11/08/2009

வி.எஸ். சூரி, எனது நண்பன்


எனக்கு சாதாரணமாக நண்பர்கள் எனச்சொல்லும் அளவில் அதிகம் பேர் இல்லை. எனது விட்டேற்றியான மனநிலையும் அதற்கு துணை செய்திருக்கலாம் என நினைக்கிறேன். ஆனால் அப்படி இருக்கும் குறைந்த எண்ணிக்கையுள் உள்ள நபர்களில் சூரிக்கு நிச்சயம் இடம் உண்டு. கடைசியாக இவனை நேரில் பார்த்தது சமீபத்தில் 1982-ல். அதன் பிறகு தொடர்பு விட்டுப் போயிற்று. இருப்பினும் 2002-ல் எதேச்சையாக அவனது தொலைபேசி எண் கிடைத்து அவனுடன் தொடர்பு கொண்டபோது பழைய நட்பு அப்படியே இருந்ததை இருவருமே கண்டோம்.

நல்ல நட்புக்கு ஒரு அடையாளம்தானே அது. ஏதோ நேற்றுத்தான் பார்த்துக் கொண்டதுபோல எங்கள் தொடர்பை புதுப்பித்து கொள்ள முடிந்தது. அதுவே நல்ல நட்பு என்றுதான் நினைக்கிறேன்.

சமீபத்தில் 1971 ஜனவரியில் மத்தியப் பொதுப்பணித்துறையில் ஜூனியர் இஞ்சினியராக சேர்ந்தபோது அவனும் அதே பதவியில்தான் இருந்தான். முதல் நாளிலிருந்தே எங்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு விட்டது. மொத்தம் எட்டு ஜூனியர் இஞ்சினியர்கள் அந்த அலுவலகத்தில் இருந்தோம். எங்கள் 8 பேருக்கும் ஒரு கேபின். எல்லோருமே பிரும்மச்சாரிகள். ஒரே கொட்டம்தான். அது பற்றி பிறகு. சூரியிடம் வருகிறேன். வாழ்க்கை பற்றிய சூரியின் கண்ணோட்டம் தமாஷாக இருக்கும். 1968-ல் மத்தியப்பொதுப்பணியில் ஜூனியர் இஞ்சினியராக சேர்ந்தவன் 2005-ல் ஓய்வு பெறும்வரை அதே பதவியில்தான் இருந்தான். அத்துறையில் இருந்த ஆயிரக்கணக்கான இஞ்சினியர்களில் இவன் ஒருத்தன் மட்டுமே அவ்வாறு பிடிவாதமாக இருந்தான். அதனால் வேலை தெரியாது என்றெல்லாம் இல்லை. அதில் நிபுணன். ப்லமுறை பிரமோஷன்கள் வந்த போதும் அதை அவன் மறுத்துவிட்டான். தான் ஏ.இ. போஸ்டுக்கான மெட்டீரியல் இல்லை என விட்டேற்றியாகக் கூறிவிட்டான்.

திருமணம் ஏதும் செய்து கொள்ளவில்லை. ஆகவே கமிட்மெண்டுகளும் இல்லை, ஆகவே வரும் சம்பளமே போதும் என்ற மனப்பான்மை வேறு. அற்புதமான ஆங்கில அறிவு. எழுதுவதில் நாட்டம். ஒரு புத்தகம் ஆங்கிலத்திலிருந்து அவனது தாய்மொழியான கன்னடத்துக்கும் இன்னொரு புத்தகம் கன்னடத்திலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்த்திருக்கிறான். என்ன, அவை பப்ளிஷ் ஆகவில்லை, பணமும் கிடைக்கவில்லை. அதனால் எல்லாம் அவன் மனம் தளரவும் இல்லை என்பதும் நிஜமே.

சில நாட்களுக்கு முன்னால் திடீரென அவனிடமிருந்து ஒரு பார்சல் கூரியரில் வந்தது. திறந்து பார்த்தால் ஒரு ஆங்கில புத்தகம் அவன் எழுதியது. அமெரிக்காவில் பப்ளிஷ் ஆகியிருக்கிறது. தலைப்பு Jestus. Library of Congress Control No. 2009937472, ISBN 10:0-9822553-2-2, ISBN 13:978-0-9822553-2-2.

எனக்கு தூக்கிவாரிப்போட்டது. அப்புறம்தான் விஷயம் தெரிந்தது, அவன் தனது சொந்த செலவிலேயே இந்த புத்தகத்தை அச்சடித்துள்ளான் என்று. புத்தகத்தை பிரித்து படித்தால் அதை கீழே வைக்கவே முடியவில்லை. அவ்வளவு விறுவிறு எனச் சென்றது. சர்ரியலிசத்தில் விளையாடியுள்ளான். முதல் அத்தியாயம் காஃப்கா புத்தகத்தை படித்த உணர்வை தந்தது. மேஜிக் ஆகியவை இடம் பெறுகின்றன. ஆனால் எல்லாமே ஒரு ஒழுங்கில் உள்ளன.

அதில் வரும் ஒரு பாத்திரத்தின் பெயர் Rock Van. அது பற்றி எழுதும் முதல்வரிகளிலேயே தெரிந்தது அது என்னை வைத்து உருவாக்கப்பட்டது என. அதனால் கூட அப்புத்தகத்தை படித்தேன். இம்மாதிரி ஒரு நாவலில் என்னையே காண்பது எனக்கு இதுதான் முதல் முறை.

ஓரிரு உதாரணங்கள் தருகிறேன்.
On my return path I had an impulse to visit my old pal, Rock Van. He had graduated as an engineer and worked for some years in a government department. He had a flair for languages. During his spare time he mastered German, French, Italian and Spanish. He had a working knowledge of half a dozen other languages too like Russian Arabic, Japanese, and Hindi etc. He fell so much in love with languages that he resigned as an engineer and took up a job as translator in a few high paying companies .A dragoman as he called himself. He landed up in a prestigious government department in that capacity. He took a second retirement and began working freelance. He spent most of his time at home, glued to the seat in front of a computer.

As I expected he was in. I rang the bell. His door opened within a minute and Rock Van stood, tall and smiling broadly.

“Welcome.”, he grinned. I stepped into his phrontistery. The computer was on. A pile of printouts lay by the keyboard. A quick glance told me it was in French.

“A doctoral thesis. I am translating it into English for someone.”, he explained.

Rock Van opened the fridge and brought back a big bottle of apple juice and two stainless steel tumblers. He was a strict teetotaler. And a vegan. Rock Van collected jokes as a hobby. He could reel off a joke on any subject. He was also an inexhaustible source of obscure trivia, and was peculiarly proud of that. He would dish out an unimaginable tit-bit and ask me ,“ How many know it?”

Rock set the ball rolling with his opening gambit.

“The name of Napoleon’s favorite horse was Desirée.”

“ I see”. I knew what was coming.

“Now how many know it?”, he asked.

“Rock, it is quite sufficient if you and I know it. Why bother about how many know it?”

He laughed, because that was my standard reply to his regular question.

“ Anyhow Napoleon is dead and Shakespeare is dead.”, I added and bit my tongue.

Give him the smallest opening and he will push a joke through it.

“ I asked ,how many know. Well apparently even some very famous people do not know about Shakespeare.”
I did not believe him. I raised my eyes. He began with a  straight face.
“There was this famous pugilist. He was the world champion for years. Nobody could beat him in the ring. The journalist interviewing him asked casually, ‘Do you know Shakespeare?’ The fellow replied. ‘Shakespeare ? I will punch  him out in the first round.”
Rock Van burst into laugher. I smiled. Fortunately he knew my allergy towards jokes and cut short his narration”.
=========================================================================
I went to meet Rock Van at his house for the regular monthly visit. I generally choose the time when his wife would be out to the office, so that we could chat freely. We indulged in our monthly quota of gossip and information update, as he called it.
“Goethe’s last words were,  ‘more light’. Many people feel inspired by those words. Actually the room in which he lay was dark and he wanted the blinds drawn. Now, how many people know it?”
Reluctantly I supplied my part of the catechism. “Rock, it is quite sufficient if you and I know it.” He chuckled in satisfaction.
Rock, needless to mention, was in front of his computer. He had opened two windows, one for his translation work (a German document) and in another window he was checking mail. He was carrying on the conversation with me too. I often wondered how he could pay attention to three things at a time. “Nothing to it.”, he had said, “I read novels while I am walking in the streets, you know.” (He claimed he could even do eight different things at a time – multitasking, he called it. Efficient time management, he had further explained. I have my own doubts about the first word, the adjective, I had replied.)”
======================================================================
”I entered the all too-familiar scene. Rock Van in silk pajamas, carrying on his love affair with the computer, two windows open on the monitor. Rock  banging off on the key board.
The familiar cup of coffee and his familiar greeting.
“The original name of Kirk Douglas was Issur Danielovitch Demsky. How many know it?”
“It is quite sufficient if you and I know it. Ok?”
He would never be satisfied if this ritual was not carried out. I said.
“I read the book Ivanhoe, by Sir Walter Scott. I liked it much.”
“Oh, that? ” he said, “ Yeah. I read it recently in 1960.”
“Recently ? In 1960? You call that recent?”
“Why not? It is still so fresh in my memory. You want me to quote a few lines out of the book?”
“No thanks. I believe you.”
He smiled happily. As with jokes, so with books. You name a book and he will quote sentences out of it. I think I said somewhere that when the mood is on him, he walks along the street (and across) reading a book. He says he holds the book slightly below the eye level so that he can have two views – of the book and of the traffic. Like the two windows on his computer, he had further clarified”.

இவை போதும் என நினைக்கிறேன். சும்மா சொல்லப்படாது, Rock Van இந்த டோண்டு ராகவனுக்கு ஏனோ பிடித்த கேரக்டராகிப் போனான்.

இந்த புத்தகத்தைத் தமிழில் கொண்டுவர எண்ணம். சூரி முழு அனுமதி தந்துவிட்டான். ஆக மொழிபெயர்க்க வேண்டியதுதான் பாக்கி. அதற்கான முன்னோடிதான் இப்பதிவு.

(ஆன்லைனில் ஜெஸ்டஸ் ஆங்கில மூலத்தை வாங்க இங்கே செல்லவும்).

அன்புடன்,
டோண்டு ராகவன்





11/07/2009

இதோ வந்தேன் டோண்டு - 2

இதன் முந்தைய பகுதி இதோ வந்தேன் டோண்டு

இப்பதிவை போடும் உந்துதல் எதேச்சையாக வந்தது. திடீரென தேதியைப் பார்த்தால் நவம்பர் 7. இன்றுடன் நான் பதிவுலகுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. இது 894-வது பதிவு என்று கூறுவது புள்ளிவிவரம் கருதியே.

சாதித்தது என்னவென பார்த்தால் அளவற்ற தன்னம்பிக்கை, தாய் மொழியில் எழுதும் போதை, பல நண்பர்கள், எனக்காக உழைத்த முக்கிய விரோதி மற்றும் அவனது அல்லக்கைகள் என கூறிக்கொண்டே போகலாம்.

அதிலும் முக்கியமாக என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை எனக்கு அறிமுகப்படுத்தியதும் இந்தப் பதிவுலகுக்கு வந்ததுதான் என்று கூறினால் அது மிகையாகாது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக எனது செயல்பாட்டை ஊக்குவித்த தமிழ்மணத்துக்கும் இங்கே நன்றி தெரிவிக்கிறேன். அது பற்றி நான் எழுதிய இப்பதிவிலிருந்து சில வரிகள் இதோ.

பிறகு என்னென்ன திரட்டிகள் வந்தாலும் தமிழ் மணம் ஒரு தனியிடத்தை எனது மனதில் பிடித்துள்ளது. அதுவே நான் இங்கு இன்னும் விடாப்பிடியாக இருப்பதற்கு காரணம். அதற்காக தமிழ்மணம் அப்படியே ஒரு மேம்பாடும் பெறாமல் அப்படியே நின்று விடவில்லையே. எவ்வளவு புது வசதிகள் வந்துள்ளன? தமிழைத் தவிர வேறு எந்த மொழிப் பதிவுகளுக்கும் இம்மாதிரி ஏற்பாடு இல்லை என்று அடித்துக் கூறுவேன். எனக்கு ஆறு மொழிகள் தெரியும் என்பதையும் சைக்கிள் கேப்பில் கூறிவைக்கிறேன். அது பற்றிய விவரங்கள் இங்கே, ஹி ஹி ஹி.

இன்னொரு உண்மையையும் கூறுவேன். மொழிபெயர்ப்பு எனது உயிர். அதற்கு துணை போகும் எல்லாமே எனக்கு பிடிக்கும். அவற்றை உபயோகித்து கொள்ள தயங்க மாட்டேன். அந்த வரிசையில் தமிழ்மணத்துக்கு முக்கிய இடம் உண்டு. அதை உபயோகித்து பல பதிவுகள் பார்த்தேன், பின்னூட்டங்கள் இட்டேன், பதிவுகள் போட்டேன். எனது தமிழ் மேம்பட்டு வருகிறது. தமிழில் தட்டச்சு அனாயாசமாக வந்தது. அதற்கென காத்திருந்தது போலவே ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு வேலைகள் வர ஆரம்பித்தன. தற்சமயம் என்னுடைய மொத்தம் இரண்டு வெளி நாட்டு வாடிக்கையாளர்களுமே எனது தமிழ் மொழிபெயர்ப்பு மூலமாகத்தான் வந்துள்ளனர். தாய்மொழியில் எழுதும் சுகத்தை அனுபவிக்கிறேன். வேற்று மொழியிலிருந்து 
தாய் மொழிக்குத்தான் மொழிபெயர்க்க வேண்டும் என்ற வாதத்தின் பலத்தை நேரடியாக உணர்கிறேன். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம் என்ற கோஷத்தை உண்மையாக உணர்ந்து வைக்க முடிகிறது. எல்லாம் இருக்கும் இடத்திலேயே நடப்பதால் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்றெல்லாம் பதிவு போட முடிகிறது.

