நிரந்தர பக்கங்கள்

12/20/2012

மனம் நிறையச்செய்த மோதியின் வெற்றி-2

இந்தத் தலைப்பில் போட்ட முந்தையப் பதிவு 5-ஆண்டுகளூக்கு முந்தையது. அப்போதே சொன்னது இப்போதும் அப்ப்ளை ஆகிறது என்றாலும் இந்த வெற்றி இன்னும் பெருமை வாய்ந்ததே.

மோதிக்கு எதிராக நின்ற காங்கிரஸ் வேட்பாளர் டிபாசிட் இழந்தாரா எனத் தெரியவில்லை. ஆமாம் என்றால் இரட்டிப்பு சந்தோஷமே.

இம்முறை மோதிக்கு உள்ளிருந்து எதிரிகள் அதிகம். அதில் கேஷுபாய் ,முக்கிய்மானவர். அவர் வெற்றி பெற்றாலும் அவரது கட்சிக்கு அமோகத் தோல்வி. அக்கட்சிக்காரர்கள் எத்தனை பேருக்கு டிபாசிட் போயிற்று என்பது நாளைக்குத்தான் தெரியும். அப்போது பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்..

இப்போதைக்கு மோதியின் வெற்றியை பதிவு செய்வோமாக.

அன்புடன்,
டோண்டு ராகவன்

31 comments:

  1. அவர் குஜராத்தில் வெற்றி பெற்றால் குஜராத்திகளுக்குத்தான் இலாபமோ நட்டமோ உண்டு. உங்களுக்கும் எனக்கும் அதனால் என்ன இரட்டிப்பு சந்தோசம்? தமிழ்நாட்டில் தேனும் பாலும் ஓடுமா? மாதம் மும்மாறி பொழியுமா?

    சரி உங்கள் கணிப்புப்படியே நான் போகிறேன் என்றால் எங்கோ வேறொரு நாட்டில் எவரோ ஒருவர் தேர்தலில் வெற்றிபெற்றால், 'மனம் நிறைய வைத்த ஜுமாவின் (தென்னாப்பிரிக்க முதல்வர்) வெற்றி! இவ்வெற்றியைப்பதிவு செய்வோமாக! என்று நான் பதிவு போட்டால் கண்டிப்பாக உங்களுக்குச் சொல்கிறேன். வந்து வாயார வாழ்த்துங்களேன்!

    தமிழ், தமிழனைப்பாருங்கள். எவ்வளவோ அநியாயங்கள் நடக்கின்றன. ஆனால் உங்கள் பதிவெங்கே? உங்களுக்கு முன்னால் ஒரு யானையே நிற்கிறது. அஃதுங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் எங்கோ நெடுந்தொலைவில் ஒரு சிறு விலங்கு போகிறது. அதைப்பார்த்து உணர்ச்சிவசப்படுகிறீர்கள்.

    சுருங்கச்சொல்லின், உணர்ச்சிகளும் சரியாகத்தான் பயன்படுத்தப்படவேண்டும்.

    ReplyDelete
  2. முட்டி "மோதி" பார்த்தாலும், உங்கள் மோதியோ, காவிக்கூட்டமோ மத்திய ஆட்சியை பிடிக்கவே முடியாது.

    சுமார் 120 இடம் உள்ள தெற்கே காவிக்கூட்டத்துக்கு 5 இடம் தேறினாலே பெரிய விஷயம். காங்கிரஸுக்கு மட்டும் 50+ இடங்கள் உறுதி. எஞ்சியவை ஜெகன், தி.மு.க+, கம்யூனிஸ்ட்.

    உங்க "அம்மா"வை மீண்டும் காவிக்கூட்டம் நம்பினால், ஜார்ஜ்-அத்வானி வரிசையில் மோதியும் சீசன் ஃப்ளைட் டிக்கெட் எடுத்து வந்து அம்மாவை சந்திக்க போயஸ் கேட்டில் முட்டி "மோதி"க்கொண்டிருப்பார்.

    தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு சிரமம் எல்லாம் வைக்கமாட்டார்கள் உங்கள் மோதிக்கு,தமிழ்நாட்டு மக்கள் வைக்கப்போவது எல்லாம் உங்க அம்மாவுக்கு "ஷாக்".

    வேண்டுமென்றால் மோதியை கோபாலபுரத்துக்கு காவடி எடுக்கச் சொல்லுங்கள், பிரயோஜனமாக இருக்கும்.

    ReplyDelete
  3. @குலசேகரன்
    அது என்ன குஜராத்திகளுக்கு லாபமோ நட்டமோ? லாபம்தேன் அவங்களுக்கு.

    குஜராத் என்ன அன்னிய தேசத்திலா இருக்கிறது?

    த்மிஅனுக்கு நடக்கும் அனியாயங்களுக்கு காரணம் மோதி மாதிரி இங்கு ஒருவர் இல்லாததே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. //முட்டி "மோதி" பார்த்தாலும், உங்கள் மோதியோ, காவிக்கூட்டமோ மத்திய ஆட்சியை பிடிக்கவே முடியாது.//

    ஏற்கனவேயே மத்தியில் ஆட்சியை பிடித்தவர்கள்தான் ன் அவர்கள். காங்கிரசார்தான் கிட்டத்த்ட்ட 12 ஆண்டுகளாக முட்டியும் மோதியும் பார்த்து விட்டனர், குஜராத்தில் ஆட்சிக்கு வர இயலவில்லை.

    என்னைப் பொருத்தவரை இபோதைக்கு மோதி அவர்கள் குஜராத்துக்குத்தான் அதிக தேவை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. இதுவரை பின்னூட்டமிட்ட இருவருமே மோதியின் ஆட்சி பற்றி ஒரு குறையும் கூறவில்லை. எப்படிகூறுவார்கள்? காங்கிரசாரே அதை செய்ய முடியாமல்தானே பேய் முழி முழித்தார்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. //இதுவரை பின்னூட்டமிட்ட இருவருமே மோதியின் ஆட்சி பற்றி ஒரு குறையும் கூறவில்லை. //

    நீங்களே இப்படி........
    //என்னைப் பொருத்தவரை இபோதைக்கு மோதி அவர்கள் குஜராத்துக்குத்தான் அதிக தேவை. //
    குஜராத் பற்றி குறை கூறிவிட்ட பின்னர் நான் வேறு தனியாக குறை கூறவேண்டுமோ?

    so இந்தியாவிற்கு மோதியின் தேவையை விட குஜராத்திற்குத்தான் தேவைப்படுகிறார்...... அங்கேயே வைத்துக்கொள்ளுங்கள். இந்தியாவிற்கு தேவையே இல்லை அப்படிப்பட்ட ஒருவர்.

    (நல்ல வேளை தமிழ்நாட்டிற்கு மோதி தேவை என்று கூறாமல் விட்டுவிட்டீர்களே :) )

    ReplyDelete
  7. // ஏற்கனவேயே மத்தியில் ஆட்சியை பிடித்தவர்கள்தான் ன் அவர்கள்//

    இனி எத்தனை வருடம் முட்டி மோதுகிறார்கள் என்று பார்ப்போம் :)

    தேயத்தொடங்கி விட்டது எப்போது கட்டெறும்பாக ஆகப்போகிறது என்பதுதான் கேள்வி!

    ReplyDelete
  8. // (நல்ல வேளை தமிழ்நாட்டிற்கு மோதி தேவை என்று கூறாமல் விட்டுவிட்டீர்களே :) )//
    த்மிழனுக்கு நடக்கும் அனியாயங்களுக்கு காரணம் மோதி மாதிரி இங்கு ஒருவர் இல்லாததே என்று நான் கூறியதைப் பார்க்கவில்லையா நீங்கள்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்.

    ReplyDelete
  9. //அது என்ன குஜராத்திகளுக்கு லாபமோ நட்டமோ? லாபம்தேன் அவங்களுக்கு.

    குஜராத் என்ன அன்னிய தேசத்திலா இருக்கிறது?

    த்மிஅனுக்கு நடக்கும் அனியாயங்களுக்கு காரணம் மோதி மாதிரி இங்கு ஒருவர் இல்லாததே//

    கடைசி வரி எனக்குப்புரியவில்லை. த்மிஅனு என்றால் என்ன?

    அவ்வநியாயங்கள் தமிழ்நாட்டில் நடக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அவைகளை எப்படி மோதியின் வெற்றி தடுக்கும்?

    முதல் வரிபற்றி : தேசம் என்பது இந்தியா. இந்தியாவில் பல மாநிலங்களில் பல கட்சிகள் ஆட்சி புரிகின்றன. எ.கா. ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரசு வெற்றி பெற்றால் தமிழருக்கு என்ன இலாபம்? நான் 'காங்கிரசின் வெற்றி எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி" என்றால், அபத்தமாகவல்லா இருக்கும்? குஜராத்திகளுக்கு இலாபமே என்றாலும், அவர்கள் இலாபமடைந்தால் நமக்கென்ன இலாபம்?

    எனவே அன்னிய தேசத்திலா இருக்கிறது என்ற கேள்வியே அர்த்தமற்றதாகவல்ல‌வா ஆகிறது?

    சுருக்கமாகக் கேட்கிறேன்: மோதி குஜராத்தில் பெற்ற வெற்றி உங்கள் மனதை ஏன் நிறையச்செயதது? அதுவும் இரட்டிப்பு சந்தோசம்? மேலும், அவரை எதிர்த்தோர் டிபாசிட் இழந்தால் எப்படி உங்களுக்கு மகிழ்ச்சி?

    பதில் சொல்லுங்கள்.

    ReplyDelete
  10. Gujarat - Maninagar
    Result Declared
    Candidate Party Votes
    NARENDRA MODI Bharatiya Janata Party Votes-120470
    BHATT SHWETA SANJIV Indian National Congress-votes 34097

    http://eciresults.nic.in/ConstituencywiseS0653.htm

    ReplyDelete
  11. //கடைசி வரி எனக்குப்புரியவில்லை. த்மிஅனு என்றால் என்ன?//
    தமிழனுக்கு என தட்டச்சிடும்போது ழ் விழவில்லை. ழ்+அ=ழ. ஓக்கேயா?
    //அவ்வநியாயங்கள் தமிழ்நாட்டில் நடக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அவைகளை எப்படி மோதியின் வெற்றி தடுக்கும்? //
    மோதி மாதிரி ஒருவர் இங்கு முதல்வரானால் என அதற்கு பொருள். என்ன தமிழ் படித்தீர்கள்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. மோதி அவர்கள் குஜராத்தில் பெற்ற வெற்றிக்காக ஏன் டோண்டு ராகவன் மகிழ்ச்சி அடைய வேண்டும்? 2007-ல் நான் இது சம்பந்தமாக எழுதியதை இங்கே மீண்டும் தருகிறேன்.

    //இப்போது சோ அவர்களின் தலையங்கத்திலிருந்து சில வரிகள் (நன்றி துக்ளக்). அவரது வரிகளுடன் இந்த டோண்டு ராகவன் 100% ஒத்துப் போகிறான் என்று கூறவும் வேண்டுமோ?

    "நல்லது நடந்திருக்கிறது. குஜராத் மாநிலத் தேர்தல் முடிவுகள் ஒரு முதல்வருடைய நேர்மையின் வெற்றி; அவருடைய நேர்மையான நிர்வாகத் திறனின் வெற்றி. இம்மாதிரி இந்நாட்டில் நடப்பதில்லை; இம்முறை அது நடந்திருக்கிறது என்பது திருப்திக்குரிய விஷயம்".

