12/10/2006

சீரியல்கள், சங்கடங்கள்

சோப் ஆபெரா என்று செல்லமாக அழைக்கப்படும் மெகா சீரியல்கள் முதலில் அறிமுகமானது அமெரிக்காவிலேதான். ஐம்பது, அறுபது, எழுபதுகளில் பிரபலமான சீரியல்கள் I love Lucy, Dennis the menace, I love Jeannie, Bewitched, Dallas, Dynasty ஆகியவை. நான் இங்கு பேசப்போவது முழுக்கவும் அவற்றைப் பற்றியல்ல. அவற்றை எடுக்கும்போது எழுந்த சங்கடங்களைப் பற்றியே. உதாரணத்துக்கு Dennis the menace. இது சுமார் மூன்று வயதுடைய சிறுவனின் விஷமங்களை விவரிக்கும். ஆனால் இதெல்லாம் கார்ட்டூன்களில் மட்டுமே சாத்தியமாயிற்று. டைரக்டர் சொல்வதை சரியாக உள்வாங்கி பல எபிஸோட்கள் ஷூட் செய்ய தேவையான குழந்தையைக் கண்டுபிடிப்பது கடினமே. ஆகவே ஒரு வேலை செய்தார்கள். டென்னிசுக்கு வயது 11 என்று கதையை மாற்றினார்கள்.

இது முதல் மாடிஃபிகேஷன். இந்த சீரியல்கள் எல்லா எபிஸோடுகளிலும் வருபவர்கள், டென்னிஸ், அவன் தந்தை, தாய், பக்கத்து வீட்டுக்காரர் மிஸ்டர் வில்ஸன் அவர் மனைவி மார்த்தா வில்சன் ஆகியோரே. பிற முக்கிய பாத்திரங்கள் ஜோயீ என்ற சிறுவன், டென்னிசுக்கு சிஷ்யன், மார்க்கரெட் என்னும் சிறுமி வயதுக்கு மீறிய அறிவு மற்றும் படிப்புடன், அவ்வப்போது வரும் ஜீனா என்னும் இத்தாலியச் சிறுமி, இவளை மட்டும் டென்னிசுக்கு பிடிக்கும். மார்க்கரெட் போன்ற இதர சிறுமிகள் அவனுக்கு பிடிக்காது.

சில வருடங்களுக்கு முன்னால் ஐம்பதுகளில் வந்த இந்த சீரியலின் எபிசோட்களை மறுபடி டெலிகாஸ்ட் செய்தார்கள், ஹிந்தி டப்பிங்கில். திடீரென் வில்சன் பாத்திரத்தில் வந்த நடிகர் ஷூட்டிங்கிற்கு வரமுடியாமல் போக, வில்சன் வெளியூருக்கு சென்றிருப்பதாகவும், அவர் அண்ணா வேலை விஷயமாக வில்சன் வீட்டுக்கு வந்து தங்குவதாகவும் கதைகள் எடுக்கப்பட்டன. திடீரென அவ்ரும் ஒரு எபிசோடில் இல்லாமல் போக உள்ளூர் மளிகைக் கடைக்காரர் பாத்திரத்தை இந்த பாத்திரத்துக்காக ஒப்பேற்றினர்.

நான் கூற வருவது என்னவென்றால், இம்மாதிரி நடிக நடிகையர் மாற்றம் வரும்போதெல்லாம் மெனக்கெட்டு சிரமம் எடுத்து கதையை எல்லாம் மாற்றினர்.

அதே போலத்தான் ஹிந்தி சீரியல்களிலும். எண்பதுகளில் வந்த "யே ஜோ ஹை ஜிந்தகி" என்ற சீரியலில் முக்கிய நடிகர் ஷாஃபி இனாம்தார் சீரியலை விட்டு சிலகாலத்துக்கு விலக, அந்த பாத்திரம் வெளிதேசத்துக்கு போனதாக கதையை மாற்றி ஒப்பேற்றினர். இன்னொரு சீரியல் "டைகர்". கதாநாயக நடிகரை மாற்ற கையாளப்பட்ட உத்தி தமாஷானது. அதாவது ஒரு விபத்தில் கதாநாயகனின் முகம் சிதைக்கப்பட, பிளாஸ்டிக் சர்ஜெரி செய்கிறார்கள். இப்போது இருக்கும் முகம் புது கதாநாயக நடிகருடையது.