பல மொழிபெயர்ப்பு வேலைகள் வருகின்றன என்பதும் உண்மைதானே. அவற்றில் பல நான் தமிழ்மணத்தில் செயலுடன் இருப்பதால்தான். இன்னொன்றையும் கூறவேண்டும். தமிழ் மணம் என்னை மிக நல்லபடியாகவே நடத்தி வந்திருக்கிறது. வளர்ந்த குழந்தையாக செயல்பட்டு (நன்றி மா.சிவகுமார் அவர்களே, பை தி வே 
அவரும் எனது வாடிக்கையாளர்தான் என்பதையும் சந்தடிசாக்கில் கூறிவிடுகிறேன்) பல சர்ச்சைகளை உருவாக்கி, படுத்தின/படுத்தும் டோண்டு ராகவனை இன்னும் தமிழ்மணம் சகித்துக் கொண்டிருப்பதே என்னை பிறந்த வீட்டில் ஒரு பெண்ணுக்கு கிடைக்கக் கூடிய பாதுகாப்பு உணர்ச்சியை அளிக்கிறது.


தனிப்பட்ட முறையில் நான் நன்றி தெரிவிப்பது நண்பர் என்றென்றும் அன்புடன் பாலாவுக்குத்தான். அவர்தான் எனது பதிவுலக பிரவேசத்துக்கு தூண்டுகோல்.

அடுத்து வரும் ஆண்டுகளையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 07.11.2009

நீதிபதி தினகரன் விவகாரம்
இவர் வருவாய்க்கு மீறி சொத்து சேர்த்ததில் மறுப்பு ஏதும் பெரிதாக இருக்கவில்லை. ஆயினும் அவரை டிஃபண்ட் செய்பவர்கள் என்ன சொல்கிறார்கள் எனப் பார்த்தால் அவர் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர் என்பதால் அவரை விட்டுவிட வேண்டும் என்ற தோரணையில் வீரமணி, தமிழ் ஓவியா வகையறாக்கள் கூறுகின்றனர். மேல் விவரங்களுக்கு இட்லி வடையின் இப்பதிவைப் பார்க்கலாம்.

ஆனால் நான் சொல்லவருவது வேறு. இதே மாதிரித்தான் நீதியரசர் ராமசாமி, அவரது மாமனார் நீதியரசர் வீராச்சாமி ஆகியோர் சர்ச்சையில் சிக்கிய போது இதே மாதிரி வாதங்களை முன்வைத்துத்தான் அவர்களது ஆதரவாளர்கள் பேசினார்கள். அதுவும் ராமசாமி பார்லிமெண்டால் இம்பீச் செய்யப்படும் அளவுக்கு விஷயம் போயிற்று என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

உன் முகத்தைக் காட்டு விதிகளை நான் கூறுகிறேன் என்ற தலைப்பில் நான் போட்ட மொக்கைப் பதிவில் கூறியது அவ்வளவு மொக்கை இல்லை என தினகரனின் விஷயம் நிரூபீகிறது.

தலித்தை மணந்த கள்ளர் சாதிப்பெண் அவரது உறவினர்களால் கொலை
இது பற்றி வினவு பதிவு போட்டுள்ளார். அவரது செயல்பாட்டை இங்கு பார்ப்போம். முதலில் எழுதுகிறார், “கடந்த இருவருடங்களில் இதுபோல ஏழு கொலைகள் கலப்பு மணத்திற்காக நடந்திருக்கின்றன. தஞ்சை, திருச்சி முதலான மத்திய தமிழகத்தில் வாழும் கள்ளர் சாதியினர் தேவர் சாதி பிரிவில் ஒருவராவார்கள். பொதுவில் கடும் சாதிவெறி கொண்டதாகவே இந்த சாதியினர் நடந்து கொள்வார்கள். இந்த பகுதிகளில் எல்லா அரசியல் கட்சிகளிலும், ஏன் ரவுடிகளிலும் கூட இந்த சாதி மட்டுமே இருக்கும். தலித் மக்களை புழு பூச்சிகளாக பார்க்கும் மனோபாவம் இந்த சாதியின் இரத்தித்திலேயே கலந்திருக்கும் என்று கூட சொல்லலாம்”.


நான்கூட ஆச்சரியப்பட்டேன், என்னடா இவ்வளவு கடுமையாக எழுதுகிறாரே என. ஏனெனில் அவர் பார்ப்பனர்களைத்தான் அதிகம் திட்டுவார். மற்ற சாதியினர் செய்யும் உயர்சாதீய அக்கிரமங்களை பார்ப்பனீயம் என லேபல் போட்டு அங்கும் பார்ப்பனர்களை இழிவுபடுத்துவார். ஆனால் இப்பதிவில் பார்ப்பனீயம் என்னும் சொல்லும் வரவில்லைதான். சரி அவரும் திருந்திவிட்டார் என எண்ணினேன்.

ஆனால் அப்படியெல்லாம் இல்லை என அவர் தெளிவுபடுத்தி விட்டார். ஒரு பின்னூட்டத்தில் அவரே எழுதுகிறார், “//தலித் மக்களை புழு பூச்சிகளாக பார்க்கும் மனோபாவம் இந்த சாதியின் இரத்தித்திலேயே கலந்திருக்கும் என்று கூட சொல்லலாம்// என்று எழுதியிருந்தோம். ஆனால் அப்படி எழுதியது தவறு என்பதை சுயவிமரிசனம் செய்து கொள்கிறோம். ஏனெனில் அந்த வரியின் பொருள் பிறப்பிலேயே சாதிவெறி என்ற பார்ப்பனியத்தின் பொருளை ஏந்தி வருகிறது. கள்ளர் சாதியிலும் ஏதுமற்ற உழைக்கும் மக்களும் இருக்கிறார்கள். சாதிவெறிக்கு அந்த சமூகம் பலியாகி இருந்தாலும் அதை மேற்கண்ட வரியில் இடித்துரைப்பது தவறு. தவறினைச் சுட்டிக்காட்டியமைக்கு தோழர் ராசாத்திக்கு நன்றி. இனி இத்தவறுகள் நிகழாத வண்ணம் கவனமாக இருப்போம்”


கண்டிப்பாக கவனமாகத்தான் இருப்பார். கள்ளர் சாதியினர் என்ன பார்ப்பனரா, தம்மை இழித்து பேசுபவர்களை அப்ப்டியே புறக்கணித்து போவதற்கு. செருப்பால் அடிப்பார்கள் என்ற பயம் வினவுக்கு இருக்கக் கூடாதா என்ன? கண்டிப்பாக இருக்கலாம்தான். அப்படியே பார்ப்பனீயம் என்னும் சொல்லையும் போட்டுக் கொண்டாகிவிட்டது.


 ஹிந்து பத்திரிகையில் வரும் திருமண விளம்பரங்களை சுட்டி அவர் கூறுகிறார், பார்ப்பனரின் சாதி வெறி பற்றி. எல்லா பார்ப்பனர்களுமே அப்படித்தான் என்று வேறு எகத்தாளப் பேச்சு. அதே ஹிந்துவில் மற்ற சாதியினரும்தானே அதே மாதிரித்தானே விளம்பரம் தருகிறார்கள் என்றால் பதில் தர இயலாது அவரால்.

பெரியாரின் சீடர் வேறு எப்படி இருப்பார். அவரும் கீழ்வெண்மணி விஷயத்தில் சுயசாதி அபிமானத்துடன் பேசியவர்தானே.

பாமக என்ன செய்யப் போகிறது?
மற்றவர்களைப் போலவே நானும் இந்த தமாஷ் எப்படி செல்லப்போகிறது என்பதைக் காண ஆவலுடன் இருக்கிறேன் என்று இப்போதைக்கு கூறிவைக்கிறேன். அது என்ன செய்யலாம் என்பதை யாராவது யோசனைகளாக பின்னூட்டத்தில் கூறுங்களேன்.


எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் பற்றி ஜெயமோகன் எழுதும் பதிவுகள்
தனக்கே உரித்தான் நேர்த்தியுடன் ஜெயமோகன் அவர்கள் எம்.எஸ். பற்றி எழுதிய பதிவு, அதற்கான கடிதங்கள் ஆகியவற்றை நான் சுவாரசியமாக படித்து வருகிறேன். அந்த வரிசையில் கடையாக வந்த இப்பதிவிலியே முந்தைய பதிவுகளுக்கான சுட்டிகளும் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் அங்கு போய் எல்லாவர்றையும் படிக்கலாம்.

நான் இங்கு குறிப்பிட விரும்புவது எம்.எஸ். அவர்கள் ஜி.என்.பி.க்கு எழுதிய கடிதம்தான். காதல்வயப்பட்ட ஒரு பெண்மணி அதை எழுதி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அக்காதல் நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அந்த பெண்மணியும் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு போய்விட்டார்.

இப்போது போய் அக்கடிதம் வருவது மனத்தை புண்படுத்துகிறது. முதல் கேள்வி அது எப்படி வெளியில் வந்தது? அக்கடிதம் பெற்ற ஜி.என்.பி.யே அதை கிழித்துப் போட்டிருந்திருக்க வேண்டும் செய்யவில்லை. அதே சமயம் காதலையும் ஏற்கவில்லை. அக்கடித்தத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன? அவரது ஈகோவுக்குத்தான் அது தீனி போட்டிருக்கிறது. சுத்த் அல்பத்தனமாக எனக்கு அது படுகிறது.

அவரும் மறைந்து விட்டார். அக்கடித்தத்தை மெனக்கெட்டு வெளியாரிடம் தர வேண்டிய அவசியம் அவரது வாரிசுதாரர்களுக்கு என்ன வந்தது? அல்பத்தனம் ஸ்க்வயர்டு (squared) என்றுதான் கூறவேண்டும். அதையும் பெற்று ஆராய்ச்சி செய்தவரோ அல்பத்திலும் அல்பம்.

மொத்தத்தில் ஒரே அல்பங்களாக உள்ளன. ஹூம்.


அன்புடன்,
டோண்டு ராகவன்









11/05/2009

டோண்டு பதில்கள் - 05.11.2009

கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?

அனானி (32 கேள்விகள் கேட்பவர்)
1. பொதுவாய் மனிதன் தடுமாறுவது எப்போது? ஏன்?
பதில்: தடுமாறுவது மனிதனின் இயல்பு. டீஃபால்ட் நிலை என்று கூட கூறலாம். ஒரு செயலை செய்யும் தருணம் அவன் முன்னால் வைக்கப்பட்ட தெரிவுகள் எல்லாமே மோசமாகவோ அல்லது நன்றாகவோ இருந்தால் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் தடுமாற்றம் வரும்.
அவன் சபலத்துக்கு வாய்ப்பு வரும்போது தனது செய்கை பிறருக்கு தெரியாது என்று அவனுக்கு பட்டால் அப்போதும் நல்லொழுக்கத்திலிருந்து தடுமாறும் வாய்ப்பு உண்டு. இம்மாதிரி உதாரணங்கள் கூறிக்கொண்டே போகலாம். ஆக, தடுமாறுவதுதான் இயல்பு, அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதே முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

2. அயல்நாடுகளுக்கு நிகராக நம் நாட்டிலும் பெருகி வரும் விவாகரத்துக்கள் எதை உணர்த்துகின்றன?
பதில்: செயற்கையாக எவ்வளவு திருமணங்கள் கட்டி நிறுத்தப்பட்டு வந்தன என்பதையே இது காட்டுகிறது. முக்கியமாக கொடுமைக்கார கணவனிடமிருந்து ஒரு பெண்ணுக்கு விடுதலை என்பது இத்தனை ஆண்டுக்காலம் குதிரைக் கொம்பாக இருந்திருக்கிறது. இப்போது பென்ணும் படித்து, பட்டம் பெற்று தன்காலில் நிற்கும் வலிமை பெற்றுவரும் இந்த நிலையில் அவர்கள் ஏன் வாளாவிருந்து கொடுமைகளை சகித்து கொள்ள வேண்டும்?
அதே சமயம் புதிதாக வந்த சுதந்திரம் அதை மிக அதிகமாக பயன்படுத்தத் தூண்டுகிறது. விவாகரத்து நடந்தபிறகு வரும் குழப்பங்கள் இப்போது உணரப்பட ஆரம்பித்துள்ளன. நாளடவில் ஒருவித சமநிலை வந்துவிடும் என நம்புவோம்.

3. தர்மம் செய்பவருக்கும், உண்மை பேசுபவருக்கும் இந்த காலத்தில் மதிப்பு எப்படி உள்ளது?
பதில்: பாத்திரமறிந்து பிச்சையிடு என்பதை உணராது சகட்டுமேனிக்கு வாரிவாரி வழங்குபவன் ஏமாளியாகக் கருதப்படுகிறான். உண்மை பேசுகிறேன் பேர்வழி என இங்கிதமின்றி பலரது ரகசியங்களை பொதுவில் போட்டு உடைப்பவன் மற்றவர்களால் விலக்கப்படுகிறான்.

4. வாழ்க்கையில் உயரும் போது, எதை அவசியம் மனிதன் கடைபிடிக்க வேண்டும்?
பதில்: உயரவேண்டும் என்னும் நோக்கத்தை மறக்காது இருக்க வேண்டும். திசைதிருப்பல்களுக்கு இடம் தரலாகாது. ஒரு இலக்கு முடிந்ததும், அடுத்த இலக்கு என்ன என்பதை பார்த்து சோம்பியிராது முன்னேற வேண்டும்.

5. பிரச்னைகளே இல்லாமல் வாழ்வது சாத்தியமா?
பதில்: சாத்தியமே இல்லை. அப்படியே பிரச்சினையே இல்லாமல் இருந்தாலும் அத்னால் முன்னேற்றம் ஏதும் இல்லைதானே?

6. காதலிக்கும் போது இருக்கிற கிளுகிளுப்பு கல்யாணத்திற்குப் பின் குறைவதேன்?
பதில்: காதலிக்கும்போது சேர்ந்து வாழ்வதில்லையே. அவரவர் வீட்டில்தானே இருக்கிறார்கள். ஆகவே சேர்ந்து வாழும் பிரச்சினை புரியப்போவதில்லை. கல்யாணத்துக்கு பின்னால்தான் ஒவ்வொரு பிரச்சினையாக முன்னுக்கு வருகின்றன. அப்புறம் ஏது கிளுகிளுப்பெல்லாம்?

7. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் லஞ்சம், ஊழல் நடக்கிறது. மக்கள் என்ன செய்தால் இது மாறும்?
பதில்: இடைவிடாத விழிப்புணர்வு மக்களிடம் வேண்டும். ஊழல் செய்தால் தண்டனை நிச்சயம் என்னும் நிலை வரவேண்டும். வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் சிறு சலுகைகளுக்காக நீங்கள் லஞ்சம் தராமல் இருக்கும் மனவுறுதி படைத்தவரா? இதை ஒவ்வொருவரும் தனக்குத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும்.

8. குறைகளை சுட்டி காட்டி, நட்பை இழக்க நேரிடும் நிலை உங்களுக்கு ஏற்பட்டதுண்டா? விளக்கவும்?
பதில்: அப்படி ஏதும் எனக்கு இதுவரை நடக்கவில்லை. மற்றவருக்கு உபதேசம் செய்யும் தகுதி எனக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. அடுத்தவர் செயல்பாடு எனக்கு பிடிக்கவில்லை நான் ஒதுங்கிவிடுவேன். அதேபோல எனது செயல்பாடு மற்றவருக்கு பிடிக்காமல் போய் நான் விலக்கப்பட்டதும் நடந்துள்ளது என்பதையும் கூறத்தான் வேண்டும்.

9. பொதுவாய் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் உடல் தொடர்பில்லாமல் நட்புடன் பழகமுடியுமா?
பதில்: கஷ்டம்தான். ஆனால் முயன்றால் முடியும். சுற்றிலிருப்பவர்கள் பார்வைகள் எப்படியிருக்கும் என்பதை யாரால் கூறமுடியும்?

10. குடும்பம் நடத்த இக்காலத்தில் எவ்வளவு பணம் தேவை ஒருமாததிற்கு?
பதில்: உங்கள் தேவைகளை பொறுத்துள்ளது. வருவாய்க்குள் செலவு, அல்லது செலவுக்கு மேல் வருவாய் வருமாறு பார்த்து கொள்வது. மற்றப்படி இவ்வளவுதான் செலவு ஆகும் என பொத்தாம்பொதுவாக கூற இயலாது.

11. கஷ்டங்களைக் குறைக்க என்ன வழிகளை கற்றுள்ளீர்கள்?
பதில்: கஷ்டங்களையே முன்னேற்றத்துக்கான தூண்டுகோல்களாக மாற்றிக் கொண்டால் என்ன? விளக்குகிறேன். பணக்கஷ்டம் வந்தால் அதை தீர்க்க பணம் சம்பாதிக்கும் வழிகளை ஆராய்வதே. ஒருவருடன் மனவேறுபாடு வந்தால் அவருடன் பேசித் தீர்க்கும் வழிகளை ஆராயலாமே. இவ்வாறு கூறிக்கொண்டே போகலாம்.

12. வாழ்க்கைக்கு வரையறுத்த நெறிமுறைகள் எவை எவை?
பதில்: எக்கச்சக்கமான அளவில் நீதி நூல்கள் நம்மிடம் வேறு எதற்காக உள்ளன. அவை எல்லாமே அனுபவங்களால் புடம் போடப்பட்டவை அல்லவா?

அப்படியும் குன்சாகக் கூறவேண்டுமானால் வாழு வாழவிடு என்னும் கோட்பாடு மிக முக்கியமானது. (அதே தலைப்பில் உள்ள அந்த பிரசித்தி பெற்ற புத்தகத்தைக் குறிப்பிடவில்லை).

13. உண்மையே பேசி கஷ்டப்படுவதைவிட, சமயத்திற்கு தகுந்தாற்போல பொய் பேசி வாழலாம் என எண்ணம் வலுக்கிறதே?
பதில்: உண்மையை எப்போதுமே கூறுதலும் நடக்காத காரியம்தானே. தேவையான அளவு பொய் பேசலாம், ஆனால் அதனால் யாருக்கும் தீமை வரக்கூடாது, முக்கியமாக மாட்டிக் கொள்ளக் கூடாது.

நீங்கள் சொல்லும் எண்ணம் எல்லா காலத்திலும் இருந்து வந்திருக்கிறது.

14. செய்யும் வேலையில் கடமை தவறாமல் பணியாற்றுபவர்கள் எங்கேயாவ்து உள்ளார்களா?எத்தனை விழுக்காடு?
பதில்: எந்தக் குழுவை எடுத்துக் கொண்டாலும் அதில் சிலர் கடமையே கண்ணாக இருப்பார்கள், சிலர் ஓபி அடிப்பார்கள். ஓபி அடிப்பவர்கள் அதிகமாகத்தான் இருப்பார்கள். விழுக்காடு எல்லாம் யார் பார்ப்பது? அது வேலைக்காகாது.

உதாரணம் என எடுத்துக் கொண்டால் எங்கள் ஐ.டி.பி.எல்-லில் வி.ஆர்.எஸ். என வந்ததும் நன்றாக தத்தம் கடமைகளை செய்து வந்தவர்கள்தான் முதலில் அதை பெற்று சென்றனர், ஏனெனில் அவர்களுக்கு வேறு நல்ல வேலைகள் காத்திருந்தன. ஓபி அடிப்பவர்கள்தான் மிஞ்சினார்கள். அதே சமயம் ஐ.டி.பி.எல்-லின் செயல்பாடும் குறையவே அது அவ்வளவு பெரிய பிரச்சினையாக இல்லை என்பதையும் கூறிடத்தான் வேண்டும்.

15. ஒரு முறைக்கு, நூறு முறை சிந்தித்து செய்த செயலும்கூட தோல்வி பெறுவது எதனால்?
பதில்: ஒரு மாறுதலுக்காக ஆயிரம் முறை சிந்தித்து பிறகு செயலாற்றப் பாருங்கள்.

16. டீன்-ஏஜ் பெண்களுக்கு, செக்ஸை விளக்கி கூறுவதால், அவள் தற்காத்து கொள்வாளா ? இல்லை?
பதில்: இந்த விஷயத்தில் அரைகுறை அறிவு மிக ஆபத்தானது. ஆகவே முழுமையான விளக்கம் அப்பெண்ணின் தாயாரோ பெரிய சகோதரியோதான் தரவேண்டும். ஆனால் அவர்களுக்கே முழுமையான அறிவு இருக்கிறதா என்பதையும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இடியாப்பச் சிக்கல்தான்.

