நிரந்தர பக்கங்கள்

9/22/2006

பெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு - 3

18-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று எங்கும் வெளியில் செல்லவில்லை. மைத்துனன் வீட்டுக் கணினி முன் உட்கார்ந்து ஒரு ராட்சச வேலை செஷன். என்னுடைய ஜீ மெயில் ஆர்கைவ்ஸிலிருந்து கோப்புகளை இறக்கி அவற்றை மொழிபெயர்ப்பு செய்யும் வேலை நெட்டி முறித்தது. ஒவ்வொரு கோப்பாக முடித்து வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் செய்வது தனி சுகம்.

மாலை சந்திப்புக்கு குமரன் எண்ணமும் செந்தழல் ரவியும் மறுபடி வரப்போவதாகப் பேச்சு. முந்தைய நாள் மீட்டிங் நான் மேலக்கோட்டைக்கு சென்றதால் சற்று தாமதமாகவே ஆரம்பிக்க வேண்டியதாயிற்று. ஆகவே இன்னும் பேச விஷயங்கள் இருந்ததாக அவர் கருதினார். ஆனால் இன்று ரவி அவர்கள் வாடிக்கையாளர் வரவில் சிக்கிக் கொண்டார். குமரன் எண்ணமும் வர இயலவில்லை. ஆனால் நான் கேட்டுக் கொண்டபடி தேசிகன், ஜடாயு மற்றும் ம்யூஸ் வருவதாக வாக்களித்தனர். அதே போல் வந்தனர்.

முதலில் தேசிகன் வந்தார். அவர் சுஜாதாவின் அதிகாரபூர்வ பயாக்ரஃபர் என்றதும் என் மைத்துனனும் அவருடன் உட்கார்ந்து பேசினான். சுஜாதா எங்கள் இருவருக்குமே அபிமான எழுத்தாளர் ஆயிற்றே. தேசிகன் லூசண்ட் டெக்னாலஜியில் பணி புரிகிறார். ஜடாயு அவர்கள் ஒரு விளம்பர நிறுவனத்தில் Design Manager -ஆக பணி புரிகிறார். கம்ப ராமாயணத்தில் நல்ல ருசி. மனுஷர் கம்பன் கழகத்தின் பட்டிமண்டபங்களில் பேசுகின்ற ஆள் என்று ம்யூஸ் எழுதியிருந்தார். ஆகவே கடன் பட்டார் நெஞ்சம் போல பதிவு சம்பந்தமாக எனக்கு எழுந்த ஒரு சந்தேகத்துக்கு விடையளிக்க ம்யூஸ் அவருடன் கலந்தாலோசித்திருந்தார்.

ம்யூஸ் இரண்டாவதாக வந்தார். வந்ததும் எனக்காக தான் வாங்கிய புத்தகத்தைக் கொடுத்து அசத்தி விட்டார். அரேபிய இஸ்ரேலிய யுத்தங்களின் தொகுப்பு அந்த புத்தகம். அதை முடித்து விட்டு சில இஸ்ரேல் ஆதரவு பதிவுகள் போட வேண்டும். ஜடாயு அவர்கள் கடைசியாக வந்தார்.

தேசிகன் நான் முன்னமே சென்னையில் பார்த்திருந்ததற்கு இளைத்திருக்கிறார். நிறைய வாக்கிங் போவதாகக் கூறினார். என் மைத்துனன் அவரிடம் சரமாரியாக சுஜாதா அவர்களை பற்றி கேள்வி கேட்டான். தேசிகன் வரைந்த பெரியாரின் ஓவியத்தை யாரோ சுட்டு விட்டதைப் பற்றி அவரே பதிவு போட்டிருக்கிறார். அதைப் பற்றிப் பேசும்போது அந்த ஓவியத்தில் இருந்த தனது கையெழுத்தையும் சுரண்டி எடுத்திருந்தனர் என்று கூறினர். இந்த செய்தி சுஜாதா ஆரம்பகாலக் கதை ஒன்றை எனக்கு ஞாபகப்படுத்தியது. அதை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டேன். சுஜாதா அவர்களுடன் பெங்களூரிலிருந்து காட்பாடி வரை சமீபத்தில் 1971 ஜனவரியில் பயணம் செய்த நினைவையும் கூறினேன்.

சுஜாதா அவர்கள் வீட்டு புத்தக அலமாரியில் உள்ள புத்தகங்களை சட்டென்று எடுக்கும் வண்ணம் அவருக்கு தான் அரேஞ்ச் செய்து கொடுத்ததைப் பற்றி தேசிகன் கூறினார். சுஜாதா இந்த சந்திப்புக்கு வராவிட்டாலும் அவரது நினைவு தேசிகன் மூலம் அங்கே இருந்தது. மெக்ஸிகோ நகரத்து சலவைக்காரி ஜோக் என்னவென்று அவரிடம் தனக்குக் கேட்கத் தோன்றியதே இல்லை என்று தேசிகன் கூற, நான் ஒரு வெர்ஷனை கூறி அதுதான் சரியான வெர்ஷனா என்று சுஜாதாவிடம் கேட்டு கன்ஃபர்ம் செய்யச் சொன்னேன். அவரும் சரி என்றார்.

பிறகு ஜடாயு அவர்களும் வந்து சேர்ந்து கொண்டார். ரத்தச் சர்க்கரை கட்டுப்படுத்துவது பற்றி பேச்சு வந்தது. தேசிகன் தனக்கு அந்தக் கோளாறு வரும் வாய்ப்பு இருப்பதால் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பதாகக் கூறினார். மருந்து எதுவும் எடுத்துக் கொள்ளாது வெறும் வாக்கிங்கில் காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதாகக் கூறினார். ஜடாயு அவர்கள் சில யோகா பயிற்சிகளை செய்யலாம் என்று பரிந்துரைத்தார். ம்யூஸுக்கும் அந்த பிராப்ளம் இருந்ததால் அவர் இருவர் சொல்வதையும் தனது வழக்கமான கவனத்துடன் கேட்டுக் கொண்டார்.

பேசிக் கொண்டேயிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. அவர்கள் மூவரும் விடை பெற்று என்றதும் செந்தழல் ரவியிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. அவரால் வர இயலவில்லை என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அடுத்த நாள் காலை 6.30 மணியளவில் சென்னைக்கு வண்டி பிடிக்க வேண்டியிருந்ததால் கணினியை மூடி விட்டு நான் படுக்கச் சென்றேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

22 comments:

  1. டோண்டு அண்ணா!
    3 பதிவுக்கும் ;ஒன்றாக பின்னூட்டுகிறேன். மியூசின் வர்ணனைகளில்; நானும் உங்களுடன் பங்கேற்றது போல் உள்ளது. கருத்து வேறுபாடுகளையும்; ஒற்றுமையாக ஒன்றாக இருந்து; பேசியது சிறப்பு. இதைச் சட்ட சபையும் பின்பற்றக் கூடாதா?? படங்கள்;நன்றாக இருந்தது. ரவி; மெலிந்துள்ளாரா???
    blog ல் உள்ள படத்திலும் வேறுபட்டுள்ளார்.
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  2. அரேபிய இஸ்ரேலிய யுத்தங்களின் தொகுப்பு அந்த புத்தகம். அதை முடித்து விட்டு சில இஸ்ரேல் ஆதரவு பதிவுகள் போட வேண்டும்

    --Before you read the book you have decided to take the side ?! Just Kidding...

    Anyway not sure whether you have got the book "The Arab-Israeli Wars: War and Peace in the Middle East from the War of Independence through Lebanon" by Chaim Herzog, but this one is a very good book for those who are interested in the war strategies (like me).

    Though the author is a general(I think) in IDF, his account was close to neutral(Read this 1999 and that time that was my feeling).

    ReplyDelete
  3. //அரேபிய இஸ்ரேலிய யுத்தங்களின் தொகுப்பு அந்த புத்தகம். அதை முடித்து விட்டு சில இஸ்ரேல் ஆதரவு பதிவுகள் போட வேண்டும். //

    சுத்தம்.

    ReplyDelete
  4. யோஹன்/பாரிஸ் அவர்களே,

    ம்யூஸ் இருக்கும் தைரியத்தில்தான் அவர் பங்கு கொண்ட மீட்டிங்குகளை பற்றி பதிவுகள் போட்டேன். எப்படியும் நான் விட்டவற்றையும் சேர்த்து அவர் கவனித்து கொள்வார் என்ற தைரியம்.

    யாருமே ப்ரொஃபைல் போட்டோவில் இருந்ததைப் போல இல்லை, என்னையும் சேர்த்துத்தான் கூறுகிறேன்.