இன்னும் அதிகக் கொடுமை "ஒரு பெண்ணின் கதை" என்னும் சீரியல். அதில் நடித்த நடிகர் பாரி வெங்கட் பஸ் விபத்தில் இறந்துவிட (சீரியலில் அல்ல, நிஜமாகவே), கதையை மேலே எப்படி எடுத்து செல்வது என்ற குழப்பம். சீரியலில் பாத்திரமும் விபத்தில் இறப்பது போலவே காட்டிவிடுகின்றனர். ஆனால் மனைவியாக நடித்த பாத்திரத்துக்கு புத்தி பிசகி விடுகிறதாம். துக்கம் விசாரிக்க வந்தவர்களில் ஒருவரது முகம் அவர் கண்ணுக்கு மட்டும் பாரி வெங்கட்டின் உருவமாகத் தெரிகிறதாம். ஆகவே கணவர் இறக்கவில்லை என்று கூறி அவருடன் வாழப்போவதாக பிடிவாதம் பிடித்து, மருத்துவ ஆலோசனைப்படி மற்றவரும் இந்த நாடகத்துக்கு ஒத்துக் கொண்டு,... இப்படி போகிறது கதை. அதற்குமேல் அந்த சீரியலை பார்க்க பொறுமையில்லை எனக்கு.

ஆனால் இப்போது? சர்வசாதாரணமாக திடீரென ஒரு நாள் பழைய நடிகரின் முகத்தை க்ளோஸ் அப்பில் காட்டிவிட்டு மார்ஃபிங் செய்து புது நடிகரின் முகமாகக் காட்டுகின்றனர். கீழே ஒரு அறிவிப்பு: "இவருக்கு பதில் அவர்". தீர்ந்தது பிரச்சினை.

எனக்கென்னவோ இதுவே சரியான, நேர்மையான உத்தியாகத் தெரிகிறது. இம்மாதிரி பல சீரியல்களில் செய்து விட்டார்கள், செய்தும் வருகிறார்கள். உதாரணத்துக்கு: வரம், மலர்கள் (நடிகை வைஷ்ணவியின் மரணத்தால்), அலைகள், கோலங்கள், பல்லாங்குழி, முதலியன.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

22 comments:

சென்ஷி said...

Exam = result - test
:::)))

senshe

வெளிகண்ட நாதர் said...

இந்த அமெரிக்க சீரியல் என்று சொன்னவுடன் நான் எழுதிய 'Sex and The City - Readers Discretion Advised!!' பதிவு தான் ஞாபகம் வருகிறது! அப்புறம் இந்த பதிவு படித்தீர்களா??

Sridhar Venkat said...

டோண்டு ஐயா அவர்களுக்கு,

நீங்கள் சொன்னது போல் நடிகர்கள் மாறும் பொழுது கதையோடு மாற்றம் செய்வது பல சமயங்களில் கடினம்தான். நேரடியாக மாற்றினாலும் நேயர்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லை. கதையையே கூட மாற்றினாலும் நமது நேயர்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கப் போகிறார்கள் :-))))

நீங்கள் சொன்ன உதாரண சீரியல்களுக்கும் நமது தமிழ்த் தொடர்களுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் - அந்த தொடர்கள் நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்டவை (ஹிந்தி சீரியலான யே ஜோ ஹை ஜிந்தகி உட்பட). ஒரு வாரம் ஒரு கதை (சிற்சில சமயம் அடுத்த வாரத்தில் தொடரும்).

தமிழில் அப்படி (எனக்குத் தெரிந்து) வந்தத் தொடர்கள் மிகச் சொற்பமே. உ-ம் ரமணி vs ரமணி / லூட்டி போன்றவை.

மற்றப்படி நகைச்சுவைத் தொடர்கள் மிகச் சொற்பமே என்று நினைக்கின்றேன்.

Bala said...

தமிழ் தொலைக்காட்சி தொடர் நாடகங்களில் முதல் நகைசுவைத் தொடர் S.Vee.சேகரின் வண்ணக் கோலங்கள். தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது.

dondu(#4800161) said...

"Exam = result - test"
????? ---> அபுரி (புரியவில்லை)

:))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#4800161) said...

வெளிகண்ட நாதர் அவர்களே. நீங்கள் குறிப்பிட்ட 'Sex and The City - Readers Discretion Advised!!' பற்றிய பதிவு பார்த்தேன். அதன் க்விஸ் கூட பதிலளித்தேன். எனக்கு ஏற்றவர் சமாந்தா என்று வருகிறது.

இன்னொரு பதிவையும் பார்த்தேன். இதயக்கனி படத்தின் பாடல் வரி பொருத்தமான தலைப்பே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#4800161) said...

