இது ஒரு மீள்பதிவு. இதை இட்டு 3 வருடமாகப் போகிறது. அப்போது குறிப்பிட்ட நிலைமை இன்னும் ரொம்ப மாறவில்லை. அதன் பிறகு வலைப்பதிவர் எண்ணிக்கை 100% க்கு மேல் அதிகரித்து விட்டது. இன்று வந்த இந்தப் பதிவே இப்போது அதை நான் மீள்பதிவு செய்ய உடனடி தூண்டுகோலாக அமைந்தது.
என்னை பார்ப்பன வெறியனாகவே பலரும் சித்தரித்து வந்திருக்கின்றனர். அதற்குக் காரணம் நான் என் ஜாதியை வெளிப்படையாகக் கூறியதே ஆகும். அவ்வாறு நான் முதல் முறையாக தமிழ்மணத்தில் கூறியதன் பின்புலனை இப்போது இங்கு பார்க்கலாம்.
எல்லாம் எழுத்தாளர் அசோக மித்திரன் அவர்கள் அவுட்லுக்கிற்கு அளித்த பேட்டியிலிருந்து ஆரம்பித்தது. அதில் அவர் தமிழகத்தில் பார்ப்பனர் நிலையைப் பற்றி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஈஸ்வர பிரசாத் அவர்களின் வலைப்பூவில் அசோக மித்திரன் கூறியது பற்றி அப்போது விவாதிக்கப்பட்டது. அதில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ:
"பார்ப்பனத்தன்மையை மறைத்துக் கொள்ள முயற்சித்ததும் இப்போதையப் பார்ப்பனரின் நிலைமைக்கு ஒரு காரணம். ஆனால் இவ்வாறு செய்ததில் மற்றவர் வலையில் விழுந்ததுதான் பலன். ஊரார் வாய்க்குப் பயந்து பயந்து இன்னும் இழிவுபடுத்தப்பட்டதுதான் மிச்சம். என்னதான் செய்தாலும் போதாது இன்னும் செய்ய வேண்டும் என்றுதான் கூறுவார்கள். "அடப் போய்யா நான் பார்ப்பனன்தான் அதற்கு என்ன இப்போது" என்று எதிர்த்துக் கொண்டால் என்ன ஆகி விடும்?
இவ்வாறு நினைத்துத்தான் நான் சமீபத்தில் 1963-ல் பொறியியல் கல்லூரி நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். மூன்று மூன்று மாணவர்களாக ஒரு குழுவை உருவாக்கி நேர்க்காணல் நடந்தது. என்னுடன் கூட வேறு இருவர் நேர்க்காணப்பட்டனர். தேர்வுக் குழுவின் தலைவர் திரு. முத்தையன் அவர்கள். அப்போது அவர் தொழில் நுட்பக் கல்வி ஆணையத் தலைவர். அவர் மற்றக் கேள்விகளைக் கேட்டு விட்டுக் கடைசியாக என்னைக் கேட்டார், "நீங்கள் பார்ப்பனரா?" என்று."ஆம் ஐயா" என்றேன். பார்ப்பனராக இருப்பதில் பெருமைப் படுகிறீரா?" என்று அடுத்தக் கேள்வி. அவர் கண்களைப் பார்த்துக் கொண்டு பதிலளித்தேன் "நிச்சயமாக ஐயா" என்றேன். அவர் புன்னகை புரிந்த வண்ணம் இன்டர்வியூ முடிந்தது என்றார். வெளியில் வந்ததும் என்னுடன் கூட வந்தவர்கள் எனக்கு கண்டிப்பாக சங்குதான் என்றார்கள். "அடப் போடா மயிரே போச்சு" என்றேன். என்ன ஆச்சரியம்! தேர்வு கிடைத்தது. இந்த அழகில் ஏற்கனவே என் தந்தை சிபாரிசுக்குச் செல்ல மாட்டேன் என்று வேறு கூறியிருந்தார். ஆக, முத்தையன் அவர்கள் என் பதிலுக்காக கோபம் எல்லாம் படவில்லை.
இதிலிருந்து ஒரு பாடம் கற்றேன். பயப்படக்கூடாது. இப்போதுத் திரும்பிப் பார்க்கிறேன். இவ்வளவு ஆண்டுகளும் அவ்வாறே வாழ்ந்திருக்கிறேன். தேவையில்லாது மற்றவர் ஆதரவை எதிர்ப்பார்த்தால் கடைசியில் அவமானம்தான் மிஞ்சும். செயலாற்றும்போது மற்றவர் அனுமதியையெல்லாம் எதிர்பார்க்க மாட்டேன். என் செயலுக்கும் அதன் விளைவுகளுக்கும் நானே பொறுப்பு. மற்ற எந்த ஜாட்டானும் எனக்குப் பொருட்டல்ல.
நாய்கள் துரத்தினால் ஓடாதீர்கள். அவற்றை எதிர்கொள்ளுங்கள். அவை ஓடி விடும். இந்தப் பாடம் கற்றுக் கொண்டு உலகுக்குத் தெரிவித்தது விவேகானந்தர் அவர்கள்."
இப்போது வலைப்பூவில் பார்க்கிறேன். எழுதுபவனின் ஜாதியைத்தான் முதலில் கவனிக்கிறார்கள். "கமலின் நடிப்பு எனக்குப் பிடிக்கும், அவருக்கு வாரிசாக மாதவனையும் அரவிந்தசாமியையும் பார்க்கிறேன்" என்று வெங்கடேஷ் எழுதப் போக, "ஆஹா அவர்கள் பார்ப்பனர்கள் என்பதால்தான் இவ்வாறுக் கூற முனைந்தீரா" என்றுத் தோள் தட்டிக் கொண்டு வந்தார் ஒருவர். ஒரு பின்னூட்டம் இட்ட என்னை "நீங்கள் வடகலையா அல்லது தென்கலையா" என்றுக் கேட்டதாலேயே நான் வடகலை என்று உண்மையைக் கூற என்னமோ நான்தான் அதை முதலில் கூறியது போல கேட்டவர் திரித்து எழுத "நீங்கள் கேட்டதால்தான் கூறினேன்" என்று நான் கூறியதை அந்த மனிதர் கவனிக்கவேயில்லை.
அதே போல என்றென்றும் அன்புடன் பாலா வீட்டிற்குச் சென்ற போது எனக்கு ஏற்பட்ட ஹைப்பெர் லிங்கைப் பற்றிக் கூறப்போக, "நீங்கள் பார்ப்பனரானதால்தான் அவ்வாறு கண்டு பிடிக்க முடிந்தது" என்றுத் தேவையின்றி சாதியை இழுத்தார் இன்னொருவர். அதற்கும் மேலாக பார்ப்பனர்கள் தங்கள் சாதியை எப்படியாவது வெளிப்படையாக்குகிறார்கள் என்ற நக்கல் வேறு.
இப்போது கூறுகிறேன். நான் டோண்டு ராகவன். வடகலை ஐயங்கார். பார்ப்பன ஜாதியில் பிறந்ததற்குப் பெருமிதம் அடைகிறேன். நான் பார்ப்பனன் என்பதை எப்போதும் தெளிவுபடக் காட்டிக் கொண்டவன். இனிமேலும் அவ்வாறுதான் செய்யப் போகிறவன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: இப்பதிவை மீள்பிரசுரம் செய்ததற்கு லக்கிலுக்கே பொறுப்பாவார் என்று கூறினால் அவர் மறுக்க மாட்டார்.
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
-
அன்புள்ள ஜெ அண்மையில் ஒரு கடிதத்தில் உறுதியான கருத்துக்கள்
கொண்டிருக்கக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். இளம்வாசகர்கள் உடனடியாக
உறுதியான கருத்துக்கள் கொண்...
15 hours ago
119 comments:
Others (including me!) may have differences of opinion with you, but certainly, I appreciate your honesty, integrity, forthrightness, courage and conviction! Pl. write about the hijack of an Israeli plane to Entebbe and the daring rescue operation that followed.
enRenRum anbudan
BALA
Others (including me!) may have differences of opinion with you, but certainly, I appreciate your honesty, integrity, forthrightness, courage and conviction! Pl. write about the hijack of an Israeli plane to Entebbe and the daring rescue operation that followed.
enRenRum anbudan
BALA
Dear Raghavan,
Sorry for posting this reply here for the Israel series.
This is regarding your Israel post. As much as I would like to see the other side of the coin, I should humbly point out your post doesn't do justice to the cause of the Jews(note I am not saying "zionists") and the palestinians.
To my knowledge, the posts portray the "wow" mode rather than the historical perception(the coming posts may cover them, but this is my opinion of the past 3 posts). It is not my intention to downplay your effort of showing Israel's mighty(controversial) rise.
Everone quoting Hitler as a catlyst for the creation of the Israel state. Truly, Britan used the inability and wooden headed approach of Arab nations to create Israel and the zionist lobby in Washington and the guilty conciousness of the western world(failed to save the mass murders by Hitler) really helped it. There is nothing black and White in History.
I hope you will write about Chatilla camp and the behaviour of Israeli troops when they were in Lebanon. The next question may pop is what about the terrorism against Israel? Since this post talks about Israel, I just would like to point out that angle only.
It takes our life time to talk about the Israel controversy, and it would be really difficult to discuss without tempers fly, but I respect your effort(though I may not support many of your views).
Bala: Reg. Entebbe, In addition to Raghavan's post, there is a good book about it :
90 minutes at Entebbe / by William Stevenson ; with material by Uri Dan.
என் நண்பர் விஸ்வாமித்ரா அவர்கள் எனக்கனுப்பிய மின்னஞலை இங்குப் பின்னூட்டமாக இடுகிறேன். அவரால் அதை என் பதிவில் பின்னூட்டமிட முடியாததால் அவர் என்னை அவர் சார்பில் இம்மின்னஞ்சலை இடுமாறு கேடுக் கொண்டார். இப்போது விஸ்வாமித்ரா கூறுவார்:
"Dear Mr.Raghavan
For some reason I could not post my reply in your blog, hence sending this mail. Please post it in your feedback box.
As usual your post shows honesty and integrity of Raghavan. I went through all the related links and here are some of my thoughts.
Through the blogs only, I came to know that Asoka Mitran is a Bhramin. So far I bothered to read his writings only and never attempted to see what was under his shirt. Now these bloggers could not hide their glee in finding a new target to beat with.
I dont have anything to say much about the usual execrates of these Bhramin loathers, as usual they spewed their daily quota of canker in Internet. This time they found a new paarpan to beat with instead of the usual Chos. They are doing this each day out of their inferiority complex and sickened mind sets. I pity with their behaviours. They need a sand bag to show their bravo. They need a target to vent out their perverted minds at the same time they would be very careful in choosing their targets. They would prefer attack some one who should be too weak to hit back. So bhramins suit them well for show off their progressive attitudes. They will do it for ever as Bhramins are not going to get the strength and unity to hit back. I dont want to rock their boats now. Let them enjoy the bashing spree.
Let me say a few words about some bloggers who desperately wanted to downplay their bhraminical idendity and enthusiastically compete with each other to show who is more less a bhramin. I could not hold my laughter on seeing their childish behaviors. One guy is telling, I'll issue a condemnation, another who wants to beat the first one was saying A.M shattered his own image and is in envy of other backwards class writings. What a shame!! These guys would shamelessly stoop down to any extent to distance their bhraminical identifies to get liberal and progressive certificates from few Internet Tashildhaars. It seems they would write and say anything to boost their image among few whose major daily activity is nothing but apreading anti national and anti bhramin views. I will not be even surprised if out of competetion one tries to take back all the felicitations given to Asoka Mitran to prove his non-bhraminess. Another fellow went one step further to state that 'AM was doing that out of fear of the budding backward class writers' Even a class bhramin basher would not stoop down to this extent. Kudos to both of them. I wish their efforts not to go futile and they will get their 'Non-Bhramin' certificates from the issuing authorities soon.
Asoka Mitran has spoken his mind. There was nothing wrong in his frank talks. I hate the attitudes of few bhramins who are trying to show of as more libereal. Such mindset and attitudes are shameful ones It is not AM who should be condemned.
Recently one blogger got upset when he was accused as a paarpaan puthi. He vent out his hurt feelings. The same person is accusing Asoka Mitran as a casteist person, what a height of hypocricy? Why Asoka Mitran should have the same right?
Whatever extent these counterfeit bhramins try to hide their bhraminess, the usual haters would never admit them in their elite clubs. They will be waiting for every opportunity to hit them. Still these guys would not learn and begging for certificates from such a bunch of hostile minded perverts. It is shame on them. Even if they change their profession and ready to carry night soil on their heads, these perpetual hate mongers would not stop their mindless perennial belch. Let them try their best. I have my 2 cents to help those 'Liberals' to prove more of their non-bhraminess. May be, to show his strongest protest against Asoka Mitran, one can try issuing a statement withdrawing all the honors bestowed on Asoka Mitran few weeks back to earn few brownies from the cyber tashildaars. Another can consider organizing a dharna in front of Asoka Mitran's home or burning all his books in public to shed off their remaining bhraminical identifies. May be they will get some certificates that will withstand for few weeks.
When the likes of neo-nonbhramins are doing these fake bhramin bashing openly, there are certain other varieties who do the same thing under masks by hiding their bhramincal sounding names like Raman, Srinivasan et al. What a pathetic bunch of JERKS?
If anybody need to be condemned, if anybody need to be ashamed of, it is such clowns who wear all sort of masks and cosmetics to humor the fellow haters. Your post and integrity stand very tall Mr.Raghavan. Please accept my sincere appreciations and respects.
Regards
Viswamitra"
தன் பெயருக்கேற்ற தார்மீகக் கோபத்தைக் காட்டியுள்ளார். விஸ்வாமித்ரா. அவருக்கு என் நன்றி உரித்தாகுக.
கமலஹாசன் போன்ற பார்ப்பனர்கள் என்னதான் தலை கீழாக நின்றாலும் அவர்களை தங்களைச் சேர்ந்தவர்களாக பிராம்மணரல்லாதோர் நினைக்கப் போவதில்லை. அவர்கள் தங்கள் சுய மரியாதையை இழப்பதுதான் மிச்சம். நான் கேட்கிறேன், யாருக்கு வேண்டும் இவர்கள் அங்கீகாரம்? நான் கூறியபடியே நான் இத்தனை ஆண்டுகளும் வழ்ந்தேன், இனிமேலும் வாழ்வேன்.
நான் சமீபத்தில் 1962 - 63 கல்வியாண்டில் புதுக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படித்தேன். அப்போது தமிழ்த் துறைத் தலைவர் பாலூர் தூ. கண்ணப்ப முதலியார் அவர்கள். அவரைப் பற்றி என் தந்தை ஒரு விஷயம் கூறினார்.
ஒரு முறை இருவரும் ஒரு பொது இடத்தில் சந்தித்துள்ளனர். அப்போது அவர் என் தந்தையிடம் தான் பார்ர்ப்பனர்களைத் தமிழர்கள் என்று ஒத்துக் கொள்ள முடியாது என்று சற்றே கோபத்துடன் கூற என் தந்தை அவரிடம் இவ்வாறு கூறியிருக்கிறார்: "ஐயா, நானும் என் மூதாதையரும் தமிழ் நாட்டில்தான் பிறந்தோம், இங்குதான் வளர்ந்தோம். இங்குதான் இருக்கப் போகிறோம், எங்களைத் தமிழர்கள் என்றுக் கூற உங்கள் சான்றிதழ் தேவையில்லை".
அதையே நான் சற்றுக் கடுமையாகவே கூறுகிறேன். இது வரை இப்பதிவுக்கு விஸ்வாமித்ரா அவர்கள் மட்டும் நேரடியாகப் பின்னூட்டமிட்டுள்ளார். மற்றவர்கள் இஸ்ரேலைப் பற்றி எழுதிழுள்ளனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
I visited the outlook magazine and read Ashokamitran's views. There are many acceptable and unacceptable points.
For example, I completely agree with the following:
"Brahmin-bashing is not confined to politics. It is a pastime of the cultural and literary worlds as well."
At the same time, I could not see the Ashokamitran I knew of from the following passage:
"If a nonbrahmin has a windfall he just spends it on meat and drink. The Brahmin always saves for the rainy day."
If this is their perception on other castes, then Brahminism should be condemned. If I can tell something as the view of castism, then this is it.
Moreover, I completely agree with you and Ashokamitran on the tactics taken by a few brahmins trying to hide their identity. But, I am sure that they could not have survived the suppression and oppression against them, if they have not tried to hide their identity. Even if they have acted sane and without any superiority complex and treated everybody equally, then again they will be doomed, whatever be their contribution to the society and how respectable they are before the world.
I have read about the kind of ill treatments given to titans like S.R. Ranganathan, who is the Father of Library Science. Thanks to the caste in which he was born, not many know about him in India.
அன்புள்ள ராகவன்,
உங்கள் கருத்துகளை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்.
இந்தக் கட்டுரையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
http://timesofindia.indiatimes.com/articleshow/1067604.cms
சுவாமிநாதன் அங்கலேஸர்ய ஐயர் வழியில் செல்லும் பிராமணர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். தற்போது பலரும் அந்த வழியில் பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.
- அலெக்ஸ்
ஸ்வாமினாதன் அங்கிலேஷ்வர் ஐயர் மணி சங்கர ஐயரின் சகோதரர் என அறிகிறேன். இம்மாதிரி பிராமணர்கள் அதிகரித்து வருகின்றனர். வேலை உள்ளூரில் கிடைக்கவில்லையா, எங்கு உன் திறமைக்கு மதிப்பு கிடைக்கிறதோ அங்குப் போக வேண்டியதே. அதைத்தான் நாம் செய்து வந்திருக்கிறோம், செய்வோம் என்றுக் கூறுகிறேன். யாருக்காக நான் என் ஜாதியை வெளிப்படுத்தாது இருக்க வேண்டும்? என் நலனுக்கு ஏற்ப செயல் படுவது என் உரிமை. மற்றவர்கள் இதில் கருத்து கூற ஒன்றுமில்லை. தங்கள் ஜாதியை மறைக்க நினைக்கும் பிரமணர்களைப் பார்த்து பரிதாபப் படுகிறேன். வேறு என்ன செய்ய முடியும்? அசோக மித்திரன் அவர்கள் எவ்வளவு நாட்களுக்குத்தான் தன் எண்ணங்களை அடைத்து வைத்திருக்க முடியும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
சுதந்திரம் வந்தப் பிறகு வெகு விரைவில் இட ஒதுக்கீடு வந்தது. ஆரம்பத்தில் அம்முறையில் பயன் பெற்று க்ளாஸ்- 1 ஆக வந்த ஒரு அதிகாரியைப் பார்ப்போம். அவரைப் பொறுத்த வரை அப்போதே முன்னேறி விட்டார். இருப்பினும் அவருக்கென்று பதவி உயர்வுக்காக தனி லிஸ்ட். தன்னுடன் வேலைக்குச் சேர்ந்தவரை விட பிரமிக்கத் தக்க அளவில் அவர் பதவி உயர்வு பெறுகிறார். அவர் தன் பிள்ளைகளை நல்லப் பள்ளிக்கூடங்களில் படிக்க வைத்திருப்பார். அவர்களுக்கும் படிப்பு மற்றும் வேலை சமயங்களில் இலவச படிப்பு மற்றும் இட ஒதுக்கீடு வேலைக்கு மற்றும் பதவி உயர்வுக்கெனத் தொடர்ச்சியாக நடக்கிறது. அப்பிள்ளைகளின் பிள்ளைகள் இப்போது இலவசப் படிப்பு முடிந்து இட ஒதுக்கீடுடன் வேலை மற்றும் தனி ரேஞ்சில் பதவி உயர்வு என்றுப் போய் கொண்டேயிருக்கிறது. இப்போதைக்கு அது நிரந்தரமாகவே உள்ளது.
இதற்கிடையில் மண்டல் கமிஷன் சிபாரிசுகள் வேறு. பார்ப்பனரைத் தவிர மற்ற எல்லா சாதியினரும் இதில் பலன் பெறத் துடிக்கின்றனர். இவர்களுக்குள் பொருளாதரத் தகுதியை முன்னிறுத்த முயன்ற எம்.ஜி. ஆருக்கு பலத்த எதிர்ப்பு.
இப்போது பார்ப்பனர்கள் தாங்கள் ஒடுக்கப்பட்டதாக நினைப்பதில் என்னத் தவறு? அதைத்தான் அசோக மித்திரன் பிரதிபலித்திருக்கிறார்.
தகுதி அடிப்படையில் வேலை கொடுக்கக் கோரிக்கை எழுந்தால் பார்ப்பன ஆதரவு என்று எதிர்ப்பவர்கள் தங்களை அறியாமலேயே பார்ப்பனர்கள் திறமை மிக்கவர்கள் என ஒத்துக் கொள்கிறார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ளத் தூண்ண்டுகிறது.
தங்களின் மேல் நிகழ்த்தப்படும் இச்செயல்பாட்டைப் பார்ப்பனர்கள் அவரவருக்குத் தோன்றிய முறையில் எதிர் வினை இடுகின்றனர். அவர்களில் சிலர் தங்கள் பார்ப்பனத் தன்மையை மறைத்துக் கொள்கின்றனர். ராமன், சீனுவாசன் என்றத் தங்கள் பெயர்களை முகமூடி மூலம் மறைத்துக் கொள்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் எப்போதுமே அவமானப் படுத்தப்படுகிறார்கள். அவ்வாறில்லாது அடப்போடா ஜாட்டான் என்றுச் செல்லும் பார்ப்பனர்கள் உயர்ந்த நிலையிலேயே உள்ளனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ராகவன் சார்
இட ஒதுக்கீடு மட்டும்தான் உங்களுக்கு இப்பொழுது உள்ள நேரடி பிரச்சனை. அதை எடுத்து விட்டால் நீங்கள் மற்றவரை "தீட்டு" "பத்து" "மத்தவா" அப்படின்னு ஒதுக்க மாட்டீர்கள் அல்லவா. ஏனென்றால் இந்த செயல்பாட்டில் நேரடியாக பாதிக்கப் பட்டவன் நான். என் நண்பருடன் அவன் குல தெய்வக் கோயிலுக்கு சென்றேன். அது ஒரு வீடு. அங்கு அவர்கள் குல தெய்வ வழிபாடு செய்கிறார்கள். என்னை அங்கு அழைத்து செல்லும் அளவுக்கு என் நண்பனுக்கு ஆசையும் இருந்தது, நட்பும் இருந்தது. ஆனால் அங்கு என்னை யாரும் (அவன் பெற்றோர்கள் உள்பட) உள்ளே அனுமதிக்கவில்லை.
இது எந்த வகையில் நியாயம். எந்த விதத்தில் என்னை அவர்கள் மனிதனாக பார்க்க முடியாதவரானார்கள்? அல்லது எந்த வகையில் நான் அவர்களுக்கு வேண்டாதவனாகி விட்டேன்.
கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் நல்ல வேளையாக எங்கள் நட்பு முறிந்து விடவில்லை. அவனும் அன்று அங்கு வழிபடவில்லை.
இதெல்லாம் தேவையா சார்? நீங்க சொல்ற மாதிரி இட ஒதுக்கீட்டில் நீங்கள் ஒடுக்கப் பட்டிருக்கிறீர்கள் என்பது 100% உண்மை நான் ஏற்றுக்கொள்கிறேன். அது போல நீங்கள் செய்யும் இந்த தீண்டாமை கொடுமை எல்லாவற்றிருக்கும் விளக்கம் சொல்ல கடமைப் பட்டிருக்கிறீர்கள். தயவுசெய்து மனசாட்சியுடன் விடையளியுங்கள். ஒரு வேற்றானை உங்கள் பூஜை அறை வரை அனுமதிக்க நீங்கள் தயாரா? இன்றே இப்பொழுதே.
எப்பொழுது ஒன்றை இழக்க மறுக்கிறீர்களோ அப்பொழுது மற்றொன்றைப் பெற உங்களுக்கு தகுதியில்லை.
அது வரை உங்கள் (அமி போன்றோரின்) புலம்பல் தொடரவே வேண்டும் அதையே நானும் விரும்புகிறேன்.
உங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து வைக்கும் பொழுது அடுத்த தரப்பிற்கு நீங்கள் செய்த அநியாயங்களையும் ஆராய வேண்டும். அப்படியில்லையேல் நீதி வெறுமையாகத்தான் இருக்கும்
இந்த செயல்பாட்டை வைத்துக்கொண்டு நீங்கள் உயர்ந்த நிலையில் இருப்பதாகவே இருந்தாலும் அது பணத்தினாலும் அறிவாலும் இருக்கலாமே தவிர, மனிதத்துவத்தை பொறுத்தவரை நீங்கள் தான் தாழ்த்தப்பட்டவராவீர்கள்.
இறுதியாக ஒரு வரி. உண்மை சுடும் நமக்கு மட்டுமல்ல எதிரிக்கும் தான்.
தற்சமயம் தீண்டாமைக் கொடுமையைச் செய்வது பார்ப்பனரா? மற்ற உயர் சாதியினர்தானே? அவர்களைத் தட்டிக் கேளுங்கள், தைரியமிருந்தால். மலம் தின்ன வைப்பவர், ரிஸர்வ் பஞ்சாயத்து நடக்க விடாமல் செய்பவர், கட்டி வைத்து வைத்து உதைப்பவர், இரட்டைத் தம்ளர் வைத்துள்ள டீக்கடைக்காரர்கள் ஆகியோர் பார்ப்பனரா? அவர்களிலும் சிலர் பின் தங்கிய வகுப்பினருக்கான கோட்டாவில் இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும்தானே?
அது சரி மூன்றுத் தலைமுறையானாலும் இன்னும் தங்கள் குடும்பத்தினருக்குக் கோட்டா பெறுபவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றுக் கூறவேயில்லையே? அவர்களிடம் சென்றுப் பேச இயலுமா உங்களால்?
எங்கள் வீட்டில் வேற்றுமை நாங்கள் பார்ப்பதில்லை என்பதில் திண்ணமாகவே உள்ளேன். ஒருவனை உள்ளே விடுவதா வேண்டாமா என்று நான் பார்க்கும் காரணிகள் வேறு ஐயா. எங்கள் ஜாதியாகவே இருந்தாலும் அவனை எங்களுக்குப் பிடிக்கவில்லையானால் அவனை உள்ளே விட மாட்டோம். என் வீட்டிற்கு நாந்தான் குடும்பத் தலைவன். ஆகவே நான் என்னக் கூறுகிறேன் என்பதைப் புரிந்தே கூறுகிறேன். ஒழுக்கம் கெட்டவர்கள் என்பது தெரிந்தால் அவனை உள்ளே விட மாட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அது சரி மூன்றுத் தலைமுறையானாலும் இன்னும் தங்கள் குடும்பத்தினருக்குக் கோட்டா பெறுபவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றுக் கூறவேயில்லையே?
இரெண்டாயிரம் வருஷ கோட்டாவிற்கு அதாவது 70 தலைமுரை கோட்டாவிற்கு இது ஒன்றுமே இல்லயே சார்.
எழுபது தலை முறை கோட்டாவா? என்னக் கூறுகிறீர்கள்? கற்கல் நன்றே கற்கல் நின்றே பிச்சைப் புகினும் கற்கல் நன்றே என்றே நாங்கள் படித்து வந்திருக்கிறோம். குருவுக்கு உடலால் பனிவிடை செய்து அவர் இஷ்டப்பட்டப் போதுப் பாடம் கேட்டு உயிரைக் கொடுத்துப் படித்தவர்கள் நாங்கள். ஒரு போதும் கல்வியை இலவசமாகப் பெற்றதில்லை. அவ்வாறுப் பெறும் வித்தைக்குப் பலனில்லை என்பது எங்கள் நம்பிக்கை.
20-ஆம் நூற்றாண்டு வரை கிட்டத்தட்டத் தேங்கிய நிலையில் இருந்த உலகம் இப்போது வருடத்துக்கு வருடம் பிரமிக்கத்தக்க முன்னேற்றம் பெற்று வருகிறது. 70 தலை முறையாக மற்றவர் தூங்கி விட்டு இப்போது நாங்கள் தேங்கி நிற்க வேண்டும் என்றுக் கூறினால் அவ்வாறு நிற்பதற்கு நாங்கள் என்னக் கேனைகளா?
நாங்கள் மனத்தால் தாழ்த்தப்பட்டவர்களா இல்லையா என்று எங்களுக்குச் சான்றிதழ் கொடுக்க மற்றவர் யார்? எங்களுக்குத் தரக்கட்டுபாடுகள் கூற அவர்களுக்கு என்ன யோக்கியதை? அது சரி, 70 தலை முறைகளுக்கு மேல், இன்னமும் கூடத் தீண்டாமைக் கொடுமைகளைச் செய்து வரும் மற்ற உயர் சாதியினரைப் பற்றி என்னக் கூறுகிறீர்கள்? உங்களில் யாராவது அந்தச் சாதிகளைச் சேர்ந்தவராயிருப்பின் அவர்கள் கூறட்டும். தங்கள் சாதியினர் இம்மாதிரிச் செய்யக் கூடாது என்றுக் கேட்கும் தைரியம் அவர்கட்கு உண்டா?
அசோக மித்திரன் எங்கே புலம்பினார்? அவரைக் கேட்டக் கேள்விக்குப் பதிலளித்தார். அவ்வளவுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சார்
// தற்சமயம் தீண்டாமைக் கொடுமையைச் செய்வது பார்ப்பனரா? மற்ற உயர் சாதியினர்தானே? அவர்களைத் தட்டிக் கேளுங்கள், தைரியமிருந்தால் //
சார், அவர்கள் செய்கிறார்கள் என்பது வேறு பக்கம்.. நீங்கள் செய்கிறீர்களா இல்லையா?
// எங்கள் வீட்டில் வேற்றுமை நாங்கள் பார்ப்பதில்லை என்பதில் திண்ணமாகவே உள்ளேன். //
வணக்கங்கள்.
// எங்கள் ஜாதியாகவே இருந்தாலும் அவனை எங்களுக்குப் பிடிக்கவில்லையானால் அவனை உள்ளே விட மாட்டோம். //
இது உங்களுக்கு மட்டுமல்ல அனைத்து ஜாதியினருக்கும் பொருந்தும்.
// அது சரி மூன்றுத் தலைமுறையானாலும் இன்னும் தங்கள் குடும்பத்தினருக்குக் கோட்டா பெறுபவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றுக் கூறவேயில்லையே? அவர்களிடம் சென்றுப் பேச இயலுமா உங்களால்? //
உங்கள் கருத்தை நான் ஏற்கனவே 100% உண்மை என்று ஏற்றுக் கொண்டுவிட்டேன்.
// பிச்சைப் புகினும் கற்கல் நன்றே என்றே நாங்கள் படித்து வந்திருக்கிறோம். //
ஆனால் படித்த கல்வி பார்ப்பனருக்கு மட்டும்தான் எனச் சொல்வதில் எந்த விதத்தில் நியாயம் இருக்கிறது, எத்தனை வேதபாடசாலைகளில் வேற்று சாதியினருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. எத்தனைக் கோயில்களில் பூசாரிகள் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவராக இருக்கிறார்? என்ன சார் நியாயம் இது. படித்த கல்வி எல்லோருக்கும் சேர வேண்டும். அது உங்கள் பாரம்பரியத்துக்கு மட்டுமே பயன்படுமெனில் அது கல்வியே இல்லை.
// நாங்கள் மனத்தால் தாழ்த்தப்பட்டவர்களா இல்லையா என்று எங்களுக்குச் சான்றிதழ் கொடுக்க மற்றவர் யார்? //
அப்படியென்றால் நீங்கள், நீங்கள் (பார்ப்பனர்கள்) மட்டுமே வாழும் நாட்டில் மட்டுமே வாழ முடியும். இங்கு நியாய அநியாயங்கள் மற்றவர்களால் தான் தீர்மானிக்கப்படும் தீர்மானிக்கவும் முடியும். (after all every person has reasoning abilities) நான் எது செய்தாலும் நீ கேட்கக் கூடாதுன்னு சொல்றது நியாயமில்லை சார். இது உங்களுக்கு மட்டுமல்ல மற்றவருக்கும் பொருந்தும். அது தான் democracy. இங்கு எண்ணிக்கை தான் முக்கியம். நீங்கள் செய்வது நியாயம்னு majority நிரூபிக்கனும் இல்லைனா it will be punished.
// அசோக மித்திரன் எங்கே புலம்பினார்? //
"we are like jews" இதற்கு என்ன சார் அர்த்தம்?
// 70 தலை முறைகளுக்கு மேல், இன்னமும் கூடத் தீண்டாமைக் கொடுமைகளைச் செய்து வரும் மற்ற உயர் சாதியினரைப் பற்றி என்னக் கூறுகிறீர்கள்? //
அது யாரா இருந்தா என்ன சார். அவர்களுக்கும் தண்டனை தான்.
// கேட்கும் தைரியம் அவர்கட்கு உண்டா? //
ஏன் சார் கிடையாது... அத கேட்கப் போய் தானே இரட்டை டம்ளர் முறையிலிருந்து அத்தனை அவலட்சணங்களூம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
ஒண்ணு மட்டும் உறுதி சார். நீங்கள் (நீங்களும்) தப்பு செய்றீங்க. அத திருத்திக்கனும். அத விட்டுட்டு அவன திருந்த சொல் நான் திருந்தறேன், அவன நிறுத்த சொல் நான் நிறுத்தறேன் அப்படீன்னு "நாயகன்" type dialogue விடாதீங்க.
நீங்க தப்பு செய்றீங்க அப்ப திருத்திக்கோங்க இதில அவன் இவன்னு மூணாம் நபர் பேச்சே வேண்டியதில்லயே. படிச்சோம் படிச்சோம்னு சொல்றீங்களே நீங்கள் சொல்வது மாதிரி அவர்கள் படிக்காதவர்கள் தான். உங்கள் முயற்சிக்கும் பாராட்டுக்கள் ஆனா படிச்ச நீங்களே இவ்வளவு யோசிக்கும் போது படிக்காத அவனுக்கு என்ன சார் தெரியும். அவன குற்றம் சொல்லாதீங்க.
கண்டிப்பா எங்களை காட்டிலும் அறிவு உங்ககிட்ட ஜாஸ்தியா இருக்கு (இருக்க வச்சுகிட்டீங்க) ஆனா நாங்க மனுசங்க கிட்ட எதிர்பார்க்கிறது மனச சார்... அறிவ இல்ல...
உங்க கருத்துக்களை வெளிப்படையாக சொல்வதற்கு நன்றி... (எனக்கும் பதிலுக்கு நன்றி சொல்வீர்கள் தானே)
/70 தலை முறையாக மற்றவர் தூங்கி விட்டு...//
ஒடுக்கப்பட்டார்களா? புரக்கணிக்கப் பட்டார்களா? தூங்கினார்களா?
""க்ருஷி-கௌர க்ஷ்ய-வாணிஜ்யம் வைச்யகர்ம ஸ்வபாவஜம் பரிசர்யாத்மகம் கர்ம சூத்ரஸ்யாபி ஸ்வபாஜம்"" (கீதை அத்.18 - சுலோகம் 44)- இதற்கு என்னய்யா அர்த்தம்?
"க்ருஷி-கௌர க்ஷ்ய-வாணிஜ்யம் வைச்யகர்ம ஸ்வபாவஜம் பரிசர்யாத்மகம் கர்ம சூத்ரஸ்யாபி ஸ்வபாஜம்" -- இந்த வாசகத்துக்கு ஏற்றார்போல் இராஜாஜி 4000 ஆரப்ப பள்ளிக்கூடங்களை மூடியதெல்லாம் மறந்துவிட்டீர்களே ஐயா.
"எத்தனை வேதபாடசாலைகளில் வேற்று சாதியினருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. எத்தனைக் கோயில்களில் பூசாரிகள் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவராக இருக்கிறார்?"
அடக் கண்றாவியே. வேதபாடசாலைகளில் இப்போது பார்ப்பனரே படிக்க ஆசைப் படவில்லையே? அவை மெதுவாக இர்ரெலெவன்ட் ஆக அல்லவா ஆகியுள்ளன! நான் கூறியது கல்லூரிப் படிப்பு பற்றி ஐயா. அவற்றில்தான் எதிர்க் காலம் உள்ளது. அதில் எங்களைத் தடுத்து நிறுத்த யாருக்கு உரிமை உள்ளது? அப்படியே தடுத்தாலும் நாங்கள் பாட்டுக்குப் படித்து விட்டுப் போய் கொண்டேயிருப்போம். பார்ப்பனரை ஒடுக்க நினைப்பவர்கள் மற்ற உயர் சாதியினருக்கு ஏதாவது வேறு கோட்டாவில் சலுகை அளிப்பதைத்தான் கேள்வி கேட்டேன். அவர்கள்தான் இப்போதும் தீண்டாமை செய்கிறார்கள். பார்ப்பனர்களுக்கு அதெல்லாம் செய்ய நேரம் இல்லை. அவர்கள் படிப்புத்தான் அவர்களுக்கு முக்கியம்.
"அது யாரா இருந்தா என்ன சார். அவர்களுக்கும் தண்டனை தான்." நீங்கள்தான் அதைக் கூறுகிறீர்கள். என்ன தண்டனை, எங்கே தண்டனை?
"எனக்கும் பதிலுக்கு நன்றி சொல்வீர்கள் தானே"
கண்டிப்பாக, சந்திரன் அவர்களே.
"க்ருஷி-கௌர க்ஷ்ய-வாணிஜ்யம் வைச்யகர்ம ஸ்வபாவஜம் பரிசர்யாத்மகம் கர்ம சூத்ரஸ்யாபி ஸ்வபாஜம்"
அந்தக் கல்வி முறையே இப்போதுக் காலத்துக்கு ஒவ்வாததாக ஆகி விட்டதே? அதைப் பற்றி இங்கு ஏன் பேச வேண்டும்? இப்போது என்ன நடக்க வேண்டும் என்பது பற்றிப் பேசுங்கள், காஞ்சி அவர்களே.
"// கேட்கும் தைரியம் அவர்கட்கு உண்டா? //
ஏன் சார் கிடையாது... அத கேட்கப் போய் தானே இரட்டை டம்ளர் முறையிலிருந்து அத்தனை அவலட்சணங்களூம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன."
இரட்டைத் தம்ளர் முறையை ஒழிக்க நான் என் வலைப்பூவில் ஒரு பதிவில் கூறிய யோசனையைப் பற்றி உங்கள் மேலானப் பின்னூட்டத்தை சம்பந்தப்பட்டப் பதிவில் எதிர்பார்க்கலாமா? பெரும்பான்மையினர் எதிர் மறைப் பின்னூட்டமே இட்டுள்ளனர். என்னுடன் இவ்வளவு கண்யமாக விவாதித்த நீங்கள் கண்டிப்பாக அங்கு நான் கூறிய நியாயத்தைப் புரிந்துக் கொள்வீர்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அங்கு நீங்கள் இது வரை பின்னூட்டம் இடவில்லை என நினைக்கிறேன். போய்ப் பாருங்கள், சந்திரன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அந்தக் கல்வி முறையே இப்போதுக் காலத்துக்கு ஒவ்வாததாக ஆகி விட்டதே? அதைப் பற்றி இங்கு ஏன் பேச வேண்டும்?//
அதை தானே 2000 வருஷமா நீங்க பேசினீங்க, தினிச்சிங்க? மீறினா காதுல ஈயம் ஊத்தினிங்க. ஆனா 50 வருஷத்து ரிசெர்வேஷனுக்கே புலம்ப ஆரம்பிச்சுட்டீங்க?
"எத்தனை வேதபாடசாலைகளில் வேற்று சாதியினருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. எத்தனைக் கோயில்களில் பூசாரிகள் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவராக இருக்கிறார்?"
//அடக் கண்றாவியே. வேதபாடசாலைகளில் இப்போது பார்ப்பனரே படிக்க ஆசைப் படவில்லையே? அவை மெதுவாக இர்ரெலெவன்ட் ஆக அல்லவா ஆகியுள்ளன! //
நீங்கள் இந்த பதிலை தர இயலாது. ஏனெனில், இன்று எனது நண்பர்கள் பலர் வேத பாடசாலையில் பயில்கின்றனர். இது குறித்து சந்திரன் கேட்ட கேள்விக்கு நீங்கள் கூறுவது திசை திருப்பல் மட்டுமே.
இது வரை வேத பாடசாலையில் பயின்றவர்கள், பலர் வெளிநாடுகளில் நல்ல நிலையில் இருக்கின்றனர். இந்த கல்லூரிகள் குறித்துதான் அவர் பேசுகின்றார். அதற்குண்டான பதிலை நேர்மையுடன் தரக் கடமை பட்டுள்ளீர்கள். நான் எதையும் ஆதாரமின்றி கூறவில்லை.
"எத்தனை வேதபாடசாலைகளில் வேற்று சாதியினருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. எத்தனைக் கோயில்களில் பூசாரிகள் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவராக இருக்கிறார்? "
Vedic education is taught only to brahmins is one of the major Goebbels propaganda done in India. It is permitted to Kshatriya, Vaishya classes as well. However, it is true that Sudra class is not added in the list. That had not degraded the Sudra class in the ancient period, as many of the high caste born people bowed before the enlightened men born in Sudra class to learn the truth from them. There are various records in Indian literature. In the modern times it is only the Brahmin class that go to learn the Vedic studies and other people have shunned it.
Vedas talk and guide about the eternal truth and anybody who wants to learn can learn it. Ofcourse, the ancient laws have not asked the Sudras to learn veda. However, these laws are never considered eternal, but it is clearly understood that these laws can be changed and they have underwent various additions and deletions depending the call of the period. There are so many hindu institutes that teach Veda to anybody who are honest in their intention and sincere.
I have read in an article written by Aravindan Nilakandan at Thinnai that says that RSS teaches Veda to anybody. The URL for his postings is http://www.thinnai.com/author1007.html.
The problem with some people is that are not ready to come out of the colonial period and mindset.
"ஒரு வேற்றானை உங்கள் பூஜை அறை வரை அனுமதிக்க நீங்கள் தயாரா? இன்றே இப்பொழுதே"
Gentleman, I have seen that many Brahmin people allow any of their friends to Puja rooms. I have also seen that people born in other high castes do not allow people born in lower castes. Generalization will not allow you to know the facts in the right light.
One lady born in the (so called) low caste is a close friend of our family and she informed us that another lady is considered lower than their caste. Brahmins are not alone in doing such heinous activity.
The right thing is to stop blaming others for something wrong, but to do the right thing. Many brahmins have started doing this. Many other high caste people are doing so. Many other lower caste people are doing so.
By the way, these gentlemen who bash brahmins, have they ever done anything to the Hindu society in which they are born - apart from throwing sleeze from their air conditioned room?
பாலாஜி-பாரி அவர்களே, உங்களுக்கு ம்யூஸ் பதில் கூறிவிட்டார். அவருக்கு என் நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//Ofcourse, the ancient laws have not asked the Sudras to learn veda. However, these laws are never considered eternal, but it is clearly understood that these laws can be changed //
Excellent,அப்ப அடுத்த சங்கராச்சாரி ஒரு தலித்துதான்னு சொல்லுங்க.
எனக்கு வந்த மின்னஞ்சலை இங்கே கீழே இடுகிறேன்.
Jayakamal Balasubramani to me
1:23 am (5 hours ago)
Dear Dondu Sir,
I had read your blog recently, it was very interesting. I came across a piece of information regarding Tamil and Brahmins from tamilnation and some facts br Prof George Hart of U.C Berkeley. I just thought of sharing this with you.
Regards,
Jayakamal
Excerpts from the page:
From a posting by Professor George Hart in 1997 on Tamil, Brahmins, & Sanskrit: " ....here are some facts:
1. Brahmins are only 2% of the population, yet they have contributed much more to Tamil literature than their number would indicate.
2. The purest (i.e. least Sanskritized) Tamil was written by the medieval Saiva Brahmin commentators on Tamil. For example, Parimelazakar translates the yoga asanas into Tamil, and the only way anyone can figure out what he is saying is to read the sub commentary (by Gopalakrishnamachari), who gives the original Sanskrit terms. You will find no Tamil any purer than that of Naccinarkkiniyar et al.
3. Brahmins have contributed to Tamil from Sangam times. Kapilar is one of the greatest Tamil poets.
4. Yes, of course Brahmins have had their own political agenda to push. They have been responsible for many things that I feel are entirely unconscionable. But is this any different from the other high castes? I have heard many many stories of high non-Brahmin castes killing and abusing Dalits. You can't blame the Brahmins for this. In fact, the most pernicious example of the caste system was in the Tamil areas of Sri Lanka, where there are virtually no Brahmins and never have been.
5. You cannot blame the Brahmins for Sanskritizing Tamil. Tenkalai Aiyengars often use Tamil words where most non-Brahmins use Sanskrit ones. The Sanskrtization of Tamil is a very old process and cannot be understood except in an all-South-Asian context. The Bengali used in Bangladesh is highly Sanskritized, and the Muslims are quite proud of their language. The fact is, Sanskrit was the lingua franca of South Asia for intellectual purposes, much as Latin was in Europe. Buddhists used it, Jains used it, much as Spinoza, a Jew, wrote his philosophical treatises in Latin. The Tamil of Ramalinga Swamigal, a non-Brahmin, is highly Sanskritized.
6. Sanskrit and Tamil are part of the same intellectual and literary tradition. The fact is, Sanskrit literature owes an enormous amount to Dravidian -- much of its syntax, its literary conventions, vocabulary. When we come to the great kavya of Sanskrit (e.g. Kalidasa), it is definitely part of the same stream as Tamil literature, just as French, English and German belong to a Western European literary tradition. This is even true of Sangam literature -- it is clearly of the same cultural tradition as, say, the Sanskrit Mahabharata.
7. Tamil is richer because it has many styles. It is the only Indian language that has a pure, unsanskritized style (well, there is a pure Telugu, called accu telugu, which was cultivated mainly by Brahmins). This style is very rich, no doubt. But Tamil has innumerable other styles -- many dialects, a highly Sanskritized style, a style with many English words, etc. etc. All of these add to the richness and expressiveness of the language -- why impoverish the language by removing its resources?
8. ... a personal note from an outsider. Tamil culture has not suffered because of one group. It has suffered because of the caste system and because of its treatment of women... Let's promote inter caste marriage, let's get rid of dowry and give women independence and self-respect, and above all, let's avoid a victimization complex which only plays into the hands of those who have a vested interest in continuing the inequities that exist in Tamilnad. If every Brahmin were to disappear from Tamilnad, the Dalits and others who are exploited would benefited not one iota.
9. Please note that I am not pro- or anti-Brahmin. I am acutely aware of the negative role Sanskrit has played in the development of the Indian regional languages. Indeed, A. K. Ramanujan, a Brahmin, once told me that the worst things that ever happened to South India were Sanskrit and English. A slavish devotion to Sanskrit has had a negative effect on Tamil and, even more so, on other South Indian languages. But we cannot change the past. There is nothing inherently good or bad in a word, whatever its origin, so long as it has been adopted for general use in a language. What is bad -- and what I deplore -- is the mindless assumption that Sanskrit is somehow superior. It is not. Indeed, Sanskrit is a very limited language, because it has no spoken substratum. But where Sanskrit words have come into common usage in South India, they have acquired broad connotative powers that enhance the spoken languages that have borrowed them (much like Latin and French words in English). It is insulting to Tamil to claim that the language cannot borrow words without being corrupted. Tamil has a long, powerful tradition, and it is a very rich language. Judicious borrowing can only enhance, not spoil it..."
http://www.tamilnation.org/forum/aryan/
அன்புடன்,
டோண்டு ராகவன்
"Excellent,அப்ப அடுத்த சங்கராச்சாரி ஒரு தலித்துதான்னு சொல்லுங்க."
Why not? Even Adi Sankara learnt hightest spiritual truths from a mlecha (lowest to the lowest castes).
After a dalit becomes a Sankarachariyar, then the next and the most difficult to implement will be to bring a dalit as the head of any dravidian organization!!
wichita, you mentioned some nouns (such as vhp leader, kanchi mutt, cho, etc.)in your comment.
Who are they?
To my knowledge there is no Pope (or Islamic head) in Hinduism to issue a fatwa against women doing priesthood.
In North India, women do vedic rituals (I have seen it myself). In the Maruvathur temples, women perform pujas.
என் நலனுக்கு ஏற்ப செயல் படுவது என் உரிமை. மற்றவர்கள் இதில் கருத்து கூற ஒன்றுமில்லை. This is what the Hinduism preaches and does.
"After a dalit becomes a Sankarachariyar, then the next and the most difficult to implement will be to bring a dalit as the head of any dravidian organization!!"
பா.ம.கா-வை விட்டு விட்டீர்களே!
அன்புடன்,
டோண்டு ராகவன்
:-)!!
//பா.ம.கா-வை விட்டு விட்டீர்களே!
அன்புடன்,
டோண்டு ராகவன் //
I am unable to type in tamil, idhil pA.ma.ka kku enna pirachinai, oru dalit dhaan mudhalvar pA.mA.ka Atchikku vandhal endru kooRiyadhu maruthuvar, mudhanmudhalil pA.mA.ka madhiya mandhri sapaiyil itam kidaithapodhu oru dalit dhaan mudhan mudhalil pA.mA.ka sArpil amaicharaanadhu....
indrudhaan indha padhivai padithen
vanniyar katchi ena muthirai kuthappattalum indrum pA.mA.ka vila vanniyarukku aduthapadiyaaka adhika alavil irupadhu dalit kal dhaan enpadhu ungakalukku theriuma?? pA.mA.ka sArpil ethani dalit MLA kkaL uLLanar theriuma?
summa jalli adikaadhinga sir...
நீங்கள் எழுதியதை இங்கு தமிழில் எழுதி பதில் அளிக்கிறேன்.
"இதில் பா.ம.க வுக்கு என்ன பிரசினை, ஒரு தலித்தான் முதல்வர் பா.மா.க ஆட்சிக்கு வந்தால் என்று கூறியது மருத்துவர், முதன் முதலில் பா.மா.க மத்திய மந்திரி சபையில் இடம் கிடைத்தபோது ஒரு தலித்தான் முதன் முதலில் பா.மா.க சார்பில் அமைச்சரானது....
இன்றுதான் இந்தப் பதிவை படித்தேன்
வன்னியர் கட்சி என முத்திரை குத்தப்பட்டாலும் இன்றும் பா.மா.க வில வன்னியருக்கு அடுதபடியாக அதிக அளவில் இருப்பது தலித்கள்தான் என்பது உஙகளுக்கு தெரியுமா?? பா.மா.க சார்பில் எதனி டலிட் எம்.எல்.ஏ. க்கள் உள்ளனர் தெரியுமா?
சும்மா ஜல்லி அடிக்காதீங்க சார்..."
வாருங்கள் குழலி. தானோ தன் வாரிசுகளோ பதவிக்கு வரமாட்டோம் என்று உத்தமமாகக் குறிப்பிட்டது யார்? பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பலர் இருக்கையில் தேர்தலில் நிற்காதத் தன் மகனைப் பதவியேற்கச் செய்தது யார்? அதுவும் கட்சியின் "பொதுக்குழு" வற்புறுத்தியது என்ற ஜல்லியடிப்பு செய்தது யார் சார்?
ஆனால் ஒன்று கூற வேண்டும், நீங்கள் அந்தக் காரணத்தைக் கூறாது, கட்சித் தலைவரின் மகன் மட்டும்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்று கூறி கட்சியே மருத்துவரின் குடும்ப சொத்து என்பதை மறைமுகமாகக் கூறினீர்கள். அதுவும் 100 % ஒத்து வருமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இத்தருணத்தில் ஏனோ எனக்கு இன்பத் தமிழன் - தாமரைக்கனி மற்றும் சந்திரபாபு நாயுடு-என்.டி.ஆர். ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறார்கள்.
கட்சியை விட்டு வெளியில் வந்த தலித்கள் தங்களை மருத்துவர் நிற்க வைத்தே பேசியதாகவும், துச்சமாக நடத்தினார் என்பதாகவும் கூறினார்களே, அதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன? ஒரு தலித் தலைவர் ப.ம.க.வினர் தன் மீது கொலைப் பழி போட்டார் என்பதையும் கூறினாரே.
ஆனால் ஒன்று, தன் கட்சி தனிப்பெரும்பான்மை பெற முடியாது என்பதை அறிந்தே மருத்துவர் தலித்தை முதல்வராக ஏறுக் கொள்வதாகக் கூறினார். அப்படி ஒரு வேளை தனிப் பெரும்பான்மை கிட்டி விட்டால்? அன்பு மணியே முதல்வராக வேண்டும் என்று "பொதுக்குழு" கட்டளையிடும், அவரும் அதை ஏற்று கொள்வார். அடப் போங்க சார் நீங்கள்தான் ஜல்லியடிக்கிறீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
்
P.S. Thanks anyhow for commenting now in this post. At least in that way it has come to the notice of newcomers.
100க்கு 100 உன்மை. தான் செய்வது தனக்கு சரிஎன படும்போது. என் நண்பன் ஒருவன் நல்ல வேலையில்(Asst Manager) இருந்தபோது மிதி வண்டியில்தான் தினமும் அலுவலகதிற்கு வருவான். இத்தனைக்கும் அவன் வீட்டில் மொபட்,ஸ்கூட்ட்ர் எல்லாம் உண்டு.எல்லாரும் அவனை ஏளனம் செய்தனர். ஒரு வருடத்தில் 10 பேரருக்கு மேல் மிதி வண்டியில் வர ஆரம்பித்தனர்.
சுகுமாரன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்த பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://rajasugumaran.blogspot.com/2006/03/blog-post_17.html
உங்களுடைய இந்தப் பதிவு என்னுடைய பழைய பதிவு ஒன்றை மீள்பதிவு செய்யும் உடனடி தூண்டுகோலாக அமைந்தது. பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html
இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை உணர்த்தும் வண்ணம் அதன் நகலை நான் மேலே சுட்டிய பதிவிலேயே பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி சிவா அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
யார் என்ன சொன்னாலும் தைரியமா நிக்கறீங்க பாருங்க, அது எனக்குப் பிடிச்சிருக்கு. நாம் எல்லாம் கேட்டுக்கிட்டா
அந்தந்த ஜாதியில் பிறக்கறோம்? பிறந்துட்ட பிறகு எப்படி ஒளிச்சு வச்சுக்க முடியும்?
ஜாதி வேணாமுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாலும், இது என் தலைமுறையில் நடக்குமுன்னு தோணலை.
ஆனா கண்டிப்பா என் மகளோட தலைமுறையில் இங்கே ( நியூஸி) நடக்கும்.
நன்றி துளசி அவர்களே. அதுதான் கூறினேனே, தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்ளவேண்டும் என்று. என்ன தலையையா சீவிவிடுவார்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Tamilukkaga padupattathil U.VE.SA.matrum Madurai nagarai cherntha V.KO.Sooriya narayana Sasthri, than peyaraiye PARITHIMARKALAIGNAR enru matrikondar. Barathiyar oru brahmin than. Ivarkal ellam Tamilukku cheyaathatha inru ulla matravarkal seithu vittarkal?Tamill mozhiyai brahmins ellam valarathu vanthathal inru ellarum avarkalai athe tamil mozhiyil migavum sulabamaga thitta mudikirathu.Brahmins ellarum illai enral Nadu subikshamaga mari viduma?
மிக்க நன்றி கீதா அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
I dont know why eKalappai is not working after some. Every time, I need to reboot the PC, then, it works. Anybody who know the solution, please help me
No problem Siva. Open the screen at http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
and use the Puthuvai Tamil writer to write in Tamil. Then copy paste.
Instead of rebooting the computer, try uninstalling the ekalappai and then re-installing it. Before uninstalling make sure that the ekalappai folder is available in your hard disk.
Regards,
Dondu N.Raghavan
டோன்டு அவர்களே, மிக்க நன்றி. இப்போதைக்கு http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
உபயோகப்படுத்திக்கொள்ளுகிறேன்.
மிக்க மகிழ்ச்சி சிவா அவர்களே. நான் கொடுத்த இன்னொரு ஆலோசனையையும் செய்து பார்த்தீர்களா? இகலப்பை சௌகரியத்தை அனுபவித்தப் பிறகு மறுபடியும் சுரதா பெட்டிக்குப் போவது சள்ளை பிடித்தக் காரியம்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கீதா சாம்பசிவம் அவர்களே,
பிராமணர்கள் தமிழை வளர்க்கவில்லை என்று யார் சொன்னது?
அதற்க்குத்தன் தனியாக புததகமே("தமிழகத்தின் பிராமணர் அகராதி" - சரியாக பெயர் நினைவில் இல்லை) போட்டு இருக்கிறார்களே?
பிறகு ஏன் மற்றவர்கள் பிராமணர்களை திட்டுகிறர்கள்?
சிறிது(!) காலம் பொறுங்கள். 100/200 வருடங்கள்தான்.அதற்க்குள் தமிழகத்தில் எல்லோரும் நன்றகப் படித்து முன்னேறி விடுவாற்கள் என்று
நம்புவோம்.அப்புறம் பிரச்னை தீர்ந்துவிடும்.
இல்லாவிடில் மலேசிய,சிங்கப்பூர் என்று எங்கே தமிழை ஆதரிக்கிறார்களோ அஙுகு செல்லலாம். ஆனால், அங்குள்ள தமிழர்களும் இங்கிருந்து
சென்றவர்களே. அதனால் இதில் பெரிய வித்தியசாம் வந்து விடப் போவதில்லை.
இல்லாவிடில் டோண்டு அவர்களின் வழியில் பிரென்சு,ஜெர்மன் என்று கற்றுக்கொள்ள வேன்டியதுதான். அந்த மொழியை வளர்க்க வேன்டியதுதான்.
அப்புறம் பாருங்கள். பிராமணர்களை எந்த தமிழர்கள் திட்டுகிறார்கள் என்று பார்ப்போம்!.
டோண்டு அவர்கள் தன் BLOGல் "பிராமணர்களின் பிரச்னை" என்று ஒரு பதிவு திறக்கலாம்.
[டோண்டு அவர்களே, என்மீது தவறு இருந்தால் மன்னியுங்கள்]. இது ஒரு ஆரம்பந்தான்.பிறகு ஒட்டு மொத்த தமிழ் பிராமணர்களுக்கும் ஒரு BLOG.
பிராமணர்கள் எந்த பிரச்னை பற்றி பேச ஆரம்பித்தாலும் மற்றவர்கள் "பிராமணர்கள்,சங்கராச்சியார் .....": என்று பதிலுக்கு பேசுகிறார்கள்.பிராமணர்கள் பேச ஆரம்பித்தால் மற்றவர்கள் நிறுத்தி விடுவார்கள்.
என்ன சிவா அவர்களே, இத்தனையும் சுரதா பெட்டியில் அடித்து நகலெடுத்து ஒட்டினீர்களா? பொறுமை திலகம் என்ற பட்டம் உங்களுக்குத் தருகிறேன்.
ஆரம்பம்தானே, மேலே நடத்துங்கள். பார்க்க ஆவலாக உள்ளேன்.
மற்றப்படி பார்ப்பனர்கள் மேல் தேவையின்றி தாக்குதல் வந்தால் எதிர் தாக்குதல் நடத்த இருக்கவே இருக்கிறான் டோண்டு ராகவன் என்னும் அறுபது வயது இளைஞன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இப்போது இகலப்பை நன்றாக வேலை செய்கிறது.இனிமேல்தான் உங்களின் 2வது ஆலோசனையை செய்துபார்க்க வேண்டும்.நன்றாகச் சொன்னீர்கள். ஆஹா, ஆஹா, எவ்வளவு எளிமை. இகலப்பையில் வேலை செய்துவிட்டு சுரதா பெட்டிக்குப்போவது மிகச் சிரமமாகத்தான் இருக்கிறது.
உங்கள் பின்னூட்டத்தை இப்போதுதான் படித்தேன்.
\\\\\ என்ன சிவா அவர்களே, இத்தனையும் சுரதா பெட்டியில் அடித்து நகலெடுத்து ஒட்டினீர்களா? பொறுமை திலகம் என்ற பட்டம் உங்களுக்குத் தருகிறேன். ....\\\\
[பொறுமையே இல்லாத எனக்கு]தங்களின் "பொறுமை திலகம்" பட்டத்தை அப்போதே பெற்றுக்கொண்டேன், வேறு யாரும் வந்து வாங்குவதற்க்குள்!.
உங்கள் பதிவு அப்படி(நகலெடுத்து ஒட்ட) என்னைச் செய்து விட்டது.
ஒவ்வொரு முறையும் எந்தப் பதிவில் பின்னூட்டம் இட்டேன் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்வதர்க்கு சிரமமாக உள்ளது.இதற்க்கு ஏதாவது, எளிமையான வழி(என் பெயரை க்ளிக் செய்தால் என்னுடைய எல்லா பின்னூட்டமும் வருவது மாதிரி) இருந்தால் சொல்லுங்கள்.
ஒரு வேடிக்கை தெரியுமா. நான் தற்போது ஒரு அமெரிக்க வாடிக்கையாளருக்காக ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்து வருகிறேன். அந்த பிடிவாதம் பிடித்த வாடிக்கையாளர் என்னை பாமினி எழுத்துருவை உபயோகிக்க சொல்லி விட்டார். என்ன செய்வது அதே சுரதா பெட்டியைத்தான் பாமினி எழுத்துருவுக்காக தற்போது உபயோகிக்கிறேன். http://www.jaffnalibrary.com/tools/Bamini.htm
ரொம்ப கஷ்டம்தான். அவ்வப்போது தமிழ்மணத்துக்கு வந்து ஆசை திர இகலப்பை உபயோகித்து உங்கள் எல்லோருடையப் பின்னூட்டங்களுக்கும் பதிலளிக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
sivaacomments.blogspot.com என்ற மாதிரி ஒரு உரலில் புது வலைப்பூ ஆரம்பிக்கவும். எங்கெல்லாம் பின்னூட்டம் இடுகிறீர்களோ அதன் உரலுக்கு சுட்டி கொடுத்து அந்தப் பின்னூட்டத்தின் நகலை இந்தப் பதிவில் பின்னூட்டமாக இடவும். பிறகென்ன, உங்கள் ரிகார்ட் கிடைத்து விட்டது அவ்வளவுதான். எப்போதெல்லாம் தேவையொ சம்பந்தப்பட்ட பதிவில் போய் பார்த்துக் கொள்ளலாமே.
உதாரணத்துக்குப் பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
மிக்க நன்றி டோண்டு அவர்களே.ஆமாம். ஆமாம்.நான்கூட்
http://dondu.blogspot.com/2005_05_22_dondu_archive.html என்பதை IE browser-ல் புக்மார்க் செய்துள்ளேன்.
நன்றி சிவா அவர்களே. அது இருக்கட்டும், இவ்வளவு பின்னூட்டம் இடுகிறீர்களே, போலி டோண்டுவிடமிருந்து செந்தமிழில் மெயில்கள் வரவில்லையா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
வடகலை,தென்கலை ஐயங்கார்களுக்கு உள்ள வித்தியாசத்தை சொன்னால் நன்றாக இருக்கும்.
எனக்குத் தெரிந்த வித்தியாசம் 1.நெற்றி நாமம் 2. ஒருத்தர் சமஸ்க்ருதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார். இன்னொருத்தர் தமிழில் நாலாயரத்திவ்ய பிரபந்தம் படிப்பார்.
ஷட்டகர் என்ப்தை சட்டகர்(legal advisor) என்று இவ்வளவு நாட்களும் நினைத்திருந்தேன் -)
எனக்கும் அவ்வளவாகத் தெரியாது சிவா அவர்களே. ஏதோ ஆச்சார்யன் சம்பந்தமாக சில வேறுபாடுகள். என் நண்பர் (அவர் பெயரும் ராகவன்) சென்னைப் பல்கலை கழகத்தில் வைணவத்துறை தலைவர். நாளை அவரிடம் கேட்டு சொல்ல முயற்சிக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//////............
போலி டோண்டுவிடமிருந்து செந்தமிழில் மெயில்கள் வரவில்லையா?
...................../////
ஹி,ஹி, அந்த தகுதியை நான் இன்னும் அடைய்வில்லை )-)-)-)
ஹி,ஹி, அந்த தகுதியை நான் இன்னும் அடையவில்லை )-)-)-)
அப்படியே இருக்கக் கடவது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆசிப் மீரானின் 'சோ'த்தனமான 'பேத்தனம' -ன் பின்னூட்டம் படித்துக்கொண்டிருந்தேன்.சோவுக்கு ஆதரவாக ஒரு பின்னூட்டம். யாரென்று பார்த்தால் உங்கள் ப்ளாக் எண்தான் உடனே தெரிந்த்து. ஜமாயுங்கள்.
"சோவுக்கு ஆதரவாக ஒரு பின்னூட்டம்."
அது டோண்டு இல்லையென்றால்தான் ஆச்சரியம் அல்லவா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆண் பெண் என்பது இயற்கையாக வந்த ஜாதி. மீதி எல்லாம் மனிதனால் வந்த வீண் வேலி.இந்த ஜாதி எல்லாம் இயற்கை ஆனது அல்ல. நான் இந்த ஜாதி என்று கூறி பெருமை படுவது மிக பெரிய மடத்தனம். இது எல்லா ஜாதிக்களுக்கும் பொருந்தும். நான் அனைவரும் இனிமேலாவது இணையத்தில் ஜாதி பற்றி பேசாமல் இருப்போம்.
நன்றி அழகர் ராமானுஜம் சந்திரமோஹன் அவர்களே. நான் இந்தப் பதிவை என் சக பார்ப்பனர்களை மனதில் வைத்துதான் இட்டேன்.
தலித்துகள் மேல் வன்கொடுமை தற்சமயம் செய்வது பார்ப்பனரல்லாத பிற உயர் சாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களே. அதைக் கூறினால் 5000 வருடத்துக்கு முந்தையக் கதையைப் பற்றி பேசுகின்றனர். எல்லாவற்றையும் பார்ப்பனரே ஆரம்பித்தனராம். ஆகவே இப்போது வன்கொடுமை செய்பவர்களின் செயலுக்கும் பார்ப்பனரே பொறுப்பு ஏற்க வேண்டுமாம். என்ன போங்கு இது.
அதே நேரத்தில் பார்ப்பனருக்கு எதிராகப் பலரும் பேச ஆரம்பிக்க, பல பார்ப்பனர்கள் தங்கள் அடையாளங்களையே மறைத்து வாழ முயல்கின்றனர். அவர்களுக்காகத்தான் நான் இந்தப் பதிவையே போட்டேன். பயப்பட வேண்டாம். நீங்கள் உங்கள் கடமையைச் செய்து கொண்டு போங்கள். அதே நேரத்தில் யாருக்காகவும் பயந்து அடையாளங்களை மறைத்து வாழாதீர்கள்.
பதிவின் நோக்கம் அதுவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது பாலச்சந்தர் கணேசன் அவர்களே.
ஆனால் ஒன்று, பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும்போதே ஜாதி என்ன வென்று போட்டேயாக வேண்டும் என்று வற்புறுத்துகிறார்களே? அதற்கு என்ன கூறுகிறீர்கள்?
நீங்கள் கூறலாம், ஷெட்யூல்டு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்காகக் கேட்கப்படுகிறது என்று. அப்படியானால் இட ஒதுக்கீடு தேவைப்படாத மற்ற வகுப்பினரையும் அவர்கள் சாதியைக் கூறுமாறு ஏன் கேட்க வேண்டும்?
இவ்வளவு வாய்க்கிழியப் பேசும் அரசியல்வியாதிகள் தேர்தல் நேரத்தில் தங்கள் வேட்பாளர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதைப் பற்றி அறிவீர்கள்தானே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
A really awesome effort.as you quote everytime,sri makara nedunkuzhai kaadhar ungalukku thunai iruppaar. thank you dondu sir.
நன்றி மனு அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
This comment was placed by me in Santhippu's blog post vide http://santhipu.blogspot.com/2006/04/5.html
"வெளிப்படையாக தங்களது சாதிய அடையாளத்தின் அடிப்படையிலேயே எல்லாவற்றையும் விவாதிக்கும் டோண்டு போன்றவர்களையும்,..."
Not so fast my dear sir. Where have I said that Brahmins are superior to others? My reference was to the unfair attack on Brahmins by others. As a result, many Brahmins are hiding their identity. This was touched upon by Asokamithhtiran, the author.
It was against this background that I came on the scene. I am dead against Brahmins, who try to keep a low profile. They seem to have been brainwashed by others into taking this stance. My call was addressed to them. I told them and I tell them again and again that there is no need to worry about the bigotted people accusing the Brahmins. We Brahmins need be apolegetic about the past. Do not worry about any riffraff (ஜாட்டான்).
The discrimination against Dalits is presently only at the hands of other castes such as Thevars, Vanniyars, Mudaliyars, Kaunders and so on. And they have the gall to demand reservation for themselves under BC and other quotas. They hide their ongoing persecution of the Dalits behind talks about events 5000 years back, when Brahmins were supposed to have conspired to bring about the caste divisions.
Is it anybody's case that the high percentage of Brahmin students in the IIT is due to any preference given to them? They have come through JEEE and similar exams, where the caste of the candidates is not asked for. So much so that any demand for open competition is anathema to many persons and they coin this call as being favorable to Brahmins. It can mean only one thing. They themselves acknowledge the superiority of the Brahmins, that is the only construct possible.
Let me hasten to add that I do not consider that intelligence is limited to only one caste. All castes have their own share of all shades of people.
To show that only the genuine Dondu posted this comment, I will post a copy thereof in my blog "வெளிப்படையான எண்ணங்கள்".
See: http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html
Regards,
Dondu Raghavan
சந்திப்பு அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://santhipu.blogspot.com/2006/04/blog-post_13.html
"இது நிச்சயமாக பயனளிக்கும். இன்னும் தங்கள் பெயரில் 'ஐயர்', 'ஐயங்கார்' என ஜாதி ஆதிக்க பெயர்களை சேர்த்துக்கொண்டு, மற்ற மனிதர்களிடமிருந்து தங்களை பிரித்து காண்பிக்கும் அடையாளங்களான பூணூல், நெற்றிகுறிகள் அணிந்துகொண்டு, இந்த நவீன யுகத்தில் உலவும் இவர்கள் அழிக்கப்படவேண்டியவர்களே.
அதாவது, மனிதர்களை கூறுபோடும் கொள்கைகொண்ட பார்பான பிராமண வர்க்கத்தை மொத்தமாக கூறுபோட்டு அழித்துவிடுவோம்."
ஆகா! படிக்கவே புல்லரிக்கிறது. ஒரு ஜாதியையே ஒழித்துவிட வேண்டும் என்ற ஒரு பின்னூட்டம், அதை அனுமதிக்கும் வக்கிர எண்ணம் கொண்ட சந்திப்பு என்னும் வலைப்பதிவாளர்.
இப்போது நான், டோண்டு ராகவையங்கார், கூறுவதைக் கேளுங்கள். என்னதான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் பார்ப்பனர்கள் முன்னேறுவதை, "கற்கல் நன்றே, கற்கல் நன்றே, பிச்சைப் புகினும் கற்கல் நன்றே" என்றக் கோட்பாட்டில் அவர்கள் நிற்கும்வரை, எந்த ஒரு ஜாட்டானாலும் தடுக்க முடியாது. அவர்கள் பாட்டுக்கு படித்து விட்டுப் போய் கொண்டே இருப்பார்கள்.
ஐ.ஐ.டி.யில் படிக்கும் பார்ப்பனர்கள் அதற்கானத் தேர்வில் முதன்மை நிலையில் தேறிவிட்டு வந்தார்கள். அவர்களுக்கென்று சுதந்திர இந்தியாவில் யாரும் கோட்டா ஒன்றும் ஒதுக்கவில்லை என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் தேர்வும் வெளிப்படையாக நடப்பதே.
தமிழக அரசு வேலைகள் இல்லையா, போடா ஜாட்டான் என்று எங்கு வேலை கிடைக்கிறதோ அங்கு போய்க்கொள்வார்கள். இட ஒதுக்கீடு வேண்டுமென்று மரமெல்லாம் வெட்ட மாட்டார்கள், அதுவும் தலித்துகள் மேல் வன்கொடுமை செய்து கொண்டே.
கேட்டால் கூறுகிறார்கள், ஜாதியை நிறுவியது பார்ப்பனர்களாம், அவர்கள் முன்னோர்கள் ஏமாந்து விட்டார்களாம். கேழ்வரகில் நெய் வடிகிறதென்பானாம் ஒருவன், அதை கேட்பவர்களெல்லாம் புத்தியில்லாதவர்களா?
சகபார்ப்பனர்களுக்கு ஒன்று கூறிக் கொள்கிறேன். இம்மாதிரி ஓரினத்தையே அழிக்க வேண்டும் பின்னூட்டமிடுவர்களையும், அத்தகையப் பின்னூட்டங்களை அனுமதிக்கும் பதிவாளர்களையும் கண்டு பயப்படாதீர்கள். தைரியமாக எதிர்த்து நில்லுங்கள். நாம் பூணூல் போடக்கூடாது, திருநீறு/நாமம் இடக்கூடாது என்று கூற இவர்களுக்கு யார் அதிகாரம் தந்தது. உங்களை உத்தேசித்தே நான் இட்ட "சில வெளிப்படையான எண்ணங்கள்" என்னும் பதிவிலும் இப்பின்னூட்டத்தின் நகலைப் பின்னூட்டமாக இடுகிறேன். இவ்வாறு செய்வது இப்பின்னூட்டத்தை இட்டது உண்மையான டோண்டுவே என்று கூறுவதற்கே. பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html
அன்புடன்,
டோண்டு ராகவையங்கார்
ஆதரவானப் பின்னூட்டத்திற்கு நன்றி நாட்டாமை அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
குழலி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://kuzhali.blogspot.com/2006/04/blog-post_16.html
"மேல்சாதியினர் புத்திசாலித்தனத்தினால் பெறுகிறார்கள் என்றால் மற்றையவர்கள் அவர்களின் அரசியல் பலத்தினால் பெறுகின்றனர், மேல் சாதியினருக்கு புத்திசாலி தனம் பலமென்றால் மற்றவர்களுக்கு அரசியல் பலம், இட ஒதுக்கீட்டு சட்டத்தை அரசியல் ரீதியாக ஒழிக்க முடிந்தால் ஒழித்து கொள்ளுங்கள்.."
அதற்கெல்லாம் என்ன அவசியம் குழலி அவர்களே. திறமைக்கு எங்குமே மதிப்பு உண்டு. இப்பவேத்தான் பார்க்கிறோமே. ஐ.ஏ.ஸ். தேர்வுக்கு போவதை விட எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படித்து தனியார் துறையிலோ அல்லது அல்லது வெளிநாட்டிலோ வேலைக்குப் போவதுதானே அதிகமாகியுள்ளது.
திறமை என்பது மேல் சாதியினருக்கு மட்டும் உரித்தானது அல்ல என்பதில் நான் தெளிவாகவே உள்ளேன். ஆனால் ரிசர்வேஷன் வேண்டும் என்பவர்கள் அவ்வாறுதான் சிந்திக்கிறார்கள் என்பதையும் பார்க்கிறேன். இல்லாவிட்டால் ஓப்பன் காம்படிஷன் என்ற உடனேயே இது மேல்சாதியினருக்கு (அதிலும் குறிப்பாக பார்ப்பனர்களுக்கு) மட்டுமே சாதகமான விஷயம் என்று ஏன் பதறுகிறார்கள்?
இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுவே இட்டான் என்பதைக் காண்பிக்க அதன் நகலை நான் என்னுடைய "வெளிப்படையான எண்ணங்கள்" பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன்.
நீங்கள் இப்பதிவில் நக்கல் செய்பவர்களுக்கு மட்டுமே என்று மேலே நான் சுட்டிய உங்கள் பதிலை போன்றே நான் கூறும் என்னுடையப் பதிவும் பார்ப்பனன் என்று நக்கல் செய்பவனுக்காகவே இடப்பட்டது என்பதையும் இப்போதாவது பலர் காண்டக்ஸுடன் உணர்ந்து கொள்ள முடியும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
மா. சிவகுமார் அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://masivakumar.blogspot.com/2006/04/blog-post_114540809678610653.html#comments
என் சாதியை நான் ஏன் கூற நேர்ந்தது என்பதை நான் பல முறை பல இடங்களில் கூறியாகி விட்டது. அதற்காக "சில வெளிப்படையான எண்ணங்கள்" என்ற ஒரு பதிவும் போட்டு அதை மீள் பதிவு கூட செய்தாகி விட்டது. இன்னும் புரியவில்லை என்றால் எப்படி?
அன்புடன் டோண்டு ராகவன் என்றே வழக்கமாகக் கையொப்பமிடும் நான் டோண்டு ராகவையங்கார் என்று விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே இட்டுள்ளேன். அவற்றையெல்லாம் பார்த்தால் பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும், கொல்ல வேண்டும், எல்லா கொடுமைகளுக்கும் பார்ப்பனரே பொறுப்பு என்றப் பொறுப்பில்லாப் பின்னூட்டங்களின் எதிர்வினையாகத்தான் இருக்கும்.
தமிழ் இணைய உலகில் பார்ப்பன எதிர்ப்பு என்பதைத் தன் பிறப்புரிமையாகக் கொண்டு உளறுபவர்களுக்கு என்னுடைய பதில் இதுவே. மற்றப்படி பார்ப்பனர்கள் மற்ற எல்லோரையும் விட உயர்ந்தவர்கள் என்பதை எங்காவது நான் கூறியிருக்கிறேனா என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
என்னதான் நின்று தலைகீழாக நின்றாலும் பார்ப்பனர்கள் முன்னேறுவதைத் தடுக்க முடியாது, போடா ஜாட்டான் என்று அவர்கள் போய்க் கொண்டே இருப்பார்கள் என்று நான் கூறியது உண்மையாகவே நடப்பதை வைத்துத்தான்.
"இந்து நாளிதழில் வெளியாகும் திருமண விளம்பரங்களில் சாதி என்று குறிப்பிட்டு அழைப்பு விடுவது நிற்கும்போதுதான் சாதி ஒழிந்து விட்டது என்று ஒப்புக் கொள்ளலாம்."
ஒன்று செய்யுங்கள். உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையென்றால், இம்மாதிரியெல்லாம் விளம்பரம் கொடுக்க வேண்டாம் என்று உங்கள் பெற்றோரிடம் கூறி விடுங்கள். உங்கள் திருமணம் பெற்றோர்களால் பார்த்து ஏற்பாடு செய்யப்பட்டதுதான் என்றால், அவர்கள் எந்த ஜாதியிலிருந்து பெண்ணைத் தேடியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?
அதர் ஆப்ஷனையும் அனானி ஆப்ஷனையும் வைத்திருக்கும் உங்கள் பதிவில் உண்மையா டோண்டுதான் இப்பின்னூட்டத்தை இட்டான் என்பதைக் காட்டும் வகையில் அதன் நகலை என்னுடைய "சில வெளிப்படையான எண்ணங்கள்" என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டுவிற்கு ஒரு வேண்டுகோள்
"ஜாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்"
வலைப் பதிவாளர் சிவக்குமாருக்கு இந்த கருத்தை வழியுறுத்த முயன்றதற்காக என்னுடய வாழ்த்துக்கள்.
டோண்டு அவர்களின் அறுபதாம் ஆண்டு பதிவில் வாழ்த்து தெரிவதற்காக என்னுடய பதிவில் போலி டோண்டு ஆபாசமான வார்தைகளை பயன்படுத்தி பின்னூட்டம் இட்டு இருந்தார். அவ்வாறு ஆபாசமான வார்த்தைகளை பயன் படுத்தாமல் ஆரோக்கியமான பதிவாக வெளியிட்டுள்ளதர்காகவும் என்னுடய வாழ்த்துக்கள்.
என்னை இதை எழுத தூண்டியது டோண்டு அவர்கள் தங்களுக்கு அளித்த பின்னூட்டம்தான்.
"என்னதான் தலை கீழாக நின்றாலும் பார்பான்கள் முன்னேறுவதை தடுக்க முடியாது, போடா ஜாட்டான் என்று அவர்கள் போய் கொண்டே இருப்பார்கள்"
இதோடு நிறுத்தி இருந்தாலும் பரவாயில்லை மேலும்
"இவ்வாறு கூறியது நடப்பதை வைத்துத்தான்"
என்று கூறி இருப்பது
திரு டோண்டு அவர்களின் நான் தான் உயர்ந்தவன் என் ஜாதிதான் உயர்ந்தது என்ற மனோபாவத்தைதான் காட்டுகிறது.
என்னை உண்மையாக புண் படுத்தியது என்னவெனில் இது போன்ற கருத்துக்கள் தமிழ்மணம் போன்ற ஒரு நல்ல முயற்சி நடந்து கொண்டிருக்கும் இடத்தில் கூறப் பட்டு இருப்பதுதான்.
இது போன்ற கருத்துக்கள் இந்த நல்ல முயற்சியை தவறான விசயங்களில் திசை திருப்பி விட்டு விடுகிறது.
பாருங்களேன் விவாதிக்க எவ்வளவோ தலைப்புகள் உள்ள நிலையில் நாம் இன்னும் ஜாதியைப் பற்றி விவாதித்து வருகிறோம்.
டோண்டு அவர்களே "பார்பன எதிர்ப்பு" என்று சொல்கிறீர்களே ஏன் பல ஜாதிகள் உள்ள நிலையிலும் "பார்பன எதிர்ப்பு" மட்டும் தோன்றியது என்று எண்ணுகிறீர்கள் உங்கள் வார்த்தைகளை படியுங்கள் உங்களுக்கே புரியும்.
"என்னதான் தலை கீழாக நின்றாலும் பார்பான்கள் முன்னேறுவதை தடுக்க முடியாது, போடா ஜாட்டான் என்று அவர்கள் போய் கொண்டே இருப்பார்கள்"
இது போன்ற ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்களின் ஆணவம்தான் தீண்டாமை, கோயிலுக்குள் அனுமதி மறுத்தல் போன்ற பல கொடுமையான விசயங்களுக்கு மூல காரணம் .
"பார்ப்பன எதிர்ப்பு" ஏனெனில் இது போன்ற கொடுமைகளுக்கு 90 சதவீதம் அவர்களே காரணமாக இருந்துதான்.
மேலும் அடக்கி ஒடுக்க பட்ட காரணங்களினால் மட்டுமேதான் சில காலம் முன் வரை சில கூறிப்பட்ட பிரிவினரே எல்லா இடங்களிலும் மேலே வர காரணமாக இருந்ததே ஒழிய வேறு காரணங்கள் இல்லை.
உதாரணமாக ஈஈT எடுத்துக் கொள்ளுங்கள் நான் படிக்கும் காலங்களில் ஈஈTயில் சேர்வது எப்படி என்பது என்பது எனக்கு தெரியாது ஆனால் சில பிரிவை சேர்ந்தவர்களுக்கு இது போன்ற விசயங்கள் தெளிவாக தெரிந்து இருந்ததால் அவர்களால் அதில் சுலபமாக நுழைய முடிந்தது.
ஆனால் இன்று மாறி வரும் காலம் விழிப்புணர்வு முன்பு இருந்ததை விட பல மடங்கு உள்ளது, இன்றைய நிலையில்
"என்னதான் தலை கீழாக நின்றாலும் பார்பான்கள் முன்னேறுவதை தடுக்க முடியாது, போடா ஜாட்டான் என்று அவர்கள் போய் கொண்டே இருப்பார்கள்"
பார்பான்களாய் பிறந்தாலேயே அவர்கள் முன்னேறி விடுவார்கள் போன்ற ஆணவமான கருத்துக்கள் ஜாதி மதம் இல்லை என்று எண்ணும் என்னைப் போன்ற பலருடைய மனதை புண்படுத்துவதோடு மட்டும் அல்லாமல் ஒரு அருமையான முயற்சியான தமிழ்மணம் போன்றதை ஆரோக்கியமான விசயங்களில் இருந்து திசை திருப்பி விடுகிறது.
ஆகையால் தயை கூர்ந்து இது போன்ற கருத்துக்களை கூற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
"பார்பான்களாய் பிறந்தாலேயே அவர்கள் முன்னேறி விடுவார்கள் போன்ற ஆணவமான கருத்துக்கள் ..."
கண்டிப்பாக இதில் ஏதும் ஆணவம் இல்லை.
"பார்பான்களாய் பிறந்தாலேயே அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது போன்ற துவேஷம் நிறைந்த கருத்துக்களுக்கு எதிர்வினைதான் நான் கூறியது. இம்மாதிரி கருத்துக்களுக்கு பயந்து தங்கள் அடையாளங்களை மறைத்துக் கொண்ட பல சக பார்ப்பனர்களை எதிர்த்துத்தான் நான் மேலே கூறியது என்பதையும், இச்செய்தி அம்மாதிரி பார்ப்பனருக்கே, மற்றவருக்கில்லை என்பதையும் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
எதிராளி சீண்டினால் சீற வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்.
நான் கூறியது மேக்ரோ லெவலுக்காக, முக்கியமாக நான் குறிவைப்பவர்களுக்கு அது புரியும்.
நீங்கள் தயவு செய்து இதனால் பாதிக்கப்படாமல் இருக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு அவர்களே நீங்கள் அவ்வாறு குறிப்பிட்ட சிலருக்கு கூற எண்ணியதை தமிழ்மணத்தில் ஏன் வெளியிட வேண்டும்?
அதோடு உங்களுடய நோக்கம் மிதவாத பிராமிணர்கள் அதை மிதவாததை கைவிட வேண்டும் என்பதா?
உங்களுடய கருத்துக்கள் ஜாதி மத பேதங்களை தூண்டுவதுதோடு மட்டும் அல்லாமல் பலருடய மனதை புண் படுத்துகிறது என்பதை உணருங்கள்.
என்னுடய ஆன்மீக குரு வேதாத்திரி மகரிஷி "பிறர் மனம் புண்படும் விதம் எண்ணம் கூட கொள்ள கூடாது என்று கூறியுள்ளார்" அவ்வாறு நடக்க இயலாவிடிலும் தமிழ்மணம் போன்ற ஒரு நல்ல முயற்சி நடக்கும் இடங்களில் பிறர் மணம் புண் படும் விதமாக வெளியிட வேண்டாம் என்று தயை கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்.
குமரன் அவர்களே, நான் குறி வைக்கும் பார்ப்பனகள் தமிழ்மணத்தில்தான் இருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு எழுதுவது அதில் வந்துள்ளது.
நான் ஏதோ எங்கள் தற்காப்புக்காகக் கூறியதற்கெல்லாம் சிலிர்த்துக் கொண்டு வருகிறீர்களே, சந்திப்பு அவர்களின் பதிவில் http://santhipu.blogspot.com/2006/04/blog-post_13.html குமார் என்ற ஒருவர் பார்ப்பனர்களையெல்லாம் கொல்ல வேண்டும் என்று கூறிய போதோ, மற்ற இடங்களிலெல்லாம் அம்மாதிரி கருத்துக்கள் வந்தபோதோ நீங்கள் அதையெல்லாம் கண்டித்தது போலத் தெரியவில்லையே? ஏன் இந்த ஓரவஞ்சனை?
மற்றப்படி நான் கூறியத்கு கூறியதுதான். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைத் திரும்பப் பெறுவதற்கு நான் அர்ஜுனனோ ராமனோ அல்ல.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எனக்கு ஓர வஞ்சனை எல்லாம் கிடையாது
நான் அந்த பதிவை கண்டிருந்தால் கண்டிப்பாக கண்டித்திருப்பேன்.
இப்பொழுது கூட என் பதிவின் பின்னூட்டத்தில் போலி டோண்டுவை கண்டித்திருக்கிறேன்
உலகை திருத்துவது என்னுடய எண்ணம் அல்ல
பிறருக்கு தீமை எண்ணுவது கூட பாவம் என்று கூறியுள்ளார் என் குரு.
நீங்கள் ஜாதி மத பேதத்தை ஒரு சீரிய முயற்சியான தமிழ் மணத்தில் கூட விட்டு வைக்காமல் பரப்பிக் கொண்டுள்ளீர்கள்.
நீங்கள் வயதில் பெரியவராக இருந்தாலும் எண்ணங்களில் சிறுமை கொண்டுள்ளீர்கள்
இதை உங்கள் மணம் புண்படுத்த சொல்ல கூறவில்லை.
உலகம் முன்னேறி விட்டது நீங்கள் நினைத்தாலும் ஜாதி வெறியை தூண்டிவிட இயலாது.
என்றாவது ஒரு நாள் நீங்கள் இங்கு செய்யும் தவறுகளை உணருவீர்கள்.
"நீங்கள் ஜாதி மத பேதத்தை ஒரு சீரிய முயற்சியான தமிழ் மணத்தில் கூட விட்டு வைக்காமல் பரப்பிக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் வயதில் பெரியவராக இருந்தாலும் எண்ணங்களில் சிறுமை கொண்டுள்ளீர்கள். இதை உங்கள் மணம் புண்படுத்த சொல்ல கூறவில்லை."
இதிலெல்லாம் நான் மனம் புண்பட்டு விட மாட்டேன். உங்கள் கருத்து உங்களுக்கு, என் கருத்து எனக்கு. அவ்வளவுதான் விஷயம். நான் வெளிப்படையான எண்ணங்கள் பதிவு போட்டதற்கானக் காரணத்தை பல முறை வெளிப்படையாகவே கூறி விட்டேன். நீங்கள் ஒரு நாள் நான் சொல்ல வருவதை சரியான முறையில் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் let us agree to disagree என்ற முத்தாய்ப்புடன் இது பற்றி மேலும் பேசுவதை நிறுத்திக் கொள்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மா. சிவகுமார் அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://masivakumar.blogspot.com/2006/04/blog-post_114540809678610653.html#comments
மா. சிவகுமார் அவர்களே,
போலி டோண்டு அனானியாகவும் doondu வாகவும் பலமுறை பின்னூட்டமிட்டுச் சென்றுள்ளான்.
முதலில் உங்கள் பாதுகாப்பைப் பார்த்துக் கொள்ளவும். பிறகு மற்றவர்களின் சாதி சார்பைப் பற்றிக் கவலைப்படலாம். மட்டுறுத்தலைச் செயலாற்றவும் மேலும் அனானி மற்றும் அதர் ஆப்ஷனைத் தூக்கினாலே பதிப் பிரச்சினை ஒழியும்.
ஏதோ எனக்குத் தோன்றியதைக் கூறினேன். மீதி உங்கள் விருப்பம்.
அதர் ஆப்ஷனையும் அனானி ஆப்ஷனையும் வைத்திருக்கும் உங்கள் பதிவில் உண்மையா டோண்டுதான் இப்பின்னூட்டத்தை இட்டான் என்பதைக் காட்டும் வகையில் அதன் நகலை என்னுடைய "சில வெளிப்படையான எண்ணங்கள்" என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்த சிறுவிஷயம் பலருக்கு புரியவில்லையே, politically_incorrect_guy அவர்களே.
ஆனால் உங்களுக்கு ஒருவிஷயம் கூற வேண்டியது என் கடமை. தமிழ் இணையத்தில் போலி டோண்டு என்ற ஓர் இழிபிறவி சுற்றிக் கொண்டிருக்கிறது. என்னுடைய வலைப்பதிவுகளில்யார் பின்னூட்டமிட்டாலும், அவர்களது வலைப்பூவுக்கு சென்று நாக்கூசும் வார்த்தைகளில் உங்களைத் திட்டக் கூடும். So, enable comment moderation for your own good.
I will repeat this comment in your latest blog post, just in case.
Regards,
Dondu N.Raghavan
ராஜாவனஜ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://vanajaraj.blogspot.com/2006/09/blog-post_22.html
"//ஏழையை பீயள்ள வைக்கிறான் என்கிறீர்களே எத்தனை ஏழை பார்ப்பனர்கள் பீயள்ளுகிறார்கள் என்று சொல்லுங்களேன்.//"
சுலப் சவுச்சாலையை ஆரம்பித்ததே ஒரு பார்ப்பனர் என்பதை அறிவீர்களா? அவற்றை நடத்துவதும் பார்ப்பனரே என்பதை அறிவீர்களா? பார்க்க: http://in.rediff.com/news/2006/may/23franc.htm
அது சரி எத்தனை கவுண்டர்கள், முதலியார்கள், வன்னியர்கள் பீயள்ளுகிறார்களாம்? ஏனெனில் தலித்துகள் பீயள்ளியதைக் கூறி சந்தடிச் சாக்கில் இவர்கள் இட ஒதுக்கீடு எல்லாம் வாங்கிக் கொண்டதுதான் பெரிய தமாஷ். அதுவும் தலித்துகளுக்கு வன்கொடுமை செய்வது இவர்கள் மற்றும் பார்ப்பனரல்லாத மற்ற உயர் சாதியினரே. பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, இப்போது பசும்பொன் எல்லாம் போய்ப் பார்த்து விட்டுப் பேசவும்.
அபாயகரமான அதர் ஆப்ஷனை நீங்கள் வைத்திருப்பதால் இப்பின்னூட்டத்தின் நகல் எனது "வெளிப்படையான எண்ணங்கள்" பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
தருமி அவர்களது இப்பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது.
"போடா ஜாட்டான்னு முன்னேறிக் கொண்டே இருப்பான் என்று ஒரு பதிவர் எழுதிய வரைக்கும் எனக்கும் குறிப்பிட்ட சிலரைக்(குறிப்பிட்ட பிரிவினர் அல்ல குறிப்பிட்ட சிலர்) கண்டு அலர்ஜி ஏற்படவில்லை."
The allergy is mutual.
என்ன செய்வது ஆ ஊ என்றால் ஒரு குறிப்பிட்ட சாதியினரை திட்டுவது, என்னவோ அவர்கள் சாதிப் பிரிவினையை அமைத்து கொடுத்தார்களாம், மற்ற சாதியினர் சின்ன பாப்பாக்களாம், ஒன்றுமே தெரியாது அப்படியே பின்பற்றி விட்டார்களாம், இதையெல்லாம் என்னவோ நேரிலேயே கண்டது போல பேச்சு வேறு.
இதையெல்லாம் கண்டு எதற்கு வம்பு என்று அந்த சாதியைச் சேர்ந்த பல பதிவர்கள் தத்தம் சாதியையே மறைத்து, அது மட்டுமின்றி தம் சாதியையே இகழ்ந்து பேசி என்றேல்லாம் செயல்பட்டிருக்கின்றனர். அதே பதிவர்களின் சாதி தெரிந்ததும் அவர்களும் தாக்குதலுக்கு உள்ளானதுதான் நடந்தது.
இந்த சூழ்நிலையில் தன்மானம் உள்ள எவனும் செய்வதையே நான் செய்தேன். நான் போட்ட அந்தப் பதிவில் இதற்கான பின்புலனையும் கூறியுள்ளேன். அதை எத்தனை முறை கூறினாலும் புரிந்து கொள்ளாதது போல நடிப்பவருக்கு வேறு எப்படி புரிய வைப்பது எனத் தெரியவில்லை.
'போடா ஜாட்டான்னு முன்னேறிப் போய்கொண்டே இருப்பான்' என்பது நிஜமாகவே பலமுறை நடந்து விட்டது. பூனை கண்ணை மூடிக் கொண்டு பேசினால் உண்மை மாறிவிடுமா என்ன? இதை மேலே பின்னூட்டமிட்ட நபருக்கே அடிக்கடி கூறியாகிவிட்டது. இங்கு வந்து நீட்டிமுழக்கி பேசும் அவர் மற்ற பதிவுகளில் ஒரு சாதியை குறிவைத்து முழு திட்டல் பதிவுகளில் போய் எதிர்ப்பு தெரிவித்து பின்னூட்டங்கள் எல்லாம் போட்டதாகவெல்லாம் தெரியவில்லை. அப்படியே போட்டிருந்தால் சந்தோஷம்.
மறுபடியும் அவருக்கும் மற்ற சிலருக்கும் இன்னொரு முறை வேண்டுமானால் கூறிக் கொள்கிறேன். அவ்வாறு கூறியதற்கு காரணம் தமிழ்பதிவுலகில் ஒரு குறிப்பிட்ட சாதிமீது தேவையின்றி தொடுக்கப்பட்ட தாக்குதல்களே. அவ்வாறு கூறியது கூட அதனால் எல்லாம் பாதிக்கப்பட்டு தம் சாதியினரை மறைத்துக் கொண்ட என் சாதியினரை குறிவைத்துத்தான். புரிந்து கொள்ள வேண்டியவர்கள் பலர் புரிந்து கொண்டனர். அப்பதிவின் நோக்கம் நிறைவேறி விட்டது.
மற்றப்படி மேலே பேச இப்போதைக்கு ஒன்றும் இல்லை. இந்தப் பின்னூட்டத்தின் நகலை எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன், ஏனெனில் அதர் ஆப்ஷன் உள்ளது இப்பதிவில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார் அந்தப் பின்னூட்டம் உங்களைக் குறிப்பிட்டு சொல்ல எழுதப்பட்டதில்லை. ஆனால் நான் எழுதிய விதம் அவ்வாறு அமைந்து விட்டதற்காக வருந்துகிறேன். அது உங்களை வருத்தமுறச் செய்திருந்தால் மன்னியுங்கள். பொதுவாக கருத்து சொல்லப் போய் உங்களைக் குறிப்பிட்டு சொல்லமாறு அமைந்து விட்டது.
இரயாகரன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது.
நீங்கள் என்னதான் கரடியாகக் கத்தி, டிஸ்கிகள் விட்டாலும் பார்ப்பனியம் என்னும் வார்த்தையை வைத்துக் கொண்டிருக்கும் வரை உங்கள் வாதங்கள் எல்லாமே பார்ப்பனராலும் மற்றவராலும் பார்ப்பனர்களுக்கு எதிராக இருப்பதாகத்தான் பார்க்கப்படும். கூறப்போனால், ஸ்ரீலங்காவில் வெள்ளாளீயம்தான் உள்ளது.
ஆகவே உயர்சாதீயம் என்று எழுதினால்தான் விவாதம் திசைதிரும்பாது போகும். இல்லையென்றால் இப்போதைய சூழ்நிலையில் வெளிப்படையாக சாதி வெறியைக் காட்டும் முதலியார், கவுண்டர், தேவர், வெள்ளாளர், நாயக்கர், வன்னியர் ஆகிய எல்லோரும் பார்ப்பனனை நோக்கி கைகாட்டி விட்டு ஒளிந்து கொள்கின்றனர்.
இவ்வாறு நடப்பதால் உங்கள் நோக்கம் அடிப்பட்டு போகிறது. பார்ப்பனர்கள் விவாதத்துக்கு வரமாட்டார்கள். மற்றவர்கள் பார்ப்பனர்களை திட்டுவார்கள்.
இதை முதலில் சரி செய்து கொள்வதே மேலே விவாதம் உருப்படியாக நடப்பதற்கான சூழ்நிலையைத் தரும்.
மற்றப்படி மேலே பேச இப்போதைக்கு ஒன்றும் இல்லை. இந்தப் பின்னூட்டத்தின் நகலை எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இரயாகரன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது.
"இவ்வாறு நடப்பதால் உங்கள் நோக்கம் அடிப்பட்டு போகிறது. பார்ப்பனர்கள் விவாதத்துக்கு வரமாட்டார்கள். மற்றவர்கள் பார்ப்பனர்களை திட்டுவார்கள்."
ரிபீட்டு.
அதுதான் உங்கள் விருப்பம் என்றால், அப்படித்தான் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவேன் என்றால் அது உங்கள் விருப்பம். எனக்கென்னவோ நீங்கள் சந்தடி சாக்கில் உங்கள் சொந்த ஜாதியையும் - அது எதுவாக இருந்தாலும் - காபந்து செய்து கொள்கிறீர்கள் என்றுதான் தோன்றுகிறது.
இந்தப் பின்னூட்டத்தின் நகலை எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நியோ என்னும் பார்ப்பன எதிர்ப்பாளரின் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்த பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது.
"இப்போது ஹரிஹரன் என்றொரு பாப்பாரக்குஞ்சு திருவாய் மலர்ந்திருக்கும் "பொம்பள தீட்டோட பூச செய்யப்படாது" என்கிற எச்சிக்கலைத்தனமான 'அருளுரை'யைக் கண்டித்திருக்கிறார்களா? என்று தேடிக் கொண்டிருக்கிறேன்!"
தேடுவதுதான் தேடுகிறீர்கள், அப்படியே எத்த்னை பெண் பிஷப்புகள், பெண் முல்லாக்கள் உலகத்தில் உள்ளனர் என்பதையும் பாருங்களேன்.
நான் கூற வருவது ரொம்ப எளிமையானது. பெண்களின் மாதவிடாய் தொந்திரவுதான் அவர்கள் மத சடங்கு நடாத்துவதில் ஏற்பட்ட தடைகளுக்கு முக்கியக் காரணம். இது உலகில் உள்ள எல்லா மதங்களுக்கும் பொருந்தும் என்பதை அறிவீர்களா? அல்லது எல்லா மதங்களிலும் இந்த பார்ப்பனர்கள்தான் அதற்கு காரணமா? சற்றே பகுத்தறிவு இருந்தால் அதை உபயோகியுங்கள் ஐயா.
இன்னொன்று கவனித்தீர்களா? உங்கள் கருத்துக்கு ஆதரவாக எனக்குத் தெரிந்து ஒரு இசுலாமியரோ அல்லது ஒரு கிறித்துவரோ கூட இங்கு வரவில்லை.
"மலக்குடலுடன் இறைவனைத் தரிசிக்கலாமா?" எழுதிய கல்வெட்டு மற்றும்,
"மாதவிடாய் நின்ற பெண்கள் அர்ச்சகராகலாமா?" என்று எழுதிய செல்லா ஆகியோருக்கு என் பாராட்டுக்கள். :)"
நானும் பாராட்டுவேன், அப்படியே அக்கேள்விகளை எல்லா மதங்களுக்கும் உரித்தாக்கினால். ஆனால் மாட்டார்கள். ஏனெனில்
1) நல்ல உதை கிடைக்கும் 2)இந்த பாழாய்ப் போன பார்ப்பனர்கள் அங்கு இல்லையே, யாரை சாடுவது?
இப்பின்னூட்டத்தின் நகல் எனது "சில வெளிப்படையான எண்ணங்கள்" பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படுவதற்கு உங்கள் பதிவில் அபாயகரமான அதர் ஆப்ஷன் இருப்பது ஒரு முக்கியக் காரணம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இரயாகரன் அவர்கள் எழுதிய பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது.
பார்ப்பனர்கள் வர மாட்டார்கள் என்று நான் கூறியதற்கு முக்கியக் காரணமே உயர்சாதீயம் என்று பொதுப்பெயரைக் குறிப்பிடாது பார்ப்பன எதிர்ப்பு என்னும் மன அரிப்பினால் அதை வேண்டுமென்றே பார்ப்பனீயம் என்று குறிப்பிட்டால், அவ்வாறு பேசுபவரிடம் சரியான விவாதம் செய்ய முடியாது என்னும் அச்சத்தால்தான்.
அசுரன் அவர்கள் கேட்கிறார் நான் ஏன் பார்ப்பனன் என்று கூறிக் கொள்ள வேண்டும் என்று. எனது பதில், அது எனது விருப்பம் என்பதே. அதற்கு அசுரன், இரயாகரன் போன்ற தாங்களாகவே தங்களை இணைய தாசில்தாராக நினைத்து கொண்டிருப்பவரது அனுமதி எதுவும் தேவையில்லை.
இன்னொரு விஷயம். நான் உங்கள் பதிவில் முன்னால் இட்ட பின்னூட்டத்துக்கு காரணமே உங்கள் பதிவு தேவையின்றி ஒரு சாதியை திட்டி வருவதால் விவாதம் திசை திரும்பி போகும் என்பதால்தான். அதுதான் நடக்கிறது இப்போது. நடத்துங்கள்.
நான் ஏற்கனவே பல இடங்களில் கூறியதை இங்கேயும் கூறிவிடுகிறேன். என்னதான் தொண்டை வளர கரடியாகக் கத்தினாலும் பார்ப்பனர்கள் முன்னேறுவதை எந்த ஜாட்டானாலும் தடுக்க இயலாது.
வழக்கம்போல இப்பின்னூட்டத்தின் நகலை எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன்.
அம்புடன், (எழுத்துப் பிழை எதுவும் இல்லை)
டோண்டு ராகவையங்கார்
நன்று ராகவன் அவர்களே..
உங்கள் இந்தப் பதிவின் அனைத்தையும் வரவேற்கிறேன்,ஒன்றைத் தவிர..
>>பார்ப்பன ஜாதியில் பிறந்ததற்குப் பெருமிதம் அடைகிறேன். >>
இந்த கூற்றுக்கும்,விஜய் தொலைக்காட்சியில் உளறிய அந்த அய்யங்கார் பெண்ணுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
ஒரு இனத்துக்கு எதிரான அரசு ரீதியான ஒடுக்குதல்கள்,அது பார்ப்பனரோ அல்லது வேறு இனமோ,சுத்த அயோக்கியத்தனம் என்பதுதான் என் நிலைப்பாடு..
ஆனால் ஒரு சாதியில் பிறந்தேன் என நான் பெருமைப்படுகிறேன் என்ற கூற்றில் மறைமுகமான சாதீய விதயங்கள் சுட்டப் படுகின்றன என்பதை நீங்கள் உணர்ந்தே இக்கூற்றை முன் வைக்கிறீர்களா?
அந்தணராகப் பிறப்பதில் எந்தப் பெருமையும் இல்லை;அந்தணராக வாழ்ந்தால் அதில் பெருமை இருக்கிறது.
அந்தணர் என்பவர் அறவோர் என்கிறது தமிழ்நீதி.
அந்தணராகப் பிறந்ததாலேயே நான் அறவோன் என்பதல்ல அர்த்தம்;அறவோனாக வாழ்வதால் நான் அந்தணன் என்பதே பொருள்,அவன் புலையனாகப் பிறந்திருந்தாலும் கூட!
யார் பிராமணன் புத்தகத்தில் சோவும் கூட இதையே சுட்டுகிறார்..
பலவற்றில் ஆழ்ந்து யோசிக்கும் நீங்கள் ஏன் இப்படி ஒரு குறுகிய மனப்பான்மை சொற்றொடரை உபயோகித்தீர்கள் என அறியேன்..
//>>பார்ப்பன ஜாதியில் பிறந்ததற்குப் பெருமிதம் அடைகிறேன். >>
இந்த கூற்றுக்கும்,விஜய் தொலைக்காட்சியில் உளறிய அந்த அய்யங்கார் பெண்ணுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.//
இதை நான் கூறியது தாம் பார்ப்பனர் என்று வெளியில் சொல்ல அச்சப்பட்டு ஒடுங்கிக் கிடக்கும் சகபார்ப்பனர்களுக்காகக் கூறியது. நீங்கள் பார்ப்பனராக இல்லாத பட்சத்தில் இது உங்களை நோக்கிக் கூறப்பட்டதல்ல.
அவ்வாறு ஒடுங்கிக் கிடந்த இரு பார்ப்பன பதிவர்கள் அவர்கள் பார்ப்பனர் என்பது வெளியே தெரிந்ததுமே செருப்படி பட்டார்கள். ஆகவே அவர்களைப் போன்றவருக்கு தைரியம் வரவழைக்கவே இங்கே இதை கூறலாயிற்று.
பை திவே லாவண்யா என்ற அந்த ஐயங்கார் பெண்ணை நான் ஏற்கனவே அவரது தைரியத்துக்காக பாராட்டியுள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
தங்களின் மனித நேய உணர்வு தங்களின் பதிவுகளில் தெளிவாய் தெரியும் போது ஒரு சிலர் தங்களை தூற்றுவது ஏன் எனப் புரியவில்லை.
பல தலைமுறைகளாய் பல ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டில் அடிமையாய் இருந்த சமூகம் கடந்த 50-60 ஆண்டுகளாக சுதந்திரக் காற்றை சுவாசிக்க தொடங்கியுள்ள நிலையில்
ஆலயம் தொழக்கூட நீதிமன்ற ஆணையை எதிர் பார்க்க வேண்டியுள்ளதே?
பரந்த பூமியில்
சுவாசிக்கும் காற்று பொது
குடிக்கும் தண்ணிர் பொது
அடங்கும் பூமி பொது
உதிக்கும் சூரியன் பொது
பின் ஏன் இந்த வேண்டாத விவாதம்.
இதை அனைவரும் உணர வேண்டும்.
ஒரு ஊரில் வசிக்கும் முற்பட்டோர்,பிற்பட்டோர்,தலித்துகள்
சுவாசித்து உயிர் வாழ்வது ஒரே காற்றை (oxygen)வைத்துதான்.
ஒரு பிரிவினர் குடிக்கும் தண்ணிர் வேர்வையாய் வெளி வந்து ஆவியாய் மாறி பின் குளிர்ந்து மழையாய் பொழிந்து ஆற்று நீராய் மற்றோரு பிரிவினருக்கும் குடி நீராகிறது.
இயற்கயே அனைவரையும் ஒன்றாய் பாவிக்கும் போது மனிதன் பேதம் பார்க்கலாமா?
இதற்கு தங்களின் பதில்?
//இப்போது கூறுகிறேன். நான் டோண்டு ராகவன். வடகலை ஐயங்கார். பார்ப்பன ஜாதியில் பிறந்ததற்குப் பெருமிதம் அடைகிறேன். நான் பார்ப்பனன் என்பதை எப்போதும் தெளிவுபடக் காட்டிக் கொண்டவன். இனிமேலும் அவ்வாறுதான் செய்யப் போகிறவன்.
///
காந்தி ஜயந்தி அன்னிக்குன்னு பாத்து, இந்த உவ்வே மேட்டரை மீள் பதிவெல்லாம் செஞ்சதுக்கு என் கண்டனங்கள்!
பேருக்கு பின்னாடி, லாடு லபக்குதாஸ் மாதிரி, ஐயங்கார், ஐயர்னெல்லாம் போட்டுக்கரது மகாக் குத்தம், கேவலம்.
ராகவன் சார், லக்கிலுக் போன்றோர் கருணாநிதிக்கு முதுகு சொரிந்து விட என்ன வேண்டுமானாலும் உளறி கொட்டுவார்கள்.. அந்த அபத்த களஞ்சியங்களை பொருட்படுத்த வேண்டாம்.. இப்போது தமிழ் பதிவுலகில் லக்கிலுக் எடுப்பது போன்ற வாந்தி தான் நிறைய இருக்கிறது.. ரோட்டில் போகும் போது அசுத்தத்தை பார்த்தால் தாண்டி போவது போல் போய்க்கொண்டே இருக்க வேண்டியது தான்.
கம்பேனி நட்டத்தில் ஓடுவது போல் இருக்கிறதே ???
குமட்டல் அதிகரிக்கவே செய்கிறது !
குறைந்த பாட்டைக்காணோம்.
>>பை திவே லாவண்யா என்ற அந்த ஐயங்கார் பெண்ணை நான் ஏற்கனவே அவரது தைரியத்துக்காக பாராட்டியுள்ளேன். >>
அந்தப் பெண்ணின் தைரியத்தை வேண்டுமானால் பாராட்டலாம்;அந்தக் கருத்தை அல்ல...
இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை !
தமிழ்நாட்டில் ஒரு பயங்கரமான ஹிபாக்ரசி. ஜாதி சங்கங்கள் சரி, ஜாதி அரசியல் சரி, ஜாதி அடிப்படை ஒதுக்கீடுகள் சரி, ஜாதி சர்டிபிகேட்கள் சரி. ஆ..ஆ..ஆ..ஆ..னால் நான் இந்த ஜாதி , அதனால் பெருமை என்பது ரொம்ப தப்பு. இந்த schizophrenia வளர்த்தற்கே திராவிட இயக்கங்களை கண்டிக்க வேண்டும். மக்களின் சுயமரியாதையை குலைப்பது இந்த மனப்பான்மைதான்.
விஜயராகவன்
/////ஊரார் வாய்க்குப் பயந்து பயந்து இன்னும் இழிவுபடுத்தப்பட்டதுதான் மிச்சம். என்னதான் செய்தாலும் போதாது இன்னும் செய்ய வேண்டும் என்றுதான் கூறுவார்கள்////////
Dondu sir,
Will you now accept why non-Brahmins crushing you popppsss????!!!!
... If possible please ignore and mind your normal business, if you try to arguing ...you get the shit.
Your friend
Sathappn
"SurveySan said...
பேருக்கு பின்னாடி, லாடு லபக்குதாஸ் மாதிரி, ஐயங்கார், ஐயர்னெல்லாம் போட்டுக்கரது மகாக் குத்தம், கேவலம்."
சர்வேசா
தனிமனிதர் விருப்பத்தையும், அரசியல், கலசார நிர்பந்தங்களையும் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
தனிமனிதர் விருப்பம் அவர் பெயரில், என்னவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை ஏற்றுக்கொள்ளாதது அடிப்படை அநாகரீகம்.
கலாசார, அரசியல் போக்குகள் ஜாதி மனப்பான்மையை குறைக்க வேண்டும், என்பது நியாயம். ஆனால் ஜாதி மனப்பான்மையை தூண்டும் அரசு, அரசியல், `அறிவு ஜீவி` செயல்களை ஏற்றுக்கொள்வது கேணைத்தனம்.
தும்பை விட்டு வாலை பிடிக்காதீர்கள்.
1.அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை வைத்து ,பங்கு வர்த்தக சூதாடிகளை காப்பாற்ற அதிபர் புஸ் அவர்களின் நடவடிக்கை சரியா?
2.ஊரான் நெய்யே என் பொ...../கையே என்பது இது தானா?
3.சட்டத்தை மீறுவது பின் அதையே சட்டமாக்குவது இது தகுமா?
4.இப்படி இருக்கும் போது நமது பாரத நிதி அமைச்சர் மத்திய/மாநில/தனியார் தொழிலாளர்களின் ஆண்டு வைப்பு நிதியினை இந்த சூதாட்டத்திற்கு ஆட்படுத்துவது பலன் தருமா?
5.இங்கும்( இந்தியாவில்) நிலம்/வீட்டின் விலை கடந்த 3 ஆண்டுகளில் செயற்கையாக 300 % வரை உயர்ந்துள்ளதே.இது நல்லதற்கா?
6.தனியார்மயம்,தாராளமயம்,உலகயமயம்
முழுத் தோல்வியை நோக்கி செல்வதாக இடதுகளின் கூற்று உண்மையாய் விடுமா?
7.எங்கே என்ன தப்பு நடந்தது விளக்கவும்?
8.அமெரிக்கவின் பொருளாதார நெருக்கடி தீருமா?
9.இந்தியாவை அது பாதிக்குமா?
10.உங்கள் நிலையில் மாற்றம் உண்டா?
நடு நிலமையான பதில் ?
பக்கி லுக் உடன் ஒரு நேர்காணல் படித்தீர்களா ?
எதிர் பதிவு ஏகாம்பரம்.
http://pakkilook.blogspot.com/2008/10/blog-post.html
//பரந்த பூமியில்
சுவாசிக்கும் காற்று பொது
குடிக்கும் தண்ணிர் பொது
அடங்கும் பூமி பொது
உதிக்கும் சூரியன் பொது//
சும்மா காமெடி பண்ணாதீங்க சாமி... எங்கூர்லே தண்ணீர் தனித் தனி.. கோயில் தனித் தனி.. அய்யிரு மணியடிக்கற கோயில் வேற அய்யிரு மணியடிக்க வர மாட்டேன்னு சொல்ற கோயில் தனி.. அய்யிரு மணியடிக்கிற கோயில்லயும் அவரு நிக்கிற இடமும் கும்பிடறவன் நிக்கிற இடமும் தனித் தனி.. நிலம் தனித் தனி..
ஆமா நீங்கென்ன செவ்வாய் கிரகத்துல வசிக்கிறீங்களா?
//ஜாதி சங்கங்கள் சரி, ஜாதி அரசியல் சரி, ஜாதி அடிப்படை ஒதுக்கீடுகள் சரி, ஜாதி சர்டிபிகேட்கள் சரி. ஆ..ஆ..ஆ..ஆ..னால் நான் இந்த ஜாதி , அதனால் பெருமை என்பது ரொம்ப தப்பு.//
ஆமா ராசா.. அது மட்டுந்தேன் தப்பு. ஏன்னா நான் சக்கிளியன்னு சொல்லித்தானே என்னிய சேரில வச்சிங்க? நான் சக்கிளியனா பொறக்கப் போய் தானே பன்னி மேயுற காலனில இருந்து படிச்சேன்.. நான் சக்கிளியனா இருக்கப் போய் தானே உங்க முன்னாடி செருப்ப கையில் எடுத்து பிடிச்சிக்கிட்டு நடந்தேன்.. அதனாலே... . ”நான் சக்கிளியன்னு” சொல்லித்தேன் அதுக்கான நட்ட ஈட்ட வாங்கனும்.. புரியுதா?
Anonymous said...
" வச்சிங்க? நான் சக்கிளியனா பொறக்கப் போய் தானே பன்னி மேயுற காலனில இருந்து படிச்சேன்.."
கண்ணா, எப்படியோ படிச்சிய, சந்தோசம்தான். ஒரு காலத்ல, 100 வருஷம் முன்னாடி, அப்படிதான் முத்துசாமி ஐயருனு ஒருத்தர், வீட்ல விளக்கு இல்லைன்னு ரோட் லட் கீழ படிச்சார்.அப்புறம் நீதிபதியா ஆயிட்டார். முயற்சி திருவினையாக்கும்.
`ன் சக்கிளியனா இருக்கப் போய் தானே உங்க முன்னாடி செருப்ப கையில் எடுத்து பிடிச்சிக்கிட்டு நடந்தேன்.`
எனக்கு முன்னாடி யாரும் செருப்பை கையில் வைத்து நடந்ததில்லை. எவனாவது அப்படி சொன்னால், செருப்பை கையில் வைக்காதே. அவன் முகத்தில் வை.
`தனாலே... . ”நான் சக்கிளியன்னு” சொல்லித்தேன் `
பெருமையாக நான் சக்கிலி என்று சொல்லுங்கள். தொழில் கௌரவம் இருக்கட்டும்.
`க்கான நட்ட ஈட்ட வாங்கனும்.. புரியுதா?`
நட்ட ஈடு எவனுடமிருந்து வாங்க வேண்டுமோ அவரிடம் வாங்குங்கள். என்னிடமிருந்து யாரும் ஒரு நட்ட ஈடும் வாங்க போவதில்லை.
நன்றி
//இப்போது கூறுகிறேன். நான் டோண்டு ராகவன். வடகலை ஐயங்கார். பார்ப்பன ஜாதியில் பிறந்ததற்குப் பெருமிதம் அடைகிறேன். நான் பார்ப்பனன் என்பதை எப்போதும் தெளிவுபடக் காட்டிக் கொண்டவன். இனிமேலும் அவ்வாறுதான் செய்யப் போகிறவன்.//
எத்தகைய ஆதரவு வேண்டியும் நாம் நம் அடையாளத்தை மறைத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை. பெருமையோ சிறுமையோ நாம் நாம் தான். அதில் யாதொரு மாற்றமும் இல்லை. அப்படி இருக்க இதை பெரிதொரு பிரச்சினையாக்கி அடித்துக் கொள்வது ஏன்? இதுவரை நான் பிராமணன் என்பதால் சிறுமையுற்றதில்லை, இனி அப்படி ஆகப் போவதும் இல்லை. ராகவன் அவர்கள் கூறியுள்ளதை போல, சொல்ப்வன் சாதி என்ன என்று தான் முதலில் பார்க்கின்றனர். சொல்லுவிஷய்த்தை கோட்டை விட்டு விடுகின்றனர்.
“எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”
நான் பள்ளியில் படிக்கும் போது சில நண்பர்களுடன் பழக கூடாது, அவர்களுடன் மதியம் உணவருந்த கூடாது என்று தடுக்கப்பட்டேன், அப்போது அது ஏன் என்று கூட எனக்கு தெரியாது. பின்னாளில் சாதிய முறைகளே அதற்க்கு காரணம் என்று நினைத்தேன்.
பார்பணியத்தில் மட்டும் தீண்டாமை இல்லை மற்ற சாதிகளிலும் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன்.
எனக்கு நண்பனாய் இருக்க எல்லா தகுதியும் உள்ள ஒரு தலித் நண்பனுக்கு நான் நூறு சதவிகிதம் என் மனதில் இடமளிக்கிறேன். அந்த நோக்கத்தில் தான் நான் இட்ட "புலம்பல்கள்" என்ற பதிவு.
என் அப்பனுக்கும் உன் அப்பனுக்கும் ஆகாது, அதனால் நீயும் எனக்கு ஆகாது என்பது போல் இருக்கிறது இப்போதைய பார்ப்பனிய துவேசம். உள்ளுக்குளேயே புற்றை வளர்த்து கொண்டிருக்கிறோம். உத்தா புரத்தில் தலித்துக்கு எதிரான சுவரும், சேலத்தில் கோவிலுக்குள் கோவிலுக்குள் விடமாட்டேன் என்று சொன்ன சாதியினரையும் இதே வேகத்தில் கேள்விகள் கேட்க எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள்.
இதெற்கெல்லாம் காரணமான சாதிகள் அடியோடு ஒளிந்து போக வேண்டும் என்று நான் ஆசைபடுவதில் என்ன தவறு.
இந்த பின்னூடத்தை என் பதிவிலும் டோண்டுவின் பதிவிலும் இடுகிறேன்
அவுங்களும் இதை விட மாட்டேங்கிறங்க,நீங்களும் இதை விட மாட்டிங்க போல. இதை எழுதறதை எப்ப விட்டுத் தொலயறது?
என்ன தல, ஒரு போலி டோண்டு போயாச்சி.. அவனை வெச்சி இத்தனை நாளா இந்த யுத்தம் அந்த யுத்தமுன்னு கடையில கல்லா கட்டிட்டு இருந்திங்க.. இப்ப கடையில கலெஷன் ஜ மீன் பின்னூட்டம் கம்மியானவுடனே மீள்பதிவு.. மப்பு பதிவு மந்தார பதிவுன்னு போட்டு அடுத்த போலி உருவாகி கல்லா ரொம்புர வரைக்கும் வுடமாட்டிங்க.. குற்றத்தை செய்தவனை விட அதை தூண்டியவனுக்கே அதிக தண்டனை அப்படிங்கிற formula படி உங்களை உள்ள வெச்சியிருக்கனும்..ரவி தப்பு பண்ணிட்டாரு.. ரைட்டு விடுங்க எதை எதையோ பாத்துட்டோம் இதை பாக்க மாட்டோமா.. நீங்க அடிச்சி ஆடுங்க.. சில பேர் எப்படி சொன்னாலும் திருந்த மாட்டாங்க..களி தின்னா தான் சரிபடுவாங்க..
//இப்போது கூறுகிறேன். நான் டோண்டு ராகவன். வடகலை ஐயங்கார். பார்ப்பன ஜாதியில் பிறந்ததற்குப் பெருமிதம் அடைகிறேன். நான் பார்ப்பனன் என்பதை எப்போதும் தெளிவுபடக் காட்டிக் கொண்டவன். இனிமேலும் அவ்வாறுதான் செய்யப் போகிறவன்.//
//தற்சமயம் தீண்டாமைக் கொடுமையைச் செய்வது பார்ப்பனரா? மற்ற உயர் சாதியினர்தானே? அவர்களைத் தட்டிக் கேளுங்கள், தைரியமிருந்தால். மலம் தின்ன வைப்பவர், ரிஸர்வ் பஞ்சாயத்து நடக்க விடாமல் செய்பவர், கட்டி வைத்து வைத்து உதைப்பவர், இரட்டைத் தம்ளர் வைத்துள்ள டீக்கடைக்காரர்கள் ஆகியோர் பார்ப்பனரா? அவர்களிலும் சிலர் பின் தங்கிய வகுப்பினருக்கான கோட்டாவில் இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும்தானே?//
//நன்றி துளசி அவர்களே. அதுதான் கூறினேனே, தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்ளவேண்டும் என்று. என்ன தலையையா சீவிவிடுவார்கள்?//
//அன்புடன்,
டோண்டு ராகவன//
வாவ்! சிலருக்கு இளமை குறையும் என்று கேள்விப்பட்டுள்ளேன். உங்களுக்கு கூடிக் கொண்டல்லவா செல்கிறது!
இருந்தும் மற்ற சாதிகளை விட நாங்கள் உயர்ந்தவர்கள் என்ற தோனியில் நீங்கள் அளித்திருக்கும் பதில் சற்றே நெருடலாக உள்ளது.
வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை கற்ப்பிக்கும் கருத்துக்களை என்று நீக்குகிறோமோ அன்று தான் சமூகத்தில் நிலவும் சாதி ஏற்றத்தாழ்வுகளை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்பது என் கருத்து. அது வரை இது போன்ற விவாதத்திற்கு ஒரு முடிவே இல்லை.
மற்றபடி எதையும் மழுப்பாமல் 'தொபுக்கடீர்' என்று அனைத்தையும் போட்டு உடைக்கிறீர்களே! இங்குதான் உங்களின் தனித்தன்மை மற்ற வலைப்பதிவர்களிடமிருந்து வேறுபடுகிறது.
There is nothing to be happy or proud to be a brahmin or a vysya or a kshatria.
But many are blabbering as if brahmins got education for 2000 years and they did not allow anyone. What sort of education were these brahmins getting? Were they learning physics,management,military science, chemistry ,maths etc.,? no not at all they were getting was the crap "repeat till you mug" of the useless vedas and with that vedas they could only live as beggers at that time.
The brahmins lived mostly on food they obtained through begging. Not a single brahmin was living luxuriously that time. Only the kshatrias, vysyas were rich.
Sudras and brahmins were the ones who really suffered. Both of them in the name of religion. The brahmins were cunningly deceived by kashtrias and vysyas into begging while they enjoyed all the luxury of that time.
Manu was not a brahmin.Manu was a kshtriya. While dasaratha could enjoy 64k wives in big palace useless vashista the brahmin had to live in forest on meager food obtained through begging.
Brahmins did not know the art of warfare except for drona and probably to some extent parasuraman.
The kshatriyas and vysyas deceived both the brahmins and sudras. The kshatriayas wielded enormous power and vysyas wielded enormous money power relegating brahmins and sudras to do menial tasks.
Due to this discrimination parasuraman the brahmin vowed to kill all the kshtriyas. The kshtriyas like yudhistar, bheema ,duruyodhana for their lust of women and land killed everyone in the world. Can anyone point to any such instances in history where the brahmins were arrogant and because of them such massive destrution of humanity happened.
Also can you point out any brahmin who has acres and acres of land unlike the other BC castes?
Only when the brahmins let go of the crapy vedas and all such nonsense and embarked on moderness they could come up little bit in life. The rest of the brahmins who are now doing the menial jobs in temples should throw those gods out into sea or river and join the modernity bandwagon. This is the only silver bullet.
To prosper more the brahmins should collectively fight against the indscrimination of reservation. The fu**ing indian govt will look down if the brahmins talk peacefully about their grieveances. We should do what the muslims are doing currently then all the newspapers and the whole human rights people will sympathize with us and will ultimately do away with reservation for the oppressors and suppressors of brahmins and dalits.
When reservation is done away with for the OBCs and MBCs the 2000 years of discrimation which the vysyas and kshatrias subjected the brahmins and dalits to will disappear and the pure social justice would be bestowed upon the dalits and brahmins who were beggers for 2000 years.
The crap kanchi madam or boondhi madam should be bulldozed and in that place university or college should come up that imparts free education to only brahmins and dalits the real oppressed and suppressed people for 2000 years.
The kshatrias and vysyas (the current OBCs and MBCs
) for 2000 years enjoyed wine,women,power and enormous money. This should be done away with for pure social justice.
some more missed points.
Hinduism has not given anytthing to the brahmins and sudras. For the brahmins it has given only kudumi,namam and biksha patiram.
Brahmins raise over the crapy religion and improve your lives. raze down the temples which gives only 200 rupees per month as salary and picha patthiram for collecting alms from OBCs and MBCs.
such brahmin folks who are doing such menial jobs to some stones in temples should get away with that crap and get into the mainstream .
Whatever you teach the brahmins cannot leave away their slave mentality. Educate yourslef and leave the crapy dundegeon of garpagraham and while leaving make sure you throw away the stone that has betryaed you by giving you only pichapathiram and 200 rupees per month.
//இருந்தும் மற்ற சாதிகளை விட நாங்கள் உயர்ந்தவர்கள் என்ற தோனியில் நீங்கள் அளித்திருக்கும் பதில் சற்றே நெருடலாக உள்ளது.//
இல்லை, நீங்கள் சொல்லும் அர்த்தத்தில் நான் அதை கூறவில்லை. நான் இதன் மூலம் குறிவைத்தது தாங்கள் பார்பனர்கள் என்பதை மறைத்து செயல்படும் சகபார்ப்பனர்கள்தான்.
மற்றப்படி இப்போதுள்ள நிலையில் பார்ப்பனர் என கூறி கொள்வது ஒரு முள் கிரீடம் தரிப்பது போலத்தான். அதை கூற தயங்கும் சக பார்ப்பனர்களிடம் அப்படியெல்லாம் தயங்காதீர்கள் என்பதை கூறவே இதை சற்று அழுத்தமாக பிரயோகித்தேன். அவ்வளவே.
ஹாஜியார் நலமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சில பேர் எப்படி சொன்னாலும் திருந்த மாட்டாங்க..களி தின்னா தான் சரிபடுவாங்க.//
வாங்க சந்தோஷ். இங்கே போலி டோண்டு எங்கேயிருந்து வந்தது? அவனை மறந்து நாளாச்சு.
அவன் போனதுலே நீங்கதான் வருத்தப்படற மாதிரியிருக்கு. அப்பவே கமெண்ட் மாடரேசன் செய்ய வேண்டாம்னு கொடி தூக்கியவர்தானே நீங்க. (ஆனாக்க நீங்க உங்களுக்கு மட்டும் அதை ஓசைப்படாம போட்டுக்கிட்டது வேற கதை).
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அவுங்களும் இதை விட மாட்டேங்கிறங்க,நீங்களும் இதை விட மாட்டிங்க போல. இதை எழுதறதை எப்ப விட்டுத் தொலயறது?//
மத்த உயர்சாதிங்க செய்யறாங்க வன்கொடுமை தலித்துங்க மேல். அவ்வாறு செய்யாத பார்பனர்களோ இதிலே குற்றம் சாட்டப்படறாங்க. இதிலே என்ன கொடுமைன்னாக்க பல பார்ப்பனர்களே அதுக்காக பயந்துபோய் தாங்கள் பார்ப்பனர்கள் என்பதை மறைத்து, தாங்களும் மற்றவர்களுடன் சேர்ந்து பார்ப்பனர்களை திட்டுகிறார்கள்- ஆனால் அவர்கள் பார்ப்பனர்கள் என்பது தெரிய வரும்போது அவர்களையும் மத்தவங்க விடறதில்லை. ஆகவே அம்மாதிரி பார்ப்பனர்களுக்காகத்தான் இப்பதிவு எழுதப்பட்டது என்பதை மனதில் கொள்ளவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
///தனிமனிதர் விருப்பம் அவர் பெயரில், என்னவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை ஏற்றுக்கொள்ளாதது அடிப்படை அநாகரீகம்.
////
என்ன கொடுமைங்க இது? யோசிச்சு முழு நிதானத்தோடதான் எழுதியிருக்கீங்க்களா?
தனி மனுஷனுக்கு, புடிச்சா, எல்லாத்தையும், நாலு சொவத்துக்குள்ள செஞ்சுக்கிட்டுப் போகணும்.
பொதுவுக்கு வந்து பொதுவுல செய்யரதும் சொல்லரதும், எல்லாருக்கும், ஏற்புடையதா இருக்கணும்.
ஹிட்லரின், சுவஸ்திக் சின்னமும், நாஜி பேரும், தனிப்பட்டு பிடிச்சிருக்குனு, இன்னிக்கு அதை உடுத்திக்கிட்டு போலந்துக்கு போக முடியுமா? போரது ஞாயமா?
பேருக்கு பின்னாடி, ஐயர்,ஐயங்கார், தேவர், நாடார்னு எல்லாம், 'உயர்' ஜாதிக்காரத் திமிரில் போடுவதாய்தான் எனக்குத் தோணுது.
ஒடுக்கப்பட்ட வகுப்பினரில், குடுகுடுப்பை காரனும், நரிக் குறவரும், பள்ளனும், பறையரும், அவங்க பேர் பின்னாடி அந்த சாதியின் பேரை போட்டுக்கர மாதிரியா, நாம சாதியை வளத்து வச்சிருக்கோம்?
எப்ப, உயர்வு தாழ்வு என்பது, ஒருவரின் சாதியை வைத்து நிர்ணயிக்கப்பட்டு, இன்று வரை பின்படுத்தப்பட்டு வருகிறதோ, அந்தக் கணமே, சாதியை தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம், ரொம்பக் கேவலமான ஒண்ணாயிடுது.
ரொம்பக் கேவலம் சார், உங்களின் இந்தக் கொள்கை.
//பொதுவுக்கு வந்து பொதுவுல செய்யறதும் சொல்லறதும், எல்லாருக்கும், ஏற்புடையதா இருக்கணும்.//
அப்போ எதுக்கெடுத்தாலும் ஆ ஊன்னா பார்ப்பனரை திட்டுகிறார்களே அது மட்டும் எல்லோருக்கும் ஏற்புடையதா என்ன?
அது அப்படித்தான் இருக்கும்னாக்க எதிர்வினையும் தானே வரும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
SurveySan said...
"என்ன கொடுமைங்க இது? யோசிச்சு முழு நிதானத்தோடதான் எழுதியிருக்கீங்க்களா?
தனி மனுஷனுக்கு, புடிச்சா, எல்லாத்தையும், நாலு சொவத்துக்குள்ள செஞ்சுக்கிட்டுப் போகணும்."
ஏன்ன சர்வாதிகார, பாசிச, நாசி மனப்பான்மை. நாளைக்கு யாரும் வேட்டி கட்டிக்கொண்டு போகக்கூடாது என்னா அதையும் ஒத்துக்கொள்ளப் போகிறிகளா? உங்கள் செயல் மற்றவர்களை நேரடியாக பாதிக்காத வகையில், நீங்கள் உங்கள் விருப்பத்தை செய்யலாம். அதுவும் பெயர் !
`ஹிட்லரின், சுவஸ்திக் சின்னமும், நாஜி பேரும், தனிப்பட்டு பிடிச்சிருக்குனு, இன்னிக்கு அதை உடுத்திக்கிட்டு போலந்துக்கு போக முடியுமா? போரது ஞாயமா?`
தடுக்கி விழுந்தா ஹிட்லர் பேச்சு. சவஸ்திக் சின்னம் ஹிந்து, ஜயின, பௌத்த சின்னம். தாராளமா போட்டுக்கொள்ளுங்கள்.
`ஒடுக்கப்பட்ட வகுப்பினரில், குடுகுடுப்பை காரனும், நரிக் குறவரும், பள்ளனும், பறையரும், அவங்க பேர் பின்னாடி அந்த சாதியின் பேரை போட்டுக்கர மாதிரியா`
யார் என்ன வேண்டுமானாலும் பெயர் போட்டுகட்டும், குறவர், பறையர், பள்ளன் எல்லா பெயரும் சரிதான். பெயரைப் பார்த்து ஆளை எடை போடுவது தவறு. அது பண்பாடு அல்ல.
`அந்தக் கணமே, சாதியை தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம், ரொம்பக் கேவலமான ஒண்ணாயிடுது.`
உங்களுக்கு அது அவ்வளவு கேவலம்னா, ஏன் ஜாதி அரசியல், ஜாதி அரசியல் செய்கைகள், ஜாதி செர்டிபிகேட்டுகள், ஜாதி ஒதுக்கீடு முதலியவற்றை ஒத்துக்கொள்கிறீர்கள். இதும்பேர்தான் ஆங்கிலத்தில் schizophrenia.
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
Mr.Dondu,
I fully agree with you on your stand. I would like to share my side of a story. I am a brahmin and married to a devar girl. When her sister was about to marry, my Father-in-law told me one thing which I still hate it. He told me that he is fine with any boy as long as he is not from lower caste than Devar. If I have thought of that way during my marriage what would have happened?
So, friends,
We, as brahmins, have come long way from these untouchablity. It is you who are not leaving this habit and blaming us for your guilt.
Raj.
நாம் நமக்கு நாமே பெருமை கொள்ள ஆயிரம் விசயங்கள் இருக்கும் போது இந்த ஜாதி பெயரில் பெருமை கொள்வது தேவையா??
நான் நல்லா படித்தேன் என்பதில் பெருமை கொள்ளாலாம்.. ஏன் வாழ்க்கை முழுதும் நேர்மையாக இருந்தேன் என்பதில் நீங்கள் பெருமை கொள்ளாலாம்..
திட்டுபவர்கள் எங்கு இருந்தாலும் எந்த ஜாதியில் இருந்தாலும் திட்டுவார்கள்.
என்னை பொருத்தவரை ஜாதியை வைத்து பேசுவர்களை தூரத்தில் வைத்தே இருக்கிறேன்.
சார்
தெரியாமத்தான் கேட்கறேன்? இந்த மீள்பதிவுக்கு என்ன அவசியம்??
லக்கிலுக் பத்தி உங்களுக்கு தெரியாதா? மூர்த்தியின் அல்லகை அவன்னு உங்களுக்கு தெரியாதா? அது ஒரு மெண்டல்ன்னு உங்களுக்கு தெரியாதா?
சரி மறந்து போச்சுன்னா ஆதாரங்களை மறுபடியும் அனுப்பி வைக்கிறேன்.
எனக்கே புரியலை ஒரு மன நிலை தவறியவன் கூட எல்லாம் போட்டி போட நினைத்து இப்படி சாதி பெருமை எல்லாம் சொல்வதை என்னால் ஒருகாலும் ஏற்க முடியாது..
சார் உங்க பதிவு படிப்பது வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்திந்தவர் அவர் கருத்துகள் சரியாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான்.. தயவு செய்து உங்கள் ஆக்கங்களை இப்படி குழாயடி சண்டையில் வீணாக்கவேண்டாம்
//எனக்கே புரியலை ஒரு மன நிலை தவறியவன் கூட எல்லாம் போட்டி போட நினைத்து இப்படி சாதி பெருமை எல்லாம் சொல்வதை என்னால் ஒருகாலும் ஏற்க முடியாது..//
நான் ஏற்கனவே சொன்னது போல இப்பதிவு தாங்கள் பார்ப்பனர்கள் என்பதை மற்றவர்களுக்கு பயந்து மறைத்து கொள்பவர்களை குறி வைத்துத்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
\\muse said
One lady born in the (so called) low caste \\
hi muse,
i am very happy to see this type of writing from you. i have expressed a similar view in my blog. Please read
http://eesukutty.blogspot.com/2008/09/blog-post.html
Vadakalai Parpan Pls expand these terms. What is most important for a brahmin is the Punul. If yougo into details of this I am sure in this world 99% of persons who are wearing Punul will not be Brahmins at all- Pls let me know how to work in Tamil font. I have more to say which can be expressed only in my tamil.
Dear Sir,
I appreciate yr integrity & conviction.
Dev
நான் ராமஸ்வாமி வைத்யநாத சுப்பிரமணியன் (சுருக்கமாக ஆர்வி). ஐயர் ஜாதியில் பிறந்தவன்.
எல்லாம் சரிதான், ஆனால் பார்ப்பனராக பிறந்ததில் என்ன பெருமை என்றுதான் புரியவில்லை. ஒரு சிறுமையும் இல்லை என்று சொன்னால் சரி. கொஞ்சம் விளக்க முடியுமா?
ஆர்வி அவர்களே. சிறுமை இல்லை என கூறிவிட்டீர்கள்.
ஆனால் அதை சிறுமை என நினைத்து பல பார்ப்பன பதிவர்கள் தாம் பார்ப்பனர் என்று மறைத்து, அதற்கும் மேல் தாமும் மற்ற அபார்பனருடன் சேர்ந்து பார்ப்பனரை திட்ட், பிறகு அவர்களும் உண்மை தெரிந்து அபார்ப்பனர்களிடம் செருப்படிபட என்றெல்லாம் இருப்பதால் அதை பார்த்து எனது எதிர்வினைதான் இப்பதிவு.
அந்த காண்டக்ஸ்டில் நான் சொன்னதை மீண்டும் படிக்கவும்.
பை தி வே உங்கள் வலைப்பூ சுவாரசியமாக உள்ளது. அதை எனது பிளாக்கர் ரோலில் சேர்த்து விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
திரு ராகவன்,
இன்றுதான் முதல் முறையாக தங்கள் பதிவைப் படித்தேன். நேர்மையான பதிவு. ஆனால் பார்ப்பனன் என்பதால் பெருமையோ, இல்லை என்பதால் சிறுமை எதுவுமோ இல்லை.
மற்றப் பதிவுகளைப் படித்தி விட்டு பகிர்கிறேன்
நன்றி
அன்புடன்
சூர்யா
யாகு செர்ச்சில் டொண்டு என அடித்தல் இதுதான் வந்தது. படித்தேன். ரொமப காரசாரமாக் இருந்த்திச்சி.
1. You have issue with the bloggers who hate tamil brahmins to the extent that one wants to exterminat them.
2. You have issue with the general attack on the Tambras in open society launched by dravidian leaders.
3.You have further issue with the 'timid' Tambras who fear to say they are Tambras because of the general criticism
4.You want all the Tambras go out in society to declare, as you do here, 'I am a Tambra and I am proud of it'
In all such things, one thing is missing:
What an individual, who happens to be born in a caste, should decide for himself? Should he believe in the 'imaginary label' and live in it imaginatively - like a poor child inhaling the aromo of a rich food wafting through the windows of a rich man's kitchen? Could'nt he have an individual right to reject such labels and to feel proud to call himself a good human without any preconditions like caste?
What do you have to say, on caste, as an individual? Do you believe in it, or not?
You have replied to such queries ealier saying:
"Others have castes. They are proud of it. The whole society is riven by caste divisions Why not I have that? What not the Tambras feel proud of it?"
Such replies are given in the context of society. Not as individuals.
I believe we have two personae:
1.one public, or to show to the public or others even they are our relations, or, a persona taking sustenance from the public life
2. one private, as an individual. From this position, we see society and its ways; and not allow ourselves prejudiced by such ways, and see it from afar, with dispassion.
Now, take the second persona. Detach yourself what others feel or not.
You are going to leave the world, as you are now going to hit 70 and even with best medical care, you may linger only for some more years. Even if you cross 80, your faculties may not help you carry the caste fight. I dont wish you a life longer than that. Because, to die naturally is a gift God has given us. We must enjoy dying that way.
God has created you as an individual; and you have to give account to him as an individual. In the ultimate analysis, we are individuals in spirits. In that state, do you feel you are a caste being, or an individual as a fine creation of God?
ELLAICHAAMI
என் வாழ்க்கையில் நடந்ததை பகிர்ந்துகொள்கின்றேன். `ஏய் ஐயரே.' - ஒரு நான்காம் வர்ணத்தவர், கிண்டலாக. நான்: `என்னை தொழில் முறையில் கூப்பிடுகின்றீர்கள். எனது தொழில் முறை சேவை உங்களுக்கு தேவை போலிருக்கின்றது. ஆனால் நாம் இங்கு இருப்பது, இந்த தொழிற்சாலையில் பணி புரிய. ஆகவே இந்த பேச்சை, எனது இடத்தில் வைத்துக்கொள்ளலாமே. இந்த தொழிற்சாலையில் வேண்டாமே.' வம்பு வளர்க்க வந்தவன் சென்று விட்டான்.
Post a Comment