    "ஒரு அதிசயிக்கத்தக்க, பிரமிப்பைத் தரக்கூடிய விஷயம் இந்தத் தேர்தலில் நடந்திருக்கிறது. மீண்டும் முதல்வர் பதவி ஏற்பதற்காக தேர்தல் களத்தில் இறங்கியுள்ள, ஒரு மாநில முதல்வர் மீது, எதிர்க் கட்சிகளினால் ஒரு ஊழல் புகாரைக் கூட கூற முடியாமல் போய்விட்ட தேர்தல் இது".

    நேர்மையானவர் என்பதால் செயல்திறன் இல்லாமலும் அவர் போய் விடவில்லை. சோ அவர்களின் வார்த்தைகளில்: "விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிப்பதை அவர் நிறுத்த முனைந்தபோது பெரும் எதிர்ப்பு கிளம்பியது; ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளைச் சார்ந்தவர் கூட அவரைக் கடுமையாக எதிர்த்தனர்". ஆனால் மோடி அவர்கள் நேரடியாக விவசாயிகளிடமே பேசி அவர்களைச் சம்மதிக்க வைத்தார். அதையும் மீறி மின்சாரம் திருடியவர்களள இரும்புக்கரம் கொண்டு அடக்கி, நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இதன் பலனை முழுமையாக அடைந்தவர்கள் விவசாயிகள். நம்மூரிலோ ஆளும் கட்சித் தலைவரது 50 வயதுக்கும் மேற்பட்ட மகன் தலைமை வகிக்கும் இளைஞரணி (!) மகாநாட்டுக்காக எப்படியெல்லாம் மின்சாரம் எடுத்தனர் என்பதைத்தான் எல்லோரும் பார்த்தோமே. குஜராத்காரர்களைப் பார்த்து பொறாமைப்பட வேண்டியதுதான் நமது தலைவிதி.

    ரிசர்வ் பேங்க், திட்டக் கமிஷன் ஆகியவை கூட குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி பற்றி ஒத்துக் கொள்ளவேண்டிய நிலை.

    கடைசி பாராவில் சோ அவர்கள் குறிப்பிடுகிறார்: "நேர்மையாளர்களுக்கும், திறமையாளர்களுக்கும் இனி இடமே கிடையாதா? என்று நினைத்து மக்கள் விரக்தியுறுகிற வகையில் போய்க் கொண்டிருக்கிற நம் நாட்டு அரசியலில் - மோடி பெற்றிருந்த வெற்றி, மக்கள மனதில் நம்பிக்கை துளிர்க்க வழி செய்யும்". 100% உண்மையிது.

    ஆனால் ஒன்று, மக்கள் மனதில் நம்பிக்கை சரிதான், ஆனால் ஊழல் அரசியல்வியாதிகள் மனதில் வயிற்றெரிச்சல். என்ன செய்யலாம்? ஜெலூசிலை பரிந்துரை செய்கிறேன்//.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. //இதுவரை பின்னூட்டமிட்ட இருவருமே மோதியின் ஆட்சி பற்றி ஒரு குறையும் கூறவில்லை. எப்படிகூறுவார்கள்?//

    gujarat ranks even worse than UP and assam when it comes to malnutrition of children and women. you can also read about mr.katju's article on gujarat hype. no doubt mr.modi has achieved one thing. he owned all the milestones crossed by gujarat over decades as if everything has been achieved during his rule.

    http://ibnlive.in.com/news/gujarat-among-worst-in-fighting-malnutrition/195196-3.html

    regards
    k.rahman

    ReplyDelete
  14. தமிழனுக்கு என தட்டச்சிடும்போது ழ் விழவில்லை. ழ்+அ=ழ. ஓக்கேயா?
    //அவ்வநியாயங்கள் தமிழ்நாட்டில் நடக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அவைகளை எப்படி மோதியின் வெற்றி தடுக்கும்? //
    மோதி மாதிரி ஒருவர் இங்கு முதல்வரானால் என அதற்கு பொருள். என்ன தமிழ் படித்தீர்கள்?
    //

    ரொம்ப எரிச்சலடைகிறீர்களே.

    தெரியாமல்தான் கேட்டேன் ஏதோ ஒரு முசுலீம் அமைப்பைச்சொல்கிறீர்களென நினைத்து. அவ்வளவுதான்.

    ReplyDelete
  15. @ரஹ்மான்
    அப்போ காங்கிரசார் அதை எலெக்ஷன் கூட்டங்களில் சொன்னார்கள் என்கிறீர்களா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  16. //அப்போ காங்கிரசார் அதை எலெக்ஷன் கூட்டங்களில் சொன்னார்கள் என்கிறீர்களா?//


    எனக்கு தெரியவில்லை. காங்கிரஸ் சொன்னார்களோ இல்லையோ குஜராதில குறையே சொல்ல முடியாது என்ற உங்கள் வாதத்துக்கு தான் என்னுடைய அந்த பதில்.

    55 சதவித குழந்தைகள் நார்மல் வளர்ச்சி இல்லமால் பலவினமானவர்கலாக வளர்கிறார்கள் ஒரு மிகவும் வளர்ச்சி அடைந்த மாநிலத்தில்(??) என்பது மிகவும் கேவலமானது.

    ReplyDelete
  17. @ரஹ்மான்
    காங்கிரசார் சொல்லவில்லை என்றால் ஏன் சொல்லவில்லை என யோசியுங்கள்.

    கோத்ராவுக்கு பிந்தைய கலகம் பற்றியும் காங்கிரசார் பெசியதாகத் தெரியவில்லயே. என்ன சமாச்சாரம்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  18. இந்த வெற்றி பெருமை வாய்ந்தது; அவருக்கு எதிராக நின்றவர்கள் டெபாசிட் இழந்தார்கள். எனக்கு இரட்டிப்பு சந்தோஷம்//

    இவைதான் நீங்கள் இப்போது எழுதியவை.

    இவரின் வெற்றி குஜராத்திகளுக்குத்தான் இலாபம் எனச் சொல்கிறீர்கள். ஆனால் ஏன் உங்களுக்கு மகிழ்ச்சி? ஏதாகினும் தமிழருக்கு இதில் நலமுண்டா என்றால், சோ எழுதியதைக் காட்டுகிறீர்கள்.

    சோ சொன்னதென்ன? மோதி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாதவர். அவரின் நிர்வாகத்திறமையே அவரின் வெற்றிக்குக்காரணம். அப்படிப்பட்ட ஊழலற்ற நிர்வாகத் திறமையுள்ளவர்கள் தமிழகத்தில் இல்லை என்பதும் அதனால் தான் விரக்தியடைவதாகவும் சொல்கிறார். அதை எடுத்தியம்புகிறீர்கள். இல்லையா?

    நான் கேட்ட கேள்வியென்ன? அவ்வெற்றியினால் தமிழனுக்கு ஏதாச்சும் நலனுண்டா? இல்லை. அப்படியிருக்க உங்களுக்கேன் மகிழ்ச்சி?

    அப்படிப்பட்டவர் இங்கில்லையே என்ற விரக்தியா பதில்?

    நன்றாக யோசித்துப்பாருங்கள். உங்கள் மகிழ்ச்சிக்குக் காரணம் எது?

    என்னைப்பொருத்தவரை ஒரு தமிழன் என்ற முறையில் தமிழருக்கு நன்மைதரும் விசயம் வெற்றிபெருமெனில் - நன்மை தருமென்றுமட்டுமன்றி, கண்டிப்பாகத் தரவேண்டும் - அதனால் மகிழ்ச்சியடைதலே சிறப்பு. அம்மகிழ்ச்சியே உண்மையான மகிழ்ச்சி. மற்றதெல்லாம் பெர்வர்சன்.

    வேறோர் மாநிலத்தில் வேறோர் மக்களுக்கு ஏதோ ஒரு தலைவர் நன்மை செய்கிறாரென்றால், அதற்காக இங்கு மகிழ்ச்சியடைவது, எனக்கு எதை நினைவு படுத்துகிறதென்றால், நியுயார்க்கில் கோபுரங்களில் விமானங்களை விட்டு குண்டுபோட்டழித்ததைக்கண்டவர்கள், 'புஷ் ஒழிந்தான்' என இனிப்பு பரிமாறிக்கொண்டதைப்பொல. இது நெகட்டிவ். அவ்வளவுதான் வேறுபாடு. Your happiness and their happiness are abstaract happiness for abstract ideals: abstract because it does not do any good to you direct, but good to someone somewhere.

    You are not being frank. The reasons for your happiness are open secret which all readers of your blog know like the back of their hands !

    ReplyDelete
  19. //அப்படிப்பட்டவர் இங்கில்லையே என்ற விரக்தியா பதில்?//
    மோதியின் உதாரணத்தைப் பார்த்தாவது ஒரு தலைவர் இங்கு உருவாக மாட்டாரா என்னும் நப்பாசை என வைத்துக் கொள்ளுங்களேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  20. @ரஹ்மான்
    காங்கிரசார் பேசினாங்க. ஆனால் சொதப்பிட்டாங்க.

    பார்க்க: http://www.youtube.com/watch?v=48vopTpzmW4

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  21. Please read

    NaMo's Victory - Media's Amazing Disgrace

    http://www.mediacrooks.com/

    ReplyDelete
  22. Please read

    NaMo's Victory - Media's Amazing Disgrace

    http://www.mediacrooks.com/

    ReplyDelete
  23. @ஷ்ரேயாஸ்
    சரியான சுட்டி, http://www.mediacrooks.com/2012/12/namos-victory-medias-amazing-disgrace_21.html#.UNRYF6w8r3E

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  24. //You are not being frank. The reasons for your happiness are open secret which all readers of your blog know like the back of their hands ! //

    தமிழில் இதையே ஊரறிந்த 'ப்ராஹ்மணாளுக்கு' பூணூல் தேவை இல்லை என்பார்கள்.

    ஊரறிந்த ஒன்றை ஏன் மறுபடி கேட்க வேண்டும்? அவர் வெளிப்படையாக இல்லை என்கிறீர்கள் அதன் அடுத்த வாக்கியத்திலேயே எல்லோருக்கும் தெரியுமென்கிறீர்கள்.

    //நன்றாக யோசித்துப்பாருங்கள். உங்கள் மகிழ்ச்சிக்குக் காரணம் எது?//

    சரி, திரு. டோண்டு அவர்கள் என்ன சொல்கிறார் என்று நான் எண்ணுகிறேன் என்றால், இதுவரை பல இடங்களில் அரசியல் பாழ்பட்டு, சீர் கெட்டு, இருப்பதில் குறைந்த அளவு ஊழல் செய்தோர், குறைந்த அளவு கெடுதல் செய்வோர் என்றே பார்த்து வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையும், இனி இதுவே நிகழும், நல்லோர்கள், நேர்மையாளர்கள், சிறந்த நிர்வாகம் அளிக்க விழைவோருக்கு இது களமல்ல என்ற எண்ணமும் மாறுவதற்கு நம்பிக்கை அளிப்பதால், ஊக்கம் அளிப்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறார்.

    இவ்வாறு நேர்மறையாக எண்ணுவதில் ஏதும் தவறு என்று நான் நினைக்கவில்லை.

    ReplyDelete
  25. குலசேகரன்,

    என்ன ஐயா இது, எல்லாத்துக்கும் குத்தம் குறை கண்டுபிடிச்சிட்டே இருந்தா என்ன செய்யுறது ?

    டோண்டு சார்-க்கு பி.ஜே.பி. பிடிக்கும், குறிப்பா திரு.மோடி பிடிக்கும், அதனால அவரு ஜெயிச்சது ஒரு பி.ஜே.பி அனுதாபியா இவருக்கு மகிழ்ச்சிய கொடுக்குது.

    இதுக்கெல்லாம் கூடவா 'அதனால தமிழனுக்கு என்ன'-னு குதர்க்கமா கேட்டுகிட்டு இருப்பாங்க ?

    தமிழனான இந்தியனுக்கு நல்லது நடக்கல, குஜராத்தி இந்தியனுக்கு நல்லது நடக்குது (அவரோட பார்வைல), அதனால மகிழ்ச்சி அடையறாரு. இதுகூட குத்தமா ?

    ஏன், நீங்க இந்தியா கிரிக்கெட்-ல ஜெயிச்சா சந்தோஷப்பட மாட்டீங்களா ? இந்தியா வெற்றிகரமா ஒரு ஏவுகணை சோதனை நடத்தினா சந்தோஷப்படமாட்டீங்களா ? அதனால தமிழனுக்கோ தமிழ்நாட்டுக்கோ என்ன நன்மை-னு மட்டும்தான் பாப்பீங்களா ?

    என்ன கொடுமை சரவணன் இது ?

    ReplyDelete
  26. ****மோதி மாதிரி ஒருவர் இங்கு முதல்வரானால் என அதற்கு பொருள். என்ன தமிழ் படித்தீர்கள்?***

    காவ்யா அவர்கள் உங்களை தமிழ் ஐயாவாக ஆக்கிவிட்டார்! :-)))

    என்னவோ போங்க! உங்களை இம்பூட்டு மகிழ்ச்சியில் ஆற்றியதால் "மோதி(டி)யின் வெற்றி" ஒருவகையில் நல்லதே! :-)

    ReplyDelete
  27. அச்சச்சோ! மகிழ்ச்சியில் ஆழ்த்தியனு அது வரணும்! :=)))

    ReplyDelete
  28. அப்படின்னா ஜெயலலிதா மோடி மாதிரி இல்லைன்னு சொல்லுறீங்களா?

    ReplyDelete
  29. @Jaisankar Jagannathan
    Perish the thought.

    Modi stands tall and Jayalalitha is no match to his greatness.

    Regards,
    Dondu N. Raghavan

    ReplyDelete
  30. //Modi stands tall and Jayalalitha is no match to his greatness.
    //

    Yes...yes.

    He is more than 6 feet. Our CM is just above 5 feet.

    It may also be true that as compared to all CMs of all other States, he is taller by inches.

    As regards his greatness, Dondu Raagavan may pass his remark to Nanjil Sampath,the new KoPaSe, who is, as I write, tearing apart DMK to pieces in Melamasi veethi meeting right now. I am overhearing from my balcony. The meeting is going on.

    ReplyDelete
  31. //டோண்டு சார்-க்கு பி.ஜே.பி. பிடிக்கும், குறிப்பா திரு.மோடி பிடிக்கும், அதனால அவரு ஜெயிச்சது ஒரு பி.ஜே.பி அனுதாபியா இவருக்கு மகிழ்ச்சிய கொடுக்குது//

    முத்து சொன்னதைத்தான் நான் ஓபன் சீக்ரட் என்றேன்.

    தான் ஒரு பிஜேபி அனுதாபி எனவே திரு மோடியின் வெற்றியிலும் திரு மோடியை எதிர்த்த வர்களின் திருவெல்லாம் (டிபாசிட்) காலியானதிலும் இரட்டிப்பு மகிழ்ச்சியடைகிறேன் என்று டோண்டு இராகவன் சொல்லியிருக்கலாம். ‌

    என் பின்னூட்டங்கள் மிச்சமாகியிருக்கும்.

    ReplyDelete