    கருத்து வேறுபாடு இருந்தாலும் மீட்டிங்குகள் சுமுகமாகப் போயின. தமிழக சட்டசபையிலும் 1969 வரை இப்படித்தான் விவாதங்கள் இருந்தன. அதன் பிறகு பிடித்தது சனியன், இன்னும் விடவில்லை. பல மெம்பர்கள் பேண்ட் போட்டுச் செல்வதற்கு காரணம் துகிலுரியப்படும் பயம்தான் காரணம் என்று ஒரு சமயம் படித்துள்ளேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. "Anyway not sure whether you have got the book "The Arab-Israeli Wars: War and Peace in the Middle East from the War of Independence through Lebanon" by Chaim Herzog"

    அதே புத்தகம்தான். இஸ்ரேலிய தரப்புத் தவறுகளையும் ஆசிரியர் மறைக்கவில்லை. இப்போதைய எடிஷன் அவர் இறந்த பிறகு வெளியானது.

    பை தி வே, உங்கள் பதிவு ஒன்றில் நான் இப்போதுதான் பின்னூட்டமுள்ளேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. //அரேபிய இஸ்ரேலிய யுத்தங்களின் தொகுப்பு அந்த புத்தகம். அதை முடித்து விட்டு சில இஸ்ரேல் ஆதரவு பதிவுகள் போட வேண்டும். //
    சுத்தம்.

    இஸ்ரேலிய ஆதரவு பதிவுகள் போடுவதுதான் டோண்டு ராகவன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. நன்றி திரு இராகவன். படித்து மறுமொழி இட்டுள்ளேன்.

    ReplyDelete
  8. ரத்தச் சர்க்கரை வியாதி ...diabetes!! ( நீரிழிவு நோய்) இப்போதெல்லாம் ஒரு சாதாரண ஜுரம் போல் பார்ப்பவர்களில் பல பேருக்கு இருக்கிறது...!

    ஜெனிடிக் ஆக இருந்தால், எந்த மருந்தும், உடற்பயிர்ச்சியும் வியாதியை கட்டுப்படுத்தவே, குணப்படுத்த அல்ல என்பதை நாம் மறக்கக் கூடாது.

    10 வயது ஓடிவிளயாடும் வாண்டுகள் ஸ்கூல் பேகில் எமர்ஜென்சி இன்சுலின் சிரிஞ்சுகளுடன் இருப்பதையும் பார்த்திருக்கிறேன்.!!

    ..
    இஸ்ரேலிய ஆதரவு பதிவுகள் போடுவதுதான் டோண்டு ராகவன்.
    ..

    சீக்கிரமே ஆரம்பிங்க....!! அது இல்லம போர் அடிக்குது...!

    ReplyDelete
  9. "10 வயது ஓடிவிளயாடும் வாண்டுகள் ஸ்கூல் பேகில் எமர்ஜென்சி இன்சுலின் சிரிஞ்சுகளுடன் இருப்பதையும் பார்த்திருக்கிறேன்.!!"
    கேட்கவே மனம் பதைக்கிறது.

    இஸ்ரேல் ஆதரவு பதிவுதானே, போட்டு விட வேண்டியதுதான். அதன் யுத்தங்கள், முக்கியமாக 1948-ல் மற்றும் 1967-ல் என்னை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. 1967 யுத்தத்தைப் பற்றி Ephraim Kishon என்னும் இஸ்ரேலிய எழுத்தாளர் எழுதிய புத்தகம் "Pardon, wir haben gewonnen" (Sorry, we won) ஆங்கிலத் தலைப்பு எனது மொழிபெயர்ப்பு ஜெர்மனிலிருந்து) கிடைத்தால் வாங்கிப் பார்க்கவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. உலகப் புகழ் பெங்களூர் நெரிசலில் சிக்கி டோண்டு அவர்கள் இருப்பிடத்திற்கு நான் வந்து சேரும்போதே ஒருவழியாகி விட்டது. நல்ல பசி வேறு. போனவுடன், அவர்கள் வீட்டில் அன்போடு அளித்த சில தட்டைகளையும், இனிப்பையும் உள்ளே தள்ளிய பிறகு தான் பேச்சே வந்தது. வாயும் வயிறும் வேறல்ல, ஒன்றுதான் என்பதுபோலத் தோன்றியது.

    தேசிகன் ரொம்பவும் அமைதி காத்தார். அளந்தே பேசினார். 'சுஜாதா'வின் அன்புக்கும், அபிமானத்திற்கும் பாத்திரப்பட்டவர். மோதிரக் கையால் குட்டு அல்ல, ஆசிர்வாதமே வாங்கியிருக்கிறார் - சந்திப்புக்குப் பிறகு தலைவரது பக்கங்களில் மேய்ந்தபோது புரிந்தது இது. மருந்துகள் எதுவுமின்றி தினசரி நடைப் பயிற்சி மூலமே தான் சக்கரையை அக்கரைக்கு ஓட்டியது பற்றி அக்கறையுடன் விவரித்தார் மனிதர். யோகாசங்களும் இதற்கு உதவும் என்று நான் சொன்னபோது, வியர்வை வரும் (அரும்பும்?) அளவுக்கு exertion வேண்டும் என்று சொன்னார். உடனே நான் சுதர்ஷன் க்ரியா போன்ற பிராணாயாமப் பயிற்சிகள் AIIMS-ல் மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டு mainstream டாக்டர்களாலேயே பரிந்துரைக்கப் படுகின்றன என்பது போன்ற விவரங்களைத் தெரிவித்தேன். இதைக் கேள்வியுற்று ம்யூஸ் ஆச்சரியம் தெரிவித்தார்.

    அதன்பிறகு பேச்சு பலவிதங்களில் திரும்பியது. ராவணன் வாலியிடம் தோற்ற பிறகு புது வரங்கள் பெற்றான், அதன் பிறகும் ஏன் வாலியிடம் போய் வாலாட்டவில்லை என்ற ராமாயணக் கேள்வியை ம்யூஸ் கேட்டார். உளவியல் ரீதியான பயம், தோல்வியைப் பற்றிய அச்சம் எல்லாம் அவனைப் பீடித்து விட்டது, அது தான் காரணம் என்று டோண்டு சொன்னார். கொஞ்சம் ஆழமாகப் படித்துத் தனிப் பதிவு போடவேண்டிய விஷயம் இது.

    சந்திப்புக்கு சந்தர்ப்பம் அளித்த டோண்டு சாருக்கு நன்றி. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில், அல்லவா?

    ReplyDelete
  11. இது, இது, இதைத்தான் எதிர்ப்பார்த்தேன் ஜடாயு அவர்களே. ஒரே விஷயத்தை சம்பந்தப்பட்ட அனைவரும் தத்தம் பார்வையிலிருந்து கூறும்போதுதான் அதன் ஓவியம் பூர்த்தியாகிறது. அதனாலேயே நான் முதல் படிவம் எழுதும்போது அடக்கியே வாசிக்கிறேன்.

    தேசிகன் எழுதிய கதையை சுஜாதா சார் அவர்கள் மெருகூற்றியதைப் பற்றி அவர் கூறியதை அவரே இங்கு பின்னூட்டமாகத் தந்தால் அதிக சிறப்பாயிருக்கும் என்று ஒரு வார்த்தையையும் போட்டு வைக்கிறேன்.

    ராவணன் தன் ஆதிகாலத்தில் இருவரிடம் தோற்றிருக்கிறான். ஒன்று வாலை மற்றது கார்த்தவீர்யாஜுனன். முன்னவனை ராமர் கொல்ல, பின்னவனைப் பரசுராமர் கொல்கிறார், ஆனால் அதே பரசுராமர் ராமரை ஜெயிக்க இயலவில்லை.

    சூடு கண்ட பூனை ராவணன். உளவியல் காரணங்களால் அவன் வாலியிடம் மோதத் துணியவில்லை. கூடவே வாலியின் இந்திரன் மாலை வேறு. எதிராளியின் பலத்தில் பாதியை அது ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னேயே கிரகிப்பது என்பது யாரையும் யோசனைக்குள்ளாக்கும்தானே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. பதிவுகள் போட ஆரம்பித்ததிலிருந்தே நான் பிளாக்கர் பின்னூட்டங்கள் மட்டும்தான் அனுமதித்து வந்திருக்கிறேன். உண்மை கூறப்போனால் அப்போது அதர் ஆப்ஷனைப் பற்றித் தெரியவே தெரியாது.

    முதலில் ரோசா வசந்திற்கு அம்மாதிரி போலிப் பின்னூட்டம் வந்தது. அப்புறம்தான் அதர் ஆப்ஷனின் அபாயங்கள் மிக அதிகம் என்பதைக் கண்டு கொண்டேன். அனானி ஆப்ஷன்களைக் கூடச் சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் அதர் ஆப்ஷன் ஆகவே ஆகாது. இப்போது கூட பிளாக்கர் அனானியையும் அதர் ஆப்ஷனையும் பிரித்தால் அனானியை நான் அனுமதிப்பேன். அது வரை இல்லை.

    பிளாக்கர் கணக்கு துவங்கி ப்ரொஃபைலை காட்ட மறுத்து, மின்னஞ்சலைக் கொடுக்காமல் இருந்தாலே போதுமே. அந்த முறையில் எனக்கு நிறைய பேர் பின்னூட்டம் இடுகின்றனரே.

    "யுத்தத்தில் பதுங்கி தாக்குவதும்,மறைந்திருந்து அடிப்பதும் ஒரு யுத்தி தான்."
    அது வேறு வழியில்லாதபோதுதான். இங்கு அது அப்ளை ஆகாது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. விசாலாட்சி அவர்களே,

    இது ஒரு யுத்தம் என்று நான் சொன்னதை சரியாகப் புரிந்து கொண்டவர்களில் நீங்களும் ஒருவர். ஒரு சிறு ஆலோசனை. இம்மாதிரி பின்னூட்டங்களில் திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தைக் கூறும் தோரணை வந்து விடும் வாய்ப்பு உள்ளது. ஆகவே நீங்கள் சாதாரண பின்னூட்டங்களே அதே 2:1 விகிதத்தில் போடுங்கள். அதுவும் ஒரே பதிவில் வேண்டாம். நீங்கள் இடும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையில் பாதி அவன் உங்களுக்கு இட்டப் பின்னூட்டங்களின் எண்ணிக்கை என்பதை ஆட்டமேடிக்காக புரிந்து கொள்ள முடியும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  14. "அவனுக்கு பயந்து பின்னூட்டம் போடுவது மட்டும் நிற்காது."

    நீங்கள் இடும் எல்லா பின்னூட்டங்களுக்கும் நன்றி கூறி அந்த இழிபிறவியின் டென்ஷனை அதிகமாக்கி மகிழ்வேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  15. மிக்க மகிழ்ச்சி விசாலாட்சி அவர்களே,

    மற்ற யாரையாவது அந்த இழிபிறவி குறி வைத்து, அவருக்கு நான் பின்னூட்டம் இட, எனக்கு அது இவ்வாறு மிரட்டல் விட்டிருந்தால் நான் என்ன செய்திருப்பேனோ அதையே நீங்கள் சற்றும் குறையாமல் செய்கிறீர்கள்.

    பின்னூட்டங்களை அதே சமயம் நான் ஆலோசனை கூறியபடி எனது பல பதிவுகளில் நிரவிப் போட்டால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  16. இது பின்னூட்டம் இரண்டுக்கு நன்றி தெரிவிப்பு.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  17. பின்னூட்டம் 3-க்கு நன்றி.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  18. பின்னூட்டம் 4-க்கு நன்றி. இன்னொரு யோசனை. பின்னூட்டம் இடும்போது அந்தந்த பதிவின் விஷயங்களுக்கு உங்கள் உண்மையான கருத்துக்களையே எழுதுங்கள். எனது நிலையிலிருந்து நீங்கள் மாறுபட்டால் தயங்காமல் கூறவும். கண்டிப்பாக பதிலளிக்கிறேன். இந்த சாக்கில் கருத்து பரிவர்த்தனையும் நடக்கட்டும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  19. அய்யா, இங்கு என்ன பிரச்சினை நடக்கிறது...

    ReplyDelete
  20. போலியாரின் மனைவி பெயர் விசாலாட்சி...நீரே (அல்லது உமது ஆதரவாளர்களோ) அந்த பெயரில் எழுதுகிறீர் என்று தோன்றுகிறது..

    உண்மை விளம்புவீர் அய்யன்மீர்..

    ReplyDelete
  21. அய்யா எனது பின்னூட்டம் எங்கே ?

    ReplyDelete
  22. "அய்யா, இங்கு என்ன பிரச்சினை நடக்கிறது..."
    போலி டோண்டு என்ற இழிபிறவி தரும் பிரச்சினைதான். இப்போது பழகி விட்டது. அவ்வப்போது படித்து விட்டு தூக்கி எறிந்து விட வேண்டியதுதான். நாட்டில் இதை விட முக்கியப் பிரச்சினைகள் உள்ளன.

    "அய்யா எனது பின்னூட்டம் எங்கே?"
    இதோ.

    "போலியாரின் மனைவி பெயர் விசாலாட்சி...நீரே (அல்லது உமது ஆதரவாளர்களோ) அந்த பெயரில் எழுதுகிறீர் என்று தோன்றுகிறது..
    உண்மை விளம்புவீர் அய்யன்மீர்.."
    நான் எழுதவில்லை. ஆதரவாளர்கள் எழுதுகிறார்களா என்பது தெரியாது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete