நிரந்தர பக்கங்கள்

1/08/2006

மழை முத்து முத்து பந்தலிட்டு

இப்பதிவின் தலைப்பை கடைசியில் ஜஸ்டிஃபை செய்வேன்.

நேற்று மாலை வெளியூரிலிருந்து வந்திருக்கும் பதிவாளர்களைப் பார்க்க புத்தகக் கண்காட்சி சென்றேன். செல்லும்போதே வீட்டம்மா ஸ்ட்ரிக்டாகக் கூறிவிட்டார், தேவையில்லாமல் புத்தகங்கள் வாங்கி குவிக்கக் கூடாது என்று. சமீபத்தில் வீட்டுக்குள் புகுந்த வெள்ளத்தால் பல புத்தகங்கள் பாழாயின. நல்ல வேளையாக நான் போன வருடம் புத்தகக் கண்காட்சியில் வாங்கின புத்தகங்கள் தப்பித்தன. சொத சொதவென்று ஆன பல புத்தகங்களை களைந்து வெளியில் வீசுவதில் இரண்டு பேருமே களைத்து போனோம். ஆகவே இம்முறை அவர் கூறியது எனக்கும் சரி என்றே பட்டது.

நேற்று மாலை சந்திப்பதாக மங்களூரிலிருந்து வந்திருக்கும் முத்து அவர்களுடன் பேசி முடிவு செய்து கொண்டேன். பிறகு ஜோசஃப், என்றென்றும் அன்புடன் பாலா, விஜய், எஸ்.கே. ஆகியோருடனும் தொலைபேசினேன். ஜோசஃப் அவர்கள் வேறு வேலை இருந்ததால் வர இயலாது என கூறி விட்டார். மற்றவர்கள் முடிந்தால் வருவதாகக் கூறினர். எல்லோரும் கிழக்கு பதிப்பகம் ஸ்டாலில் சந்திப்பதாக ஏற்பாடு. ஐந்து மணி அளவில் புத்தகக் கண்காட்சிக்குள் நுழையும்போது பத்ரி அவர்களை செல்பேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் ஸ்டால் எண்ணை வாங்கினேன்(-->D60).

நல்ல கூட்டம். நான் உள்ளே வந்த நுழைவாயிலிலிருந்து நல்ல தூரத்தில் கிழக்கு பதிப்பகம் ஸ்டால். ஒரு நாள் விட்டு ஒருநாள் நுழைவாயில் மாறும் என்றும் தன்னுடைய ஸ்டால் இன்னொரு நுழை வாயிலுக்கு மிக அருகில் உள்ளது என்றும் பத்ரி கூறினார். சிறிது நேரத்தில் மங்களூர் முத்து வந்து சேர்ந்தார். நான் நினைத்ததற்கு மாறாக இருந்தது அவர் தோற்றம். அவர் இப்படி இருப்பார் என கற்பனை செய்து வைத்திருந்தேன்.



அப்புறம்தான் தெரிந்தது அவர் வேறு முத்து என்று. மங்களூர் முத்து அவர்கள் தன் டிஸ்ப்ளே பெயரை மாற்றிக் கொண்டால் நலம் என்பதை இத்தருணத்தில் கூறிவைக்கிறேன்.

மங்களூர் முத்து ஸ்மார்ட் ஆக இருந்தார். அவருடன் எனக்கு சோ பற்றிய பதிவுகள் (1 2 மற்றும் 3 சம்பந்தமாக வலைப்பூவில் எழுந்த சர்ச்சைகள் அனேகம். அது பற்றி பார்க்க வேண்டுமானால் மேலே சுட்டிய 3 பதிவுகளில் பார்த்து கொள்ளவும்.

சிறிது நேரம் கிழக்கு பதிப்பகத்தின் ஸ்டாலில் நின்று நானும் முத்துவும் பேசிக் கொண்டிருந்தோம். அவர் சாரு அவர்களின் "ஸீரோ டிகிரி" புத்தகம் வேண்டுமெனக் கூறினார். உயிர்மை ஸ்டாலில் கிடைக்கலாம் எனத் தகவல் பெற்று அங்கு சென்றால் அது கிடைக்கவில்லை. ஆனால் எனக்கு சுஜாதா அவர்கள் எழுதிய அத்தனை நாடகங்களும் சேர்ந்த தொகுப்பு கிடைத்தது. மலிவான விலை. ரூபாய் 500 மட்டுமே, டிஸ்கௌண்ட் போக 450 ரூபாய்தான் கொடுத்தேன். அந்த புத்தகம் மட்டும்தான் இம்முறை வாங்கினேன்.

சிறிது நேரத்தில் ரஜினி ராம்கி வந்து சேர்ந்தார். அவருடன் பேசினேன். நான் பார்க்கலாம் என நினைத்த ரோஸா வசந்த், மயிலாடுதுறை சிவா ஆகியோர் காலையிலேயே வந்து சென்றுவிட்டதாக அறிந்தேன். எல்லே ராம் அவர்கள் வேறு வந்திருந்தாராம். நான் மிஸ் செய்து விட்டேன். எல்லே இளங்கிளியே மன்னிக்கவும்.

இத்தருணத்தில் ஒரு வேண்டுகோள். புத்தகக் கண்காட்சிக்காக வந்திருக்கும் வெளியூரைச் சேர்ந்த பதிவாளர்கள் விருப்பமிருந்தால் என்னுடன் சென்னை எண்கள் 22312948 அல்லது 9884012948-ல் தொடர்பு கொண்டு பேசினால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். என் உள்ளங்கவர்கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருளிருந்தான் நேரிலும் சந்திக்க முயற்சி செய்வேன்.

முத்து அவர்களுடன் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பேசினேன். வலைப்பூ சம்பந்தமாக பல தகவல்கள் பரிமாறிக் கொண்டோம். போலி டோண்டுவைப் பற்றியும் பேசினோம். மனுஷன் ரொம்பத்தான் பொறுமைசாலி. நான் கூறியதையெல்லாம் கவனமாகக் கேட்டு கொண்டார். இதற்கிடையில் அதிர்ஷ்டவசமாக அவருக்கு சாரு நிவேதிதாவின் புத்தகமும் அடுத்த நாள் கிடைக்க ஏற்பாடு செய்ய முடிந்தது.

கிளம்பலாம் என்று நினைத்தப் போது அருண் வைத்தியநாதன் அவர்களின் சகோதரியும் அத்திம்பேரும் வந்தனர். அவர்களுடைய சுட்டிப் பையனும் வந்தான். எல்லோருடனும் பேசி, பிறகு விடை பெற்று நானும் முத்துவும் கிளம்பினோம். கண்காட்சிக்கு வெளியில் முத்து அவர்களிடம் விடை பெற்று கொண்டேன்.

பஸ் நிறுத்தத்தை நோக்கி செல்லும்போது மெல்லிய தூறல். "தேர் திருவிழா" என்னும் எம்.ஜி. ஆர். படத்தில் வரும் "மழை முத்து முத்து பந்தலிட்டு, கிட்டக் கிட்ட வந்தது" என்ற பாடலை என்னையறியாமல் முணுமுணுத்துக் கொண்டே பஸ்ஸை பிடிக்க விரைந்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

19 comments:

  1. //தலைப்பை கடைசியில் ஜஸ்டிஃபை செய்வேன்.//

    செஞ்சுட்டீங்க:-))))

    ReplyDelete
  2. நன்றி துளசி அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. கலக்கறீங்க டோண்டு..முத்துவின் பொறுமை குறித்து நீங்கள் எழுதியிருப்பதைப் படிக்கும்போது சிரித்தேன். 500 ரூபாய் "மலிவு" விலையில் உங்களுக்கு புத்தகம் கிடைக்கிறது. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. "நீங்கள் எழுதியிருப்பதைப் படிக்கும்போது சிரித்தேன்."

    ஏன்? மூன்று மணி நேரம் இந்தக் இளமையான கிழவன் பேசியதைக் கேட்க பொறுமை அவசியம் வேண்டும்தானே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. முத்து வலைப்பூக்கள் முத்து என்ன ஆனார் அவர் வேறு யார் பெயரிலாவது எழுதுகிறாரா?

    ReplyDelete
  6. அந்த முத்து ஜெர்மனியில் இருக்கிறார் என அறிந்தேன். நேற்று கூட புது பதிவு போட்டிருக்கிறாரே. அவரது உரல் http://muthukmuthu.blogspot.com/

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. நேற்று மீனாக்ஸ் மற்றும் வந்தியத்தேவன் அவர்களையும் சந்தித்தேன். பதிவில் கூற விட்டுப்போயிற்று.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. தலைப்பைப் பார்த்து என்னவாயிருக்கும் என்று எண்ணி வந்தால்,எனக்குச் சம்பந்தமான பதிவு :-).

    புதிதாக வந்த முத்துவின் பதிவைத் தமிழ்மணத்தில் பார்த்து நானே சில நேரம் திகைத்துப் போயிருக்கிறேன். காரணம் பெயர் ஒற்றுமை முதற்காரணம், ஒருவேளை சில வருடங்களுக்கு முன்னால் இதை நாம்தான் எழுதியிருப்போமோ என்று ஒரு சந்தேகம். ஆனால் அவர் தொடும் கொஞ்சம் கனமான தலைப்புக்களில், பொருளில் பெரும்பாலும் நான் எழுதியதில்லை என்பதால் கண்டுபிடிக்க எனக்கு அவ்வளவு கஷ்டம் வருவதில்லை. ஆனால் மற்றவர்களுக்குக் ஆட்குழப்பம் வராமல் இருப்பது கொஞ்சம் கஷ்டம்தான் :-).

    ReplyDelete
  9. "தலைப்பைப் பார்த்து என்னவாயிருக்கும் என்று எண்ணி வந்தால்,எனக்குச் சம்பந்தமான பதிவு"

    அதிலும் ஃபோட்டோ வேறு!!!!

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. என்னங்க இப்படி செய்துவிட்டீர்கள்...

    எனக்கு ஒரு மின்னஞ்சலாவது அனுப்பியிருக்கக்கூடாதா?

    நானும் ஓடோடி வந்திருப்பேனே...

    போனமாதம்தான் வீட்டில் காசு வாங்கிக்கொண்டு அல்லிக்குளத்தில் இருந்து நிறைய புத்தகங்களை வாங்கி வந்துவிட்டதால், இப்போது கேட்டபோது வீட்டில் வசை மட்டுமே கிடைத்தது.

    எங்கே, கண்காட்சிக்குப் போனால் ஏக்கம் அதிகமாகிவிடுமோ என எண்ணி வீட்டினுள்ளே முடங்கிக் கிடக்கிறேன்.

    எப்படியோ உங்களை சந்திக்கும் வாய்ப்பை நழுவவிட்டுவிட்டேன்...

    ReplyDelete
  11. "எப்படியோ உங்களை சந்திக்கும் வாய்ப்பை நழுவவிட்டுவிட்டேன்..."

    நன்றி. அடுத்த முறை வராமல் போயுடுமா என்ன?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. டோண்டு சார்,

    நீங்க கூப்பிட்ட போது நான் சொன்ன அதே காரணம்தான். மூத்த மகளோட ஃப்ளைட் நேரமாயிருந்ததாலத்தான் வரமுடியலை. வர்ற புதன் கிழமை லீவுதானே. அன்னைக்கி போலாம்னு இருந்துட்டேன்.

    முத்து பார்க்க ரொம்ப ஸ்மார்ட்டா இருந்தார்னு சொன்னீங்க. ஏன் இருக்க மாட்டார்..சின்ன வயசுதானே.

    இந்த வயசுலயே எப்படி கலக்குராறர்னு பாருங்க.. இன்றைய தலைமுறை ரொம்பவே வேகமாயிருக்கு.. அதுவும் நல்லதுதான்.

    ReplyDelete
  13. நீங்கள் சொல்வது நூத்துல ஒரு வார்த்தை ஜோசஃப் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  14. ////முத்து பார்க்க ரொம்ப ஸ்மார்ட்டா இருந்தார்னு சொன்னீங்க. ஏன் இருக்க மாட்டார்..சின்ன வயசுதானே.///
    டி.பி.ஆர். ஜோசஃப்,
    வயதுக்கும், ஸ்மார்ட்டுக்கும் நேரடித்தொடர்பிருக்கவேண்டும் என்பது சரியா என்று தெரியவில்லை. ஒரு சின்ன உதாரணம் பாருங்கள். முத்துவைவிட சில வயது அதிகமானவராயிருந்தாலும் டோண்டுவும் ஸ்மார்ட்டாகத்தானே இருக்கிறார். அவர் புகைப்படத்தைப் பாருங்கள்.

    ReplyDelete
  15. நன்றி முத்து அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  16. After long time, I was able to remember this song(no I am not that old, I am just 36 :) ).

    Please write your views about Sujatha's Plays that you bought, if you find time and if you're planning to.

    Regards,
    Rajesh

    ReplyDelete
  17. நன்றி ராஜேஷ் அவர்களே. சுஜாதா அவர்கள் நாடகங்கள் பற்றி நிச்சயம் எழுதுவேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  18. வந்துட்டன்யா வந்துட்டன்...லஞ்ச டைமில அல்லது முடிஞ்சா அதுக்கு முன்னாடியே வரேன்....(எங்க தலைவர் இந்த வார நட்சத்திரமாமே)

    ReplyDelete
  19. வருக குட்டி முத்து அவர்களே. சீனியர் முத்துவிடமிருந்து உங்களை பிரித்துக் காட்ட ஏதேனும் செய்யுங்கள். அதற்கான என்னுடைய ஓர் ஆலோசனையே குட்டிமுத்து என்னும் பெயர். இதை டிஸ்ப்ளேயாகப் போட்டுக்கொள்ளலாம், உங்களுக்கு பிடித்திருந்தால்.

    ஊர் போய் சேர்ந்து விட்டீர்களா?

    உங்கள் தலைவர்தான் இவ்வார நட்சத்திரம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete