நிரந்தர பக்கங்கள்

12/19/2006

நண்பர்களுக்கு நன்றி

இந்தப் பதிவை ஆரம்பிக்கும் நேரம் (20.03 hrs IST) ஹிட் கவுண்டர் 99,981 காண்பிக்கிறது. இதை முடிக்கும்போது ஒரு லட்சம் தாண்டி விடும். ஹிட் கவுண்டர் போன ஆண்டு ஜூலையில் வலைப்பூவில் சேர்க்கப்பட்டது. கிட்டத்தட்ட 17 மாதங்கள்.

இந்த கவுண்டரின் விசேஷம் என்னவென்றால், நான் லாக்-இன் செய்து பார்ப்பதெல்லாம் கணக்கில் ஏற்றப்படாது. இந்த ஆதரவுக்காக நான் எனது நலம் விரும்பிகளுக்கும் மற்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

எனது யோம் கிப்பூர் பதிவுகள் சமயத்தில் ஒரு நாளைக்கு 1000-க்கு மேல் ஹிட்கள் இருந்தன.

இப்போது நேரம் 20.07, கவுண்டர் காண்பிப்பது 99,986. இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரில் பதிவு போடுகிறேன். நெருப்பு நரியில் வலைப்பூவை திறந்துள்ளேன். அதிலிருந்துதான் ஹிட்கள் பார்க்கப்படுகின்றன.

ஹையா, ஹிட்கள் 1,00,001 (நேரம் 20.45hrs. IST). சோடா சாப்பீட்டு வருவதற்குள் லட்சத்தை தாண்டி விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

16 comments:

  1. வாழ்த்துக்கள் டோண்டு சார்

    ReplyDelete
  2. அருமை நண்பர் மாயவரத்தானின் பின்னூட்டம் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதுவும் முதல் பின்னூட்டம், இப்பதிவுக்கு. நன்றி.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் டோண்டு சார். நேரம் 21.09 hrs IST. ஹிட் கவுண்டர் 100027 காண்பிக்கிறது.

    தங்கம்மா

    ReplyDelete
  4. பார்த்தீங்களா பார்ப்பனரின் பதிவுக்கு ஒரு 'கவுண்டர்' (Counter) உதவுகிறார்!

    இனியாவது குலத்தாழ்சி உயர்ச்சி சொல்லல் நிறுத்துங்கள்.

    வாழ்க தமிழ்! ஒழிக சமஸ்கிர்தம்!!

    ReplyDelete
  5. நன்றி தங்கம்மா அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. "பார்த்தீங்களா பார்ப்பனரின் பதிவுக்கு ஒரு 'கவுண்டர்' (Counter) உதவுகிறார்!"
    :))))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. Respected Dondu Sir,

    Instead of my earlier comment in your blog, please put the following as my comment:

    பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு

    பலகோடி ஹிட் பெற்று டோண்டு ப்ளாக் வாழ்கவே

    பன்மொழி வித்தகர் உமை கண்டு

    எட்டுத் திக்கும் வெல் என்ற பழமொழி உண்டு

    பலமொழி சுவையறிய பல்கும் தமிழர் வாழ்கவே !

    மனம் திறக்க மடி கொண்டார் மறையவும்

    மனவெறிக்கு மடிதிறப்பார் அழியவும்

    மதம் மாநிலம் மக்கட்மொழி சுவருடைத்து

    மனிதமும் உறவும் உயர்வென்னும்

    உதிர் மயிர் ஒக்கும் மனிதருள் ஜாதியென்னும்

    தமிழ்வலைப்பதிவின் வேந்தர்

    முதலாம் நரசிம்ம டோண்டு வாழ்க வாழ்கவே !

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் டோண்டு ஐயா!

    ReplyDelete
  9. "முதலாம் நரசிம்ம டோண்டு.."

    என் தந்தை என் உள்ளத்தில் எப்போதும் அழியாதிருப்பார் எனக் காட்டிய வரி கண்டேன்

    மனநெகிழ் மகிழ்ச்சி கொண்டேன்.

    நன்றி வினோத் துவா,

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. நன்றி நன்மனம் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  11. டோண்டு ஐயா அவர்களே,
    வாழ்த்துக்கள். உங்களுக்கு பின்னூட்டங்களும் அதிகமாகவே வருகின்றன. பின்னூட்டங்களின் எண்ணிக்கையும் கொடுக்கலாமே

    ReplyDelete
  12. பின்னூட்டங்களின் எண்ணிக்கை? புரியவில்லையே பாலசண்தர் கணேசன் அவர்களே.

    எனது ஹிட் கவுண்டரின் விசேஷம் என்னவென்றால் அது நான் எனது தளத்துக்கு லாக்-இன் ஆகிச் செல்லும்போது அதை கணக்கில் எடுத்து கொள்வதில்லை. ஆகவே அதன் ரிசல்டுக்கு மதிப்பு அதிகம்.

    பின்னூட்டங்கள் விஷயம் அப்படியில்லை. டோண்டு ராகவனே பாதிக்கும் மேல் பின்னூட்டம் போட்டு விடுகிறான். பலர் பல வெளிக் காரணங்களுக்காக பின்னூட்டம் இடுவதைத் தவிர்க்கின்றனர். :))

    ஆனால் எனக்கு யாராவது பின்னூட்டம் இட்டுவிட்டார்களா என்பதை கவலையுடன் நோக்குபவர்கள் ஹிட் கவுண்டர் காட்டும் எண்ணிக்கையை எக்குத் தப்பாக ஏற்றி விடுகின்றனர். வேடிக்கையாக இல்லை? :))))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. இந்தா வாங்கிக்கங்க என்னோட ஓட்ட(hit).

    ReplyDelete
  14. நண்பர் போடறது ஒரு வோட்டு. மத்தவங்க போடறது பல வோட்டுகள்.

    இருந்தாலும் மனசுக்கு பிடிச்ச நண்பர் ஒரு ஓட்டு போட்டா அது மதவங்க போடற 100 வோட்டுங்களை விட அதிகம் மதிப்பு உள்ளது என்னை பொருத்தவரை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  15. நன்றி Jay அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  16. வாழ்த்துகள்.. :)

    ReplyDelete