நிரந்தர பக்கங்கள்

10/07/2007

ஞானி சொன்னது என்ன?

அதை இப்போதைக்கு விடுங்கள். சமீபத்தில் 1984 தேர்தலில் கருணாநிதி அவர்கள் சொன்னது என்ன என்பதை சற்றே நினைத்து பாருங்கள். அச்சமயத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் அமெரிக்காவில் ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அச்சமயம் கருணாநிதி என்ன சொன்னார்? நினைவிலிருந்து எழுதுகிறேன். அதற்கு முன்னால் சில வார்த்தைகள்.

மொத்தமாகப் பார்த்தால் எம்ஜீஆர் பிரிந்து சென்று தேர்தலில் நின்றதிலிருந்து கருணாநிதியால் எம்ஜீஆர் உயிருடன் இருந்தவரை முதலமைச்சராகவே வர இயலவில்லை.

இவ்வளவு ஆண்டுகள் கொடுத்த தண்டனை போதாதா என்று 1984 தேர்தலில் அவர் அழுதும் பார்த்து விட்டார். அப்போது எம்ஜீஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார்.

அதே எம்ஜீஆர் பெயர்தான் அவரை 1991-லும் 2001-லும் தோற்கடித்தது.

ஆனால் கருணாநிதி 1984-ல் இன்னொன்றும் செய்து பார்த்தார். அதாவது இப்போது ஞானி செய்தது போல.

"எம்ஜீஆர் உடல்நலம் மோசமாகி விட்டது. அவர் ஒரு கறிகாய் நிலைக்கு போய் விட்டார் (ஆங்கிலத்திலத்தில் vegetable state என்று கூறுவார்கள்). ஆக அவரால் பதவி பிரமாணம் கூட எடுத்து கொள்ள முடியாது. என்னைத் தேர்ந்தெடுங்கள். அப்படியே அவர் திரும்பி வந்தால் நான் என் பதவியை அவருக்கு விட்டுத் தர சம்மதிக்கிறேன்" என்றெல்லாம் கதறி அழுதார். ப்ரூக்ளின் மருத்துவ மனையில் இருந்த எம்.ஜீ.ஆர். அவர்களின் புகைப்படத்தை வேறு போஸ்டர் அடித்து ஒட்டினார். கொடை வள்ளல் எம்.ஜீ.ஆரை பற்றி கேவலமாக, எள்ளல் தொனியில் கருணாநிதி குறிப்பிட்டார் என்று திடமாக எண்ணிய தமிழக மக்கள் தி.மு.க. வுக்கு படுதோல்வியை அத்தேர்தலின் போது அளித்தனர். ஆகவே "சோற்றால் அளித்த பிண்டங்களாம்" தமிழக மக்கள் அவரை நம்பவில்லை என்பதில் அவருக்கு ஒரே கோபம். அவ்வப்போது அவர் தேர்தல்களில் தோற்கும்போதெல்லாம் அது வெளிப்பட்டு விடுகிறது.

இப்போது ஞானி கூறியதற்கு வருவோம். அவர் எழுதியது ரசிக்கத் தக்கது அல்ல. கருணாநிதி அவர்கள் என்ன சின்ன குழந்தையா? ஞானிக்கு என்ன வந்தது? அவர்பாட்டுக்கு கூறிவிட்டு போய் விடுவார். ஆனால் கருணாநிதி அவர்களது பிரச்சினை கருணாநிதிக்குத்தானே தெரியும். ஆனால் ஒன்று. 1984-ல் கருணாநிதி அவர்கள் செய்தது அப்பட்டமான அவரது சுயநலமே. ஞானிக்கு அம்மாதிரி ஏதேனும் கம்பல்ஷன் எல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் ஒன்றும் தேர்தலுக்கெல்லாம் நிற்கவில்லையே.

இத்தனை நாளாக ஞானி என்பவர் பெரியார் பாசறை தளபதி என்ற ரேஞ்சில் புகழ்ந்தவர்களுக்கு இப்போது ஞானி ஒரு பார்ப்பனர் என்ற விஷயம் உறுத்துகிறது. இப்போது அதைச்சொல்லி அவரை சாடுகின்றார்கள். பார்ப்பனர்கள் ஏற்கனவே ஞானி தம்மவர் இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். இவ்வாறான நிலை அவருக்கு தேவையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

54 comments:

  1. Sooper Dondu sir. I haven't read Gnani's article in vikatan but going thro' some of the posts by our beloved??? so called DK friends. Especially I want to mention about luckylook's article. If you read the article, you can feel the love/passion he has towards mu.ka. I do not know what drives him to do so (he may dream that one day or the other he is gonna get some party post which is a mirage ofcourse!!!). I also do not understand why he has not learnt any lesson (family first politics next)from his beloved father who died recently. It seems that luckylook aka mohanakrishnan loves mu.ka too much that he doesn't want to answer some of my questions that I raised in his posts (he did not even publish them is a different story).

    Coming to the point, the same luckylook said "aahaa, Ohoo" about Gnani when he sais something against Brahmins...at that time his selective amnesia did not allow him to recall a fact that Gnani is a paarpaan; but when it comes to his leader, he doesn't seem to like the comments written by Gnani....what an opportunist he is...ofcourse like his leader who will soon change his "KOODAARAM" in the forthcoming election.

    Samething happened a while ago between V. KEERAMANI soorry K. VEERAMANI's adipodi vs. Ma. Ka. Ei. Ka thozhars (ma ka ei ka leader is a brahmin!!!)

    Good luck luckylook aka mohanakrishnan and good luck mu.ka.

    ReplyDelete
  2. அட கிழட்டு முண்டமே நீ இன்னும் திருந்தவில்லையா? அப்பொழுது எம்ஜிஆர் கருனாநிதிக்கு கிலிகொடுத்துக்கொண்டிருந்தார் இப்பொழுது கருனாநிதி உங்கள் எல்லோருக்கும் கிலி கொடுத்துக்கொண்டிருக்கின்றார், அப்படித்தானே

    ReplyDelete
  3. ஹலோ ரஞ்சித்,

    கருணாநிதிக்கு பேதி 1984-ல் என்று நீங்கள் சொன்ன வரைக்கும் சரியே. சும்மா சொல்லப்படாது மனிதர் எவ்வளவோ அழுது பார்த்தார். ஆனால் எம்ஜீஆர் என்னும் சக்தி உயிரோடு இருந்த வரையில் பப்பு வேகவில்லை என்பதே நிஜம்.

    மற்றப்படி அவரைப் பார்த்து எங்களுக்கு என்ன பயம்? நாங்கள் என்ன எலெஷனிலா நிற்கிறோம்?

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. நீங்க எலக்சனில் நிற்பதில்லை.ஆனால் ஜெயிப்பவனிடம் மூச்சா போட்டு விடுவீர்கள்.அப்படித்தானே அய்யா?

