நிரந்தர பக்கங்கள்

7/05/2007

கோலங்கள் தொல்காப்பியனை நான் கேட்ட கேள்வி

தலைப்புக்கு பிறகு வருகிறேன். நான் ஏற்கனவே இப்பதிவில் கூறியது போல, சீரியல்களை அவ்வளவு சுலபமாக அலட்சியம் செய்துவிட முடியாது. அதிலும் மிகச் சிறப்பாக எடுக்கப்படும் சீரியல்கள் விஷயத்தில் நான் கூறுவது அதிகமாகவே பொருந்தும். கடந்த 25 வருடங்களாக நான் பார்த்த சீரியல்களை வைத்துத்தான் பேசுகிறேன். இப்போது கூட ஹிந்தி சீரியல்களான நுக்கட், ஹம்லோக், புனியாத், தர்பண், கதா சாகர், யே ஜோ ஹை ஜிந்தகி ஆகியவை மனதில் நிற்கின்றன. அதே போலத்தான் விழுதுகள், சித்தி, மெட்டி ஒலி, மலர்கள் ஆகியவையும். இப்போது ஓடும் சீரியல்களில் முக்கியமான கோலங்கள் பற்றித்தான் இப்பதிவு பேசுகிறது.

நேற்று யதேச்சையாக சன் மியூசிக் சேனல் ஆன் செய்ய அதில் திருச்செல்வம் அவர்களை நேயர்கள் கேள்வி கேட்கலாம் என ஒரு டெலிஃபோன் எண்ணை திரையில் தந்தனர். நானும் அதை டயல் செய்ய கனென்க்ஷனும் கிடைத்தது. "தயவு செய்து காத்திருக்கவும்" என்ற அறிவிப்பு அடுத்த 20 நிமிடங்களுக்கு வந்து கொண்டிருந்தது. நிஜமாகவே லைவ் ப்ரொக்ராம்தான். நிகழ்ச்சி அது பாட்டுக்கு சென்று கொண்டிருந்தது. திருச்செல்வம் அவர்களும் நேயர் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லோரும் அவரை தொல்காப்பியன் என்றே குறிப்பிட்டுப் பேசினர். எனது முறை வந்தது.

எனது பெயர், இடம், நான் என்ன செய்கிறேன் ஆகியவற்றை சம்பிரதாயமாகக் கேட்டு அவற்றுக்கு நான் பதிலளித்தவுடன் எனது கேள்விக்கு வந்தேன்.

முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்தினேன். அதாவது சீரியல் நல்ல முறையிலேயே படமாக்கப்படுகிறது, ஆகவே பெரும்பான்மையான நேயர்கள் இதில் ஈடுபாட்டுடன் இருக்கின்றனர். ஆகவே சீரியல் தயாரிப்பாளர்களுக்கும் சில கடமைகள் உள்ளன. அந்த வரிசையில் இந்த சீரியல் ஆணாதிக்கத்தை நிலை நிறுத்துகிறதோ என்ற எனது அச்சத்தை வெளியிட்டேன். உதாரணமாக பாஸ்கர் விவாகரத்து கேட்டு அபியிடம் தான் இன்னொரு மணம் செய்து கொள்ள அவளுக்கு ஆட்சேபணை இல்லை என எழுதி வாங்குகிறான். அதே மாதிரி கடிதத்தை அபியும் கேட்டு வாங்குவதாக ஏன் கதையில் காண்பிக்கவில்லை என்பதுதான் என் கேள்வி. அதற்கு தொல்காப்பியன் அபி என்ற பாத்திரம் மறுமணத்தில் நம்பிக்கை வைக்கவில்லை என்றே பதிலளித்தார். ஆனால் எனது பார்வை வேறுவிதமாக இருந்தது. பாஸ்கர் அவளுக்கு மறுதாலி கட்டப்போவதாகத்தான் கதையை இப்போது கொண்டுபோகிறார்கள். ஆகவே அவள் பாஸ்கருக்காகவே புனிதமாக வைக்கப்படுகிறாள் என்ற எண்ணத்தையும் கேள்வியாக வெளிப்படுத்தினேன். அப்படியெல்லாம் பிரெடிக்ட் செய்ய முடியாது என்று மட்டும் கூறினார் தொல்காப்பியன். அதற்குள் எனது நேரம் முடிந்து விட்டது.

இப்போது இங்கு சற்று விஸ்தாரமாக பேசுவோம்.

நான் ஏற்கனவே இப்பதிவில் எழுதியதுதான். ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் உணர்ச்சிகள் பொதுதான் என்பதை தைரியமாக ஒத்துக் கொள்ள பலருக்கும் மனம் இல்லை. சீரியல்களில் ஆணுக்கு சர்வசாதாரணமாக இரு மனைவியர் வைப்பவர்கள், ஒரு பெண் மனவேறுபாட்டில் கணவனைப் விவாகரத்து செய்து இன்னொருவனை மணப்பதாக வந்தால் முக்கால்வாசி அப்பெண் வில்லியாகத்தான் கதையில் வருவாள். (உதாரணம் "வரம்" என்னும் சீரியல்). கோலங்கள் சீரியலிலும் அபிக்கு அவளுக்குத் தெரியாமலேயே அவள் மாஜிக் கணவனை விட்டு மறுத்தாலி கட்ட வைப்பதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. எவ்வளவு அபத்தம்? அபி என்னும் பெண் தன் மனவுறுதியால் முன்னுக்கு வருபவள். பாஸ்கர் என்பவன் சரியான சோம்பேறி, நல்ல வேலையில் கூட இல்லை. அவனுக்கு இப்பெண்ணை கட்டிவைக்க அப்பெண்ணின் தாய் முதற்கொண்டு ஏற்பாடு செய்கின்றனர். அந்தத் தாய் சொல்லும் காரணங்கள் குழந்தைத்தனமாகவே உள்ளன. பக்கா ஆணாதிக்கத்தை வலியுறுத்துகிறது இந்த சீரியல். அதே சமயம் எல்லோருமே அற்புதமாகவும் சுவையாகவும் நடித்து சீரியலும் நன்றாக உள்ளது. ஆகவேதான் சீரியல் தயாரிப்பாளர்களின் பொறுப்பு அதிகமாகிறது. நேயர்களுக்கு பல தவறான சமிக்ஞைகள் தரப்படுகின்றன. இவற்றில் பல டிஆர்பி ரேட்டிங் என்ற மாயபிம்பத்துக்காகவே உள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: இப்பதிவை தமிழ்மணத்தில் சேர்க்க இயலவில்லை. ஆகவே அதுவாகவே சேரும்போது இதை விவாத மேடையில் வகைப்படுத்துமாறு கேட்டு கொள்கிறேன்.

18 comments:

  1. good questions dondu sir.

    ReplyDelete
  2. தலைவா,
    நீங்கள் தமிழ்மணத்தைவிட்டு விலகுறிங்களா? இது அதற்கான சோதனை பதிவா?

    ReplyDelete
  3. //நீங்கள் தமிழ்மணத்தைவிட்டு விலகுறிங்களா?//

    யார் சொன்னது? இதற்கான பதிலை எனது இப்பதிவில் காணவும். பார்க்க:
    http://dondu.blogspot.com/2007/04/blog-post_17.html

    ReplyDelete
  4. டோண்டு ஸார்,

    கோலங்களின் பார்வைக்கு முதல் காரணம் மெகா ஸ்டாரினி என்ற தேவயானிதான். இரண்டாவது காரணம் சன் டிவி. மூன்றாவது காரணம் அது ஒளிபரப்பாகும் நேரத்தில் மற்றத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் போட்டி நிகழ்ச்சிகளில் ஈர்ப்பு இல்லை. நான்காவது காரணம், டிவி பார்க்கும் சாமானிய மக்களின் எண்ணவோட்டத்தை நன்கறிந்த சாமான்ய எழுத்தாளர்கள் இதனை எழுதுவது. ஐந்தாவது காரணம், இதே போன்று சிறந்த, தேர்ந்த இயக்குநர்கள் இயக்குவது..

    இப்படி எல்லாமே சேர்ந்து வந்தால்தான் ஒரு தொலைக்காட்சித் தொடர் ஹிட்டாகும். டி.ஆர்.பி. ரேட்டிங்கில் தில்லுமுல்லு செய்தாலும்(தில்லுமுல்லுதான்) அது ஒரு காலக்கட்டம்வரையிலும்தான் இழுக்க முடியும். இல்லாவிட்டால் இழுத்து மூடிவிட வேண்டியதுதான்.. உதாரணம் கெளதமியின் என்றும் அன்புடன் நிகழ்ச்சி..

    கதையைப் பற்றி நீங்கள் கேட்டதற்கு யாராக இருந்தாலும் இதைத்தான் சொல்லியிருப்பார்கள். அங்கே பிழிய பிழிய அழுக வைத்தால்தான் அவர்களுடைய கல்லாப் பெட்டி நிறையும். ஸோ.. கதை பெண்ணடிமைத்தனமாகத்தான் எப்போதும் செல்லும்.. இது மட்டுமென்ன விதிவிலக்கா? கலைஞர் டிவி வருதாம்.. அதுல பெரியார் சொல்லும் பெண்ணெல்லாம் இருக்க மாட்டாங்க.. வேண்ணா தேடிப் பார்த்து சொல்லுங்க..

    அதென்ன இன்னொரு அனானி கேட்டிருக்காரு? தமிழ்மணத்தைவிட்டு விலகுறீங்களா?

    டோண்டு ஸார்.. ஏதோ உங்களாலதான் தமிழ்மணமே வாழ்ந்துக்கிட்டிருக்கு. நீங்க பாட்டுக்கு போயிட்டீங்கன்னா அப்புறம் எங்களுக்கு எப்படி பொழுது போகும்? அதுனால.. அதெல்லாம் வேண்டாம்.. இங்கேயே இருந்து வாங்குறதையெல்லாம் வாங்கிக்கிட்டே இருங்க. நாங்க வேடிக்கை பார்க்குறோம்..

    ReplyDelete
  5. //கலைஞர் டிவி வருதாம்.. அதுல பெரியார் சொல்லும் பெண்ணெல்லாம் இருக்க மாட்டாங்க.. வேண்ணா தேடிப் பார்த்து சொல்லுங்க..//
    அதுலயும் இருக்கமாட்டாங்கன்னுதானே சொல்கிறீர்கள்?

    //இங்கேயே இருந்து வாங்குறதையெல்லாம் வாங்கிக்கிட்டே இருங்க. நாங்க வேடிக்கை பார்க்குறோம்..//
    அப்படீங்கறீங்க? வாங்கவும் வாங்குவேன், கொடுக்கவும் கொடுப்பேன். அந்த ஒரு பேர்வழியும் அவனோட அல்லக்கைகளும் கத்தறதுலேருந்து புரிஞ்சுக்குங்க.

    அவங்க அறியாமலேயே இந்த 61 வயது இளைஞனோட ஹிட் கவுண்டரை சூடேத்துறாங்க.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. நான் நீங்க மும்தாஜ் லைவ்ல வந்தா மட்டும் தான் போன் பண்ணுவீங்கனு நினைச்சேன்......

    ReplyDelete
  7. எந்த மும்தாஜ்? http://dondu.blogspot.com/2007/02/blog-post_16.html
    அந்த மும்தாஜா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. //இளைஞனோட ஹிட் கவுண்டரை சூடேத்துறாங்க.//

    ஆட்டோ மீட்டர் தெரியுமா? சும்மா விறுவிறுன்னு ஓடும். அது எப்படி ஓடுது? ஆட்டோக்காரன் வெக்கிற சூட்டுனால தானே?

    அந்தமாதிரி உங்க ஹிட்கவுண்டரை ஓட்டுறதே நீங்கதான். பின்னே! ஒருநாளைக்கு ஐநூறு வாட்டி உங்க பதிவுகளை நீங்களே ஓபன் பண்ணி பாத்தீங்கன்னா ஹிட்கவுண்டர் ஆட்டோ மீட்டர் மாதிரியென்ன பி.டி. உஷா மாதிரியே ஓடத்தான் செய்யும்!

    ReplyDelete
  9. //ஒருநாளைக்கு ஐநூறு வாட்டி உங்க பதிவுகளை நீங்களே ஓபன் பண்ணி பாத்தீங்கன்னா ஹிட்கவுண்டர் ஆட்டோ மீட்டர் மாதிரியென்ன பி.டி. உஷா மாதிரியே ஓடத்தான் செய்யும்!//
    தகவல் பிழை. எனது ஹிட்கவுண்டர் லாகின் செய்து நான் திறப்பதற்கு ஏறாது. அதை சரிபார்த்தவன் என்ற முறையில் கூறுகிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. //தகவல் பிழை. எனது ஹிட்கவுண்டர் லாகின் செய்து நான் திறப்பதற்கு ஏறாது. அதை சரிபார்த்தவன் என்ற முறையில் கூறுகிறேன்.//

    ஆனால் ஹிட்கவுண்டரில் நம் தேவைக்கேற்ற எண்ணை மாற்றிகொள்ளும் வசதி இருக்கிறது. ஹிட்கவுண்டர்களை உருவாக்கும் கோட் எழுதுபவன் என்ற முறையில் கூறுகிறேன்.

    ReplyDelete
  11. //ஆனால் ஹிட்கவுண்டரில் நம் தேவைக்கேற்ற எண்ணை மாற்றிகொள்ளும் வசதி இருக்கிறது.//
    அப்படியா? எனக்கு அது தெரியாது. அது தேவையுமில்லை. எனக்கு இருக்கும் ரீடர்ஷிப்பே போதும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. //எனக்கு இருக்கும் ரீடர்ஷிப்பே போதும். //

    உங்கள் பதிவுகளை நீங்களும், உங்கள் பங்காளியும்.. அவ்வப்போது எங்களை போன்ற அப்பாவிகளும் மட்டுமே படிக்கிறோம். இந்த ரீடர்ஷிப்போ போதும் இல்லையா? பதிவு போட்டு முடிச்சப்புறம் ஹிட்கவுண்டர்லோ ரெண்டாயிரமோ, மூவாயிரமோ ஏத்திகிட்டா போவுது.

    ReplyDelete
  13. நியாயமான கேள்வி. என்னுடைய இந்த பதிவையும் பாருங்கள். நேரமிருக்கும்போது.

    http://xavi.wordpress.com/2006/11/06/serialkillers/

    ReplyDelete
  14. Thokappiyan seems to have set your mind at rest, I hope. Abhi refused to marry Bhasker after all, eh?

    Gnanaskanthan

    ReplyDelete
  15. பின்னூட்ட டெண்டுல்கரே,


    இப்படி சொற்ப ரன்களில் பதிவுகள் நிற்பதைப் பார்க்க கஷ்டமாக உள்ளது.


    daniel pipes தெரியும் என்று நினைக்கிறேன். அவருடைய இந்தக் கட்டுரையை பல மொழிகளில் தருகிறார்கள்.


    http://www.danielpipes.org/article/4656

    தமிழில் அவர் தளத்தை நீங்கள் வேண்டுமென்றால் செய்யுங்களேன். நிச்சயம் விளம்பரங்கள் கூடி பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெட்டியாக தமிழ்மணத்தையே நம்பி காலத்தை வீணடிப்பது வெட்டி வேலை. பின்னூட்டமும் வருவதில்லை. வருமானமும் குறைச்சலே. International ஆகிவிட வேண்டியது தான்.

    ReplyDelete
  16. Please sign the online pettition to support the lonely lady suffering psychological violences:

    http://www.petitiononline.com/2007Diva/petition.html

    ReplyDelete
  17. சீரியல், சினிமா எல்லாம் மூடத்தனங்களை வியாபாரம் ஆக்குவது பற்றியும் கொஞ்சம் எழுதுங்க.
    நான் எழுதினால் யாரும் கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.

    இன்னும் பலரும் ஓலை சுவடி, சமஸ்கிரிதம், புராணம் என்று விழுந்து விழுந்து படித்து மூடத்னத்துக்கு ஆதாரம் தேடி கொண்டும் அதை சொன்னவன் யார் என்று சொல்லுவத்திலேயே குறியாக இருக்காங்க.

    ஆனால் இன்று அத்தகைய விஷயங்கள் கன ஜோராக வியாபாரம் ஆகிக் கொண்டிருப்பதும், அதை தாண்டி வெளிலயில் வந்து விட்டவர்களையும் குழப்பும் விதமாகவும் நம்மை சுற்றி இருப்பதை பார்க்க தவறி விடுவதோடு யுகங்களுக்கு முன்னால் சொல்லி விட்டுப் போனவர்களை திட்டி கொண்டு இருப்பதே அறிவார்ந்த சிந்தனையாக ஆகிப் போய் விட்டது.

    ReplyDelete
  18. //இன்னும் பலரும் ஓலை சுவடி, சமஸ்கிரிதம், புராணம் என்று விழுந்து விழுந்து படித்து மூடத்னத்துக்கு ஆதாரம் தேடி கொண்டும் அதை சொன்னவன் யார் என்று சொல்லுவத்திலேயே குறியாக இருக்காங்க.//
    அப்படஇப்பட்ட சீரியல்களும் சிறந்த முறையில் எடுக்கப்படுவதுதான் பிரச்சினை. மக்கள் அவற்றின் வலையில் சீக்கிரம் விழுந்து விடுகின்றனர். உதாரணம் சிதம்பர ரகசியம், ருத்ர வீணை, விடாது கருப்பு ஆகியவை.

    கச்சிதமாக முடிந்திருக்க வேண்டிய சீரியல்கள் நீடிப்பு தருவதால் இழுவையாகின்றன. அதை பற்றியும் எழுத வேண்டும். எழுதுவேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete