நிரந்தர பக்கங்கள்

11/05/2007

நாடக அரங்கங்களில் ஆபாசங்கள்

மனோகரின் நாடகம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. சாணக்யன் என்று நினைக்கிறேன். அப்போது ஒரு காட்சியில் படையெடுப்பு முடிந்ததும் வென்ற அரசன் தன் வீரர்களிடம் அவர்கள் கைப்பற்றிய எதிரி தேசத்து அரசனின் பொருட்களை கொண்டு வந்து காட்டுமாறு கூறுவான். அவர்கள் கொண்டு வந்து அன்று அரசன் காலடியில் கொட்டியது இரண்டு தினத்தந்தி பேப்பர்கள், ஒரு டார்ச்லைட் மற்றும் சில ட்ரான்சிஸ்டர்கள். அரசன் முதற்கொண்டு எல்லோரும் சிரிக்க ஆரம்பிக்க, வேகமாக ஸ்க்ரீனை இழுக்க வேண்டியதாயிற்று.

இதே போலத்தான் எனது இப்பதிவில் "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்னும் தலைப்பில் போடப்பட்ட நாடகத்தில் நடந்ததாக நான் குறிப்பிட்ட நிகழ்ச்சி. நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் ஹாம்லெட் நாடகம் போட்டார் (அமலாதித்யன்). அதிலும் இதே போல காலத்துக்கு சம்பந்தமில்லாத பொருள் நாடக மேடையில் தென்பட (ஹாம்லெட்டின் தந்தை அணிந்த ரோலக்ஸ் கைக்கடிகாரமாக இருக்குமோ!), "நான் அமலாதித்யன் என்பதை மறந்து ரங்கத்தில் உருண்டு புரண்டு சிரித்தேன்" என்று கூறுகிறார்.

நான் பார்த்த மராட்டிய நாடகம் ஒன்றில் வில்லன் கதாநாயகியை பலவந்தம் செய்ய அவள் இறக்கிறாள். அப்போது அங்கு வந்த ஹீரோ அதைப் பார்த்து திடுக்கிடுகிறான். அப்போது வில்லன், "அவள் என்னுடன் போராடினாள், ஆகவே அவளை நான் கொன்று விட்டேன்" என்று வசனம் கூற வேண்டியவன். திடீரென அவன் இதை மறக்க, சங்கடமான மௌனம் சிறிது நேரத்துக்கு. கீழே விழுந்து கிடந்த பிணம் எழுந்து "நான் அவனுடன் போராடினேன், ஆகவே அவன் என்னைக் கொன்று விட்டான்" என்று கூறி மீண்டும் படுத்து விட்டது. (பை தி வே நான் இதை விகடனுக்கு எழுதி 15 ரூபாய் சன்மானம் சமீபத்தில் 1976-ல் பெற்றேன்).

கல்கி பார்த்த ஒரு நாடகத்தில் கோவலன் சிலம்பை விற்பதற்காக கண்ணகியிடமிருந்து விடைபெற்று செல்கிறான். திடீரென "தேசபந்துதாஸ் பாட்டு" என்று அரங்கத்தில் கூச்சல் எழுப்ப "அங்கதேச வங்கதேச பந்துவை இழந்தனம்" என்று கோவலன் பாட ஒரே கைத்தட்டல். கல்கிக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லையாம். பிறகுதான் விளங்கியதாம், சில மாதங்களுக்கு முன்னால் இறந்து போன தேசபந்துதாஸ் மரணம் அடைந்தது பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோவலன் சிலம்பு விற்கப் போவதையும் மறந்து பிரலாபிக்கிறான் என்று.

நாடகங்களில் இன்னொரு சிரமம் உண்டு. முக்கியப் பாத்திரம் வசனம் பேச மற்றவர்களுக்கு என்ன செய்வது என்று சொல்லித் தந்திருக்க மாட்டார்கள். எல்லோரும் ஒரு சங்கடமான முகபாவத்துடன் இருப்பார்கள். இதை கண்டிக்கும் பம்மல் சம்பந்தம் முதலியார் அவர்கள் இதற்கு "அவல் மென்று கொண்டிருப்பது" என்று பெயரிட்டுள்ளார். மற்றவர்கள் ஏதேனும் இயல்பான செய்கைகள் புரிய வேண்டும் என்பார். அதற்கு by-play என்று பெயர்.

எது எப்படியாக இருப்பினும் நாடகம் குறிப்பிடும் காலக்கட்டத்துக்கு இயல்பில்லாத பொருள்கள் வருவதை அதே பம்மல் சம்பந்த முதலியார், அவற்றை தனது "என் நாடக அனுபவங்கள்" என்னும் புத்தகத்தில் "நாடக அரங்கங்களில் ஆபாசங்கள்" என்று அழைத்தார்.

நீங்கள் என்ன எதிர்ப்பார்த்து இப்பதிவுக்கு வந்தீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

23 comments:

  1. நீங்க மத்தவங்க என்ன எதிர்பார்க்கனும்னு நெனச்சீங்களோ, அத எதிர்பார்த்துத்தான் நான் இங்க வந்தேன்!!

    ReplyDelete
  2. நல்ல பதிவு.

    ReplyDelete
  3. சோ,S.V.சேகர் மற்றும் Crazy மோகன் போன்ற geniusகள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துல்லதால், தமிழ் நாடக உலகில் இது போன்ற "ஆபாசங்கள்" குறைந்துள்ளது ஒரு ஆதரவான செய்தி

    ReplyDelete
  4. இது ரொம்ப ஓவர் சாணக்யன். நான் குறிப்பிட்ட ஆபாசங்கள் முக்கியமாக சரித்திர நாடகங்களில்தான் நடக்கும். சாதாரணமாக சமூக நாடகங்களில் அபூர்வமாகவே காணப்படும். ஏனெனில் இங்கு செட்டிங்ஸ் ஒப்பீட்டு நோக்கில் சுலபமானது.
    சேகரையோ கிரேசியையோ நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அதே சமயம் நாடகக் காவலர் மனோகர், ஹெரான் ராமசாமி அல்லது உடையப்பா தேவர் ரேஞ்சுக்கு இவர்களை வைத்து பார்க்க இயலாதுதான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. //சோ,S.V.சேகர் மற்றும் Crazy மோகன் போன்ற geniusகள் //

    u tell all paarpans. why no tell about non-bramins?

    mungasithu

    ReplyDelete
  6. //u tell all paarpans. why no tell about non-bramins?//
    பார்ப்பனரல்லாத நாடகக்காரர்களை நீங்கள் கூறலாமே. நானே கூறியுள்ளேனே. பம்மல் சம்பந்த முதலியார், ஹெரான் ராமசாமி, உடையப்ப தேவர்.

    மேலும் உதாரணங்களையும் நானே தருவேன். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். என்.எஸ். கிருஷ்ணன், நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, டி.கே.எஸ். சகோதரர்கள்.
    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. ஒரு மராட்டி நாடகத்தில் ஒரு நடிகை மெய்யாலுமே மேடையில் குளியல் தொட்டியில் குளித்தார். கையில் பைனாக்குலருடன் மக்கள் வெள்ளமாக திரண்டு கண்டு களித்தனர் - நாடகத்தை தான்!

    ReplyDelete
  8. //ஒரு மராட்டி நாடகத்தில் ஒரு நடிகை மெய்யாலுமே மேடையில் குளியல் தொட்டியில் குளித்தார்.//
    மெய்யாலுமா? ஆனாலும் இத்தலைப்பில் குறிப்பிட்ட ஆபாசத்தில் அது அடங்காது. அந்த முறையில் அது ஆபாசமும் அல்ல.
    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  9. எஸ்.வி.சேகர் நாடகங்களில் இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள் நிறைய இருக்கும்.

    ReplyDelete
  10. எஸ்.வி.சேகர் நாடகங்களில் இப்பதிவின் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆபாசம் வராது. ஏன்? யோசியுங்கள். :)))))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  11. Ithu pothum....
    //நான் பார்த்த மராட்டிய நாடகம் ஒன்றில் வில்லன் கதாநாயகியை பலவந்தம் செய்ய//

    ReplyDelete
  12. //Ithu pothum....//
    இல்லை, போதாது. தலைப்பில் குறிக்கப்பட்டிருக்கும் ஆபாசம் அதுவல்ல. பிணம் எழுந்து பேசியதுதான் ஆபாசம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. <==
    நீங்கள் என்ன எதிர்ப்பார்த்து இப்பதிவுக்கு வந்தீர்கள்? =>
    கேள்வியைப் பார்த்தவுடந்தான் பதிவின் தலைப்பை பார்த்தேன்.
    நிச்சயமாய் "சரோஜாதேவி" புத்தகத்திலிருந்து எதையும் எடுத்துபோடுவீர்களென்று யாரும் எதிர்பார்க்க மாட்டர்கள்.
    =))
    சாதாரணமாக உபயோகப்படுத்தும் ஆபாசம் என்ற வார்த்தைக்கும் இதற்க்கும் வேறுபாடு உண்டென்று எனக்கு தோன்றுகிறது.