    எம்.ஜீ.ஆரிடம் கலைஞர் படுதோல்வியா? தொகுதி கணக்கு சொல்லமுடியுமா?

    அனுதாப ஓட்டு போடும் ஆட்டுகுட்டிகளிடம் வேற என்ன எதிர்ப்பார்க்க முடியும்? ஜெயலலிதாவையும் ஒருத்தன் கற்பழிக்கமுடியும் என்று நம்பியவர்கள்தானெ நாம்?

    ReplyDelete
  5. //நீங்க எலக்சனில் நிற்பதில்லை.ஆனால் ஜெயிப்பவனிடம் மூச்சா போட்டு விடுவீர்கள்.அப்படித்தானே அய்யா?//
    என்னமோ நீங்க மட்டும் எலெக்ஷன்லே நின்னுட்ட மாதிரி சீன் காட்டுறீங்களே மிஸ்டர் அனாமதேயம்? ஏன் இந்த முக்காடு?

    எம்ஜீஆர் அவர்கள் 1977-ல் பொது தேர்தலுக்கு நிற்க ஆரம்பித்து (அதுக்கு முன்னாலே இடைதேர்தலை நான் சேர்க்கவில்லை, இருந்தாலும் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக பயங்கர உதை வாங்கி மூன்றாம் இடத்துக்கே போனது) அவர் 1987-ல் இறக்கும் வரை கலைஞரால் முதன் மந்திரியாக வர இயலவில்லை என்ற நிலையில் தொகுதிவாரியாக வாங்கிய உதை விவரங்கள் கேட்கிறீரே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. இந்த அனானி அருண் என்கின்ற மதவாதி என்பது அவரது கொண்டைக்கு மேலால் தெரிகின்றது. தேவையற்ற இடத்தில் நம்ம தலை லக்கியை இழுப்பது கண்டிக்கத்தக்கது.

    ஸ்டாலின்
    லக்கி சுனாமிப் பாசறை

    ReplyDelete
  7. I think what you had pointed out is very much apprpriate.
    Though i had not been following any party line in Tamil Nadu,i remember present CM's appeal to public for 'one' chance again in a pathetic way.
    May be,recalling of such a pathetic plight keeps kim to stick on..

    ReplyDelete
  8. Dear Mr.Dondu,There is small error in your statement. DMK came second in the Dindigul Election and not third as reported by you. Congress came in the third position.

    ReplyDelete
  9. //i remember present CM's appeal to public for 'one' chance again in a pathetic way.//
    நீங்கள் மட்டுமல்ல, கருணாநிதி அவர்களின் ஆதரவாளர்கள் எல்லோருக்குமே அது நினைவில் இருந்து படுத்துகிறது. ஆகவே ஆத்திரத்துடன் பின்னூட்டங்கள் திட்டி வருகின்றன.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. //DMK came second in the Dindigul Election and not third as reported by you.//
    இல்லை, நீங்கள் சொல்வதுதான் தவறு. அந்த உபதேர்தலில் போட்டியிட்ட முக்கிய கட்சிகள் அதிமுக, பழைய காங்கிரஸ் (காமராஜ் தலைமையில்), திமுக மற்றும் இந்திரா காங்கிரஸ். வாக்குகளும் அதே வரிசையில்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  11. டோண்டுசார்,

    திமுக சட்டசபையில் திட்டம் பற்றிய விபரம் கேட்ட காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ (யசோதா?)விடம், "பாவாடையைத் தூக்கிப்பார் விபரம் தெரியும்" என்று நாகரீகமாக தமிழ்ப்பற்றுடன் சிலேடை பேசியவர் தானே அன்றைக்கும் இன்றைக்கும் தமிழக முதல்வராக இருக்கும் இந்த கருணாநிதி!

    கருத்து வெளிப்படுத்தும் நாகரீகமின்மைக்கு வெளக்குமாற்று அடி தண்டனை தருவது என்றால் தமிழகத்திலே நூறாண்டுகாலம் தொடர்ச்சியாக வெளக்குமாற்றுப் பஞ்சம் வரும் அளவுக்கு தண்டிக்கப்படவேண்டியது பகுத்தறிவுக் கழகங்கள் குறிப்பாக தி(மு)க!

    ReplyDelete
  12. யசோதா அவர்களிடம் கூறியதை சொல்விளையாட்டாகக் காட்டியவர் கலைஞர். அது முழுமையாக என்னவென்று இப்போது நினைவுக்கு வரவில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. அன்புள்ள டோண்டு,

    எம்.ஜி.ஆர் அவரின் ஆட்சிக்காலத்தில் தோற்கடிக்க முடியாத கட்சியாக அதிமுக இருந்து என்று கூறுவது தவறு.

    1980-பாரளுமன்ற தேர்தலில் அதிமுக படு தோல்வியடையவில்லையா

    1982 அல்லது 83 வருடம் நடந்த நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக தோற்கவில்லையா

    85 வருடம் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் அதிமுக மண்ணை கவ்வவில்லையா

    அன்புடன்
    அரவிந்தன்

    ReplyDelete
  14. //1980-பாரளுமன்ற தேர்தலில் அதிமுக படு தோல்வியடையவில்லையா
    1982 அல்லது 83 வருடம் நடந்த நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக தோற்கவில்லையா?//
    நான் கூறியதே முதலமைச்சராக கலைஞரால் எம்ஜீஆர் அவர்கள் இருந்தவரை வர இயலவில்லை என்பதே. மற்றப்படி 1980-ல் பாராளுமன்ற தேர்வில் அதிமுக தோற்றதும் உடனே கருணாநிதி குடு குடுவென்று இந்திரா அவர்களிடம் புலம்பி எம்ஜீஆர் அவர்களது ஆட்சியைக் கலைக்கச் செய்தார். பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் கலைஞர் மண்ணைக் கவ்வினாரா இல்லையா? சென்னை தொலைக்காட்சியில் தேர்தல் அலசல் சமயம் தமிழக வரைபடத்தைப் போட்டு அது முழுவதும் எம்ஜீஆர் அவர்கள் முகத்தைப் போட்டது எனக்கு நினைவில் உள்ளது.

    மற்றப்படி சில இடை தேர்தல்க்ளில் தோற்பதும் வெல்வதும் மொத்த நிலையை மாற்றவில்லை அவ்வளவுதானே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  15. ஞாநி ஒரு பார்ப்பனர் என்பதாலேயே அவரது கருத்துக்களைப் புறந்தள்ளவேண்டுமென்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஜெயேந்திரன் விவகாரத்திலும் குஷ்பு பிரச்சினையிலும் அவரது நிலைப்பாடுகள் நேர்மையானவையாகவும் உறுதிமிக்கவையாகவுமிருந்தன. ஆனால் அவர் சமீபகாலமாக ஜெயலலிதாவை விடவும் கருணாநிதியை மட்டுமே அதிகம் விமர்சிக்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.

