நிரந்தர பக்கங்கள்

8/28/2009

மென்பொருள் நிபுணராக விஜயகாந்த்

பதிவர்களின் எவர்கிரீன் இலக்காக இருப்பவர் கேப்டன் விஜயகாந்த். அவரை கருப்பு நம்பியாராக ஆக்கிய வலைமனையின் இப்பதிவு எனது நினைவலைகளை 2005 டிசம்பர் மாதத்துக்கு பின்னோக்கித் தள்ளிவிட்டன. அப்போது நான் இட்ட இப்பதிவை இப்போது மீள்பதிவு செய்கிறேன். மாற்றங்கள் ஏதும் தேவைப்படாது இப்போதும் அது current ஆகவே காட்சியளிக்கிறது என்றால் அதற்கு முக்கியக் காரணமே கேப்டனின் மாறாத அலம்பல் டயலாக்குகள்தான். Over to மென்பொருள் நிபுணராக விஜயகாந்த்!!!!!

என் இனிய நண்பர் ரவி பாலசுப்பிரமணியன் எனக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலைப் பதிவாக்க அன்புடன் அனுமதி கொடுத்தார். "துணைவியின் பிரிவு" பற்றி பதிவு போட எனக்கு உதவிய அவரேதான் இது. அவருக்கு என் நன்றி உரித்தாகுக. மொழிபெயர்ப்பில் சிறிது விளையாடி இருக்கிறேன். மன்னிக்கவும். ஆங்கில் மூலத்தையும் பார்க்கலாம்.

தன் மென்பொருள் அறிவை வைத்து கேப்டன் அவர்கள் தீவிரவாதிகளைப் பிடிக்கிறார்.

மென்பொருள் வித்தகராக இப்படத்தில் விஜயகாந்த் என்ட்ரி செய்கிறார்.



தீவிரவாதிகளைப் பிடிக்க விஜயகாந்த்தால்தான் முடியும் என்று கம்பெனி தலைமை அதிகாரி அவரிடம் கூறுகிறார்.


புது ப்ராஜக்டை எப்படி முடிப்பது என்னும் தீவிர சிந்தனையில் விஜயகாந்த்.


ப்ராஜக்டை முடித்த பின்பே குளியல் என்பதில் கேப்டன் திடமாக இருக்கிறார்.


ப்ராஜக்டுக்கு தேவையான அறிவை தன் கைமுட்டிக்குள் வைத்திருக்கிறார் அவர். (கற்றது கைம்மண் அளவு?)


டெஸ்ட் செய்பவர்கள் தன்னுடைய மென்பொருளில் பக்ஸ் எதையும் இடக்கூடாது என்று எச்சரிக்கிறார் கேப்டன்.


கேப்டனின் ப்ரொக்ராமிங் திறமையைக் கூறவும் வேண்டுமோ?


தொப்புளில் பம்பரம் விட்டாலும் அவர் தன் கொள்கையை மறக்கவே மாட்டாராக்கும்.


இன்ஸ்பெக்டர் மன்சூர் அலி கானுக்கு தீவிரவாதிகளைப் பிடிக்கும் தன் ப்ராஜக்டை அவர் விவரிக்கிறார்.


பயங்கரத் தீவிரவாதிகள் அவர் வீட்டை நொறுக்கி அவர் அன்னையையும் கடத்தி விடுகின்றனர்.


அப்படிப்பட்ட பயங்கரத் தீவிரவாதிகளில் ஒருவர் இவர்தான். (அவர் பெயர் காசிம் அய்யர்)


தன் ப்ராஜக்டைப் பற்றித் தெருத்தெருவாகப் பிரசாரம் செய்கிறார் அவர்.


புரியாதவர்களுக்காகப் பாடியும் காட்டுகிறார்.


அவர் குழு உறுப்பினர்கள் அவருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி பின் பாட்டுப் பாடவும் செய்கின்றனர் (இசை: எம்.பி. ஸ்ரீனிவாசன், பொதிகை)


ப்ராஜக்ட் வெற்றிகரமாக முடிந்து கம்பெனியின் தலைமை நிர்வாகி ஆகிறார் அவர். பழைய தலைமை அதிகாரிக்கு சங்குதான்.