    ReplyDelete
  14. //சாதாரணமாக உபயோகப்படுத்தும் ஆபாசம் என்ற வார்த்தைக்கும் இதற்கும் வேறுபாடு உண்டென்று எனக்கு தோன்றுகிறது.//
    ஆம். அதை சுட்டிக் காட்டுவதும் இப்பதிவின் நோக்கங்களில் ஒன்றாகும்.
    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  15. Sollakkodhikkudhu Nenjam enru oru nadagam natakkiradhu. paarungal.It is about a delta village story. Dealing nicely the suffering of farmers,Dalit"s condition in the villages,Cavery water issue etc.,The play also won 6 awards.Want to know about this any more.Pl contact me

    T.V.Radhakrishnan

    ReplyDelete
  16. நன்றி ராதாகிருஷ்ணன் அவர்களே. உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  17. your comments are very very nice

    ReplyDelete
  18. டோண்டு சார்!

    ஒரு ட‌வுட்டு!

    "இது ரொம்ப ஓவர் சாணக்யன். நான் குறிப்பிட்ட ஆபாசங்கள் முக்கியமாக சரித்திர நாடகங்களில்தான் நடக்கும். சாதாரணமாக சமூக நாடகங்களில் அபூர்வமாகவே காணப்படும்."


    ஏன் சார் அந்தக்காலத்து பெரிசுகள் இந்த விசயத்தில கொஞ்சம் ஓவராக நடந்திருப்பாங்களோ? ராஜா ராணிகள் வயாகரா பாவிச்சிருந்தாக‌ சாண்டிலியன் எதாவது
    எழுதியிருக்கிறாரா?


    புள்ளிராஜா

    ReplyDelete
  19. //ஏன் சார் அந்தக்காலத்து பெரிசுகள் இந்த விசயத்தில கொஞ்சம் ஓவராக நடந்திருப்பாங்களோ?//
    இதப் பாருங்கப்பா. ஐயா சாமி இங்கே ஆபாசங்கள்னு சொன்னது என்னங்கறதை பதிவைப் பாத்து தெரிஞ்சுட்டு பின்னூட்டம் போடுங்கப்பு.
    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  20. டோண்டு மாமா! ஆனாலும், இது கொஞ்சம் over தான்.

    ReplyDelete
  21. //ஆனாலும் இத்தலைப்பில் குறிப்பிட்ட ஆபாசத்தில் அது அடங்காது. அந்த முறையில் அது ஆபாசமும் அல்ல.//

    //எஸ்.வி.சேகர் நாடகங்களில் இப்பதிவின் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆபாசம் வராது. ஏன்? யோசியுங்கள். :)))))//

    //இல்லை, போதாது. தலைப்பில் குறிக்கப்பட்டிருக்கும் ஆபாசம் அதுவல்ல. பிணம் எழுந்து பேசியதுதான் ஆபாசம்.//

    //ஐயா சாமி இங்கே ஆபாசங்கள்னு சொன்னது என்னங்கறதை பதிவைப் பாத்து தெரிஞ்சுட்டு பின்னூட்டம் போடுங்கப்பு.//

    உங்க நிலமை ரொம்ப பாவம் சார்...

    ReplyDelete
  22. தி.க., மக்கள் கலை இலக்கிய கழகம் போன்ற வெத்து வேட்டு பகுத்தறிவு கும்பல்கள் போடும் 'நாடகங்களில்' இல்லாத ஆபாசமா?

    Anyway, டோண்டு சார் குறிப்பிடும் 'நாடக ஆபாசம்' என்பது சீரியசான சீன்களை கெடுக்கும்படியான தவறுகள் போன்றவை என நினைக்கிறேன்?

    சிங்கமுத்து

    ReplyDelete
  23. ஐயா பிணம் சொன்ன ஜோக்குத் தான் செம காமடி... ஹ...ஹ..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    நடகமேடையின் கதைக்குப் புறம்பான நகைச்சுவைகள்

    ReplyDelete