    கருணாநிதிக்குச் சொன்ன அறிவுரையை ஞாநி ஏன் அடேல்பிகாரி வாஜ்பேயிக்கும் சங்கர்தயாள்சர்மாவிற்கும் சொல்லவில்லை என்று கேள்வியெழுப்புவது தவிர்க்கவியலாதது.

    Posted by மிதக்கும்வெளி

    ReplyDelete
  16. முதியவர் என்றாலே உவ்வே சொல்லிவிட்டு 60 வயது இளைஞன் என்று சொல்லும் டோண்டு ராகவன், கருணாநிதியை ஞானி அவ்வாறு சொல்லும் போது அதற்கு வக்காலத்து வாங்குவது பச்சை பாப்பாரத்தனம்.

    சுனாமியார் பேரவை

    ReplyDelete
  17. நண்பர் மிதக்கும் வெளியின் பெயரில் வந்திருக்கும் அனானி நண்பரே,

    வாஜ்பேயியோ அல்லது காலம் சென்ற சங்கர் தயாள் சர்மாவோ இங்கு எங்கே வருகின்றனர்? இப்போது பார்வையில் இருப்பவர் கருணாநிதி அவர்கள் மட்டுமே. மேலும் அவரைப் பற்றி ஞானி கூறியது ரசிக்க இயலாத அறிவுரை என்று நான் ஏற்கனவே கூறிவிட்டேன். வயது முடியாமல் இருப்பவரை பற்றி அவ்வாறு எழுதுவது எனக்கும் உடன்பாடில்லைதான்.

    திமுக இப்போது இருக்கும் நிலையில் அவர்களுக்கு கருணாநிதியை விட்டால் வேறு வழியில்லை. தனது கடைசி மூச்சு வரை உழைக்கும் மனவுறுதி படைத்தவர் கருணாநிதி.

    ஆனால் அதே கருணாநிதி எம்ஜிஆர் பற்றி 1984-ல் கூறியதும் ரசனைக் குறைவான விஷயமே அதுதான் இப்பதிவின் முக்கிய இழை.

    மற்றப்படி இப்போதுதான் ஞானி பார்ப்பனராக இருப்பது எல்லோர் ஞாபகத்துக்கும் வந்துள்ளது என்பது ஒரு நகை முரணே. ஞானி போன்றவர்களுக்காக நான் இட்டதுதான் எல்லோரையும் கோபமூட்டிய அப்பதிவு சுயமரியாதையுடன் பார்ப்பனரை இருக்கச் சொல்வதற்காக போட்டதாகும். மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக தனது பார்ப்பன சாதியையே இழிவாகப் பேசினாலும் சம்பந்தப்பட்டவர் பார்ப்பனர் என்பதை மறக்க மற்றவர் விடுவதில்லை. சமயம் கிடைக்கும்போது இழிவுபடுத்துகின்றனர். ரோசா வசந்துக்கும் அவர் ஐயங்கார் என்பது தெரிய வந்தபோது விடாது கருப்புவால் இது செய்யப்பட்டது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  18. மேலே உள்ள எனது பின்னூட்டம் போலி டோண்டுவின் அள்ளக்கையான சுனாமியார் பேரவைக்கும் பொருந்தும்.

    பதிவை சரியாக படிக்கவும்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  19. //ஆனால் அதே கருணாநிதி எம்ஜிஆர் பற்றி 1984-ல் கூறியதும் ரசனைக் குறைவான விஷயமே அதுதான் இப்பதிவின் முக்கிய இழை.
    //

    Sariyana badhil, dheeniku dhaaninu solluvaanga, sariya pochu ippo. Still Mu.ka sonna "சோற்றால் அளித்த பிண்டங்களாம்" idhuku தமிழக மக்கள் badhil sonna sariyah poedum ( i mean will be balanced)

    ReplyDelete
  20. டோண்டு சார்,

    சட்டசபையில் தனித்தமிழ்நாடு என்கிறீர்களே, எங்கே உங்கள் தமிழ்நாடு என்று (யசோதா அல்ல) வேறு ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ கேட்க, தலைவர்(!) நாடாவை அவிழ்த்து, பாவாடை விலக்கிப் பார்த்தால் அங்கே தெரியும் தமிழ்நாடு என்று சிலேடையில் பதிலளிக்க அந்த அம்மையார் வாயடைத்துப் போய் அமர்ந்தார்.

    ReplyDelete
  21. //* மற்றப்படி அவரைப் பார்த்து எங்களுக்கு என்ன பயம்? நாங்கள் என்ன எலெஷனிலா நிற்கிறோம்?
    **/

    தமிழர்களை விழிப்புறச்செய்கின்றாரே, ராமர் பொய் என்கிறாரே, அதைக்கண்டுதானே உங்களுக்கெல்லாம், நடுக்கம். எம்ஜிஆர் கூட பேசமுடியாமல், கையை தூக்கமுடியாமல் இருந்தார். ஆனால் கருனாநிதி அவர்கள் உண்ணாவிரத மேடையில் பேசிய பேச்சு சூப்பர். திரைத்துனுக்கு பார்க்கவேண்டுமென்றால் இனைப்புத்தருகிறேன்

    ReplyDelete
  22. //தமிழர்களை விழிப்புறச்செய்கின்றாரே, ராமர் பொய் என்கிறாரே, அதைக்கண்டுதானே உங்களுக்கெல்லாம், நடுக்கம்.//
    தமிழர்களை இவரா விழிப்புறச் செய்கிறார்? சிரிப்புதான் வருகிறது. கலைஞர் டிவியில் வரப்போகும் அம்மன் மற்றும் பக்தி சீரியல்களை பார்க்கத்தானே போகிறீர்கள்.

    //எம்ஜிஆர் கூட பேசமுடியாமல், கையை தூக்கமுடியாமல் இருந்தார்.//
    அப்படிப்பட்ட எம்ஜிஆரிடம்தான் 1984-ல் மண்ணை கவ்வினார் கலைஞர். என்ன பேசுகிறீர்கள்?

    //ஆனால் கருணாநிதி அவர்கள் உண்ணாவிரத மேடையில் பேசிய பேச்சு சூப்பர்.//
    நன்றாக இருக்கட்டும் கலைஞர். அவர் செயலோடு இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியே. அந்த விஷயத்தில் ஞானி அவர்கள் எழுதியது ரசனைக் குறைவு என்று நான் பதிவிலேயே கூறியுள்ளேனே.

    அதிருக்கட்டும், அது என்ன எல்லாரும் கருணாநிதி 1984-ல் எம்ஜிஆர் பற்றி பேசியதை பற்றி இப்படி மௌனம் சாதிக்கிறீர்கள்? தமிழினியன் என்னும் பதிவரிடம் நான் கேட்ட அவர் பதிவில் இது சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலேயில்லை. அது சரி, நல்ல பதிலை வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறீர்கள்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  23. ஜெயலலிதாவிடமும் தான் கருனாநிதி தோற்றார், அதனால் என்ன இப்ப. தமிழர்களின் தனிப்பெரும் தலைவனாய் இருந்துகொண்டு வட இந்தியாவில் உள்ளவர்களையும், மற்றவர்களையும் அதிரவைத்துக்கொண்டு இருக்கின்றாரே அது தூள் இல்லையா? சோ, ராமகோபாலன், சுப்பிரமனியசாமி, எஸ்வி.சேகர் எல்லோரும் ஐய்யோ, ஐய்யோன்னு அலறுறாங்களே, அது நல்லாத்தானே இருக்கு.

    ReplyDelete
  24. //ஜெயலலிதாவிடமும் தான் கருணாநிதி தோற்றார், அதனால் என்ன இப்ப.//
    எம்ஜிஆர் இருந்த வரைக்கும் இவரால் அழுது பார்த்தாலும் முதல் மந்திரியாக வரமுடியவில்லை என்பதுதானே நிஜம்.

    ஏன் பம்முகிறீர்கள்? 1984-ல் கலைஞர் வக்கிரத்துடன் எம்ஜிஆர் பற்றி பேசியது பற்றி அவரது அடிபொடிகள் -பூத் ஏஜெண்ட் உட்பட - கருத்து கூற ஏன் மறுக்கிறீர்கள்?

    அன்புடன்,
    டோண்டு அரகவன்

    ReplyDelete
  25. ஆமாம் அப்ப எம்ஜியார் மக்களின் இதயக்கனியாக இருந்தார், இப்ப கருனாநிதி தமிழர்களின் தலைவராக இருக்கிறார், நாளை இன்னொருவர் இருப்பார் அதனாலென்ன. கருனாநிதி எம்ஜியாரைபத்தி சொல்லியிருக்கலாம் வாஸ்த்தவம்தான். ஆனால் அவர் சொன்னமாதிரியே நடந்துச்சுல்ல. ஆனால் ஞானி சொன்னது நடக்கலைல்ல. நீங்கள் சொல்லியகாலத்தில் கருனாநிதியைப்பத்தி நீங்கள் எல்லாம் ஏளனமாக சிரித்திருப்பீர்கள். இப்ப உங்களைப்பார்த்து நாங்கள் ஏளனமாக சிரிக்கிறோம். ஹ ஹ ஹ.

    ReplyDelete
  26. //ஆமாம் அப்ப எம்ஜியார் மக்களின் இதயக்கனியாக இருந்தார், இப்ப கருணாநிதி தமிழர்களின் தலைவராக இருக்கிறார்,//
    எம்ஜிஆர் எப்ப சார் மைனாரிட்டி அரசை நடத்தினார்? அத்தோட கோர்ட் அவமதிப்புக் குத்தம் வரும்போல இருக்குன்னதும் துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு கோட்டைக்கு ஓடியவர்தானே மு.க.?

    இந்தழகுக்கு கருணாநிதி சொல்லியிருக்கலாம்னு என்ன அது லாம் போடுகிறீர்கள்? எம்.ஜி.ஆர் அதுக்கப்புறம் 3 ஆண்டுகள் ஆட்சி செஞ்சுட்டுத்தான் போனார் என்பதை மறந்துட்டீங்களா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  27. அதன் பிறகு எம்ஜிஆர் எங்கே வெளியில்வந்து பொதுநிகழ்ச்சியில் கலந்துகொண்டார், மருத்துவமனையிலேயேதான் இருந்தார்.
    ஆமாம், மைனாரிட்டியோ மெஜாரிட்டியோ கலைஞர்தான் தமிழக முதல்வர்.
    ஆமாம் டோண்டு ஐயா கலைஞர் கோட்டைக்குபொஆனார், ஏன்னா அன்னைக்கு பந்த் நடக்கலையே, யாரு சோ ன்னது பந்த் நடந்துச்சுன்னு. உண்ணாவிரதம்தானே நடந்துச்சு. அன்னைக்கு பந்த் நடந்துச்சுன்னு நினைசீங்களா.

    ReplyDelete
  28. //யாரு சோ ன்னது பந்த் நடந்துச்சுன்னு. உண்ணாவிரதம்தானே நடந்துச்சு. அன்னைக்கு பந்த் நடந்துச்சுன்னு நினைசீங்களா.//
    இதை படிக்கும்போது அரசியல் நிர்ணயச் சட்டத்தை எரித்து விட்டு வெறும் காகிதத் துண்டைத்தான் எரித்தோம் என்று போட்ட அழுவாச்சி சீன் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறதே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  29. அதுக்கு என்ன பன்னுறது. ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு பாட்டு பாடிகிட்டே சைக்கிள்ல போங்க. ஆமாம் அகர்வால் என்னா ஆனாரு? லீவுபோட்டு ஓடிட்டாராமே?

    ReplyDelete
  30. /அதே எம்ஜீஆர் பெயர்தான் அவரை 1991-லும் 2001-லும் தோற்கடித்தது. /

    1996லும் 2006லும் திமுகவை ஜெயிக்க வைத்தது யார் பெயர் - அதையும் கொஞ்சம் சொல்லுங்களேன்.


    /இத்தனை நாளாக ஞானி என்பவர் பெரியார் பாசறை தளபதி என்ற ரேஞ்சில் புகழ்ந்தவர்களுக்கு இப்போது ஞானி ஒரு பார்ப்பனர் என்ற விஷயம் உறுத்துகிறது. இப்போது அதைச்சொல்லி அவரை சாடுகின்றார்கள். பார்ப்பனர்கள் ஏற்கனவே ஞானி தம்மவர் இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். இவ்வாறான நிலை அவருக்கு தேவையா? /

    நல்லா குறுக்குல புகுந்து கோல் போடறீங்க.

    அவர் பெயர் ஞாநி - ஞானி இல்லை. உங்கள் பெயர் டோண்டு - நோண்டு இல்லை.

    ReplyDelete
  31. //1996லும் 2006லும் திமுகவை ஜெயிக்க வைத்தது யார் பெயர் - அதையும் கொஞ்சம் சொல்லுங்களேன்.//
    முதல் தேர்தலில் ஜெயலலிதாவின் திமிரால் அவருக்கு தோல்வி கிடைத்தது. இரண்டாவதில் கூட்டணிக்குத்தான் கிடைத்தது வெற்றி. திமுகவுக்கு அல்ல. ஆனால் அழுகினி ஆட்டம் போட்டு திமுக பதவி ஏற்றதால்தான் மைனாரிட்டி அரசு என்ற பெயரில் சீப்படுகிறது. என்ன அழுது புரண்டாலும் அந்த அவமானம் போகாது.

    ஞாநி பெயர் விஷயம்: தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

    ஞாநி செய்தது தவறு என்று நான் பதிவிலேயே கூறினேன். 1984-ல் கலைஞர் செய்தது கூட வக்கிரமே. அதுதான் பதிவின் இழை. அதற்கு பதில் ஏதேனும் இருந்தால் கூறுங்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  32. திமுக தோற்றால் MGR பெயர் ஜெயித்தால் JJவின் திமிர் அல்லது கூட்டணி - உங்க நியாயம் நல்ல நியாயம்.

    பதிவைப் பத்தி என்ன சொல்றது - உங்க பழைய பதிவின் படி (பின்னூட்டத்தில் link கொடுத்திருக்கிறீர்களே)
    ஞாநி திருந்தலையேன்னு வருத்தப் பட்டிருக்கீங்க (//இவ்வாறான நிலை அவருக்கு தேவையா?//).

    ReplyDelete
  33. //திமுக தோற்றால் MGR பெயர் ஜெயித்தால் JJவின் திமிர் அல்லது கூட்டணி - உங்க நியாயம் நல்ல நியாயம்.//
    ஆனால் அதுதான் உண்மை. கருணாநிதி 1984-ல் செய்ததை உங்களால் நியாயப்படுத்த இயலவில்லை என்பதையும் பார்க்கிறேன். மற்றப்படி ஞாநிக்கு நான் எழுதியது அப்படியே இருக்கிறது. என்னதான் பார்ப்பனர்கள் சாதி பற்று இல்லாதிருந்தாலும் மற்றவர்கள் அதை விடத் தயாராக இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. அதுதான் எனது பழைய லிங்க் பதிவின் இழை. மேலும் அப்பதிவு ஞாநி போன்ற சகபார்ப்பனர்களை குறி வைத்தே போடப்பட்டது என்பதை நான் முதலிலிருந்தே கூறி வந்துள்ளேன். இன்னமும் கூறுகிறேன், இனிமேலும் கூறுவேன்

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  34. /அதே எம்ஜீஆர் பெயர்தான் அவரை 1991-லும் 2001-லும் தோற்கடித்தது. /

    1991 - ல் அம்மா ஜெயிக்க காரணம் , ராஜீவ்காந்தி படுகொலை.

    2001 - ல் அம்மா ஜெயிக்க காரணம் -கூட்டணி + பணப்புழக்கம் இல்லை என்ற கூப்பாடு.

    ReplyDelete
  35. ப்ரியன் அவர்களே,

    அதிமுகவின் ஆதரவாளர்களது அடிப்படையே எம்ஜிஆர்தான். 1996-லும், 2006-லும் ஜெயலலிதா அவ்ர்கள் எம்ஜிஆர் பெயரை அமுக்க முயற்சி செய்ததும் அவரது தோல்வியில் கணிசமான பங்கு வகித்தது.

    எம்ஜிஆர் இறந்து 20 ஆண்டுகளாகப் போகிறது. இன்னமும் அவர் பெயர் மங்காமல் இருப்பதுதான் நிஜம்.

    பை தி வே நான் ஜெயலலிதா ஆதரவாளன் அல்ல. நான் சுதந்திரக் கட்சியின் ஆதரவாளன். இப்போது அக்கடசி இல்லை. ஆகவே ஒரு குறிப்பிட்ட சந்தர்பத்தில் எது நியாயம் என எனக்கு படுகிறதோ அதை நிலைநிறுத்தும் கட்சிக்கே எனது ஆதரவு (for what it is worth). அதன்படி 1996-ல் திமுகவை ஆதரித்தேன். 2001-ல் ஜெயலலிதாவுக்கு ஆதரவு, முக்கியமாக புலிகள் விஷயத்தில் அவரது நிலைப்பாடு காரணமாக். 1991-ல் திமுகவுக்கு ஆதரவு, ஏனெனில் அவர்கள் ஆட்சி கலைக்கப்பட்ட விதம் அழுகுனியானது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  36. தமிழினத்தலைவரின் மெய்சிலிர்க்க வைக்கும் குணங்கள்...

    தேர்தலில் தோற்றால் - தமிழன் சோற்றாலடித்த பிண்டம்
    தேர்தலில் ஜெயித்தால் - தமிழன் அறிவுள்ளவன்
    தன் குடும்பத்துக்கு தருவது - மந்திரி, எம்பி பதவி
    கட்சி தொன்டனுக்கு தருவது - இதயத்தில் சிம்மாசனம்
    தன் பேரனுக்கு - மிரட்டி வேண்டிய இலாகாவில் மந்திரி பதவி
    பொது பிரச்சினைக்கு - பிரதமருக்கு கண்ணீர் கடிதம்
    ரயில் வராதபோது - தண்டவாளத்தில் படுத்து போராட்டம்
    சுப்ரீம் கோர்ட்டு மிரட்டியபோது - உண்ணாவிரதத்தை விட்டு துன்டை கானோம் துனியை கானோம் என கோட்டைக்கு ஓட்டம்
    ஹிந்து என்றால் - கீழ்த்தரமாக திட்டுதல்
    மற்ற மதம் என்றால் - குல்லாய் அணிந்து கஞ்சி குடித்தல்
    தனது பணம் என்றால் - டீ செலவுக்கு கூட 25 கோடி மக்களிடம் பிச்சையெடு
    ஊரான் பணம் என்றால் - இலவச கலர் டிவி, நிலம், இஷ்டத்துக்கு கடன் ரத்து (எவன் பணமோதானே?)
    பதில் சொல்ல முடியாத வாதத்திற்கு - நான் அவாள் இல்லை பூணூல் போடவில்லை நான் தாழ்ந்த சாதிதானே என்று பேசுதல்
    பதில் சொல்லும்போது - சாதி மதத்தை திட்டி விதண்டாவாதமாக பேசுதல்
    தமிழுணர்வு - பாவாடை நாடா அவிழ்த்து பார் என்று பேசுதல்
    கடமை - "குளத்தில் இருவரும் விழுந்து சாகலாம் வரியா?"
    கண்ணியம் - அந்த அம்மையாருக்கு (ஜெ) தெரியுமா என் ஆண்மை பற்றி?
    கட்டுப்பாடு - நீதான்டா கொலைகாரன் (ஒரு நிருபரின் கேள்விக்கு பதில்)
    தமிழினம் காப்பதில் - சக தமிழன் (மூப்பனார்) பிரதமர் ஆகாமல் தடுத்தல்

    ReplyDelete
  37. /ஆனால் அதுதான் உண்மை./
    நம்புனீங்கன்னா சரி.

    /கருணாநிதி 1984-ல் செய்ததை உங்களால் நியாயப்படுத்த இயலவில்லை என்பதையும் பார்க்கிறேன்./
    எதுக்கு நியாயப் படுத்தவேண்டும். மட்டுமல்லாமல், உங்கள் பதிவின்
    மையம் ஞாநியே அன்றி மு.க. இல்லையே.
    /என்னதான் பார்ப்பனர்கள் சாதி பற்று இல்லாதிருந்தாலும் மற்றவர்கள் அதை விடத் தயாராக இல்லை என்பதுதான் கசப்பான உண்மை./
    ஐயோ பாவம்.

    ReplyDelete
  38. //உங்கள் பதிவின்
    மையம் ஞாநியே அன்றி மு.க. இல்லையே.//
    அடப்பாவமே, உங்கள் தமிழ் புரிதலே கோளாறா? மு.க. வின் அப்போதைய அநாகரிக பேச்சுத்தான் இப்பதிவின் முக்கிய சப்ஜக்ட். முதல் வரியிலேயே வந்து விட்டதே.
    //அதை இப்போதைக்கு விடுங்கள். சமீபத்தில் 1984 தேர்தலில் கருணாநிதி அவர்கள் சொன்னது என்ன என்பதை சற்றே நினைத்து பாருங்கள்.//

    என்ன முக்கினாலும் அவரால் 1984-ல் பதவிக்கு வர இயலவில்லை என்பது கூட இரண்டாம் பட்சம்தான்.

    மற்றப்படி நான் எனது சகபார்ப்பனர்களுக்கு கூற நினைப்பது உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  39. /அடப்பாவமே, உங்கள் தமிழ் புரிதலே கோளாறா? மு.க. வின் அப்போதைய அநாகரிக பேச்சுத்தான் இப்பதிவின் முக்கிய சப்ஜக்ட். முதல் வரியிலேயே வந்து விட்டதே./
    நீங்கள் நிறைய எழுதியது மு.க. பற்றி. ஆனால் மையம்... ஐயோ நான் அப்பவே சொன்னேனே, ஞாநிக்கு
    வேண்டுமா இதெல்லாம் என்பதுதானே...
    (/இவ்வாறான நிலை அவருக்கு தேவையா?/)

    /மற்றப்படி நான் எனது சகபார்ப்பனர்களுக்கு கூற நினைப்பது உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயம்./
    பதிவில் எழுதியவைதானே... ஒன்றும் சொல்லக்கூடாதா.?

    ReplyDelete
  40. //ஆனால் மையம்... ஐயோ நான் அப்பவே சொன்னேனே, ஞாநிக்கு
    வேண்டுமா இதெல்லாம் என்பதுதானே...//
    இல்லை அது மையம் இல்லை. முக தான் மையம்.

    //பதிவில் எழுதியவைதானே... ஒன்றும் சொல்லக்கூடாதா.?//
    தாராளமாக சொல்லுங்கள். யார் தடுத்தது?

    To sum up:
    1. 1984-ல் கருணாநிதி கூறியது
    2. ஞாநி இப்போது கூறியதை நான் ஒத்து கொள்ளாதது
    3. ஞாநி பார்ப்பனர் என்பது தேவைப்பட்ட சமயங்களில் மட்டும் ஞாபகப் படுத்திக் கொள்வது.

    மேலே சொன்ன வரிசையில் எனது இப்பதிவில் முக்கியத்துவம் பெறுகின்றன.

    இப்போது முடிந்தால் கருணாநிதி 1984-ல் பேசியதை நியாயப்படுத்துங்கள். இதுவரை யாரும் அதை செய்யவில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  41. //தமிழினத்தலைவரின் மெய்சிலிர்க்க வைக்கும் குணங்கள்...

    தேர்தலில் தோற்றால் - தமிழன் சோற்றாலடித்த பிண்டம்
    தேர்தலில் ஜெயித்தால் - தமிழன் அறிவுள்ளவன்
    தன் குடும்பத்துக்கு தருவது - மந்திரி, எம்பி பதவி
    கட்சி தொன்டனுக்கு தருவது - இதயத்தில் சிம்மாசனம்
    தன் பேரனுக்கு - மிரட்டி வேண்டிய இலாகாவில் மந்திரி பதவி
    பொது பிரச்சினைக்கு - பிரதமருக்கு கண்ணீர் கடிதம்
    ரயில் வராதபோது - தண்டவாளத்தில் படுத்து போராட்டம்
    சுப்ரீம் கோர்ட்டு மிரட்டியபோது - உண்ணாவிரதத்தை விட்டு துன்டை கானோம் துனியை கானோம் என கோட்டைக்கு ஓட்டம்
    ஹிந்து என்றால் - கீழ்த்தரமாக திட்டுதல்
    மற்ற மதம் என்றால் - குல்லாய் அணிந்து கஞ்சி குடித்தல்
    தனது பணம் என்றால் - டீ செலவுக்கு கூட 25 கோடி மக்களிடம் பிச்சையெடு
    ஊரான் பணம் என்றால் - இலவச கலர் டிவி, நிலம், இஷ்டத்துக்கு கடன் ரத்து (எவன் பணமோதானே?)
    பதில் சொல்ல முடியாத வாதத்திற்கு - நான் அவாள் இல்லை பூணூல் போடவில்லை நான் தாழ்ந்த சாதிதானே என்று பேசுதல்
    பதில் சொல்லும்போது - சாதி மதத்தை திட்டி விதண்டாவாதமாக பேசுதல்
    தமிழுணர்வு - பாவாடை நாடா அவிழ்த்து பார் என்று பேசுதல்
    கடமை - "குளத்தில் இருவரும் விழுந்து சாகலாம் வரியா?"
    கண்ணியம் - அந்த அம்மையாருக்கு (ஜெ) தெரியுமா என் ஆண்மை பற்றி?
    கட்டுப்பாடு - நீதான்டா கொலைகாரன் (ஒரு நிருபரின் கேள்விக்கு பதில்)
    தமிழினம் காப்பதில் - சக தமிழன் (மூப்பனார்) பிரதமர் ஆகாமல் தடுத்தல்
    //

    adra adra potu thaaku, Engal தமிழினத்தலைவரின் மெய்சிலிர்க்க வைக்கும் குணங்கள் kandu katrukollungal...(verah ennatha sollaradhu ippadi oru buthi ullavangaluku)

    ReplyDelete
  42. நீங்கள் எழுதிய வரிசை இது. கடைசி பாராதான் முக்கியம் {கடைசி பேச்சாளர் போல}.
    இல்லை எனறு சாதித்தால் ஒன்றும் செய்ய முடியாது.

    /இப்போது முடிந்தால் கருணாநிதி 1984-ல் பேசியதை நியாயப்படுத்துங்கள்/
    ஏற்கனவே சொல்லியதுதான் - நியாயப் படுத்த முடியாதது.

    /தாராளமாக சொல்லுங்கள். யார் தடுத்தது? /
    கண்ண கட்டுதே.(/மற்றப்படி நான் எனது சகபார்ப்பனர்களுக்கு கூற நினைப்பது உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயம்/).

    ReplyDelete
  43. ///இப்போது முடிந்தால் கருணாநிதி 1984-ல் பேசியதை நியாயப்படுத்துங்கள்/
    ஏற்கனவே சொல்லியதுதான் - நியாயப் படுத்த முடியாதது.//
    ஏற்கனவே நீங்கள் சொன்னது "ஏன் நியாயப்படுத்த வேண்டும்" என்பதே. போகட்டும் இப்போதாவது ஒத்து கொண்டீர்களே.

    சகபார்ப்பனருக்கு நான் கூறியது உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயம்தான், இருப்பினும் அதை பற்றி நீங்கள் தாராளமாக கேள்வி கேட்கலாம். நிஜமாகவே கூறுகிறேன். இதில் முரண்பாடு ஏதும் இல்லை. நம்புங்கள். உண்மை கூறப்போனால் இதனால் நீங்கள் பாதிக்கப்படாத இந்த நிலையில் உங்கள் கருத்துகள் உண்மையாகவே நீங்கள் நினைப்பதை பிரதிபலிக்கும் என நினைக்கிறேன்.

    சற்றே விளக்குகிறேன். ஞாநி கருணாநிதிக்கு இவ்வாறு கூறியவுடன் அதை பாப்பார புத்தி என்று கூறுபவர்கள், அதே போல கருணாநிதி 1984-ல் பேசிய போது ஏன் இசை வேளாளர் புத்தி என்று யாரும் கூறவில்லை?

    இந்த அழகுக்கு ஞாநி தனது பார்ப்பன அடையாளத்தையே மறுப்பவர் என்பதும் உங்களுக்குத் தெரியும்தானே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  44. "ஏன் நியாயப்படுத்த வேண்டும்" எனறு கேட்டது சம்பந்தம் இல்லாத விஷயம் என்பதாலேயே. கடைசி
    பின்னூட்டத்தில் 'ஏற்கனவே சொல்லியதுதான்' என்பது
    கூடுதலாக வந்து விட்டது.

    /சகபார்ப்பனருக்கு நான் கூறியது உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயம்தான், இருப்பினும் அதை பற்றி நீங்கள் தாராளமாக கேள்வி கேட்கலாம்./
    I do not want to get into this tamasha.

    நான் சொல்ல வந்தது ஏதாவது பிரச்சனை என்றால் குறுக்கே புகுந்து கோல்
    அடிப்பது, ஆள் சேர்க்க நினைப்பது {இங்கே ஞாநி) உங்களைப் போன்றவர்களுக்கு எளிதாய் இருக்கிறதே.. அது எப்படி என்பதுதான்.

    ReplyDelete
  45. This is my first visit to this blog....accidentally stepped in...Those who talk about Gnani's article in AV on Kalaignar may not have read Gnani's article supporting Jayalalitha when she was in power. I think it was published in thatstamil.comtwo years ago...searching for the link....will definitely post it here if i gert it. After reading that article, one can easily understand what kind of person Gnani is..........

    ReplyDelete
  46. Here is Gnani's JJ (J Jalra) article.....I am searching for his another article which was the "best" jalra that anyone could give to J....will share it with you all.

    http://thatstamil.oneindia.in/art-culture/essays/jnani.html

    ReplyDelete
  47. //Here is Gnani's JJ (J Jalra) article.....I am searching for his another article which was the "best" jalra that anyone could give to J....will share it with you all.//
    பார்த்தேன் அக்கட்டுரை அன்றைய நிலைக்கு ஏற்றபடி இருந்தது. அதில் ஜால்ரா என்ன இருக்கிறது? கண்டிப்பாக கருணாநிதிக்கு ஜயேந்திரரை கைது செய்யும் அரசியல் தைரியம் இருந்திராது. அதே போல மழை நீர் சேமிப்பு திட்டத்தையும் அவர் பதவியிலிருந்தால் சொதப்பியிருப்பார்.

    பை தி வே நான் ஜெயின் ஆதரவாளன் அல்ல. கேஸ் பை கேஸ் பார்த்துத்தாதான் எழுத வேண்டும்.

    ஞாநி கருணாநிதியை பற்றி எழுதியது ரசனைக் குறைவானது என நான் ஏற்கனவே இப்பதிவில் கூறிவிட்டேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  48. 1967 க்கு முன் காங்கிரஸ் ஆட்சியின் போது கருணாநிதியைப் பார்த்து அனந்தநாயகி, "திரவிட நாடு நாடு என்று கூச்சலிடுகிறீர்களே அது எங்கே இருக்கிறது" என்று தன் தொடையைத் தட்டிக் கேட்டார். அவர் எப்போதும் ஆவேசமாகப் பேசும் போது தொடையைத் தட்டித்தான் பேசுவார். அதனால் எரிச்சல் அடைந்த கருணாநிதி "நாடாவை அவிழத்து பாவாடையைத் தூக்கிப்பார் தெரியும்" என்று கூறினார். அதன் விள்க்கம் பழைய கோப்புகளில் உள்ள நாடாவை அவிழ்த்து அதனடியில் உள்ள காலிகோ (பாவடை என்பது த்மிழில்) வைத் தூக்கிப்பார் என்பதாகும்.
    கருணாநிதியின் பதிலை மட்டும் போட்டிருக்கும் உங்களுக்கு அவர் ஆபாசமாக தொடையைத் தட்டிக் கேட்டது மட்டும் தெரியவில்லையா அல்லது வசதியாக மறந்து விட்டீர்களா?

    ReplyDelete
  49. //பார்த்தேன் அக்கட்டுரை அன்றைய நிலைக்கு ஏற்றபடி இருந்தது. அதில் ஜால்ரா என்ன இருக்கிறது? கண்டிப்பாக கருணாநிதிக்கு ஜயேந்திரரை கைது செய்யும் அரசியல் தைரியம் இருந்திராது.//

    Dondo,

    I have got the reply typed in Tamil to your above message using Murasu text Editor...unable to paste it here...

    what is your email id...i can send it to that.

    Thanks
    Mohan

    ReplyDelete
  50. //கருணாநிதியின் பதிலை மட்டும் போட்டிருக்கும் உங்களுக்கு அவர் ஆபாசமாக தொடையைத் தட்டிக் கேட்டது மட்டும் தெரியவில்லையா அல்லது வசதியாக மறந்து விட்டீர்களா?//
    அனந்தநாயகிதான். இப்போது நினைவுக்கு வருகிறது. நன்றி. முதலில் யசோதா என்று நினைத்தேன். யசோதா கேட்டதை வைத்து இவர் சொல் விளையாட்டு விளையாடினார் என்று மட்டும் சொன்னேன். இப்போதும் அதுதான்.

    அனந்தநாயகி சொன்னதுக்கு அவருக்கு இவ்வாறு பதில் கிடைத்தது நியாயமே. அதில் பிரச்சினை இல்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  51. //I have got the reply typed in Tamil to your above message using Murasu text Editor...unable to paste it here...//
    Why not? Control A + Control C + Control V.

    Or type the reply in English itself.

    Regards,
    Dondu N.Raghavan

    ReplyDelete
  52. //பார்த்தேன் அக்கட்டுரை அன்றைய நிலைக்கு ஏற்றபடி இருந்தது. அதில் ஜால்ரா என்ன இருக்கிறது? கண்டிப்பாக கருணாநிதிக்கு ஜயேந்திரரை கைது செய்யும் அரசியல் தைரியம் இருந்திராது.//

    §¼¡ñÎ,

    JJ ¨Å ¾Å¢Ã §ÅÚ Â¡÷ ¦ºöÐ þÕó¾¡Öõ «Å÷¸û ¬ðº¢ ¸¨Äì¸ÀðÊÕìÌõ.... ´Õ «¸÷Å¡§Ä¡ «øÄÐ ´Õ Ìø¸÷É¢§Â¡ Å¢ÎÓ¨È ¿¡Ç¢ø ¯îº ¿£¾¢ ÁýÈ ¸¾¨Å ¾¢ÈóÐ ¬ðº¢ ¸¨Äô¨À «Ãí§¸üȢ¢ÕôÀ¡÷¸û.....J Å¢ý «ó¾ ¦ºÂø ã÷츾ÉÁ¡ÉÐ. «ó¾ ¦ºÂø ÁðÎõ «øÄ...±ó¾¦Å¡Õ ¦ºÂÖ§Á...«Ð ¨¾Ã¢Âõ «øÄ. ´Õ ¬ðº¢Â¡ÇÕìÌ «Ð ܼ¡Ð. ¸¨Ä»÷ ¦ºö §ÅñÊ «Åº¢ÂÓõ þø¨Ä....«¾üÌ ¾¡ý J þÕ츢ȡ§Ã...

    ¸¨Ä»ÕìÌ ã÷츾Éõ ¸¢¨¼Â¡Ð.....þÕì¸ §ÅñÊ «Åº¢ÂÁ¢ø¨Ä...§¾¨ÅÔõ þø¨Ä. ã÷츾Éõ þÕó¾¢Õ󾡸 «Å÷ «Ãº¢ÂĢĢÕóÐ ±ý§È¡ ¸¡½¡Áø §À¡Â¢ÕôÀ¡÷......¨¾Ã¢Âõ þÕ츢ÈÐ....«¾É¡ø ¾¡ý þò¾¨É ±¾¢÷ôÒ츢¨¼Â¢Öõ 70 ÅÕ¼í¸Ç¡¸ ¾¡ìÌ À¢ÊòÐ ¿¢ü¸¢È¡÷. À¢Ã¨É¸¨Ç «¨Á¾¢Â¡¸ ƒÉ¿¡Â¸ 㾢¢ø ¨¸Â¡Öõ ¾¢Èý «¾¢¸õ.

    þ¨¾ ¿£í¸û ´ôÒ ¦¸¡û¸¢È£÷¸§Ç¡ þø¨Ä§Â¡...«Ð ¾¡ý ¯ñ¨Á.

    ¿ñÈ¢

    ReplyDelete
  53. நீங்கள் டிஸ்கியில் அடித்ததை கீழே ஒருங்குறியில் தருகிறேன்.
    //டோண்டு,

    JJ வை தவிர வேறு யார் செய்து இருந்தாலும் அவர்கள் ஆட்சி கலைக்கபட்டிருக்கும்.... ஒரு அகர்வாலோ அல்லது ஒரு குல்கர்னியோ விடுமுறை நாளில் உச்ச நீதி மன்ற கதவை திறந்து ஆட்சி கலைப்பை அரங்கேற்றியிருப்பார்கள்.....J வின் அந்த செயல் மூர்க்கதனமானது. அந்த செயல் மட்டும் அல்ல...எந்தவொரு செயலுமே...அது தைரியம் அல்ல. ஒரு ஆட்சியாளருக்கு அது கூடாது. கலைஞர் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை....அதற்கு தான் J இருக்கிறாரே...

    கலைஞருக்கு மூர்க்கத்தனம் கிடையாது.....இருக்க வேண்டிய அவசியமில்லை...தேவையும் இல்லை. மூர்க்கதனம் இருந்திருந்தால் அவர் அரசியலிலிருந்து என்றோ காணாமல் போயிருப்பார்......தைரியம் இருக்கிறது....அதனால் தான் இத்தனை எதிர்ப்புக்கிடையிலும் 70 வருடங்களாக தாக்கு பிடித்து நிற்கிறார். பிரச்சினைகளை அமைதியாக ஜனநாயக ரீதியில் கையாளும் திறன் அதிகம்.
    இதை நீங்கள் ஒப்பு கொள்கிறீர்களோ இல்லையோ...அது தான் உண்மை.
    நன்றி//

    உங்கள் கருத்தை அறிந்தேன். நன்றி.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  54. //தமிழினத்தலைவரின் மெய்சிலிர்க்க வைக்கும் குணங்கள்...

    தேர்தலில் தோற்றால் - தமிழன் சோற்றாலடித்த பிண்டம்
    தேர்தலில் ஜெயித்தால் - தமிழன் அறிவுள்ளவன்
    தன் குடும்பத்துக்கு தருவது - மந்திரி, எம்பி பதவி
    கட்சி தொன்டனுக்கு தருவது - இதயத்தில் சிம்மாசனம்
    தன் பேரனுக்கு - மிரட்டி வேண்டிய இலாகாவில் மந்திரி பதவி
    பொது பிரச்சினைக்கு - பிரதமருக்கு கண்ணீர் கடிதம்
    ரயில் வராதபோது - தண்டவாளத்தில் படுத்து போராட்டம்
    சுப்ரீம் கோர்ட்டு மிரட்டியபோது - உண்ணாவிரதத்தை விட்டு துன்டை கானோம் துனியை கானோம் என கோட்டைக்கு ஓட்டம்
    ஹிந்து என்றால் - கீழ்த்தரமாக திட்டுதல்
    மற்ற மதம் என்றால் - குல்லாய் அணிந்து கஞ்சி குடித்தல்
    தனது பணம் என்றால் - டீ செலவுக்கு கூட 25 கோடி மக்களிடம் பிச்சையெடு
    ஊரான் பணம் என்றால் - இலவச கலர் டிவி, நிலம், இஷ்டத்துக்கு கடன் ரத்து (எவன் பணமோதானே?)
    பதில் சொல்ல முடியாத வாதத்திற்கு - நான் அவாள் இல்லை பூணூல் போடவில்லை நான் தாழ்ந்த சாதிதானே என்று பேசுதல்
    பதில் சொல்லும்போது - சாதி மதத்தை திட்டி விதண்டாவாதமாக பேசுதல்
    தமிழுணர்வு - பாவாடை நாடா அவிழ்த்து பார் என்று பேசுதல்
    கடமை - "குளத்தில் இருவரும் விழுந்து சாகலாம் வரியா?"
    கண்ணியம் - அந்த அம்மையாருக்கு (ஜெ) தெரியுமா என் ஆண்மை பற்றி?
    கட்டுப்பாடு - நீதான்டா கொலைகாரன் (ஒரு நிருபரின் கேள்விக்கு பதில்)
    தமிழினம் காப்பதில் - சக தமிழன் (மூப்பனார்) பிரதமர் ஆகாமல் தடுத்தல்//

    suuuuppperrrr... Repeate....

    ReplyDelete