"இன்னும் கேள்விகளா, அடப்பாவிகளா" என்று நம்பியாரை மிமிக் செய்யும் விவேக் ரேஞ்சுக்கு கத்தத் தோன்றலாம். விடைகளை அளித்து விட்டு கத்துங்களேன்.
1. தில்லியிலிருந்து ஜெயப்பூர் செல்லும் நெடுஞ்சாலை. குர்காம் தாண்டியவுடன் ஒரு ரௌண்ட் டாணா வரும். அதிலிருந்து 4-க்கும் மேல் பாதைகள் பிரியும். ஒரு பாதை மூலம் ஆள்வார் செல்லலாம், இன்னொரு பாதை மூலம் பரீதாபாத், இன்னொரு பாதை ஜெயப்பூருக்கு இட்டுச் செல்லும், இத்யாதி இத்யாதி. ஒரே ஒரு கைகாட்டி மரம் எல்லா பாதைகளையும் கவர் செய்யும். நேரம் இரவு 12 மணி. ரோட்டில் ஈ காக்காய் இல்லை. அன்று மாலை அடித்தப் பேய்க்காற்றில் கைகாட்டி மரம் கீழே விழுந்திருக்கிறது. தில்லியிலிருந்து வந்த மாருதிகார் ஓட்டுனர் அந்த இடத்தில் திருதிருவென்று விழித்துக் கொண்டிருக்கிறார். வண்டியின் உள்ளே சிடுமூஞ்சி முதலாளி. ஜெயப்பூருக்கு உடனே செல்ல வேண்டும். இப்போது ஓட்டுனர் வழியை எப்படிக் கண்டுபிடிப்பார்? அவர் அந்த ஏரியாவுக்குப் புதிது, சுற்றிலும் உதவிக்கு யாரும் இல்லை வழி சொல்ல. முதலாளிக்கும் ஒன்றும் தெரியாது.
2. ஒரு குடியிருப்புக் காலனி, 500 வீடுகள் கொண்டது. கட்டி முடிக்கும் தருவாயில்தான் முக்கியமானப் பொருள் ஒன்று வாங்கவில்லை என்று தெரிந்தது. அப்பொருளின் விலை பின் வருமாறு. ஒன்றுக்கு ஐந்து ரூபாய், பத்துக்கு இருவது ரூபாய், 100க்கு முப்பது ரூபாய், 500-க்கும் முப்பது ரூபாய்தான். அது என்னப் பொருள்?
3. சோமுவுக்கு காலை 5 மணிக்கு வண்டி பிடிக்க வேண்டும். அதற்கு அவன் வீட்டிலிருந்து விடியற்காலை மூன்று மணிக்கே கிளம்ப வேண்டும். அலாரம் 2.30-க்கு வைத்து விட்டு தூங்குகிறான். திடீரென 1 மணி வாக்கில் மின் வெட்டு. விழித்துப் பார்த்தால் கடிகாரம் ஓடவில்லை. ஒரே எரிச்சல். எப்போதிலிருந்து ஓடவில்லை என்பது தெரியவில்லை. வேறு கடிகாரமும் இல்லை. ட்ரான்ஸிஸ்டர் ரேடியோவும் இல்லை. மணி எப்படிக் கண்டு பிடிப்பது? இம்மாதிரி ஒரு பிரச்சினையை சஞ்ஜீவ்குமார் நடித்தப் படத்தில் காட்டியிருக்கிறார்கள். இது க்ளூ.
4. ஜெர்மன் பேப்பரில் வந்த செய்தி. "100,000 கிலோகிராம் எடையை சாம்பியன் தூக்கினார்." யார் இந்த சூப்பர் மேன்?
5. தில்லியிலிருந்து 10 மணி காலை ஆக்ராவை நோக்கி ஒரு ரயில் புறப்படுகிறது. மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் வருகிறது. அதே 10 மணி காலை ஆக்ராவிலிருந்து ஒரு ரயில் புறப்பட்டு தில்லியை நோக்கி மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வருகிறது. இரண்டு ரயில்களும் ஒன்றையொன்று கடக்கையில் எந்த ரயில் தில்லிக்கு அதிக சமீபத்தில் இருக்கும்?
6. நாட்டின் எல்லைக்கோடு தெற்கு வடக்காக உள்ளது. அங்கு காவலுக்கு இருவர். ஒருவர் தெற்கை நோக்கி, இன்னொருவர் வடக்கை நோக்கி. அதில் ஒருவன் இன்னொருவனைக் கேட்கிறான், "என்ன இளிப்பு வேண்டியிருக்கிறது" என்று. வேறு திசையை நோக்கிக் கொண்டிருந்தவன் எப்படி இதைக் கண்டுபிடித்தான்?
7. பாரீஸில் ஒருவன் மனைவிக்கு பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவன் குடும்பத்திலோ அல்லது அவன் மனைவியின் குடும்பத்திலோ இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாக சரித்திரமே இல்லை. டாக்டரிடம் கேட்க அவர் கண்ணாடியைக் கழற்றி அதைத் துடைத்துக்கொண்டே கூறினார், "இதோ பாரப்பா, உன் மனைவியின் இரட்டைக் குழந்தை பிரசவத்துக்கு இரு காரணிகள் பொறுப்பு" எனக் கூற, அவன் ஒன்றும் பேசாமல் தன் பக்கத்து வீட்டிலிருக்கும் இரு சகோதரர்களை செவுளில் அறைந்தான். ஏன்?
க்ளூ: இதற்கு விடை ஸ்ரீரங்கன், ரோஸா வசந்த், காஞ்சி பிலிம்ஸ், மஸ்ட் டூ அல்லது ரவியா போன்றவர்தான் விடையளிக்க முடியும்.
அன்புடன்,
டோண்டு ராகவன் .
டி ராஜ் அவர்களே, 4-ஆம் கேள்வியின் விடை தவறு, 6-ஆம் கேள்விக்கான விடை சரி.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
1. அந்த வழிகாட்டியை எடுத்து மீண்டும் நடுகிறான்... அவனுக்கு டில்லி வழி தெரியும் என்பதால் டில்லி கைகாட்டி டில்லி திசையை நோக்கி இருக்கும்படி வைக்கிறான். மற்ற வழிகள் தானாக தெரிகின்றன.
ReplyDeleteடி ராஜ் & முகமூடி, போட்டொஃபினிஷ் வெற்றி உங்களுக்கு, கைக்காட்டி கேள்வியைப் பொருத்தவரை.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
பொதிகை மைந்தன் 4 நிமிடம் தாமதமாக வந்தீர்கள். இருந்தாலும் கங்க்ராட்ஸ்.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
5. இரண்டு ரயில்களுமே டில்லிக்கு ஒரே தூரத்தில் தான் இருக்கும்...
ReplyDeleteதூரத்திற்கும் இதற்கும் சம்மந்தமில்லை ராஜ். இரு ரயிலளும் சந்திக்கும் போது இரண்டுமே டில்லிக்கு ஒரே தூரம்தான்
ReplyDeleteடி ராஜ் அவர்களே, ரயில்கள் வேவ்வேறு வேகத்தில் வருகின்றன. எப்படி அவை நடுவில் சந்திக்கும்?
ReplyDeleteமுகமூடியின் விடைதான் சரி.
ரயில்கள் எங்கு சந்தித்தாலும் அவை இரண்டும் தில்லியிலிருந்து ஒரே தூரத்தில்தான் இருக்கும். வண்டியின் வேகம் உங்களைக் குழப்புவதற்காகக் கூறப்பட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
4. சூப்பர்மேன் தான். மனிதரை போல் 1000 மடங்கு சக்தி கொண்டவர் சூப்பர்மேன். மனிதன் 100 கி தூக்குவதாக கொண்டால் சூப்பர்மேன் 100000 கி தூக்குவார்
ReplyDelete"சூப்பர்மேன் தான்."
ReplyDeleteதவறான விடை முகமூடி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
4. ராக்கெட்
ReplyDeleteராக்கெட் தவறான விடை. ஜெர்மன் பேப்பர்தான் க்ளூ.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
முகமுடி,ராஜ் கலக்குறீங்க போங்க. சரி டோன்ட் எப்ப பதில் சொல்வீங்க.
ReplyDeleteபலே புலிக்குட்டி. 100 கிலோவை தூக்க முடியாதா என்ன.
ReplyDeleteராஜா ராம்தாஸ், நான்தான் சரியான பதில்களை உடனுக்குடன் acknowledge செய்து விடுகிறேனே. இன்னும் கேள்வி எண்கள் 2, 3 மற்றும் 7 பதிலுக்காகக் காத்திருக்கின்றன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
3. shout / make noise. The neighbour will yell, 'why the hell at ...AM in the morning, you are acting like this'. You get the time.
ReplyDeleteஇரா.முருகன அவர்களே, உங்கள் விடை சரியே. பதி, பத்னி அவுர் வோ என்ற ஹிந்தி படத்தில் சஞ்ஜீவ் குமார் பெரிதாகப் பாட ஆரம்பிப்பார்.
ReplyDeleteஇன்னும் கேள்விகள் 2 மற்றும் 7 பாகியிருக்கின்றன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
3. பக்கத்து வீட்டுக்காரர் நேரத்தை சொல்லாமல் 'ஏன்யா காலங்கார்த்தால கழுத்தறுக்குறே?' என்று சவுண்டு விட்டால்...? (just kidding!)
ReplyDeleteThis item is the number plates for the door numbers. I am not sure whether this is correct answer.
ReplyDeleteSimulation
3. பக்கத்து வீட்டுக்காரர் நேரத்தை சொல்லாமல் 'ஏன்யா காலங்கார்த்தால கழுத்தறுக்குறே?' என்று சவுண்டு விட்டால்...? (just kidding!)
ReplyDeleteஅப்போது அவரையே நேரம் கேட்டு, சொல்லும்வரை பாடப்போவதாகச் சொல்லிவிட்டால் போகிறது (just kidding!)
அன்புடன்,
டோண்டு ராகவன்
This item is the number plates for the door numbers. I am not sure whether this is correct answer.
ReplyDeleteசரியான விடை, சிமுலேஷன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்னும் ஒரு கேள்விதான் பாக்கி, ரோசா வசந்த், ரவியா, காஞ்சி பிலிம்ஸ் நீங்கள் எல்லாம் எங்கே போனீர்கள்?
2.This item is the number plates for the door numbers. I am not sure whether this is correct answer.
ReplyDeleteSimulation
இது ஏதோ french சிலேடை என்று மட்டும் தெரிகிறது...
ReplyDelete"இது ஏதோ french சிலேடை என்று மட்டும் தெரிகிறது..."
ReplyDeleteமுற்றிலும் சரி. நீங்கள் ஊகித்ததற்குப் பாராட்டுக்கள்.
இன்னொரு க்ளூ தருகிறேன். பொளேரென்று செவுளில் அறை வாங்கிய இருவரும் தபால்காரர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
REASON is TWO "factors"...facteur = postman in french
ReplyDeleteசரியா டோண்டு ??
அப்பாடா வந்தீர்களா ரவியா. நான்தான் சொன்னேனே பிரெஞ்சு தெரிந்திருக்க வேண்டும் என்று.
ReplyDeleteமருத்துவர் பிரெஞ்சில் கூறியதன் ஆங்கில மொழிபெயர்ப்பு:
"Two factors are responsible for your wife's condition" (Il s'agit de deux facteurs qui en sont responsables.")
அவ்வளவுதான் பொளேர் என அறை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பி.கு. பிரெஞ்சு தெரியாமலேயே இதை ஊகித்த ஸ்ரீகாந்துக்கு பாராட்டுக்கள்.
அனைவரும் பதில் சொன்னவுடன் விடைகளை recapitulative செய்து கடைசியில் போடலாமே "மிசியே" ! தாமதமாக இப் பதிவிற்கு (என்னைப் போல்)வருபவர்களுக்குக்காக ...
ReplyDelete"அனைவரும் பதில் சொன்னவுடன் விடைகளை recapitulative செய்து கடைசியில் போடலாமே "மிசியே" !"
ReplyDeleteபோடலாமே.
1. கைக்காட்டி மரத்தை மறுபடியும் நிறுத்தி தில்லியிலிருந்து வந்த பாதைக்கு தில்லி குறியீட்டை அலைன் செய்ய வேண்டும்.
2. நம்பர் ப்ளேட்டுகள். ஒரு ப்ளேட்டில் ஒரு ஒற்றை எண்.
3. ஜன்னலைத் திறந்து வைத்துப் பாடினால் பக்கத்து வீட்டுக்காரன் யாரடா காலை ஒரு மணிக்குப் பாடுறான் என்று கத்த மாட்டானா?
4. ஜெர்மன் மொழியில் தசமப் புள்ளிக்கு பதில் தசமக் காற்புள்ளி போடுவார்கள்.
5. இரண்டு ரயில்களும் ஒன்றையொன்று கடக்கும்போது தில்லியிலிருந்து ஒரே தூரத்தில்தான் இருக்கும்.
6. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம் நிற்பார்கள்.
7. ஃபிரெஞ்சில் facteur என்றால் காரணி மற்றும் தபால்காரன் என்று பொருள். பாரீஸில் சாதாரணமாக ஃபிரெஞ்சு பேசுவார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மன்னிக்கவும் அரசு அவர்களே. உங்கள் பின்னூட்டம் இப்பதிவுக்கு சம்பந்தமில்லாததால் நீக்கப்பட்டது.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
//பாரீஸில் சாதாரணமாக ஃபிரெஞ்சு பேசுவார்கள்.//
ReplyDeleteலொள்ளூ??
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஹல்வாசிடியின் பெயரில் வந்தது நான் குறிப்பிட்ட மனம் பிறழ்ந்த பொறம்போக்குதான். ஆகவே அப்பின்னூட்டம் நீக்கப்பட்டது.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்