அவருடைய வெற்றியை எல்லோரும் கொண்டாடுகின்றனர். புது வேலையையும் கையில் எடுக்கிறார் அவர்.

இப்போது வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். நான்தான் இப்பதிவைப் போட்டேன் என்று யாரும் அவரிடம் போட்டு தந்து விடாதீர்கள். எதற்கும் இருக்கட்டும் என்று மாறுவேடத்தில் செல்கிறேன்.



அன்புடன்,
டோண்டு ராகவன்

58 comments:

  1. சார் விஜயகாந்த் படங்களவிட உங்க மாறுவேட படம் சூப்பரா இருக்கு.

    உங்கள் கைவண்ணத்திற்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி ஜோசஃப் அவர்களே,
    என் மாறுவேடப் படம் தர்சன் அவர்களின் தங்கையின் உபயம். எனக்கு ரொம்பப் பிடித்த படம். அது பற்றியும் பதிவு போட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/07/blog-post_31.html
    அதிலும் மத்தளராயன் என்ற பெயரில் போலி டோண்டு இட்டப் பின்னூட்டத்தையும் பார்க்கவும். கடைசிக்கு முந்தையப் பின்னூட்டம் அது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. ரவி அவர்கள் எனக்கனுப்பிய மின்னஞ்சலின் நகல் இங்கிடப்படுகிறது.
    Sir,
    Idhu aniyayam.neenga mattum maru veshathula escape ayiteenga.enna pera pottu sikka vittuteengale.
    Desiya Munnetra Dravidar Kalagam lendhu aatkal vandu left leg-i sevuthula vachu right leg-ala uthaipanga.Aiyo nenaikave mudiyala.
    Ravi

    பரவாயில்லை ரவி. கேப்டனின் ஆட்களை நான் அவ்வாறெல்லாம் செய்யாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அவர்களும் இடது காலை சுவத்தில வைச்சு வலது காலால உதைக்க மாட்டாங்க, வலது காலைத்தான் சுவத்திலே வைச்சு இடது காலாலே உதைப்பாங்க.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. பின்னங்காலால கேப்டன் பாகிஸ்தான் தீவிரவாதியை உதைக்கிற படம் இல்லையேண்ணா...அதை சேர்த்தா இது பர்ப்பெக்ட்

    ReplyDelete
  5. நீங்க சொல்றதும் சரிதான் முத்து அவர்களே. கேள்வியை ரவி அவர்களுக்கு திருப்புகிறேன். நானும் இணையத்தில் தேடிப்பார்க்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. உஹ¥ம், விசயகாந்துன்னா புள்ளிவிவரம், புள்ளிவிவரம் சொல்லாத கேப்டன் படமா? மொதல்ல அதே சேருங்க சாரே :-)

    ReplyDelete
  7. சிரிக்க முயற்சி பண்ணினேன். முடியலை. ஸாரி :-(
    பதிவை விட மாறுவேடம் நல்லாருக்கு :-)

    ReplyDelete
  8. "சிரிக்க முயற்சி பண்ணினேன். முடியலை. ஸாரி :-(
    பதிவை விட மாறுவேடம் நல்லாருக்கு :-)"

    நன்றி நிலா அவர்களே. என் மொழிபெயர்ப்பின் குறையாகவே இதை நான் பார்க்கிறேன். Better luck next time.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  9. "உஹும், விசயகாந்துன்னா புள்ளிவிவரம், புள்ளிவிவரம் சொல்லாத கேப்டன் படமா? மொதல்ல அதே சேருங்க சாரே :-)"

    அது!!!

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. கூடவே இதையும் சேர்த்துக்குங்க...

    ப்ராஜக்ட் ல் எனக்கு பிடிக்காத வார்த்தை 'பக்ஸ்'

    மாயா

    ReplyDelete
  13. "எவனாவது என் கோடுல பக் கண்டுபிடிச்சீங்க, தொலச்சிருவேன்."
    ஏன், சர்ச் செய்கிறேன் பேர்வழி என்று ஒருவர் வீட்டில் சோதனையிடுபவர் வைக்காத கஞ்சாவா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  14. டோன்டு சார் அசத்தல் போங்க

    விஜயகாந்த் கெட்டப்ப விட உங்கது சூப்பர்

    ReplyDelete
  15. "ப்ராஜக்ட் ல் எனக்கு பிடிக்காத வார்த்தை 'பக்ஸ்'"

    Superb. By the way your comment was repeated thrice. Hence I deleted two of them. Please don't mind. Comment moderation does take time. Hence your clicking three times I guess.

