்கொள்ளாததேன்?
சந்நிதானம் பூசிக்கோ என்றால் பூசிக் கொள்வேன்.

வெங்கட் சாமிநாதன் அவர்கள் எழுதியதிலிருந்து சில வரிகள்:

கிறித்துவ, முகம்மதிய மதத்தினரிடம் நாத்திகம் பேச பயப்படுபவர்களிடம், அவர்களிடம் காணும் ஜாதீய தீண்டாமையைப் பேசப் பயப்படுபவர்களிடம் என்ன நேர்மை இருக்க முடியும்? கக்கூசைக் கழுவ என்றே ஒரு சாதி என்ற இழிநிலைக்கு எதிராக ஏதாவது செய்யவேண்டும் என்று சொன்ன தலித் தலைவரிடம், பெரியார் சொல்கிறார் – “இதுக்கு நீங்களே ஒரு வழி சொல்லுங்க. வேறே யார் செய்வாங்க?”. “பறச்சிகள்ளாம் ரவிக்கை போட ஆரம்பிச்சா துணிப்பஞ்சம் வந்துராதா” என்றாராம் பெரியார்.

காமராசன் ஸ்விஸ் பாங்கில் பணம் சேர்த்து வைத்திருக்கிறான் என்றும் காமராசன் என்ற அழகனின் தோலை உரித்தால் இரண்டு டமாரம் செய்யலாம் என்றும் பேசும் தலைவர்களைக் கொண்டது, கண்ணியம் கட்டுப்பாடு, கடமை என்று கோஷமிடும் கழகம் ஒன்று. 67 தேர்தலில் பத்து லட்சம் பக்தவத்சலம் என்று கோஷமிட்ட தலைவர்களைப் பற்றி இன்று பேசுவதானால் எததனை ஆயிரம் கோடி என்று சொல்லி கோஷமிடவேண்டும்?

கண்ணியம் தான். இது கழகம் ப்ராண்ட் கண்ணியம்.

கீழ்வெண்மணி கொடுமைக்கு எதிர்வினையாக ஈவேரா அவர்கள் கொடுத்த அறிக்கையே அவரது சுயசாதி அபிமானத்தைக் காட்டுகிறது.

"தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் விவசாய மக்களுக்கு நலன் செய்வதுபோல அவர்களுக்காகப் பாடுபடுவதுபோல ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவதுபோல மேடைகளிலே பேசுகிறார்கள். உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி அவர்களை பலிவாங்கிக் கொண்டு வருகிறார்கள். கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல. இதனைத் தொழிலாளர்கள் உணரவேண்டும். நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு - பற்றாக்குறை இவைகளைக் கொண்டுதான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல.

தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். நாகை தாலுக்காவிலே கலகம் செய்ய தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.

நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிக தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்களின் குறி கீழத்தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். இந்த ஆட்சியை பலவீனப்படுத்தக் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு நம்மக்கள் ஆதரவளிக்காமல் இவ்வாட்சிக்கு தங்களின் ஆதரவினைக் கொடுப்பதன் மூலம் இந்த அரசை மேலும் பலம் பொருந்தியதாக்க வேண்டும்.''

அந்த வலைப்பூ இங்கே:

ஆக 42 பேர் இறந்ததற்கு அணுவளவேனும் அனுதாபம் கூட இல்லை. கொலை செய்வித்த கோபால கிருஷ்ண நாயுடுவின் பெயரையும் இந்த பலீஜா நாயுடு சொல்லவில்லை. வேறு என்னத்தைத்தான் சொல்ல?

அன்புடன்,
டோண்டு ராகவன்


61 comments:

  1. நல்ல பகிர்வு! திராவிட அரசியலை குறிப்பாக பெரியாரை வெளிச்சம் போட்டு காட்டிய விதம் அருமை!

    ReplyDelete
  2. திராவிட அரசியல் கடந்து வந்த பாதையில் குறைகள் இல்லாமலில்லை.ஆனால் 1960க்கும் முந்திய வர்ணாஸிரமத்தையும் தாண்டி திராவிட அரசியல் எங்கே வந்து நின்றிருக்கிறது என்ற கேள்வியையும் முன் வைக்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  3. எல்லா சண்டையிலும் மண்டை உடையும்; பங்காளி சண்டை அதற்கு விதி விலக்கல்ல!

    சோ ராமசாமி திட்டாத காமாரஜா? கறுப்புக் காக்காயை (கமாராஜ்) துரத்து என்று சொன்ன ராஜாஜிக்கு சோ அடிக்காத ஜால்ராவா? சுதந்திரா பார்ட்டிக்கு அடிக்காத ஜால்ராவா? இதெல்லாம் ஜாதிப் பாசம் இல்லையா? அது செத்தவுடன் ஜன சங்கம்; ஜன சங்கம் செத்தவுடன் பாஜக! எல்லாம் ஜாதிப்பித்து தான்.

    ராஜாஜி மற்றும் சத்யமூர்த்தி கப்பலோட்டிய சிதம்பரம் செய்ததில் நூற்றில் ஒரு பங்கு கூட நாட்டிற்கு செய்ய வில்லை.

    ஆனால் காங்கிரஸ்காரன் ஒரு தீர்க்க தரிசி; அடி தடிக்கும் வேட்டி கிழிப்பத்ர்க்கும் ஏற்ற இடத்திற்கு சத்யமூர்த்தி பெயரை வைத்தான்; தேவதாசி முறை ஒழியக் கூடாது என்று சொன்ன மாமனிதன்! ஏன்? வேட்டி அவிழ்ப்பது வேட்டியை கிழிப்பதை விட எளிது!

    ReplyDelete
  4. I already comment abt this. You publish a article about Periyar like this in a regular interval to put you in lime light.

    Don't do it again & again, what ever you try to defame Periyar it gives more fame to him.

    When I first read your bad comments about Periyar, I search the net and gathered information through all sources and found that he is great and because him only all tamils enjoy this facilities.

    Thanks for your this post - Somebody will try to know abt Periyar from this point.

    ReplyDelete
  5. @சந்தோஸ்
    சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு சமாதானம் இல்லாவிட்டால் நீங்கள் இப்படித்தான் பேச முடியும்.

    கலாசாரம் அப்படி, நீங்கள் என்ன செய்ய இயலும்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. விளக்கமான பகிர்வு... நன்றி ஐயா...

    ReplyDelete
  7. டோண்டு அய்யா வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் வலைப்பூ வில் வந்த பதிவைப் பார்த்தேன். தாங்கள் எப்போதும் வலிந்து பெரியாரைக் கொச்சைப்படுத்தி வருவது அனைவருக்கும் தெரியும். அதையும் தங்களைப் போன்றவர்கள் திட்டமிட்டே இக்காரியங்களைச் செய்து வருவது பற்றி சூடு சுரணையுள்ள தமிழர்கள் நன்கு அறிவார்கள்.

    சரி பிரச்சனைக்கு வருவோம்.


    பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பேசியதின் நோக்கம் என்ன? என்பது பற்றி பெரியார் விளக்கும் பகுதி இதோ:-


    இன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இன்று காலை இருமலுக்காக டாக்டரைப் போய்ப் பார்த்தேன். அவர் மருந்து கொடுத்தார். அதை சாப்பிட்டேன் சாயந்திரம் திடீரென்று கைகால் எல்லாம் நடுக்கமேற்பட்டது. மார்பு துடிப்பு 150 க்கு வந்துவிட்டது. சாதாரணமாக 72 - 75 தான் இருக்க வேண்டும். கைகால் விரல்கள் மடக்கினால் வலிக்க ஆரம்பித்தது. உடனே டாக்டரிடம் சென்று காண்பித்தேன். அவர் காலையில் கொடுத்த மருந்தின் ரீ- ஆக்ஷன் தான் அது வேறொன்னுமில்லை. உங்களுக்கு வயது அதிகமானதால் கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கும் வேறொன்றுமில்லை என்று சொல்லி ஒரு ஊசியைப்போட்டு என்னை இரண்டு நாள்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி சொன்னார். சாயந்திரம் பேச வேண்டுமே என்று சொன்னேன். நல்லா பேசுங்க என்று சொன்னார். அதன் பின் தான் கூட்டத்திற்கு வரமுடிந்தது.

    நான் கூட்டத்திற்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் போது எனக்கு போன் வந்தது. போனில் பேசியவர்கள் நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அம்மையாரவர்களை மேயரவர்கள் சாதியைக் குறித்து கேவலமாகப் பேசியதாக குறிப்பிட்டார்கள். அதற்கு நான் அவர் அப்படிச் சொல்லி இருக்க மாட்டார் என்று நினைக்கின்றேன். அவர் படித்தவர் பெரிய பதவி வகிப்பவர் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்தவர். அவர் அப்படிப்பட்ட வார்த்தையை உபயோகித்திருக்க மாட்டார். அப்படி அவர் சொல்லி இருந்தால் நானே கண்டிக்கின்றேன். மன்னிப்பு கேட்கச் செய்கின்றேன் என்று சொன்னேன். மேயரவர்களைக் கேட்டதற்கு நான் சொல்லவில்லை என்று சொன்னார்.

    சாதி சம்பந்தமான காரியங்களில் நான் ரொம்ப முயற்சி எடுப்பவன். அதற்காகவே வாழ்வதாகக் கருதுபவன். பறையன் - சக்கிலி - வண்ணான் - பரியாரி என்பது அவமானமல்ல. தொழிலின் காரணமாக வந்தது. பார்ப்பான் தன்னை மேன்மைப்படுத்தி கொள்ளவும் நம்மை இழிசொல்லாக்கி விட்டான். ஆனால் நம் எல்லோரையும் சேர்த்து பார்ப்பான் தேவடியாள் மகன் என்று சொல்கின்றான். சொல்வது மட்டுமல்ல சாஸ்திரத்திலும் அப்படியே எழுதி இருக்கின்றான். சட்டத்திலே (இந்தியாவிலே) தாசிபுத்திரன் என்றே இருக்கிறது. அனுபவத்திலுமிருக்கிறது என்று சொன்னால் கோயிலுக்குப் போகிறவன் அத்தனை பேரும் தேவடியாள் மகன் தானே! இது அண்ணாதுரைக்கும் தான் ராஜா சர்ருக்கும் தான். வேறு பார்ப்பானல்லாத எல்லோருக்கும்தான்.

    ----தொடரும்

    ReplyDelete
  8. பறையன் என்று சொல்லக்கூடாது என்று தான் சொன்னார்களே தவிர தண்ணீருக்கு எப்படி ஜலம் என்று சொல்கின்றானோ அதுபோல பார்ப்பான் காந்தியாரைப் பிடித்து பறையன் என்கிறதை நிலை நிறுத்துவதற்காக அரிஜன் என்று சொல்லி இன்னும் அதையே சொல்லிக் கொண்டிருக்கின்றான்.

    பறையன் என்று சொல்லக்கூடாது என்று ஆரம்பித்தவன் நான். காந்தியார் தீண்டாதவர்களுக்குத் கிணறு வெட்டுவதற்காகக் காந்தி திலக் நிதியிலிருந்து ரு. 55.000 அனுப்பினார். அப்போது நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவன். நான் அதை இதற்காக செலவிடாமல் அப்படியே வைத்துவிட்டேன். மற்ற மாகாணக்காரர்கள் எல்லாhம் செலவழித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனியாகக கேணி கோயில் பள்ளிக்கூடம் கட்டினார்கள். நான் காந்தியாருக்கு எழுதினேன் நாம் அவர்களுக்கு இவை எல்லாம் தனியாகச் செய்து கொடுப்பதால் ஒருக்காலும் தீண்டாமை ஒழியாது. அதற்குப் பதில் பறையன் கோயில் பறையன் பள்ளிக்கூடம் என்று சொல்லி மக்கள் அதையும் ஒதுக்கிவைத்து விடுவார்கள். இதை நான் விரும்பவில்லை. நம் மக்கள் தண்ணீர் எடுக்க வேண்டும். நம் மக்கள் படிக்கிற பள்ளிகளில் அவர்களையும் படிக்க அனுமதிக்க வேண்டும். நம் மக்கள் போகிற கோயில்களுக்கு அவர்களும் போக உரிமை வழங்க வேண்டும் என்று எழுதினேன். அதற்கு அவர் அதுபோல செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்.

    நான் பறையன் என்று கேவலமாகச் சொன்னதாகத் தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கின்றார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லைச் சொன்னாலும் அதை ஒழிப்பதற்காக சொன்னதுதான். எலக்சன் போது ராமசாமி நாயக்கர் பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாக சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு தாழ்த்தப்பட்ட மக்களே அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர் என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கின்றார்கள். அதைக் கண்டு சிலர் என்னிடம் வந்து நீ எப்படிச் சொல்லலாம் எனறு கேட்டார்கள். நான் சொன்னது உண்மைத்தான். நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்குமுன் ரவிக்கைப் போடக்கூடாது போட்டால் துணியே போடக்கூடாது அப்படி இருந்த சமுதாயம் கால மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கின்றது. இன்றைக்கு ரவிக்கையில்லாமல் பார்க்க முடியவில்லை என்று சொன்னேன். இதைக் கொண்டு அந்த இனமக்களை எனக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதே ஆகும் என்பதை விளக்கியதும் அவர்கள் புரிந்து கொண்டனர்.

    11-12-1968 அன்று சென்னை - அயன்புரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை" 15-12-1968
    "பெரியார் களஞ்சியம்" தொகுதி 18- "ஜாதி-தீண்டாமை" பாகம்- 12 பக்கம் 73

    ReplyDelete
  9. அடுத்து கீழ் வெண்மணி பற்றி பெரியார் அறிக்கை இதோ:-

    கீழ் வெண்மணிக் கொடுமைகளைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன?



    ஜனநாயக ஆட்சி உள்ளவரை யோக்கியர் மறைந்து போக வேண்டியதுதான்; அயோக்கியர்கள் ஆட்டம் போட வேண்டியதுதான். இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள்; இந்திய தர்மம் குற்றப் பரம்பரையர்கள் தர்மமேயாகும். மநுதர்மவாதிகள் உள்ளவரை நாடு ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி பெற முடியாது. வெள்ளையன் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது.

    காந்தியார் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகி(த்தான்) ஒரு மகானாக ஆவதற்கு எண்ணி என்றைய தினம் மக்களை சட்டம் மீறும்படித் (அயோக்கியர்களாகும்படி) தூண்டி விட்டாரோ, அன்று முதல் மனித சமுதாயம் ஒழுக்கத்தில் கீழ் நிலைக்குப் போய் விட்டது! சட்டம் மீறுதல் மூலம் சத்தியாகிரகம் என்னும் சண்டித்தனம் செய்தல் மூலம் காயத்தை சாதித்துக் கொள்ள, மக்களுக்கு காந்தி என்று வழி காட்டினாரோ அன்று முதலே மக்கள் அயோக்கியர்களாகவும், காலிகளாகவும் ந்திவிட்டார்கள்.

    ‘புழுத்துப்போன பண்டத்தின் மீது நாய் வெளிக்குப்போன' மாதிரி மக்களை அயோக்கியர்களாக ஆக்கிவிட்டு, ஜெயிலையும் உடம்பைத் தேற்றிக்கொள்ளும் ஓய்விடமாகப் பார்ப்பனர்கள் என்று ஆக்கினார்களோ, அன்று முதலே யோக்கியர்கள் எல்லாம் அயோக்கியர்களாக ஆகவேண்டியவர்களாகி விட்டார்கள். யோக்கியர்கள் மானத்தோடு வாழ இடமில்லாமல் போய்விட்டது.

    எந்த மனிதனும் ‘அயோக்கியனாக ஆனாலொழிய வாழ முடியாத' நிலை ஏற்பட்டு விட்டது. ‘சட்ட விரோதமான குற்றங்களைச் செய்தவன்தான் ராஷ்டிரபதியாகவும், பிரதமராகவும், முதல் மந்தியாகவும் மற்றும் மந்திகளாகவும், பெரும் பதவியாளர்களாகவும் ஆக முடியும்' என்ற நிலைமை ஏற்பட்டவுடன் அரசியலில் யோக்கியர்களுக்கு இடம் இல்லாமலே போய்விட்டது. அயோக்கியர்களுக்கே ஆட்சி உரிமையாகிவிட்டது.

    இந்த நிலையிலும் இந்தத் தன்மையிலும் நாட்டுக்கு ‘சுதந்திரம்' கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்குப் பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை கொலைகாரத்தனம், நாச வேலைகள் என்பவைகளில் ஒன்றுகூட பாக்கியில்லாமல் செல்வாக்குப் பெற்று, தினசரியில் நடைபெற்று வருகின்றன. அவை எந்த அளவுக்கு வளர்ந்தன என்றால் : 1. காந்தியார் கொல்லப்பட்டார் 2. தலைவர் காமராஜரைக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டன 3. போலிஸ் அதிகாரிகள் கட்டிப் போட்டு நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டனர் 4. நீதி ஸ்தலங்கள், ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஜெயில் கதவு உடைக்கப்பட்டது. பல வாகனங்கள் (பஸ்கள்) கொளுத்தப்பட்டன. வழிப்பறிகள் நடந்தன. மற்றும் நிலங்களில் துர் ஆக்கிரகமாகப் பயிர்கள் அறுவடை செய்து கொண்டு போகப்பட்டன. விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன 5. கடைசி நடவடிக்கையாக நேற்று முன்தினம், தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டிவிட்டுக் கொளுத்தி, 42 பேரும் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்ட காயங்களாகும்.

    சட்ட விரோதமான, பலாத்காரமான, நாசவேலைகளான காயங்களைச் செய்து, அதன் மூலம் பலன் பெறுவதற்கென்றே ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனங்களாலேயே, அவற்றின் பலனாகவே செய்யப்பட்ட, நடைபெற்ற காயங்களாகும். இவைகளை அடக்கப் பயன்படும்படியான போதிய சட்டமில்லை; சட்டம் செய்வது மூலாதாரக் கொள்கைக்கு விரோதமாக இருந்து வருகிறது.

    சட்டத்திற்கும், நீதிக்கும் சம்பந்தமில்லாத நீதிஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன. சட்டங்களின் யோக்கியதை இப்படி இருக்க பழிவாங்கும், ஜாதி உணர்ச்சி கொண்ட, சுயநலத்தையே முக்கியமாய்க் கருதுகிற நீதிபதிகளே 100க்கு 90 பேர்களாக இருக்கிறார்கள்.

    அமைச்சர்களும், ஆட்சியாளர்களும் இந்த நிலையை மாற்ற, அடக்க ஆரம்பித்தால் நமது பதவிக்கு ஆபத்து வந்து விடுமே என்று பயந்தவர்களாகவே இருந்து வருகிறார்கள் என்பது மாத்திரமல்லாமல் அமைச்சர்கள் ‘நாங்கள் செய்வதையெல்லாம் மாற்றி தங்களுக்கு அவமானம் உண்டாக்கும்படியான நீதிஸ்தலங்களும், நீதிபதிகளும் ‘எங்களுக்கு மேலாக' இருப்பதால் எங்களால் மக்கள் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை' என்கிறார்கள். மற்றும் லஞ்சம், ஒழுக்கக்கேடு, நேர்மை அற்றத்தன்மை இல்லாத அதிகாரிகள் மிக மிக அரிதாகவே இருக்கிறார்கள்.

    அவற்றைக் கண்டுபிடித்தால் சிபார்சு வருகிறது. அதை அலட்சியம் செய்து நடவடிக்கை நடத்தினால், நீதிஸ்தலங்கள் பெரிதும் அவர்களை குற்றமற்றவர்களாக ஆக்கிவிடுகின்றன. ஜாதி காரணமாக, சிபாரிசு காரணமாக அரசாங்கத்தைப் பழிவாங்கும் காரணமாக எப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான அதிகாரியும் நீதிஸ்தலங்களில் தப்பித்துக் கொள்கிறார்கள்.
    - கீழ்வெண்மணியில் 42 தலித் மக்கள் கொல்லப்பட்டதையொட்டி, பெரியார் விடுத்த அறிக்கை ‘விடுதலை' 28.12.1968

    ReplyDelete
  10. இந்தியர்கள் ஆட்சி புரியும் வரை மநுதர்மம்தான் கோலோச்சும் 2


    பார்ப்பனருக்கு வசதியான, பொது நலத்துக்கு கேடான, நீதிக்குக் கேடான குற்றமான காரியங்கள் நிறைந்த, தர்மங்கள் கொண்ட நூல், எப்படி மத (மநு) தர்மமாக இருக்கிறதோ, அதுபோல் சமுதாயக் கேடானதும் பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால் ஆட்சியையே பாழ் பண்ணக் கூடியதுமானத் தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விளங்குகிறது. ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர, வேறு யாரும் பதவிக்கு வரடியாததானத் தன்மையில் அரசியல் சட்டம், நடவடிக்கை இருப்பதால், என்றென்றும் திருத்த முடியாத தன்மையில் ‘ஜனநாயக ஆட்சி தர்மம்' இருந்து வருகிறது.

    இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால், ‘ஜனநாயகம்' ஒழிக்கப்பட்டு, "அரச நாயகம்' ஏற்பட வேண்டும். அது எளிதில் முடியாத காரியமானால், தமிழ்நாடு தனி முழு சுதந்திரமுள்ள நாடாக ஆக்கப்பட வேண்டும். அது முடியவில்லையானால், இந்தியா அன்னியனுடைய ஆட்சிக்கு வர வேண்டும். இந்தியாவானது ‘இந்தியர்கள்' ஆட்சி புரிகிறவரை, மேல்கண்ட மாதிரியான மநு தர்மம் தான் ஆட்சி தர்மமாக இருக்க முடியும். ஆதலால் மக்கள் மனிததர்ம ஆட்சியில் இருக்க வேண்டுமானால், இந்தியாவுக்கு அன்னிய ஆட்சிதான் தகுதி உடையதாகும்.

    அதுவும் ரஷ்ய ஆட்சி அதாவது ரஷ்யரால் ஆளப்படும் ஆட்சிதான் வரவேண்டும்; அல்லது பிரிட்டன், அமெரிக்கா போன்ற வெள்ளையரின் ஆட்சிதான் வேண்டும். அப்படியில்லாமல் இந்தியாவை இந்தியன் ஆள்வது என்றால், அது பார்ப்பன நலத்துக்கு ஆக ஆளப்படும் சூழ்ச்சியாட்சியாகத்தான் அதாவது, இன்றுபோலத்தான் இருக்கும், இருந்து தீரும். மக்களும் தாங்கள் சூத்திரர்கள் என்பதை ஒப்புக் கொண்டவர்களாகத்தான் இருக்க முடியும்.

    எனவே, இன்றைய இந்த நிலை மாற வேண்டுமானால் முதலாவது குறைந்தது

    1. காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல் ஆக்கிவிட வேண்டும்.

    2. சமுதாயக் கட்சிகள் இருக்க வேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில், நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகியத்தன்மைகள் இல்லையென்று உறுதிமொழி பெற்ற பிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும்.

    3. எந்தக் கட்சி ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். அந்த அனுமதியும் முதலில் ஒரு ஆண்டுக்கு, பிறகு இரண்டாண்டுக்குப் பிறகு மூன்றாண்டுக்கு என்று அனுமதி கொடுத்து, இந்த ஆறாண்டு காலத்தில் ஒரு தவறு, எச்சரிக்கைப் பெறுதல் இல்லையானால்தான் காலவரையின்றி அனுமதி கொடுக்க வேண்டும்.

    கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. இப்போது இருப்பவைகளைத் தடுத்துவிட வேண்டும். சமுதாய - பொருளாதார சம உரிமைப் பிரச்சார ஸ்தாபனம் என்பதாக மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கலாம். கட்சிகளைத் தடுக்கவோ, ஏற்படுவதை மறுக்கவோ, சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பவை போன்ற நிபந்தனை மேற்பார்வை இருக்க வேண்டும். பத்திரிகைகளைப் பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும்.

    முடிவாக, ஜெயில்களில் வகுப்புகள் இருக்கக்கூடாது. ஒரே வகுப்புதான் இருக்க வேண்டும். இப்போதைக்கு இந்த நிபந்தனைகள் இருக்கலாம். அரசாங்க அதிகாரிகள் மீது அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கவர்னர் முடிவே முடிவானது என்றும், கோர்ட்டுகளுக்கு அதிகாரமில்லையென்றும் திட்டம் செய்துவிட வேண்டும். எந்தக் காரியத்திற்கும் சட்டம் மீறுதல் இருக்கக் கூடாது. மீறுவதை அசல் கிரிமினல் குற்றமாகவே பாவிக்கப்பட வேண்டும்.

    இப்படியான பல திருத்தங்கள் செய்தால் தான் இந்தியாவை இந்தியர் ஆளலாம். அதுவும் அன்னியர் ஆட்சி ஏற்படும் வாய்ப்பு ஏற்படும் வரைதான். இந்தியாவைப் பொருத்தவரையில், இந்த நிலையில் எப்படி இருந்தாலும் ‘நம் நாட்டை நாம்தான் ஆள வேண்டும்' என்பது, அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும்.

    "Patriotism is the last refuge of a scoundrel'' -
    "தேச பக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம்'' - ஜான்சன்

    -----------கீழ்வெண்மணியில் 42 தலித் மக்கள் கொல்லப்பட்டதையொட்டி, பெரியார் விடுத்த அறிக்கை ‘விடுதலை' 28.12.1968)

    ReplyDelete
  11. தமி ஓவியா இப்படியெல்லாம் கூட சப்பைகட்டு கட்டலாம் போலிருக்கிறதே.

    உங்களைப் போன்ற அனுகூல சத்ருக்கள் இருக்கும் வரை ஈவேரா அவர்களுக்கு விரோதியே தேவையில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. டோண்டு அய்யா,
    ஈ.வே.ரா என்பது தவறு.
    ஈ.வெ.ரா என்பதே சரியானது.

    பெரியார் பெயரின் முன்னெழுத்தையே சரியாக குறிப்பிடாத தாங்களா பெரியாரை சரியாக விமர்சிக்கப் போகிறீர்கள்.

    ReplyDelete
  13. நாட்டைத் திருத்த எவ்வளவு நல்ல தீர்வு! மனு தர்மம் அதர்மம் என்றால் அதற்கு மாற்றை எடுத்து முன் வைத்திருந்தால் அது பகுத்தறிவு!பார்ப்பனர்களுக்கு அடிமையாக இருக்கக் கூடாதென்று ரஷ்யர்களையும் ப்ரிட்டிஷாரையும் அழைப்பது என்ன அறிவோ? ப்ரிட்டிஷ் போட்ட எச்சில் எலும்புத்துண்டில் வளர்ந்த ஈ. வெ .ரா. ப்ராண்டு பகுத்தறிவு..... (நல்ல வேளை முதலெழுத்தை சரியாக சொல்லியாகி விட்டது. முதலெழுத்தை சரியாக சொல்லா விட்டால் விமர்சனமும் தவறாக இருக்கும் என்பது பகுத்தறிவு சென்டிமென்ட் அல்லவா?)

    ReplyDelete
  14. அப்புறம் இன்னொரு விஷயம் டோண்டு ஸார், அதென்ன தலைப்பு, திராவிட அரசியலின் தரக்குறைவும் வெட்கம் கெட்ட தனமும் கேட்டும் வாசலும் என்கிற மாதிரி? இரண்டுக்கும் ஒரே அர்த்தம் தானே?

    ReplyDelete
  15. ஈவவெரா விமர்சனத்திற்குக்கூட தகுதயற்ற நபர்; அதை நிரூபிக்க இவ்வளவு பேர்; இவ்வளவு நபர்கள்;

    ReplyDelete
  16. //ப்ரிட்டிஷ் போட்ட எச்சில் எலும்புத்துண்டில் வளர்ந்த ஈ. வெ .ரா. ப்ராண்டு பகுத்தறிவு//

    யாருடைய காசிலும் ஓசி வாழ்க்கை வாழாமல் தன் வீட்டுச்சோற்றைத் தின்று விட்டு ஊருக்கு உழைப்பவர்கள் தான் பெரியார் தொண்டர்கள்.

    அந்தக்காலத்திலேயே இன்கம்டேக்ஸ் கட்டியவர் பெரியார். சர் பட்டங்களை துச்சமென மதித்து தூக்கியெரிந்தவர் பெரியார்.

    அப்படிப்பட்ட பெரியாரை விமர்சிக்கும்போது விபரங்களை தெரிந்து கொண்டு விமர்சிக்கவும் poornam ....

    ReplyDelete

  17. poornam பார்ப்பான் யார் தெரியுமா? அவனும் அந்நியன் தான். இது குறித்து பெரியாரின் மேற்கோள் இதோ:-

    "வெள்ளையன் மட்டுமல்ல பார்ப்பனர்களும் அன்னியர்கள்தான்"!



    "வெள்ளையன் இந்த நாட்டுக்கு அன்னியன் என்றால், இந்தப் பார்ப்பனர்களும் அன்னியர்கள்தானே. அவன் 200, 300 வருடக்காலமாக இருந்த அன்னியன் என்றால், இந்தப் பார்ப்பனர்கள் 2000, 3000 ஆண்டுக்காலமாக இருக்கிற அன்னியர்கள்தானே!"

    ------------------ தந்தைபெரியார் - "விடுதலை", 26.12.1963

    ReplyDelete
  18. பெரியார் தனன்னைப்பற்றி சுய விமர்சனம் ச்ய்து கொண்ட பகுதியத் தருகிறேன். படியுங்கள். தெளியுங்கள்.

    நான் 1920ல் காங்கிரசில் சேர்ந்தேன். அதற்கு முன்பு 1900 முதல் பார்ப்பனரல்லாதவர் நல உணர்ச்சி கொண்டவனாக இருந்து வந்தேன்.

    நான் 1900க்கு முன்பே கடவுள், மத, ஜாதி விஷயங்களில் நம்பிக்கை இல்லாதவனாகவே இருந்து வந்தேன்.

    விளையும் பயிர் முளையிலேயே . . .


    நான் அக்காலத்தில் சிறிது செல் வாக்குள்ள குடும்பத்தவனாகவும், வியாபார விஷயத்தில் ஈடுபடுபவனாக வும் இருந்து வந்ததால் யாரிடமும், தர்க்கமும், விவகாரமும் பேசுவதில் பிரியமும் உற்சாகமும் உடையவனாக இருந்து வந்தேன்.

    மாடு , எருமை, கன்று போட்ட நேரங்களைக் குறித்து வைத்துக் கொண்டு, ஜோசியர்களிடம் கொடுத்து ஜோசியம் கேட்பேன்.

    ReplyDelete
  19. 1900 ல் இருந்தே எனக்கு ஜோசியம், முகூர்த்தம், சகுனம் முதலியவைகளில் நம்பிக்கை இருந்ததில்லை. அப்போது என்னிடத்தில் வாய்கொடுத்து மீள முடியாது என்று எல்லோரும் பேசிக் கொள்வார்கள்.

    எக்குழுவிலும் நான்தான் தலைவன்


    நான் எனது 5, 6, 7 வயது முதற் கொண்டே தறுதலைப் பிள்ளையாகத் திரிந்தாலும், அந்த வயது முதற் கொண்டே நான் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் எந்தக் கூட்டத்தில் சேர்ந்தாலும் (நான்)தலைவனாகவே - மற்றவர்கள் என் சொல் கேட்பவர் களாகவே இருக்கும் வண்ணம் இருந்து வந்திருக்கிறேன்.

    இன்று வரையிலும் கூட எந்தக் குழுவிலும் எந்தக் கட்சியிலும் நான் தலைவனாகவே இருந்து வந்திருக் கிறேனே ஒழிய ஒரு சாதாரண அங்கத் தினனாக எதிலும் இருந்ததில்லை.

    அதுபோலவே எந்த சந்தர்ப்பத் திலும் எந்தக் குழுவிலும், கட்சியிலும் எதாலும் நான் பிரத்தியாருக்கு ஆதரவு கொடுப்பவனாகவே இருந்து வந்திருக் கிறேனே ஒழிய, நான் யாரிடமும் எதற்கும் ஆதரவு - உதவி கேட்டதே இல்லை. அது போலவே நான்தான் எனது ஆயுளில் யாருக்கும் பண உதவி செய்திருக்கிறேனே ஒழிய யாரிடமும் எந்தக் காரியத்திற்கும் பண வசூலுக்குப் போனதே கிடையாது. யாரிடமும் எந்தக் காரியத்திற்கும் பணவசூல் செய்ததும் கிடையாது.

    என்னைப் பற்றி


    சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் முதலியற்றிற்குக் கூட பணம் வேண்டுமென்று பத்திரிகையில் போடுவேன், கழகத் தோழர்கள் வசூல் செய்வார்கள் அல்லது பொதுமக்கள் அனுப்பிக் கொடுப்பார்கள். அவ்வளவு தான்! நான் நேரில் யாரையும் கேட்டது கிடையாது; கேட்டு வாங்கியதும் கிடையாது.

    எனக்குப் பணத்தாசை ரொம்பவும் உண்டு, செலவு செய்யவும் மனது வராது, யாரையும் கேட்கவும் மாட் டேன்.

    ஆனால் பணம் வந்து கொண்டே இருக்கும் . சேர்த்து கணக்குப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டே இருப் பேன். சரியாக கணக்கு வைக்க மாட் டேன். அடிக்கடி இருப்பை கணக்குக் கூட்டிப் பார்த்துக் கொள்வேன்.

    எனது கொள்கைகள்


    எனக்கு ஆசையெல்லாம் மக்கள் பகுத்தறிவாளர், நாத்திகர்கள் ஆக வேண்டும்; ஜாதி ஒழியவேண்டும்; உலகில் பார்ப்பனர்இருக்கக்கூடாது. இதுதான் எனது கொள்கை. இதற்கு ஆகத்தான் காங்கிரசில் கூப்பிட்ட உடன் சேர்ந்தேன்.

    நான் காங்கிரசை விட்டதற்கும் இதுதான் காரணம்:


    ஜஸ்டிஸ் கட்சி என்னும் பார்ப் பனரல்லாத கட்சியில் சேராமலே அதற்கு நான் ஆதரவளித்ததும் இதற்கு ஆகத்தான்.

    ReplyDelete

  20. ஜஸ்டிஸ் கட்சி தலைமை ஏற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதும் இதற்கு ஆகத்தான். அக்கட்சி தலைமை ஏற்ற உடன் அக்கட்சி கொள்கையாக இம்மூன்றையுமே ஏற்படுத்திவிட்டு அரசியலில் (எலக்ஷனில் நிற்பதில்லை, பதவி ஏற்பதில்லை) பிரவேசிப்பதில்லை என்ற திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டதும் இதற்கு ஆகத்தான். காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்து விலக்கப்பட்ட போதும் பதவியை வேண்டாம் என்று உதறித் தள்ளினதும் இதற்கு ஆகத்தான்.

    காங்கிரசை எதிர்த்ததும் ஆதரித்ததும்


    வெள்ளையன் போன பின்பு 1952 இல் நடந்த தேர்தலின்போது கூட நான் காங்கிரசை எதிர்த்து வேலை செய்தபோது கூட என் கழகத்தில் இருந்து ஒரு நபரைக் கூட நிறுத்தாமல், கம்யூனிஸ்டுகளுக்கும், காங்கிரஸ் எதிரிகளுக்கும் ஆதரவ ளித்து, காங்கிரசை தோற்கடித்ததும் இதற்கு(எனது மேற்கொண்ட கொள்கைகளுக்கு) ஆகத்தான்.

    எனது கொள்கைப்படி வேறு கட்சி பதவிக்கு வர முடியாமல் போனதால், காங்கிரஸ் பதவிக்கு வந்து எனக்கு ஆதரவளிப்பதாக கூறியும் நான் மறுத்துவிட்டு, காங்கிரசை எதிர்த்து இராஜாஜியை காங்கிரசை விட்டு போகும்படி செய்ததும் இதற்கு ஆகத்தான். அந்த சந்தர்ப்பத்தில் காமராஜரை ஆதரிக்கும் முறையில் காங்கிரசை ஆதரித்ததும் இதற்கு ஆகத்தான் - அதாவது காமராஜர் பதவிக்கு வந்த வுடன், பார்ப்பனர்களும், அவர் களது சில கூலிகளும் காங்கிரசை (காமராஜரை) எதிர்த்தபோது, தானாகவே மேல் விழுந்து காங் கிரசை (காமராஜரை) ஆதரித்ததும் இதற்கு ஆகத்தான்.

    இந்த சந்தர்ப்பத்தில் காங்கிரஸ் காரர்கள் என்னை விரும்பவில்லை என்று தெரிந்தும், நானாகவே காங்கிரசை ஆதரித்துக் கொண் டிருந்ததும் (இந்தக் கொள்கைக்கு) இதற்கு ஆகத்தான்.

    தி.மு.க.வை எதிர்த்ததேன்?


    இந்த சந்தர்ப்பங்களில் தி.மு.க.வை எதிர்த்துக் கொண்டு இருந்ததும் இதற்கு ஆகத்தான். அதாவது இந்த சந்தாப்பத்தில் தி.மு.க.வுக்கு பார்ப்பனர்கள், அவர்களது பத்திரிகைகள் ஆதர வாக இருந்தாலும், தி.மு.க.வும் நாங்கள் பார்ப்பனர் கைப்பொம் மைகள்தான் என்று பட்டாங்க மாகச் சொல்லிக் கொண்டு வந்தது. தேர்தலில் காங்கிரஸ் தோற்று தி.மு.க. பதவிக்கு வந்தது. பார்ப் பனர்கள் தி.மு.க.வை ஒழிக்கப் பாடுபடுவதாலும், காங்கிரஸ் பார்ப் பனர்களுடன் சேர்ந்து கொண்டு தி.மு.க.வை ஒழிக்கப் பாடுபடுவ தாலும் நான் தி.மு.க.வுக்கு ஆதர வாளனாக இருக்க வேண்டியதாகி யதும் இதற்கு ஆகத்தான்.

    நாளை எனது நிலை


    ஆகவே எனது பொது வாழ்வு துவங்கியது முதல் இன்றுவரை மேற்கண்டபடிதான் பல கட்சிகளை எதிர்த்தும், பல கட்சிகளை ஆதரித் தும் தொண்டாற்றிக் கொண்டு வந்திருக்கிறேன். எல்லாம் ஒரே காரியத்திற்கு (கொள்கைக்கு) ஆகத்தானே ஒழிய கொள்கை மாற்றத்திற்கு ஆக அல்ல என்பதை மக்கள் உணர வேண்டும்.

    இவ்வளவு மாத்திரம் அல்ல. இனியும் எந்த கட்சியை எதிர்ப் பேனோ, எதை ஆதரிப்பேனோ எனக்கே தெரியாது!

    பொதுவாக நான், சாகும்வரை இந்த மேற்கண்ட கொள்கைகளை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று நான் உறுதியாய் இருக்கிறேன்.

    குறிப்பு: இந்த மூன்றிலும், அதா வது பகுத்தறிவு (நாத்திகத்தன்மை) வளர்ச்சி, ஜாதி ஒழிப்பு, பார்ப்பனர் ஒழிப்பு இந்த மூன்றுக்கும் தி.மு.க. எதிரிகளாக ஆகி விடுவார்களே ஆனால் எனது நிலைமை இப் படியே இருக்கும் என்று சொல்ல முடியாது.

    ----------------(-தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலர் - 1968)

    ReplyDelete
  21. வெள்ளையனுக்கு ஆதரவாளர்களா நாங்கள்?

    காங்கிரசாரை நான் கேட்கிறேன்! அந்நியனாகிய வெள்ளையனுக்கு நாம் அடிமையாக இருக்க வேண்டும் என்றா அல்லது அவன் போக வேண்டாமென்றா நான் சொல்லுகின்றேன்? தேர்தலுக்குக் கூட நாங்கள் நிற்கவில்லையே எங்களுக்கு வேண்டியதெல்லாம் நமக்கு இருக்கும் சூத்திரப் பட்டம் ஒழியவேண்டும். நமது நாட்டை வேறு எந்த நாட்டானும்,ஆரியனும் சுரண்டக்கூடாது. நாடிமுத்துவோ, வடபாதி மங்கலம் மைனரோ, காமராஜரோ மற்றும் எந்தத் திராவிடரோ சூத்திரர்களாக இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை.
    காங்கிரசிலுள்ள திராவிடத் தோழர்களே, ஏன் எங்களுக்கு இடையூறு செய்கின்றீர்கள்? வெள்ளையன் எங்களுக்கு வேண்டாம், அவன் எதற்கும் எங்களுக்குத் தெவையில்லை. நுhட்டை ஆண்டுவந்த நாங்கள், வெள்ளையன் வந்தபிறகு, பியூனாக, பட்லராக, கான்ஸ்டேபிளாக இருக்கின்றோம். ஆனால் பிச்சை எடுத்தக் கூட்டத்தார், இன்று ஹைபோர்ட் ஜட்ஜாக, அட்வகேட் ஜனரலாக, விhனாக, மந்திரியாக, சங்கராச்சாரியாக, பகவான்களாக இருக்கின்றனர். பார்ப்பனர்கள் ஜட்ஜ் முதலிய பெரிய பதவிகளில் இருக்கின்றார்கள். அதனால் அவர்களுக்கு வெள்ளையன் இருப்பதால் நஷ்டமொன்றுமில்லை. ஏங்களுக்குத்தான் முதலில் வெள்ளையன் வெளியே போகவேண்மென்ற கவலை, ஏனனில் வெள்ளையனுக்கும் ஆரியனுக்கும் நாங்கள் தான் அடிமைகளாக இருக்கின்றோம்.
    காங்கிரஸ் தோழர்களே! எங்களைச் சந்தேகிக்க வேண்டாம் வெள்ளையன் வெளியேறினால், பார்ப்பாடைய உயர்வுக்கும், நமது தாழ்மைக்குங்ம அறிகுறியாகிய உச்சிக்குடுமி ழூணூல் ஆகியவைகளைக் காங்கிரசிலுள்ள திராவிடத் தொழர்களாகியநீங்கள் தான் கத்திரிக்கப்போகின்றீர்களென்பது ஆரியனுக்கும் தெரியும் ஏன்! அது பாடுபடாத கூட்டம். கடுகளவாவது நாங்கள் உங்கள் விதோதிகளல்ல’அணுக்குண்டு காலத்தில், இந்த அதிசய காலத்தில் நீங்கள் இதை உணரவில்லையென்றால் பின்பு எப்பொழுது நீங்கள் உணரப்போகின்றீர்கள். எச்சில் காப்பிக் கடைகளில் திராவிடன் நுழையக்கூடாது என்று இந்தக்காலத்திலா சொல்லுவது?
    நாம் பாடுபடுகின்றோம். மண்வெட்டி எடுத்தப் பூமியைத் திருத்தி உழுது, பயிரிட்டுப் பாடுபடுகிறோம். அப்படியிருக்க ஏன் நமக்கு இந்த இழிவு? யாரை நாம் வஞ்சித்தொம்? இந்த மானமற்றத் தன்மை போவதாக நாம் பாடுபட்டால், நாம் துரோகிகளா?அகிம்சையே தங்கள் அடிப்படைக் கொள்கை என்று பெருமை பேசிய காங்கிரஸ் பதவி ஏற்புக்குப் பிறகு எங்கள் மாநாட்டுப் பந்தல்கள் நெருப்புக்கிரையாக்கப்பட்டன. கண்போனது, கால்வெட்டப்பட்டது. ஆகிம்சா மூர்த்திகளாகிய காங்கிரஸ்காரர்களே! இந்தக் கொடுமைகளை நீங்கள் செய்யலாமா? இது நேர்மையா? சிந்தித்துப் பார்த்து நீங்களே தீர்ப்பளியுங்கள்

    ReplyDelete
  22. காங்கிரஸ்காரர்களை விட நாங்கள் பின் வாங்கியவர்களா? நாங்களும் அப்படியே செய்தால் நாடு என்ன கதியாகும்? திராவிடர்களுக்குத்தானே கஷ்டம் ஏற்படும்.
    கம்யூனிஸ்ட் தோழர்களே! எங்களிடத்தில் உங்களுக்கு ஏன் சந்தேகம்? கம்யூனிஸ்ட், காங்கிரஸ்காரர்களால் எங்களுக்கு எவ்வளவு தொந்தரவு, வெள்ளையன் வாழ வெண்டுமென்றா நாங்கள் சொல்லுகின்றோம்? சுயராஜ்யம் வந்துவிட்டதாகச் சொல்லிக் கொள்ளும் காங்கிரசார் சுயராஜ்ய காலத்தில் இப்படிச் செய்தால் இதை மக்கள் எப்படிச் சகிப்பார்கள்? காந்தியார்கூட சொல்லிவிட்டாரே ‘வெள்ளையன் மேல் சந்தேகம் வேண்டாம், அவன் நல்லவனாகிவிட்டான்” என்று! இது தானா சுயராஜ்யம்? கம்யூனிஸ்ட் கட்சியார், மில்லிலும், எஞ்சினிலும் வேலை செய்யும் தொழிலாளர்களையே தொழிலாளர்களாகக் கருதுகின்றார்கள். சரீரத்தினால் பாடுபடும், சூத்திரப்பட்டம் தாங்கிய நாலுகோடி மக்களும் தொழிலாளர்களல்லவா? சூத்திரனைக், கூலி இல்லாமல் பார்ப்பனன் வேலை வாங்கலாம் என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகின்றதே, இது கடவுளின் கட்டளையாம். திராவிடச் சங்கம் என்றால் சூத்திரன் சங்கம் என்றுதானே கருத்து? இதற்குத்தானே, இப்படிச் சொல்ல வெட்கப்பட்டுத்தானே பார்ப்பனரல்லாதார் சங்கம் என்றும் சொன்னோம்? ஏன் இந்த இழிவான பெயர்கள் நமக்கு? பார்ப்பனன் வேண்டுமென்றால் தங்கள் சங்கத்தைச் சூததிரனல்லாதான் சங்கம் என பெயர் வைத்துக் கொள்ளட்டுமே. நாம் ஏன் நம்மை பார்ப்பனரல்லாதான் என்று அழைத்துக் கொள்ளவேண்டும்?

    ReplyDelete
  23. நமக்குச் சொந்தப் பெயரில்லையா?
    நாம் திராவிடர்கள் அல்லவா? பிராமணன் உயர்வானவனென்று எக்ஞவல்யர், நாரதர், பராசரர் சொன்னது இன்று இந்து சட்டமாகக் காட்சியளிக்கின்றதே. சட்டத்திலே, சாஸ்திரத்திலே, நடத்தையிலே, பிறவியிலே நாம் சூத்திரராயிற்றே. “கடவுளாலே கொடுக்கப்பட்டது” என்று சொல்லப்படும் இந்தச் சூத்திரப் பட்டத்தைத் தாங்கி நிற்பவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்யும் தொழிலாளர்களாகிய திராவிடர்களல்லவா? நாம் எப்பொழுது இந்தச் சூத்திரப்பட்டத்தை ஒழிப்பது? கம்யூனிஸ்ட் தோழர்களே சூதுகள், தந்திரங்கள் ஒழியவேண்டும். நயவஞ்சகமாக இவ்வளவுநாள் நடந்த இந்த ஆட்சி பிரிட்டிஷ் ஆட்சியா? இது பிரிட்டிஷ் நாட்டுஆட்சி அல்ல. இந்த பேதங்கள் அங்கேயில்லை. பார்ப்பனர் நூற்றுக்கு நூறு வாழ வசதி செய்து கொடுத்தது இந்த ஆட்சி. சூத்திரன் படித்தால் ராஜாவுக்குக் கேடு, பட்டத்துக்குக்கேடு என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்வதுபடி நடந்தது இந்த ஆட்சி. பிராமணன் உடலால் உழைக்கக்கூடாது என்பதற்காகத்தான் அவனுக்கு ஜட்ஜ் (நீதிபதி) முதலிய உயர்ந்த உத்தியோகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வெள்ளையன் பார்ப்பானுக்கு உடந்தையாக இருக்கின்றான்.

    இது வெள்ளை ஆரியனுக்கும், மஞ்சள் ஆரியனுக்கும் உள்ள ஒப்பந்தம்தான். இனி ஏற்படப்போவது கூட அந்த ஒப்பந்தம்தான் மற்றப் பேர்களெல்லாம் தந்திரம். இதை இரண்டுவருடத்துக்கு முன்பே நான் சொல்லி விட்டேன். அம்பேக்கரும், ஜின்னாவும் இப்போழுது சொல்லுகிறார்கள், இன்றைய சமுதாய அமைப்பைக் காப்பாற்றுவதுதான் சுயராஜ்யம். இதற்கு ஒரு உதாரணம், திருவையாற்றிலே, சாப்பாட்டில் பேதம் கூடாது என்று சொன்ன காலத்திலே, மகாகனம் சாஸ்திரியார்.பி.எஸ். சிவசாமி ஜயர், டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரியார் முதலியோர்
    “நாம் செய்து கொண்ட உடன்படிகை மீறுகின்றாயே” என வெள்ளையனைக் கேட்டார்கள்.
    இதைத்தான் நாம் உடைக்கவேண்டும்.வெளளையன் இந்த நாட்டை விட்டுப் போய்விடுகிறேன் என்று சொல்லுவது , மற்ற வல்லரசுகளிடம் அவன் செய்து கொண்ட ஒப்பந்தம், சண்டை நீங்கியவுடன்அவரவர்கள் நாட்டை அவரவர்களிடம் விட்டுவிடவேண்டும் என்று நிபந்தனை செய்து கொண்டார்கள். அந்தப்படி அமெரிக்கன், பிலிப்பைன்ஸ் நாட்டை விட்டுவிட்டான். அதைப்போலவே பிரஞ்சுக்காரனும் வியட்நாம் நாட்டை விட்டுவிட்டான். ஆனால் நமது நாட்டை நம்மிடம் விடாமல் வெள்ளையன் தந்திரம் செய்கின்றான். காங்கிரஸ் அவனை வெளியே விடாமல் தடுத்து நிற்கின்றது. காங்கிரஸ் ஏன் அவனிடம் பேரம் பேசுகின்றது? நாட்டை ஆள நமக்குத் தகுதி இல்லையா?
    நாட்டில் ஆட்சிக்கு முட்டுக்கட்டையாக, ஒற்றுமைக்கு விரோதமாக எவன் ஜாதிப்பட்டம் வைத்திருக்கின்றானோ, எவன் பெயருக்குப் பின்னால் ஜாதியைக் குறிப்பிடும் வால் வைத்திருக்கின்றானோ, அவனுக்கு 6-மாத தண்டனை விதிக்கட்டுமேபெருவாரியான ஜாதிமத பாகுபாடுள்ள நாட்டிலே ஒரே கொள்கையையுடைய ஒரு இனம், அதுவும் நூற்றுக்கு, 60க்கு மேல் மெஜாரிட்டியாகவுள்ள இடத்தைத் தங்களுக்கென முஸ்லீம்கள் தனியே பிரித்து கொள்ளுகிற தென்றால், இதில் என்ன தவறு? இது என்ன முட்டுக்கட்டை- நாடு என்ன பிளந்துபோகும்? நாடு என்ன வெடித்துப்போகும்? இதற்கு எதிர்ப்பு இருக்கின்றது என்றால் இது வெள்ளையனும், ‘ஆரியனும் உண்டாக்குகிற கலகம். இங்கு இருக்கின்ற பிணக்கு, ஆபாசம் வெள்ளையனுக்குத் தெரியாதா? பார்ப்பான் என்று ஒரு ஜாதியும், பறையன் என்று ஒரு ஜாதியும் இருப்பதும், ஹோட்டலுக்குள் ஒரு ஜாதிக்காரன் போகக்கூடாது என்பதையும் பார்த்து வெள்ளைக்காரன் சிரிக்கமாட்டானா?

    ---------கும்பகோணத்தில் 18-8-1946 – ஆம் தேதி காங்கேயன் பார்க்கில் பெரியார் ஈ.வெ.ரா. உரை (‘குடிஅரசு’ தலையங்கம; 9-10-1946

    ReplyDelete
  24. வழக்கம்போல த்மிழ் ஓவியா கட் அண்ட் பேஸ்ட் செய்கிறார்.

    நான் கேட்கும் கேள்விகள்:
    1. வைக்கத்துக்கு பிறகு ஈவெரா இரட்டைக் குவளை, ஹரிஜனங்கள் மேல் வன்கொடுமை ஆகியவற்றுக்கு எதிராக ஏதேனும் த்னிப்பட்ட போராட்டம் நடத்தியுள்ளாரா? இல்லை என்றால் ஏன்? ஆம் என்றால் எங்கே எப்போது?

    2. நீங்கள் பீயள்ளவிலையென்றால் வேறு யார் செய்வது எனக்கேட்டாரா இலையா?

    3. 1965 ஆண்டு விடுதலை இதழ்களைக் காட்டாது வீரமணி பம்மியது ஏன்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  25. பெரியாரின் போராட்டமுறை என்பது பொதுமக்களுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு இல்லாததாகவும், பொதுச்சொத்துக்கு சேதம் இல்லாத முறையிலும் இருக்கும். ஆதேவேளை அரசாங்கத்திற்கும், ஆதிக்க வாதிகளுக்கும் பெரும் நெருக்கடியை கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும். மக்கள் நலனை மட்டுமே முன்னிருத்தி போராட்டம் நடத்தியவர் பெரியார்.


    ReplyDelete
  26. இது குறித்து பெரியார் தரும் விளக்கம் இதோ:-


    “திராவிடர்கழகத்தைப் போன்ற அபூர்வமான இயக்கம் வேறெங்கும் இருக்க முடியாது. அதாவது பதவிக்கு வரவேண்டுமென்ற எண்ணமோ, தேர்தலுக்கு நிற்கவேண்டிய அவசியமோ அதற்கான திட்டமோ சிறிதுமின்றி யார் எந்த எதிர்கட்சி ஆட்சி புரிந்தாலும் அவர்களை நாணயமாகவும், மக்களின் நலனுக்காகவுமான வகையில் தொண்டாற்றச் செய்வதும் அவர்களிடத்தில் நிபந்தனைப்படுத்தி அவ்வேலைகளை வாங்குவதும் கழகத்தின் முக்கியத் தொண்டாகும். ஏனவேதான் நாங்கள் கூட்டம் போடுவதோ அன்றிக் கிளர்ச்சி செய்வதோ, ஓட்டுப் பெறுவதற்காக அல்லது அதிகாரபீடத்தில் அமருவதற்காகச் செய்யப்படும் அரசியல் முன்னேற்பாடுகள் என்று எவரும் கருதக்கூடாது. இன்னும் கூறுவேன் - நாங்கள் எந்த குறிப்பிட்ட ஜாதியினருக்கோ, கட்சியினருக்கோ விரோதிகளல்லர் ‘எல்லோரையும் விட நாங்கள்தாம் உயர்பிறவி’ என்னும் பார்பனர்களுக்கும் கூட நாங்கள் எதிரிகளல்லர், அவர்கள் பாடுபடாமல் உயர்வு வாழ்வு வாழ்கிறார்கள் என்று அவர்களைப் பழிவாங்க வேண்டுமென்பதும். எல்லோரும் சரி நிகர் சமானமாயிருத்தல் வேண்டும் என்பதுதான் நமது சமுதாயத் தொண்டு.

    -------------------–”விடுதலை” 22.08.1948

    ReplyDelete
  27. பெரியாரின் போராட்டங்கள் ‘இழிவு ஒழிய’ நோக்கமாகக் கொண்டதா என்பதை பெரியாரின் வாயிலாகவே பார்ப்போம்.

    இந்தி எதிர்ப்புப் போராட்டம் :-

    இந்தி நுழைவு என்பது வடமொழி ஆதிக்கம் மட்டுமல்லாமல், சிறு பையன்களில் தூயமனத்தில் - பச்சமைரத்தில் ஆணி அடிப்பது போல, ஆரிய வர்ணாசிரமக் கலாச்சாரத்தைப் புகுத்துவதும் அநீதியாகும். எனவே நாம், மொழிப்பிரச்சினையோடு மாத்திரமின்றி நம் நாட்டுக் கலாச்சாரம், பண்பாடு ஆகியவைகளிலும் வடநாட்டு ஆதிக்கம் கை வைத்து அழிக்கும் சூழ்ச்சி என்பதை மறக்கக் கூடாது.

    ----------------------------- (விடுதலை 22.8.1948)

    பிள்ளையார் உருவப் பொம்மை உடைப்பு:-


    நான் என் சொந்த பொறுப்பில் முன்பு பல தடவைகள் கூறி இருப்பது போல வருணாசிரம வியாதியை ஒழிக்கக் கடைசி சிகிச்சையாக, நாளது மாதம் 27ம் தேதி புதன்கிழமை தமிழ் நாடெங்கும் புத்தர் விழா கொண்டாடி, மாலை 6 மணிக்குப் பொதுக்கூட்டத்தில் வருணாசிரமவாதிகள் பெரும்பாலோருக்கும் ‘மூலதேவன் - தெய்வம்’ எனவே கருதப்படுகிறதற்கு என்று உருவாக்கி இருக்கும் ‘செயற்கை உருவ கணபதி அறிகுறியை’ மக்கள் உள்ளத்தில் அழித்து விட வேண்டும் என்பதாகப் பொதுமக்களை- அதாவது மனு வருணாசிர தர்மத்தை வெறுக்கிற பொதுமக்களையும்- திராவிடர் கழகத் தோழர்களை, சிறப்பாக இளைஞர்களையும் வேண்டிக் கொள்கிறேன்.

    ---------------------(விடுதலை 7.5.1953)


    ReplyDelete
  28. ஆச்சாரியார் கல்வித்திட்ட எதிர்ப்பு:-


    “இந்தக் கல்வித்திட்ட எதிர்ப்பு என்பதை ஒரு அரசியல் போராட்டமாக்கருதி இதை நாங்கள் எதிர்க்கவில்லை, இதைச் சமுதாயப் போராட்டமாக இனவாழ்வுப் போராட்டமாக்க கருதியே எதிர்க்கிறோம். எங்கள் இனத்துக்கு-திராவிட இனத்ததுக்கு இந்த இனத்தையே தீர்த்துக் கட்டுவதற்காக வைக்கப்படும் பெருத்த வெடிகுண்டு என்று கருதியே இக்கல்வித் திட்டத்தை எதிர்க்கிறோம். இந்த எதிர்ப்பை போராட்டத்தை நாங்கள் எங்களுடைய ஜீவாதாரமான, உயிர் நிலைப்ப போராட்டமாகக் கருதுகிறோம், இப்போதே சொல்கிறேன், இந்தக் கல்வித்திட்டம் எடுபட்டால் மட்டுமே போதாது. நம்முடைய மக்களுக்கு உத்தியோகம், கல்வி எல்லாவற்றிலும் சரியானபடி விகிதாச்சாரம், பார்ப்பானுக்கு 100க்கு 3, நம்மவர்களுக்கு 97 என்கிற மாதிரி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும், இந்த இரண்டும் திராவிட மக்களின் ஜீவாதாரமான உரிமையான பிரச்சினைகள். இந்த இரண்டு காரியங்கள் நிறைவேறுவதற்காக இந்த இனம் கடைசிவரை உயிரைப் பணயம் வைத்துப் போராடியே தீரும், இதில் சந்தேகமே இல்லை.

    ------------------ (31.11.1954ல் சென்னையில் சொற்பொழிவு)


    ReplyDelete
  29. இராமன் பட எரிப்பு ஏன்?:-

    இன்றைய தினம் எனது சமுதாயத் தொண்டின் முதலானதும் முக்கியமானதுமான ஜாதி ஒழிப்பை எடுத்துக் கொண்டால் இராமனின் முதல் செய்கையும் கடைசி செய்கையும் ஜாதியைக் காப்பாற்றுப் பிறந்து, ஜாதியைக் காப்பாற்றி விட்டுச் செத்தததேயாகும், நமது நாட்டில் சமுதாயத் திருத்த வேலையோ, பகுத்தறிவுப் பிரச்சார வேலையோ எந்த ஒரு சிறிய அளவுக்கு நடக்க வேண்டுமானாலும் முதல் இலட்சியச் செய்கையாக, ஸ்லோகச் சொல் காரியமாக, துவக்கக் குறியாக இராமாயணம்-இராமன் அழிந்து ஒழிக்கப்பட்டு ஆக வேண்டும்.. .. உயிரை விட்டாவது மானத்தை, மனிதத்தன்மையை, ஒழுக்கத்தைக் காப்பாற்றவே இராமனைக் கொளுத்தச் சொன்னேன். சொல்கிறேன்

    ----------------(விடுதலை 4.8.1956)

    1921 இல் கள்ளுக்கடை மறியல் போராட்டம், 1924 இல் வைக்கம் போராட்டம், 1941 இல் இரயில் நிலையத்தில் உணவு விடுதியில் (பார்ப்பனர் -பார்ப்பனரல்லாதார் சாப்பிடும் இடம்)அமுலில் இருந்து வர்ணாசிரமத்தை எதிர்த்துப் போராட்டம், 1951 இல் இடஒதுக்கீடு பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நடத்திய போராட்டம் 1955 இல் அறிவித்த தேசிய கொடி எரிப்பு போராட்டம், 1957 இல் அரசியல் சட்ட எரிப்பு போராட்டம், 1960 இல் நடத்திய தமிழ்நாடு நீங்கிய இந்திய வரைபடத்தை எரிக்கும் போராட்டம் 1971 இல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் போராட்டம்

    இப்படி பல போராட்டங்களை தமிழரின் உரிமைக்காகவும், தமிழின இழிவு ஒழிப்புக்காகவுமே நடந்தவைகளே.

    ReplyDelete
  30. //நீங்கள் பீயள்ளவிலையென்றால் வேறு யார் செய்வது எனக்கேட்டாரா இலையா?//

    எனது அறிவுக்கு எட்டியவரை பெரியார் அப்படி எங்கும் பேசவில்லை.

    பேசியாதவோ எழுதியதாகவோ சான்று இருந்தால் கூறவும்.
    எப்போதும் பதில் தர தயாராக இருக்கிறோம்.

    பெரியாரைப் பற்றி விமர்சிக்கும் போது பெரியாரின் கருத்துக்களை கொண்டு உங்களைப்போன்றவர்களின் பொய்களை அம்பலப்படுத்துகிறோம்.

    ReplyDelete
  31. //1921 இல் கள்ளுக்கடை மறியல் போராட்டம், 1924 இல் வைக்கம் போராட்டம், 1941 இல் இரயில் நிலையத்தில் உணவு விடுதியில் (பார்ப்பனர் -பார்ப்பனரல்லாதார் சாப்பிடும் இடம்)அமுலில் இருந்து வர்ணாசிரமத்தை எதிர்த்துப் போராட்டம், 1951 இல் இடஒதுக்கீடு பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நடத்திய போராட்டம் 1955 இல் அறிவித்த தேசிய கொடி எரிப்பு போராட்டம், 1957 இல் அரசியல் சட்ட எரிப்பு போராட்டம், 1960 இல் நடத்திய தமிழ்நாடு நீங்கிய இந்திய வரைபடத்தை எரிக்கும் போராட்டம் 1971 இல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் போராட்டம்//
    இவற்றில் ஏதேனும் ஒன்றாவது சாதி இந்துக்கள் த்லித்துகள் மேல் வ்ன்கொடுமை செய்ததற்கு எதிராக வந்ததா என்பதே கேள்வி.

    அவ்வாறு செய்திருந்தால் செருப்பால் அடிக்கப்படுவோம் என்றல்லவோ பயந்திருப்பார்.

    வைக்கம் போராட்டம் காங்கிரசில் இருந்தபோது செய்தது. அது இங்கு கணக்கில் வராது. அதற்கு பிறகான காலகட்டத்தையே நான் குறித்தேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  32. //அவ்வாறு செய்திருந்தால் செருப்பால் அடிக்கப்படுவோம் என்றல்லவோ பயந்திருப்பார்.//

    எண்னற்ற தாழ்த்தப்பட்ட தோழர்கள் பெரியாரின் உழைப்பை உணர்ந்து போற்றிவருகின்றனர். இன்றைய திருமாவளவன் உட்பட அதையெல்லாம் குறிப்பிட்டாலும் நீங்கள் திருந்தப் போவதில்லை.

    செருப்படிக்கெல்லாம் பயந்தவரா பெரியார்?

    உச்சிக்குடுமி பார்ப்பானிலிருந்து சவுண்டிப் பார்ப்பான் வரை அண்டட முடியாத அக்னி ஜூவாலையாய் வாழ்ந்து காட்டியவர் பெரியார்.

    ஒரு காலத்தில் பெரியார் மீது கல்லெறிந்தவர்கள்,செருப்புத்தோரணம் கட்டியவர்கள், பின்பு பெரியாரின் உழைப்பின் அருமைய அறிந்து மலர்மாலைகளை அணிவித்து போற்றி புகழ்ந்தவர்கள் வரலாற்றில் ஏராளம் உண்டு. டோண்டு அய்யா.

    செருப்பு ஒன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும் என்ற வரலாற்றை உருவாக்கியவர் பெரியார்.

    டோண்டு அய்யா உங்களின் வயதிற்கு தகுந்தவாறு வார்த்தைகளை உபயோகித்தால் நல்லது.

    ReplyDelete


  33. தாழ்த்தப்பட்டோர் முன்னேற பெரியார் யோசனையை கீழே தந்துள்ளேன். இதில் நீங்கள் குரிப்பிட்ட ஜாதி இந்துக்களுக்கு எதிராகவும்.தாழ்த்தப்பட்டோர்களுக்கு ஆதரவாகவும் பேசியுள்ளார். இது போல் பல கருத்துக்களை எண்ணற்ற மேற்கோள்களை என்னால் காட்டமுடியும்.
    அதையெல்லாம் சொன்னாலும் நீங்கள் உண்மையை ஒப்புக்கொண்டு திருந்தவா போகிறீர்கள்.

    படியுங்கள்!திருந்துங்கள்!!


    கிராமங்களில் சாதி ஒழிய வேண்டுமென்றால் கணக்குப் பிள்ளை வேலையைப் பறையனுக்கு கொடுக்க வேண்டும்; மணியம் வேலையைப் பள்ளர், சக்கிலி ஆகியவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கணக்குப் பிள்ளையாகப் பார்ப்பானும் முதலியும், மணியமாகப் பிள்ளையும், கவுண்டனும் இருப்பதால் தான் அங்கே இருந்து சாதி உரிமை தோன்றுகிறது. ஆனதனாலே ஒரு திட்டம் போட வேண்டும். கணக்குப் பிள்ளை, மணியம் வேலைகளை அப்படி ஒதுக்கி வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் எப்படிச் சாதி உணர்ச்சி இருக்கும்?

    அதேமாதி கான்ஸ்டேபிள், எட்கான்ஸ்டேபிள், சப்இன்ஸ்பெக்டர் வேலைகளையும் பறையனுக்கு, பள்ளனுக்கு, சக்கிலிக்கு கொடுக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால், சமுதாயத்தில் சாதித் திமிர் ஒழிந்துவிடும்.


    -----------------------வில்லிவாக்கத்தில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில் 11.04.1964 -இல் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து

    ReplyDelete

  34. தாழ்த்தப்பட்டோரும் திராவிடர் கழகமும்!


    தோழர்களே, இன்று யான் கூறப்போகும் கருத்துகள் சில பேருக்குப் பிடிக்காமலிருக்கும். எனினும் தாழ்த்தப்பட்டோர் பெரும்பான்மையோராகக் கூடியிருக்கும் இக்கூட்டத்தில் அம்மக்களின் முன்னேற்றத்தைப் பற்றி மட்டுமே இன்று பேச ஆசைப்படுகிறேன்.

    இன்று நம் நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்துவரும் இழிநிலையை ஒழித்து, மற்ற சமுதாயம் போன்று வாழ வேண்டுமானால், அம்மக்களின் பேரால் உள்ள பெடரேஷன் தீவிர கொள்கையுடையதாயிருத்தல் வேண்டும். எக்காரணத்தாலோ அவ்வாறில்லை. அதைப்பற்றி யான் குறைவாகவோ வேறு விதமாகவோ பேச இஷ்டப்படவில்லையென்றாலும், திராவிட நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் இழிவுப் பட்டமும், தொல்லைகளும் தீர்க்கப்பட வேண்டுமானால் திராவிட இயக்கத்தினால் தான் முடியுமேயன்றி வேறில்லை ஏன்? திராவிடர் கழகம் என்ற ஒன்றுதான் இந்நாட்டில் பார்ப்பான் என்ற ஒரு சுயநல ஏமாற்றுக் கூட்டமும் பறையன் என்ற பேரால் உழைத்து உழைத்து எலும்புக்கூடு போன்ற தோற்றத்துடன் ஒரு பெருங்கூட்டமும் இருக்கக்கூடாதென்று திட்டம் வகுத்து நடைமுறையில் உருவான போராட்டமும் நடத்தி வருகிறது. இப்படிக் கூறுவதால் என் நண்பர் டாக்டர் அம்பேத்கர் அவர்களால் உங்களுக்கு பலன் ஒன்றும் கிடைக்காது என்று கருதுவதாக நீங்கள் நினைக்க வேண்டாம். உங்களுக்கு அவரால் அல்லது அவரது பெடரேஷனின் தொண்டினால் ஒரு சிலருக்குப் பதவி, உத்தியோகம் கிடைக்கலாம். ஆனால், பஞ்சமன், பறையன் என்று சட்டத்திலிருப்பதை ஒழிக்க முடியாது. அந்த இழிநிலை ஒழித்து உங்களை மனிதத் தன்மையடையச் செய்யப்போவது திராவிடர் கழகம் ஒன்றுதான் என்பதை வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி எச்சரிக்கை கூறுகிறேன்.

    ReplyDelete
  35. என் நண்பர் ஓமத்தூரார் கூடத்தான் இன்று முதன் மந்திரி, தோழர் பக்தவச்சலம், சுப்பராயன், கோபால் ரெட்டியாரும் தான் மந்திரிகள். தோழர் சிவஷண்முகம் சட்டசபைத் தலைவர். முனுசாமிப்பிள்ளை மாஜி மந்திரி, தோழர் சிவராஜ் மேயராகவும் இருந்தார்; மத்ய சட்டசபை மெம்பருங்கூட ஆனால் இவ்வளவிருந்தும் இன்றைய இந்துலா சட்டப்படி இவர்கள் அனைவரும் பஞச்மரும் சூத்திரருந்தானே? அதில் ஏதாவது மாற்றமடைந்ததா? எனவே, நமது திராவிட இனத்துக்கு இன்று வேண்டுவது பதவியல்ல; பார்ப்பனியத்தால் பாதாளத்தில் அழுத்தப்பட்டுள்ள நம் இனத்திற்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்க வேண்டிய புரட்சியை நாம் செய்ய வேண்டும். அவ்வித புரட்சிக் கொள்ளையைத்தான் இன்று திராவிடர் கழகம் மேற்கொண்டு தற்போதுள்ள வசதிக்கேற்ற அளவு பணிபுரிந்து வருகிறது.

    எனதருமை தாழ்த்தப்பட்ட மக்களே, இன்று நீங்கள் முஸ்லீம்களை விட முன்னணியிலிருக்க வேண்டியவர்கள். முஸ்லிம்களுக்கு இனஉணர்ச்சி என்ற முறுக்கையேற்றியது எது? தனித் தொகுதி என்ற தத்துவமே. உங்களுக்கும் அவ்வாறே அளிக்கப்பட்டதை காந்தியாரின், காங்கிரசின், பார்ப்பனியத்தின் சூழ்ச்சிக்கும், மிரட்டலுக்கும், தயவுக்கும் டாக்டர் அம்பேத்கரிலிருந்து காலஞ்சென்ற என் நண்பர் எம்.சி. ராஜா வரையில் ஏமாந்து போனார்கள். இதனால் உங்களின் முன்னேற்றத்திற்குக் கிடைத்த நல்ல அரசியல் வாய்ப்பைத் தற்கொலை செய்து கொண்டதாயிற்றே தவிர வேறில்லை. தனித் தொகுதியிருப்பதால் தான் முஸ்லிம்களின் உண்மைப் பிரதிநிதிகள் இன்று சட்டசபையிலிருந்து அவர்களின் இனத்துக்காக பாடுபடுகிறார்கள். ஆனால், கூட்டுத் தொகுதியால் பிரதிநிதிகள் முதல் தேர்தலில் பெருவாரியான ஓட்டுப் பெற்றும் இரண்டாவது தேர்தலில் காங்கிரசுக்கு கையாள்களாக இருக்கும், சமய சஞ்சீவிகளாக இருந்து வருபவர்கள் வெற்றி பெற நேர்ந்தது. இதை நான் கூறத் தேவையில்லை இன்று சட்டசபையிலுள்ள தாழ்த்தப்பட்ட மேம்பர்கள் காங்கிரசின் கைப்பாவைகளாகத்தானே இருந்து வருகிறார்கள்? இது மட்டுமல்ல; அப்படித்தானே இருக்க முடியும், காங்கிரஸ் தயவில் செல்பவர்கள்? எனவே, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு இன்று அவசரமாக வேண்டுவது வயது வந்தோர் அனைவருக்கும் ஓட்டுரிமையும், தனித் தொகுதியுமேயாகும்.

    ReplyDelete

  36. தாழ்த்தப்பட்ட தோழர்களில் சிலரும், அவர்களின் தலைவரும் திராவிடர் இயக்கத்தைப் பற்றி மறைமுகமாக தவறான பிரசாரம் செய்து வருவதைப்பற்றி அடிக்கடி என்னிடம் அந்த மக்களாலேயே புகார் செய்யப்பட்டு வந்தது. நான் அதைப்பற்றி இதுவரை கவலைப்பட்டதில்லை. இனியும் கூறுகிறேன். தனிப்பட்ட இப்பேர்ப்பட்டவர்களைப் பற்றி நாம் கருத்தில் கூட நினைக்கக் கூடாது. ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைக்க வேண்டுகிறேன். இந் நாட்டைப் பொறுத்தவரை தீண்டப்படாத மக்களின் உரிமைக்காக கடந்த 30 ஆண்டுகளாகவும் இன்றும் போராடி சில காரியங்களில் வெற்றி பெற்றுமிருப்பது சுயமரியாதை இயக்கமும், ஜஸ்டிஸ் கட்சியும், அதாவது இன்று திராவிடர் கழகம் என்ற பேரால் உங்களின் ஏழைகளின் கட்சியாக விளங்கும் திராவிடர் இயக்கமுமே என்பதை மறப்பவனோ அன்றி மறுப்பவனோ இருப்பானாகில் அவன் மனிதத் தன்மையற்றவன் என்றே கூறுவேன். தாழ்த்தப்பட்ட மக்களுக்கே பெரிதும் உழைக்கும் திராவிடர் இயக்கத்தைப் பற்றி குழி தோண்டுவதையே அம்மக்களில் ஒரு சிலரின் போக்காக இருந்து வருகிறது. அவர்களின் உட்கருத்தையும் யான் அறிவேன். ஆனால், திராவிடர் கழகம் அதற்கு இடம் கொடுத்து ஏமாந்து விடுமென்று எதிர்பார்ப்பது வீணேயாகும். கடைசியாக ஒன்று கூற ஆசைப்படுகிறேன். தாழ்த்தப்பட்டோர் பெடரேஷனில் யான் யாரையும் சேர வேண்டாமென்று கூறவில்லை. அதில் நம்பிக்கையுடையவர்கள் அதில் சேர்ந்து திராவிடர் கழகத்தினால் ஏற்படும் நன்மைகளையும்கூட பெற்றுக்கொள்ளட்டும். ஆனால், திராவிடர் கழகத்தில் சேர்ந்துள்ள சேர ஆசைப்படும் தாழ்த்தப்பட்ட தோழர்கள் திராவிடர் கழகக் கொள்கைக்கு ஏற்பவே நடக்க வேண்டும். கருப்புச் சட்டை அணிய வேண்டும். திராவிடர் கழக வெற்றி தாழ்த்தப்பட்டோரின் முக்கிய வெற்றி என்பதை மறக்கக் கூடாது.


    -----------------------------20-05-1947-இல் தூசூரில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு- “குடிஅரசு”, 21-05-1947

    ReplyDelete

  37. களத்துமேடு" இதழ் ஜூன் 15 - 2004 பக்கம்:-13-15 இல் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை இங்கு பதிவு செய்கிறேன். படியுங்கள். தெளியுங்கள்.

    பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராகச் செயல்பட்டாரா? - 7



    "1. நீதிக்கட்சியும் பெரியார் ஈ.வெ.ரா அவர்களும் ஏனைய தலைவர்களும் பிரகடனப்படுத்தியது போல். தீண்டாமை என்பது ஒழிக்கப்பட்டுவிட்டதா?
    2. சமூகத்தில் தலித்துகள் பிராமணரல்லாத வகுப்பாரின் பிரிக்க முடியாத அங்கமாக நடத்தப்படுகிறார்களா?
    3. தலித்துகள் சமூக, பொருளாதார அரசியல் நிலைகளில் உயர்வதற்கு வாய்ப்புகள் அளிக்கபட்டடுள்ளதா? என்ற கேள்விகளுக்கு அவர் இல்லையென்பதையும் தெரிவித்துள்ளார்.

    இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் வேறு யாருமல்ல டாக்டர் பத்மநாபன் ஐ.ஏ.எஸ் (ஓய்வு)தான். இவர் சுமார் 40 ஆண்டுகாலம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உயர்பதவிகளிலும், தமிழகத்தில் தலைமைச் செயலாளராகவும் பின்பு மிசோரம் மாநிலத்தின் கவர்னராகவும் இருந்திருக்கிறார் என்ற போது அவரது விளக்கமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்படுகிறது என்கிறார் மா.வேலுசாமி."

    ReplyDelete
  38. மேற்கண்ட திரு.பத்மநாபன் அய்யா அவர்களின் கேள்விகளில் நாங்கள் எள்ளளவும் மாறுபடவில்லை. இன்றும் தீண்டாமை ஒழிக்கப்படாததற்கு காரணம் யார்? தலித்துக்கள்- பார்பனரல்லாத வகுப்பாரின் பிரிக்க முடியாத அங்கமாக நடத்தப்பட தடுப்பது யார்? தலித்துக்கள் சமூக பொருளாதார அரசியல் நிலைகளில் உயர்வதற்கு வாய்ப்புகள் அளிக்கப்படாமல் குறுக்கே நிற்பது யார்? இந்த கேள்விக்கான பதிலை நாணயமாக உண்மையாக ஆராயந்து பாருங்கள். பார்ப்பனர்கள் என்பதுதான் பதிலாக வரும்.

    தீண்டாமை ஒழியாமல் இருப்பதற்கு காரணமான கடவுள், மதம், சாதி இவைகளுக்கு ஊற்றுக் கண்ணாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் பார்ப்பனர்கள் தானே?

    அதே போல் அன்றிலிருந்து இன்றுவரை ஆட்சியாளர்களும் சரி, ஆதிக்கவாதிகளும் சரி பிறவிப் பார்ப்பனர்களாகவே இருப்பது எப்படி? எதனால்? இதோ அம்பேத்கர் பேசுகிறார்.

    “பார்ப்பனர்கள் பெற்றிருக்கும் அந்தஸ்தும் அதிகாரமும் இந்து நாகரிகம் தந்தது அது அவர்களை மட்டுமே உயர்ந்தவர்களாக ஆக்கியது. மற்றவர்களை எதையும் அறிந்து கொள்ள முடியாமல் செய்து, பார்ப்பனர்களுக்கு எதிராக எழுந்துவிடக் கூடாத நிலையில் வைத்து விட்டது. ஏனவே அவன் சந்நியாசியோ, கிருஹஸ்தனோ, அறிவாளியோ இல்லையோ, பழைமைவாதியோ, எதிரானவனோ தங்கள் உயர்வினை பாதுகாத்துக் கொள்வதில் ஒவ்வொரு பார்பபானும் முயலுவதில் வியப்பில்லை”

    (நூல்:- தீண்டப்படாதவர் வரலாறு முன்னுரையிலிருந்து)


    • 1948 இலேயே சாதி ஒழியாமல் தீண்டாமை எப்படி ஒழியும் என்று கேட்டவர் பெரியார் அதோடு “இந்திய அரசியல் நிர்ணய சபையால் செய்யப்படும் விதிகளில் இனிமேல் , சுதந்திர, சமதர்ம இந்தியாவில் மக்கள் பிறவியில் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் அரிஜனன் என்பதான பிரிவுகள் இருக்கக் கூடாது இப்பிரிவுகள் கொண்ட ஆதாரங்கள் இருக்கக் கூடாது, இருக்கப்படவுமாட்டாது இல்லாமல் செய்யப்படும் என்று ஒரு வாக்கியம் இருக்க வேண்டும்” (விடுதலை 2.12.1948) என்று குரல் கொடுத்தவர் பெரியார். குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டத்தை 1957ல் கொளுத்தியும் காட்டினார்.

    இந்திய அரசியல் சட்டத்தை நான் எழுதியதாகச் சொல்லுகிறார்கள் இப்போது சொல்லுகிறேன். அந்தச் சட்டத்தை தீ வைத்துக் கொளுத்த நான் முதல் ஆளாக இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அம்பேத்கர் 3.9.1953 அன்று பாராளுமன்றத்திலேயே பேசியுள்ளார்.

    ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு என்றுமே தடையாய் இருப்பவர்கள் பார்ப்பனர்கள் என்பதை அம்பேத்கரும் பெரியாரும் தெளிவாக கூறியுள்ளார்கள். ஆனால் முனிமா குழுவினர் பார்ப்பனர்களை விட்டுவிட்டு ஆதரவாளர்களான பெரியார் தொண்டர்களையும் ஒத்த கருத்தியல் தத்துவமான பெரியாரையும் விமர்சிக்கின்றனர். ஆதில் ஏதாவது உண்மை இருக்கிறதா? திரு மா.வேலுசாமி அவர்கள் குறிப்பிடும் மதிப்பிற்குறிய அய்யா பத்மநாபன் அவர்களையே கேட்டு விடுவோம்.

    கேள்வி:- பெரியாரைக் குற்றம் சுமத்தி அவரைத் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக சித்தரிக்கும் முயற்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    மிசோரம் மாநில முன்னாள் ஆளுநர் திரு.ஆ.பத்மநாபன் அவர்களின்
    பதில்:-

    முட்டாள்தனம், அப்படிச் சித்தரிப்பது முட்டாள்தனம், பெரியார் இல்லை என்றால் இந்த அளவு கூட மனிதர்களாக நாம் இருந்திருக்க முடியாது.

    அவர்கள் யாராவது பெரியாரைப் பார்த்திருக்கிறார்களா? அவருடைய பேச்சைக் கேட்டிருப்பார்களா? அவர் ஒவ்வொரு கூட்டத்திலும் ஆதி திராவிடர்களை பற்றிப் பேசாமல் இருக்க மாட்டடர். நான் அண்மையில் அம்பேத்கர் அகாதமியில் பேசும் போது கூட இது பற்றிப் பேசினேன். பெரியார் தான் பார்பனரல்லாத மக்களை மானமுள்ள மனிதர்களாக ஆக்கினார். பெரியாரைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? பெரியார் கருத்துக்களை முழுமையாகப் படித்திருப்பார்களா?

    ----------------“உண்மை”, டிசம்பர் 1-15,2002.

    ReplyDelete
  39. திரு.பத்மநாபன் அய்யா அவர்களின் விளக்கத்திதற்கு எந்தப் பொழிப்புரையும் தேவையில்லை. ஆதேபோல் இது குறித்து ஆதிதமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் திரு.அதியமான் என்ன சொல்கிறார் என்பதையும் பார்ப்போம்.

    “இது ஒரு திரிபுவாதம் என்றே நான் கருதுகிறேன்;. அது சரியான கருத்தல்ல பெரியாரைப் பற்றி முழுமையாக புரிந்து கொண்டவர்கள் அப்படி நிச்சயமாக சொல்ல மாட்டார்கள். பெரியாரை எந்த வகையிலும் நாம் ஏற்றுக் கொள்கிறோம் இன்னும் சொல்லப்போனால் பெரியாரே கூட 1930, 33 கால கட்டங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு நான் வழிகாட்டலாகவும், உதவி புரிதலாகவும் இருக்க முடியுமேயொழிய உங்களுடைய போராட்டங்களை நீங்களோ, உங்கள் தலைவர்களோ முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார்கள். ஆகவே பெரியார் அவர்கள் மிகத் தெளிவாக தம்முடைய வரம்பை ஒரு காலகட்டத்திலே சொல்லிவிட்டார்கள்"
    (“இனி” இதழ்)

    பெரியாரைத் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக சித்தரிப்பது ஒரு திரிபுவாதம், முட்டாள்தனம் என்று சொல்லியுள்ளார்கள் தலைவர்கள்.

    பாதிப்புள்ளாகும் போது பெரியாரும், பெரியார் தொண்டர்களும், தமிழ்ஓவியா உட்பட அனைவரும் கொதித்தெழுந்து அப்பிரச்சனைகளை, அப்பாதிப்புகளை நீக்க பாடுபட்டு வருகிறார்கள் என்பதுதான் உண்மை நிலை. உதாரணமாக முதுகுளத்தூர் கலவரத்தின்போது பெரியார் யார் பக்கம் நின்றார் என்பதைப் பார்ப்போம்.

    1957ல் நடந்த தேர்தலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அணிக்கும், தோழர் இம்மானுவேல் அணிக்கும் பகை வலுவடைந்து செப்டம்பர் 11ம் தேதி இரவு 8.30 மணியளவில் இம்மானுவேல் வெட்டிக் கொல்லப்படுகிறhர். தேவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பெரியாரின் நிலைப்பாடு என்ன என்பதை “இம்மானுவேல் தேவேந்திரர் கதைப்பாடல்” எனும் நூலில் செ.சண்முகபாரதி அவர்கள் பதிவு செய்துள்ளார். ஆதன் விபரம் இதோ.
    “கலவரத்தை ஒடுக்குவதில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் தனது முழுக்கவனத்தையும் செலுத்தியது. காங்கிரசின் செயலுக்காகப் பெரியார் காமராஜரைப் பாராட்டினார். அது மட்டுமின்றி இக்கலவரத்தில் சமூக விரோதிகளைக் கடுமையாய் தண்டித்துச் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தபடாவிட்டால் அமமக்களின் சார்பில் போராட்டத்தில் குதிப்பேன் (விடுதலை) என்று அறிக்கையும் விட்டார்”.

    ReplyDelete
  40. பிராமணர்களிடமிருந்த அரசியல் அதிகாரத்தைப் பறித்து பிராமணரல்லாதாரிடம் கொடுத்ததைத் தவிர தமிழக அரசியலில் பெரியார் பெரியதாக சாதித்து விடவில்லை என்று எழுதும் வேலுச்சாமி, முனிமா குழுவினர் பெரியாரின் மேற்கண்ட செயல்களைப் பார்த்த பின்பாவது தங்களை திருத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

    தாழ்த்தப்பட்டவர்களை பெரியார் ஏமாற்றுபவராக இருந்தால் தேவர் கைது செய்யப்படக் காரணமாயிருப்பாரா? உயர்ந்த வகுப்பார் ஆதரவு பெற்றவர் பெரியார் என்று எழுதியுள்ளீர்களே அந்த உயர்ந்த வகுப்பார் பெரியாருக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

    “தாழ்த்தப்படடவர்களை இழிவாகக் கருதும் சூத்திரர்களாகிய கள்ளர் சமுதாயத்தினரைக் குறித்து பார்ப்பனர்கள் இழிவாக எழுதி வைத்திதருப்பதை வெள்ளைக்கார அறிஞர் எடகார்தர்ஸ்டன் என்பவர் குறிப்பிட்டுள்ளதை பெரியார் தனது இறப்புக்கு சில நாட்களுக்கு முன் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் (தி.க.பொதுச்செயலாளர் கி.வீரமணியும், வே.ஆனைமுத்துவும் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில்)வே. ஆனைமுத்துவைப் படிக்கச் செய்தார். கிடைத்த பலன் என்ன? மேடையை நோக்கி கற்கள் வீசப்பட்டன. தோழர்களும், பொது மக்களும் புடை சூழ்ந்ததால் கல்லடியிலிருந்து உயிர் பிழைத்தார் பெரியார்”.

    (விடுதலை 2.11.1973 நூல்:- எஸ்.வி.ராசதுரை எழுதிய பெரியார் ஆகஸ்ட் 15, பக்கம் 620-621)
    மா.வேலுச்சாமி மற்றும் முனிமா குழுவினர் பெரியாரைப் பற்றித் தவறாக விமர்சிப்பதைப் படிக்கும்போது டாக்டர் அம்பேத்கார் தனது இறுதி நாட்களில் நானக்சந்த் திரட்டு அவர்களிடம் கூறிய வாசகங்கள் தான் நினைவுக்கு வருகிறது. அந்த வாசகம் இதோ.

    “என் வாழ்நாளின் இறுதிவரை ஒடுக்கப்பட்ட எனது சகோதரர்களுக்காகவும், இந்நாட்டிற்காகவும் எனது பணியைத் தொடர்வேன். என் மக்கள் பயணிக்கும் இந்த ஊர்தியை மிகவும் சிரமப்பட்டே இப்போது இருக்கும் இடத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறேன். வழியில் வரும் தடைகளையும் மேடு பள்ளங்களையும், சிரமங்களையும் பொருட்படுத்தாமல் இந்த ஊர்தி முன்னேறிச் செல்லட்டும், மாண்புடனும் மரியாதையுடனும் என் மக்கள் வாழ நினைத்தால், இச்சமயத்தில் அவர்கள் கிளர்ந்தெழவேண்டும். என் மக்களும் என் இயக்கத்தினரும் அந்த ஊர்தியை இழுத்துச் செல்ல முடியாது போனால் அது இப்போது எங்கே நிற்கிறதோ, அங்கேயே விட்டு விட்டுச் செல்லட்டும். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் அந்த ஊர்தியை பின்னோக்கித் தள்ளிவிடவேண்டாம். இதுவே என் செய்தி”

    ----------------(எழுச்சி தலித் முரசு – பிப்ரவரி 2003)

    தாழ்த்தப்பட்டவர்களுக்கு நெருக்கமான தோழமையுடன் இருப்பவர்கள் பெரியார் தொண்டர்கள். ஆதவரான கருத்தியல் பெரியாரியல். அனைவருக்கும் பெரியாராக உழைத்தவரை, தவறாக, முட்டாள்தனமாக, திரிபுவாதம் செய்யும் முனிமா குழுவினருக்கு உண்மை வரலாற்றைச் சுட்டிக் காட்ட ஆதாரங்களுடன், சான்றுகளுடன் எங்கள் விமர்சனத்தை வைக்கிறோம். தனிப்பட்ட எந்த முனிமாவையும் விமர்சிப்பது எங்கள் நோக்கமல்ல. தேவையுமில்லை. முனிமா குழுவினரின் விமர்சனங்கள் தொடர்ந்து இதேபோல் இருக்குமானால் அம்பேத்கர் சொன்னது போல் அந்த ஊர்தியை பின்னோக்கித் தள்ளிவிடுவதில் பெரும்பங்கு அவர்களையே சாரும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்..


    -------------------நன்றி:-"களத்துமேடு" ஜூன் 15 - 2004 பக்கம்:-13-15

    ReplyDelete
  41. தாந்த்தப்பட்டவர்களையும் பிற்படுத்தப்பட்டவர்களையும் மோதவிட்டு ரத்தம் குடிக்க நினைக்கும் உங்களைப்போன்றவர்களின் எண்ணம் என்ரும் ஈடேராது. விடுதலை தலையங்கத்துடன் இந்த விவாதத்தை நிறைவு செய்கிறேன்.

    அண்ணல் அம்பேத்கர் 121ஆம் ஆண்டு பிறந்த நாள் சிந்தனை ....

    அண்ணல் அம்பேத்கர் வாழ்க!

    அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 121ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள் (1891).
    இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், சிறீநாராயண குரு, மகாத்மா ஜோதி பாபூலே - சாகுமகராஜ் ஆகிய தலைவர்கள் சமூக நீதி வரலாற்றின் பெருந்தூண்கள் ஆவார்கள்.

    இவர்களில் மெத்தப் படித்த பெருஞ்சிறப்பு அம்பேத்கர் அவர்களுக்கு உண்டு, ஆயினும் இந்த அய்ந்து தலைவர்களின் அடிநாதம் பார்ப்பன எதிர்ப்பில் கட்டப்பட்டது என்பதை மறந்து விடக் கூடாது. அதற்கு அடிப்படைக் காரணங்களும் உண்டு.

    ReplyDelete
  42. தந்தை பெரியார் அவர்களுக்கும், அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கும் இருந்த கருத்தொற்றுமை - ஒரு நாணயத்தின் இரு பக்கங்களையொத்ததே!

    அண்ணல் அம்பேத்கர்பற்றி தந்தை பெரியார் அவர்களின் கணிப்பைத் தெரிந்துகொண்டால் இதன் முழு உண்மை புலப்படும்.

    உண்மையிலேயே இந்தியப் பொது வாழ்வில் முயற்சி செய்து வெற்றி பெற்ற ஒரேதலைவர் அம்பேத்கர்.

    மதம் ஒழிந்தால் ஒழிய சமுதாயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாதெனச் சொன்னவர் டாக்டர் அம்பேத்கர்.

    சமுதாயம் முன்னேற வேண்டுமானால் இந்து மதமே ஒழிய வேண்டும் என்றவர் டாக்டர் அம்பேத்கர்.

    பொது வாழ்க்கையில் எவரையும்விட தைரியசாலி டாக்டர் அம்பேத்கர்.

    எவரும் எதிர்பாராத முறையில் - அளவில் காந்தியை எதிர்த்தவர் டாக்டர் அம்பேத்கர்.

    ராமாயணம், மகாபாரதத்தைக் கொளுத்தச் சொன்னவர் டாக்டர் அம்பேத்கர்.

    காந்தியை மகாத்மா என்று அழைக்காதவர் டாக்டர் அம்பேத்கர்.

    கீதை முட்டாளின் உளறல் என்றவர் டாக்டர் அம்பேத்கர் (விடுதலை 14.4.1972) என்று தந்தை பெரியார் கூறியுள்ளார்.

    ReplyDelete
  43. அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் புகழும் வார்த்தைகளாக இவற்றைக் கொள்ளாமல் அந்தத் தலைவரை அளவிட்டுக் கணிக்கும் கணிதம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.


    இந்து மதத்திற்கு முழுக்குப் போட்டு பல லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களுடன் புத்தமார்க்கம் தழுவியதும், லண்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் காந்தியார் அவர்களை எதிர்கொண்டு, கருத்துகளை எடுத்து வைத்ததும் சாதாரணமானவையல்ல.

    இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் போற்றப்பட்டாலும், அந்தச் சட்டத்தின்மீது திருப்தி கொண்டவரல்லர் அவர். அதனைக் கொளுத்துவதில் முதல் ஆளாக நானே இருப்பேன் என்று மாநிலங்களவையிலேயே வெளிப்படையாக முழங்கிய தலைவர் அவர் (3.9.1953).

    அம்பேத்கர் அவர்கள் 1953 செப்டம்பர் 3இல் கூறியதை 1957 நவம்பர் 26-இல் செய்து காட்டியவர் தந்தை பெரியார்.

    தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும்; அதே நேரத்தில் வருணாசிரமம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற காந்தியாரின் கருத்தை எதிர்த்த தீரர்கள் இந்த இரு பெரும் தலைவர்களே.


    தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமையை இந்த இரு தலைவர்களும் வலியுறுத்தினார்கள்.

    வேறு எந்தக் காலத்தையும்விட இந்தக் காலத்திற்குத் தேவையான வழிகாட்டும் கருத்தாகும் இது. இந்திய வெள்ளையர்களான ஆரியப் பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட் டோரையும் பிற்படுத்தப்பட்டோரையும் மோத விட்டுப் பிரித்தாளுவதில் மிகவும் கெட்டிக்காரர்கள்.

    இன்றைக்கும் இந்த இரு பிரிவினருக்கும் பொதுவான இடஒதுக்கீட்டுப் பிரச்சினைகள் உண்டு.

    தாழ்த்தப்பட்டோருக்கு 15 விழுக்காடு, மலை வாழ் மக்களுக்கு 7.5 விழுக்காடு இடங்கள் மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் துறைகளில் சட்ட ரீதியாக உண்டு என்றாலும் நடைமுறையில் இந்த விழுக்காட்டில் இடங்கள் கிடைக்கின்றனவா என்ற கேள்விக்கு, விடை கிடைக்க வில்லை என்பதுதான் அழுத்தமான பதிலாகும்.

    மத்திய அரசுத் துறைகளில் உள்ள ஏ,பி,சி,டி என்ற பிரிவு உத்தியோகங்களை எடுத்துக் கொண்டால் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிடைக்கக் கூடிய இடங்கள் வெறும் 16.8 விழுக்காடுதான். பிற்படுத்தப்பட்டவர்களுக்கோ வெறும் 5.4 விழுக்காடுதான். பி பிரிவில் முறையே 19.7; 4.2 விழுக்காடுகள்தான்.

    அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற உயர் மதிப்புக் கல்வி என்பது இவர்களுக்கு எட்டாத கல்வியாகும்.

    நீதித்துறையிலோ பட்டை நாமம் ஆகும். இந்தக் கொடுமைகள் நீக்கப்பட வேண்டுமானால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களின் ஒற்றுமை மிகவும் தேவையாகும்.

    இந்த மூன்று பிரிவினரிடையே ஒருவர் விகிதாசாரத்தை இன்னொருவர் எடுத்துக் கொள்வதில்லை; இந்த நிலையில் இவர்களின் ஒற்றுமைக்குத் தடை விதிப்போர் யார்? போதிய புரிதல் இல்லாமையே முக்கிய காரணம் என்றாலும் சிலர் தலைவர்களாக நீடிப்பதற்கு இந்தப் பிரித்தாளும் தந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

    பறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரன் பட்டம் ஒழியாது என்றார் தந்தை பெரியார். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இரு கரங்களாக இணைந்து செயல்பட வேண்டும் என்றார் அண்ணல் அம்பேத்கர்.

    அண்ணலின் 121ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று இந்த ஒற்றுமைக்கான உறுதிமொழியை எடுப்போமாக! அதை எந்த நாளும் காப்போமாக!

    வாழ்க பெரியார்!
    வாழ்க அம்பேத்கர்!!

    -------------"விடுதலை” தலையங்கம் 14-4-2011

    ReplyDelete
  44. பாவம், தமிழ் ஓவியா கஷ்டப்பட்டு சான்றுகளைத் தேடி இருக்கிறீர்கள். நானும் முயன்று சங்கராச்சாரியாருக்கு ஜாதி வெறி கிடையாது, மனு தர்மம் பிற்காலத்தில் ஏற்பட்ட சீரழிவுகளுக்குப் பொறுப்பாகாது என்பதற்கு உங்களை விட அதிகமான சான்றுகளைத் தர முடியும்.
    பெரியாரின் பெருமையே அவர் கொஞ்சம் மரை கழன்ற மாதிரி உன்மத்தமாகப் பேசுவதுதான். அந்தந்த நேரத்தில் எதிரில் இருக்கிறவர்கள் உடம்பில் சூடேற்றுகிற மாதிரிப் பேசுவதுதான் அவரது பாணி. நிரந்தரமாகக் கொள்கை என்று எதுவும் கிடையாது.
    வெள்ளையன் ஆட்சி இருந்தால் தான் சூத்திரத்தனம் போகும் என்று சொன்னதும் சுதந்திர தினத்தைக் கறுப்பு தினம் என்றதும் ஊரறிந்த உண்மைகள். ஒரு இடத்தில் அப்படிப் பேசியவர் இன்னொரு இடத்தில் நீங்கள் சொன்ன மாதிரி வெள்ளை ஆரியன், மஞ்சள் ஆரியன் என்றும் கூறியிருக்கிறார் போலும். இன்னும் வேறு இடத்திலும் இன்னும் 400 வகையாகவும் பேசக் கூடியவர்தான்.அதனால் அவற்றில் உங்களுக்கு வசதியானதை எடுத்துக் கொண்டு இன்னும் 100 மேற்கோள்களைக் காட்டினாலும் அவரது இமேஜ் மாறிவிடப் போவதில்லை.

    ReplyDelete
  45. பெரியார் பற்றி நான் முன் வைக்கிற சில கேள்விகள்: (இது வரை எந்தப் பெரியாரிஸ்டும் இவற்றுக்கு மழுப்பாமல் பதில் சொன்னதாகத் தெரியவில்லை.)
    1)தலித்துகளுக்கோ பிற்பட்ட மக்களுக்கோ திராவிடர்களுக்கோ அவர்கள் வாழ்வில் ஆக்க பூர்வமாக மாற்றத்தை ஏற்படுத்த அவர் என்ன செய்திருக்கிறார்?
    2) பூமாலை போட்டுக் கற்பூரம் கொளுத்தி விட்டால் கடவுளின் அருளைப் பெற்று விடலாம் என்று நம்புவது மூட நம்பிக்கை என்றால் அதே படத்துக்கு செருப்பு மாலை போட்டு படத்தையே கொளுத்திவிட்டால் அந்த மூட நம்பிக்கைகளை ஒழித்து விடலாம் என்பது இன்னொரு மூட நம்பிக்கை தானே? இல்லாத கடவுளை பூசிப்பது வீண் வேலை என்றால் தூற்றுவது அதை விட வீண் அல்லவா? அந்த நேரத்தில் நான்கு தலித் சிறுவர்களுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்திருக்கலாமே என்று அவருக்கு எப்போதாவது தோன்றியிருப்பதாக உங்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றனவா?
    2)பார்ப்பனர்களை ஆரியர்கள் என்று வசை பாடிப் பிழைப்பதற்கு உபயோகப் படுத்திய நேரத்தையும் சக்தியையும் ஒடுக்கப் பட்டவர்களது நல் வாழ்வுக்காக உபயோகப் படுத்தலாம் என்று அவரது பகுத்தறிவுக்கு ஏன் எட்டவில்லை?
    3)அவர் ஒரு அரசியல்வாதியாகத் தம்மை அடையாளம் காட்டிக் கொண்டிருந்தால் மேற்கண்ட கேள்விகளைக் கேட்டே இருக்க மாட்டேன். பெரிய்ய்ய்ய சமுதாய சீர்திருத்தவாதி என்று ஆராதிக்கப் படுவதால்தான் கேட்கிறேன். தமது சிந்தனை, பேச்சு, செயல்கள் தம் பின்னால் வாலாட்டி வரும் கோமாளிக்கூட்டத்தையும் கெடுத்து விடும் என்ற அடிப்படைப் பொறுப்புணர்வு கூட இல்லாத ஒருவர் என்ன சீர்திருத்த வாதி?
    4)எதிரணியினரை விமர்சிக்கும் போது மரியாதைப் பன்மை தந்து அவர், இவர் என்று கூடப் பேசத் தெரியாத மனிதருக்கு சுயமரியாதையைப் பற்றிப் பேச என்ன அருகதை இருந்தது? பிறரை மதிக்கத் தெரியாத மனிதரால் தாழ்த்தப்பட்ட/ பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு எவ்வாறு சுயமரியாதையைக் கற்றுத்தர முடியும்?
    5)அவருடைய வார்த்தைகளில் எள்ளவாவது நேர்மை இருந்தால் அவர் இறந்த பின் அவரது கொள்கைகள் சில வருடங்களுக்குக் கூட தாக்குபிடிக்க முடியாமல் போனது ஏன்?
    6)அவர் கற்றுத் தந்ததற்குப் பேர் சுயமரியாதை அல்ல, வெற்றுத் திமிர்த்தனம். சுய மரியாதை என்பது தனது கௌரவத்தையும் காப்பாற்றிக் கொண்டு மற்றவர்களின் கௌரவத்தையும் மதிப்பது. இன்றைக்குத் தமிழ் சமூகத்தில் உள்ள எல்லா சீர்கேடுகளுக்கும் காரணம் உண்மையான சுய மரியாதை இல்லாமல் போனது தான். பெரியார் உண்மையான சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தால் அவரது சிஷ்யர்களுக்கு லஞ்சம், திறமையின்மை, வேலையில் மெத்தனம் இவையெல்லாம் தங்களிடையே மலிந்திருப்பதற்காகக் கொஞ்சமாவது வெட்கம் வராதது என்?
    7) சமூக சீர்திருத்தம் என்பது வாய்ப்பந்தல்/ மேற்கோள்களால் தோரணம் கட்டி நிருப்பிக்கப் பட வேண்டிய ஒன்றல்ல. RESULT ORIENTED ஆக மதிப்பிடப் பட வேண்டிய விஷயம். அவர் தம்மைப் பற்றித் தாமே உளறிக் கொண்ட சுய விமர்சனங்களைத் தவிர வேறு ஏதாவது SOLID ஆன சான்றுகள் உங்களிடம் உண்டா? (ஆராசாவின் பேட்டிகளில் அவரைப் பற்றி அவரே நியாயப்படுத்திக் கொண்டவற்றைப் பார்த்தால் ஸ்பெக்ட்ரம் ஊழலே நடக்கவில்லை என்று கூட வாதிட முடியும்.)பெரியாரால் சீர்(?!)திருத்தப் படாத மற்ற மாநிலங்களை விடத் தமிழ்நாட்டில் என்ன பெரிய சாதனை (அ) சமூக மாற்றம் நடந்திருக்கிறது என்று காட்ட முடியுமா? (அவரால் காட்ட முடிந்த ஒரே RESULT ஒருவரை ஒருவர் ஜாதிப் பெயர் சொல்லி வைது கொள்ளக் கற்றுக் கொடுத்திருப்பது தான்.)
    8) மக்கள் மனதிலிருந்து ஜாதி உணர்ச்சியை அடியோடு மறக்க வைக்க ஒரே ஒரு அடியாவது எடுத்து வைத்திருந்தால் அவர் சீர்திருத்தவாதி. மாறாக ஒரு குறிப்பிட்ட ஜாதியின் மீது துவேஷத்தை வளர்த்து எல்லாருக்குமே ஜாதி உணர்ச்சியை இன்னும் ஆழமாக்கிய அவர் என்ன வெங்காய வாதி? (அடக்கடவுளே! சுயமரியாதைத் தமிழ் எனக்கும் தொற்றிக் கொண்டுவிட்டதே) இதன் பின்னணியில் உள்ள பகுத்தறிவு லாஜிக்கை விளக்க முடியுமா?
    பி.கு: சுய மரியாதை இயக்கமே ஆரிய திராவிட மாயையை உருவாக்கி ஒற்றுமையாக ஓரினமாக இருந்தவர்களைப் பிரிப்பதற்காக பிரிட்டிஷ் ஆட்சி உருவாக்கிய சூழ்ச்சி. அவர்களிடம் சுயத்தை அடகு வைத்து அவர்கள் போட்ட எச்சில் எலும்புத் துண்டில் வளர்ந்த ஜஸ்டிஸ் இயக்கம் தான் அதன் தாய் என்பது நீங்கள் எத்தனை மேற்கொள்கள் காட்டினாலும் மாற்ற முடியாத சரித்திர உண்மை.

    ReplyDelete
  46. poornam விழி இல்லாதவர்கள் யானைத் தடவிப் பார்த்தது போல் உள்ளது உங்கள் வாதம்.

    ReplyDelete
  47. அன்பு பூர்ணம்

    http://articles.timesofindia.indiatimes.com/2012-05-06/india/31597294_1_upper-castes-scs-durables
    Three states however buck this trend; across caste groupings in Punjab, Kerala and Tamil Nadu, the rate of ownership of basic consumer durables is high. In fact, the asset ownership rate for scheduled castes in these three states is better than that of OBCs and upper castes in all other states.
    Tamil Nadu and Punjab are the only states where the proportion of SCs who do not own basic assets is around 10% or lower, lowest of all in Tamil Nadu. Asset ownership among SCs in these three states is higher than that among “others” in all other states.
    the key determinant of each of these states’ human development situation is not its caste composition, but its politics and governance, Mehrotra says.
    அதாகப்பட்டது தமிழகத்தில்/கேரளத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்டவர்களின் நிலை ஹிந்டுத்வர்கள் வலுவான நிலையில் உள்ள மாநிலங்களில் உள்ள முற்பட்ட பிரிவினரை விட மேலாம்.அதற்க்கு இங்கு நடந்த நல்லாட்சிகள் தான் காரணமாம்

    ReplyDelete
  48. காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் ஹிந்துத்வா சங்க பரிவாரங்கள் பஹுஜன் சமாஜ்,லோஹயா கட்சிகள் என்று
    இந்தியாவில் பல்வேறு இயக்கங்கள் உண்டு.இவற்றில் சாதியின் தாக்கம் இல்லாமல் தொடர்ச்சியாக திராவிட இயக்கத்தை போல எண்ணிகையில் குறைந்த,எந்தவித சக்தியும் இல்லாத சாதிகளின் தலைமை எவற்றிற்கு இருந்திருக்கிறது
    பெரியாரையோ,கலைஞரையோ ,எம் ஜி ஆர் அவர்களையோ முரட்டுத்தனமாக ஆதரிப்பவன் சாதியை பார்த்தா ஆதரிக்கிறான்
    எடியுரப்பாவோ ,அச்சுதானந்தனோ,மாயாவதி அவர்களோ,முலயமோ அவர்களின் பெரும்பான்மையான முரட்டு ஆதரவாளர்கள் அவர்களின் சாதிகளை சார்ந்தவர்கள் .அதே போல் திராவிட இயக்கத்தின் தலைமையை பற்றி கூற முடியுமா
    சாதிகளை கடந்த தலைமையை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே சாதித்து காட்டிய இயக்கம் என்று கூறுவதில் தவறு உள்ளதா

    ReplyDelete
  49. கலைஞரின் தனிப்பட்ட குடும்பத்தை நீக்கி பார்த்தால் அவர் சமுதாயம் நரி குரவருக்கு கொஞ்சம் மேல் வர கூடும்.
    அவரை எதுவோ பெரிய ஆதிக்க சாதி போல சித்தரிக்கும் முயற்சிகள் சரியா

    கலைஞரின் சாதியை தாழ்த்தப்பட்டோர் பிரிவில் இருந்திருந்தால்,அல்லது சேர்க்கப்பட்டால் அது பெரிய அநியாயம் என்றா பார்க்கப்படும்
    சில மாநிலங்களில் (மகாராஷ்டிரம்,கர்நாடகம்) பொட்டு கட்டி விடும் தேவதாசி வழக்கம் உள்ள சில சாதிகள் பட்டியல் வகுப்பினரின் கீழ் வரும்

    தமிழக அரசு வெளியிடும் சாதி பட்டியலில் ஒரே சாதி வேறு வேறு மாவட்டங்களில் வேறு வேறு பிரிவுகளின் கீழ் வரும்.அரசு கமிஷன் மூலம் சில அளவுகோல்களை வைத்து பட்டியல்களை உருவாக்கும்.அதை வைத்து கொண்டு இன்னார் மட்டும் தான் ஒதுக்கப்பட்டனர்,மற்றவர் எல்லாம் ராஜவாழ்க்கை வாழ்ந்தனர் என்று பேசுவது சரியா
    முக்குலத்தோர்,நாடார்,வன்னியர்,கொங்கு கவுண்டர்,முத்தரையர் போன்ற சாதிகளில் இருந்து கூட யாரும் திராவிட இயக்கங்களின் தலைமைக்கு வரவில்லையே
    அவர்களும் ஏமாற்றப்பட்டோம் என்று திட்டுகிறார்கள்.பின் இங்கு எந்த சாதி தான் பயன் அடைந்தது

    ReplyDelete
  50. http://www.namboothiri.com/articles/bhrashtu.htm

    அடுத்து எம் ஜி ஆரை பற்றி பார்ப்போம்
    அவர் தந்தை சாதியை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர்.ஊரை விட்டும் தள்ளி வைக்க்கப்பட்டவர்
    அதனால் கீழ் சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டு இலங்கைக்கு சென்றவர்.
    அவருக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம்.
    திராவிட இயக்கத்தின் கிளைகளின் தலைமையும் சாதியை கடந்தவர்கள் இடம் தான் சென்றது.
    யாரும் குலம் கோத்திரம் பூர்வீகம் பார்த்து தலைவர்களின் பின் செல்லவில்லை
    மற்ற மாநிலங்களில் சாதிப்பற்றாளர்கள் எப்படி ஆட்சியை பிடித்து எப்படி தங்கள் சாதிகளுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்த்தால் திராவிட இயக்கத்தின் தாக்கம் புரியும்

    One of the victims is said to have been Melakkath Gopala Menon, a judicial officer in Thrissur, who had married Meenakshi Amma of Vattaparambil Nair family of Irinjalakuda. He left his family, went to Palakkad where he married a lower caste woman and together left for Sri Lanka. When he died after two sons were born, his widow returned to Tamil Nadu with her children. One of the boys later became a famous film actor, a political leader and top administrator.

    http://www.winentrance.com/general_knowledge/mg-ramachandran.html

    சாதியை விட்டு ஒதுக்கபடுபவர்கள் சண்டாளர்கள் என்று அழைக்கப்பட்டு அந்த சாதி ஆவர்
    அதனால் எம் ஜி ஆரின் தந்தை ஒடுக்கப்பட்டவர் ஆகிறார்
    அவரின் சாதி ,முதல் மனைவியோடு கூட தொடர்பு அறுந்து விடும்.இறந்து விட்டதாக எண்ணி சடங்குகளும் நடத்தபடும்
    அவர் அதனால் மருதூர் சத்தியபாமா என்ற அன்றைய தீண்டத்தகாத சாதியான(இன்றைக்கு ஆதிக்க சாதி என்று கட்டம் கட்டபடுவர் நவீன போராளிகளால்)ஈழவ சமுதாயத்தை சார்ந்த பெண்மணியை மணந்து கொண்டு இலங்கைக்கு சென்றார்
    கணவனை இழந்த சத்தியபாமா அவர்களால் வளர்க்கப்பட்டதால் அவர் ஈழவ சமுதாய community certificate வாங்கி கொள்ளவும் எல்லா உரிமையும் உண்டு
    கடந்த வருடம் உச்ச நீதிமன்றமும் தாயின் சாதிய சூழ்நிலையில் வளர்க்கப்பட்டால் தாயின் சாதியை ஏற்று கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிட தக்கது
    தந்தை வழியில் சண்டாளர் என்பதால் தாழ்த்தப்பட்ட சாதிக்கும் உரியவராகிறார் .தாய் வழியில் அன்றைய தீண்டத்தகாத சாதியும் இன்று பிறபடுத்தப்பட்ட வகுப்பின் கீழ் வரும் ஈழவ சமுதாயத்தை சார்ந்தவராக இருக்கும் உரிமையும் எம் ஜி ஆர் அவர்களுக்கு உண்டு

    ReplyDelete
  51. கருணாநிதியும்,அண்ணாதுரையும் என்னவோ பள்ளர்,மீனவ மக்களை விட மிக உயரத்தில் உள்ள உயர்ந்த சாதி போல பேசுவது சரியா
    திராவிட இயக்கத்தில் இருந்து விலக்கப்பட்டவர்களால்,இன்று கூட சில தமிழ் தேசியர்களால் பெரிய மேளம்,சின்ன மேளம் என்று பொட்டு கட்டி விடும் சமுதாயத்தை/குடும்பங்களை சார்ந்தவர்கள் என்பதால் இழிவு படுத்தி காட்டப்படும் அவர்களை தலைவராக
    கொண்டது ஒன்றும் குறைந்த சாதனையல்ல.அவரை எதிர்த்து போட்டியிட்டு செயித்த நடேச முதலியார் அன்னாடுரையை பற்றி என்ன பிரச்சாரம் செய்தார் என்பதை படித்து இருக்கிறீர்களா
    சில மாதங்கள் முன்பு சுப்ரமணிய சாமி twitter இல் அண்ணாதுரை பாதி ஐயர் என்று கூறியுள்ளார்.இப்போதும் சிலர் மேளம் என்று கிண்டலாக கலைஞராக எழுதுவது தொடர்ந்து கொண்டு தான் உள்ளது
    மீனவ மக்களைவிட ஆண்ட சாதி என்று குதிக்கும் பள்ளர்களை விட கலைஞரும்,அண்ணாதுரையும் உயர்ந்த சாதியல்ல
    எண்ணிகையில் மிக குறைந்த சாதி கலைஞரின் சாதி பார்க்கப்படும் பார்வையிலும் தாழ்ந்த சாதி தான்

    ReplyDelete
  52. அண்ணாத்துரையின் தமக்கையார் மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் (இன்னும் இருக்கின்றார்) பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும் இன்ப விளையாட்டு முடியும்வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும் அண்ணாத்துரையின் வேலை. துண்டு இருந்தால் சட்டை வேண்டாம், சட்டை இருந்தால் துண்டு வேண்டாம் என்கிறாள் என் தொத்தா – அண்ணாத்துரையின் அப்போதைய புலம்பல் இது!

    அன்னையோ சென்னையில் ஐயரோடு! காஞ்சிப் பூஞ்சோலைக்குத் தண்ணீர் இழுப்பும் பறிப்பும்.

    பண்ணியம் ஏதேனும் உண்ண ஆசைப்பட்டால் அதற்காக அண்ணாத்துரைக்கு வருமானம் பொன்னப்பா தரும் சிறுதானம்.

    http://www.tamilhindu.com/2011/02/vulgar-castiest-writings-of-bharatidasan/

    குடும்ப விளக்கு எழுதிய பாரதிதாசன் தன் குயில் பத்திரிக்கையில் அண்ணாதுரையை பற்றி எழுதியது

    மக்களும் இயக்கமும்
    தலைவராகவும்,முதல்வராகவும் ஆக்கியது பெரிய மேளம் அண்ணாதுரையை
    அவர் சாதியை,குடும்பத்தை,பின்புலத்தை பார்த்தா அவர தலைவர் ஆனா


    பெரியார்,அண்ணா ,கலைஞர்,எம் ஜி ஆர் ,ஜெயலலிதா போன்றோர் தலைவராக அவர்களின் சாதிகள் எந்த அளவில் உதவின என்று கூற முடியுமா

    வேறு எந்த இயக்கத்தில் எண்ணிக்கையில்,சக்தியில் மிக குறைந்த நிலையில் உள்ள சாதியை சேர்ந்தவர்களின் பின் ஆட்சி,கட்சி சென்றுள்ளது.

    மாயாவதி அவர்கள் கூட தனக்கு அடுத்த தலைவராக தான் சார்ந்த சாமர் இனத்தை சார்ந்த ஒருவர் தான் வருவார் என்று கூறும் சூழல் தானே உள்ளது.பெரும்பான்மையாக உள்ள சாமர்களை தவிர்த்து பட்டியல் வகுப்பின் கீழ் எனபதிற்க்கும் மேற்பட்ட பிற சாதிகளும் உத்தர்ப்ரதேசதில் உண்டு.எண்ணிக்கையை வைத்து தானே அவர் அந்த பேச்சு பேச வேண்டி உள்ளது

    http://www.hindu.com/2006/08/29/stories/2006082915880400.htm

    ReplyDelete
  53. அன்பு போர்ணம்
    மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு நோக்கும் போது முழுவதும் ஒழியாவிட்டாலும் சாதி சார்ந்த வன்முறைகள் தமிழகத்தில் குறைவு.அதற்க்கு காரணம் பெரியார்

    திருப்பி அடிக்கும் சக்தியும்,எதிர்கொள்ளும் துணிவும் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகம்
    இட ஒதுக்கீட்டு இடங்களே நிரப்பபடாத நிலை பல மாநிலங்களில் உண்டு. இங்கு மற்ற பிரிவினரோடு இருக்கும் வித்தியாசங்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது


    ஒதுக்கீட்டு பிரிவினர் ஒட்டுமொத்தமாக முன்னேறி வருவதில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னிலையில் உள்ளது என்பதை உங்களால் மறுக்க முடியுமா
    உத்தர் பிரதேசத்தில் ,குஜராத்தில் தமிழகத்தை விட அதிக அளவில் தலித்கள் மருத்துவராக,பொறியாளராக,வங்கி அதிகாரிகளாக,நீதிபதிகளாக,ஆட்சி பணி அதிகாரிகளாக வருகிறார்கள் என்று கூற முடியுமா.இதையும் கொஞ்சம் பாருங்கள்
    http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3384834.ece
    On the other hand, when it came to the Backward Classes – other than Muslims for whom 49 posts were reserved, a total of 3,096 candidates (46.2 per cent), including 2,035 male and 1,061 female, participated in the examinations and 220 of them, equal to 47.83 per cent within the category, cleared all the four papers.

    The next big success was achieved by Scheduled Caste candidates. About 1,341 (20.01 per cent) of them, including 977 male and 364 female, wrote the examinations and 111 got selected for the viva voce taking the percentage of successful candidates in their category to 24.13 per cent.

    எண்ணிக்கை அதிகமாக யார் இருந்தாலும்/அதிகாரத்திலும் பங்கோடு இருக்கும் போது அவர்கள் ஆதிக்கம் செய்வது தான் எங்கும் நடக்கிறது.அதை தடுப்பது தான் இட ஒதுக்கீடு
    உத்தர் ப்ரதேச மாநிலத்தில் பிராமணர்கள் நம்ம ஊரில் உள்ள முக்குலத்தோர்,வன்னியர்,நாடார் போல குறிபிடத்தக்க சதவீதத்தில் உள்ளனர்.அங்க சும்மா அடிச்சு விளையாடுவாங்க
    முக்கால்வாசி தாதா,கொலை கொள்ளை எல்லாவற்றிலும் திவாரி,ஷர்மா,திரிபாதி என்று தான் பெயர்கள் இருக்கும்
    செல்வி மாயாவதியின் ஆட்சியில் ஒரு குப்தா என்ற பொறியியல் இன்ஜிநீரை அடித்து கொன்ற எம் எல் ஏ ஒரு திவாரி

    http://articles.economictimes.indiatimes.com/2008-12-24/news/28465674_1_pwd-engineer-m-k-gupta-bsp-mla-shekhar-tiwari

    இப்ப அகிலாஷ் யாதவ் ஆட்சிக்கு வந்தவுடன் கூண்டாஇசம் ,ஆட்டோ டிரைவர் அடித்து கொலை என்று செய்தி .பார்த்தல் ஒரு திவாரி யாதவ் என்பரை அடித்து கொலை செய்கிறார்

    http://www.dnaindia.com/india/report_sp-worker-beats-auto-driver-to-death-in-kanpur_1665118

    இடைநிலை மற்றும் மற்ற உயர்சாதியினரையே இந்த அடி அடிகிறார்கள் என்றால் அவர்களுக்கு கீழ் உள்ளவர்களின் நிலையை எண்ணி பாருங்கள்.
    பார்சிகள் ஒன்றும் செய்வதில்லை மற்ற சிறுபான்மையினரான இஸ்லாமியர்களை போல என்றால் காரணம் எண்ணிக்கை. அவர்களின் பாதி எண்ணிகையில் பார்சிகள் இருந்தால் அவர்களும் புகுந்து விளையாடுவார்கள்
    http://zeenews.india.com/news/uttar-pradesh/amarmani-tripathi-out-of-jail-for-2-months_729950.html

    http://news.worldsnap.com/states/bihar/behind-bars-but-jd-u-legislator-munna-shukla-still-enjoys-minister-status-88475.html
    வேறு மாநிலத்தில் மும்பையில் வசித்தாலும் தன் தங்கை கேரளாவை சேர்ந்த கீழ்சாதியை சார்ந்தவனை மணந்து கொண்டதால் அவர்கள் குடும்பத்தையே அழித்த திவாரி சகோதரர்களின் வழக்கில் நீதிபதியும் அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது என்று தீர்ப்பு தந்ததும் இங்கு உண்டு
    http://www.indlaw.com/guest/DisplayNews.aspx?8B2609C9-2E84-46DB-92F8-F2FDB42A0616

    ReplyDelete
  54. 1)நீங்களும் புள்ளி விபரங்களைத்தான் காட்டுகிறீர்கள். தமிழ்நாட்டில் 40, மற்ற மாநிலங்களில் இருபதே கால், பத்தே முக்கால் என்று வெட்டிக் கணக்குகள். வெறும் எண்கள். கண்ணுக்கு நேரே பார்க்கும் ரிஸல்ட் தவிர எதையும் நான் நம்புவதில்லை.



    சேரிகள் ஒழியாத வரை தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறியதாக ஒத்துக் கொள்ள முடியாது. கிராமங்களை விடுங்கள், சென்னையை ஒட்டிய புற நகர்களில் கூட சேரிகளின் கண்ணீர் நிலையைப் பார்த்தால் திராவிட இயக்கங்கள் எல்லாருக்கும் பெப்பே காட்டியிருப்பததை அறியலாம்.அடிப்படை சுகாதார வசதிகள் கூட இன்றி மிருகங்களோடு மிருகங்களாக தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகள் வசித்து வருவதை எங்கள் குடியிருப்புப் பகுதிக்கருகே இருக்கும் சேரியில் என் கண்ணால் கண்டிருக்கிறேன். நான் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே ஆதிதிராவிட ஹாஸ்டல்களின் நிலையைப் பற்றி அங்கு தங்கிப் பயின்ற மாணவர்கள் மூலம் நன்றாகவே அறிந்திருக்கிறேன். கேட்டால் மற்ற மாநிலங்களை விட நான்கள் 28.12765% அதிகம் ஒதுக்குகிறோம். செலவழிக்கிறோம், காலியிடங்களை நிரப்பினோம், கிழித்தோம் என்று புள்ளி விபரங்கள்...... Bla, blaa, blaaa என் நினைவு தெரிந்த நாளிலிருந்து அவர்களது நிலையில் எந்த மாற்றமும் இல்லை, எந்த நலத்திட்டங்களும் சேரிகளைச் சென்று அடையவில்லை என்பதே உண்மை. ஒதுக்கப்பட்ட பணங்களெல்லாம் பகுத்தறிவு திராவிடர்களின் கறுப்பு (வெள்ளை ஆரியர்களின் நிறம் என்பதால் அவர்களுக்குப் பிடிக்காது அல்லவா?)அக்கவுண்டுகளில் இருக்கின்றன என்பது ஊரறிந்த உண்மை.



    2) அடித்தால் திருப்ப அடிக்கும் தைரியத்தை உருவாக்குவது தான் பெரியாரி ன் சாதனையா ? நீங்களே ஒப்புக் கொண்டுவிட்டீர்கள் . எனது குற்றச்சாட்டே அதுதான் . அடித்தவன் மனதை மாற்ற முயல்பவன் தான் சீர்திருத்தவாதி. அடிபட்டவனை உசுப்பி விட்டு விட்டு சண்டையில் குளிர் காய்வது அரசியல்வாதியின் வேலை. ஒரு சீர்திருத்தவாதி அப்படிச் செய்தால் என்ன வெங்காயவாதி என்பதுதான் என் கேள்வி. என் கேள்வியில் ஆக்கபூர்வமாக என்ற சொல்லுக்குத்தான் அழுத்தம் என்று புரிந்து கொள்ளவும்.



    3)தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் மீதான வெறுப்பை மாற்றி சமூகம் அவர்களை அரவணைப்புடன் ஏற்றுக் கொள்வதற்குத் தேவையான மனமார்ந்த சமூக மாற்றம் நிகழ அன்பு வழிதான் உதவும் என்று புரிந்து கொண்டிருந்தால் அது உண்மையான பகுத்தறிவு. அன்பு வழி மெதுவானதுதான். அதில் முழு வெற்றி கண்டிருக்கக் கூட வேண்டாம். அந்தப் பாதையில் சில அடிகளாவது நேர்மையாக எடுத்து வைக்கப்பட்டிருந்தால் கூட அது நீண்ட காலத்தில் நல்ல பலன்களைத் தந்திருக்கும்.



    அதை விடுத்து மேல் சாதிக்கார்கள் மீது வசை பாடிப் பாடியே அவர்கள் மனதில் சீர்திருத்தக் கொள்கைகள் மீது ஒட்டுமொத்தமாக அவநம்பிக்கை உண்டாக்கியதும் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வெறுப்பை ஆழமாக்கியதும் தான் அவரது சாதனைகள். இது விவேகமற்ற செயல் என்று அவரது / அவருடைய சிஷ்யர்களது பகுத்தறிவுக்கு எட்டவில்லையா? 1000 கணக்கான வருஷங்களாக ஊறிப்போன ஜாதி உணர்ச்சியை அழிப்பதற்கு பதில் 100 வருடங்களில் இன்னும் ஊதி விட்டுப் பெரிதாக்கியது திராவிட இயக்கங்கள்தான் என்பதே எனது குற்றச்சாட்டு.


    ReplyDelete
  55. தமிழ் ஓவியா,

    எனது கேள்வி களுக்கு பதில் அளிக்கவும்.

    ராமசாமி நாயக்கர் இந்து மதத்தை மட்டும் எதிர்த்த காரணம் என்ன ?
    கடவுள் நம்பிக்கையை எதிர் கின்றவர் என்றால் எல்லா மதத்தையும்
    எதிர்க்க வேண்டும் அனால் உங்கள் தலைவர் இஸ்லாம் மதத்தை
    மட்டும் ஏன் ஆதரித்தார் ?

    மணியம்மையை மகள் என்று பொது மேடையில் கூறி விட்டு ஏன்
    அவர்களை திருமணம் செய்தார் ? வயதான பார்பனர்கள் மீண்டும்
    திருமணம் செய்தால் அவர்களை நெயாண்டி செய்த ராமசாமி
    ஏன் தன் பேத்தி வயதில் இருந்த மணியம்மையை திருமணம் செய்தார்?

    தி மு க ஏன் தோன்றியது என்று உங்களுக்கு தெரியுமா?

    தி க தலைவரின் பினமியாய் இருப்பதால் மட்டும் நீங்கள் ராமசாமி நாயக்கருக்கு
    ஜால்ரா போடா வேண்டாம் ?

    ReplyDelete
  56. dondu கிழவரே நீங்கள் எவ்வளவு தா முக்கினாலும் அந்த ஈரோட்டு கிழவனின் ஒற்றை தாடி முடியை கூட புடுங்க முடியாது.. உங்கப்பன் தாத்தனுகளோட சமாதியில் போய் கிழவன் பேரை சொல்லு.. சமாதி ஈரமாயிருக்கும்...

    ReplyDelete
  57. @கந்தசாமி
    நான் ஏன் அதைச் செய்ய வேண்டும்? அதைத்தான் வீரமணி திறம்பட செய்து வருகிறாரே!

    ஆச்சு கழக சொத்துக்கள் பில்ளைக்கு. மற்றவர்கள் விரல் சூப்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  58. //ராமசாமி நாயக்கர் இந்து மதத்தை மட்டும் எதிர்த்த காரணம் என்ன ?
    கடவுள் நம்பிக்கையை எதிர் கின்றவர் என்றால் எல்லா மதத்தையும்
    எதிர்க்க வேண்டும் அனால் உங்கள் தலைவர் இஸ்லாம் மதத்தை
    மட்டும் ஏன் ஆதரித்தார் ?//

    இந்துமதத்தைக் கண்டிக்கும், விமர்சிக்கும் பெரியார் தொண்டர்கள் கிறித்துவ இஸ்லாமிய மதங்களை விமர்சிப்பதில்லை என்று தொடர்ந்து திரும்ப திரும்ப பெரியார் இயக்கத்தினரைப் பார்த்து அடிக்கடி கேள்வி கேட்பார்கள். நாமும் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லி அலுத்துவிட்டது. பெரியாரும் சரி பெரியாரின் தொண்டர்களும் சரி எந்த மதத்தையும் விமர்சிக்க தயங்கியது இல்லை. ஒவ்வொரு கூட்டங்களிலும் விமர்சித்தே வருகின்றனர். அதோடு பெரியார் சுயமரியாதைபிரச்சார நிறுவனத்தின் சார்பாகவும், மற்ற மற்ற பெரியார் தொண்டர்களும் கீழ்கண்ட நூல்களை வெளியிட்டு மதமூடநம்பிக்கைகளை தோலுரித்துவந்துள்ளனர். வருகின்றனர்.

    1.கிருத்துவர்கள் சிந்தனைக்கு -ஜ்யார்ஜ்

    2.கத்தோலிக்க மதகுரு ஜீன் மெஸ்லியரின் மரணசாசணம்(மூன்று பாகங்கள்)

    3. பைபிளோ பைபிள் – புவனன்

    4.குரானோ குரான் –புவனன்

    5.இயேசு அழைக்கிறார் –நாத்திகம் இராமசாமி

    6. வேதமும் விஞ்ஞானமும் – எஸ்.டி.விவேகி

    7.நான் ஏன் கிறித்துவனல்ல –பெட்ரண்ட் ரஸ்ஸல்

    இன்னும் இதுபோன்ற நூல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன வாய்ப்புள்ளவர்கள் வாங்கிப் படித்து உண்மையை உணர வேண்டுகிறேன்.

    “தமிழ் ஓவியா” வலைப்பூவிலே கிறித்து இஸ்லாம் மதங்களை விமர்சித்து கட்டுரைகள் வெளியாகியுள்ளதை, தொடர்ந்து வாசித்து வரும் தோழர்கள் அறிவார்கள்.
    எம்மதமும் சம்மதம் என்று பலரும் சொல்வார்கள். ஏன் என்றால் எல்லா மதத்திலும் மூடநம்பிக்கைகள் நிறைந்து காணப்படுவதால் அப்படிச் சொல்லியிருக்கலாம்? ஆனால் எங்களைப் போன்ற பெரியாரின் தொண்டர்களைப் பொருத்தவரையில் எம்மதமும் தேவையில்லை என்றே சொல்லி வருகிறோம்.

    ReplyDelete
  59. மக்களுக்கு நல்ல பண்புகளையும் ஒழுக்கத்தையும் போதிக்கத்தான் மதம் ஏற்படுத்தப்பட்டது என்று சொல்கிறார்கள். ஆனால் நடைமுறையில் மதங்கள் மனிதனுக்கு ஒழுக்கத்தையும், நல்ல பண்புகளையும் போதிக்கிறதா? ஒவ்வொருவரும் அவரவர்கள் நிலையில் நின்று நடு நிலையுடன் யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

    அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் “இயேசு தான் என்னை ஈராக் மீது போர் தொடுக்கச் சொன்னார்; இயேசுவின் அனுமதியுடன் தான் நான் போர் தொடுத்தேன்” என்று பகிங்கராமாக அறிக்கை விடுகிறார் .
    அல்லா சொன்னால் என் தாய் இருக்கும் இடத்தில்கூட குண்டு வைப்பேன் என்கிறான் ஒரு இஸ்லாம் பயங்கரவாதி.
    முஸ்லீம்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் நீ வண்டியை நிறுத்தாததால் முஸ்லீம்கள் குறைந்த எண்ணிகையிலேயே இறந்துள்ளனர் என்று குறைபட்டுக் கொள்கிறார் இந்துமத பயங்கரவாதியான பெண்சாமியாரிணி.

    இப்படி எல்லா மதங்களும் மனிதத்தைக் கொன்று குழி தோண்டி புதைத்து விட்டது.
    இப்பொழுது சொல்லுங்கள் மதம் ஒழுக்கத்தையும், நல்ல பண்புகளையும் போதிக்கிறதா?

    அந்த வகையில் இன்று இயேசு பிறந்த நாளாம் உலகமே கொண்டாடுகிறது. அந்தக் கொண்டாட்டம் பற்றி நாம் கொச்சைப்படுத்த விரும்பவில்லை.ஆனால் இயேசு பரிசுத்த ஆவிக்கு பிறந்தார் என்று சொல்லப்படுகிறது அது உண்மையா? எப்படிப் பிறக்க முடியும்? என்பது போன்ற அய்யங்களுக்கு விடை சொல்ல வேண்டிய கட்டாயம் கிருத்துவ மதவாதிகளுக்கு உண்டு. இது குறித்து நீதிமன்றத்தில் எல்லாம் வழக்குகள் நடந்ததுண்டு. கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பாதிரியார்கள் திணறியது கண்டு நீதிபதிகள் அந்த பாதிரியார்களுக்கு ஆறுதல் சொல்லிய நிகழ்ச்சியும் நடந்ததுண்டு.

    நாம் தற்போது அதற்குள் போகாமல்,

    1939 முதல் 1945 வரை பம்பாயில் “இரட்சண்ய சேனை” என்ற மதத்தில் போதகராக இருந்த ஜ்யார்ஜ் அவர்கள் “கிருத்துவர்களின் சிந்தனைக்கு” என்ற நூலில் எழுதியுள்ள ஒரு அத்தியாயத்தை மட்டும் உங்கள் பார்ர்வைக்கு வைக்கிறேன். படியுங்கள்! தெளியுங்கள்!! உண்மையை உணருங்கள்!!


    இயேசுவின் பிறப்பு பற்றியே சந்தேகம்!

    “மத்தேயு: 1:18 முதல் 21 வரை –இயேசு கிறிஸ்துவினுடைய ஜனனத்தின் விவரமாவது:

    அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில் அவர்கள் கூடி வருமுன்னே அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.

    அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து அவளை அவமானப்படுத்த மனதில்லாமல் இரகசியமாய் அவளை தள்ளி விட யோசனையாயிருந்தான். அவன் இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கையில் கர்த்தருடைய தூதன் சொற்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு, தாவீதின் குமாரனுமாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக் கொள்ள அய்யப்பட்டாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு என்று பெயரிடுவாயாக.ஏனெனில் அவர் தமது ஜனங்களின் வாவங்களை நீக்கி இவர்களை இரட்சிப்பார் என்றான். பரிசுத்த மாற்கும்,யோவானும் இயேசு எப்படிப் பிறந்தார் என்பது பற்றி ஒன்றுமே குறிப்பிடவில்லை.

    ஆனால், பரிசுத்த லூக்கா: 1:26 முதல் 31 வரை காபிரியேல் என்னும் தூதன்,நாசரேத் என்னும் ஊரில் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு,தேவனாலே அனுப்பப்பட்டான். அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து கிருபை பெற்றவளே வாழ்க.கர்த்தர் உன்னுடனே இருக்கிறார் என்றான். அவளோ இந்த வாழ்த்து எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள். தூதன் இதோ நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரணைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக என்றான்.

    இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வரலாற்றை எழுதிய சுவிசேஷகர்கள் நால்வருள் மாற்குவும், யோவானும் இயேசுவின் பிறப்பைப் பற்றி குறிப்பிடாமல் விட்டதற்குக் காரணம் என்ன? அவர்கள் பார்க்கவோ,கேள்விப்படவோ இல்லையா அல்லது சர்ச்சைக்கு இடமான நிகழ்ச்சியை குறிப்பிடாமல் விட்டார்களா?
    ஆவியால் கர்ப்பமாமே!

    ReplyDelete

  60. குறிப்பிட்ட இரண்டு பேர்களிலும் மத்தேயு கூறுகிறார்.
    மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில் அவர்கள் கூடிவருமுன்னே அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. இதையறிந்த யோசேப்பு அவளைத் தள்ளிவி யோசனையாயிருந்தான்;அப்போது ஒரு தூதன் அவனுக்கு சொற்பனத்தில் தோன்றி அவளைசேர்த்துக் கொள்ள அய்யப்பாடாதே என்று கூறியதாகச் சொல்லுகிறார்.

    ஆனால் லூக்காவோ,ஒரு தூதன் மரியாளிடமே நேரில் போய் கிருபையை வெற்றவளே வாழ்க என்று சொன்னதாகவும், நீ ஒரு குமாரனைப் பெறுவாய் அவருக்கு இயேசு என்று பெயரிடுவாய் என்று கூறியதாகவும் குறிப்பிடுகிறார்.

    மத்தேயு: ஒரு தூதன் யோசேப்புக்கு சொற்பனத்தில் தோன்றி சொன்னான் என்கிறார்

    லூக்கா: காபிரியேல் என்னும் தூதன் மரியாளிடமே நேரில் சொன்னதாகக் கூறுகிறார்.

    தூதன் யோசேப்பிடம் சொன்னது உண்மையா?

    தூதன் மரியாளிடம் சொன்னான் என்பது உண்மையா?

    சொற்பனத்தில் சொன்னது உண்மையா?

    யோசேப்புக்கும், மரியாளுக்கும் உடல் தொடர்பு ஏற்படாத போது பரிசுத்த ஆவியினாலேயே கர்ப்பம் உண்டானதாகச் சொல்வது எந்த அளவுக்கு உண்மையாயிருக்க முடியும்?
    யோசேப்பைப் பார்த்து நீ அய்யப்படாதே என்று சொன்னால் சந்தேகப்படும்படியான காரியம் ஏதோ நடந்து விட்டது; அதை மறைப்பதற்குத் தூதனை அனுப்பி கிருபை பெற்றவனே வழ்க, கர்த்தர் உன்னோடு இருக்கிறார் என்று சொல்லி சமாதானப் படுத்துயிருக்கிறதாகத்தான் கொள்ள முடியுமே தவிர பரிசுத்த ஆவி மரியாள் வயிற்றுக்குள் குழந்தையாக நுழைந்து விட்டதாக ஏற்றுக் கொள்ள எப்படி முடியும்? சிந்தியுங்கள்!

    -------------- ஜ்யார்ஜ் – நூல்: “கிருத்துவர்களின் சிந்தனைக்கு” பக்கம்:- 40-41

    பெரியார் தொண்டர்கள் கேட்கவில்லை. ஒரு மதபோதகரான ஜ்யார்ஜ் கேட்கிறார்.
    இறுதியாக அந்நூலின் கடைசியில் அவர் எழுதியுள்ளதையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

    “மதவாதிகள் யாராக இருந்தாலும் மூடநம்பிக்கை வாதிகளே! அவர்கள் பகுத்தறிவுவாதிகளாக சிந்தனையாளர்களாக ஆக வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடேயே இதை எழுதுகிறேனேயல்லாமல், வேறு யாருடைய மணதையும் புண்படுத்த வேண்டுமெற எண்ணத்தோடல்ல என்பதை மிகவும் தாழ்மையோடு தெரிவித்துக் கொண்டு மிகுந்த வணக்கத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்”
    ----மேற்படி நூல் :- பக்கம் 49

    ஜ்யார்ஜ் அவர்களின் கருத்தின் அடிப்படையிலேதான் நான் இந்த பதிவை பதிவுசெய்கிறேன்.
    உங்களின் மத எண்ணங்களை கொஞ்ச நேரம் தூர வைத்து விட்டு விருப்பு வெறுப்பில்லாமல் நடு நிலையுடன் யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

    ReplyDelete
  61. தமிழ் ஓவியா,
    தயவு செய்து குழந்தை படத்தை நீக்கி விட்டு உங்கள் புகை படத்தினை Profileளில் போடவும்.
    குழந்தை படத்தை பார்த்தல் உங்களுடன் வாக்கு வாதம் செய்ய மனம் வரவில்லை.

    என் மத்த கேள்விக்கு பதில்கள் ?

    ReplyDelete