17. உலகிலேயே மிகப் புனிதமான உன்னதமான பணி?
பதில்:
“அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கியொளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என ஏற்கனவே பாரதியார் கூறிவிட்டாரே, படிக்கலையா? (எட்டு போடச் சொன்ன போலீஸ்காரருக்கு ஏழரை போட்டுக் காட்டுவதாகக் கூறி சாமி படத்தில் விவேக் அவரை ஸ்கூட்டரில் பின்னால் உட்கார வைத்து, கடைசியில் ரெட்டப் பாலத்தில் உன் கை விழுந்துதே எடுத்துக்கலையா என்று கேட்ட தொனியில் நான் கேட்கவில்லை என்பதை தெளிவுபடுத்தி விடுகிறேன்).

18. தற்கொலை செய்து கொள்பவர்கள் ஏழைகளா?
பதில்: தற்கொலைக்கான பஞ்சன்நாமா எழுதுகையில் தற்காலிக மூளைக்கோளாறால் செய்து கொண்ட தற்கொலை என இங்கிலாந்தில் குறிப்பிடுவார்கள். (Suicide while in a temporary state of unsound mind) என குறிப்பிடுவார்கள். அதே சட்டமுறையை பின்பற்றும் நம்மவர்களும் அவ்வாறுதான் கூறுவார்களாக இருக்கும். மற்றப்படி ஏழைகள்தான் தற்கொலை செய்து கொள்வார்கள் என இல்லை.

19. வாழும் காலத்தில் சவுகரியமாக, சந்தோஷமாக வாழ வழிகள்?
பதில்: வேலியில் போகும் ஓணானை மடிமீது போட்டுக் கொள்ளாமல் இருந்தாலே பாதி வெற்றிதான்.

20. காதல் திருமணம் செய்யும் பெண்ணுக்கு ஓடு காலி என்ற பட்டத்தை இந்த சமூகம் கொடுப்பது நியாயமா?
பதில்: இது கேஸ் பை கேஸ் பார்க்க வேண்டிய விஷயம்.

21. வாங்கிய கடனை திரும்பக் கேட்பதை விரும்பவர் யார்?
பதில்: கேள்வி புரியவில்லையே. கொடுத்த கடனை திரும்பக் கேட்பவர்கள் உண்டு, வாங்கிய கடனை திரும்பக் கொடுப்பவர்கள் உண்டு. இதென்ன வாங்கிய கடனை திரும்பக் கேட்பவர்கள்?

ஓகோ, வாங்கிய கடன் அப்படியே இருக்க மேலும் கடன் கேட்பவரா? எங்கள் சி.பி.டபிள்யூ.டி பம்ப் ஆப்பரேட்டர் விஸ்வநாதனை பார்த்து விட்டீர்களா என்ன?

22. இந்த பூலோகத்தில் மிகவும் எளிதானது எது?
பதில்: பிறருக்கு ஆலோசனை கூறுவது

23. இந்த பூலோகத்தில் மிகவும் கடினமானது எது?
பதில்: பிறருக்கு ஆலோசனை கூறாமல் இருப்பது.

24. இன்பம் - துன்பம் எங்கே பிறக்கிறது?
பதில்: அவரவர் பார்வை கோணத்தில் பிறக்கிறது.

25. பரம ஏழைக்கும், அதீத பணக்காரனுக்கும் வித்தியாசம்?
பதில்: அதுதான் கேள்வியிலேயே பதிலும் உள்ளதே. ஒற்றுமை என்னவென்றால் இருவருமே பணத்தின் அருமை அறிந்தவர்கள்.

26. பொதுவாய் பேச்சில் வல்லவர்கள் ஆண்களா? பெண்களா?
பதில்: ஆண் எனச் சொன்னால், ஆண் வாசகாள் ஏத்துப்பாள். பெண்வாசகாள் ஒத்துக் கொள்ளமாட்டாள். அவாளோட பேசி ஜெயிக்க நம்மால் ஏலாது.

27. கணவன் - மனைவி இருவரும் அரசாங்க வேலையில் இருந்தும் மாதக் கடைசியில் ?
பதில்: மாதக்கடைசியில் என்ன? பணக்கஷ்டமா? எவ்வளவு சம்பாதித்தாலும் சிலருக்கு போதாது, என்ன செய்யலாம்.

28. திருமணத்திற்கு பின் வேலைக்கு போகும் பெண்ணின் மகிழ்ச்சி குறைகிறதா இல்லை?
பதில்: அது அவளை மணக்கும் ஆணின் மகிழ்ச்சி குறைகிறதா இல்லையா என்பதை பொருத்துள்ளது.

29. கொரியாவின் இமாலாய முன்னேற்றத்துக்கு காரணம் என்ன?
பதில்: தென் கொரியாவைத்தானே குறிப்பிடுகிறீர்கள்? சுதந்திரப் பொருளாதாரம்தான். முதன்முறையாக அறுபதுகளின் துவக்கத்தில் இனிமேல் இந்த நாட்டிற்கு அமெரிக்க பொருளாதார உதவி தேவையில்லை என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அதன் பிறகு நாற்பது ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டன.

30. விளம்பரங்கள் இல்லாத பத்திரிகைகள்?
பதில்: எனக்குத் தெரிந்து திருமண பத்திரிகைகள்தான்.

31. தமிழ் நாட்டில் ஆண்களை விட, படிப்பில் பெண்கள் சிறந்து விளங்குவது எப்படி?
பதில்: தமிழ்நாடு என்றில்லை, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இதுதான் நிலை.

32. மன அமைதிக்கு வழிகள்?
பதில்: பகவத் கீதை சொல்வதுதான். கடமையை செய், பலனை எதிர்பாராதே. முடியுமா எல்லோராலும்?


எம்.கண்ணன்
1. இண்டியன் ஸ்டைல் கழிவறையை ஏன் அமெரிக்காவில் இண்டியன் ஜான் எனவும் இந்தியாவில் அந்த பீங்கானை ஒரிசா கம்மோடு எனவும் சொல்லுகிறார்கள் ? ஒரிசாவுக்கும் இதற்கும் என்ன தொடர்பு ?
பதில்: எனக்கு தெரிந்து அதற்கு பம்பாய் கக்கூஸ் என்றுதான் பெயர். மற்றப்படி ஒரிசா இங்கு எப்படி வந்தது எனத் தெரியவில்லை

2. இரட்டையர்கள் தவிர லட்சுமணன் என்ற பெயரை பெரும்பாலும் நகரத்தார் சமூகத்தில் மாத்திரம் குழந்தைகளுக்கு வைக்கிறார்களே (வைத்தார்களே). லட்சுமணன் (லெட்சுமணன்) நகரத்தார் என்ன கனெக்ஷன்?
பதில்: ஐயர்களில் லட்சுமணன் எனப் பெயர் வைக்கிறார்களே. ஏ.லட்சுமணசாமி முதலியார் செட்டியார் இல்லையே. நீங்கள் சொல்வது எனக்கு புதிராக உள்ளது.

3. ஒருவர் இறந்த பிறகு, அவரது வலைப்பதிவுகள், மெயில் போன்றவை என்ன ஆகும் ? அதுவும் அவரது வீட்டாருக்கோ வாரிசுகளுக்கோ அவரது இணைய / மெயில்/blogger ஐடிக்கள், பாஸ்வர்டு தெரியாத நிலையில் ? பதியப்பட்ட பதிவுகளில் உள்ள content யாருக்குச் சொந்தம் ?
பதில்: வலைப்பதிவுகள், மெயில் ஆகியவர்றை வைத்து என்ன செய்வது? அவற்றில் உள்ள விஷயங்களுக்கான காப்புரிமை இறந்தவர்களின் வாரிசைத்தான் சாரும். அதில் எந்த குழப்பமும் இல்லை.

4. சில வாரங்களாக பலமான வெயிலால் குறைந்திருந்த பன்றிக்காய்ச்சல் பரவல் - மழை / குளிரால் மீண்டும் அதிகரிக்குமா? நரேந்திர மோடிக்கு பன்றிக் காய்ச்சலாமே ? (குஜராத்தில் மழை இல்லாத போதே) ரஷ்யாவிற்கு சென்று வந்ததாலா ?
பதில்: அவருக்கு எப்போது நோய்தொற்று ஏற்பட்டது என்பதுபற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

5. தேவர் நினைவு தினத்தன்று மாலை மரியாதை செய்வதால் மட்டும் அரசியல் கட்சிகளுக்கு தேவர் சமூக ஓட்டுக்கள் கிடைத்துவிடுமா? எந்த நம்பிக்கையில் எல்லா கட்சிகளும் சிலைகளுக்கு முன் வரிசையாக நிற்கின்றனர்?
பதில்: கலந்து கொள்வதால் ஓட்டு கிடைக்கும் என்பது நிச்சயமில்லைதான். ஆனால் அதே சமயம் கலந்து கொள்ளாவிட்டால் தேவர்கள் ஓட்டு கிடைக்காது என்பதும் நிச்சயமாயிற்றே. நீங்கள் கட்சித் தலைவராக இருந்தால் என்ன முடிவு எடுப்பீர்கள்?

6. தேவர் மகன் படம் வெற்றி அடைந்ததற்குக் காரணம் - திரைக்கதையா, வசனமா? கமல் மற்றும் சிவாஜியின் நடிப்பா ? இல்லை கதை தொட்ட ஜாதீய கருவா?
பதில்: முதற்கண் ஒன்று சொல்ல விரும்புவேன். தேவர் மகன் ஜாதீய கரு எதையும் தொடவில்லை. மற்றப்படி நீங்கள் சொன்ன மர்ற காரணிகள்தான் கதை வெற்றியடைய துணைபுரிந்தன.

7. இளையராஜாவின் எவர் கிரீன் பாடல்களை ஏன் இன்னும் யாரும் டிஜிட்டலில் மல்டி டிராக்கில் ரீ ரெக்கார்ட் செய்ய வில்லை? பழைய கர்நாடக இசை கச்சேரிகளை பலரும் டிஜிட்டலில் கொண்டு வருவதைப் போல ஏன் செய்யவில்லை?
பதில்: மன்னிக்கவும் டிஜிட்டலில் கொண்டுவருவது என்றால் என்ன என்பது எனக்குத் தெரியாது. ஆகவே பின்னூட்டத்தில் வால்பையன் யாராவது கூறட்டும். நமக்கும் சங்கீதத்துக்கும் ரொம்ப தூரம்.

8. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் மனைவி தமிழ் ஐயங்காராமே ? இதற்காகவும் ஒரு போராட்டம் நடக்குமா?
பதில்: தெரியவில்லையே. இது ரொம்ப முக்கியமா?

9. வீரமணி தனது மகனை பொறுப்பில் கொண்டு வைத்திருப்பதைப் பற்றி பத்திரிக்கைகள் அதிகம் மூச்சுவிடக் காணோமே ? (ஒன்றிரண்டு தவிர)
பதில்: திராவிட கழகம் வீரமணியின் பிரைவேட் கம்பெனியாகி பலகாலம் ஆகிவிட்டது. இது என்ன அதிசயம்?

10. கேள்வி பதில் பதிவுகள் போல வாரம் ஒரு நாள் பிரெஞ்சும், ஜெர்மனும் (வெவ்வேறு நாட்களில்) கற்றுக் கொடுங்களேன் - சின்ன சின்ன வார்த்தைப் பிரயோகங்கள், தினசரி வாழ்க்கைக்குத் தேவையான சொற்கள், ஜெர்மனி அல்லது பிரான்ஸ் செல்லும் தமிழ் மக்களுக்கு உபயோகமாக இருக்குமே ? உங்கள் பாணியில் கற்றுக் கொடுத்தால் எல்லோருக்கும் இலகுவாக புரியும் (இணையத்தில் படித்து கற்றுக் கொள்வதை விட). (நிச்சயம் உங்களுக்குப் போட்டியாக யாரும் மொழிமாற்ற வேலையில் இறங்கிவிடமாட்டார்கள் :-))
French / German for dummies என்பது போல சுமார் 25 பதிவுகள் பிரெஞ்சுக்கும் 25 பதிவுகள் ஜெர்மனிக்கும் போடலாம். அல்லது ஒரே பதிவில் - அதே தமிழ்/ஆங்கில சொற்களுக்கு பிரெஞ்சில் என்ன, ஜெர்மனில் என்ன என கட்டம் கட்டி சொல்லித் தரலாம்.
பதில்: ஆளைவிடுங்கள் சார். நமக்கும் சொல்லித் தருவதற்கும் ரொம்ப தூரம். அதற்கான பொறுமை என்னிடம் சுத்தமாக லேது.


ரமணா
1. அரசின் தொலைபேசி கொள்கையின்படி தனியார் கம்பெனிகள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை (அரசுக்கு ஒரு லட்சம் கோடி நஷ்டம்-) கட்டாமல் உள்ளது போல் வரும் செய்திகள் பற்றி?
பதில்: எல்லாம் பெரிய இடத்து விவகாரம். அதனால்தானே கண்கள் இதயம் நனைந்தது, கண்கள் பனித்தன?

2. தனியார்மயம்,தாராள மயம் எல்லாம் வல்லான் பொருள் குவிக்கும் பகல் கொள்ளைக்குத்தானா?
பதில்: தனியார்மயம், தாராளமயம் இல்லாதபோதே அம்பானிகள் இந்தியாவையே விலைக்கு வாங்கவில்லையா? எல்லா காலங்களிலும் இதுதான் நடக்கிறது. நான் சொன்னது சுதந்திர பொருளாதாரத்தில் வெளிப்படையான போட்டியில் பொருள் ஈட்டுபவர்கள் பற்றி. அதில் சலுகைகளுக்கு இடமில்லை. இப்போதைய பொருளாதார அமைப்பில் அதற்கான சாத்தியக் கூறுகளாவது உண்டு. சோஷலிச சமுதாயத்தில் அவையும் கிடையாது என்பதுதான் நிஜம்.

3. மத்திய, மாநில தலைவர்கள் மெளனம் என்ன சொல்கிறது?
பதில்: இதைத்தான் கள்ள மௌனம் என்பார்கள்.

4. கூட்டணி என்பதே கூட்டுக் கொள்ளை என்றாகிவிடும் போலுள்ளதே?
பதில்: அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது. முறைவைத்து கொள்ளை அடிக்கிறார்களே.

5. எல்லோரும் சேர்ந்து (சில சுயநல அரசியல் கட்சிகள், நியாயம் தவறும் சில முதலாளிகள், காலம் மாறியதை உணராத ஊழியர்களில் ஒரு பகுதியினர் கண்ணை மூடிக்கொண்டு வாழ்க எனக் கோஷம் போடும் முதலாளித்துவ ஜால்ராக்கள் அனைவரும் ) நல்லமுறையில் இயங்கும் அரசுத்துறைகளுக்கும் மங்களம் பாடிவிடுவார்கள் என வரும் செய்திகள்?
பதில்: நல்லமுறையில் இயங்கும் அரசுத்துறைகள்? எங்கே, எங்கே?


கந்தசாமி
அதிரடியாக உங்களுக்கு வாய்ப்பு தரப்பட்டால் இந்தப் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பீர்கள்?
டிஸ்கி: கேள்விகள் வந்துவிட்டதால்தான் கூறுகிறேன். நான் வெளியில் இருப்பவன், எனக்கே தோன்றும்போது அவை சம்பந்தப்பட்டவர்களுக்கும் தோன்றாது இருக்குமா? ஆகவே நான் கூறுவது கும்மியடிப்பதற்குத்தான் சமம். இருப்பினும் அதையும் அடித்தால் போயிற்று.

1. கர்நாடக மாநில பிஜேபியில் நடக்கும் தள்ளுமுள்ளு?
பதில்: சண்டைபோடும் எல்லா கோஷ்டியினருக்கும் கன்னம் பழுக்க அறைகள் கொடுத்து முதலில் கட்சியை காப்பாற்றுங்களடா பசங்களா என்பேன்.

2. நக்சல் பிரச்சனை?
பதில்: வேரோடு அழிக்கப்படவேண்டியதுதான். அதே சமயம் அது உருவாகக் காரணமாக இருந்தவற்றையும் கவனித்து சரி செய்ய வேண்டும்.

3. முல்லைப் பெரியாற்றில் மற்றுமொரு அணை?
பதில்: நான் கேரள முதல் மந்திரியாக இருந்தால் ஆதரிப்பேன். தமிழக முதல் மந்திரியாக இருந்தால் எதிர்ப்பேன். வேறு என்ன செய்யவியலும்?

4. தொலைபேசித்துறை டெண்டர்/லைசென்ஸ்/கட்டணக் குறைப்பு விவகாரங்கள்?
பதில்: கட்டணக்குறைப்புகள் நுகர்வோருக்கு மாற்றித் தரும் வழிகளை உருவாக்குவேன்.

5. கலைஞர்-ராகுல் கண்ணாமூச்சி?
பதில்: அது சீரியசாகப் போய் திமுக காங்கிரஸ் கூட்டு முறிய ஏற்பாடு செய்வேன்.

6. ஸ்விஸ் வங்கி கறுப்புப் பண கசமுசா?
பதில்: எனக்கு நேரம் இருக்கையிலேயே அந்த கணக்குகள் விவரங்களை அரசுக்கு வருமாறு அவற்றைப் பெற முயற்சிப்பேன். ஏனெனில் எனக்கு அனத வங்கியில் கணக்கு ஏதும் இல்லை, ஹி ஹி.

7. ஸ்டாலின் - அழகிரி பதவிப் போட்டி?
பதில்: இருவருக்கும் ஒரு பொது எதிரியை முன்னுக்கு கொண்டுவரும் வேலைகள் செய்வேன்.

8. சன் டீவி-கலைஞர் டீவி புதுப்பட டீல்?
பதில்: ஜீடிவிக்கு ஏதேனும் சாதகம் செய்துவிடலாமா?

9. இலங்கை தமிழர் மறு வாழ்வு இந்தியாவில்?
பதில்: கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டேன். அகதிகள் இலங்கைக்கு திரும்ப ஏதுவான நிலையை கொண்டுவர பாடுபடுவேன்.

10. சீனா/பாகிஸ்தான்/இலங்கை ராணுவ அத்துமீறல்கள்?
பதில்: எல்லைப்புறப் பாதுகாப்பை பலப்படுத்துவது தவிர வேறு என்ன செய்யலாம் என்கிறீர்கள்? சீனாவுக்கு ஜால்ரா போடுபவர்களை கடுமையாக கண்காணிப்பேன்.


எஸ்.குமார்
1) வெண்ணை போன்ற வழுக்கும் இடையும், பந்துகிண்ணம் போன்ற வட்டமான அழகான மார்பும், கிறங்கடிக்கும் கண்களும், விஜய், ரஜினி, விக்ரம் என முன்னணி ஸ்டார்களுடன் நடித்திருந்தாலும் ஸ்ரேயா தமிழில் பெரிய அளவில் முன்னுக்கு வராததற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள் ?
பதில்: நீங்கள் குறிப்பிட்ட லட்சணங்கள் இப்போதைய சினிமா கதாநாயகிகளுக்கு டீஃபால்ட் தகுதி. அவை மட்டும் போதுமா?

2) வீட்டு வசதி வாரிய நிலம் விஜய்க்கு ஒதுக்கப்பட்டுள்ளதே ? அவர் அவ்வளவு ஏழையா ? இல்லை நாட்டுக்கு ஏதேனும் தொண்டு புரிந்துள்ளாரா?
பதில்: என்ன, உண்மையாகவா? அப்படியிருந்தால் அதற்கு அவருக்கு ஒரு யோக்கியதையும் கிடையாது என்பதுதான் நிஜம்.

3) சமீபத்தில் சென்று வந்த கோயில் உலா பற்றிய விரிவான பதிவுகள் வருமா?
பதில்: இதில் முக்கியமானதே எனது மடிக்கணினியின் சாத்தியக்கூறுகளை நேரடியாகக் கண்டு கொண்டதுதான். அது பற்றி எழுதி விட்டேன், பின்னூட்டங்களில். மற்றப்படி வழக்கமான எல்லா உலாக்கள் போலத்தான் இதுவும் இருந்தது. தனியாக சொல்லும்படி ஒன்றும் இல்லை.


மீண்டும் அடுத்தவாரம் கேள்விகள் ஏதேனும் இருந்தால் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது