நிரந்தர பக்கங்கள்

2/03/2007

சுவனப்பிரியன் அவர்களுடன் சந்திப்பு

புது பிளாக்கர் பிரச்சினை ஒரு வழியாக மா.சிவக்குமார் அவர்கள் தயவால் தீர்ந்தது. அது வரை எடிட்டும் செய்ய இயலவில்லை பப்ளிஷும் செய்ய இயலவில்லை. ஆனால் பின்னூட்டங்கள் மட்டும் இடவும் மட்டுறுத்தவும் முடிந்திருக்கிறது.

முந்தா நேற்றையிலிருந்து சுவனப்பிரியனை சந்தித்ததை பற்றி பதிவு போட முயற்சித்து கொண்டே இருந்திருக்கிறேன். இபோதுதான் போட முடிந்தது. அதுவரை ஆகவே நான் போட நினைத்த பதிவை எனது பிளாக்கர் பிரச்சினைஅ பற்றிய பதிவில் பின்னூட்டமாகப் போட்டிருந்தேன். சுவனப்பிரியன் இப்பதிவை தாமதமாக இப்போது போடுவதற்கு மன்னிப்பாராக.

இப்போது பதிவுக்கு செல்வோமா?

சில நாட்களுக்கு முன்னால் சுவனப்பிரியன் அவர்கள் என்னுடன் தொலை பேசினார். அது பற்றி இப்பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அவர் அப்போது தன் ஊரில் இருந்தார். சென்னை வரும்போது என்னை தொடர்பு கொண்டு பேசும்படி கூறியிருந்தேன்.

முந்தா நேற்று (01.02.2007) அவரிடமிருந்து காலை 7.15 அளவில் ஃபோன் வந்தது. தான் சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு வருகைகள் அருகில் வெளியே நிற்பதாகவும் தன்னை வந்து நான் பார்க்க முடியுமா என்று கேட்டார். அவர் தனது அன்னை வழி தாத்தாவை ரிசீவ் செய்ய நிற்பதாகவும் கூறினார். எங்கள் வீட்டிலிருந்து ஏர்போர்ட் ரொம்ப தூரம் இல்லை, 5 கிலோமீட்டர்கள் சாலை வழியே, 2 கிலோமீட்டர்கள் மட்டுமே, நீங்கள் காக்கையாக இருக்கும் பட்சத்தில்.

ஆட்டோ எடுத்து சென்று அவரைச் சந்தித்தேன். அப்போது மணி காலை 7.30. சுவனப்பிரியன் என்னை அடையாளம் கண்டு கொண்டார். மனிதர் ஆறடி உயரத்துக்கு நல்ல ஆஜானுபாகுவாக இருந்தார். சவுதி ஃப்ளைட் வந்து விட்டிருந்தது. அதில்தான் அவர் தாத்தா தனது ஹஜ்ஜை முடித்து கொண்டு வந்திருந்தார். ஆனால் உள்ளேயே பல ஃபார்மாலிட்டீஸ்கள். கிட்டத்தட்ட 2 மணி நேரம் போல ஆகிவிட்டது. அவர் வெளியே வரும்போது மணி 9.30.

அது வரையில் ஒரே பேச்சுத்தான். அவர் தான் சவுதியில் வேலை செய்வதாகக் கூறினார். ப்ளஸ் டூ படித்து விட்டு கணினியில் பாடம் படித்திருக்கிறார். வேர்ட், எக்ஸெல், டால்லி எல்லாம் கற்றிருக்கிறார். குடும்ப சூழ்நிலையில் உடனே வேலைக்கு போகும் நிர்ப்பந்தம். நல்ல வேளையாக தெரிந்தவர்கள் மூலமாக ரியாத்தில் உள்ளூர் கம்பெனி ஒன்றில் வேலை கிடைத்தது. போன இடத்தில் இவரது கணினி அறிவைப் பார்த்து ஆஃபீசில் வேலை கொடுத்து பதவி உயர்வும் அளித்திருக்கிறார்கள். மனிதர் சும்மா இராது அராபிக், உருது கற்று தேர்ந்திருக்கிறார்.

அங்கு போனதும்தான் அவர் தாத்தா ஹஜ் முடித்து விட்டு வருகிறார் எனத் தெரிந்தது. அவரைப் பார்க்காமல் வருவதில்லை என முடிவு செய்தேன். ஹாஜிகளை பார்த்து ஆசி பெறுவது நல்லது. நம்மூரில் அதே போல தீர்த்த யாத்திரை முடித்து விட்டு வருபவர்களையும் பார்த்து விட்டு அவர்கள் ஆசி பெற்று வருவோம்.

அந்த முதியவர் வரும்போதே அவர் முகத்தில் இசுலாமியருக்கான ஒரு முக்கியக் கடமையை முடித்த திருப்தி தெரிந்தது. அவரிடம் ஆசி பெற்றேன். அவரும் அன்புடன் பேசினார். ஆனால் பயணக் களைப்புடன் இருந்தார்.

சுவனப்பிரியன் அவர்களிடம் காத்திருக்கும் நேரத்தில் பல விஷயங்களை பற்றி பேசினேன். முத்தலாக் பற்றியும் பேச்சு வந்தது. அது செல்லாது என்று நான் படித்து அறிந்ததை அவரும் உறுதி செய்தார். இருப்பினும் சமீபத்தில் நான் இட்ட இப்பதிவை மனதில் வைத்து கேட்ட போது அவர்கள் குரானை இண்டெர்ப்ரெட் செய்பவர்கள் செய்யும் தவறு என்றும், பல ஜமாத்துகள் இத்தவற்றை செய்கின்றன என்றும் கூறினார்.

அதே போல மார்க்க அறிஞர்கள் இசுலாமிய இளைஞர்களை ஆங்கிலம் கற்க விடாமல் செய்து பெரிய அநீதி இழைத்து விட்டனர் என்றும் கூறி வருத்தப்பட்டார்.

சோ அவர்களை பற்றி மிக உயர்வாக பேசினார். அவருடன் நாம் ஒத்து போகிறோமோ இல்லையா அது வேறு விஷயம். ஆனால் அவர் அரசியல்வாதிகள் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமரிசனம் செய்தைல்லை என்று நான் கூறியதை ஒத்துக் கொண்டார்.

பிறகு அவர் தனது ஊரைப் பற்றி கூறினார். காவிரியின் கிளை நதிகளான குடமுருட்டி அரிசிலாறு அருகே அவர் வீடு இருப்பதாகக் கூறினார். பத்தடி ஆழத்தில் இளநீர் போன்று தண்ணீர் கிடைப்பதாகவும் கூறினார். எனது ஊர் சருக்கை பற்றியும் அறிந்திருக்கிறார். இதற்கு நடுவில் இரு முறை லெமன் டீ அருந்தினோம். போளியும் வாங்கி சாப்பிட்டோம். அது வரை அவருக்கு போளி என்று ஒன்று இருப்பதாகவே தெரியாது என்று கூறினார். பொல்லாத மனிதர் ஒரு முறை கூட என்னை பே செய்ய விட மறுத்து விட்டார்.

கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் பேசி விட்டு விடை பெற்றேன். உடனே பதிவும் போடுவேன் என்று கூறினேன். ஆனால் இரண்டு நாட்களும் பிளாக்கர் என்னை பதிவு போடவே விடவில்லை. பிளாக்கர் சப்போர்ட்டுக்கு புகார் செய்ததில் சரியாகி விட்டதாக பதில் கூறப்பட்டது. மா. சிவக்குமார் அவர்கள் பல முயற்சிகள் செய்து தவறு எங்கே என்பதை கண்டுபிடித்து கூறினார். இப்போதுதான் பதிவு போட முடிகிறது. அவருக்கு என் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12 comments:

  1. நன்றி நெப்போலியன் மற்றும் ஹனுமான் அவர்களே. மெக்காவோ, ஜெரூசலமோ, காசியோ எதுவாக இருப்பினும் அவற்றுக்கு புனிதப்பயணம் சேய்யும் அந்தந்த மதத்தவர் புண்ணியம் செய்தவர்களை. நம்மால் அங்கெல்லாம செல்ல கைவராவிட்டாலும் அவ்வாறு சென்றவர்களை பார்ப்பது மிகவும் நல்லது. அவர்கள் ஆசியும் என்பது இன்னும் அபூர்வம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. //காவிரியின் கிளை நதிகளான குடமுருட்டி அரிசிலாறு அருகே அவர் வீடு இருப்பதாகக் கூறினார். பத்தடி ஆழத்தில் இளநீர் போன்று தண்ணீர் கிடைப்பதாகவும் கூறினார்.

    அங்க இப்ப சப் மெர்சிபல் பம்பு வைத்து தான் குடிக்கிற தண்ணியை தேடி போகும் நிலை.

    ReplyDelete
  3. //ஆனால் அவர் அரசியல்வாதிகள் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமரிசனம் செய்தைல்லை என்று நான் கூறியதை ஒத்துக் கொண்டார்.//

    ம்ம்...அதனாலும், எனக்கு சோ-வை பிடிக்கும்.

    ReplyDelete
  4. ராகவன் சார்!

    தாத்தாவிடம் உங்களின் பதிவையும் காட்டினேன். தஞ்சை வரும்போது அவசியம் வீட்டுக்கு வருமாறு அழைக்க சொன்னார். தஞ்சை வரும்போது அவசியம் குடும்பத்தோடு வீட்டுக்கு வரவும். என் அழைப்பை ஏற்று விமான நிலையத்துக்கு வந்ததற்காகவும், அதை பதிவாக்கியமைக்காகவும் நன்றிகள் பல.

    ReplyDelete
  5. ரொம்ப நன்றி சுவனாப்பிரியன் அவர்களே. ஹாஜி அவர்களின் ஆசிக்கு மிக்க நன்றி. ப்ரிண்ட் அவுட் எடுத்தீர்களா பதிவை?

    அது சரி நீங்கள் எப்போது பதிவு போடுவதாக உத்தேசம்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. வலைபதிவில் மட்டும் அல்ல நண்பர்களை பெறுவதிலும் டோண்டுல்க்கர் தான்.

    ReplyDelete
  7. "வலைபதிவில் மட்டும் அல்ல நண்பர்களை பெறுவதிலும் டோண்டுல்க்கர் தான்".

    நன்றி அனானி அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. சலாம் அலைக்கும் டோண்டு ஐயா.

    முகம்மது யூனுஸ்

    ReplyDelete
  9. Dondu Sir,

    Good post. I do believe that you and SuvanaPriyan generally bring in ,lot of maturity and balance in the web world which otherwise is dominated by a emotionally volatile juvenile crowd.

    Bala

    ReplyDelete
  10. டீன் ஏஜ் டோண்டு,
    உங்கள் கருத்துக்கள் பல அதிரடியாக இருந்தாலும் கருத்துகளை விட தனி மனிதர்களை நீங்கள் மதிக்கும் பண்பை நான் பாராட்ட வயதில்லை தலை வணங்குகிறேன்

    ReplyDelete
  11. உங்களிடம் anonymous and other தெரிவுகளைத் திறந்துவிடச் சொன்னவர்களில் நானும் ஒருவன். இனி உங்களுக்கு பின்னூட்டம் இடுவோரின் மீதான தாக்குதலாளிகள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதனைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  12. //உங்களிடம் anonymous and other தெரிவுகளைத் திறந்துவிடச் சொன்னவர்களில் நானும் ஒருவன். இனி உங்களுக்கு பின்னூட்டம் இடுவோரின் மீதான தாக்குதலாளிகள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதனைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.//
    படா பேஜாராக்கிது
    அதை பீச்சாங்கைல் உட்டு சோத்து கையால சொல்லுப்பா
    நா இன்னா ரெண்டு பேரா. நானும் ஒத்தன் தாமெபோ

    ReplyDelete