    Regards,
    Dondu N.Raghavan

    ReplyDelete
  16. "டோன்டு சார் அசத்தல் போங்க. விஜயகாந்த் கெட்டப்ப விட உங்களது சூப்பர்."

    நன்றி முத்துக்குமரன் அவர்களே. ஏற்கனவே பலரது கருத்தும் இதுவே. தர்சனுக்கு நன்றி.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  17. டோண்டு,

    மிக்க மகிழ்ச்சி.

    என்னன்னா,

    விஜயகாந்தை சுளுக்கெடுக்கறதுன்னா, எல்லோருக்கும் அப்படி ஒரு அலாதி ஆவல்.

    ஆனாலும் அலி என்ற பெயரை தமிழில் மொழி பெயர்க்கும் பொழுது - காசிம் என்றா மொழி பெயர்ப்பது?

    அநியாயம் சார் - பேரைக் கூட மொழி பெயர்த்துடறீங்களே?

    ReplyDelete
  18. "ஆனாலும் அலி என்ற பெயரை தமிழில் மொழி பெயர்க்கும் பொழுது -காசிம் என்றா மொழி பெயர்ப்பது?"

    இது மொழி பெயர்ப்பு அல்ல, லோகலைசேஷன். ஏனெனில் தமிழ்க் காதுகளுக்கு அலி என்றால் வேறு பொருள் தோன்றக்கூடும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  19. "விஜயகாந்தை சுளுக்கெடுக்கறதுன்னா, எல்லோருக்கும் அப்படி ஒரு அலாதி ஆவல்."
    இதில் விஷயம் என்னவென்றால், இரு முரண்பாடான விஷயங்களைச் சேர்ப்பதாகும். இதை change of viewpoint என்று இஸாக் அஸிமோவ் (Isaac Asimov) அவர்கள் தன்னுடைய ஜோக் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதை வைத்து தனிப்பதிவு போடுவேன். தலைப்பு கூட யோசித்து விட்டேன். "கிச்சுக் கிச்சு"

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  20. //இது மொழி பெயர்ப்பு அல்ல, லோகலைசேஷன். ஏனெனில் தமிழ்க் காதுகளுக்கு அலி என்றால் வேறு பொருள் தோன்றக்கூடும். //

    ;) ;)
    நானும் பெயரைக்கூட மொழிபெயர்த்துவிட்டாரே இந்த மொழிபெயர்ப்பாளர் என நினத்தேன் .. காரணத்தை அறிந்தவுடன்...;) ; யப்பா சாரே எங்கோ போயிட்டீங்கோ

    ReplyDelete
  21. நன்றி தாசு அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  22. Dondu..
    No need of any comments.
    I cannot stop laughing when Captain sits before computer and talk something in his pathetic English :) (Example :- Vallarasu ..Joom Pannunga)

    ReplyDelete
  23. அருண் அவர்களே,
    அதே போல நீங்கள் அதே வல்லரசு டையலாக்கை மிமிக்ரி செய்வதாகக் கற்பனை செய்து கொண்டால் என்னாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  24. ஆனாலும் உங்க லோக்கலைசேஷன் பிரமாதம் போங்கோ...

    சமயோசிதமான முன்னெச்சரிக்கை.

    அப்பப்ப இப்படி எதாவது போட்ட்டு ஆசுவாசப்படுத்தீக்கிங்க சார்...

    ReplyDelete
  25. நன்றி நண்பன் அவர்களே. லோக்கலைசேஷன் என்பது ரொம்ப முக்கியம். சொல்லுக்கு சொல் மொழிபெயர்ப்பு என்பது ரொம்பவே செயற்கையாகத் தோன்றும். சில சமயம் அனர்த்தமாகவும் வரும்.

    உதாரணத்துக்கு கோக்கோ கோலா சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஒரு பிரச்சினை வந்தது. அதை அவ்வாறு உச்சரித்தால் சீன மொழியில் அது ஒரு ஒரு கெட்ட வார்த்தையாம். சீனாவில் ஒத்துக் கொள்ளும் பெயரை கண்டுபிடிக்க நீண்ட நாள் உழைப்பு தேவைப்பட்டதாம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  26. கடைசி வரைக்கும் தீவிரவாதிகளை எப்படி பிடிச்சார்ன்னு சொல்லவே இல்லியே

    ReplyDelete
  27. வணக்கம் விவசாயி அவர்களே. இதென்ன போங்கு, தீவிரவாதிகளை பிடிக்கும் மென்பொருளை செய்யத்தானே அவர் வந்தார். செய்து விட்டுப் போய்விட்டார். அவ்வளவுதான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  28. தேவர்மகன் மீசையை ஒட்டி தங்கள் மாறுவேட மீசையுள்ளது. சார் நீங்க மீசை வைக்காதீங்கள் மீசையெல்லாம் எங்களுக்குரியது. தேவர் சபையில் தங்கள் மேல் வழக்கு தொடுத்துவிடுவோம் மீசை வைப்பதென்றால் எங்களைக்கேட்டுதான் வைக்கவேண்டும்.
    மதுரைக்காரர் நல்ல நடிகர் விஜயகாந்திற்கு நான் தேர்தல் பிரச்சாரம் செய்யலாமா?

    ReplyDelete
  29. அட மீண்டுமா! :-)) நல்லாயிருக்கிறீங்க போங்க. மின்னஞ்சல் மற்றும் சுட்டிக்கு நன்றி.

    ReplyDelete
  30. வணக்கம் என்னார் அவர்களே,

    மீசையை வைக்கச் சொல்லி என்னைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது என் வீட்டம்மாதான். நான் வேறு விளையாட்டாக என் சினேகிதி ஒருத்தி என்னிடம் மீசையை எடுக்கச் சொன்னாள் என்று கூறிவைக்க, ஒரே ருத்ர தாண்டவம்தான் போங்கள். ஆக இந்த (willing) அடிமை மீசையை எடுக்க சக்தியில்லாதவன்.

    என் மாறுவேடப் படம் தர்சன் அவர்களின் தங்கையின் உபயம். எனக்கு ரொம்பப் பிடித்த படம். அது பற்றியும் பதிவு போட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/07/blog-post_31.html
    அதிலும் மத்தளராயன் என்ற பெயரில் போலி டோண்டு இட்டப் பின்னூட்டத்தையும் பார்க்கவும். கடைசிக்கு முந்தையப் பின்னூட்டம் அது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  31. முத்துராமலிங்க தேவர் மீசை வைத்திருந்தார் அது அவருக்கு அழகாக இருந்தது இரண்டு பெண்கள் அந்த மீசைக்காக அவரை மனதால் நேசித்தனராம் அது அவருக்குத் தெரிய போய் உடனே அந்த மீசையை எடுத்துவிட்டாராம்.
    பிரம்மச்சாரி, பீஸ்மாச்சாரி,

    ReplyDelete
  32. என்னார் தேவரையா பற்றி நீங்கள் சொன்னதால் கேட்கிறேன். நீங்கள் சொன்ன அந்த இரண்டு பெண்களில் ஒருவரை(பெயர் குறிப்பிட விரும்பவில்லை :-) உங்களைப்போலவே), அவர் நேசத்தின் திடத்தால், தான் இந்த வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ளப்போவதுயில்லையென்றும். அப்படி ஒரு முடிவிற்கு தான் வந்தால் அந்த நபரை திருமணம் செய்து கொள்வதாகவும் வாக்குறுதி தந்ததாக படித்திருக்கிறேன்.

    அந்த நபரும் கடைசிவரை திருமணம் செய்து கொள்ளாமலே இறந்து போனார். இது உண்மையா??? அப்படி உண்மையென்றால் மேற்கூரிய //மீசைக்காக அவரை மனதால் நேசித்தனராம் //

    இது எப்படி சரியாகும்.?????

    ReplyDelete
  33. மோகன் தாஸ் சரியாக ஞாபகம் இல்லை அப்படித்தான் கேள்விப்பட்டேன் தாங்கள் கூறுவதும் சரியே.

    ReplyDelete
  34. முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் ஒரு அற்புதமான மனிதர். நேதாஜியின் மேல் மிகுந்த அபிமானம் கொண்டவர். நேதாஜி அவர்கள் இறந்ததாக வந்த செய்தியை கடைசி வரை மறுத்தவர். அம்மாதிரி மனிதர் வாழ்ந்த காலத்தில் நானும் இருந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  35. என்னதான் நீங்க மீசையெல்லாம் வச்சு மறைச்சிருந்தாலும் நாங்க கண்டுபிடிச்சுட்டோம்ல? அதுக்கு கன்னத்துல ஒரு புளியங்கொட்டை அளவுக்கு மச்சம் ஒண்ணு வச்சிருந்தீங்கன்னா ஒங்களை -ஒஸாமா பின் லேடன் மாதிரி - கண்டுபிடிக்கவே முடியாது !! :))

    விஜயகாந்த் காமெடி சூப்பர். இதை நகைச்சுவை என்று ஒதுக்கிவிட முடியவே முடியாது. நாளைக்கு எதாவது நிஜமாகவே ஒரு படத்தில் இந்த மாதிரி காட்சியமைப்புகள் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!

    இதுமாதிரி கணிணி சம்பந்தப் பட்ட அபத்தக் காட்சிகளைப் பற்றி யாராவது ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும். சினிமா மட்டுமில்லை- தொலைக்காட்சித் தொடர்களின் அபத்தங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  36. நன்றி டோன்டு சார்

    ReplyDelete
  37. "இதுமாதிரி கணிணி சம்பந்தப் பட்ட அபத்தக் காட்சிகளைப் பற்றி யாராவது ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும்."
    இந்த மாதிரி அபத்தக் காட்சிகள் திரைப்பட்ங்களில் பல உண்டு. இது பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. உதாரணம் சமீபத்தில் 1961-ல் வந்த பாச மலர்.நம்பியார் அதில் இஞினியர். அவரை டீ-ஸ்க்வயருடன் டிராயிங் போர்டில் வேலை செய்வதாகக் காண்பிக்கிறார்கள். அது ஒரு சாதாரண ட்ராஃப்ட்ஸ்ட்மேன் செய்ய வேண்டிய வேலை.
    மேலே அருண் அவர்கள் இட்டப் பின்னூட்டத்தைப் பார்க்கவும்: "I cannot stop laughing when Captain sits before computer and talkச் something in his pathetic English :) (Example :- Vallarasu ..Joom Pannunga)"

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  38. இப்பதிவே ஒரு மிகைப்படுத்திக் கூறும், வெறும் தமாஷ் நோக்கத்தில் இடப்பட்டது. உண்மையைக் கூறப்போனால் குத்தாட்டம் அதிகம் போடும் இசையமைப்பாளர்களைத்தான் விஜயகாந்த் தேர்ந்தெடுப்பார். எம்.பி. ஸ்ரீனிவாசன் அவர் படங்களுக்கு இசை அமைப்பது என்பதும் ஒரு மிகைப்படுத்திக் கூறலே ஆகும்.

    மற்றப்படி எம்.பி.ஸ்ரீனிவாசன் அவர்கள் இசை எனக்கு நிரம்பப் பிடிக்கும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  39. என்னுடைய கரகோஷதையும் தங்களுக்கும், தங்கள் கைவண்ணத்த்ற்க்கும் காணிக்கையாக செலுத்துகிறேன்.

    இவ்வண்,
    பத்ரி

    ReplyDelete
  40. நன்றி பத்ரி (ஹைதராபாத்) அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  41. தரண் அவர்கள் பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://manamay.blogspot.com/2006/04/blog-post_114620900743651958.html

    இன்னாப்பா கண்ணு எங்க கேப்டனையா நக்கலடிக்கிறே. ஒனுக்கு தெரியாதா அவர் தீவிரவாதிகளைப் பிடிக்க மென்பொருள் கண்டுபிடிச்சிருக்காறுன்னு. நம்பலே? பாரு இந்தப் பதிவெ. http://dondu.blogspot.com/2005/12/blog-post_22.html

    இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை என்னுடைய மேலே சுட்டியப் பதிவிலும் இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_22.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  42. Sir,

    Wow!! good work!!

    Nice Photos!!

    Expecting more "Creative blogs" like this.

    Keep up your creative energy level!!

    ReplyDelete
  43. நன்றி சிவபாலன் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  44. இதென்ன கூத்து?

    அங்காள பரமேசுவரி

    ReplyDelete
  45. :)) மாறுவேடம் போட இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டாம். கண்ணத்தில் ஒரு மச்சம் வச்சிருந்தா போதுமே;)

    ReplyDelete
  46. சூப்பர்.ஹா..ஹா..:))))))

    ReplyDelete
  47. தலை சுத்துது:-)))

    எப்படி எடுத்துக்கலாம்?

    விசயகாந்து ரசிகர் மன்றம் இங்கே இடம் மாறிடுச்சுன்னு எடுத்துக்கறதா?

    இல்ல,

    விசயகாந்துக்கு சரியான போட்டி, அதுவும் ஒரே ஒரு படத்துல வந்தாச்சுன்னு எடுத்துக்கறதா?

    புள்ளிவிவரமெல்லாம் சொல்லி பயமுறுத்தாம, யாராச்சும் சொல்லுங்களேன்! ப்ளீஸ்! ப்ளீஸ்!

    ReplyDelete
  48. காசிம் அய்யர் பேரு ஒகே!
    ஆனா வடகலையா,தென்கலையான்னு சொல்லலையே!

    ReplyDelete
  49. @வால்பையன்
    வடகலை, தென்கலை எல்லாம் ஐயங்காரில்தான் வரும். ஐயரில் அல்ல.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  50. You look like a pettai dada!!
    good post though!

    ReplyDelete
  51. டோண்டு சார் வால்பையனுக்குப் புரியும்படி சொன்னது:

    /வடகலை, தென்கலை எல்லாம் ஐயங்காரில்தான் வரும். ஐயரில் அல்ல./

    ஐயரில் கூட வடமா, ப்ரகச்சரனம்னும், எக்ஸ்ட்ராவா வேற சிலதும் வரும்!

    அப்புறம், "வா வாத்யாரே ஊட்டாண்டே" ஜாம்பஜார் ஜக்கு கணக்கா, அபிமான சோ மாதிரி லுங்கியெல்லாம் கட்டி, கண்ணை உருட்டி முழிச்சு அதையும் படம் பிடிச்சு, விசயகாந்தை டரியலாக்கும் உத்தேசம் எதுனாச்சும் இருக்குதா:-))

    ReplyDelete
  52. வழக்கத்திற்கு மாறாய் டோண்டுவின் பதில் அனைத்து பின்னூட்டங்களுக்கும்.நன்றி

    ReplyDelete
  53. Sir, today's date is 28/8/2009

    but the caption says the date as 28/9/2009

    Please correct it.

    Regarding the post, its very fine. Keep it up.

    ReplyDelete
  54. :)))))))))))


    உங்க மாறுவேட படம் சூப்பரா இருக்கு.

    ReplyDelete
  55. டோண்டு சார்.... கேப்டனை கிண்டல் அடிப்பதில் எங்களுக்கெல்லாம் முன்னோடியாய் இருக்கிறீர்கள்.....
    இந்த பதிவிற்கு சுட்டி இணைத்ததற்கு ரொம்ப நன்றி சார்...

    ReplyDelete
  56. இது தொடர்பான என் பழைய பதிவு, இதோ..... நண்பர்களே... யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்....

    //இன்றைய மெகா காமெடி
    டன்மான டமிலன் கேப்டன் விஜயகாந்த் :
    http://jokkiri.blogspot.com/2009/02/blog-post.html//

    ReplyDelete
  57. @ஜோக்கிரி
    உங்கள் சுட்டி சரியாகத் தரவில்லை. சரியான சுட்டி இதோ:
    http://jokkiri.blogspot.com/2009/02/blog-post.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  58. ஐயா! ஒரு கேள்வி! ஜீவாத்மா பரமாத்மா பற்றி உங்களுக்கு என்றைக்காவது புரிந்திருக்கிறதா?
    அன்புடன்
    ராம்
    www.hayyram.blogspot.com

    ReplyDelete