ஸ்ரீதர் வெங்கட் அவர்களே,

டைகர் என்னும் சீரியல் நகைச்சுவை சீரியல் அல்ல. அதில்தான் கதாநாயகனுக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி ஆகவே முகமே மாறி விட்டது என்று ஒரு கூடைப்பூவையே பார்வையாளர் காதில் வைப்பார்கள்.

தமிழில் என்னவோ நகைச்சுவை சீரியல்கள் குறைச்சல்தான். எங்கே அதெல்லாம் போடுவது. வெள்ளிக்கிழமை மாலை விளக்கு வைத்ததும் மங்களகரமாக, விஸ்தாரமாக பிணம் தூக்கும் காட்சிகள் இன்ன பிறவெல்லாம் வைத்து பார்வையாளர்களை ஒரு வழி அல்லவா செய்து விடுகிறார்கள்.

அவ்வப்போது அதே நேரத்தில் இந்தக் குடும்பத்தை வேறோடு அழிக்காமல் விட மாட்டேன் என்று புவனேஸ்வரி (சின்னத்திரை ரம்யா கிருஷ்ணன்) வேறு வந்து பயமுறுத்துவார். :)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#4800161) said...

பாலா அவர்களே, நீங்கள் குறிப்பிட்ட வண்ணக் கோலங்களில்தான் கதாநாயகி நடிகை குட்டி பத்மினி திடீரென்று மக்கர் செய்ய, அவர் பிறந்த வீட்டிற்கு சென்றிருப்பதாகவும், ஆனால் சேகரின் தங்கை மேனகா வந்திருப்பதாகவும் கூறி இரண்டு எபிசோட் செய்திருப்பார்கள். ஓய்வு பெற்ற கணக்கு வாத்தியார் ஜீ.கே.ஆடாகவும், மேனகா கிளியாகவும் மாறி ஒரே தமாஷ்தான். கணக்கு வாத்தியார் சொன்ன கணக்குக்கு விடை தெரியுமா யாருக்காவது?

இப்போதென்றால் குட்டி பத்மினிக்கு பதில் மேனகா என்று ஒரு சிறு அறிவிப்பு வைத்து விட்டு வேலை பார்ப்பார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

BadNewsIndia said...

//வரம், மலர்கள் (நடிகை வைஷ்ணவியின் மரணத்தால்), அலைகள், கோலங்கள், பல்லாங்குழி//

சீரியல் என்னும் மாயவலையில் நீங்களும் விழுந்துட்டீங்களா?
மேலே உள்ளதெல்லாம் தினமும் பாக்கறீங்களா என்ன?

dondu(#4800161) said...

சீரியல்களை பார்க்காம அதுங்களைப் பற்றி பதிவுகள் இட முடியுமா? ஆனால் இப்போதெல்லாம் செலக்டிவாகத்தான் அவற்றை பார்க்கிறேன். அதாவது தேவையில்லாமல் ஒருவர் இன்னொருவரை துன்புறுத்தி, அந்த இன்னொருவரும் அதையெல்லாம் தியாகம் என்னும் பேரில் பொறுத்துப் போவதையெல்லாம் பார்க்கப் பொறுமை இல்லை. பேசாமல் என் கணினி இருக்கும் அறைக்கு சென்று விடுவேன்.

இதில் என்ன கஷ்டம் என்றால் சாதாரணமாக இந்த சீரியல்கள் எல்லாம் நல்ல ப்ரொடக்ஷன் வேல்யூஸ்களுடன் உள்ளன. அவற்றில் நேர்மறை எண்ணங்கள் இருந்தால் நன்றாகவே இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

BadNewsIndia said...

கூலிப்படை ஆள் ஒருவன் உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டால் உடனுக்குடன் அழகு தமிழில் ஈ.மெயில் அனுப்பரான் :)

அத மாதிரி பதிவ படிச்சுட்டு பின்னூட்டம் இடாம போறவங்களுக்கு ஈ.மெயில் அனுப்பர மாதிரி கூலிப்படை எங்க கிடைக்கும் ? :)

சும்மா சொல்லக்கூடாது, கூலிப்படை இரவு பகல் தூங்காமல், கண் விழிச்சு உங்க பதிவுகளை கண் கொட்டாமல் பாதுகாக்கிறார்கள் ;) புண்ணியம் செய்தவர் நீங்கள்.

dondu(#4800161) said...

அதை விடுங்கள் BadNewsIndia அவர்களே. என்னைப் பொருத்தவரை அது முடிந்த பிரச்சினை. நமக்கு எவ்வளவோ வேலைகள் காத்திருக்கின்றன. வேலையற்றிருப்பவர்களை பற்றி நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்?

எனது அடுத்தப் பதிவைப் பார்த்து, கருத்து ஏதேனும் இருந்தால் கூறவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Cervantes said...

கோவிந்த் நிஹலானின்னு நினைக்கிறேன். அவரோட சீரியல் நுக்கட் பாத்திருக்கீங்களா? என்னொட ஃபிரெண்ட் ஒருத்தன் அதை ரொம்ப புகழ்வான். எனக்கு அவ்வளவா ஹிந்தி தெரியாது. கூடவே இந்த சீரியல் வந்தப்போ நான் சின்ன பையன். ஒங்களுக்கு தெரிஞ்சுருக்குமோ என்னமோ தெரியல்லியே.

கிருஷ்ணன்

Harry Potter said...

சில சீரியல்கள் பாசிடிவா இருக்குமே. ஒங்களோட அடுத்த பதிவிலே வேற ஒரு சந்தர்ப்பத்துலே குறிப்பிட்ட "நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்" சீரியல் வரிசை நான் சொன்னதுக்கு ஒரு நல்ல உதாரணம்.

முகம்மது யூனுஸ்

dondu(#4800161) said...

இல்லை கிருஷ்ணன் அவர்களே. நீங்க கன்ஃப்யூஸ் ஆகிவிட்டீர்கள் என நினைக்கிறேன். நுக்கட் சீரியல் குந்தன் ஷாவுடையது. தூர்தர்ஷனில் போடு போடென்று போட்டது. எனக்கு மிகவும் பிடித்த சீரியல். இது பற்றி எழுத தனி பதிவே போட வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#4800161) said...

நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ் பற்றிய்ம் தனி பதிவு போட வேண்டியதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

என்ன சார் இது சீரியல் பாத்து இப்படி ஃபீலிங்ஸ் ஆறீங்க?

ஏதோ டிஸ்கவரி பாத்தோமா, என்.டி.டி.வி. பாத்தோமான்னு இருக்கலாம்னு பாத்தாக்க இந்த வீட்டு பொம்பளைங்க (மனைவி, மகள்கள்) பண்ணற ரவுசு தாங்கலே சாமி. :)))

இந்த அழகுக்கு ஹிந்தீலே வேறே சீரியல்கள் எல்லாம் பாத்தீங்களா? சுத்தம். நமக்கு ஹிந்தி சுட்டுப்போட்டாலும் வராதய்யா.

முனிவேலு

dondu(#4800161) said...

"ஏதோ டிஸ்கவரி பாத்தோமா, என்.டி.டி.வி. பாத்தோமான்னு இருக்கலாம்னு பாத்தாக்க இந்த வீட்டு பொம்பளைங்க (மனைவி, மகள்கள்) பண்ணற ரவுசு தாங்கலே சாமி. :)))"

சரிதான், வீட்டுக்கு வீடு வாசப்படி. :)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

aaradhana said...

சீரியல்களை பார்க்காம அதுங்களைப் பற்றி பதிவுகள் இட முடியுமா? ஆனால் இப்போதெல்லாம் செலக்டிவாகத்தான் அவற்றை பார்க்கிறேன். அதாவது தேவையில்லாமல் ஒருவர் இன்னொருவரை துன்புறுத்தி, அந்த இன்னொருவரும் அதையெல்லாம் தியாகம் என்னும் பேரில் பொறுத்துப் போவதையெல்லாம் பார்க்கப் பொறுமை இல்லை. பேசாமல் என் கணினி இருக்கும் அறைக்கு சென்று விடுவேன்.

இதில் என்ன கஷ்டம் என்றால் சாதாரணமாக இந்த சீரியல்கள் எல்லாம் நல்ல ப்ரொடக்ஷன் வேல்யூஸ்களுடன் உள்ளன. அவற்றில் நேர்மறை எண்ணங்கள் இருந்தால் நன்றாகவே இருக்கும்.////இது ஒரு நல்ல கருத்து சார்.

dondu(#4800161) said...

நன்றி ஆராதனா அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சுவனப்பிரியன் said...

//ஏதோ டிஸ்கவரி பாத்தோமா, என்.டி.டி.வி. பாத்தோமான்னு இருக்கலாம்னு பாத்தாக்க இந்த வீட்டு பொம்பளைங்க (மனைவி, மகள்கள்) பண்ணற ரவுசு தாங்கலே சாமி. :)))//

best comment!

dondu(#4800161) said...

நீங்கள் சொல்வது சரியே, சுவனப்பிரியன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது